மனம் புண்படுதல்
மிக எளிதில் தங்கள் மனம் புண்பட்டுப் போகும் அதிக எண்ணிக்கையிலான பஹாய் அன்பர்களையும், அப்படி மனம் புண்பட்டோர்களுக்குத் தங்கள் “அனுதாபத்தைக்” காட்ட முற்பட்டு, அவர்களுக்கு “அன்பு” காட்டுவதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் மனதைப் புண்படுத்தியததாக நம்பப்படும் நபர்கள்பால் ஒரு கடுமையான மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ளும் அன்பர்களைப் பார்க்கையில் நிலைமை மிகவும் கவலைக்கிடமளிப்பதாக உள்ளது.
நாம் எவர் மனதையும் புண்படுத்தலாகாது என அப்துல் பஹா கேட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம் நாமும் மனம் புண்பட்டுப்போகலாகாது எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நமது எதிரிகளையும் (நம்மோடு பேச்சுவார்த்தையற்றுப் போன பஹாய்களை மட்டும் அல்ல) நமது நண்பர்களாகவே கருத வேண்டும் எனவும் கூறியுள்ளார். அவர்களை வெறுமனே நண்பர்களாக மட்டும் நாம் கருதக்கூடாது எனவும் கூறியுள்ளார். ஏன்? நாம் சமயநம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டுமானால் நாம் மனவளர்ச்சி பேற வேண்டும் என வற்புறுத்தும் சோதனைகளே இவ்விதமான பிரச்சினைகளாக நமக்கு வருகின்றன. நமது வளர்ச்சியைத் திசைத் திருத்தம் செய்யக்கூடிய சோதனைகள் அவை. மனிதகுலம் முழுவதையும் உண்மையாகவே நேசிக்க வேண்டும் என்னும் நமது வேட்கையை அவை சோதனைக்கு உட்படுத்துகின்றன.
மக்கள் அனைவரின் குறைபாடுகளையும் சேர்த்தே நாம் அவர்களை நேசிக்க வேண்டுமென அப்துல்-பஹா கூறுகின்றார். “மனிதர்களைப் பார்க்காதீர்கள், அவர்கள் குறைபாடுகள் நிறைந்தவர்கள், ஆனால் இறைவனுக்காக அவர்களை நேசியுங்கள்,” என அவர் மேலும் கூறுகின்றார்.
வாஞ்சையும் அன்பும் நிறைந்தவர்கள் கொடுத்துவைத்தவர்களே. இரக்கம் இல்லாதவர்களாகவும், அருகே நெருங்க முடியாதவர்களாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்களைத் தாங்களே வெறுத்துக் கொள்பவர்களாகவும், குறுகுறுப்பும் பயமும் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அதிக சக்தி வாய்ந்த உண்மையான அன்பே இருகிப்போன அவர்களின் உள்ளங்களை இளக வைத்தும் அவர்களை குணப்படுத்திடவும் முடியும். ஒருதலைப் பட்சமான அன்பு உண்மையில் அன்பே அல்ல.
விறகு எரிகின்றது போல் தோன்றினாலும், அதைத் தூண்டுவதால் அது பற்றிக் கொள்ளும் போதே அது “தீப் பிடித்துக் கொண்டது” எனக் கூற முடியும். பிறர் நம்மை விரும்பும் போது மட்டும் நாம் அன்பு செலுத்தினல் நாம் “பற்றிக் கொண்டவர்கள்” ஆக மாட்டோம். அதை அறிந்துக்கொள்வது நம்மைப் பற்றிய ஒரு கசப்பான உண்மையை அறிந்து கொள்வதாகும், ஆனாலும் நண்மை பயக்கக்கூடிய ஒரு கசப்பான உண்மை அது. (அன்புக்காக) பிறரையே முழுவதுமாக சார்ந்திருக்கும் நிலையாகப்பட்டது மிகவும் அபாயகரமான ஒரு நிலை. இதற்கு நிவாரணம் யாது? அது, நம்மை முழுவதுமாக அவரது புனித வாசகங்கள் என்னும் சமுத்திரத்தில் மூழ்கச் செய்துக் கொள்வதாகும்; தகுந்த நடவடிக்கைகள் எடுத்திடவும், மறு இணக்கம் காணவும் அன்பெனும் நெருப்பையும் ஈர்க்கப்படுதலையும் தூண்டிவிடுமாறு இறைவனைப் பிரார்த்தித்து மன்றாடுவது; என்னதான் இதயம் வேதனையால் வெடித்துவிடுவது போல் இருந்தாலும் அந்தச் சூழ்நிலையிலும் அன்பர்களுக்குச் சேவைச் செய்திடுவது; சமயத்தைப் போதித்து அன்பு மற்றும் ஒளியின் உதயபீடத்தின்பால், இறைவனின் வெளிப்பாட்டின்பால், அன்பர்களை வழிநடத்துவது, ஆகியவையே தகுந்த நிவாரணமாகும். (இந்தக் காரியத்திற்குத் தகுந்தவர்களாக நம்பிக்கையாளர்கள் இருக்கமுடியாது, ஏனெனில் அவர்கள் தூண்டப்பெற்றவர்களாகவோ பெறாதவர்களாகவோ இருக்கலாம்.)
அப்துல்-பஹாவிடமே பலர் முறைத்துக் கொண்டுள்ளனர். பூரண உதாரண புருஷராகிய அவர் இவர்கள் புண்பட்டதற்கு பொறுப்பாக இருந்திருக்க முடியுமா?
இதிலிருந்து, புண்படுத்தவேண்டும் என்னும் எண்ணமும் அப்படிச் செய்வதற்குத் தகுந்த காரணம் இல்லாத போதும் ஒருவர் வருத்தப்பட்டுக்கொள்ளவோ அல்லது மனம் புண்படவோ செய்யலாம் என்பது தெளிவாகின்றது. அப்துல்-பஹா, மனிதர்கள் வெளிப்படுத்தக்கூடிய மிகவும் வெறுக்கத்தக்க நடத்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இருந்தும் அவர் அதனால் எப்போதாவது மன வருத்தம் அல்லது மனம் புண்படுதல் என்னும் நிலையை எய்தினாரா? எதையும் பொறுத்துக்கொள்ளும் தன்மை, மன்னிப்பு, தயை போன்றவைச் சார்ந்த ஆன்மீக வலிமைகளை இங்கு உபயோகித்து மனவருத்தம் மற்றும் மனம்புண்படுதலை நிச்சயமாக தவிர்க்கமுடியும். இது எப்படித் தெரியும்? தெரியும், ஏனென்றால் அப்துல்-பஹா இதை நமக்குச் செய்து காண்பித்துள்ளார். “ஆனால் நான் அப்துல்-பஹா இல்லை” என நீங்கள் கூறிட நினைக்கலாம். “அது தெளிவுதான், நாம் அப்துல்-பஹா இல்லைதான்,” இருந்த போதிலும் அவர்தான் நமது உதாரண புருஷர் என்பது மாற்ற முடியாத உண்மை. நம்மைப் புண்படுத்துபவர் ஒர் “அப்துல் பஹா அல்ல,” அவரும் முயற்சி செய்கிறார், ஆகவே நம்மைப் புண்படுத்துபவர்களும் நமது உதாரணத்தைப் பின்பற்றுவர் என்பதே எதிர்பார்ப்பு. பஹாவுல்லா, நம் எல்லோரையும் பல உடல்களில் வசிக்கும் ஓருயிராகப் பார்க்க விரும்புவதாகக் கூறுகிறார். நம்மைப் புண்படுத்தியவர், ஆன்மீக தடை ஓட்டப் பந்தயத்தில் ஏதோ ஒரு தடையில் சிக்கித் தவிக்கும் ஓர் அன்பர். அதே வேளை புண்பட்ட நாமும் அவரைப் போன்றே ஏதோ ஒரு தடையில் அகப்பட்டுக் கொண்டவர்கள்தாம். மனிதகுல ஒருமைத் தன்மையை நாம் உண்மையிலேயே நம்புபவர்களாக இருப்போமானால், இந்த இருவகையான மனிதர்களான நாம், அப்படியே போகிற போக்கில் நமது வெவ்வேறு தடைகளையும் தாண்டிச் செல்வதற்குக் கற்றுக் கொள்ள ஒருவருக்காக ஒருவர் பிரார்த்திக்க, நாம் தேவையான அளவு விவேகத்துடனும் திருத்தமாகவும் ஒருவரை ஒருவர் நேசிக்கவேண்டும், அதே வேளை ஒருவரை ஒருவர் மறுபடியும் மறுபடியும் நேசிப்போம், நேசிப்போம், நேசிப்போம்