புனிதத்தன்மையும் தன்மைமாற்றத்தின் இயல்பும்


புனிதத்தன்மையும் தன்மைமாற்றத்தின் இயல்பும்

டாக்கடர் பீட்டர் காஃன்

அ. வஸ்துவும் ஆவியும்

கூட்ட தலைமையாளரே, சிறப்பு வருகையாளர்களே மற்றும் நண்பர்களே! இங்கு நமக்கிடையே உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒருவர் இங்கு வருகையளித்திருப்பதாக நாம் கற்பனை செய்துகொள்வோம். அவர் நவீன மின்சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுடனும், நவபௌதீகம் குறித்தும் ஏதும் அறியாதவராக இருக்கின்றார் என வைத்துக் கொள்வோம். அச்சாதனங்களைச் சுற்றிலும் — கதிரலைகள், தொலைக்காட்சி சமிக்ஞைகளைச் சுமந்திருக்கும் அலைகள், மற்றும் இவ்விஸ்வத்தின் தொலைதூரங்களிலிருந்து வரும் நுன்கதிரியக்கம் ஆகியவை உட்பட — மின்காந்த அலைகள் சூழ்ந்துள்ளன என்பது குறித்து அவரை எவ்வாறு நம்பவைப்பது? இதை எப்படித்தான் அவருக்கு எடுத்துரைப்பது? இவ்வலைகளைப் பார்க்க முடியாத நிலையிலும், அவைக் குறித்து எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையிலும், அவற்றைத் தொடவோ உணரவோ முடியாத நிலையிலும்; தங்களைச் சுற்றிலும், அவர்களூடேயுேம் ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும், ஹெப்ரூ மொழியிலும், ரஷ்ய மொழியிலும் மற்றும் பிற மொழிகளிலும் பெருமளவில் ஒலி மற்றும் ஒளித் தகவல்களைச் சுமந்த சக்தியலைகள் பாய்ந்துகொண்டுள்ளன என அவர்கள் எவ்வாறு நம்பப்போகின்றனர்? தன்னை மூழ்க்கடித்துள்ள இவ்வலைகளின் உளதாம்தன்மையை, உண்மையியலை மற்றும் பெருமதிப்பை அவருக்கு எடுத்துரைக்க இயலுமா? அல்லது ஒரு தூர கிரகத்திலிருந்து தோன்றும் மின்காந்தச் சிற்றலைகள் நிமிடத்திற்கு 12 முறை அவருடைய உடலை ஊடுருவிச் செல்கின்றன என்றோ அல்லது அவரது உடலை நியூட்ரினோ அனுக்கள் ஊடுருவிச் செல்கின்றனோ என்றோ எப்படி விளக்குவது.

இவ்விஷயங்களை நான் குறிப்பிடுவதன் நோக்கம், சமய தத்துவங்களில், நமது சமயமும் நிச்சமாக உட்பட, முக்கியமான ஒரு தத்துவம் என்னவெனில் நமது வாழ்நாள் முழுதும் நாம் அனைவரும் சக்திக்கூறுகளிலான கடல் ஒன்றினால் சூழப்பட்டுள்ளோம் என்பதே; நாம் அதனுள் மூழ்கடிக்கப்பட்டுள்ளோம்; அது நம்மைச் சுற்றிலும், மற்றும் நம் உள்ளும் இருக்கின்றது. நாம், நம்மை ஆன்மீக சக்திகள் சூழ்ந்தும், அரவணைத்தும், மற்றும் போர்த்தியும் உள்ள உருவளவை ஒன்றினுள் வாழ்கின்றோம். நாம் அவற்றைக் காணமுடியாது. நமது கருவிகள் அவற்றை அளக்க முடியாது. அவை பொதுவான ஒன்றாகவும், தொட்டுணரும் வகையிலும் இல்லை. அவை இங்குதான் உள்ளன, மற்றும் இவ்விஸ்வத்தின் உண்மையியலின் ஓர் அம்சமாக இவ்வான்மீக சக்திகளின் வலிய மற்றும் முன்னாதிக்கம் செலுத்தும் செல்வாக்கு உள்ளதென நமது சமயம் நமக்கு அறிவு புகட்டுகின்றது. ஓரிடத்தில், அப்துல் பஹா ஆவியைப் பற்றி குறிப்பிடுகையில், “…யாவற்றையும் உயிர்ப்பித்தும் ஊடுருவவும் செய்யும் தெய்வீக மூச்சுக் காற்று,”1 எனக் கூறுகின்றார். நாம் இந்த கடலில், இந்த ஆன்மீகச்சக்திகள் அடங்கிய  சூழலில் மூழ்கடிக்க மட்டும் படவில்லை, ஆனால் இவ்வான்மீகச்சக்திகள் நம்மை மர்மமான முறையில் ஆனாலும் மிகவும் இன்றியமையாத விளைவுகளுக்கு உட்படுத்துகின்றன. நமது உணர்ச்சிகள், நாம் செயல்படும் விதம், நமது ஊக்கம், நமது மேம்பாடு, நமது சந்தோஷம், நமது நோக்க உணர்வு, நமது வாழ்க்கைச் செல்லும் விதம் ஆகியவை இச்சக்திகளினால், அவற்றை நாம் கண்டுணரும் விதத்தினால், அவற்றை நாம் ஈர்க்கும் விதத்தினால் மற்றும் நாம் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தினால் பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகின்றன.

இதுவே இன்றிரவு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பின் மையமாக இருக்கின்றது எனும் எண்ணமே நான் இவற்றைக் குறிப்பிடும் காரணம். தனிநபர்கள் எனும் முறையில் நமது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைக் கடக்கும் நமது சவால் யாதெனில், ஆழமாகவும், தன்னியக்கமாகவும், இச்சக்திகளின் பிரசன்னம் குறித்த உணர்வு பெற்றும், நாம் வாழும் மற்றும் இயங்கும் இவ்வுலகினைப் பற்றிய நமது புரிந்துணர்வில் அதைக் கணக்கில் சேர்த்துக்கொள்வதும் ஆகும். நாம் இந்த ஆழமான அறிவைப் பெற்றால் மட்டும் போதாது, ஆனால் அதற்கும் மேலாக, நாம் பிரயோஜனமான வகையில் தன்மைமாற்றம் பெற இச்சக்திகளை ஈர்த்திடக்கூடிய வழிவகைகளை நாம் செயல்படுத்த வேண்டும். இதுவே இத்தலைப்பின் சாரம் என்பது என் எண்ணம் — அதாவது இவ்வான்மீக சக்திகளை நாம் உணருவதும் நம்மை மாற்றிக்கொள்வதற்காக இச்சக்திகளை நாம் எப்படி ஈர்க்கப் போகிறோம் என்பதும் ஆகும். இதை நாம் செயல்படுத்தும் போது, நமது வாழ்க்கையில் சம்பந்தப்பட்டுள்ள இவ்வான்மீக சக்திகளின் உண்மையியல் குறித்து விழிப்புணர்வற்றவர்களுக்கு நாம் செய்யக்கூடிய இக்காரியங்கள் முற்றிலும் அறிவுக்கொவ்வாதவையாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு நான் நமது புனித நினைவாலயம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அவ்வேளை அங்கு என்னைச் சுற்றிலும் நான் கண்ட இயல்நிகழ்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்காக என்னுடைய தியானங்களிலிருந்து வெளிவந்தேன். பார்வைக்கு வெற்றுக் கூடமாக காட்சியளித்த அந்த அரைக்குள் மக்கள் வந்தவண்ணமாக இருந்தனர்; அத்திருவாசலுக்குள் நுழையும்போது அவர்கள் கண்ணீர் மல்கவும், பெரும் பக்தியுடனும், தங்கள் சிரங்களை தரையில் தாழ்த்தியும், நினைவாலயத்தின்பால் தங்களது பக்தியினை வெளிப்படுத்தும் வேறு பல காரியங்களைச் செய்தவாறும் இருந்தனர்.  புனித நினைவாலயங்களின் மேன்மையைப் பற்றியும் அவற்றின் செயல்விளைவுகளையும் அறியாதவர்களுக்கு இக்காட்சி மிகவும் விநோதமாகவே இருக்கும். அவர்: இம்மக்கள் என்ன செய்கின்றனர்? — ஒரு வெற்றரைக்குள் இவர்கள் ஏன் நுழைகின்றனர், அங்கு பெரிதும் உணர்ச்சிவசப்படுகின்றனர், வெற்றிடத்திற்கு முன்பாக சிரந்தாழ்த்துகின்றனர்? இது எதற்காக? இவர்கள் ஏன் இதைச் செய்கின்றனர்?” ஆக, ஆன்மீக சக்திகள் குறித்த நமது புலனறிவு, வேறுவகைகளில் அறிவுக்கெட்டாத சில நடவடிக்கைகளில் நம்மை ஈடுபட தூண்டுகிறது. ஆக, இச்சக்திகள் குறித்து மிகக் கூர்மையான அறிவு பெற்றும், நமது வாழ்க்கையை தன்மைமாற்றமடையச் செய்வதற்கு அச்சக்திகளை ஈர்ப்பதற்கான வழிவகைகளை காண்பதுமே நம்முன் இருக்கும் சவாலாக உள்ளது. இது உள்ளியல்பாக இவ்விஸ்வத்தின் வலிமைகளுடன் நம்மை ஒருங்கிணைத்திடுவதில் ஏற்படும் சவாலாகும். இப்படி ஒருங்கிணந்து அச்சக்திகளோடு நாம் இயங்கும்போது நமது செயல்கள் வாழ்க்கையின் பற்பல அநுபவங்களினூடே இயல்பானவையாகவும் தன்னிச்சையானவையாகவும் இருக்கும்.

நாம் பயன்பெறவும் நமது வாழ்க்கையில் தன்மைமாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த ஆன்மீக சக்திகளையும் ஆதிக்கங்களையும்  நாம் எப்படி ஈர்க்கப்போகின்றோம் என்பதே இன்றிரவு நான் உங்களுடன் கலந்துரையாடவிருக்கும் விஷயமாகும். இது எனது அறிவிற்கும் வெகுவாக அப்பாற்பட்ட ஒரு மர்மமான விஷயம் என்பது தெளிவு. இது “ஒரு சில பொருளியலான விஷயங்கள் ஆன்மீக விளைவுகளை உண்டாக்குகின்றன…”2 எனும் அப்துல் பஹாவின் மர்மமான வாக்கிலிருந்து உதித்ததாகும். இந்த வாக்கை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள இயலவில்லை மற்றும் இதை நான் மற்ற ஒருவருக்கு நான் எவ்வாறு விளக்குவது. ஆனால் இது உண்மையியலான ஒன்று என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன் ஏனெனில் இது நமது சமயத்தில் உள்ளடங்கியுள்ள ஒரு விஷயமாகும். நமது புனித வாசகக் குறிப்புகளில், ஒரு சில பொருளியலான விஷயங்கள், பௌதீக உலகில் மேற்கொள்ளப்படும் ஒரு சில நடவடிக்கைகள், ஒரு சில எண்ணங்கள், ஒரு சில கூற்றுகள், ஒருவர் மற்றவருடன் கொள்ளக்கூடிய ஒரு சில உறவுகள் ஆகியவை, ஆன்மீக விளைவுகளை உண்டாக்குகின்றன என நாம் அறிவிக்கப்படுகிறோம். இது குறித்த மர்மத்தின் ஓர் உதாரணமாக அப்துல் பஹா மற்றும் பஹாவுல்லா ஆகியோரின் எழுத்துக்களில் வரும், ஏறக்குறைய பின்வருவது போல் இருக்கும், ஒரு வாசகக்குறிப்பாகும்: “…பௌதீக உலகில், (உடற்)தூய்மை அதியான்மீகத்திற்கு ஏதுவானதாகும்…”3 நாம் இதை எப்படித்தான் விளக்குவது? நான் தூய்மையாகவோ அல்லது தூய்மையற்றோ இருக்கின்றேன் என்பது அப்படி என்ன பெரிய விஷயம்? என் ஆன்மீகம், என் இருப்பின் உட்சாரம், என் நன்நடத்தை உருவாக்கம், இறைவனுடனான என் உறவு ஆகியவற்றுடன் இது ஏன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்? அதியான்மீகம் எதனால் தூய்மைக்கேட்டினால் பாதிப்படைகிறது? இவ்வுறவு குறித்த உறவுகள், அது இயங்கும்விதம் மற்றும் இந்த உறவு சம்பந்தமான சக்திக்கூறுகள் ஆகியவை யாவை? இக்கேள்விகளுக்கு நாம் முழுமையாக பதிலளிக்க மடியாது. ஆனால் இது உண்மை என்பது நமக்குத் தெரியும்; பௌதீக நடவடிக்கை மற்றும் அதன் அதியான்ம பின்விளைவு  ஆகியவற்றிற்கிடையே உள்ள மர்ம உறவின் ஒரு பகுதியே இது என்பதும் நமக்குத் தெரியும்.

2.    காந்தவிசை சம்பந்தமான கோட்பாடு

காந்தவிசை குறித்த கோட்பாடு நம்மைச் சுற்றியுள்ள அதியான்மீக சக்திகளை நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த கலந்துரையாடலின் மையத்தில் உள்ளது. நம்மில் பலர் பள்ளிப்பாடமான பௌதீகப் பாடத்தில் காந்த சக்தியை இயற்கை குறித்த ஓர் ஆவிர்பாவமாக கண்டிருக்கலாம். ஆனால், உண்மையிலேயே காந்தவிசையென்பது நாம் புரிந்துகொள்ளமுடியாத ஒரு சக்தியாகும். நகர்ச்சியினால் பிறக்கும் மின்னனுக்களிலிருந்து காந்த சக்தி பிறக்கின்றது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அது காந்தவிசையின் ஆவிர்பாவம் குறித்த விவரிப்பே ஒழிய அதன் பிறப்பின் விளக்கமல்ல. இருதுருவ மற்றும் விளைவெல்லைகள் எனப்படும் கட்டுமானவடிவங்களாக அனுக்கள் மற்றும் அனுத்திரள்களின் பௌதீக அமைப்புகளினால் வேறுபட்டிருப்பதே ஒரு காந்தவஸ்து. காந்தவிசையென்பது காந்தமல்லாத ஒன்றிலிருந்து இரசாயன கலவையினாலின்றி அதன் பௌதீக உள்ளமைப்பினாலேயே வேறுபட்டுள்ளது. அவ்வமைப்பினால் ஏற்படும் பின்விளைவால், காந்தவஸ்துவோடு, காந்தவிசையென அழைக்கப்படும், கண்ணால் காணப்பட முடியாத, பன்மடங்கு தூரத்திலிருந்து செயல்படக்கூடிய ஓர் அற்புதமான சக்தி தொடர்புற்றுள்ளது. ஒரு காந்தமும், அதற்கப்பால் காந்தவிசைத் தொடர்புள்ள பொருளும் இருந்தால், அவற்றிற்கிடையே ஓர் ஈர்ப்பு சக்தி ஏற்படுகின்றது. அவ்விரண்டிற்கிடையே கையை வைத்தால் எதுவுமே ஸ்பரிசப்படாது. ஆனால், அச்சக்தி அங்குள்ளது மற்றும் அவ்விரண்டையும் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.  இது, விவரிப்புக்குட்படாத ஓர் ஆழமான மர்மமாக இருந்தபோதிலும், இது ஒரு மெய்மையாகும் மற்றும் காந்தவிசையின் கலவையனுக்களின் கட்டமைப்பால் இது உருபெருகிறது.

இந்தளவிற்கு காந்தவிசையை ஒப்புவமையாக நான் இவ்வுரையில் நான் பயன்படுத்துவதற்குக் காரணம் பஹாய் சமய கோட்பாடுகளின் ஒரு வேறுபடுத்திக்காட்டும் அம்சமாக வஸ்து மற்றும் ஆவி ஆகியவற்றிற்கிடையே ஏற்படும் இனைந்தசெயற்பாட்டை விவரிப்பதற்கு காந்தவிசை எந்தளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதே ஆகும். இவ்வெளிப்பாடே இதைச் செய்துள்ள முதல் வெளிப்பாடாகும். காந்தவிசை 13வது நூற்றாண்டிலேதான் முதன்முறையாக ஆய்வுரீதியாக கருத்தில் கொள்ளப்பட்டது. ஆகவே, அதைப் பயன்படுத்தக்கூடிய முதல் திருவெளிப்பாடாக பயஹாய் வெளிப்பாடு இருப்பதானது இயல்பானதே. பௌதீக உலகில் காந்தவிசையெனப்படும், அனுக்களின் ஒரு குறிப்பிட்ட பௌதீக சேர்க்கை ஒரு மிகவும் சக்திகரமான ஆற்றலோடு தொடர்புற்றிருப்பதானது, பஹாய்கள் எனும் முறையில் அதியான்மீக ஆற்றல்களை நாம் ஈர்த்திட செய்யும் முயற்சிக்குத் தேவைப்படுபவைகளைப் புரிந்துகொள்ள மிகவும் ஆற்றல்வாய்ந்த ஓர் உதாரணமாகும். இவ்விஷயத்தை விளக்கிட பஹாய் புனித வாசகங்களிலிருந்து மேலும் சில உதாரணங்களை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அப்துல் பஹா கூறுகிறார்:

” நம்பிக்கையே சர்வ தயை மிக்கவரின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தக்கல்லாகும். சேவையே தெய்வீக ஆற்றலை ஈர்க்கும் காந்தக்கல்லாகும்…”4

மேலும் அப்துல் பஹா கூறுவது:

“…இறைவனை நினைவுகூறுவதென்பது ஒரு காந்தக்கல்லைப்போல் உறுதிப்பாடுகளையும் உதவிகளையும் ஈர்க்கின்றது.”5
ஒரு காந்தவிசையின் மேற்கோளை நான் உபயோகப்படுத்துவதன் நோக்கத்தைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். அந்த ஒழுங்குமுறை, நாம் எடுக்கும் நடவடிக்கைகள், அர்ப்பண உணர்வு, சமய போதனைகளுக்கேற்ப சேவையுணர்வில் பிறக்கும் செயலுணர்வு, நம்மைக் காந்தக்கற்களைப் போல் ஆக்குகின்றது. நாம் காந்தக் கற்களைப்போல் ஆகின்றோம். நாம் இரும்பை ஈர்க்கவில்லை ஆனால், இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கின்றோம். இக்கருத்து குறித்த பல வாசகப் பகுதிகள் உள்ளன. இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் சக்தியை, அப்துல் பஹாவின் அழகான வாசகப் பகுதி ஒன்று பின்வருமாறு விவரிக்கின்றது. அவர் கூறுவதாவது:
கவனமற்ற ஆன்மாக்கள் விழிப்புணர்வு பெறவும், இறந்த ஆன்மாக்களுக்கு உயிரளிக்கவும், ஆன்மீக நோயாளிகளை குணப்படுத்தவும், எளிமையானவர்களை விவேகிகளாக்குவதற்கும், அறியாதோருக்கு அறிவுபுகட்டவும், லௌகீகமானதை ஆன்மீகமானதாக்குவதற்கும், தூரவிலகியுள்ளோரை (இறைவன்) அருகில் ஈர்த்திடவும், அன்னியர்களை நண்பர்களாக்கிடவும் இரவும் பகலும் முயற்சிப்பீர்களாக.”

“இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்த்திடும் காந்தவிசையாற்றல் இதுவே.”6

இவ்வாசகப்பகுதி ஒரு குறிப்பிட்ட செயற்பட்டியலை விவரிக்கின்றது — ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையை விவரிக்கின்றது, இது இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும், நம்மைப்பற்றிய, நமது பேச்சு, நமதுடல், நமது எண்ணங்கள், ஆகியவைக் குறித்த செயல்கள் உருவாக்கும் அற்புதமான காந்தவிசையைப்பற்றியது. இது போன்று வேறு பல வாசகப் பகுதிகளும் உண்டு. மற்றொரு இடத்தில் பின்வருமாறு அப்துல் பஹா கூறுகிறார்:

“…இறைவனின் உறுதிப்பாடுகளை  ஈர்க்கும் காந்தக்கல்லாக ஒற்றுமையும் இணக்கமும் உள்ளன.”7
சமயத்தைப் போதிப்பதிலும், இதே கோட்பாடுகளே பொருந்துகின்றன. அப்துல் பஹா கூறுவது:
“மனிதர்களை சரியான பாதையில் வழிநடத்தும் செயலே இறைவனின் உதவிகளின்பால் நம்மை ஈர்த்திடும் காந்தக்கல்லாகும்.”8

அவர் அடுத்து கூறுவது:
“…போதகரின் நாவானது போதித்துக்கொண்டிருக்கும் போது, அவரும் இயற்கையாகவே அதனால் உற்சாகத்திற்குள்ளாகக்கூடும், சாம்ராஜ்யத்தின் தெய்வீக உதவி மற்றும் கொடைகளை ஈர்க்கும் ஒரு காந்தமாகவும் ஆகக்கூடும்…”9

இது போன்றே, தமது சார்பாக எழுதப்பட்ட ஒரு கடிதத்தில்:

“என்றுமில்லாத வகையில், இன்று, விண்ணுலக ஆசிகளை ஈர்க்கும் காந்தமாக, இறைவனின் சமயத்தைப் போதிப்பதே உள்ளது.”10

ஒரு சீரமைப்பிலோ, அல்லது ஒரு செயலிலோ, இப்பிரபஞ்சத்தின் விதிகளில் ஒன்றை பின்பற்றும்போது காந்தக்கல் குறித்த கோட்பாடு அதில் உடன்பட்டிருப்பதைக் காணலாம். இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கக்கூடிய ஆன்மீக காந்தவிசையை உருவாக்கும் செயல்கள் அல்லது சீரமைப்புக்கள் பற்றிய பிரபஞ்சம் சார்ந்த பௌதீக விதியல்லாத ஓர் ஆன்மீக விதியே இங்கு குறிப்பிடப்படுகிறது.

இந்த உரையில் காந்தவிசையின் உருமாதிரி பரவலாகப் பயன்படுத்தப்படுவதை பஹாய் புனித வாசகங்களில் காணப்படும் காந்தவிசை குறித்த உட்கருத்தின் முழுமையான ஆய்வாக கருதக்கூடாது. ஆன்மீக சபை குறித்த உட்கருத்து பலவிடங்களில் காந்தவிசையாக விவரிக்கப்பட்டுள்ளது: அதாவது, காந்தவிசையை தோற்றுவிப்பதற்காக ஒரு காந்தவிசைப்பரப்பின் மூலப்பொருள்களை குறிப்பிட்ட வகையில் சீரமைப்பு செய்வது ஓர் ஆன்மீக சபையை தோற்றுவிப்பதற்குச் சமமாகும். வேறு இடங்களில், மனிதனின் இயல்பு குறித்து விரிவுரை செய்யும் போது மனித சரீரத்தின் கூறுகளைக் குறிப்பிட்டு பின்வருமாறு கூறுகிறார்:

“…மனிதனெனும் ஜீவனில் காணப்படும் இந்த அவயங்கள், இந்த உடற்கூறுகள், இந்த கூட்டமைவு, ஆவிக்கான ஈர்ப்புகளும் காந்தவிசையுமாகும்…”

இந்தப் பகுதியில், கூட்டமைவு மற்றும் சிதைவுறுதல், வாழ்வு மற்றும் மரணம்,  ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பு குறித்தும், உடல் சிதைவுறும் போது உடலிலிருந்து ஆவி பிரிவது குறித்தும் விரிவுரை செய்கின்றார். “பஹாவுல்லா, காந்தம் எனும் வார்த்தையோடு சமஅர்த்தம் கொண்டுள்ள ‘காந்தக்கல்’ எனும் வார்த்தையை உபயோகப்படுத்தி:
“…எல்லா தேசங்களுக்கும், எல்லா உலக மக்களுக்கும் காந்தக்கல் போல செயல்படும்”12 என குறிப்பிடுகின்றார்.

ஒரு வாசகப் பகுதியில் பஹாவுல்லாவின் வருகை குறித்து பின்வருமாறு கூறுகிறார்:

“…தூர தேசங்கள் மற்றும் நாடுகளிலுள்ள புனிதமான இதயங்கள் ஈர்க்கப்படும் தற்போதைய உலகின் துருவத்தின் ஆன்மாக்கள் மற்றும் இதயங்களுக்கான காந்தவிசையை உனது ஆண்டவர் வெளிப்படுத்தியுள்ளார்… ஓர் ஈர்ப்பு மிகுந்த சரீரத்திற்காவும், இறைவனின் சாம்ராஜ்யத்தின் காந்தவிசையின்பால் ஈர்ப்புற்றதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவாயாக.”13

3.    ஆன்மீக தன்மைமாற்றீடு

இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தவிசைகளாக மாறுவதே நாம் எதிர்நோக்கும் சவாலாக இருப்பின், அத்தகைய மாற்றத்தை நாம் எப்படி தோற்றுவிப்பது மற்றும் ஆன்மீக காந்தவிசைகளாக எப்படி மாறுவது? தன்மைமாற்றீடாகப்பட்டது இரு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது என் நம்பிக்கை. தைரியமூட்டுவதாகவும் அதே வேளை பயமுறுத்துவதாகவும் நிலைதடுமாறச் செய்வதாகவும் இருக்கும் மாஸ்டர் அவர்களின் வாசகம் ஒன்றில் முதலாவது கோட்பாடு உள்ளது:

“…மாற்றமென்பது ஓர் அவசியமான பண்பாகவும் இவ்வுலகின் அத்தியவசிய குணங்களில் ஒன்றாகவும் உள்ளதோடு, நேரம் மற்றும் இடத்திற்கும் அது பொறுத்தமுடையதாக இருக்கின்றது.”14

இப்பகுதி தன்மாற்றீட்டோடு மிகவும் நெருங்கிய ஏற்புடைமையுள்ளதாக தெளிவுடன் விளங்குகிறது. நாம் மாற்றம் பெறுகிறோம் என அது கூறுவது மனதுக்கு தைரியமூட்டுகின்றது. எல்லாமே மேம்பாடு காணும் நிலையில் உள்ளன; இயக்கமற்றதல்லாத இயக்காற்றல் மிக்க ஓர் உலகத்தில் நாம் வாழுகின்றோம். காலப்போக்கில், மாற்றம் காண்பதற்கான ஆற்றல் நமக்குள்ளது, மேம்பாடு காணவும் பரிணமிக்கவும், அதன்மூலம் தன்மைமாற்றம் அடையவும் முடியும் என்பது மனதுக்கு உறுதியளிக்கின்றது. அதே சமயம் இந்த வாசகம் பயமளிக்கவும் செய்கின்றது, ஏனெனில் எல்லா மாற்றங்களுமே நன்மை பயக்கவல்லவையல்ல; அது மேம்பாடாகவோ தாழ்வுற்றலாகவோ இருக்கக்கூடும். நாம் முன்னோக்கியும் செல்லலாம் பின்நோக்கியும் செல்லலாம்; இப்பகுதியிலிருந்து நாம் ஒரே நிலையில் இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம். ஆகவே, நாம் பின்னோக்கிச் செல்லாமல் இருக்க வேண்டுமானால், நாம் வலிந்து முன்னோக்கி செல்லவேண்டும். முன்னோக்கி நாம் வலிந்து முயற்சிக்காது போதனால், நாம் பின்னோக்கியே செல்லுவோம். இதுவே மாற்றத்தின் அத்யாவசிய பண்பியல்பின் பீதியூட்டும் அம்சமாகும்.

ஆக, தன்மைமாற்றம் குறித்து ஆலோசிக்கையில், தவிர்க்கவியலா வகையிலும், மீட்கமுடியா வகையிலும், மாற்றத்திற்கு உட்பட்டவர்களாவோம், மற்றும் அதன் காரணமாக நாம் அடையும் எதிர்படையாற்ற நேர்படையான மாற்றத்தை உறுதி செய்வதற்கு நாம் கட்டாயம் முயலவேண்டும்.

தன்மைமாற்றத்தை உள்ளடக்கிய இரண்டாவது கோட்பாடு முயற்சியின் பண்பியல்பு குறித்தது. புனித வாசகங்களின் ஒரு சில குறிப்புகளைக் கொண்டு, மேலும் அதிக விளைவுகள் மிக்க ஒரு காந்தவிசையாகிட ஒரு தனி மனிதனுக்கு உதவும் ஆன்மீக ஆற்றல்களை ஈர்க்கும் காந்தவிசைகளாக முயற்சியை உள்ளடக்கிய செய்கைகள் உள்ளன. தன்மைமாற்ற செயற்பாடு முயற்சியை உள்ளடக்கியுள்ளது. முயற்சியோடு நாம் ஆரம்பித்தோமானால், நாம் மேலும் அதிக மேம்பாடு காண்பதற்கு உதவும் ஆன்மீக ஆற்றல்களெனும் வெகுமதியை இறைவன் நமக்களிப்பார். அதன்மூலம்,  ஒரு சக்கரச் செயற்பாட்டின் வழி, அதிக நற்பயன் விளைவிக்கும் முயற்சியானது அதைவிட மேலும் அதிக ஆன்மீக ஆற்றல்களை ஈர்க்கும்; மற்றும் இதன்வழி அப்துல் கூறியது போன்று, “நம்பிக்கையே தயைமிக்கவரின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தமாகும்,” எனும் காந்தவிசை நிலைக்கும் ஒருவர் உயரலாம்.

இதே விஷயம் குறித்து பாதுகாப்பாளர் தமது செயலாளர் மூலம் எழுதியதாவது:

“…தான் எவ்வளவுதான் தகுதியற்றவராகத் தன்னை எண்ணியபோதிலும், சேவை செய்திடுவதற்கு எடுக்கப்படும் முயற்சியாகப்பட்டது, இறைவனின் ஆசிகளைக் கவர்ந்து அக்காரியத்திற்கு அவரை தகுதிபெற்றவராக ஆக்கிடும்.”15
மற்றும்:

“…உங்கள் குறிக்கோள்களை அடைந்திட நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முயலுகின்றீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பஹாவுல்லாவின் உறுதிப்பாடுகள் அமைந்தும், நிச்சயமாக வெற்றியடைவீர்கள் எனும் உணர்வையும் பெறுவீர்கள்.”16

தெய்வீக உறுதிப்பாடுகள் வந்தடையும் செயற்பாட்டை எண்ணுகையில் இங்கு மறுபடியும், மறுவுறுதியும் அச்சுறுத்தலும் எனும் இணை அம்சங்கள் (காணப்படுகின்றன). நமது நிலையை பொருட்படுத்தாமலும், அல்லது எவ்வளவு வலுக்குறைந்தாற் போன்று ஒருவர் உணர்வு பெற்றிருந்தாலும், தேவைப்படுவதெல்லாம், அவசிய முயற்சியை மேற்கொள்ளவேண்டும்; முயற்சி மேற்கொள்ளும் செயலே உறுதிபாட்டிற்கு வழிவகுக்கும் சக்கரச் செயற்பாட்டிற்கு வழிகோளி, மேலும் அதிக முயற்சிகளுக்கு நமக்கு வலுவூட்டியும், அதன் பயனாக அதற்கும் மேலான  வலு வழங்கியும் வரும் எனும் மறுவுறுதி நமக்கு வழங்கப்படுகின்றது. இதில் அச்சுறுத்தும் அம்சமாக, நாம் இச்செயற்பாட்டில் முயற்சிகள் செய்வதை நிறுத்தியும், மனநிறைவும், தன்நிறைவுணர்வு பெற்றும், இறுமாப்பு அல்லது கர்வம் அடைத்தாலும் இந்த சூழ்நிலையின் காரணமாக நாம் முன்பு ஈர்த்துக்கொண்டிருந்த இறைவனின் உறுதிப்பாடுகளைக் குறைத்து விடுவோம். முன்பு குறிப்பிட்டது போல, “இவ்வுலகிற்கு… மாற்றம் என்பது அவசியமான ஒரு பண்பு…”14 நாம் மாற்றம் பெற உதவி காந்தவிசைகளாவதற்கு முயற்சி செய்வதெனும் செயல் இன்றியமையாததாகும்.

புனித வாசகங்களின் மூலம், நம்பிக்கையுடனும் அர்ப்பண உணர்வுடனும் முயல வேண்டும் என்பதே எனது முடிவாகும். இம்முயற்சியில் நாம் விடாது தொடர்ந்தோமானால், மாற்றங்கள் நிகழ்ந்து தன்மைமாற்றம் அதன் பயனாக விளையும். இவ்விஷயங்களைக் கருதுவதானது அப்துல் பஹாவின் இரு குறிப்புகளின்பால் எனக்கு அகக்காட்சிகள் வழங்குகின்றது. இக்குறிப்புகள் அசாதாரணமானவையாக எனக்கு அப்போது தோன்றின. இக்குறிப்புகள், வில்மட் கோவில் கட்டப்படுவதற்கான ஆரம்ப வேளையின் போது உச்சரிக்கப்பட்டவையாகும். இவற்றில் முதல் குறிப்பாக, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,”17 நான் என் வாழ்க்கையிலும் சரி பிறரது வாழ்க்கையிலும் சரி பல முயற்சிகள் இந்த எளிமையான வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளேன். “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,” மற்ற எதுவுமே முக்கியமில்லை. உங்களுடைய தற்போதைய நிலை, உங்கள் சிரமங்கள், உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உங்கள் துரதிர்ஷ்டங்கள் மற்றும் வாய்ப்பின்மை, எல்லாமே இந்த வாக்கின் மூலம் அழிந்துபடுகின்றன, அதாவது, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,” எனும் வாக்கு.

குறிப்பிட்ட வகையில் நமது ஆர்வத்தைத் தூண்டும் மற்றொரு கூற்று, 1912ல் அக்கோவிலின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியின் போது கூறப்பட்டது. அப்போது அங்கிருந்தோர் கூறியதாவது, அப்துல் பஹா கல்லை நட்டுவிட்டு, “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,”18 என கூறினாராம். இது மிகவும் அதிசயமான ஒரு கூற்று.  நான் இது குறித்து ஆழமாக சிந்தித்தேன். “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,”18 கோவிலைக் கட்டுவதற்கு முன்பாக அமெரிக்க பஹாய்கள் 40 வருட பெரும் முயற்சிகள், பிரமாண்ட தியாகங்கள், நம்பமுடியாத சிரமங்கள் ஆகியவற்றை எதிர்நோக்கினர். அது பல சவால்களை வெற்றி கண்டது. 1953ல் கட்டிடம் திறப்பு விழா காணும் வரையில், கட்டிடத்தை எழுப்பவும், கட்டிடத்தின் வெளிச் சித்திர வேளைப்பாடுகளையும் உள் வேளைப்பாடுகளை முடிக்கவும், புற நிலம் சார்ந்த வேளைகள் பூர்த்தி செய்யப்படவுமான சவால்கள் அவை. ஒரு சாதாரண கல்லை மட்டும் வைத்துவிட்டு அப்துல் பஹா ஏன் அவ்விதமாக கூறவேண்டும், “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,” என? இதற்கான பதில் நான் இதுவரை தொட்டுப்பேசிய போதனைகளில் அடங்கியுள்ளது; முயற்சி செய்வதின் பெரும் முக்கியத்துவம், மாற்றம் ஏற்பட வேண்டும் எனும் இயல்பு, மற்றும் காந்தவிசை செல்வாக்கின் ஆற்றல் ஆகியவை. தங்களின் மாபெரும் முயற்சிகளின் மூலமாக தெய்வீக உறுதிகளை ஈர்த்திடும் ஒரு மாபெரும் காந்தக்கல்லாக தங்களை அமெரிக்க பஹாய்கள் மாற்றிக்கொண்டு இம்மாபெரும் திட்டத்தை பூர்த்தியடையச் செய்தனர். தூரநோக்கெனும் கண்களோடு, வருங்காலத்தைப் பார்த்து, அடிக்கல் நாட்டப்பட்டதும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் அந்த ஆரம்பத்திற்கான நடவடிக்கைகளே என்பதை உணர்ந்தார். இதனாலேயே அவர் “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,” என கூறிட உந்தப்பட்டார்.

விதிவிலக்கு


விதிவிலக்கு

பாஹிய்யா நாக்ஜவானி

விதிவிலக்கென்பது ஒரு சலுகையைக் குறிக்கின்றது. பொதுவாகவே விருப்பமில்லாத மற்றும் சுமையான ஒரு செயலை ஆற்றுவதிலிருந்து விலக்களிக்கப்படுவதையே ஒரு சலுகையெனக் கூறலாம். இதுவே ஒரு விதிவிலக்கில் உள்ளடங்கிக் கிடக்கும் எண்ணமாகும்: அது சலிப்பு தரும் கடமை ஒன்றிலிருந்து விதிவிலக்களிக்களிக்கப்படும் சலுகையாகும்.

நாம் எல்லாருமே சலுகைகளை விரும்புகிறோம். வீட்டுப்பாடம் செய்வதிலிருந்து குழந்தைகள் விதிவிலக்கை விரும்புகின்றனர். உதாரணமாக, உடல் நலமற்றோ அல்லது நீண்ட காலத் துன்பத்தால் உடல் நலிவுற்றோ இருக்கும்போது, எங்கோ யாரோ அது குறித்து அறிவிக்கப்படுகிறார் என்பது மனதுக்கு இதமளிக்கின்றது; சமூகம் ஒருவருடைய சம்பளத்தைக் குறைக்காது அவர் வேலை செய்வதிலிருந்து விலக்களிப்பது; அதாவது, ஒரு முறை மருத்துவரால் வேலைவிலக்குச் சான்றளிக்கப்படும்போது, ஒருவர் மருத்துவக் காப்புறுதியும் சமூகக் காப்புறுதியும் பெற வாய்ப்புப் பெறுகிறார் என்பது. இராணுவச் சேவையிலிருந்து விதிவிலக்குப் பெறுவது பெரிதும் களிப்பு தரும் ஒன்று. அதேபோல் வருமான வரி விதிவிலக்குக் குறித்து சொல்லவே தேவையில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால், எல்லா சூழ்நிலைகளிலும், விதிவிலக்கு தரும் சலுகையானது ஏதோ ஒரு சிறப்புப்பலன் அடையப்பட்டுள்ளதென்பதையே குறிக்கின்றது; ஓர் மாற்றுவழி அளிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது.

ஒரு கடமையை நிறைவேற்றுவதிலிருந்து மக்களை விடுவிக்கும் தனிப்பட்ட மற்றும் விதிவிலக்கைக் கோருவதுமான சூழ்நிலைகள் இருக்கக்கூடும் என்பதை நமது சமூகம் ஏற்க வேண்டும் என்பதை நாம் விரும்புகிறோம். ஒரு மாபெரும் சமூகத்தில் ஊர்பேர் தெரியாது போவதிலிருந்து பாதுகாப்புத் தரும், விதிவிலக்கை அனுமதிக்கும் சட்ட விதிமுறைகளை நாம் மதிக்கின்றோம்; விதிவிலக்குகள் தனிமனித உரிமைகளை வலியுறுத்துகின்றன. சிறப்புக் கவனம் அளிக்காமலும் சட்டத்தைத் துர்பிரயோகம் செய்வதிலிருந்தும் அவை நம்மைப் பாதுகாக்கின்றன.

அதே வேளை, ஒரு சலுகையும் துர்ப்பிரயோகம் செய்யப்படலாம். அது ஒருவருக்குத் தேர்வு செய்யும் உரிமையை மட்டுமல்லாமல் மக்களிடையே ஒரு சாராருக்குத் தனிச்சிறப்பையும் சேர்க்கின்றது: அதாவது இவர் இதைச் செய்யலாம், அவர் இதைச் செய்யமுடியாது என்பன போன்றவை.

தனிச்சிறப்பை உண்டாக்கும் எதுவுமே அதனோடு தப்பெண்ணங்களை, மனிதரால் உருவாக்கப்பட்ட இல்லாத வேறுபாடுகளை, உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தன்னோடு சுமந்துவரும். அது சலுகைகளை மட்டும் அளிக்கவில்லை ஆனால், அவற்றைச்சுற்றி சந்தேகமான யூகங்களையும் உருவாக்குகின்றது: நான் உனக்கு இந்த விதிவிலக்களித்தேனானால் அவ்விதிவிலக்கு தேவைப்படுமளவுக்கு நல்லதொரு காரணம் இருக்க வேண்டும். காரணங்கள் சுமத்தப்படாமலும் அவை வேண்டப்படுபவையாகவும் இருக்க வேண்டும். சலுகைகள் சிறப்புச் சூழ்நிலைகளை மட்டும் அனுமதிக்கவில்லை ஆனால் அவை தவறான முறைகளில் பயன்படுத்தப்படும் சூழ்நிலைக்கும் இட்டுச் செல்லக்கூடியன. உகந்த சூழ்நிலைகளிலும், சரியான காரணங்களுக்காகவும் சலுகைகளாவன அத்தியாவசியமாக இருப்பதைப் போலவே, தவறான சூழ்நிலைகளில் அவை பெரும் பாதகம் விலைவிக்கக்கூடியனவாகவும் இருக்கின்றன.

ஒரு விதிவிலக்கென்பது ஓர் உண்மையான சலுகையாக இருப்பதற்கு, அதைப் பெறக்கூடியோர் அச் சலுகையை நன்கு உணரவேண்டும். இல்லாவிடில், அவ்விதிவிலக்கு வேறெதுவுமாக மாறக்கூடிய அபாயமுள்ளது. அது ஒரு தடைவிதிப்பாக மாறிடக்கூடிய அபாயமுள்ளது. விதிவிலக்கு வழங்கப்பட்ட அதே மக்களுக்கெதிராக அதே விதிவிலக்குகள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக படிப்படியாகத் தடைகளாக மாறிய சலுகைகள் ஆங்காங்கே மனிதசரித்திரத்தில் சிதறிக்கிடக்கக் காணலாம். ஒரு விதிவிலக்காகப்பட்டது ஒரு தடையாகவின்றி ஒரு சலுகையாக நல்ல முறையில் இயங்கிட சுமையானவையும், சிரமமானவையும், விரும்பத்தகாதவையும், எம்மக்களுக்கு அவை குறிப்பாக கஷ்டமாக இருக்கும் என்பது குறித்த சூழ்நிலைகள் பற்றியும் இணக்கம் காணப்பட வேண்டும். யாவற்றுக்கும் மேலாக, தாம் செய்ய விரும்பும் ஒரு காரியத்தைச் செய்வதினின்று மக்களுக்கு நாம் விதிவிலக்களிக்கக்கூடாது. தங்கள் சலுகைகளினின்று நாம் மக்களுக்கு விதிவிலக்களிக்க முடியாது. ஒரு சலுகையினின்று விதிவிலக்களிப்பதை ஒரு சலுகையெனக் கூறுவது பரிகாசமாக இருக்கும். புனித யாத்திரை செய்வதினின்று பெண்களுக்கு விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது என்பதை அதிப்புனித நூலில் நாம் காணும்போது, நிச்சயமாக பஹாவுல்லா அது குறித்து பரிகாசம் செய்யவில்லை என்பது நமக்குத் தெரியும். இது எனக்குப் புரியவில்லை. பொதுவாகவே சமய ரீதியில் புனித யாத்ரீகர்களுக்குப் புனித யாத்திரையானது ஒரு சலுகையெனக் குறிப்பிடத்தகுந்தமையை அடைந்துள்ளது, மற்றும் சில வேளைகளில் அவ்விதப் புனிதயாத்ரீகரைச் சந்திப்பதும் பெரும் சலுகையெனக் கருதப்படுகிறது. இச்சலுகை பொருளியல் ரீதியிலானதோ அல்லது பௌதீக ரீதியிலானதோ அல்ல, ஆனால் அதற்கு மாறாக ஆன்மீக ரீதியிலானது. கடந்தகாலங்களில் இம்மரபை தவறாகப் பயன்படுத்தியும், ஏமாந்தவர்களை ஏமாற்றுவதற்கு இதை உபயோகப்படுத்தியும், தங்கள் சாதனைகளில் ஒன்றாக அதைக் காண்பித்தும், அது அவர்களுக்கு ஏதோ ஓர் உயர்ந்த ஸ்தானத்தை அளித்துள்ளதாக எண்ணியும் செயல்பட்டும் வந்த போதிலும் அழியாமல் இம்மரபு காலங்காலமாகத் தலைத்தே வந்துள்ளது. நிச்சயமாகவே, இது குறித்த தெளிவற்ற நோக்கங்களும், “புறப்பயணம்” மற்றும் “அகவரவு” ஆகியவற்றுக்கிடையிலான குழப்பங்களும் கடந்த காலங்களில் மாபெரும் இலக்கியப் படைப்புக்களைத் தூண்டியுள்ளன. புனிதப்பயணமென்பது தனிப்பட்ட வகையில் ஆசீர்வாதத்தின் ஓர் அடையாளமாகவே இருந்துள்ளது, மற்றும் அதை அடைவது ஆன்மீக வாழ்வின் ஒரு குறிக்கோளாகவும், மறுஅர்ப்பணிப்பின் ஓர் அறிகுறியாகவும் இருந்துள்ளது. புனிதப்பயணமெனும் கடுமையான பாதை பாவம் தீர்க்கும் ஒரு வழியாகவும் பயன்பட்டுள்ளது, மற்றும் மனதில் பெரிதும் ஐயம் கொண்ட யாத்ரீகரும் தனது இதய ஆவலின் திருவாசலில் தனக்கென வெகுமதிகளை இரகசியமாக எதிர்பார்ப்பார்.

பஹாய் சமயத்தில், ஒரு குறிப்பிட்ட வித்தியாசத்தைத் தவிர்த்து இம்மரபு முழுமையாக பின்பற்றப்படுகின்றது: பெண்கள் இதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டடுள்ளனர். இத்தனியொரு விதிவிலக்கு இம்மரபு குறித்தும், கடந்த மற்றும் வருங்காலங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும், மற்றும் வார்த்தைகளின் பயன்கள் குறித்தும் பல கேள்விகளை எழுப்புகின்றது. புனிதப்பயணத்திலிருந்து ஒருவர் எவ்வாறு “விதிவிலக்களிக்கப்படலாம்”? போவதற்கோ அல்லது போகாமல் இருப்பதற்கோ ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம். இக்கடமையை ஆற்றுவதிலிருந்து ஒருவர் நிச்சயமாக விடுவிக்கப்படலாம். ஆனால் ஒரு சலுகையிலிருந்து ஒருவர் எவ்வாறு “விதிவிலக்குப்” பெறுவது? புனிதயாத்திரை கலந்துரையாடல் குறித்த எழுவாயாகவும் “விதிவிலக்கு” வினைச் சொல்லாகவும் இருக்கும் வரையில் இது எனக்குப் புரியப்போவதில்லை.

ஆகாயப் பயணம், மருத்துவ வசதிகள், ஆரோக்கியமான உடல், மற்றும் சுமாரான சுதந்திரம் பெற்ற இருபதாம் நூற்றாண்டில் வாழும், முக்கியமாக மேற்கு நாடுகளில் வதியும் பெண்கள் இச்சந்தேகத்திற்குறிய சிறப்பிற்காக தனிப்படுத்தப்பட்டிருப்பது குறித்து ஆச்சர்யப்படலாம். தவிர்ப்பதைவிட மாறுவதே சிறப்பாகும் எனக்கூடிய சூழ்நிலை மற்றும் இருப்புநிலைகளைக் குறிக்கும் ஒரு விதிவிலக்கை அவர்கள் எவ்வாறு கருதுவது என்பது குறித்து ஆச்சர்யப்படலாம்.

தாங்கள் பெண்கள் என்பதைத் தவிர்த்து வேறு காரணங்களுக்காகவும் அவர்கள் இச் சலுகையைப் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகுவது குறித்தும் இப்பயணம் பெண்களுக்குக் கட்டாயமானதல்ல எனும் காரணத்தினால் ஆண்கள் அவர்கள் அப்பயணத்தில் ஈடுபடுவதினின்று அவர்கள் மனதை மாற்ற முயற்சிக்கலாம் என்பது குறித்தும் பெண்கள் யோசிக்கலாம். தேக அசௌகர்யத்தினாலோ, பொருளாதார சிறமங்களினாலோ இச்சலுகையைப் பெறவேண்டிய நிலையில் பெண்களல்லாதவரும் இருப்பார்கள் எனும் அதே வேளையில் பெண்கள் எனும் காரணத்தினால் தங்களுக்குத் தேவைப்படாத ஒரு சலுகையைப் பெற்றிருப்பது குறித்தும் அவர்கள் குழப்பமடையலாம் யாவற்றுக்கும் மேலாக, மனுக்குல முழுமைக்குமான ஆசிகள் குறித்த விளைவுகளைத் தாங்கி வரும், பல நூற்றாண்டுகளாக இருந்துள்ள வழக்கமான ஒன்றை, நமது சமயத்திலிருந்தும் கிரகிக்கக்கூடியதுமான ஒரு செயலை ஆற்றுவதிலிருந்து நமது பெண்கள் விலக்களிக்கப்பட்டுள்ளது பற்றி அவர்கள் குழப்பமடையலாம்.

விதிவிலக்கு மற்றும் தடைவிதிப்பு ஆகியவற்றுக்கிடையில் சுலபத்தில் ஏற்படக்கூடிய நிலைச்சறுக்கல் குறித்தும் அவர்கள் சிந்தனை செய்யலாம். யாவற்றையும் விட, ஓர் ஆன்மீக அதிகாரி ஒரு சாரருக்கு சிறப்பு விதிகள் விதித்திடும் போது இந்நிலைச்சறுக்கல் நிகழ்ந்திட வாய்ப்புள்ளது என்பதைச் சோர்ந்த உள்ளத்துடனும், சரிந்திடும் எதிர்பார்ப்புகளுடனும் அவர்கள் நினைத்துப்பார்ப்பார்கள்; அதாவது, சமயம் ஒரு சாரரை மட்டும் தனிப்படுத்தும் விதிவிலக்கை அளிக்கும் போது இந்நிலைச்சறுக்கல் நிகழக்கூடும், அதாவது சமூகத்தின் குறிப்பிட்ட உறுப்பினர்களாகிய, குறிப்பாக பெண்களிடையே சில சிரமங்களை நீக்கிடும் பொருட்டு மனித அலுவல்களை இறைவன் ஒழுங்குபடுத்த முனையும் போது இது நிகழக்கூடும். பொதுவாக என்ன நடக்கின்றதென்றால், ஒரு விதிவிலக்கை மனிதர்கள் தடைவிதிப்பாக மாற்றிடும் போது ஒரு நிலைச்சறுக்கல் ஏற்படுகின்றது, நிதானமான, கண்ணுக்குத்தெரியாத நிலைச்சறுக்கல் இது. இது ஒரு குற்றச்சாட்டல்ல, கண்டணமும் அல்ல. ஆறாயிர வருடப் ப ழக்கம் சுலபத்தில் நீங்காது. அது உடலோடு ஒட்டியது, அது சமூகங்களைப் பிணைத்திடும், எண்ணிக்கையற்ற நுண்ணிய சேர்க்கை இழைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்பதும் ஒன்று. அது குறித்து நாம் ஒன்றும் செய்யவியலாது, ஆனால் அதை நாம் கண்டும்காணாமல் இருக்கக்கூடாது. கண்டும்காணாமல் இருப்பது அதே சரித்திரத்தை மறுபடியும் எழுதியும் உண்மையை மறுப்பதும் ஆகும். அதே சரித்திரத்தை மறுபடியும் எழுதிட வழிகள் நிச்சயமாக உண்டு. மனித இயல்பின் இருள்சார்ந்த பக்கத்தைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதற்காக சலுகைளிலிருந்து பெறப்படும் விதிவிலக்கை அதே சலுகைகள் எனும் கோணத்திலிருந்து மறுவரையறுக்கும் வழிகள் உண்டு. இது சிறமமானதல்ல. பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்க மகாசபை இதைச் செய்துள்ளது. பல விதமான கொடுமைகளை இதே விதத்தில்தான் ஃபாசிஸ்ட் சர்வாதிகார சமூகங்கள் நியாயப்படுத்தி வந்துள்ளன. சர்வாதிகார ஆட்சிகள் இதை “மறுகல்வி புகட்டுதல்” எனக் கூறின.
தேவைப்படுவதெல்லாம் சிறிது புத்தி சாதுர்யமே:

– நீண்ட பயணங்களுக்குத் தேவைப்படும் வலிமையைக் குறைக்கும் கடினங்களையும் இடைவிடாத மனோபாரங்களையும் தாங்கிடுவதற்கு ஆண்களைவிட பெண்களே அதிக இயற்சக்திகள் பெற்றுள்ளனர் எனும் விஞ்ஞான ரீதியான சமீப கால ஆய்வுகளை நாம் உணர மறுத்தும் கடந்த நூற்றாண்டு முதல் சகிப்புத்தன்மை குறித்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ள குறிப்பிடத்தகுந்த பெண் பயணிகள் பற்றிய குறிப்புகள் யாவற்றையும் புறக்கனிப்பது;
விளையாட்டு மைதானத்தில் கடுமையான துன்பங்களுக்குள்ளாகியும், மனித உள்ளம் எய்திட நினைக்கும் நித்தியமான இல்லம் நோக்கிய பிரயாணத்தின்போது எதிர்நோக்கக்கூடிய எந்தச் சிரமங்களுக்கும் இணையாகாத, தங்கள் இல்லங்களில் எவ்வித வெகுமதிகளும் இல்லாமல் தாங்கள் எதிர்நோக்கும் பெரும் சிரமங்களுக்குள்ளாகும் உலகப் பெண்களின் உடல் மற்றும் மனோ வலிமையை நாம் புறக்கனிப்பது;

– மனம்வெதும்பியும், உறங்கிக்கொண்டும், அதிகமாக சாப்பிட்டு உடலை பருமனாக்கிக்கொண்டும், அல்லது நன்கு உணவு உட்கொள்ளாமல், தங்கள் உடையலங்காரங்களில் மூழ்கியும், கனவுலகில் சஞ்சரித்தும், சுறுக்கமாகச் சொல்லப்போனால் இந்த மாதிரியெல்லாம் தங்களைப் பலவீனர்களாக மாற்றிக்கொள்ளாமல், அனுமதிக்கப்பட்ட வரை ஆண்களைப் போலவே பெண்கள் ஓடியும், குதித்தும், பிரயாணங்களுக்கான வலிமையில் ஆண்களுக்கீடான வலிமையோடு ஒப்பிடுகையில் அனுவளவும் குறைவேற்படுத்தாத எந்தவொரு உயிரியல் குறைபாடுகளையும் பெண்கள் அநுபவிக்கவில்லையென்பது;

– தங்கள் இல்லங்களிலேயே அடங்கிக் கிடந்து, சிக்கனமாக செலவுகள் செய்தும், தங்கள் கற்புக்குக் கலங்கமில்லாமல் தேசாடணம் செய்யவோ அல்லது அறிமுகமில்லாதவர்களை உபசரிக்கவோ விடாத, ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் தங்கள் கற்புக்குக் களங்கம் விளைவிப்போரை உருவாக்கிய ஆணாதிக்கத்தினால் உருவாக்கப்பட்ட பயம், தங்கள் உடல்கள் அகன்றுள்ளதைப்போன்றே, அகன்றுள்ள பெண்களின் மனங்களை மீண்டும் அந்த ஆதி மற்றும் பூர்வநிலை இருளில் இட்டு அடக்குவதை நாம் நிச்சயிப்பது;

– இறுதியாக, தனது பூர்வத்தூய்மையிலிருந்து கனிந்து பஹாய் புனித யாத்திரை கூட ஒருநாள் கடந்த காலங்களைப் போல் புனிதம் சிதைந்துவிடும் எனவும், ஆண்களைவிட பெண்களுக்கு மிகவும் கடுமையாக விளங்கக்கூடியதும் வலிமையைச் சோதிக்கும் ஒன்றாகவும் அது ஆகும் எனவும், வருடா வருடம் லட்சோபலட்ச மக்கள் ஆற்றும் புனிதப்பயணங்களிலிருந்து தோன்றும் குறைபாடுகளை, லௌகீக ஈடுபாடுகளை, மூட நம்பிக்கைகளை, வெறுப்பேற்படுத்தக்கூடிய நடத்தைகளை உலக நீதி மன்றத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது போகும் என நாம் எண்ணினோமானால்:

அதற்கான பதில் ஆமாம் எனவே வரும். பெண்கள் புனிதஸ்தலங்களை நேரடியல்லாத காட்சிகளாக காணவே விரும்புவார்கள், மற்றும், ஆமாம், பௌதீகப் பிரயாணத்திலிருந்து கிடைக்கும் விதிவிலக்கானது உண்மையிலேயே ஒரு சலுகையாகிவிடும். ஆனால் இதைத்தானே நாம் நிலைச்சறுக்கல் எனக் கூறுகின்றோம். இதுதானே எதையும் ஓய்வில்லாமல் நியாயப்படுத்தும் மனதிலிருந்து தோன்றும் பின்விளைவுகள் எனப்படுகின்றது. அர்த்தங்களைத் தேடும்போதும், கற்பனா பின்விளைவுகளை அனுமானம் செய்தும், நினைத்தும், கண்டுபிடிக்கவும் ஆரம்பித்தோமானால் பெரும் பயங்கரங்களை நாம் வெளிக்கொணருவோம். இவ்வித நிலைச்சறுக்கல் குறித்து சமூகம் பெரிதும் எதிர்ப்பு தெரிவியாமல் இருக்கும் வரை, எல்லா சட்டங்களும், விதிமுறைகளும் இவ்வித துர் உபயோகத்தை முற்றாக தடுக்காதவரை, பெண்களுக்கான விதிவிலக்குகள் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதிலிருந்து இறைவன் தாமே, பெண்களை பாதுகாக்கும் வரை, இவ்வித கொடுமைகள் மீண்டும் மீண்டும் நடக்கவே செய்யும்.

பஹாவுல்லாவின் துன்பங்களுக்கான நோக்கம்


பஹாவுல்லாவின் துன்பங்களுக்கான நோக்கம்

(அப்துல் பஹாவின் நிருபம் ஒன்றின் பகுதிகள்)

மேன்மைப் படுத்தப்பட்ட அழகரின்பால் உங்கள் முகத்தைத் திருப்பியுள்ளோரே. இரவும் பகலும், காலை வேளைகளிலும் அந்தி வேளைகளிலும், இருள் சாயும் பொழுதிலும், அதிகாலையிலும், என் சிந்தையிலும் இதயத்திலும் தேவரின் அன்புக்குரியவர்களை நான் நினைவுகூர்ந்த வன்னமிருந்தேன், சதா நினைவுகூர்ந்த வன்னமிருந்தேன். அந்தத் தூய்மையானதும் புனிதமானதுமாகிய தேசத்தில் வசிக்கும் நேசத்துக்குரியவர்களின் மீது அவரது ஆசீர்வதிப்பு பொழியப்படுமாறு நான் அவரிடம் இறைஞ்சுகிறேன், மற்றும் எல்லா காரியங்களிலும் வெற்றியை அவர்களுக்கு அளிக்குமாறும், அவர்களது குணத்தில், அவர்களது நடத்தையில், அவர்களது வார்த்தைகளில், அவர்களது வாழ்க்கை நெறியில், அவர்கள் இயங்கிச் செயலாக்கும் எல்லாவற்றிலும் அவர்கள் மனிதர்களிடையே தனிச்சிறப்பை அடையுமாறு செய்வாராக; அவர்களது இதயங்கள் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் ஏங்கும் அன்போடும், அறிவோடும் மெய்யுறுதியோடும், பற்றுறுதியோடும் ஒற்றுமையோடும், அவர்களது வதனங்கள் அழகோடும் பிரகாசத்தோடும் இருக்கும் வகையில் அவர் அவர்களை உலக சமூகத்தினுள் ஒன்றிணைப்பாராக.

சியாச்-சால் சிறை

தேவரின் நேசத்திற்குரியவர்களே! இந்நாள் ஒற்றுமைக்குரிய நாள், மனித இனம் அனைத்தும் ஒன்று கூட்டப்படும் நாள். “மெய்யாகவே இறைவன், ஒரு திடமான சுவரைப்போல், அவரது சமயத்திற்காக இணைந்த வரிசைகளாக போரிடுவோரைத்தான் நேசிப்பார். அவர் “இணைந்த வரிசைகள்” என்று குறிப்பிடுவதைக் கவனியுங்கள் – இதன் பொருள் கூட்டமாகவும் பிணைந்துகொண்டும், ஒருவர் மற்றோருவருடன் கட்டுண்டும், ஒருவர் தனது அன்பர்களுக்கு உதவுவதுமாகும்.

புனித வாசகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல், போர் செய்வதென்றால், சகாப்தத்திற்கெல்லாம் அதி உயர்வான இந்த சகாப்தத்தில், வாளோடும் ஈட்டியோடும், அம்போடும், துளைக்கும் கனைகளோடும் முன்செல்வதென்று பொருளல்ல – மாறாக தூய்மையான எண்ணங் கொண்டும், நேர்மையான நோக்கங்களைக் கொண்டும், உதவிடும் மற்றும் விளைவுகள் தந்திடும் ஆலோசனைகளைக் கொண்டும், இறை பண்புகளைக் கொண்டும், சர்வ வல்லமை பொருந்தியவரை மனம் நிறைவடையச் செய்யும் செயள்களைக் கொண்டும், தெய்வீக இயல்புகளைக் கொண்டும் போர் செய்வதே ஆகும். இது மனிதர்கள் யாவருக்கும் கல்வி புகட்டுவதும், எல்லா மனிதர்களுக்கும் வழி காட்டுவதும், ஆவியின் தித்திக்கும் நறுமணங்களை பரவலாகவும் விசாலமாகவும் பரப்புவதும், இறைவனின் ஆதாரங்களைப் பிரகடனம் செய்வதும், தெய்வீக மற்றும் தெளிவான வாதங்களை முன்வைப்பதும், அரச்செயல்களைச் செய்வதுமே ஆகும்.

எப்போதெல்லாம் புனித ஆன்மாக்கள், வின்னுலகச் சக்திகளைப் பெற்றுக் கொண்டு, அத்தகைய ஆன்மீக இயல்புகளைக் கொண்டு எழுந்து, ஒன்றிணைந்து, அணிவரிசை அணிவரிசையாக அணிவகுத்துச் செல்வார்களாயின், அந்த ஆன்மாக்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆயிரம் ஆன்மாக்களுக்குச் சமமானவர்களாவர், மேலும் அந்தச் சக்திவாய்ந்த சமுத்திரத்தின் பொங்கி எழும் அலைகள் வின்னுலகப் படைகளுக்குச் சமமாக இருக்கும்.

நாம் எல்லோரும் ஒருபொழுதில் தனித்திருந்த ஊற்றுகளும், நீரோடைகளும் அருவிகளும், விரைந்தோடிடும் நீர் உற்றுகளும், தனித் துளிகளுமாக இருந்தபின், ஒரே இடத்தில் சேர்க்கப்பட்டு ஒரு மாபெரும் கடலாக ஆக்கப்பட்டால் – அது எத்தகையதொரு அருளாகும். மேலும், அங்கு வியாபிக்கும் எல்லோருடைய இயல்பான ஒற்றுமையாகப்பட்டது, இந்த மானிடர்களின் மிளிரும் வாழ்கையின் கலாச்சாரம், கோட்பாடுகள், பழக்க வழக்கங்கள் மற்றும் வேற்றுமைகளானவை தனித் தனித் துளிகளைப்போல் அந்த ஒருமைத்தன்மை எனும் பெருங்கடலானது பாய்ந்துப் பொங்கியெழுந்து ஓடுகையில் அழிந்து மறைந்துவிடும்.

ஆதி அழகானவரின் மேல் நான் ஆனையிடுவது, யாதெனில், அத்தகையதொரு வேளையில் வியக்கச் செய்யும் கருணை எல்லோரையும் வட்டமிடும், மற்றும் ஆகக் குறுகளான நீரோடையானது எல்லையற்ற சமுத்திரத்தைப் போல அகன்று வளர்ந்துவிடும், மற்றும் ஒவ்வொரு நுன்னிய துளியும் ஆழங்கானா சமுத்திரமாகிவிடும்.

இறைவனின் நேசத்துக்குரியோரே! அந்த உயர்ந்த நிலையினை அடைந்திட முயல்வீராக, இந்தப் பூமியின் எல்லைகளுக்கப்பால் பிரகாசித்திடும் ஒரு பிரகாசத்தை உருவாக்குவீராக, அதனால் அதன் கிரனங்கள் நித்தியமெனும் தொடுவானத்திலிருக்கும் ஓர் உதயபீடத்திலிருந்து பிரதிபலிக்குமாக.

இதுவே இறை சமயத்தின் மெய்யான அஸ்திவாரமாகும். இதுவே இறை சட்டங்களின் மெய்யான வித்தாகும். இதுவே ஆண்டவனின் தூதர்களினால் எழுப்பப்பட்ட மாபெரும் அமைப்பு. இதன் காரணமாகத்தான் ஆண்டவனின் உலகத்தின் சூரியன் உதிக்கின்றது. இதனால்தான் இறைவன் தமது மனித உடல் எனும் சிம்மாசனத்தின்மீது தம்மை ஸ்தாபித்துக்கொண்டார்.

இறைவனின் நேசத்துக்குரியோரே! இந்த உயர்ந்த நோக்கத்திற்காக மேன்மைப் படுத்தப்பட்ட வரான (பாப் பெருமானார்) – பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஆன்மாக்களும் அவருக்கு அர்ப்பனம்செய்யப்படுமாக – தனது புனித நெஞ்சத்தினை சோதனையின் கனைகளுக்கு இரையாக்கினார்; மற்றும் தொள்ளழகரின் (பஹாவுல்லாவின்) – மேலுலகவாசிகளின் ஆன்மாக்கள் அவருக்காக அர்ப்பனம் செய்யப்படுமாக — நோக்கம் இதே ஆன்மீக குறிக்கோளினை வென்றிட வேண்டும் என்பதனால் — மேன்மைப் படுத்தப்பட்டவர், வஞ்சகமும் வெறுப்பும் கொண்ட மக்களினால் துளைக்கப்பட்ட எண்ணிலடங்கா குண்டுகளுக்குத் தனது புனித மார்பைக் குறியாக்கினார். அவர் அதி தாழ்மையுடன் உயிர்த் தியாகியாக மரணமடைந்தார்.

இந்தப் பாதையின் புழுதியில்தான் ஆயிரமாயிரமான தெய்வீக ஆன்மாக்களின் புனித இரத்தம் பொங்கிப் பீரிட்டது, மேலும் எத்தனையோ முறை ஒரு நேர்மையான இறை நேசனின் புனித உடல் தூக்கிலுடும் விருட்சத்தில் தொங்கவிடப்பட்டது.

அப்ஹா அழகர் – எல்லா உயிரினங்களின் ஆன்மாக்களும் அவரது நேசர்களுக்காக அர்ப்பணிக்கப்படுமாக — எல்லா வித இன்னல்களையும் தானே தாங்கிக்கொண்டார், மேலும் பெரும் இடுக்கண்களையும் தானே ஏற்றுக்கொன்டார்.

தன் புனித மேனி உட்படுத்தப்படாத கடும் சித்திரவதைகள் எதுவுமில்லை, தன்மீது பொழிந்திடாத சோதனைகள் எதுவுமில்லை. எத்தனை இரவுகள்தான், அவர் சங்கிலியால் பினைக்கப்பட்டிருக்கும் வேளையிள், தமது இரும்புக் கழுத்து வளையத்தின் பாரம் தாங்கவியலாமல், தூக்கமின்றிக் கிடந்தார்; எத்தனை நாட்கள்தான் தம்மைப் பிணைத்திருக்கும் விலங்குகள் மற்றும் சங்கிலிகளின் வாட்டிடும் வலி அவரு க்கு ஒரு வினாடி நிம்மதியைக்கூட தரவில்லை.

நியாவரானிலிருந்து தெஹெரான் வரை அவரை ஓடச்செய்தார்கள் — உருவெடுத்த ஆவியான அவர், அலங்கரிக்கப்பட்ட பட்டுத் துனியினாலான பஞ்சு மெத்தைகளின் மேல் உறங்கி பழக்கப்பட்டவரான அவர் — சங்கிலியால் கட்டப்பட்டு, காலனி இல்லாமல், தலைப்பாகையற்று ஓடச்செய்யப்பட்டார்; மேலும், மன்னின் ஆழத்திற்குள், அந்த நெறுக்கமான பாதாளத்தின் கடுமையான இருளில், கொலையாளிகள், தீவிரவாதிகள் மற்றும் திருடர்களுடன் அவர் அடைக்கப்பட்டார்.

மேலும் மேலும் அவர்கள் ஒரு புது சித்திரவதைக்கு அவரை ஆளாக்கினார்கள், அவர் உயிர்த்தியாகியென மரணம் அடைவார் என அவர்கள் எல்லோரும் ஒரு வினாடிக்கு மறு வினாடி உறுதியாக இருந்தனர். சில காலத்திற்குப் பிறகு அவர்கள் அவர் பிறந்த நாட்டை விட்டு அவரை நாடு கடத்தி, அந்நிய மற்றும் தூரமான நாடுகளுக்கு அனுப்பினர்.
ஈராக்கில் பல ஆண்டுகளுக்கு, ‘அவரது புனித இதயத்தை ஒரு புதிய கனை துளைத்திடாமல் ஒரு விநாடி கூட கடந்திடவில்லை; ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு புது வாள் அவரது புனித மேனியின் மேல் பாய்ந்தது. ஒரு கனம் கூட பாதுகாப்பையோ ஓய்வையோ அவர் எதிர்பார்த்திட இயலவில்லை.

இடைவிடாத வெறுப்புடன் எல்லா திசைகளிலிருந்தும் தம் எதிரிகள் தாக்குதல் நடத்தினர்; தனியாகவும் ஒருவராகவும் எல்லோரையும் அவர் எதிர்த்து நின்றார். இப் பேரிடர் எல்லாவற்றுக்கும் பிறகு, இந்த உடற் காயங்கள் யாவற்றிற்கும் பிறகு, அவர்கள் அவரை ஆசியா கன்டத்திலுள்ள ஈராக்கிற்கு வெளியே ஐரோப்பா கண்டத்திற்கு அவரைத் துரத்தினர். அந்த கசப்பு மிகுந்த நாடுகடத்தப்பட்ட இடத்தில், கடுமையான கஷ்டங்கள் நிறைந்த இடத்தில், குர்-ஆனை நம்புவோர்கள் அவர்பால் சுமத்திய பழிகளுக்கு மேல் இப்பொழுது பாயானை பின்பற்றுவோரின் தொடர்ச்சியான துன்புறுத்தல்களும், மோசமான தாக்குதல்களும், நாச வேலைகளும், அவதூறுகளும், தொடர்ச்சியான விரோதமும் வெறுப்புகளும் பொறாமையும் சேர்ந்துகொண்டன.

என் எழுதுகோல் இவை எல்லாவற்றையும் எழுதிட பலமற்றுள்ளது; ஆனாலும் நீங்கள் நிச்சயமாக இவைகளை அறிந்திருப்பீர்கள். பிறகு, இருபத்து நான்கு வருடம் இந்த அதி பெரும் சிரையில், நொந்தும் கடும் நோயுற்றும், அவரது நாட்கள் இறுதி கட்டத்தை நெருங்கின.

சுருக்கமாகச் சொல்லப்போனால், ஆதி அழகர், இந்த மாயை உலகில் தாம் கடந்து செல்கையில், எப்பொழுதுமே, சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு கைதியாகவோ, அல்லது ஒரு வாளின் கீழ் வசிப்பவராகவோ, அல்லது ஆகக் கடுமையான துயரங்களுக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப் பட்டவராகவோ, அல்லது இந்த அதி பெரும் சிரையில் அகதியாகவோ தான் இருந்தார். தனக்கு நேர்ந்த சோதனைகளினால் விளைவிக்கப்பட்ட தனது உடல் வலிமையின்மையின் காரணத்தால், அவரது புனித உருவம் ஒரு சுவாசமாகத் தேய்ந்துப் போனது; நீண்ட துயரத்தின் காரணத்தினால் அது ஒட்டடையைப் போல் கனமற்றுப் போனது. அவர் இந்தப் பெரும் பாரத்தைச் சுமந்து, தனது அலைகளை வானத்தின் உயரத்திற்கு ஓங்கிடச் செய்யும் சமுத்திரத்தைப் போல் திகழ்ந்த இந்த சோகங்களை எல்லாம் தாங்குவதின் காரணம் — அவர் கனமான இரும்புச் சங்கிலிகளை அனிந்ததற்கான காரணம், பரிபூரனப் பொறுமை மற்றும் தாழ்மை என்பதற்கான மெய்யான அடையாளமாக ஆவதற்கான காரனமானது, உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனையும் சமாதானம், நட்பு மற்றும் ஒருமைத்தன்மைக்கு வழிகாடுவதற்கும்; இறைவனின் ஒருமைத்தன்மையின் சாயலை எல்லா மக்களிடமும் அறிவிப்பதற்குமாகும். இதன் நோக்கமானது, இறுதியாக எல்லா படைக்கப்பட்டப் பொருட்களின் இதய மையத்திற்குள் பொதிக்கப்பட்டிருக்கும் முதன்மை ஒருமைத் தன்மையானது தனது முன்விதிக்கப்பட்ட கனியைக் காய்க்கும் என்பதற்கும், ‘கருணை எனும் இறைவனின் படைப்பில் ஏதேனும் வேறுபாட்டினை நீங்கள் கண்ணுர வியலாது’ எனும் அட்சரங்களின் பிரகாசம் தன் கிரணங்களைப் பரவச் செய்வதென்பதற்குமே ஆகும்.

தேவனின் அன்புக்குரியோரே, இதுதான் தீவிர முயற்சி கொள்வதற்கான சரியான நேரம். நீங்கள் கடும் முயற்சி செய்து, போராடுவீராக. மேலும், ஆதி அழகர் பகல் வேளையிலும், இரவுக் காலங்களிலும் உயிர்த் தியாகமெனும் களத்தில் முன்வைக்கப்பட்டார் எனும் காரணத்திற்காக, நாமும், நமது பங்கிற்கு கடுமையாக உழைத்து, இறை ஆலோசனைகளுக்குச் செவிசாய்த்து சிந்திப்போமாக; நம் உயிர்களைத் தூக்கி எறிந்திடுவோமாக, நம் குறுகிய மற்றும் எண்ணிக்கைக்குள் அடங்கிய நாட்களை துறந்திடுவோமாக. இவ்வுலகின் வேறுபட்ட உருவங்களைப்பற்றிய வெறும் வீன்கனவுகளிலிருந்து நம் கண்களை நாம் திருப்பிடுவோமாக, மாறாக இந்த அதி மேன்மையான, இந்த மாபெரும் அமைப்பிற்காக சேவையாற்றுவோம். நமது சொந்த கற்பனைகளின் காரணத்தினால், இறை கருணை எனும் கரங்கள் நட்டிருக்கும் இந்த விருட்சத்தை நாம் வெட்டிவிட வேண்டாம்; நமது வீண் தப்பெண்ணங்களெனும் இருள் மேகங்களைக் கொண்டு, நமது சுய விறுப்பங்களைக் கொண்டு, அப்ஹா இராச்சியத்திலிருந்து பொழியும் மகிமையினை நாம் அகற்றிட வேண்டாம். சர்வ வல்லமை வாய்ந்த இறைவனின் அலைபாயும் சமுத்திரத்தைக் கட்டுப்படுத்திடும் சுவர்களாக நாம் ஆகிட வேண்டாம். சர்வ மேன்மையான அழகரின் வனத்தின் தூய்மையான, தித்திக்கும் நறுமணங்கள் தொலைவாகவும் பரவலாகவும் ஊதி வீசிடுவதை நாம் தடை செய்ய வேண்டாம். இந்த ஒன்றுகூடும் நாளில், மேலுலகிலிருந்து பொழியும் இறை மழை எனும் கருணையை நாம் தடுத்திட வேண்டாம். உண்மைச் சூரியனாகியவரின் பிரகாசங்கள் என்றுமே மங்கி அழிந்திட நாம் ஒப்புக் கொள்ள வேண்டாம். தமது புனித நூல்களிலும் வாசகங்களிலும், தமது ஆலோசனைகளை நேர்மையானவர்களுக்குப் போதிக்கும் தம் நிருபங்களிலும் பொதிக்கப் பட்ட இறைவனின் ஆலோசனைகள் இவைதான்.

மேன்மையும், கடவுளின் கருணையும், கடவுளின் ஆசீர்வாதமும் உங்களைச் சாருமாக.

தாஹிரி ஜம்ஷிட்


தாஹிரி ஜம்ஷிட்

ஓல்யாவின் கதை எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

இரான் நாட்டில் இன்று பல பஹாய்கள் சிறைகளில் வாடுகின்றனர். இவர்களின் ஒரே குற்றம் உலகசீர்த்திருத்தம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபட்டதே ஆகும். ஆம், இவர்கள் பஹாய்கள் ஆவர். அதுதான் அவர்கள் இழைத்த குற்றம்.
தாஹிரி சீயாவுஷீயை ஷிராஸில் வஹ்டாட்களின் இல்லத்தில் 1977-இல்தான் முதல் முதலில் சந்தித்தேன். அடுத்து நாங்கள் இருவரும் சந்தித்தது, ஐந்து வருடங்களுக்குப் பிறகு சேப்பா சிறைச்சாலையின் இருண்ட சில்லிட்ட அறை ஒன்றில் தாஹிரி என்னை அன்புடன் கட்டித் தழுவிய போதே. தாஹிரியும் அவளது கனவரான ஜம்ஷிட் இருவரும் ஒன்றாகவே கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக அனுபவித்த கொடுமைகளைப் பின்வருமாறு தாஹிரி விவரித்தாள்:

1977-இல், ஜம்ஷிட்டும் நானும் யசூஜிற்கு நகர முடிவெடுத்தோம். 1978 இரானிய புரட்சியின் ஆரம்பத்தில் நாங்கள் தாக்கப்பட்டோம். எங்கள் வீடு, உடமைகள் மற்றும் ஜம்ஷிட்டின் புதியக் கடை அனைத்தும் அபகரிக்கப்பட்டன. நான் தாதி வேலை செய்து வந்த மருத்துவ மையத்திலிருந்தும் வேலை நீக்கம் செய்யப்பட்டேன்.

அதன் பிறகு கையில் ஒரு காசு கூட இல்லாத நிலையில் ஷிராஸ் திரும்பினோம். கையில் ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கையை மறுபடியும் அமைக்க ஆரம்பித்தோம். சிறிது காலத்திற்கு நிலைமை மிகவும் மோசமாகவே இருந்தது. ஆனாலும் இருந்ததைக் கொண்டு மனநிறைவு அடைந்தோம். நான் பல மருத்துவ நிலையங்களில் வேலைத் தேடினேன். என் சேவைத் தேவைப்பட்டபோதும், நான் பஹாய் எனும் காரணத்தினால் அங்கு என்னை வேலைக்கு அமர்த்திக் கொள்ள மறுத்துவிட்டனர்.
பல மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் ஒரு தனியார் மருத்துவ மையத்தில் எனக்கு வேலை கிடைத்திருந்தது. ஜம்ஷிட்டும் துனிக் கடை ஒன்றை ஆரம்பித்திருந்தார். ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டு, நான்கு வருடங்களாகச் சொந்த வீடு இல்லாத நிலைக்குப் பிறகு சொந்தமாக ஒரு இடத்தைப் பெறும் நிலையில் இருந்தோம். போன வாரம்தான் ஒரு குளிர்சாதனப் பெட்டி, படுக்கை, மற்றும் சிறு சிறு பொருட்கள் என சிலவற்றை வாங்கினோம். ஆனால் இந்த சிலவற்றைக் கூட நாங்கள் பெற்றிருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும். இப்போது நாங்கள் இருவரும் இங்கு சிறையில் இருக்கின்றோம். அக்டோபர் மாத இருதியில், இரவு நேரத்தில், வீதியில் ஜம்ஷிட் கைது செய்யப்பட்டு நேராக சேப்பா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இரவு சுமார் 10 மணியளவில் அவர் எங்கள் வீட்டிற்குக் கொண்டுவரப்பாட்டார். அவரைப் பார்த்துத் திடுக்கிட்டேன். அவர் வெடவெடவென்று நடுங்கி, நிற்கக்கூட முடியாமல் இருந்தார். அவரை அவர்கள் என்ன செய்துவிட்டனர் என்பதை அறிய அவர் அருகே விரைந்தேன், ஆனால் அவர்கள் எங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனராகையால் நான் அவரிடம் அதிகமாக எதையும் கேட்கவில்லை. அவர்கள் பஹாய் பதிவேட்டிற்கும், பஹாய் நிதிகளைப் பறிமுதல் செய்வதற்காகவும் வந்திருக்க வேண்டும் என யூகித்தேன். ஜம்ஷிட் பதிவேடு மற்றும் நிதி இரண்டையும் தமது கையில் வைத்திருந்தார் ஆனால் புரட்சிக் காவலர்களிடன் அவற்றை ஒப்படைக்க மறுத்துவிட்டார். மற்ற பஹாய்களின் பெயரைப் பெற அவரை அவர்கள் நிச்சயமாகச் சித்திரவதை செய்திருக்கவேண்டும். எங்கள் இருவரையும் பயமுறுத்த எங்கள் இருவரையும் பிரித்து என்னை ஒர் அறையில் அடைத்து வைத்தனர். அவர்கள் ஜம்ஷிட்டிடம், “பதிவேட்டையும் பணத்தையும் கொடுக்கப்போகிறாயா அல்லது இங்கேயே உன்னைக் கொல்ல வேண்டுமா?” என பயமுறுத்துவது எனக்குக் கேட்டது. நான் பெரும் பீதிக்குள்ளானேன்; அவர்கள் கைகளில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். நான் அலறியவாறு கதைவைக் கைகளால் பலமாகத் தட்டினேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்காதிருக்கும் பொருட்டு அவர்கள் கதவைத் திறந்து என்னை வேளியே விட்டனர்.

அவர்களின் தாக்குதலை எதிர்க்கவேண்டும் எனும் தீர்மானம் ஜம்ஷிட்டின் முகத்தில் நன்குத் தெரிந்தது. ‘அதாஹிரி, நான் அஹமதுவிடம் அந்த பதிவேட்டைக் கொடுத்தேன் ஆனால் அவர் எங்கு வைத்துவிட்டாரோ தெரியவில்லை,’ என்றார்
உண்மையில் அந்த புத்தகத்தை ஜம்ஷிட் பாதுகாப்பாக வைத்திருந்தார். தம் உடன்பிறந்தவரிடம் அதை ஒப்படைத்தும், அப்படித் தாம் கைது செய்யப்ப்டடால் அதை எடுத்து நம்பிக்கையான ஒருவரிடம் அதை ஒப்படைக்கும்படியும் கூறியிருந்தார். இதன் மூலம் பஹாய்களின் பெயர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். நான் அமைதியாக இருந்தேன். அவர் மிகுந்த வேதனையோடு பெருமூச்சு ஒன்றை விட்டார். அவர் தமக்குள் நடத்திய போராட்டத்தினால் அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. ஒரு புரம் உள்ளூர்ப் பஹாய்களைப் பாதுகாத்திடும் பொருட்டு அவர் சிறையில் சித்திரவதை அனுபவிக்க வேண்டும், மறுபுறம் அவர் நேர்மையாக இருக்கவேண்டும் எனும் நம்பிக்கையினால் பொய் சொல்ல அஞ்சினார். காவலர்கள் முன்னிலையில் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காவலர்களின் முன்பாகவே ஜம்ஷிட்டை நோக்கிச் சென்றேன். அவரது கையைப் பற்றி அவர் நடப்பதற்கு உதவி செய்தேன். ஒரு பார்வையிலேயே பதிவேடு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதையும் அஹமது நகரத்தை விட்டு வெளியேறிவிட்டதையும் தெரிவித்தேன்.

பதிவேட்டை காண முடியாத காவலர்கள் ஜம்ஷிட்டை மறுபடியும் சிறைக்கே கொண்டு சென்றனர். ஒரு மாதம் கழித்து, அவர்கள் திரும்பி வந்து என்னையும் கைது செய்தனர். என் மேல் சாற்றப்பட்ட குற்றச் சாட்டு நான் பஹாய்ப் பதிப்பகக் குழுவில் அங்கம் வகித்தேன் என்பது.

தாஹிரிக்கும் அவளது கனவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகியிருந்தன. அவ்விருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தனர். தாஹிரிக்கு முப்பது வயதும் ஜம்ஷிட்டுக்கு முப்பத்தி நான்கு வயதும் ஆகியிருந்தது. அவர்களுக்குக் குழந்தைகள் ஏதும் இல்லை. சிறையில் தாஹிரி சதா ஜம்ஷிட்டின் பெயரை உச்சரித்து அவருக்காக ஏங்கி அழுது கொண்டிருப்பாள். பல மணி நேரங்கள் அவ்விருவருடைய உறவைப் பற்றியும் ஜம்ஷிட்டின் பழக்க வழக்கங்கள் பற்றியும் கதை சொல்லிக் கொண்டிருப்பாள். ‘ஓல்யா,’ என என்னை அழைத்து, ஜம்ஷிட்டை கொலை செய்து விடுவார்கள் என எனக்குப் பயமாக இருக்கின்றது, அவர் இல்லாமல் என்னால் வாழ இயலாது,’ என்றாள்.

அவள் தன் உயிரைத் தன் கணவனுக்காகத் தியாகம் செய்ய விரும்புவதாக எப்போதும் கூறிக்கொண்டிருப்பாள். தாஹிரியின் தியாக உணர்வும் அன்பும் பிரமிக்கச் செய்வதாக இருந்தது. அந்த மோசமான நிலையிலும் அவள் எல்லோரையும் கவனித்தும் எல்லோருக்கும் தன்னாலான உதவிகளையும் செய்து வந்தாள்.

சிறையில் பலர் அடிக்கடி நோய் வாய்ப் பட நேர்ந்தது. ஆனால் அங்கிருந்த வசதிக் குறைவுகளினால் ஒரே தட்டிலிருந்து கைகளாலேயே உண்ண வேண்டியிருந்தது. ஒரு நோயாளியோடு ஒரே தட்டிலிருந்து உண்ணுவது எனக்குக் குமட்டலை ஏற்படுத்தும் என்பதை தாஹிரி உணர்ந்திருந்தாள். அத்தகைய சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அவள் என்னைப் பார்த்து, ‘ஓல்யா, நாம் இருவரும் இடம் மாற்றிக் கொள்ளலாமே?’ என்பாள்

நாங்கள் குளிக்கும் போது அவள் எங்கள் துணிகளைத் துவைப்பதற்கு முன்வருவாள். முதல் சில வாரங்களில் எங்களுக்குப் போட்டுக் கொள்வதற்கு ஒரே ஒரு உடை மட்டுமே இருந்தது. பல நாட்ளுக்குப் பிறகே எங்கள் குடும்பத்தினர் எங்களுக்கு மாற்று உடை கொண்டு வர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தாஹிரி தான் கைது செய்யப்பட்ட போது மிகவும் சமயோசிதமாக ஒரு மாற்று உடையைத் தன்னோடு கொண்டு வந்திருந்தாள். அன்றிரவு காவலர்கள் அவளுடைய வீட்டிற்கு வந்த போது மாற்று உடைகளும் குளியல்பொருட்கள் சிலவற்றையும் அவள் முன்யோசனையுடன் ஒரு பையில் எடுத்து வைத்திருந்தாள்.
ஆனால் என் (ஓல்யா) நிலையோ, நான் கைது செய்யப்பட்ட நாளன்று சிறைக்குள் எனக்குத் தேவையான பொருட்களை என்னுடன் கூட எடுத்த வருவதற்கு அனுமதி கேட்ட போது காவலர்கள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகே, அதுவும் பல முறை கெஞ்சிக் கேட்ட பிறகே, என் கனவர் எனக்குத் தேவையான சில பொருட்களைக் கொண்டு வர அனுமதிக்கப்பட்டார். அந்த வேளைகளில் நான் குளித்து என் உடையைத் துவைக்கும் போது தாஹியிரியின் உடையையே உபயோகப் படுத்த வேண்டியிருந்தது. எங்கள் விசாரணைகளின் போது நாங்கள் மொத்தமான காலுறைகளும், காற்சட்டைகளும், நீண்ட தளர் மெய்யங்கிகளும், முக்காடும், சடுர் எனப்படும் கறுப்பு உடையும் தரித்துச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், நாங்கள் கைது செய்யப்பட்டபோது சாதரண உடைகளே போட்டிருந்ததால் காலில் சாதரண மெல்லிய காலுறைகளே அனிந்திருந்தோம். தாஹிரி இரண்டு ஜோடிக் காலுறைகள் வைத்திருந்தாள். முதல் வாரத்தில் நாங்கள் அவளுடைய காலுறைகளேயே அனிந்து செல்வோம். ஒரு முறை நான் திடீரென விசாரனைக்காக அழைக்கப்பட்டேன். அப்போது தாஹிரி தான் அனிந்திருந்த காலுறைகளைக் கலற்றி என்னிடம் கொடுத்தாள். அப்போது நான், “ஒரு வேலை உன்னை அவர்கள் திடீரென அழைத்தாள் நீ என்ன செய்வாய். காலுறைகள் இல்லாமல் நீ அவதிப்படுவாய்,” என்றேன்.
‘பரவாயில்லை, நீ இதை இப்போது அனிந்த செல்,’ எனத் தாஹிரி கூறினாள்.’

விசாரனை முடிந்து திரும்பியவுடன் நான் தாஹிரியின் காலுறைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு எங்கள் விசாரனைக் குறித்தும் நாங்கள் படும் அவஸ்தைக் குறித்தும் பேசினோம். அப்போது தாஹிரி திடீரென என்னிடம் ‘ஓல்யா, இந்த காலுறைகளை நான் உன்னிடமே கொடுக்கப்போகின்றேன் எனக் கூறினாள்.’

‘தாஹிரி, எப்போதாவது ஒரு நாள் நான் இங்கிருந்து வெளியேறினால், நீ கொடுக்கும் இவற்றை உன் ஞாபகார்த்தமாக நான் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் என்றேன். நமது துன்பம் நிறைந்த இந்த நாட்களையும், உன்னுடையத் தியாங்கள் அனைத்தையும் அவை எனக்கு ஞாபகப்படுத்தும். அந்த நேரத்தில் நான் விடுதலையாவேனா இல்லையா என்றே தெரியவில்லை. ஆனால், இப்போது தாஹிரி கொடுத்த அந்த காலுறைகளை நான் பொக்கிஷங்களாக மதிக்கின்றேன்.
தாஹிரியின் விசாரனை எங்களுடன் சேர்த்துச் செய்யப்படவில்லை. ஒரு நாள், அவள் விசாரனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள், ஆனால், மீண்டும் அறைக்குக் கொண்டுவரப்படவில்லை. அவளுக்கு என்னவாயிற்றோ என நாங்கள் கதிகலங்கிப்போனோம். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அரசியல் கைதி ஒருவர் எங்கள் அறைக்குக் கொண்டு வரப்பாட்டார். அவர், தாஹிரி தனியறைச் சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். எங்களைப் பயப்படுத்துவதற்குச், சிறைக் காவலர்கள் எங்களில் யாரையாவது எங்கள் பொது சிறையறையிலிருந்து கொண்டு போய் தனியறைச் சிறையில் அடைப்பதுண்டு. பத்துத் பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு தாஹிரியை மறுபடியும் எங்கள் அறையிலேயே கொண்டு வந்த அடைத்தனர். அந்ந நாட்களில் தான் மிகவும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தாஹிரி தெரிவித்தாள். ஆனாலும், ஜம்ஷிட்டைப்பற்றியும் தன்னைப்பற்றியும் தவிர வேறு எவரைப்பற்றியும் தான் எவ்விதத் தகவலையும் அவர்களுக்கு வெளியிடவில்லையென தாஹிரி தெரிவித்தாள்.

முடிந்தபோதெல்லாம், எங்கள் அறைக்குள் நாங்கள் ஒன்றுகூடி, மனவேதனைகளை மறந்திருக்க வேடிக்கையாக எதையாவது பேசியும், சிரித்துக்கொண்டும், இருப்போம். கூறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஏதாவது இருக்கும். குறிப்பாக, தாங்கள் கொலையுறப்போவது குறித்து அனைவருமே எதையாவது சொல்வார்கள். தாஹிரி அதைப்பற்றி வேடிக்கையாக எதையாவது கூறுவாள். “யா பஹாவுல்லா, தயவு செய்து என்னை மட்டும் இதற்குத் தேர்ந்தெடுக்காதீர்கள். நான் உயிர்த்தியாகியாக விரும்பவில்லை. நான் ஒரு பஹாயாக இருந்து உயிர் வாழவே விரும்புகிறேன்.” அவ்வாறு கூறிவிட்டு மெல்லச் சிரித்து, “யா அப்துல் பஹா, நான் உயிர்த்தியாகியாக விரும்பவில்லை. அது வலுக்கட்டாயமானது இல்லை தானே?  ஜம்ஷிட்டின் கரத்தை என் கரத்தில் வைத்து எங்கள் இருவரையும் ஒன்றாக வாழ விடுவீர்கள் என்பதே என் ஆசை. நாங்கள் இருவரும் ஒன்றாகவும் பஹாய்களாகவும் இருக்கும் வரை, தெருவோரத்தில் குடிசையில் வாழ்வதானாலும் பரவாயில்லை.” என வேண்டிக்கொள்வாள்.
எங்கள் மரணச் செய்தி கேட்டு நண்பர்களும் உறவினர்களும் எவ்வாறு பதபதைப்பார்கள் என்பதை ஒரு சில அன்பர்கள், நடித்துக்காட்டி எங்கள் எல்லோரையும் சிரிக்க வைப்பார்கள். ஆனால் தாஹிரி மட்டும் சிரிக்க மாட்டாள். “இந்த வெறி பிடித்த மனிதர்கள் நம்மேல் வைத்துள்ள தப்பபிப்ராயத்தால் நம் எல்லோரையுமே கண்டிப்பாக கொல்லப்போகின்றனர்.” தாஹிரிக்குத் தான் கொல்லப்படப்போவது ஆரம்பித்திலிருந்தே தெரிந்திருந்தது போலும். ஆனால், அவள் சிரித்துக்கொண்டே, “கேளுங்கள், அவர்கள் நம்மை தூக்கிலிடும்போது நமது நாக்குகள் தொங்கிப்போகாமல் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லையெனில் பார்ப்பதற்கு மிகவும் கோரமாக இருக்கும். ஆகவே, வாயை நன்கு மூடிக்கொண்டு புன்னகைத்த வண்ணமாக இருங்கள்.” என்றால்.

பல நேரங்களில் நான் சிறிது மறந்திருந்தாலும் அவள் எனது தற்போதைய ஆசீர்வாதங்களை ஞாபகப்படுத்துவாள். ‘நாம் இனி கவலைப்படத் தேவையில்லை. முன்பெல்லாம் இந்த புரட்சிப் படையினர் எப்போது நமது வீட்டுக் கதவைத் தட்டி நம்மை கைது செய்வார்களோ எனும் பதபதைப்பு இருந்துக் கொண்டே இருக்கும். ஆனால் இப்போது நமக்கு அந்த பயம் இல்லையல்லவா.’ என்பாள்.

வருகையாளர்கள் தினங்கள் தாஹிரிக்கு மிகவும் சிறமமிக்க நாட்களாக விளங்கின. ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விடுவாள். அவளது கனவனின் சகோதரராகிய அகமது, கர்ப்பமான தனது மனைவியையும் குழந்தைகளையும் விட்டு ஷிராஸ் நகரைவிட்டுத் தப்பியோட வேண்டியதாயிற்று. ஆனால் அந்தப் பெண்மனி தனது இரு குழந்தைகளோடும் கையில் பழங்கள் நிறைந்த பைகளுடனும், துணிகளுடனும், பணத்துடனும், தாஹிரியையும் அவளது கனவரையும் சந்திக்க வருவாள். அங்கு சிறை வாசலில் 7 அல்லது 8 மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். காவலாளிகளின் ஏச்சையும் பேச்சையும் திட்டல்களையும் கொச்சை வார்த்தைகளையும் செவிமடுக்க வேண்டும். அதுவும், கண்ணாடித் தடுப்பின் வழி அந்த 10 நிமிடங்களுக்கும் குறைவான நேர சந்திப்பிற்காகவே. இது ஒவ்வொரு முறையும் தாஹிரியின் இதையத்தைக் கசக்கிப் பிழிந்துவிடும். ‘அந்தப் பெண்ணின் தியாகமும் தன்னலமின்மையும் என்னை நானிக் குறுகச் செய்கின்றன’ என அவள் கூறுவாள்.

ஜம்ஷிட் ‘சமாரிட்டான்’ குழுவின் அங்கத்தினர் எனவும், அவர் ஜோர்தானில் பிறந்தவர் எனவும் காவலர்கள் அறிந்த போது, அவரைப் பிறரைக்காட்டிலும் அதிகமாக துன்புறுத்தவாரம்பித்தனர். அவரை எழுபது நாட்கள் சேப்பாவில் தனிச்சிறை வைத்தனர். தாஹிரியும் ஜம்ஷிட்டும் ஒருவர் மேல் ஒருவர் தங்கள் உயிரையே வைத்திருந்து காவலர்களுக்குத் தெரியும். இதை அவர்கள் உபயோகப்படுத்தி ஒருவரிடம் மற்றவர் சமயத்தைத் துறந்துவிட்டதாகப் பொய் சொல்வார்கள். ஆனால், அது எப்போதுமே வேலை செய்ததில்லை. தாஹிரியிடம் இந்தக் கதையைச் சொல்லும் ஒவ்வொரு தடவையும் அவள், ‘நான் பஹாய்’ என்பாள்.

நீ அவரது மனைவி அல்லவா?’ என அவர்கள் வினவுவார்கள்.

‘நம்பிக்கை என வரும்போது ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மாவுக்கு அவர்களே பொறுப்பாளிகள்’ என தாஹிரி கூறிவிடுவாள்.
விசாரனை செய்பவர், தாஹிரியின் மனோ தைரியத்தினால் மிகவும் சினமுற்று விசாரனை அரைக்கு அவளைக் கொண்டு சென்று, ‘நீ உன் சமயத்தைத் துறக்காவிடில் ஜம்ஷிட்டைச் சாகும் வரை துன்புறுத்த ஆனையிடுவேன்’ எனக் கூறுவார்.
‘நான் பஹாய். சாகும் வரை நான் அவ்வாறே இருப்பேன்,’ என அவள் தைரியமாக பதிலளிப்பாள். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் என் சமயத்தைத் துறக்கப்போவதில்லை.’

‘உன் ஜம்ஷிட்டை நாங்கள் என்ன செய்துவிட்டிருக்கிறோம் என்பதை மட்டும் நீ அறிந்தால். அவரை நீ இப்போது பார்த்தால் அடையாளமே தெரியாது. உனக்கு உன் ஜம்ஷிட் சிறிது கூட மீதமில்லாமல் செய்துவிட்டோம்’ என விசாரனை செய்யும் காவலர் கூறினார்.
ஜம்ஷிட் மீது உயிரையே வைத்திருந்த தாஹிரி, அது கேட்டு ஜம்ஷிட்டின் நிலை குறித்து தனக்குத் தெரிவிக்குமாறு காவலாளியைக் கெஞ்சினாள். அப்போது அவர்கள் ஜம்ஷிட்டை அந்த அரைக்குள் கொண்டுவந்து அவர்கள் இருவரையும் 15 நிமிடங்கள் சந்திக்க விட்டனர். அதன் பின் அவள் சிறைக்குத் திரும்பி வந்தாள். வரும்போது மேனியெல்லாம் நடுங்க அழுதுகொண்டே வந்தாள்.

அவர்கள் ஜம்ஷிட்டைத் கைத்தாங்கலாக அறைக்குள் கொண்டுவந்தனர். அவரைப் பார்த்தவுடன் நான் அலறிவிட்டேன். அவர் வெறும் எலும்பும் தோலுமாகப் பேயைப் போல் நின்றார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. அவரது கால் நகங்களிலிருந்து இரத்தமும் சீழும் வடிந்துகொண்டிருந்தது. ஆனால் அவர் ஆன்மா திடமாகவே இருந்தது. அவர் என்னைத் தேற்றியவாறு, ‘தாஹிரி, என்னைப்பற்றி கவலைப்படாதே. நான் உயிர்வாழ்வேன்,’ என்றார்.

நான் அதற்கு, ‘ஜம்ஷிட் உம்மை அவர்கள் கொன்றுவிட்டால் நாம் அடுத்த உலகில் சந்திப்போம். அங்கு நாம் ஒன்றாக இருக்கலாம்.’ அப்போது, ஜம்ஷிட் ஏதோ என்னிடம் சொல்ல விரும்புவதாக உணர்ந்தேன். ஒருவேலை நான் விடுதலையாகி வெளியே சென்றால், அவர் கூறக்கூடிய விஷயங்களைத் தேசிய ஆன்மீக சபையிடம் தெரிவிக்கவேண்டும் என விரும்பியிருக்கலாம். அவர் தமது சட்டையின் பின்புறத்தைத் தூக்கித் தமது முதுகைக் காண்பித்தார். அவர் வாங்கியச் சாட்டை அடிகள் அவரது முதுகெலும்பைப் புறையோடச் செய்திருந்தன. விசாரனைச் செய்பவர் முன்னிலையிலேயே, ‘தாஹிரி, நான் எழுபது நாட்கள் சித்திரவதைகளும் எழுபது நாட்கள் தூக்கமின்மையையுைம் அனுபவித்துவிட்டேன். இதற்கு மேலும் இச்சகோதரர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்றே தெரியவில்லை. பகலில் என்னைச் சித்திரவதை செய்கிறார்கள். இரவில் என்னைத் தூங்கவிடுவதில்லை. ஷிராஸ் நகரப் பஹாய்களின் பெயயர்ப் பதிவேடும் அவர்கள் விலாசங்களும் வேண்டுமெனக் கேட்கின்றார்கள், முக்கியமாக உள்ளூர் ஆன்மீகச் சபை அங்கத்தினர்களின் பெயர்களையும் விலாசங்களையும் கேட்கின்றார்கள். என்னைத் தவிர சபை அங்கத்தினராக இருந்த வேறு எவரையும் எனக்குத் தெரியாது எனக் கூறினாலும் நம்ப மறுக்கின்றனர். வறிய நிலையில் இருந்த பஹாய்களுக்கு நான் உதவி செய்ததாகவும், அப்படி நான் செய்யாதிருந்திருந்தால் அவர்கள் இந்நேரம் இந்த நாட்டின் சமயத்தைத் தழுவியிருப்பார்கள் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். சண்டையிலும் நிலநடுக்கத்திலும் பாதிக்கப்பட்ட எல்லா சமய சகோதரர்களுக்கும் பஹாய்கள் வழங்கிய நான்கு லாரி உதவிப் பொருட்களுக்கான ரசீதை இவர்களிடம் கொடுத்துவிட்டேன். இதிலிருந்தே நாம் தேவைப்படுவோர் யாருக்கும் பேதமில்லாமல் உதவுகின்றோம் என்பது தெரிந்திருக்கும். நிற, சமய வேறுபாடில்லாமல் எல்லோருக்கும் உதவவேண்டும் என்பது நமது நம்பிக்கையல்லவா. இவர்களிடம் ஒரு துளி நீதி இருந்திருந்தாலும் அது நாம் குற்றமற்றவர்கள் என்பதை அவர்களுக்கு நிரூபித்திருக்கும்.

அப்போது ஒரு காவலாளி, ‘நீர் பொய் கூறவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். இப்போது உம்மைச் சிறிது நேரம் வெளியே தூய்மையான காற்று படும்படி கொண்டுசெல்கிறோம்,’ என்றார்.

தனி அறைச் சிறைக் கைதிகள் காற்றுப் புகாத அறைகளில் அடைத்து வைக்கப்பட்டு, தூய்மையான காற்றுக்கு ஏங்கிய போதிலும், சிரமமில்லாவிடில், ஜம்ஷிட், தாம் பொதுச் சிறை அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமது தோழர்களைச் சந்திக்கவே விரும்புவதாகக் கூறினார். அதுவே தமக்குப் பெரும் சந்தோஷமளிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
அப்போது நான், ஜம்ஷிட்டின் கைகளிலும் கழுத்திலும் ஆழமானக் காயங்கள் இருப்பதைக் கண்ணுற்றேன். அவை என்னவென நான் வினவினேன். அதற்கு காவலாளி ஒருவர், ‘ஜம்ஷிட் கெட்ட பையன், அவன் இருமுறை தற்கொலை முயற்சியில் இறங்கினான்,’ எனக் கூறினார்.

‘தாஹிரி,’ என என்னை ஜம்ஷிட் விளித்தார், ‘என்னை மன்னித்துவிடு, ஆனால், தனிச் சிறையடைப்பில் இவ்வளவுச் சித்திரவதைகளையும், உடல் மற்றும் மனோ ரீதியில் நான் பட்ட கொடுமைகளையும் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் இவ்வளவு காலம் சென்றும் நமக்குக் குழுந்தைகள் இல்லையென்பது குறித்து என்னை மிகவும் கீழ்த்தரமாகக் கிண்டல் செய்தனர். ‘இந்த நிலைக்குக் காரணம் நீயா அல்லது நானா எனவும் கேட்கின்றனர்.’ அல்லது நடு இரவில் என்னை எழுப்பி அவர்களோடு சென்று பஹாய்களின் இல்லங்களைச் சுட்டிக் காட்ட வெண்டும் எனவும் கூறுகின்றனர்.’

அடுத்த நாள் அவர்கள் ஜம்ஷிட்டை அழைத்துக்கொண்டு தாஹிரியைக் காண வந்தனர். இம்முறை அச்சந்திப்பிற்குப் பிறகு தாஹிரி புன்னகைத்தவாறு வந்தாள். ‘இங்கிருந்து ஜம்ஷிட்டுக்கு நான் ஏதாகிலும் கொண்டு செல்ல முடியுமா?’ எனக் களிப்புடன் விசாரித்தாள். நேற்று நடந்ததில் காவலாளிகளுக்கு ஜம்ஷிட் மேல் சிறிது கருணை பிறந்துள்ளது என நான் நினைக்கின்றேன். அவரைத் தனி அறையிலிருந்து பொது அறைக்குக் கொண்டுவந்துவிட்டனர். தனிச் சிறையில் இருந்தவரை அவர் பழங்கள் எதையுமே காணததால் நான் அவருக்குப் பழங்கள் ஏதும் கொண்டுச் செல்லலாம் எனவும் கூறினர்’ என்றாள்
நல்ல வேளை, அன்று எங்களிடம் பழங்கள் கொஞ்சம் இருந்தன. அவற்றில் சிலவற்றை எடுத்துக்கொண்டு ஜம்ஷிட்டைக் காண தாஹிரி சென்றாள். சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், பழங்களோடு திரும்பி வந்தாள். ‘இக்காவலாளிகள் நம்மோடு விளையாடுகிறார்கள். நாம் இவர்களின் கைப்பொம்மைகள். நம்மைச் சித்திரவதைப்படுத்தி அவர்கள் மகிழ்கின்றார்கள். அவர்களின் தயவின் கீழ்தான் நாம் இருக்கின்றோம்,’ என மனம் வெதும்பிக் கூறினாள்.

அதற்குப் பிறகு, அடிலபாட் சிறைக்குத் தாஹிரி மாற்றலாகி சென்று இரண்டு வாரங்கள் கழித்து, அவள் தனது இறுதிச் சுற்று விசாரணைக்குச் சென்ற நாள் எனக்கு நன்கு நினைவில் இருக்கின்றது. அன்று மாலை அவள் சிறைக்குத் திரும்பியபோது, அறைக்குள் அவள் மிகுந்தச் சாந்தத்துடனும் கம்பீரமாகவும்  நடந்து வந்தாள். களிப்பு நிறைந்த முகத்தில் புன்னகை தவழ்ந்தது. முகம் பிரகாசித்தது. ‘தாஹிரி, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றாய்?’ என நான் வினவினேன்.
அவள் மிகவும் சாந்தத்துடன், ‘இவ்வளவு நாட்கள் அவர்கள் ஜம்ஷிட்டை மட்டுமே கொல்லப்போகின்றார்கள் என நான் நினைத்துவந்தேன். ஆனால், இன்று நீதிபதி என்னையும் சேர்துக் கொல்ல ஆணை பிறப்பித்துவிட்டார். எனது இப்பயணத்தில் நான் என் கணவருடன் சேர்ந்தே செல்லப்போகின்றேன்.’ என்றாள் தாஹிரி.

அந்த நாளுக்குப் பிறகு அவள் அழுதோ கவலைப்பட்டோ நான் பார்க்கவில்லை.
அவளது இறுதி ஆசையும் சிறிது நாட்களில் நிறைவேறியது. அப்ஹா இராஜ்ஜியத்தில் அவளும் அவளது கனவனும் ஒன்றிணைந்தனர்.

அமாத்துல் பஹா ரூஹிய்யா காஃனும்


அமாத்துல் பஹா ரூஹிய்யா கானும் (1910-2000)

ruhiyyih-khanum

கடந்த 19-1-2000ல் நமது இதயமெல்லாம் கொள்ளை கொண்ட அமாத்துல் பஹா ரூஹிய்யா காஃனும் அவர்கள் காலமானார். இதனைத் தொட்டு மதிப்புக்குரிய உலக நீதி மன்றம் அன்னவருக்கான நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்தும்படி உலக பஹாய்களைக் கேட்டுக் கொண்டது. உலக அளவில் பல நினைவாஞ்சாலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வேளையில் அமாத்துல் பஹா அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்களில் இருந்து சிலவற்றைக் காண்பது பொருத்தமாக இருக்கும்.

கடவுள் சமயத் திருக்கரம்

அமாத்துல் பஹா அவர்கள் நமது மதிப்புக்கும் பேரன்புக்கும் உரிய பாதுகாவலரின் துணைவியார் மாத்திரமல்லர். அவர் புனிதக் குடும்பத்தின் கடைசியானவரும் கூட. அதோடு அவர் கடவுள் சமயத் திருக்கரமும் கூட. இந்தக் கடவுள் சமயத் திருக்கரங்களைப் பற்றி பஹாவுல்லா இவ்வாறு கூறுகிறார்.

“எவரின் வாயிலாக ஆழ்ந்த துன்பம் எனும் ஒளி ஜொலித்ததோ, சக்தியுடையோனும், வல்லமையுடையோனும், சுதந்திரமுடையோனுமாகிய இறைவனால் அதிகாரம் என்னும் பிரகடனம் நிரூபிக்கபட்டதோ; மற்றும் எவரின் வாயிலாக வழங்குதல் என்னும் கடல் அசைந்து, மனித குலத்தின் பிரபுவாகிய கடவுளின் சகாயம் என்னும் தென்றல் வீசப்பட்டதோ, அந்தத் தம்முடைய சமயத்தின் திருக்கரங்களின்மீது ஒளியும், மகிமையும், வாழ்த்தும் போற்றுதலும் குடிகொள்ளட்டுமாக.”

பஹாவுல்லாதான் கடவுள் சமய திரக்கரங்கள் என்னும் ஸ்தாபனத்தை உருவாக்கினார். அவர் பாரசீக நம்பிக்கையாளர்களின் மத்தியில் இருந்து நால்வரை கடவுள் சமயத் திருக்கரங்களாக நியமித்தார். அப்துல் பஹா நேரடியாக தெய்வச் சமயத் திருக்கரங்களை நியமிக்காவிட்டாலும் கூட, அவர் பஹாவுல்லாவின் மற்ற நான்கு நம்பிக்கையாளர்களையும் கடவுள் சமயத் திரக்கரங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் அப்துல் பஹாவின் உயிலும் மரண சாசணமும் என்னும் ஏட்டின்படி, கடவுள் சமயத் திருக்கரங்களை நியமிக்கின்ற அதிகாரம் பாதுகாவலருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தின்படி, பாதுகாவலர் மொத்தம் 42 கடவுள் சமயத் திருக்கரங்களை நியமித்தார். அதன்படி, பஹாய் சமயத்தில் மொத்தம் 50 கடவுள் சமயத் திருக்கரங்கள் நியமிக்கப்பட்டனர். அமாத்துல் பஹாவின் நியமனம் 1952-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி செய்யப்பட்டது. (அமாத்துல் பஹா அந்த நியமனத்தை எவ்வளவோ மறுத்தும் கூட பாதுகாவலர் அந்த மறுப்பை ஏற்பதாக இல்லை)

பாதுகாவலர் இந்த கடவுள் சமயத் திரக்கரங்களை “பஹாவுல்லாவின் கரு வடிவிலான உலகப் பொதுநல அரசின் பிரதான பராமரிப்பாளர்கள்” எனவும் “அதன் உயர் ஸ்தானம் கொண்ட அலுவலர்கள்” எனவும் வருணிக்கிறார். அவர்களின் பொதுவான பணிகள் இரண்டு. முதலாவதாக சமயத்தைப் போதித்தல், அடுத்தது சமயத்தைப் பாதுகாத்தல் ஆகும். பாதுகாவலர் கடவுள் சமயத் திருக்கரங்களை 1951-ஆம் ஆண்டு முதல் 1957-ஆம் ஆண்டு வரைக்கும் அவர்களுக்கு நேரடியான வாழிகாட்டுதலுக்கான சில அளவு கோல்களை வைத்திருந்தார். சமயத்திற்குச் சேவை செய்வதில் அவர்கள் காண்பித்த அர்ப்பணம் மற்றும் திறனாற்றலைக் கொண்டு அவர்களைப் பாதுகாவலர் நியமித்தார். அந்த வகையில், அமாத்துல் பஹா ரூஹிய்யா காஃனுமை கடவுள் சமயத் திருக்கரமாக நியமித்த போதும்கூட, அன்னவரிடம் இருந்த அர்ப்பணம் மற்றும் திறனாற்றலைப் பாதுகாவலர் உணராமல் இல்லை. அமாத்துல் பஹா வாழ்ந்த வாழ்க்கையையும், அவர் ஆற்றிய சேவைகளையும் காணும் போது பஹாய் உலகமே வியப்பில் மூழ்கும். அமாத்துல் பஹாவின் சேவைகளைக் காலக் கறையான்கள் அரித்திடப் போவதில்லை, அவற்றை பஹாய் உலகமும் மறதிக்கடலில் கறைக்கப்போவதில்லை. அவரின் நினைவு நித்தியமாக நிலைத்திருக்கும்.

பிறப்புப் வளர்ப்பும்

மே எல்லிஸ் போல்ஸ் என்பவர்தான் ரூஹிய்யா கானுமின் தாயார். அவர் சமயத்தின் தொடக்ககாலத்து சேவகிகளில் ஒருவரான லுவா கெட்சிங்கரின் வழியாக சமயத்தை ஏற்றுக்கொண்டார். 1898-ஆம் ஆண்டில் சில பஹாய்கள் ஒன்று கூடி அக்கா நகருக்குப் புனித யாத்திரை மேற்கொண்டனர். அவர்களுள் மே எல்லிஸ் போல்ஸ் அவர்களும் அடங்கினார். அவர்கள் யாவரும் 1898-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் அக்காநகர் வந்து சேர்ந்தனர். புனித யாத்திரை முடிந்தபின்னர் அந்த அம்மையார் பிரெஞ்சு நாட்டின் தலைநகரில் தங்கினார். 1902-ஆம் ஆண்டில் கேனடா நாட்டின் வில்லியம் சதர்லாண்ட் மேக்ஸ்வெல் என்னும் கட்டிடக் கலைஞரை மணந்தார். திரு வில்லியம் அவர்கள் கிஹிஸ்த்துவ சமயத்தின் கத்தோலிக்கப் பிரிவின் பாதிரியார் ஆவார். திருமணம் புரிந்த போதெல்லாம் மே எல்லிஸ் போல்ஸ் அவர்கள் சமயத்தை ஏற்றுக்கொண்டவராக இருந்தாலும்கூட திரு வில்லியம் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தத் தம்பதிகளுக்குக் குழந்தைச் செல்வமே இல்லை. 1909-ஆம் ஆண்டில் அந்த அம்மையார் இரண்டாவது முறையாக அக்காநகருக்குப் புனித யாத்திரை மேற்கொண்டார். இந்த முறை தம் கணவரும் உடன் வந்தார். அப்போது அவர்கள் பாதுகாவலரைக் குழந்தையாகக் கண்டனர். அப்போது எல்லிஸ் போல்ஸ், அப்துல்-பஹாவிடம் தமக்குக் குழந்தைச் செல்வம் கிடையாது என முறையிட்டார். அப்துல்-பஹாவும் அவருக்காக பஹாவுல்லாவின் புனித கல்லறையில் பிரார்த்தித்தார். அதன் பிறகு திருமதி மே மேக்ஸ்வெல் அமெரிக்கா திரும்பினார். அங்கு நியூ யார்க் நகரில் 1910-ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைதான் மேரி மேக்ஸ்வெல் ஆவார். அதாவது, நமது அன்பிற்குரிய ரூஹிய்யா காஃனும் அவர்கள்.

1912-ஆம் ஆண்டில் அப்துல் பஹா அமெரிக்கா சென்றபோது கெனடா நாட்டின் மொண்ட்ரீல் மாநகரில் ரூஹிய்யா காஃனும் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். அப்போது ரூஹிய்யா கானும் அவர்களுக்கு வயது இரண்டு. அவ்வேளையில் திருமதி மே மேக்ஸ்வெல் அப்துல்-பஹா தமக்காக பஹாவுல்லாவின் புனிதக் கல்லறையில் பிரார்த்தனை கூறி, அதன் வழியாகத் தமக்குப் பிள்ளைச் செல்வம் கிடைத்ததை நன்றிப்பெருக்கோடு அப்துல்-பஹாவுக்கு நினைவுபடுத்தினார். பிள்ளைச் செல்வமே கிடைக்க வழி இல்லை என மருத்துவர்களே கைவிரித்த பின்னர் பஹாவுல்லாவின் திருவருளால் பிறந்தவர் ரூஹிய்யா காஃனும் அவர்கள். அத்துடன் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களுக்கு வயது 40 இருக்கும் போது அவரது உடல் நிலை நிரந்தரமாக நோய்வாய்ப்பட்டிருந்த போது ரூஹிய்யா காஃனும் பிறந்தார்.

1921-ஆம் ஆண்டில் அப்துல்-பஹா காலமானபோது, அதனைக் கேள்விப்பட்ட திருமதி மே மேக்ஸ்வெல் மிகுந்த வேதனைக்குள்ளார், அதனால் அந்த அம்மையாரின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாகியது. அந்த அம்மையார் தொடர்ந்து உயிர் வாழ்வாரோ மாட்டாரோ என்னும் ஐயம் அவரது கணவர் வில்லியம் மேக்ஸ்வெல்லுக்கு ஏற்பட்டது. ஒரு வேளை புனித நிலத்திற்கு மீண்டும் யாத்திரை மேற்கொண்டு, அப்துல் பஹாவின் வாரிசான ஷோகி எஃபெண்டியைக் கண்டால் மனதுக்கும் உடலுக்கும் ஒரு வேளை ஆறுதல் கிடைக்கலாம் என திரு வில்லியம் மேக்ஸ்வெல் கருதினார். அதன்படி 1923-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களும் 13 வயது நிரம்பிய ரூஹிய்யா காஃனுமும் புனித நிலத்திற்கு வருகை தந்தனர். அப்பொழுது திருமதி மே மேக்ஸ்வெல் சக்கர வண்டியில் தான் நடமாடினார். அந்த அம்மையாருக்கு நிறைய ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தேற்றியவர் ஷோகி எபெண்டி. பாதுகாவலரின் அன்பு கனிந்த வார்த்தைகளினாலும் பரிவான கவனத்தினாலும் அந்த அம்மையாரின் உடல் நிலை பெரிதும் தேறியது.

அந்த ஆண்டில் பாதுகாவலர் ஷோகி எஃபென்டி, பாப் அவர்களின் புனிதக் கல்லறையைச் சுற் றி பூங்காக்களை அழகிய முறையில் எழுப்பிக்கொண்டிருந்தார். மே மாதம் 28-இல் பஹாவுல்லாவின் மறைவு தினத்தை அனுசரிப்பதற்காக திருமதி மே மேக்ஸ்வெல்லும் ருஹியா கானுமும் அக்காநகரில் உள்ள பஹாவுல்லாவின் புனிதக் கல்லறைக்குச் சென்றனர். திரும்பும் போது அவர்கள் இருவரும் பாதுகாவலரோடு அவரின் காரிலேயே வந்தனர். அந்தக் காரின் கூறை திறந்து மடிக்கப்பட்டிருந்தது. இருக்கையின் மீது அமராமல் அந்த மடிக்கப்பட்ட கூறையின் மீது அமர்வதாக ரூஹிய்யா காஃனும் பிடிவாதம் பிடித்தார். அவ்வாறு அமர்ந்தால் விழுந்திடும் வாய்ப்பு உண்டு எனபு பாதுகாவலர் ரூஹிய்யா காஃனுமை எச்சரித்தார். ஆனால் தாம் விழாமல் பார்த்துக் கொள்வதாக ரூஹிய்யா கானும் நம்பிக்கையோடு சொன்னார். அந்தப் பயணத்தின் போதுதான் பாதுகாவலர் கெனடா நாட்டின் மலைப் பிறதேசங்களை காணத் துடிப்பதையும் மலை ஏறுவதை விரும்புவதாகவும், அவர்கள் இருவரிடமும் தெரியப்படுத்தினார். இந்த முதல் சந்திப்பின் போது இந்த இருவரும் அவ்வளவாகப் பேசக்கிடையாது. இந்தப் பயணத்தின்போது திருமதி மே மெக்ஸ்வெல் பாதுகாவலரைக் கண்டது முதற்கொண்டு அவர் தமது சேவைகளைப் பாதுகாவலருக்கே அர்ப்பணம் செய்தார்.

1926-ஆம் ஆண்டில் திருமதி மே மேக்ஸ்வெல்லின் தோழிகளுடன் ரூஹிய்யா காஃனும் தமது இரண்டவது யாத்திரையைப் புனித நிலத்திற்கு மேற் கொண்டார். அடுத்தப்படியாக ரூஹிய்யா காஃனும் அவர்களும் அவரது தாயாரும் ஐரோப்பாவில் இண்டு ஆண்டு காலம் அயராது சேவை செய்தனர். அதன் பிறகுதான் 1937-ஆம் ஆண்டில் ரூஹிய்யா கானுமும், அவரது பெற்றோர்களும் புனித நிலத்திற்கு வருகைப் புரிந்தனர். இந்தப் பயணத்தின் போதுதான் பாதுகாவலருக்கும் ருஹியா கானுமுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம்

மதிப்புக்குரிய பாதுகாவலரை மணக்க வேண்டும் என ஏங்கியோர் பலர். ஆனால் அவர் ரூஹிய்யா காஃனும் அவர்களைத் திருமணம் புரிவார் என எவருமே எதிர்பார்க்கவில்லை. அமாத்துல் பஹாவை மணக்க வேண்டும் என்னும் முடிவைப் பாதுகாவலர் எடுத்திருந்தாலும் கூட, அது பற்றி அவர் எவரிடத்திலும் கூறவில்லை. பாதுகாவலர் சதா திருவொப்பந்தத்தை மீறியவர்களினால் சூழப்பட்டிருந்ததனால், இந்த ரகசியம் வெளியே வந்தால் அவரது திருமணத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடும் என அவர் அஞ்சினார். அதனால் அது பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. அதிபெரும் புனித இலையாகிய பாஹிய்யா காஃனும் அவர்கள் ஷோகி எபெண்டி அவர்களுக்கு ஒரு மோதிரத்தைக் கொடுத்திருந்தார். பாதுகாவலர் ரூஹிய்யா காஃனுமைத் திருமணம் செய்வதாக முடிவெடுத்த அன்று, அவர் அந்த மோதிரத்தை ரூஹிய்யா கானுமிடம் கொடுத்து, அதனைத் தமது கழுத்தின் சங்கிலியில் கோர்த்து மறைத்துவைக்கும்படி கூறினார். ரூஹிய்யா காஃனுமும் அவ்வாறே செய்தார். இந்த விஷயத்தை இருவரும் வேறு எவரிடமும் சொல்லவில்லை.

1937-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ருஹியா கானும் அவர்கள் மூன்றாவது முறையாக புனித நிலத்திற்கு யாத்திரை மேற்கொண்டார். இப்பயணத்தின்போதுதான் இந்த வலராற்றுபூர்வத் திருமணம் நடைபெற்றது. அப்துல் பஹாவுக்கும் முனிஃரி கானுமுக்கும் இடையிலான திருமணம் எவ்வளவு எளிமையாக நடைபெற்றதோ, அதுபோன்றே பாதுகாவலருக்கும் ரூஹிய்யா காஃனுமுக்கும் இடையிலான திருமணமும் அவ்வளவு எளிமையாக நபைெற்றது. 1937-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் நாள் பிற்பகலில் பாதுகாவலரும் அமாத்துல் பஹாவும் காரில் அமர்ந்திருக்க காரோட்டி அவர்களை ஹைஃபாவில் இருந்து அக்காநகருக்கு ஓட்டிச் சென்றார். அங்கே பஹாவுல்லாவின் புனிதக் கல்லறைக்கு – அதாவது பூமியில் உள்ள அதி புனிதமான ஸ்தலத்திற்கு அவர்கள் சென்றார்கள். அந்த ஊரின் கலாச்சாரத்தின் படி பெண்கள் வெளியே புறப்படுவதாக இருந்தால் கறுப்பு உடையில்தான் புறப்படுவார்கள். அமாத்துல் பஹாவும் கறுப்பு உடையும் வெள்ளை ரவிக்கையும் அணிந்து உள்ளுர் பெண்ணைப் போல உடன் சென்றார். இது பாதுகாவலரின் விருப்பமாகவும் இருந்தது.

பாஹ்ஜி சென்றவுடன் இருவரும் பஹாவுல்லாவின் புனித கல்லறைக்குள் புகுந்தனர். உடனே பாதுகாவலர் முன்பு ரூஹிய்யா கானும் அவர்களிடம் கொடுத்துவைத்திருந்த மோதிரத்தைக் கேட்டார். தமது கழுத்துச் சங்கிலியில் இருந்து ரூஹிய்யா காஃனும் அவர்கள் அதனைக் கழற்றி பாதுகாவலரிடம் கொடுத்தார். அதனைப் பாதுகாவலர் ரூஹிய்யா காஃனும் அவர்களின் வலது கரத்தின் மோதிர விரவில் அணிவித்தார். அதன் பிறகு பாதுகாவலர் அந்தப் புனிதகல்லறையின் உள் அறைக்குள் புகுந்தார். அங்கு காய்ந்து உதிர்ந்திருந்த பூவிதழ்களை பாதுகாவலர் சேகரித்து தன் கைக் குட்டையில் வைத்துக் கொண்டார். பின்னர் அவர் நேர்வு விருபத்தை ஓதினார். அதன் பிறகு இருவரும் புறப்பட்டு ஹைபா நகருக்கே திரும்பினார்கள். ஹைபா நகரில் உள்ள அதிபெரிய புனித இலையாகிய பஹியா கானும் அவர்களின் அறையில்தான் அவர்களின் எளிமையான திருமணம் நடைபெற்றது, அங்கு திருமண விழா இல்லை, பூவலங்கரிப்பு இல்லை, விசேஷமான சடங்கு சம்பிரதாயமில்லை, திருமண உடையுமில்லை, விருந்துபசரிப்பும் இல்லை. இந்த திருமணம் பற்றி உற்றார் உறவினருக்கும் கூட அதிகமாகத் தெரியாது. இந்த திருமணம் நடைபெறப்போவதை பாதுகாவலரின் பெற்றோர்களும், ஹைபாவில் தங்கியிருந்த அவர்தம் சகோதர் ஒருவரு இரண்டு சகோதரிகளும், அமாத்துல் பஹாவின் பெற்றோர்களும் மட்டுமே அறிந்திருந்தனர். பஹியா கானும் அவர்களின் அறையில், திருமணத்திற்கான சான்றிதழில் பாதுகாவலரின் பெற்றோர்கள் கையொப்பம் இட்டனர். அப்பொழுது ருஹியா கானும் அவர்களின் பெற்றொர்கள் மேற்கத்திய யாத்திகர் இல்லத்தில் இருந்தனர். அந்த திருமண சான்றிதழில் கையொப்பம் இடப்பட்டதும் ருஹியா கானும் அவர்கள் சாலைக்கு அப்பால் உள்ள மேற்கத்திய யாத்திகர் இல்லத்துக்குச் சென்று தன் பெற்றோர்களிடம் சேர்ந்து கொண்டார். ஷோகி எபெண்டி அவர்கள் தம் வழக்கமான பஹாய்ப் பணிகளை கவனிப்பதற்காகப் போய்விட்டார்.

இரவு விருந்து வேளையில் பாதுகாவலர் அந்த மேற்கத்திய யாத்திரிகர் இல்லத்திற்கு வந்தார். அங்கு வந்தவுடன் பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்களுக்கு தம் அன்பையும், நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் புலப்படுத்தினர் எவருக்கும் கிடைக்காத பேறு ருஹியா கானும் அவர்களின் குடும்பத்திற்குக் கிடைத்தல்லவா, அதற்காக! முன்பு பஹாவுல்லாவின் புனித கல்லறையின் உள் அறையில் சேகரித்து தம் கைக்குட்டையில் வைத்திருந்த பூவிதழ்களை பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் அன்னையின் கரங்களில் ஒப்படைத்தார். பிறகு ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்களும் திருமணப் பத்திரத்தில் கையொப்பம் இட்டனர். இரவு விருந்து நடைபெற்ற வேளையில், புஜித்தா ( ஜப்பானில் இருந்து புனித நிலத்திற்கு வந்து தோட்டக்காரராகப் பணியாற்றியவர்) அமர்த்துல் பஹாவின் பெட்டிகளை பாதுகவலரின் இல்லத்திற்குத் தூக்கிச்சென்றார். இரவு விருந்துக்குப் பிறகு பாதுகாவலரும் அமாத்துல் பஹாவும் தங்கள் இல்லத்திற்குப் புறப்பட்டனர். பாதுகாவலரின் குடும்ப அங்கத்தினர்களுடன் சற்று நேரம் உறையாடி விட்டு, பிறகு எற்கனவே மாபெறும் புனித இலையாகிய பஹியா கானும் அவ்கள் பாதுகாவலருக்காக மாடியில் கட்டியிருந்த இரண்டு குடியேறினர் அறையில். இதுவரைக்கும் மேரி போல்லீஸ் சுதர்லாந்து மேக்ஸ்வெல் என அறியப்பட்டுவந்த அவர், திருமணத்திற்குப் பின் ருஹியா ரப்பானி என வழங்கப்பட்டார். பிற்காலத்தில் அன்னவருக்கு பாதுகாவலர் “அமாத்துல் பஹா ருஹியா கானும்” என பட்டப் பெயர் கொடுத்தாதர்.

பாதுகாவலரின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றாலும், அது முக்கியத்துவம் அற்றது என எண்ணிடப்படக் கூடாது. அத்திருமணம் பற்றி பாதுகாவலர் வரைந்து, தம் தாயாரின் பெயரில் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட தந்தி ஒன்றே அதன் முக்கியத்துவத்தைப் பற்றி காட்டுகிறது. அந்த தந்தி இப்படி வாசிக்கிறது : “அன்புக்குரிய பாதுகாவலரின் திருமணக் கொண்டாட்டம் பற்றி சபைகளுக்கு அறிவிக்கிறேன். பஹாவுல்லாவின் பணிப்பெண்ணாகிய ருஹியா கானும் என்ற குமாரி மேரி மேக்ஸ்வெல் அவர்களின்மீது அளவிட முடியாத கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. பஹாவுல்லாவினால் பிரகடனப் படுத்தப்பட்ட கிழக்கு மற்றும் மேற்கின் இணைப்பு பினைக்கப்பட்டுள்ளது. இப்படிக்கு பாதுகாவலரின் தாயாராகிய சியாபா.”

இது போன்றதோர் இன்னொரு தந்தி பாரசீகத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டது. பாதுகாவலரின் திருமணம் என்பது நீண்ட காலமாக பஹாய்களினால் எதிர்பார்க்கப்பட்டது. திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானதும் பாதுகாவலர் உலகம் முழுதும் இருந்து ஏராளமான வாழ்த்துக்களைப் பெறத்தொடங்கினார். அமெரிக்கா மற்றும் கேனடாவின் தேசிய சபையிடம் இருந்து கிடைத்த வாழ்த்துக்களுக்கு ஷோகி எபெண்டி இவ்வாறு பதில் எழுதினார்:

“உங்கள் செய்தியினால் ஆழமாக உள்ளம் நெகிழ்ந்துள்ளேன். பஹாய் சமயத்தின் இரட்டை ஸ்தாபகரானவர்களோடு கொண்ட அங்கபந்த தொடர்பின் வழியாக மேன்மைப்படுத்தப்பட்டுவிட்ட பஹாவுல்லாவின் சமயத்தின் நிர்வாக முறையின் பிரயதான அடிக்கல்லாகிய பாதுகாவலர் எனும் ஸ்தானம் மேற்கோரு, குறிப்பாக பஹாவுல்லாவின் உலக அமைப்பு முறையைக் கொண்டுருவதை தங்கள் ஆன்மீக விதியாகக் கொண்டுள்ள அமெரிக்க நம்பிக்கையாளர்களுடன் கொண்ட நேரடியான தொடர்பின் வழியாக இப்பொழுது மேலும் மறுஉறுதிசெய்யப்பட்டுள்ளது. என் பங்காக, தங்கள் சமயத்தின் இவ்வளவு வளமான ஓர் அங்கத்தோடு அவர்களை வலுவாகப் பினைத்துள்ள ஓர் பந்தத்தைப் பெற்றமைக்காக அமெரிக்க நம்பிக்கையாளர்களின் சமூகத்தைப் பாராட்டுவதற்கு ஆவலுறுகிறேன்.” இப்படியாக பாதுகாவலர் ஏராளமான வாழ்த்துக்களுக்கு பதில அனுப்பிக்கொண்டிருந்தார். பாதுகாவலிரின் திரமணத்தின் சாரமே, அது கிழக்கையும் மேற்கையும் ஒன்றுபடுத்தியது என்பதாகும். இந்த திருமணத்தின் வழியாக கிழக்கும் மேற்கும் இனைந்தன, பாரசீகமும் (பாதுகாவலர்) அமெரிக்காவும் (ருஹியா கானும்) இணைந்தன எனவும், பிரிட்டிஷ் மக்களுக்கும் அது கொளரவாமாகும் ( ருஹியா கானும் அவர்களின் தந்தை ஸ்காட்லாந்தைச் சார்ந்தவர்) என்ற பொருளில் பாதுகாவலர் அமெரிக்கா சபைக்கு ஒரு தந்தி அனுப்பினார். இந்த திருமணம் அமெரிக்காவில் ஆழ்ந்த ஆன்மீக அலைகளை எழுப்பிற்று. அப்பொழுது அங்கே 71 உள்ளுர் ஆன்மீக சபைகள் இருந்தன. சபை தோறும் தலா 19 அமெரிக்க டாலரை அந்த தேசிய சபை பாதுகாவலருக்கு திருமாண பரிசாக அனுப்பியது. ” அமெரிக்க பஹாய்களை பாதுகாவலர் எனும் ஸ்தானத் தோடு பினைத்துள்ள புதிய பந்தத்தை உடனடியாக வலுபடுத்துவதற்காக “என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்காவின்மீது பாதுகாவரின் திருமணம் இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கியது. அமெரிக்காவின் விதி பஹாவுல்லாவின் நிர்வாக அமைப்பு முறையை உருவாக்குவது என்பது முன்பே எழுதப்பட்ட தீர்பமாகும். அதற்கு இந்திருமணம் மேலும் அடித்தளத்தை அமைத்தது!

ருஹியா கானும் அவர்கள் மட்டும் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களின் புதல்வியாக இல்லாது போயிருந்தால் பதுகாவலர் அவரை மணந்திருக்கப் போவதில்லை என பாதுகாவவரே ருஹியா கானும் அவர்களின் கூறினார். அதுபோல் “மே மேக்ஸ்வெல் அவர்களின் தோழமை ஒருவருடைய அன்மாவை எழுச்சியூட்டி வளர்க்கிறது ” என அப்துல் பஹாவும் எழுதியுள்ளார். அப்படியானால், ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்கள் ஆற்றிய பணியை நாம் காண வேண்டும்.

பெற்றோர்களின் பெரும் பணி

ருஹியா கானும் அவர்களின் தாயாராகிய மே எல்லிஸ் போல்லிஸ் அவர்கள் இளைய பருவத்திலேயே லுவா கேட்சிங்கரின் வழியாக பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டவர் ஆவார். சமயத்தை ஏற்றுக்கொண்ட நாள் தொடங்கி அவர் தம்முடைய வாழ்வை சமயத்திக்காக அர்ப்பணம் செய்தார். நிறைய விவேகம் உள்ளவராகவும் சமயத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவராகவும் அவர் திகழ்ந்துவந்தார். 1898ம் ஆண்டில்தான் முதன் முதலாக மேற்கத்திய நாடுகளில் இருந்து அக்கா நகருக்கு புனித யாத்திரை மேற் கொள்ளப்பட்டது. அந்த முதல் குழுவில் மே எல்லிஸ் போல்லிஸ் இடம் பெற்றார். அங்கே அப்துல் பஹா அந்த அம்மையாருக்கு என ஒரு விசேஷமான பணியைக் கொடுத்தார். பிரான்ஸ் நாட்டின் தலைநகராகிய பாரிஸ் மாநகரில் தங்கி சேவை செய்யுமாறு அப்துல் பஹா மே எல்லிஸ் அவர்களைக் கேட்டுக் கொண்டார். அதன்படியே அந்த அம்மையார் பாரிசுக்குப் போனார். ஒரு சில மாதங்களுக்குள் அந்த அம்மையார் பாரிஸ் மநகரில் முதல் பஹாய் நிலையத்தை நிறுவினார். அதுவே ஐரோப்பிய கண்டத்திற்கான முதல் பஹாய் நிலையமாகும். “ஐரோப்பிய மண்ணின் முதல் பஹாய்” என்ற பெருமையும்கூட இவரையே சாரும். அப்துல் பஹாவின் முதல் சில சீடர்களில் இவரும் ஒருவராவார். பாரிஸ் மாநகரில் ஓர் ஆங்கிலேயரை சமயத்தில் உறுதிபடுத்திய முதல் பஹாயும் இந்த அம்மையார்தான். முதல் பிரந்சு பஹாய் அன்பரான ஹிப் போலிட் என்பவரை உருவாக்கியவரும் கூட இந்த அம்மையார்தான். இந்த அம்மையார் வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் என்ற கேனடா நாட்டு கட்டிடக் கலைஞரை 1902ம் ஆண்டில் மணந்து, இருவரும் அந்த நாட்டின் மொண்ட்ரீல் நகரில் குடியேறினார்கள்.

1912ம் ஆண்டில் அப்துல் பஹா அமெரிக்கா சென்ற போது அவர்கள் இல்லத்திற்கு பல முறை சென்றுள்ளார். சமயத்தை ஏற்ற காலம் தொட்டு அந்த அம்மையார் அயராது சமயத்திற்காக பாடுபட்டுள்ளார். குறிப்பாக போதிப்பதிலும் சமய விவாகரங்களை நிர்வகிப்பதிலும் அவர் திறம்டச் செயல்பட்டார். அமெரிக்க கண்டத்தில் பலருக்கும் பஹாவுல்லாவின் செய்தியைக் கொடுத்தார். பஹாய் சமயத்திற்காக இவ்வளவு உதாரணத்துவ சேவைகளை வழங்கிவந்த போதிலு,ம் கூட, தாம் இன்னும் உயர்வுமிக்கச் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கை அவர்தம் உள்ளத்தில் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 1940ம் ஆண்டில் பாதுகாவலர் முன்னோடிகளுக்கான அழைப்பை விடுத்த போது திருமதி மே மேக்ஸ்வெல் அவர்கள் முன்னெழுந்தார். அப்பொழுது அவருக்கு வயது எழுபது! அவர்தம் உடல் நிலையும் மிகவும் மோசமாகியது. தென் அமெரிக்காவின் அர்ஜெண்டினா நகரில் அப்பொழுதுதான் பஹாய் சமயம் உதயமாகிவந்தது. அங்கு முன்ணோடியாகச் செல்வதற்கு அவர் முன்னே முந்தார். அதனைப் பாராட்டி பாதுகாவலர் தந்தி அனுப்பினார். அர்ஜெண்டினா நாட்டு தலைநகராகிய புவெனோஸ் ஏரிஸ் நகரை அடைந்ததும் (1940ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி) அந்த அம்மையார் மாரடைப்பால் காலமானார். அவர் ஓர் உயிர்த்தியாகியின் மரணத்தை அடைந்ததாக பாதுகாவலர் குறிப்பிட்டார். அதோடு அந்த அம்மையாரின் மரணம் பற்றி பாதுகாவலர் ஈரான் நாட்டின் தேசிய சபைக்குத் தெரிவித்தபோது, “விண்னுலகின் தெய்விக ஆன்மாக்களை கூட அந்த அம்மையாரிடம் இருந்து நல்லாசிகளை நாடுகின்றன” எனக் குறிப்பிட்டார். ஆகவே திருமதி மே மேகஸ்வெல் அவர்களின் வாழ்வு அளமானது, பஹாய் சமய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்படக் கூடியது.

திருமதி மே மேக்ஸ்வெல் காலமானபோது, பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் தந்தை திரு வில்லியம் சதார்லாந்து மேக்ஸ்வெல் அவர்கட்கு தந்தி அனுப்பி அவரை ஹைபா நகரில் வந்து குடியேறும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி திரு வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்களும் ஹைபா நகரில் வந்து குடியேறினார். அப்போதெல்லாம் பாதுகாவலரின் உறவினர்கள் பாதுகாவலருக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தனர். திரு வில்லியம் மேக்ஸ்வெல் அவர்கள் அங்கு வந்து சேர்ந்தது பாதுகாவலருக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அவர் கட்டிடக் கலைஞாராக இருந்தது மிகவும் வசதியாயிற்று. அப்துல் பஹா அவர்கள் புனித பாப் அவர்களின் கல்லறையைக் கட்டி முடிந்தார். அதற்கு அழகிய கோபுரத்தை எழுப்பும் பணி பாதுகாவலரின் மீது வீழ்ந்தது. திரு வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்கள் ஒரு கட்டிடக் கலைஞராக இருந்ததால், அவர் பாதுகாவலருடன் கலத்துகொண்டு பல கட்டிட வரைபடங்களை உருவாக்கினார். இறுதியில் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் படி உருவாக்கப்பட்டதுதான் இன்று நாம் காண்கின்ற பாப் அவர்களின் புனித கல்லறையின் கோபுரம்.

திரு வில்லியம் அவர்களின் உடல் நலம் திடிறென்று பாதிப்புற்றபோது அவர் இறந்துவிடுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. 1951ம் ஆண்டில் அவரை பாதுகாவலர் சுவிட்சர்லாந்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் ன்ெறார். அவர் உடல் நலம் தேறினார். ஆண்டில் அவரை மீண்டும் அங்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கிருந்து அவரை பாதுகாவலர் கேனடா நாட்டுக்கு அனுப்பிவைத்தார். உறவினர்களைக் கண்டு ஆறுதல் அடைவதற்காக. அப்போது அவர்தம் உடல் நிலை இன்னும் மோசமாகியது. அப்பொழுதுதான் பாதுகாவலர் திரு வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்களை தெய்வச்சமயத் திருக்கரமாக நியமிதார். 1915ம் ஆண்டில் மார்ச் மாதம் 25ம் நாளில் அவர் காலமானார்.

1953ம் ஆண்டில் ருஹியா கானும் சிக்காகோ நகருக்கு சென்று கண்டங்களுக்கு இடையில்லான மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, கேனடா நாட்டில் மொண்ட்ரீல் புறப்பட்டார். ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்கள் தங்கள் இல்லத்தை கேனடா நாட்டு தேசிய சபையின் சொத்தாக எழுதிவைக்க முன்பே ஆசைப்பட்டனர். அதற்கான ஏற்பாடுகளை ருஹியா கானும் செய்தார். கேனடவுக்கு அப்துல் பஹா சென்ற போது அவர் சென்று விஜயம் செய்த ஒரே இல்லம் அவர்களின் இல்லம் தான்! தன் தந்தையின் கல்லறைக்கு ருஹியா கானும் சென்றார். அப்போது பாதுகாவலர் ருஹியாா கானும் அவர்கட்கு தந்தி அனுப்பி, திரு வில்லியம் அவர்களின் கல்லறையில் பஹாய்கள் ஒன்றுகூடி நினைவாஞ்சாலி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புனித கல்லறையில் இருந்து கொண்டுபோன பூக்களையும் அங்கு வைக்கச் சொன்னார். தம் சார்பாக நீல நிற பூக்களில் தலை சிறந்தவற்றை நூறு டாலருக்கு வாங்கி கல்லறையின் மீது வைக்கப்படிச் சொன்னார். (நீல நிறம் திரு வில்லியம் சதர்லாந்து அவர்கட்கு பிடித்த கலர் என பாதுகாவலருக்கத் தெரியும்) கல்லறையில் அவறைப் பாராட்டும் வார்த்தைகளைச் ஒதுக்குபடி கூறி, அந்த வார்த்தைகளையும் பாதுகாவலர் தெரிவித்தார். அங்கு பஹாய்கள் கட்டுகின்ற தேதியையும் நேரத்தையும் தந்தியில் தெரிவித்தால், அப்பொழுது தாமும் புனித கல்லறையில் அவருக்காக பிரார்த்தனை கூறுவதாகவும் பாதுகாவலர் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆகையினால், ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்களும் சமயத்தில் சாதாரண மக்கள் அல்லர்! ருஹியா கானும் அவர்களும் அவர்தம் பெற்றோர்களும் சமயத்தில் பஹாய் சமய வரலாறு வாழும் காலம் வளர வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். இப்படியான உயர்வுமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர்தான் நம் மதிப்புக்குரிய பாதுகாவலருக்குத் துணைவி ஆனார்கள்.

இங்கு நாம் இன்னும் சில ஒற்றுமைகளைக் காணலாம். பாதுகாவலர் பிறந்த நாள் மார்ச் மாதம் 1ம் நாள். ருஹியா கானும் அவர்களின் தாயார் காலமானதும் மார்ச் மாதம் 1ம் நாள்தான். பாதுகாவலர் திருமணம் செய்த நாள் மார்ச் மாதம் 25ம் நாள். ருஹியா கானும் அவர்களின் தந்தை காலமனதும் மார்ச் மாதம் 25ம் நாள்தான். இவ்வாறான ஒற்றுமைகள் வேறெங்கும் கண்டதுண்டா?

பாதுகாவலருக்கு உதவியாக

அமாத்துல் பஹா அவர்கள் பாதுகாவலருக்கு துணைவி மட்டுமல்ல. அவர் பாதுகாவலருக்கு செயலாளராகவும் 20 ஆண்டுகளுக்கு காலத்தை ஓட்டினார். 1951ம் ஆண்டில் பாதுகாவலர் அனைத்துலக பஹாய் பேராவையை நியமித்தார். இந்தப் பேரவைதான் வருங்கால (1963) உலக நீதி மன்றத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தது.1952ம் ஆண்டில் இந்தப் பேரவையின் அங்கத்துவத்தை அவர் விரிவுபடுத்தினர். அதன் படி அவர் அமாத்துல் பஹா அவர்களையும் ஓர் அங்கத்தினராகவும், தமக்கும் அந்த அனைத்துலக பஹாய்ப் பேரவைக்கும் இடையில் ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்தார். 1952ம் ஆண்டில் தெய்வச் சமயத் திருக்கரமாகிய வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்கள் (அமர்த்துல் பஹாவின் தந்தை) காலமானர். அவருக்கு பதிலாக பாதுகாவலர் அமாத்துல் பஹா அவர்களை சமயத் திருக்கரமாக நியமித்தார்.

அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் உள்ள பஹாய் கோவிலுக்கு அடிக்கல்லை நாட்டியவர் அப்துல் பஹா. இது நடந்தது 1912ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி. 1933 ஆண்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வேளையில் அந்தக் கோயிலருகே வந்து பிரார்த்தனைகள் கூறியவர் ருஹியா கானும் அவர்கள். 1953 ஆண்டு மே மாதம் 2ம் தேதி முழுமைப் பெற்ற அந்தக் கோவில் பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டது. அந்த திறப்பு விழாவுக்கு பாதுகாவலர் அவர்களே நேரில் வர நினைத்ததுண்டு. ஆனால் ஏராளமான வேலையின் பளுவின் காரணமாக அவரால் வர இயலவில்லை. அதனால் தம்மைப் பிரதிநிதிக்குமாறு பாதுகாவலர் தம் அன்பிற்குரிய துணைவியார் அமாத்துல் பஹா அவர்களை அனுப்பிவைத்தார். அப்துல் பஹா அடிக்கல் நாட்டிய கோவிலை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தவர் அமாத்துல் பஹா அவர்கள்.

பாதுகாலரின் மறைவுக்கும் பின்

1957ம் ஆண்டில் மதிப்புக்குரிய பாதுகாவலர் திடீரெனக் காலமானார். அப்பொழுது உலக நீதி மன்றம் இன்னும் அமைக்கப்படவில்லை. 1963ம் ஆண்டில் உலக நீதி மன்றம் அமைக்கப்படும் நாள் வரைக்கும் சமயம் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்படவேண்டும். அப்பொழுது 26 தெய்வச் சமயத் திருக்கரங்கள் கையொப்பமிட, 9 தெய்வ சமயத் திருக்கரங்கள் “பஹாய் உலக சமயத்தின் காப்பாளர்கள்” என நியமிக்கப்பட்டனர். உலக நீதி மன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் இந்த 9 தெய்வ சமயத் திருக்கரங்களும் புனித நிலையத்தில் தங்கி சமயத்தைப் பாதுகாத்து, பணியாற்றிவருவதே அவர்களின் பணியாகும். அந்த ஒன்பது பேர்களில் அமர்த்துல் பஹா அவர்களும் அடங்கினார். அதோடு பாதுகாவலர் 1953ம் ஆண்டில் பத்தாண்டு உலக அறப்போரை (உலகப் போதனைத் திட்டம்) தொடக்கிவைத்தார். அது 1963ம் ஆண்டில் முடிவுற வேண்டும். ஆனால் அவர் பாதிக் காலக்கட்டத்தில், அதாவது 1957ல் காலமாகிவிட்டார். அந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்கின்ற பெரும் பொறுப்பும் இந்தக் காப்பாளர்களின் தோள்மீது வீழ்ந்தது.

1960ம் ஆண்டில் அமாத்துல் பஹா அவர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கும் கேனடா நாட்டுக்கும் ஒரு விரிவான பாயணத்தை மேற்கொண்டு அந்த சமூகத்தினருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டினார்.

1958ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டில் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் அவர் கலந்து கொண்டபோது, அங்கு எழுப்பப்படவிருந்த வழி பாட்டு இல்லத்திற்கு அடிக்கல்லை நாட்டினார். 1961ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆப்பிரிக்க கண்டத்தின் அன்னைக் கோவில் உகான்டாவில் திறக்கப்பட்டது. அதனை அதிகாரபுர்வமாகத் திறந்துவைப்பதற்காக அமர்த்துல் பஹா மீண்டும் ஆப்பிரிக்கா சென்றார். அதன் பின்னர் அவர் ஆப்பிரிக்காவில் மக்கள் அணிஅணியாக சமயத்தை ஏற்றுக்கொண்ட பகுதிகளுக்கும் சென்றார்.

1961 ஆண்டு ஆகஸ்டு – செப்டப்பர் மாதங்களில் அமாத்துல் பஹா தென்கிழக்காசிய பயணத்தை மேற்கொண்டு சிங்கை, மலாயா வந்துள்ளார். 1961 ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா கண்டத்தின் அன்னைக் கோவில் சிட்நியில் திறக்கப்பட்டது. அதனை அதிகாரபூர்வமாகத் திறந்து வைப்பதற்காகவும் அமர்த்துல் பஹா அங்கு சென்றார். பின்னர் ஆஸ்திரேலியா, மற்றும் நியூ சீலாந்து நாடுகளின் பஹாய் சமூகங்களைக் கண்டு வந்தார்.

பாதுகாவலர் செய்த பெரும் பணிகளில் ஒன்று புனித நிலத்தில் பழம் பொருள் காப்பகத்தை ஏற்படுத்துவதாகும். அதனைப் பூர்த்தி செய்வதற்குள்ளாக அவர் மறைந்துவிட்டார். அந்த மாபெறும் பணியை நிறைவு செய்வதில் அமாத்துல் பஹா அயராது உழைத்தார். 1962ம் ஆண்டுக்குள்ளாக அது பூர்த்தி செய்யப்பட்டால், புனித யாத்திரைக்கு வருவோருக்கு பலனாக இருக்கும் என்று கருதி அதனை நிறைவு செய்வதில் மும்முரமாகச் செயல்பட்டார்.

1963ம் ஆண்டில் உலக நீதி மன்றம் அமைக்கப்பட்டது. பாதுகாவலர் உயிரோடு இருந்த காலத்தில் அவர் 5 தெய்வச் சமயத் திருக்கரங்களை புனித நிலத்தில் தங்கி சமயத்திற்கு உதவியாக இருக்கும்படிச் செய்தார். அதுபோலவே, உலக நீதி மன்றத்திற்கு ஆலோசனைகளைக் கூறி உதவுவதற்காக, உலக நீதி மன்றம் 5 தெய்வச் சமயத் திருக்கரங்களை நியமித்து அவர்களை புனித நிலத்தில் தங்க வைத்தது. இம்முறையும் அந்த ஐவரில் அமாத்துல் பஹா அவர்களும் அடங்கினார்.

உலக உலா

1992ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் நடைபெற்ற இரண்டாவது உலக மாநாட்டில் அமாத்துல் பஹா அவர்கள் ஒரு தகவலைத் தெரிவித்தார். பாதுகாவலர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் ருஹியா கானும் அவர்களிடம் திடீரென இவ்வாறு கேட்டாராம் “நான் இறந்துவிட்டால் நீ என்ன செய்வாய்?” அதற்கு ருஹியா கானும் அவர்கள் அழுதவாறு “அதன் பின் நானும் மூச்சு விட விரும்பவில்லை” என்றராம். அப்போழுது தம் மரணத்திற்குப் பின்னால் ருஹியா கானும் உலகம் முழுதும் சென்று பஹாய்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும் என பாதுகாவலர் கேட்டுக்கொணடார். 1957ம் ஆண்டில் பாதுகாவலர் மரணமடைந்து, பிறகு 1963ம் ஆண்டில் உலக நீதி மன்றம் அமைக்கப்பட்டது முதற்கொண்டு தம் கடைசி காலம் வரைக்கும் அமாத்துல் பஹா அவர்கள் உலகை வலம் வந்தார். 1957ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திலும் கூட அமாத்துல் பஹா உலகில் சில பாகங்களுக்குச் சென்றுவந்ததுண்டு. ஆனாலும் அவர் புனித நிலத்தில் தங்கி சமயப் பணிகளை கவனிக்கவேண்டிய சுமைகளைத் தாங்கியதன் காரணமாக அவர் சுதந்திரமாக உலகம் பயணங்களை மேற்கொள்ள இயலவில்லை. உலக நீதி மன்றம் அமைக்கப்பட்ட பின்புதான் அவர் ஏராளமான உலகப் பயணங்களை மேற்கொண்டு பஹாய்களைக் கண்டு உற்சாகம் வழங்கியதோடு, பஹாய் அல்லாதவர்களுக்கும் சமயத்தைக் கொடுத்தார். கடைசி 35 ஆண்டுகளில் அவர் 185 நாடுகளுக்குச் சென்று சாதனைப் புரிந்தார். Ñற்ற உலகர் தகைவர்கள்கூட. இத்தனை நாடுகளைச் சென்றடைந்திருப்பாரா என்பது சந்தேகமே.

அமாத்துல் பஹாவின் பயணங்களில் முக்கியமான ஒன்று இந்திய துணை கண்டத்திற்கு அவர் விஜயம் செய்ததாகும். 1964ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமார்த்துல் பஹா அவர்கள் இந்தியாவுக்கு வந்து ஒன்பது மாதகாலமாக இந்தியா முழுதும் பயணத்தை மேற்கொண்டார். மொத்தம் 55,000 மைல்கள் பயணம் செய்து 70க்கும் கூடுதலான கிராமங்களுக்கு விஜயம் செய்தார். விமானம், கார், ஜீப், படகு மற்றும் கால் நடையாகவும் அவர் பயணத்தை மேற்கொண்டு பழங்குடு மக்களில் இருந்த மேட்டுக்குடி மக்கள் வரைக்கும் சென்று சமயத்தைப் சோதித்தார். இந்தியாவில் பிறந்து வளர்ந்து எவரும் கூட இதுநாள் வரைக்கும் இப்படி யொரு சூறாவளிப் பயணத்தை இந்தியாவில் மேற்கொண்டதில்லை எனலாம்.

1964ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி அமாத்துல் பஹா இலங்கைக்குச் சென்றார். அங்கு தேசிய பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டார். ஏப்ரல் 23 முதல் 28 வரைக்கும் அமாத்துல் பஹா மலேசியாவில் இருந்தார். மலேசியாவின் தேசிய ஆன்மீக சபையைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் பேராளர் மாநாட்டில் அவர் உலக நீதி மன்றத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் தாய்லாந்தின் தேசிய பேராளர் மாநாட்டில் உலக நீதி மன்றத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்வதற்காகச் பாங்காக் சென்றார். அங்கிருந்து மீண்டும் மே மாதம் 7ம் நாள் இந்தியாவுக்குத் திரும்பி தம் சுறவளிப் பயணத்தை தொடர்ந்தார். 1964ம் ஆண்டு ஜீலை மாதம் 4ம் நாள் ஐரோப்பிய மண்ணின் முதல் பஹாய் தொழுகை இல்லத்தை ஜெர்மனி நாட்டின் பிரங்க் பர்ட் நகரில் அதிகாரபூவமாகத் திறந்துவைத்தார்.

உலகம் முழுதும் உள்ள 6 மில்லியன் பஹாய்கள் வாழ்கின்ற சமூகங்களை அவர் இயன்றவரைக்கும் சென்று கண்டுவந்தார். குறிப்பாக பழங்குடி மக்களை பஹாய் சமூகத்திற்கு ஈர்ப்பதிலும், அவர்கட்கு உற்சாகம் வழங்கவதிலும் அமாத்துல் பஹா வசேஷமான கவனம் செலுத்தினார். அவர் தென் அமெரிக்காவின் நாடுகளான பேரு, பொலிவியா, சுரிநாம், குயானா மற்றும் பிரேசில் நாட்டின் அமேசன் காடுகளில் பயணம் செய்து அங்குள்ள பழங்குடி மக்களுக்கு சமயத்தைப் போதித்தார். அதனை ஒரு செய்திப்படமாகத் தயாரித்து அதற்கு “தி கிரீன்லைட் எக்ஸ் பெடிஷன்” என்று பெயர் சூட்டினர். அவர் சென்ற மேற்குறிப்பிட்ட நாடுகள் முன்னேடியாகச் செல்வதற்கு மிகவும் சிரமமான இடங்களாகும். இருந்தும் வயதான காலத்தில், உடல் வலு குறைந்த வேளையிலும் அவர் அப்பயணத்தை மேற் கொண்டார். தம்மால் அப்பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றால் வாலிபர்களாலும் இயலும் என்பதுவும் அப்பயணத்தின் செய்தியாகும். ஆறுமாத காலத்திற்கு நீடித்த இக்கடும் பயணத்தை ஒரு திரைப்படமாக அவர் தயாரித்துள்ளார். இதன் வழியாக தாம் ஒரு தலைசிறந்த திரைப்படத் தயாரிப்பாளர் எனவும் நிரூபித்தார். இத்திரைப்படம் பிகவும் பிரமாதமாக அமையவே, அது உலகின் பல நாட்டு தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது. குறிப்பாக 1990ம் ஆண்டில் அது சீனர்களின் கேண்டனீஸ் பாஷையில் டப்பிங் செய்யப்பட்டு சீனாவின் தொலைகாட்சியில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதனை குறைந்தது 5 மில்லியன் சீனர்கள் கண்டுள்ளனர்.

1986ம் ஆண்டில் இந்திய நாட்டின் புது டில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தை அவர் அதிகாரபூர்வமாக திறந்துவைத்தார். 1992ம் ஆண்டிலே நியூ யார்க் நகரில் நடைபெற்ற இரண்டாவது பஹாய் உலக மாநாட்டில் உலக நீதி மன்றத்தின் பிரநிதியாகக் கலந்துகொண்டுள்ளார்.

உலகத் தலைவர்களைச் சந்த்தார்
வேறு எந்த பஹாய் அன்பரும் செய்திடாத அளவுக்கு பஹாய் சமயத்தை அவர் உயர்மட்ட மக்களுக்குக் கொண்டு சென்றார். சீன நாட்டு பேராசிக்கு அவர் சமயத்தைக் கொண்டுச் சன்றுள்ளார். சீனாவுக்கு அவர் நான்கு முறை சென்றுள்ளார். 1985ம் ஆண்டில் உலக அமைதிக்கான வாக்குறுதி, எனும் அறிக்கை உலக நீதி மன்றத்தினால் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் அமர்த்துல் பஹா அவர்கள் அதனை ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளருக்கு வழங்கினார். இந்திய பிதமர் இந்திரா காந்தி, ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டின் பேரரசர் ஹெய்ல் செலாஸ்சீ, அர்ஜெண்டினா நாட்டு ஜனதிபதி கார்லோஸ் மெனம், ஜெமாய்க்கா நாட்டின் பிரதமர் எட்வார்ட் சீகா, ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளர் ஜாவியர் பெரேஃஜ் டெ செல்லர், ரோமானியா நாட்டின் இளவரசி ஹெலினா முதலியோரை அமாத்துல் பஹா கண்டு சமயத்தை வழங்கியுள்ளார். சோவியட் யூனியன் நாடுகளுக்கு 1993ம் ஆண்டு நீண்ட காலம் பயணம் மேற் கொண்டு சேவை செய்துள்ளார்.

பிற சேவைகள்
இன்னும் பல சர்வ தேசக் கூட்டங்களிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இளவரசர் பிலிப் அவர்களோடு ஓரே மேடையில் தோன்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப் பாதுகாப்பதில் அமாத்துல் பஹா தம்மை ஈடுபடுத்திக் கொன்டார். அதனால் உலகலாவில் இயற்கைப் பாதுகாப்பு நிதி நிறவனத்தின் செயல் திட்டங்களுக்கும் பணிகளுக்கும் அவர் தமது ஆதரவை வழங்கியுள்ளார். 1988ம் ஆண்டில் லண்டன் மாநகரின் “சயோன் ஹவுஸ் ” என்ற இடத்தில் அந்த நிறுவனத்திற்கான நிதி திரட்டும் விழாவில் சொற்பொழிவாற்றினார். அதோடு “ரிலிஜின் அண்டு கன்சர் வேஷன் ” என்ற பெரும் பணியைத் தொடங்கிவைத்தார். தமது தந்தை ஒரு கட்டிடக் கலைஞர். அந்த தாக்கம் அமாத்துல் பஹா மீதும் இருந்தது. அவருக்கு கலைகளின் மீது இயற்கையான ஆர்வம் இருந்தது. இதனால் பஹாய் சமயத்துடன் தொடர்புடைய பல பழைய கட்டிடங்களை புதுப்பித்து அழகுபடுத்துவதில் தம் உழைப்பைக் கொடுத்தார்.

எழுதிய நூல்கள்

அமாத்துல் பஹா அவர்கள் பல துறைகளில் துலங்கியவர், சிறந்த புலமைப்பெற்றவர். மெக்கில் பல்கலைக்கழகப் பட்டதாரியும் கூட. அவர் பன்மொழிப் புலமைப் பெற்றவரும் கூட,ஆங்கிலம், பாரசீகம், பிரஞ்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசி எழுதும் வல்லமைப் பெற்றவர் அவர். சிறந்த எழுத்தாளர் என்பதோடு பேச்சாளரும் கூட. அவர் நான்கு முக்கியமான நூல்களை இயற்றியுள்ளார்.

1. “பிரிஸ்கிருப்ஷன் ஃபார் லிவிங்” (வாழ்வதற்கான அறிவுரைகள்) என்ற நூல், இது ஆன்மீகக் கொள்கைகளைக் கொண்டு எவ்வாறு வாழ்வது என்பதற்கு வழிகாட்டுகின்ற நூலாகும். நல்ல பஹாய் வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகின்ற ஒருவருக்கு இந்த நூல் உதவியாக இருக்கும்.

2. பாதுகாவலர் 1957ம் ஆண்டில் காலமான பின்னர் சோகத்தில் மூழ்கியிருந்த அமாத்துல் பஹா தம் கைப்பட எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு இது.

3. “தி பிரைஸ்லஸ் பேர்ல்” ( விலைமதிப்பில்லா முத்து) – ( 1969 ) என்ற நூலில் ஷோகி எபெண்டி பற்றிய ஒரு முழுமையான வடிவத்தை அவர் நமக்குத் தருகிறார். பாதுகாவலர் எக்காலத்திலும் தம்மைப் பற்றி வெளிச்சம் போட்டுக்கொண்டதில்லை. மற்றவர்களின் சாதனைகளை அவர் நமக்குக் காட்டுவார், தம் சொந்த சாதனைகளை அவர் மறைத்துவிடுவார். இன்று உலக பஹாய்களுக்கு பாதுகாவலரின் பிறப்பு, வளர்ப்பு, உழைப்பு, மகிழ்வு, சாதனை, வேதனை போன்ற எண்ணற்ற அம்சங்கள் தெரியவந்ததற்குக் காரணம் அமதுல் பஹா இயற்றிய “தி பிரைஸ்லஸ் பேர்ல்” என்ற நூல்தான். 20 ஆண்டு காலத்திற்கு அவரோடு வாழ்ந்த அமாத்துல் பஹா தான் அவரைப் பற்றி எழுதுவதற்கு மிகவும் பொருத்தமானவர். இந்த நூல் பஹாய்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ” பஹாய் சமயத்தின் பாதுகாவலர் 1988 ” என்ற இன்னொரு நூலையும் தொடர்ச்சி நூலாக அவர் எழுதியுள்ளார்.

4. தி டிசையர் ஆஃப் தி வொர்ல்டு ( உலகின் ஆவாலுக்குரியவர்) -( 1982 ) என்ற பொருளில் ஒரு நூலை அவர் இயற்றியுள்ளார். இந்த நூல் பஹாவுல்லாவின் பண்புகள், தன்மைகள்,குணங்கள், மற்றும் நாமங்களை எடுத்து விளக்குகின்ற நூலாகும். இந்த நூலை வாசிப்பதன் வழியாக நாம் பஹாவுல்லாவைப் புரிந்துகொள்ளவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த நூல் ஒரு வகையில், தியானம் செய்வதற்காக எழுதப்பட்டுள்ளது.

5. “மினிஸ்ட்ரி ஆப் தி கஸ்டோடியன்ஸ்” ( காப்பாளர்களின் பதவிக்காலம்) – (1992) என்ற நூல் முக்கியமான நூலாகும். இந்த நூலுக்கு அமாத்துல் பஹா அவர்கள் ஒரு முன்னுரை வாழங்கியுள்ளார். இது பாதுகாவலர் காலமாகிய 1957ம் ஆண்டு முதல் உலக நீதி மன்றம் அமைக்கப்பட்ட 1963ம் ஆண்டு வரைக்குமான காலகட்டத்தில் புனித நிலத்தில் உள்ள தெய்வ சமயத் திருக்கரங்கள் உலகுக்கு அனுப்பிய செய்திகளின் தொகுப்பாகும்.

அவரின் எண்ண அலைகள்

அமாத்துல் பஹா அவர்கள் ஆற்றிய உரைகளிலும். எழுதிய நூல்களிலும் நமக்காக அவர் நிறைய அறிவுரைகளைக் கூறியுள்ளார், பல அருமையான கதைகளையும் உவமைகளையும் விட்டுச் சென்றுள்ளார். அவை யாவுமே அவரின் தெளிவான, வளமான சிந்தனைக்கு, அவை எடுத்துக்காட்டாகின்றன. எதனையும் சிக்கலின்றி தெளிவாகச் சிந்தித்து, அதனைச் சித்தரிக்கும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். அவரின் எண்ண அலைகளில் சில வருமாறு:
இந்திய கிராமவாசிகள் :

கிராமவாசிகள் யாவரும் இந்தியாவில் உள்ள சமயம் எனும் மாபெறும் மரத்தின் ஊட்டமளிக்கப்படவேண்டிய வேர்களுக்குச் சமமானவர்கள். நாம் அவர்கள் மீது கவனம் காண்பித்து அவர்கட்கு தெய்வீகப் போதனைகளைக் கொடுக்கவேண்டும்.

பஹாய் போதனைகள் :

பஹாய் போதகர்களாக எவருமே உருவாக்கப்பட்டவரல்லர். நாம் பாட்டுக்கு வெளியே சென்று போதிக்க வேண்டும். மற்றவை யாவும் பின் தொடர்ந்து, அதன் பிறகு ஒரு போதகர் தோன்றுகிறார். அவர் பிரார்த்தனை கூறிவிட்டு முன்னே அடி எடுத்து வைக்கவேண்டும்.

காலம் :

நமக்குப் போதுமான நேரம் இருக்கிறது என நாம் எண்ணவே கூடாது. நேரம் இருந்தாலும் வாய்ப்பு நிரந்தரமாக நழுவிவிடக்கூடும். போதிப்பதற்கு அங்கே போதிய காலம் இல்லை. நேரம் இருக்கும் போதே சந்தர்ப்பத்தை அதிசிறப்புடன் பயிர் செய்ய வேண்டும்.

கல்வயறிவற்றவர்கள் :

அறியாமையில் உள்ளவர்கள் எனவும், எழுத்தறிவற்றவர்கள் எனவும் அழைக்கப்படுபவர்கள் எதோ புதிதான ஒன்றுக்காக பசியோடு காத்திருக்கின்றனர். அவர்கள் தங்களின் வளர்ச்சிக்காக பசியோடு உள்ளனர். அவர்கட்டு நாம் தெய்வீகத் தீணியைக் கொடுக்காவிட்டால் அவர்கள் லௌகீக இயக்கங்களோடு ஒட்டிக்கொள்வார்கள்.

கிராமிய மனிதர்களின் மனங்கள் :

பெரும்பாலான மனிதர்களின் மனங்கள் சுத்தப்படுத்தப்பட்டு தெய்வீகப் பொழிவுகளைப் பெறுவதற்காக தயார்படுத்தப்பட வேண்டும். ஆனால் கிராமிய மனிதர்களின் மனங்கள் பற்றுகளில் இருந்து விடுபட்டுள்ளதோடு, போதனைகளை ஏற்றுக் கொள்வதற்குத் தயராக உள்ளன.

சேவையில் போட்டிகள் :

கடவுளின் சமயம் என்ற சேவையில் நாம் ஒருவருக்கொருவர் போட்டி இடுவோம். நீங்கள் எழுந்தால், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என நான் திண்ணமாக நம்புகிறேன்.

பாதுகாவலரின் மகிழ்ச்சி :

அவருக்கு 20 ஆண்டுகள் சேவை செய்யும் பாக்கியம் பெற்ற காலத்தில், அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது கடவுளின் சமயத்தின் வளர்ச்சி பற்றிய செய்தி ஒன்று தான். அவருடைய கடைசி அண்டுகளில் பாதுகாவலருக்கு உயிர் மூச்சாக இருந்தது, அவரைத் தொடர்ந்து இயங்கும்படிச் செய்தது எல்லாம் பத்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சி, கடவுளின் சமயத்தின் விஸ்தரிப்பு; ஆகியவைதாம். அடிப்படையில் போதனைத் துறையில் பெற்ற வெற்றிகளே அவருக்கு மகிழ்ச்சியூட்டின.

இரண்டு தரப்பினரின் கடமைகள் :

உலகில் இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் சரிசமமாக இயங்கவேண்டும். கடவுளின் தீர்க்கதரிசி தோன்றும் போது, அவருடைய நாமத்தை பற்றி கேள்விப்பபடுவதும் அவரை ஏற்றுக் கொள்வதும் ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும். மக்கள் தீர்க்கதரிசியின் நாமத்தைக் கேள்விப்படவில்லையானால் அது பஹாய்களின் தவறாகும். அதுபோல் கேள்விப்பட்ட பின்பு அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அது தனிப்பட்ட மனிதர்களின் தவறாகும்.

அறிவும் நம்பிக்கையும் :

சமயம் பற்றிய அறி நம்பிக்கை ஆகிய இரண்டு வெவ்வேறு விஷயங்களாகும். நாம் அவற்றை ஒன்றுகலக்கக் கூடாது. நம்பிக்கை என்பது நம் அனைவருக்கும் இருக்கவேண்டும். அதோடு நாம் படிப்படியாக சேகரிப்பதுதான் அறிவு

ஆன்மீகப் பயிற்சி :

உடல் நலத்தில் குறை இருக்கும் போது நாம் அதனை நிவர்த்தி செய்வதற்காக தேகப் பயிற்சி செய்கிறோம். அது போல் நம்மிடம் இல்லாத பண்புகளை நாம் பயிற்சி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் செய்து முடிப்பதற்கான பலத்தை இறைவன் நமக்குக் கொடுக்காமல் ஒரு காரியத்தை அவர் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டார். உலக மக்கள் தங்களின் நடத்தைகள், தங்களின் சிந்தனைகளை, தங்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும்படி கடவுள் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு மாற்றியமைப்பதற்கான பலத்தை அவர்கட்டு அவர் வழங்குவார்.

மற்றவர்களுக்கு உதவுவதானால் :

மற்றவர்களின் துன்பங்கள், அவர்களின் குறிக்கோள்கள், அவர்களின் சிரமங்கள் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வதுதான் அவர்களுக்கு உதவுவதற்கான முதல் படியாகும். சகிப்பின்மை எந்த பிரச்சினைகளையும் தீர்காது : நாம் விவேகமுள்ள மருத்துவரைப்போல், நோயைக் கண்டுபிடிப்பதற்காக, அறிகுறிகள் என்னவேன்று செவிமடுக்கவேண்டும்.

தாராளகுணம் படைத்ாேதர்

தாராள குணம் என்பது அனைவரும் நாடுகின்ற இன்னொரு மனிதப் பண்பாகும். ஆச்சரியம் என்னவென்றால், பொதுவாகக் கூரின், பணக்காரர்கள் அல்லது வசதியுடையோரைக் காட்டிலும் ஏழைகளே அதிக தாராள குணம் படைத்தவர்களாக உள்ளனர்.

முகபாவனை :

கடுகடுப்பான பகைமைக் கொண்ட கோபம் கொண்ட முகங்களைக் கொண்ட மனிதர்களை நீங்கள் விரும்முவதுண்டா? அநேகமாக விரும்பமாட்டீர்கள். ஆகையினால் உங்கள் சொந்த முகங்களை அப்படியெல்லாம் வைத்துக் கொண்டுஉங்கள் சக மனிதர்களைத் துன்புறுத்தாதீர்கள்.

நாவின் வன்மை :

மனிதப் பிறவிகளின் நாக்குகள் மிகவும் பலமான ஆயுதங்களாகும். நாக்குகளினால் தேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, தேசங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன, ஏனெனில் பேச்சு என்பது மனிதனின் மாபெறும் சாதனைகளில் ஒன்றாகும் ; அப்படி இருந்தும் கூட, இரண்டு முனையுள்ள வாளைப்போல் அது இரண்டு பக்கமும் வெட்ட முடியும். இவ்வளவு பலம் கொண்ட ஆயுதத்தை நன்மைக்கோ அல்லது திமைக்கோ பயன்படுத்துவதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மரணமும் அடக்கமும்

யார் எப்பொழுது, எங்கே தம் உயிரைத் துறப்பார் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அமர்த்துல் பஹா அவர்கள் உலகில் 185 நாடுகளுக்கு மேல் சென்று சமயத்திற்காக சேவை செய்துள்ளளார். வெளிநாட்டுக்குப் போகும் போதெல்லாம் தாம் அங்கேயே உயிரைத் துறந்து அந்த நிலைத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என அமாத்துல் பஹாவின் உள் மனது ஏங்கியதுண்டு. ஆனால் இறைவனின் விருப்பம் வேறு விதமாக இருந்துவிட்டது. கடைசி ஒரு வருடமாக (1999) ருஹியா கானும் அவர்களின் உடல் நலம் சரியில்லாததால் அவர் புனித நிலத்தை விட்டு வெளியேறவே முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டார். முன்பெல்லாம் புனித நிலத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட பஹாய்களையும் மற்ற வருகையாளர்களையும் அமாத்துல் பஹா வரவேற்றுப் பேசி உபசரித்ததுண்டு. ஆனால் கடைசிக் காலத்தில் இவ்வாறு மற்றவர்களைப் பார்ப்பதையும் அவர் குறைத்துக்கொண்டார். 1998ம் ஆண்டில் தடைபெற்ற அனைத்துலகப் பேராளர் மாநாட்டில் மேடையில் தோன்றினார், ஆனால் அதுவும் கூட மற்றவர்கள் அவரை மேடைக்கு கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது அபூர்வம், அல்லது கிடையாது என்றகுவிட்டது.

கடைசி ஒரு வருடமாக அமாத்துல் பஹா நடமாட முடியாமல் போய்விட்டது. அவர் கீழே விழுந்திடவே, அவரின் முதுகில் காயம் ஏற்பட்டு கொஞ்ச காலம் படுத்த படுக்கையாகக் காலத்தை ஓட்டினார். அவரை கவனிப்பதற்கு என உலக நீதி மன்றம் ஒரு தாதியை ஏற்பாடு செய்துதிருந்து. அவருக்குப் பக்கத் துணையாக இருந்ததவர் அவருடைய நீண்ட காலத்து தோழியாகிய திருமதி வைலட் நக்ஜவனி. இந்த அம்மையார் உலக நீதி மன்ற அங்கத்தினர் திரு அலி நக்ஜாவானி அவர்கிளின் துணைவியார். 1964ம் ஆண்டிலே அமாத்துல் பஹா இந்திய நாட்டுக்கு நீண்ட காலம் விஜயம் செய்தபோது அவரோடு உடன் பயணம் செய்தவர் திருமதி அலி நக்ஜவனி, “அமாத்துல் பஹாவின் இந்திய விஜயம்” என்ற பெயரில் ஒரு நாலை எழுதி அந்தப் பயண அணுபவங்களை விவரித்தவர் இந்த திருமதி அலி நக்ஜவனி.

ஆகையினால், தாம் வெளிநாட்டில் அடக்கம் செய்யப்படவேண்டும் என அமாத்துல் பஹா விரும்பினாலும்கூட, அது சாத்தியமாகாதபடி, கடைசிக் காலத்தில் அவர் நாட்டை விட்டே வெளியேறமுடியாதபடியான சூழ்நிலை உண்டாகிவிட்டது. அவர் புனித நிலத்தில்தான் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது இறைவனின் விருப்பமாயிற்றே! அது பேரன்புக்குரிய பாதுகவலரின் விருப்பமும் கூட என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நமது பாதுகாவலர் “பூமியில் ஆண்டவனின் அடையாளம்” என்றிருக்கும் போது அவருக்குத் வருங்காலத்தைக் கூறக்கூடிய வல்லமை இல்லாமலா போய்விடும்.?

காலமானார்
ஜனவரி மாதம் 18ம் நாள் நள்ளிரவைத் தாண்டிய அதிகாலை நேரத்தில் (19ல்) அமர்த்துல் பஹா அவர்கள் கடைசி மூச்சை விட்டார். இந்த துக்கச் செய்தி உலக நீதி மண்றத்தின் அங்கத்தினகட்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அதிகாலை மூன்று மணிக்கு உலக நீதி மன்றத்தின் கூட்டச் சபையில் ஒன்றுகூடினார். அவர்கள் கலந்தாலோசித்த முதல் விஷயம் அமாத்துல் பஹாவை எங்கு அடக்கம் செய்வது என்பதாகும். கார்மல் மலைமீதுள்ள அந்த ஞாபகார்த்த பூங்காக்களில் புனித பாப், அப்துல் பஹா, பஹாவுல்லாவின் துனைவியார் நவ்வாப், பஹாவூல்லாவின் புதல்வி பஹியா கானும் பஹாவுல்லாவின் புதல்வர் மிர்சா மிஹிடி, மற்றும் அப்துல் பஹாவின் துனைவியார் முனிரி கானும் ஆகியோரின் நல்லுடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த பூங்காக்களில் அடக்கம் செய்யப்பட்ட மேற்கூறப்பட்ட அவர்கள் பாவரும் வேறு ஸ்தானங்களைக் கொண்டவர்கள் என்பதனால் அமாத்துல் பஹாவை அங்கு அடக்கம் செய்ய இயலாது. அதே வேளையில் ஹைபா நகரில் உள்ள பொது மயானத்திலும் அடக்கம் செய்யும் அளவுக்கு அமாத்துல் பஹா சாதாரண மனிதரல்லர். இந்த நேரத்தில்தான் பாதுகாவலர் உயிரோடு இருந்தபோது அவர் சொன்ன குறிப்பு உலக நீதி மன்றத்தின் கவனத்திற்கு வந்தது.

அப்துல் பஹா காலமானது முதற்கொண்டு பாதுகாவலரும் பஹியா கானும் அவர்களும் அப்துல் பஹாவின் இல்லத்தில் தங்கிவந்தனர். பஹியா கானும் காலமாகியபின்னர் பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களை மணந்தார். அவர்கள் இருவரும் அப்துல் பஹாவின் இல்லதில்தான் வாழ்ந்தனர். அப்பொழுது அப்துல் பஹாவின் இல்லத்திற்கு எதிர்புறத்தில் உள்ள ஒரு காலி நிலத்தை பாதுகாவலர் விலைக்கு வாங்கினார். ஒரு நாள் பாதுகாவலர் அந்த நிலத்தை அமாத்துல் பஹாவிடம் காண்பித்து, “அதோ,அதுதான் உன்னுடைய பூங்கா” என்று கோடி காட்டினார். அதன் உள் அர்த்தம் அப்பொழுது அமாத்துல் பஹாவுக்குத் தெரியவில்லை. அதுபோல் பாதுகாவலர் பல விஷயங்களை அமாத்துல் பஹாவிடம் கோடிக்காட்டியுள்ளார். அவை யாவும் பிற்காலத்தில் நடந்தேறியுள்ளன. அத்தகைய கூற்றுகளையும் குறிப்புகளையும் நாம் அமாத்துல் பஹா எழுதிய பிரைஸ்லஸ் பேர்ல் ( விலைமதிப்பில்லா முத்து ) என்ற நூலில் காணலாம்.

ஆகவே பாதுகாவலர் சொன்ன அந்தக் கருத்து உலக நீதி மன்றத்தின் கவனத்திற்கு வந்ததும் பாதுகாவலர் வாங்கிய அந்தக் காலி நிலத்தில் அமாத்துல் பஹாவை அடக்கம் செய்திட உலக நீதி மன்றம் முடிவெடுத்தது, அந்த நிலம் பாதுகாவலர் காலாமாகிப் பனனெடுங்காலமாகவே அப்படியே இருந்து விட்டது. அங்கு மரங்கள் அடர்த்தியா வளர்ந்திடவே பலரின் பாார்வை அந்த நிலத்தின்மீது பாயக்கிடையாது. ஆனால் அமாத்துல் பஹா காலமானபோதுதான் அந்த நிலத்தின் முக்கியத்துவமே புரியவந்தது. ஆகையினால் பாதுகாவலர் அமர்த்துல் பஹா அவர்களை விட்டுப் பிரிவதற்கு முன்னபே அமாத்துல் பஹாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான், அவர் உயிர் துறந்துள்ளார்.

19ம் தேதி அதிகாலையின் கிழக்கு வெளுத்து கதிரவன் உதிர்பதற்கு முன்பே அமாத்துல் பஹாவின் அடக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக நீதி மன்றம் செய்துமுடித்துவிட்டது. வேலைகள் மள மளவென்று ஆரம்பிக்கப்பட்டன. 23ம் நாள் பிற்பகல் 2.00 மணிக்கு அன்னவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்படுவதாக இருந்தது. அதனால் உலக நீதி மன்றம் சில கட்டளைகளைப் பிறப்பித்தது. முதலாவதாக அமாத்துல் பஹா மறைந்த இல்லத்திற்கு பஹாய்கள் யாரும் போகக்கூடாது என்பதாகும். குறிப்பாக புனித யாத்திரைக்கு வந்துள்ளவர்கள் அங்கு போக அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் புனித நிலத்தில் கூடுதல் காலத்திற்கு தங்கி அமாத்துல் பஹாவின் சவ அடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை. புனித யாத்திரைக்கு வந்தவர்கள் யாத்திரையொடு திரும்பியாக வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில் அமாத்துல் பஹாவின் நல்லுடலுக்காக ஒரு பஹாய் அன்பர் ஒரு விசேஷமான சவப்பெட்டியை உருவாக்கினார். அது தரமான தேவதாரு மரத்தல் இருந்து உருவாக்கப்பட்ட சவப்பெட்டியாகும். அமாத்துல் பஹாவின் நல்லுடல் அனுள்ளே கிடத்தப்பட்டு காற்று போகாதபடி முத்றை இடப்பட்டது. அதனால் அவரின் முகத்தைக் காண்பதற்கான வாய்ப்பில்லாமல் மூடப்பட்டிருந்தது. மறுபக்கம் மயானத்தில் புதை குழிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

உலகில் உள்ள தேசிய ஆன்மீக சபைகளை உலக நீதி மன்றம் தொடர்பு கொண்டு அவை தலா இரண்டு பிரதிநிதிகளை அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டது. பல தேசிய சபைகளும் அவ்வாறு பிரதிநிதிகளை அனுப்பின. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து அப்போது தேசிய அங்கத்துவம் வகிக்காத இருவர் புனித நிலத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். அந்த இருவரும் தேசியா சபையின் பிரநிதிகளாக இறுதி மரியாதை நிகழ்வில் கலந்துகொள்ள முடியுமா என அந்த சபை கேட்டதற்கு உலக நீதி மன்றம் மறுத்துவிட்டது.

அடுத்தடுத்த நாட்களில் உள்ளநாட்டு பத்திரிகைகளிலும் பொது தொடர்புச் சாதானங்களிலும் அமாத்துல் பஹாவின் மறைவு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. உலகம் முழுதும் இருந்து பல பஹாய் அன்பர்களும் விமான நிலையத்தில் வந்திறங்கிய வண்ணம் இருந்தனர்.

பிப்ரவரி மாதம் 23ம் நாளன்று அமாத்துல் பஹாவின் நல்லுடலை அடக்கம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு முன்பு புனித நிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அமாத்துல் பஹா காலமானது பிப்ரவரி மாதம் 19ம் நாளன்று. அதற்கு சில நாட்கள் முன்பு வரைக்கும் புனித நிலத்தில் உஷ்ணம் அதிகமாக இருந்தது, ஊரே காய்ந்து கொண்டிருந்தது, மழை வர வேண்டும், வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தும் வேண்டியும் கொண்டிருந்தனர். அமாத்துல் பஹா காலமாகிய 19ம் நாளன்று மக்கள் எதிர்பார்த்த அந்த மழை பெய்தது. ஊரும் குளிர்ந்தது, மக்களின் உள்ளமும் குளிர்ந்தது. அந்த வகையில் அமாத்துல் பஹாவின் மறைவு நாளில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

பிப்ரவரி 23ம் நாள் பிற்பகள் 2.00 மணிக்கு அமாத்துல் பஹாவுக்கான இறுதி மரியாதைச் செலுத்தும் நிகழ்ச்சி சம்பவம் நடைபெறுவதாக இருந்தது. அன்றும் கூட மழை லேசாகத் தூறிக்கொண்டுதான் இருந்தது. அப்துல் பஹாவின் இல்லத்திற்கு முன்னால் உள்ள சாலையில் நண்பர்கள் கூடத்தொடங்கினார்கள். பலரும் குடைகளைப் பிடித்தவாறு வந்து கொண்டிருந்தனர். கார்மல் மலைக்கு மேலே கார்மேகங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. அப்துல் பஹாவின் இல்லத்தின் முன்னே ஒரே அமைதியாக இருந்தது. புனித நிலத்தில் பணிபுரிகின்ற பஹாய்கள் வருகைத் தந்தவர்களை வரவேற்று தக்க இடங்களுக்கு அழைத்துச்சென்றனர்.

மணி இரண்டை நெருங்கும் போது சில கார்கள் அப்துல் பஹாவின் இல்லத்தின் முன்னே வந்து நின்றன. அவற்றில் இருந்து தெய்வச் சமயத் திருக்கரங்களாகிய திரு புருட்டான் மற்றும் டாக்டர் அலி வர்கா ஆகியயோர் இறங்கினார். அமாத்துல் பஹா ருஹியா கானும் காலமானதோடு இப்பொழுது இவர்கள் இருவர் மட்டுமே வாழும் தெய்வ சமயத் திருக்கரங்களாக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் அப்துல் பஹாவின் வீட்டின் முன்னே உள்ள பாதையில் நடந்து படிக்கட்டிகளில் ஏறி முன் கதவு வழியாக உள்ளே நுழைந்தனர். அந்தப் பாதையின் இரண்டு ஓரங்களிலும் பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த இருவறையும் தொடந்து உலக நீதி மன்றத்தின் அங்கத்தினர்கள், கண்ட ஆலோசகர்கள் இன்னும் அழைக்கப்பட்ட விசேஷமான பிரமுகர்களும் அப்துல் பஹாவின் இல்லத்தினுல் நுழைந்தனர். அந்த வீட்டில்தான் ருஹியா கானும் அவர்களின் நல்லுடல் மூடப்பட்ட சவப்பெட்டியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களும் அழைக்கப்பட்டவர்களும் பஹாய் உலக மையத்தின் ஊழியர்களும் அக்கம் பக்கத்தில் உள்ள பூங்காக்களில் குழுமி இருந்தனர்.

சரியாக மணி இரண்டுக்கு நிகழ்ச்சி ஆரம்பமாக வேண்டும். தீடிரென்டு தூறல் நின்றது, மேகம் கலைந்தது, வானம் தெளிந்தது, சூரிய ஒளி படர்ந்து. நிகழ்ச்சி ஆரம்பமானது.. உலக நீதி மன்றத்தின் அங்கத்தினர் திரு யான் சேம்பல் அவர்கள், அமாத்துல் பஹாவின் மறைவைப் பற்றி உலக பஹாய்களுகு உலக நீதி மன்றம் அனுப்பிய செய்தியை வாசித்தார். கடந்த சில தினங்களாக அடாத மழையின் காரணமாக பறவைகளும் பாடுவதை நிறுத்துக் கொண்டன. எண்ணே ஆச்சரியம்! உலக நீதி மன்றத்தின் கடிதம் வாசிக்கப்பட்ட வேளையில் பக்கத்து பூங்காக்களின் மரங்களில் இருந்து பறவைகளும் பாடத் தொடங்கின! அந்த கடிதம் வாசிக்கப்பட்டு முடிந்ததும், ஆறு பிரார்த்தனைகளிள் ஓதப்பட்டு புனித வாசகங்கள் வாசிக்கப்பட்டன. ஒளி பெருக்கிக் கருவிகள் அந்தப் புனித வாசங்களை அப்துல் பஹாவின் இல்லத்திலும் பக்கத்துப் பூங்காக்களிலும் கொண்டு சேர்த்தன. உயிர் துறந்தவர்களுக்கான பிரார்த்தனை கூறி முடிக்கப்பட்டதும், உலக நீதி மன்றத்தின் அங்கத்தினர்கள் அந்த சவப்பெட்டியை சுமந்து கொண்டு அப்துல் பஹாவின் இல்லத்தின் வெளி வாசலில் கொண்டு போய் வைத்தனர். அங்கிருந்து வேறு அறுவர் அந்த சவப் பெட்டியை சுமந்து கொண்டு, சாலைக்கு மறு பக்கம் இருந்த புதைகுழியின் அருகே வைத்தனர். அந்த ஆறுவரும் உலகின் பல்வேறு நிறங்களைப் பிறநிதித்த பஹாய்கள்.

கடந்த நான்கு நாட்களாக அமாத்துல் பஹாவுக்கான சவக்குழியை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. புனித நிலத்தில் ஒரு பழக்கம் உண்டு.சவக்குழியைத் தோண்டி, குழியின் அடியிலும் நான்கு ஓரங்களிலும் சிமென்டு பூசுவார்கள். சவப்பெட்டி உள்ளே இறக்கப்பட்டவுடன் சிமெண்டினால் செய்யப்பட்ட தட்டையான மூடியினால் சவக்குழியை மூடி விடுவார்கள். அமாத்துல் பஹாவுக்கும் அவ்வாறான புதை குழிதான் உருவாக்கப்பட்டிருந்தது. அன்னவரின் சவக் குழியின் ஓரங்களில் ரோஜா மலர்கள் பொறுத்தப்பட்டன. உலகின் மூலை முடுக்குகளில் இருந்து வந்த நுாற்றுக்கணக்கான பூக்கூடைகள் அருகில் அழகுற அடுக்குவைக்கப்பட்டிருந்தன. அதனால் அந்த இடமே இடுகாடு போல காட்சித் தராமல் நந்தவனம் போல கோலம் கொண்டது.. சவப் பெட்டியின் மீதும் ஏராளமான ரோஜாப் பூக்கள் அடுக்கிவைக்கப்பட்டன. சவக் குழியின் அருகே மூன்று பிரார்த்தனைகள் கூறப்பட்டன. இத்துடன் மொத்தம் ஒன்பது பிரார்த்தனைகள் கூறப்பட்டுள்ளன. அதன் பின்பு அமாத்துல் பஹாவின் நல்லுடலைத் தாங்கிய சவப் பெட்டி புதை குழியினுள் இறக்கப்பட்டது. உலக நீதி மன்றத்தின் மதிப்புமிகு அங்கத்தினர்களும் இன்னும் உயிர் வாழும் இரண்டு தெய்வச் சமயத் திருக்கரங்களும் இன்னும் பலரும் கண்ணீர் பெருக்கெடுக்க சோர்ந்த முகத்தோடு இருந்தனர். சவப் பெட்டி இறக்கப்படும் வரைக்கும் தூறாமல் இருந்த வானம், சவப் பெட்டி இறக்கபடும் வேளையில் மீண்டும் தூறி, தன் கண்ணீர்த் துளிகளையும் காணிக்கையாகச் செலுத்தியது. இந்த முறை பலமாகவே மழை பெய்தது. சவப் பெட்டி இறக்கப்பட்டதும், அக்குழியின் மேலே தட்டையான சிமென்டு மூடிகள் போட்டு மூடப்பட்டது. அங்கு வந்திருதவர்கள் தங்கள் கடைசி மரியாதையைச் செலுத்தினார். வருகைத் தந்தவர்கள் மழையைப் பொருட்படுத்தாமல், பூக்கூடையில் இருந்து ஒவ்வொரு பூவாக எடுத்து சவக்குழியின் மீது வைத்தனர். அங்கு ஒரு மலர் மலையே உருவாகியது. ஒரு மணி நேரத்திற்குள் அந்த இடமே காலியாகியது.. அங்கிருந்து பார்த்தால் ஹைபா வளைகுடாவுக்கு மேலே வானவில் தன் வண்ணக் கோலத்தைக் காட்டியது. லண்டனில் பாதுகாவலர் அடக்கம் செய்யப்பட்ட போதும் இது போலத்தான் மழை பெய்துள்ளது. அப்படி ஒரு பொருத்தம்.

மறுநாள் புனித நிலத்தில் இன்னெரு அதிசயம். வானம் தெளிவாகியது. சூரியன் சுத்தமான ஒளி வீசியது. ஓரு புது பொலிவும் உற்சாகமும் புனித நிலத்தில் குடிகொண்டது! ‘என் உதவியாளர் “என் கேடயம்,” “நான் சுமந்துள்ள கடினமான பணிகளை நான் மேற்கொண்டபோது என் அயாரத ஒத்துழைப்பாளர்.” என்றெல்லாம் பாதுகாவலரினால் அழைக்கப்பட்டவர் இந்த அமாத்துல் பஹா. 1952ம் ஆண்டில் தெய்வச் சமயத் திருக்கரம் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்ட அவரின் நல்லுடல் இன்று புனித நிலத்தில் பாதுகாவலரினால் தேர்தெடுக்கப்பட்ட தனி நிலத்தில் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்துள்ளது.

முடிவாக
அமாத்துல் பஹா ருஹியா கானும் அவர்களின் வழ்க்கை மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கையாகும். பாதுகாவலரினால் மிகவும் போற்றப்பட்டவர்கள் அமாத்துல் பஹாவின் பெற்றோர்கள். அப்துல் பஹா பிரார்த்தனை கூறி, அதன் வழி பிறந்தவர் தான் ருஹியா கானும். அமாத்துல் பஹா அவர்கள் பாதுகாவலரின் துணைவி என்ற முறையிலும், தெய்வ சமயத் திருக்கரம் என்ற முறையிலும், பேச்சாளர் என்ற முறையிலும், நாடாகமாந்தர் என்ற முறையிலும் எழுத்ாளர் என்ற முறையிலும், போதகர் என்ற முறையிலும்,படத்தயாரிப்பாளர் என்ற முறையிலும், இன்னும் ஒரு பஹாய் சேவகி என்ற முறையிலும், உலகுக்கே உதாரணமாகத் திகழ்ந்தார். தாம் தொட்ட துறைகள் யாவுமே துலங்கிடும் வண்ணம் அவர் சேவை செய்தார். சென்ற நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டு வரைக்கும், 90 வயது வரை வாழ்ந்து மூன்ற தலைமுறையினரும் முக்காலமும் நினைவில் வைக்கவல்ல வாழ்க்கையை வாங்கினார். பாதுகாவலர் லண்டனில் 1957ல் காலமான பின்பு 1958ம் ஆண்டில் அவருக்கான கல்லறையை அமாத்துல் பஹா எழுப்பினார். அமாத்துல் பஹா காலமான போதும் பாதுகாவலர் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நிலத்தில் தான் அமாத்துல் பஹா அடக்கம் செய்யப்பட்டார். அப்படி ஓர் ஆன்மீக பந்தம் அவர்களுக்கு இடையில்! அமாத்துல் பஹா அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சம்பிரதாயத்திற்குச் சொன்னாலும் கூட, அவர் விட்டுச் சென்ற சேவைகளின் வழியாக, அவர் வாழ்ந்துக் காட்டிய உதாரணங்களின் வழியாக அவர் என்னெற்றும் நம் இதயத்தில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

இஸ்முல்லாஹுல்-அஸ்டக்


மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள்
நினைவோவியங்கள்

இஸ்முல்லாஹுல்-அஸ்டக்

இம்மை நீத்து அதி உயர்ந்த தொடுவானத்திற்கு ஏகிய இறை சமயத்தின் திருக்கரங்களில் ஜிநாப்-இ-இஸ்முல்லாஹுல்-அஸ்டாக் ஒருவராவார்.

மற்றொருவர் ஜிநாப்-இ-நபில்-இ-அக்பர் ஆவார். மற்றும் பலரில் ஜிநாப்-இ-முல்லா அலி-அக்பரும் ஜிநாப்-இ-ஷெய்க் முஹம்மட்-ரிடாய்-இ-யாஸ்டியும் ஆவர். மேலும், பலரிடையே, வணக்கத்திற்குறிய உயிர்த் தியாகியான, அகா மிர்சா வர்காவும் வீற்றிருந்தார்.

இஸ்முல்லாஹுல்-அஸ்டாக் மெய்யாகவே தமது வாழ்வின் ஆரம்பத்திலிருந்து தமது இறுதி சீமுச்சு வரை தேவரின் சேவகனாகவே இருந்தார். இளமைக் காலத்தில், இவர் காலஞ் சென்ற சிய்யித் காசிம் அவர்களின் வட்டத்தில் சேர்ந்துகொன்டு அவரது சீடர்களில் ஒருவரானார்.

பாரசீகத்தில் தமது தூய்மையான வாழ்விற்கு பெயர் பெற்றவர் இவர், புனிதர் முல்லா சாடிக் எனும் புகழும் எய்தினார். ஆசிர்வதிக்கப்பட்டவர் இவர், திறண்வாய்ந்தவர், கற்றவர், பெரும் மதிப்பும் பெற்றவர் எனத் திகழ்ந்தார்.

குராசானின் மக்கள் இவர்பால் அதிகமாய் பற்று கொண்டார்கள், ஏனெனில் இவர் ஒரு சிறந்த பண்டிதரும் மத குருக்களில் ஒப்பற்றவரும் தனிச்சிறப்பு பெற்றவருமாவார்.

சமயத்தின் போதகராக, தனக்கு செவிசாய்ப்போர் எல்லோரையும் வெகு சுலபமாக வென்றிடும் அளவிற்கு இவர் அத்துனை சொல்லாற்றலாலும், அத்துனை சக்தியோடும் உரை நிகழ்த்துவார்.

பக்தாத்திற்கு வந்து பஹாவுல்லாவின் முன்னிலையை அடைந்த பிறகு, ஒரு நாள் ஆண்கள் வசிக்கும் அறையின் வாசலில், ஒரு சிறு தோட்டத்தின் அருகே அவர் அமர்ந்திருந்தார்.

நான் மேலே அந்த வாசலை முன்னோக்கிய வன்னம் இருக்கும் அறைகள் ஒன்றில் இருந்தோன். அத் தருணம், பத்-ஆலி ஷாவின்யீ பேரனான, ஒரு பாரசீக இளவரசர் வீட்டிற்குள் நுழைந்தார்.

அந்த இளவரசர் இவரைக் கேட்டார், *நீங்கள் யார்?* என. *இந்த இல்லத்தின் ஒரு சேவகனாவேன் நான்*. இவ் வாசலைக் காத்திருக்கும் காவலர்களில் ஒருவன் நான் என இஸ்முல்லா பதில் அளித்தார்.

நான் மேலே இருந்து செவிமடுத்துக்கொண்டிருக்க, கீழே இவர் சமயத்தைப் போதிக்கத் துவங்கினார். அந்த இளவரசரோ ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்- ஆயினும், கால் மணி நேரத்திற்குள், சாந்தமாகவும் மரியாதையுடனும், ஜிநாப்-இ-இஸ்முல்லா அவரை அமைதி பெறச்செய்துவிட்டார்.

இவர் சொன்னதை அந்த இளவரசர் மிக்க கோபத்தோடு மறுத்தபிறகு, தனது முகம் தன் கோபத்தை வெகு தௌவீவாக பிரதிபலித்துவிட்ட பிறகு, இப்பொழுது அவரது கோபம் புன்னகைகளாய் மாறின, இஸ்முல்லாவை சந்தித்ததிலும் அவர் உரைத்தவற்றை செவிமடுத்ததிலும் இளவரசர் அதிகபட்சமான மனதிருப்தியினை தெரிவித்தார்.

இவர் எப்பொழுதுமே கலகலப்புடனும் ஆனந்தத்துடனும் போதிப்பார், மற்றும் தான் பேசுபவர் எத்துனை ஆவேசமான கோபத்தை தன்பால் செலுத்திட்ட போதும் இவர் சாந்தத்துடனும் ஏற்கக்கூடிய நகைச்சுவையோடும் பதிலளிப்பார்.

இவரது போதனை முறை தனிச்சிறப்பு வாய்ந்தது. இவர் மெய்யாகவே, இறைவனின் நாமமாகிய இஸ்முல்லாவே, இது அவரது புகழின் காரணமாக அல்ல, மாறாக, இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆன்மா என்பதினாலேயே ஆகும்.

இஸ்முல்லா அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமிய மரபுக்கூற்றுகளை மனனம் செய்திருந்தார் மற்றும் ஷேய்க் அஹ்மத் சிய்யித் காசிம் அவர்களின் போதனைகளில் தேர்ச்சியும் பெற்றிருந்தார். இவர் ஷீராசில், சமயத்தின் ஆரம்ப காலத்தில் அதன் நம்பிக்கையாளர் ஆனார், பிறகு விரைவில் அவ்வாராகவே பரவலான புகழும் பெற்றார்.

இவர் வௌவீப்படையாகவும் அச்சமின்றியும் போதித்ததன் காரணமாக, அவர்கள் இவர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி நகரத்தில் உள்ள சாலைவழிகளிலும் சந்தைவழிகளிலும் இழுத்துச் சென்றனர். அந்த நிலையிலுங்யீ கூட, சாந்தமாகவும் நகைத்துக்கொண்டும், இவர் மக்களோடு பேசிய வன்னமிருந்தார்.

அவர் இணங்கவில்லை@ அவர் ணியீபசுவதை தடுக்கவும் முடியவில்லை.. அவரை அவர்கள் விடுவித்தவுடன் அவர் ஷீராஸை விட்டு குஃராசானுக்குச் சென்றார், அங்குங் கூட சமயத்தைப் பரப்பத் துவங்கினார், அதன் பிறகு அவர் தபார்சி கோட்டையை நோக்கிய பயணத்தை பாபுல்-பாப் அவர்களுடன் துவங்கினார்.

அங்கு இவர் தியாகத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களுடன் ஒருவாராகி கொடுமையான துன்பங்களைத் தாங்கினார். அந்தக் கோட்டையில் அவரைக் கைதியாக்கி அவர்கள் மசிந்தரானின் தலைவர்களிடம், ஆங்காங்கே அவரை இழுத்துச் செல்ல, ஒப்படைத்துவிட்டு இறுதியில் அந்த மாநகரத்தின் ஒரு வட்டாரத்தில் கொல்லப்படுவதற்காக ஒப்படைத்தனர்.

சங்கிலியால் கட்டப்பட்டு, நியமிக்கப்பட்ட இடத்திற்கு இஸ்முல்லா கொண்டுவரப்பட்ட போது, நடு இரவில் அவரை சிறையிலிருந்து விடுவித்து ஒரு ஆபத்தில்லா இடத்திற்குக் கொண்டுச்செல்ல இறைவன் ஒருவரது மனதைத் தூண்டிவிட்டார். நடுங்கச்செய்யும் இந்த சோதனைகள் முழுவதிலும் அவர் தம் நம்பிக்கையில் உறுதியாகவே இருந்தார்.

உதாரணமாக, எதிரிகள் எப்படி அந்த கோட்டையைச் சுற்றி தாக்கினர் என்றும், தங்களது பீரங்கிகளிலிருந்து தொடர்ச்சியாக குண்டுகளைக் கொட்டிக் கொன்டிருந்தனரென்றும் சிந்தித்துப்பாருங்கள். நம்பிக்கையாளர்கள், இஸ்முல்லா உட்பட, பதினெட்டு நாட்களுக்கு உணவின்றி இருந்தனர்.

தங்களது காலனிகளின் தோல்களை உன்டு வாழ்ந்தனர். அதுவும்கூட விரைவில் தீர்ந்துவிட்டது, பிறகு அவர்களுக்குத் தண்ணீரைத் தவிர வேரெதுவும் இல்லை. காலையில் ஒரு மிடர் நீரை அவர்கள் அருந்தி விட்டு பசியோடும் கலைப்போடும் கோட்டையில் கிடந்தனர்.

ஆயினும், தாக்கப்பட்ட பொழுது, அவர்கள் உடனே குதித்தெழுந்து நிற்பர்யீ, மற்றும் எதிரிகளின் முன்னே அற்புதமான அஞ்சாமையையும் தாக்குதல்களின்பால் திகைக்க வைக்கும் தற்காப்பையும் காண்பித்து, எதிரிகளை கோட்டைச் சுவர்களிலிருந்து பின் ஓடச்செய்தனர்.

பசிக் கொடுமை பாதினெட்டு நாட்கள் நீடித்தது. இது ஒரு மோசமான சோதனையாய் ஆயிற்று. ஆரம்பமாக, அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெகு தூரம் இருந்தனர், எதிரிகளினால் தாக்கப்பட்டும் தடுக்கப்பட்டும் இருந்தனர், மேலும் அவர்கள் பசியினால் வாடியுமிருந்தனர் – அதற்கும் மேலாக எதிரிப் படையின் திடீர்த் தாக்குதல்களும், குண்டுகள் மழை போல் பொழிந்து கோட்டையின் மத்தியில் விழுந்த வன்னமுமாக இருந்தது.

இத்தகைய ஓர் சூழ்நிலையில் அசையாத நம்பிக்கையும் பொறுமையும் கொள்வது முற்றிலும் சிரமமானது, அத்தகையதொரு கொடூரமான சேதனைகளைத் தாங்கிடுவது காணக்கிடைக்காத ஒர் அற்புதச் செயலாகும்.

தாக்குதல்களில் இஸ்முல்லா தளரவில்லை. விடுதலை பெற்றவுடன், இவர் முன்பைவிட வெகு பரவலாக போதித்தார். ஒவ்வொரு உயிர் சீமுச்சையும் இவர் மக்களை இறைவனது இராச்சியத்திற்கு அழைப்பதற்கென்றே செலவிட்டார்.

:ராக்கில் இவர் பஹாவுல்லாவின் சந்நிதானத்தை அடையும் வாய்ப்பினைப் பெற்றார், மறுபடியும் அதி பெரும் சிறையில் அவரிடமிருந்து கருணையையும் தயையையும் பேற்றார்.

இவர் ஒரு அலைமோதிடும் கடலைப்போலவும், உயரப் பறந்திடும் இராஜாளியைப் போலவும் திகழ்ந்தார். இவரது வதனம் பிரகாசித்தது, இவரது நா சொல்வன்மை கொன்டிருந்தது, இவரது ஊக்கமும் உறுதியும் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. இவர் தன் உதடுகளை போதிப்பதற்கெனத் திறந்தபொழுது, ஆதாரங்கள் பொழிந்திடும் – இவர் ஓதவோ அல்லது பிரார்த்தனைச் செய்யவோ செய்தாரேயானால், அவரது கண்கள் மேகங்களைப் போல் கண்ணீரைப் பொழிந்திடும்.

இவரது முகம் பிரகாசமாகவும், வாழ்க்கை ஆன்மீகமாகவும், அறிவு கற்றதும் ஓதாது இயல்பானதாகவும் இருந்தது. அவரது ஆர்வம், உலகின்பால் பற்றின்மை, இறைவனின் மீதுள்ள பக்தியும் அச்சமும் யாவும் தெய்வீகமானது.

இஸ்முல்லாவின் கல்லறை ஹமாதானில் உள்ளது. அதிகமான நிருபங்கள், அவர் இறந்த பிறகு ஒரு விசேஷ நினைவு நிருபம் உட்பட, பஹாவுல்லாவின் அதி உயரிய எழுதுகோலினால் அவருக்காக வௌவீப்படுத்தப்பட்டுள்ளன. இவர் ஒரு அதி பெரும் மனிதராவார், எல்லா வகையிலும் சிறந்தவராவார்.

அத்தகைய சிறப்பான ஜீவன்கள் இப்போது உலகைவிட்டுச் சென்றுவிட்டன. நல்ல வேலை, அவர்கள் பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்யீகு பிறகு நிகழ்ந்த பெருஞ்சோகங்களை – அந்த கோடுரமான பேரிடர்களை – காண இன்னும் இருந்திட வில்லை – ஏனெனில் உறுதியாக ஊன்றப் பட்டிருக்கும் மலைகள் கூட இவைகளால் ஆடி நடுங்கிடக் கூடும், ஊயர்ந்த சிகரமிட்டிருக்கும் மலைகளும் குன்றிடக்குடும்.

மெய்யாகவே இவர், இறைவனின் பெயரான இஸ்முல்லாவே. இவரது கல்லரையை வலம் வருபவரும், அந்த அடக்க ஸ்தலத்தின் மன்னைக் கொன்டு தன்னை ஆசிபெறச் செய்கிறவுரும்யீ பலனடைவார். அப்ஹா இராஜியத்தில் இவர்பால் போற்றுதலும் புகழும் சேரட்டுமாக.

தன்மை மாற்றத்திற்கான அமைவுமனை


தன்மை மாற்றத்திற்கான அமைவுமனை

(உங்கள் மெய்நிலையை எய்துதல் எனும் கையேட்டிலிருந்து – டேனியல் சி. ஜோர்டன்)

பஹாவுல்லா, மனுக்குலத்தின் தன்மைமாற்றத்தைப் பாதுகாத்தும் ஊக்குவிக்கவும்கூடிய ஸ்தாபனங்களை உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்கும் வழிவகைகளை அளித்துள்ளார். ஆகவே, பஹாய் சமூகமானது, தன்மைமாற்றம் நிகழக்கூடிய ஓர் அமைவுமனையாகின்றது.

மனுக்குலத்தின் ஒறுமைக் குறித்த கோட்பாட்டைப் பஹாவுல்லா வலியுறுத்துவதால், பஹாய் சமூகங்கள் பலவகையான மொழிகள், இனங்கள், தேசிய மற்றும் சமயப் பிண்ணனிகளைக் கொண்ட மனிதர்களை உள்ளடக்கியுள்ளன. பஹாய் சமூகத்தின் இந்தப் பல்வகைமை சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அறியப்படாத பலவற்றைப் பிரதிநிக்கின்றது, அல்லது, தெளிவான வார்த்தைகளில் கூறுவதானால், சாதாரண நிலையில் ஒருவர் நெருங்க விரும்பவோ அல்லது சினேகம் கொள்ளுவதற்காகத் தேர்ந்தெடுக்கவோ விரும்பாத பல மனிதர்களைக் கொண்டது பஹாய் சமூகம். நாம் சிந்திப்பனவற்றையே தாமும் சிந்திப்பவர்களாகவும், பிற விஷயங்களைப் பற்றி நாம் உள்ளுணர்வுகொள்வதைப்போலவே தாமும் உள்ளுணர்வுகொள்பவர்களாகவும், ஒரே விதமான நாட்டங்கள் கொண்டவர்களாகவும், ஒரே விதமான ஈடுபாடுகளைக் கொண்டவர்களாகவும் இருக்கும் பிறரையே நாம் நமது நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க முனைவோம் என்பது வெளிப்படையான ஒன்று. ஒரியல்பு கொண்ட இவ்வித நண்பர்கள் கூட்டத்தில் ஒருவரது தன்மைமாற்ற செயற்பாடு சுலபத்தில் தேக்கநிலையடைந்துவிடும், ஏனென்றால், அங்கு எல்லாச் சூழ்நிலைகளுக்கும் மாறாத நிலையிலான பதில் செயல்களே (அல்லது ஆங்கிலத்தில் ‘ரெஸ்போன்ஸ்’ எனப்படுவது)உருவாக்கப்பட்டு, வேறு புது விதங்களில் நடந்துகொள்வதற்கு எவ்விதத் தூண்டுகோளும் இல்லாது போகும். இதனால்தான், ஒரு பஹாய் சமூகத்தின் விலைமதிப்பில்லாத் தன்மைகளில் ஒன்றாக அதன் பல்வகைமை இருக்கின்றது. ஒருவர் ஒரு பஹாய் சமூகத்தில் இனைந்திடும் போது அவர் அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்குத் தான் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டிய மிகவும் பல்வகையான மனிதர்களைக்கொண்ட ஒரு குடும்பத்தில் இனைகிறார். தாம் அங்கு வெளிப்படுத்தக்கூடிய தமது பழையப் பதில்செயல்கள் அனைத்துமே போதியவை அல்ல என்பதை அவர் முதலில் கண்டுகொள்கிறார். அங்குப் பெரிய அளவிலான பல்வகைப்பட்ட மனிதர்கள் அதிக எண்ணிக்கையிலான அறிந்திராதவற்றைப் பிரதிநிதிக்கின்றனர். அறிந்திராத விஷயங்கள்பால் கொள்ளும் தொடர்பு, மனிதரில் ஒருவித சக்தியைத் தூண்டுகின்றது. இச்சக்தியாகப்பட்டது, நம்பிக்கை மற்றும் துனிவு ஆகியவற்றின் மூலமாக அறிவது அன்புகொள்வது எனும் பிரதிச்செயற்பாடு ஒன்றை ஆரம்பித்து வைக்கின்றது. மனதிற் தோன்றும் இந்த உலைச்சல் உருவாக்கும் சக்தியை ஆக்கத்துடன் உபயோகப்படுத்திடக்கூடிய ஒரு ஏற்புடையக் குறிக்கோளை வரையறுப்பதென்பது, புதிய பதில் செயற்களஞ்சியம் ஒன்றுக்கு (ரெஸ்போன்ஸ்) அறைகூவல் விடுக்கும். சூழ்நிலைக்கொத்த ஒவ்வொரு புதிய நடத்தையும் மனித இயற்திறனின் வெளிப்பாடு ஆகும் — அது ஒருவரது உள்ளார்ந்த ஆற்றலை விடுவிப்பதாகும். இதை வேறு விதத்திற் கூற வேண்டுமானால், வேறெங்குமே காணமுடியாத, வளர்ச்சியைப் பராமரிக்கும் ஒரு சூழ்நிலையில், அறிந்து அன்புகொள்வதற்குத் தேவையான வாய்ப்புக்களை பஹாய் சமூகம் அதிகமாக வழங்குகிறது என்பதே ஆகும்.

பொதுவாகத், தனது சக சமூக உறுப்பினர்களின் பலவகைமைத் தன்மைகள்பால் சகிப்புத்தன்மை என்பதுடன் ஆரம்பிக்கும் ஒரு ஆன்மீகப் பரிணாம வளர்ச்சிப்பாங்கு ஒன்றின் வழி ஒரு பஹாய் கடந்து செல்கிறார். அறிவு சேரும்போது, இந்தச் சகிப்புத் தன்மைப் புறிந்துணர்வாகின்றது. அன்பு சேர்க்கப்படும் போது, புறிந்துணர்வு போற்றுதலாக மலர்கிறது. பலவகைத்தன்மையின் மீதான இந்தப் போற்றுதல் இனவகை இயலின் ஆன்மீக மற்றும் சமூக ரீதியிலான எதிர்ப்பதமாகும். இனவகையியல் கடந்து, சகிப்புத் தன்மை மற்றும் புறிந்துணர்வு ஆகிய கட்டங்கள் வழி நாம் நடந்து, போற்றுதலெனும் நிலையை எய்துவது பல கவலையுணர்வுகளையும் சந்தேகங்களையும் சுமத்துகிறது. பல வேளைகளில், என்ன செய்வதெனத் தெரியாத சூழ்நிலைக்கு உட்படுத்தப்படுகிறோம், அல்லது, என்ன செய்வதெனத் தெரிந்தாலும் அதைச் செய்வதற்கு நாட்டமற்றிருக்கின்றோம். இவை தன்மைமாற்றத்திற்கு முன்னவசியமான சோதனைகளாகும். பஹாவுல்லாவின் திருமகனாராகிய, அப்துல் பஹா, சோதனைகள் இல்லாமல் ஆன்மீக வளர்ச்சிக் கிடையாது என ஐயத்திற்கிடமில்லாமல் கூறுகிறார்.

இங்கு நாம் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்திற்கு வருகிறோம். பல வேளைகளில் சோதனைகள் ஒரு மனிதனை அழித்துவிடும். இறைவனிடமிருந்து அப்பால் திரும்பிச் சோதனைக்குத் தீர்வு காண நாம் முயன்றால் அச்சோதனை நம்மை உண்மையிலேயே அழித்துவிடும். சோதனைக்குத் தீர்வுகாண நாம் இறைவன்பால் திரும்பியும் அவ்விஷயத்தில் சமூகத்தின் பிற அங்கத்தினர்களின் அன்பான பக்கபலமும் இருந்தால் நாம் அந்தச் சோதனையை வெற்றிகரமாகக் கடக்க முடியும். ஆகவே, பஹாய் சமூகமானது, அதன் பலவகைத்தன்மையின் காரணமாக, நமது ஆன்மீக வளர்ச்சிக்கு அவசியமான அத்தகையச் சோதனைகள் பவற்றை நமக்களிக்கின்றது. அதே வேளை, ஸ்தாபனங்கள் மூலமாகக் கிடைக்கும் வழிகாட்டல்களும் சமூக அங்கத்தினர்கள் இறுதியில் அடையக்கூடிய நிலைக் குறித்த சமூக உறுப்பினர்களின் பொறுப்புணர்ச்சியும் மனித இயற்திறன்களை விடுவிக்கக்கூடிய ஆன்மீக மேம்பாட்டுக்கான வாகனங்களாக அத்தகைய சோதனைகளை மாற்றிடுவதற்குத் தேவையான மனவுறுதியை வழங்கிடும்.

சுருக்கமாகக் கூறப்போனால், இதுவே இன்னல்கள் என்பதன் ஆன்மீக விளக்கமாகும். “எமது பேரிடர்களே எமது வள்ளன்மை. வெளித்தோற்றத்திற்கு அது தீயும் வஞ்சந்தீர்த்தலும் போல் தோன்றியபோதிலும் உள்ளூர அவைகள் ஒளியும் இரக்கமும் ஆகும். அவைகளின்பால் விரைவாயாக. அதனால் நீ நிலையான ஒளியாகவும் என்றும் இறவா ஆவியாகவும் ஆகக்கூடும். இதுவே உனக்கு எமது கட்டளை ஆகும். அதனைக் கடைப்பிடிப்பாயாக,” என பஹாவுல்லா கூறுகின்றார்.

ஆகவே, ஒரு பஹாய்க்கு இன்பம் என்பது பதற்றம் மற்றும் மனஉலைச்சல் ஆகியவையற்ற வாழ்வு வாழ்வதென்பதல்ல. அவ்வித வாழ்வு “போரடித்துப்போவது” என்பதன் பஹாய் விளக்கவுரையே அகும். ஒரு பஹாய்க்குச் சந்தோஷம் என்பது வாழ்க்கையில் சோதனைகளை எதிர்கொண்டும், தனது அறிதல் மற்றும் நேசித்தல் ஆற்றல்களை மனுக்குலத்திற்குச் சேவை செய்வதன் மூலம் மேலும் மேம்படுத்திடத் தேவையான மனவுறுதியை உருவாக்கிக்கொள்வதும் ஆகும். ஒரு சமூகத்தில் வாழ்வது, சோதனைகளை உள்ளடக்கியுள்ளது. இச்சோதனைகள் கருத்தியலான கோட்பாடுகளை உறுதியான மெய்மைகளாக மாற்றிடும் அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களாகின்றன. இது, ஆன்மீக மேம்பாட்டில் அடையப்படும் பலன்களை உறுதிபடுத்தி, தொடர்ந்தாற்போன்ற வளர்ச்சிக்கான அஸ்திவாரத்தை வழங்கக்கூடிய உண்மையான சூழ்நிலைகளின்போது சமயக் கோட்பாடுகளை எப்படி பயன்படுத்துவது என்பதில் நமது சமயப்பற்றுக்கு ஒரு விழிப்புநிறைந்த அறிவெனும் அஸ்திவாரத்தை வழங்குகிறது.

மனம் புண்படுதல்


மனம் புண்படுதல்

மிக எளிதில் தங்கள் மனம் புண்பட்டுப் போகும் அதிக எண்ணிக்கையிலான பஹாய் அன்பர்களையும், அப்படி மனம் புண்பட்டோர்களுக்குத் தங்கள் “அனுதாபத்தைக்” காட்ட முற்பட்டு, அவர்களுக்கு “அன்பு” காட்டுவதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் மனதைப் புண்படுத்தியததாக நம்பப்படும் நபர்கள்பால் ஒரு கடுமையான மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ளும் அன்பர்களைப் பார்க்கையில் நிலைமை மிகவும் கவலைக்கிடமளிப்பதாக உள்ளது.

நாம் எவர் மனதையும் புண்படுத்தலாகாது என அப்துல் பஹா கேட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம் நாமும் மனம் புண்பட்டுப்போகலாகாது எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நமது எதிரிகளையும் (நம்மோடு பேச்சுவார்த்தையற்றுப் போன பஹாய்களை மட்டும் அல்ல) நமது நண்பர்களாகவே கருத வேண்டும் எனவும் கூறியுள்ளார். அவர்களை வெறுமனே நண்பர்களாக மட்டும் நாம் கருதக்கூடாது எனவும் கூறியுள்ளார். ஏன்? நாம் சமயநம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டுமானால் நாம் மனவளர்ச்சி பேற வேண்டும் என வற்புறுத்தும் சோதனைகளே இவ்விதமான பிரச்சினைகளாக நமக்கு வருகின்றன. நமது வளர்ச்சியைத் திசைத் திருத்தம் செய்யக்கூடிய சோதனைகள் அவை. மனிதகுலம் முழுவதையும் உண்மையாகவே நேசிக்க வேண்டும் என்னும் நமது வேட்கையை அவை சோதனைக்கு உட்படுத்துகின்றன.
மக்கள் அனைவரின் குறைபாடுகளையும் சேர்த்தே நாம் அவர்களை நேசிக்க வேண்டுமென அப்துல்-பஹா கூறுகின்றார். “மனிதர்களைப் பார்க்காதீர்கள், அவர்கள் குறைபாடுகள் நிறைந்தவர்கள், ஆனால் இறைவனுக்காக அவர்களை நேசியுங்கள்,” என அவர் மேலும் கூறுகின்றார்.

வாஞ்சையும் அன்பும் நிறைந்தவர்கள் கொடுத்துவைத்தவர்களே. இரக்கம் இல்லாதவர்களாகவும், அருகே நெருங்க முடியாதவர்களாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்களைத் தாங்களே வெறுத்துக் கொள்பவர்களாகவும், குறுகுறுப்பும் பயமும் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அதிக சக்தி வாய்ந்த உண்மையான அன்பே இருகிப்போன அவர்களின் உள்ளங்களை இளக வைத்தும் அவர்களை குணப்படுத்திடவும் முடியும். ஒருதலைப் பட்சமான அன்பு உண்மையில் அன்பே அல்ல.

விறகு எரிகின்றது போல் தோன்றினாலும், அதைத் தூண்டுவதால் அது பற்றிக் கொள்ளும் போதே அது “தீப் பிடித்துக் கொண்டது” எனக் கூற முடியும். பிறர் நம்மை விரும்பும் போது மட்டும் நாம் அன்பு செலுத்தினல் நாம் “பற்றிக் கொண்டவர்கள்” ஆக மாட்டோம். அதை அறிந்துக்கொள்வது நம்மைப் பற்றிய ஒரு கசப்பான உண்மையை அறிந்து கொள்வதாகும், ஆனாலும் நண்மை பயக்கக்கூடிய ஒரு கசப்பான உண்மை அது. (அன்புக்காக) பிறரையே முழுவதுமாக சார்ந்திருக்கும் நிலையாகப்பட்டது மிகவும் அபாயகரமான ஒரு நிலை. இதற்கு நிவாரணம் யாது? அது, நம்மை முழுவதுமாக அவரது புனித வாசகங்கள் என்னும் சமுத்திரத்தில் மூழ்கச் செய்துக் கொள்வதாகும்; தகுந்த நடவடிக்கைகள் எடுத்திடவும், மறு இணக்கம் காணவும் அன்பெனும் நெருப்பையும் ஈர்க்கப்படுதலையும் தூண்டிவிடுமாறு இறைவனைப் பிரார்த்தித்து மன்றாடுவது; என்னதான் இதயம் வேதனையால் வெடித்துவிடுவது போல் இருந்தாலும் அந்தச் சூழ்நிலையிலும் அன்பர்களுக்குச் சேவைச் செய்திடுவது; சமயத்தைப் போதித்து அன்பு மற்றும் ஒளியின் உதயபீடத்தின்பால், இறைவனின் வெளிப்பாட்டின்பால், அன்பர்களை வழிநடத்துவது, ஆகியவையே தகுந்த நிவாரணமாகும். (இந்தக் காரியத்திற்குத் தகுந்தவர்களாக நம்பிக்கையாளர்கள் இருக்கமுடியாது, ஏனெனில் அவர்கள் தூண்டப்பெற்றவர்களாகவோ பெறாதவர்களாகவோ இருக்கலாம்.)

அப்துல்-பஹாவிடமே பலர் முறைத்துக் கொண்டுள்ளனர். பூரண உதாரண புருஷராகிய அவர் இவர்கள் புண்பட்டதற்கு பொறுப்பாக இருந்திருக்க முடியுமா?

இதிலிருந்து, புண்படுத்தவேண்டும் என்னும் எண்ணமும் அப்படிச் செய்வதற்குத் தகுந்த காரணம் இல்லாத போதும் ஒருவர் வருத்தப்பட்டுக்கொள்ளவோ அல்லது மனம் புண்படவோ செய்யலாம் என்பது தெளிவாகின்றது. அப்துல்-பஹா, மனிதர்கள் வெளிப்படுத்தக்கூடிய மிகவும் வெறுக்கத்தக்க நடத்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இருந்தும் அவர் அதனால் எப்போதாவது மன வருத்தம் அல்லது மனம் புண்படுதல் என்னும் நிலையை எய்தினாரா? எதையும் பொறுத்துக்கொள்ளும் தன்மை, மன்னிப்பு, தயை போன்றவைச் சார்ந்த ஆன்மீக வலிமைகளை இங்கு உபயோகித்து மனவருத்தம் மற்றும் மனம்புண்படுதலை நிச்சயமாக தவிர்க்கமுடியும். இது எப்படித் தெரியும்? தெரியும், ஏனென்றால் அப்துல்-பஹா இதை நமக்குச் செய்து காண்பித்துள்ளார். “ஆனால் நான் அப்துல்-பஹா இல்லை” என நீங்கள் கூறிட நினைக்கலாம். “அது தெளிவுதான், நாம் அப்துல்-பஹா இல்லைதான்,” இருந்த போதிலும் அவர்தான் நமது உதாரண புருஷர் என்பது மாற்ற முடியாத உண்மை. நம்மைப் புண்படுத்துபவர் ஒர் “அப்துல் பஹா அல்ல,” அவரும் முயற்சி செய்கிறார், ஆகவே நம்மைப் புண்படுத்துபவர்களும் நமது உதாரணத்தைப் பின்பற்றுவர் என்பதே எதிர்பார்ப்பு. பஹாவுல்லா, நம் எல்லோரையும் பல உடல்களில் வசிக்கும் ஓருயிராகப் பார்க்க விரும்புவதாகக் கூறுகிறார். நம்மைப் புண்படுத்தியவர், ஆன்மீக தடை ஓட்டப் பந்தயத்தில் ஏதோ ஒரு தடையில் சிக்கித் தவிக்கும் ஓர் அன்பர். அதே வேளை புண்பட்ட நாமும் அவரைப் போன்றே ஏதோ ஒரு தடையில் அகப்பட்டுக் கொண்டவர்கள்தாம். மனிதகுல ஒருமைத் தன்மையை நாம் உண்மையிலேயே நம்புபவர்களாக இருப்போமானால், இந்த இருவகையான மனிதர்களான நாம், அப்படியே போகிற போக்கில் நமது வெவ்வேறு தடைகளையும் தாண்டிச் செல்வதற்குக் கற்றுக் கொள்ள ஒருவருக்காக ஒருவர் பிரார்த்திக்க, நாம் தேவையான அளவு விவேகத்துடனும்  திருத்தமாகவும் ஒருவரை ஒருவர் நேசிக்கவேண்டும், அதே வேளை ஒருவரை ஒருவர் மறுபடியும் மறுபடியும் நேசிப்போம், நேசிப்போம், நேசிப்போம்

அமெரிக்காவில் மிர்ஸா அபுல்-பஃடல்


அமெரிக்காவில் மிர்ஸா அபுல்-பஃடல்

தமது தந்தையிடம் சேகரித்த விஷயங்களின் அடிப்படையில் மார்ஸியே கேய்ல் அவர்களால் எழுதப்பெற்ற கட்டுரை.

மாலை வேளைகளில் நியு யார்க் நகரின் மேற்புறமாக உள்ள அந்த பழைய இடுகாட்டில் அவரும் நானும் நடப்போம். கல்லரைகள் எங்களைச் சூழ்ந்திருக்க, மரங்களின் கீழ் மேலும் கீழுமாக நடந்த வன்னம் இருப்போம். மறுமை வாழ்வைப் பற்றி நான் அவரிடம் வினவுவேன், அவர் அதற்கு பதிலளிக்க மாட்டார். ஒரு நாள் நான் பொறுமை இழந்து அவரிடம் கேட்டே விட்டேன்:

‘மாஸ்டர் அவர்கள், நான் உங்களோடு இருக்கும் போது பல விஷயங்களை கற்க முடியும் என்றார், ஆனால் நான் எதையுமே கற்க முடியவில்லை… நான் மறுபடியும் உங்களை கேட்கின்றேன்: இவ்வுலகில் நாம் நமது பௌதீக உடலால் அறியப்படுகிறோம்; மறுமை உலகில் நாம் எவ்வாறு அறியப்படுவோம்? மாஸ்டர் அவர்கள் நீங்கள் இதைப்பற்றி எனக்கு விளக்கம் சொல்வீர்கள் எனக் கூறியுள்ளார்.’

அதற்கு அவர்: நீர் என்னை வற்புறுத்துகின்றீர், நான் பதிலளித்தே ஆகவேண்டும். ஆனால் நான் அளிக்கும் பதிலினால் நீர் சந்தோஷப்படப்போவதில்லை.’

‘ஏன்’

‘ஏனென்றால், இறப்பிற்குப் பின் வரும் வாழ்க்கையை நீர் புறிந்துகொள்ள இயலாது.’

‘ஆனால் நான் ஷொப்பன்ஹோவர் மற்றும் காண்ட் ஆகியோரின் எழுத்துக்களை புறிந்துகொள்ள முடிகிறதே. கிரேக்கர்களை என்னால் புறிந்துகொள்ள முடிகிறது. இதை மட்டும் என்னால் புறிந்துகொள்ள முடியாது என ஏன் கூறுகிறீர்கள்?’
அதற்கு அவர்: நீர் இது குறிந்து கேள்வி கேட்கின்றீர் என்பதே இதை நீர் புறிந்து கொள்ளமுடியாதவர் என்பதற்கு ஆதாரம்,’ என்றார்.

அதன் பின், படைப்பினங்கள் வாழும் தளங்கள் ஒவ்வொன்றிற்கும் அந்தந்த தளத்தை வர்ணிக்க பாஷை ஒன்று தேவைப்படுகிறது, என என்னிடம் கூறினார். பூவுலகில், இங்கிருப்பதை விட உயர்ந்த நிலையில் வாழும் ஆன்மாவின் வாழ்வைப் பற்றி விளக்கங்கள் அளிக்கக்கூடிய பரிபாஷை ஏதும் கிடையாது என்றார்.  அதன் பிறகு, அமர நிலை குறித்து எனக்கு பல வழிகளிலும் விளக்கமளிக்க முற்பட்டார். அவர் உபயோகித்த ஓர் உதாரணம் முதிர்ச்சி நிலை குறித்தது: ஒரு குழந்தைக்கு முதிர்ச்சி நிலை என்றால் என்ன என்பதை விளக்குவதற்கு தகுந்த மொழி கிடையாது என்றார். அக்குழந்தை குழந்தை பருவத்தைத் தாண்டி ஒரு முதிர்ச்சி நிலைய அடைந்த பிறகே அதை புறிந்து கொள்ள முடியும். ‘அமர நிலையை புறிந்துகொள்ளத்தக்க ஒரு நிலையை நாம் எப்படி அடைவது?’ என நான் கேட்டேன்.

‘சமயத்தை தொடர்ந்தாற் போன்று பக்தியுடன் ஒழுகி வருவதன் மூலம்,’ என அவர் பதிலளித்தார். ‘சிறுகச் சிறுக ஒருவர் அந்த ஞானத்தை அடையலாம். நீர் சேவை செய்கிறீர்; ஆகவே நீர் சரியான திசையில் செல்கிறீர். நீர் அந்த ஸ்தானத்தை புறிந்து கொள்ள நான் பஹாவுல்லாவை வேண்டிக்கொள்கின்றேன். ஆனால் அது கல்வி கற்பதன் மூலம் கற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அந்த (அமர) நிலை குறித்த ஒருவரது அறிவு அவரது செயல்களின் மூலமே வெளிப்படுத்தப்படுகிறது. ஒருவர் அந்த அறிவு நிலையை எய்திவிட்டார் என மக்கள் மனதில் படுமே அன்றி அது வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாதது.

மிர்ஸா அவர்கள் அமெரிக்க சென்றது இதுவே முதன் முறை அன்று. பாரசீகத்தின் குல்பைகான் எனும் இடத்தில் 1844 அவர் பிறந்தார். பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் கட்டளைகளுக்கினங்க சமயத்தைப் பரவச் செய்ய பல்வேறு இடங்களுக்கு அவர் சுமார் 30 வருட காலம் பிராயணங்கள் மேற்கொண்டார். கிழக்கத்திய வாசகர்களுக்கு அவர் ஒரு சிறந்த கல்விமான் என்பது குறித்து அறிவிக்கப்பட வேண்டியதில்லை; ஹக்கீம்-ஹாஷீம் எனப்படும் தெஹரானின் முன்னனி அரபுப் பல்கலைக்கழகம் ஒன்று அவர் தலைமையில் இயங்கியது என்றும், மேலும் அங்கு அவர் தத்துவ ஞானம் பற்றி விரிவுரையாற்றினார் எனவும்; ஆயிரம் ஆண்டுகள் ஆன இஸ்லாமியக் கல்வி மையமான கைரோவின் புகழ்பெற்ற அல்-அஸ்ஹார் பல்கலைக்கழகத்தில் அவர் இஸ்லாமியச் சான்றுகள் குறித்து ஒரு அதிகார நிலையில் இருந்தார் எனவும் (அத்தாரிட்டி), அங்கு அவர்கள் தாங்கள் இயற்றிய காரியங்களை பரிசீலனை செய்திட அவரை நாடினர் என்றும்; புதிய மற்றும் பழைய பாரசீக மொழிகளில் புலமை பெற்றவர் எனவும், அரபு மொழி வல்லுனர் எனவும், கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்களை நன்கு அறிந்தவராகவும் அவர் விளங்கினார். 1876-இல் எட்டு மாத விவாதத்திற்குப் பிறகு சமயத்தை ஏற்றார், அதன் பிறகு சமயத்தின் போதனைகளை அச்சமின்றி போதித்ததன் பயனாக பல முறை சிறை சென்றும் மரண தண்டனை பெறக் கூடிய ஒரு நிலைக்கும் உள்ளானார். அமெரிக்காவிற்கு பிராயணம் செய்வதற்கு முன்பாக, பாரசீகம், துருக்கி, ரஷியா, கோக்கசஸ், தார்த்தரி, சிரியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் அவர் பிரயாணம் செய்தும், போதித்தும், எழுத்துப் பணிகளும் செய்திருந்தார்; சமயத்தை சீனாவின் எல்லை வரையிலும் கொண்டு சென்றிருந்தார். தமது போதனைத் திறன்களுக்கு தமக்காக பஹாவுல்லா வெளிப்படுத்தியிருந்த ஒரு பிரார்த்தனையே காரணம் என அவர் சுட்டினார்: ‘பஃடல் அவர்கள் விவேகத்துடனும் விளக்கத்துடனும் தமது உண்மையை பொதிக்க உதவிடுமாறும், அவரது அறிவின்கண் மறைக்கப்பட்டும் அரும்பொருளாய் வைக்கப்பட்டும் உள்ளவற்றை திரைநீக்கம் செய்திடவும், யான் ஆண்டவனை இறைஞ்சுகின்றேன். மெய்யாகவே அவரே வலிமைமிக்கவர், வழங்குபவர்!’

நான் மட்டும் அப்துல் பஹாவையும் பாதுகாவலரையும் அறியாது இருந்திருந்தால், பஃடல் அவர்களே இவ்வுலகில் ஒரு மாபெரும் மனிதர் என நினைத்திருப்பேன். மாஸ்டர் அவர்கள் நான் அவரை விட்டு அமெரிக்கா செல்ல வேண்டும் எனக் கூறியபோது நான் விம்மி அழுதேன். என் துக்கம் பாரசீக முறையில் வெளிப்பட்டு அதன் பயனாக ஆக்கா நகரில் மாஸ்டர் அவர்களின் வீட்டுச் சுவற்றில் நான் என் சிரசை மோதிக்கொண்டேன். ‘மிர்ஸா அவர்களின் பெரும் கல்வி மற்றும் சமயத்தின்பாலான அவரது பக்தியை நோக்குங்கால் நீர் அவருடன் இருக்க இதுவே உமக்கு நல்லதொரு வாய்ப்பு, எனப் பிறகு அப்துல் பஹா கூறினார்.
அந்த நாட்களில் மாஸ்டர் அவர்களின் உதவியாளர்கள் மிகக் குறைவு, மற்றும் சமயத்தின் வேலைப் பழு அதிகரித்த வன்னமாக இருந்தது. ஒரு மொழிபெயர்ப்பாளர் எனும் முறையில் என் சேவை அதிகமாகத் தேவைப்பட்டது. மாஸ்டர் அவர்களுக்காக இரவும் பகலுமாக சேவை செய்து வந்தேன். ஆனால், அந்த அமெரிக்கா சம்பந்தமான வேலை அதி முக்கியமானதாக இருந்தபடியால் அவர் என்னை என் கடமைகளிலிருந்து விடுவித்தார். 1901-ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் போது, திருமதி லுவா மற்றும் அவரது கனவருடன் நான் பாரீஸ் சென்றடைந்தேன். அங்கு மிர்ஸா அவர்கள் மே போல்ஸ் (பின்னாளில் திருமதி மே மாக்ஸ்வல்), லோரா பார்னி, ஜூலியட் தோம்சன், சார்ல்ஸ் மேசன் ரேமி, லிட்டல் சிகுர்ட் ரஸ்சல் மற்றும் ஏனைய நம்பிக்கையாளர்களுடன் இருக்கக் கண்டேன். மாஸ்டர் அவர்கள் என்னை உடனடியாக அமெரிக்கா செல்லும்படி உத்தரவிட்டார். நியு யார்க்கில், என்னை சிக்காகோ போகும்படி கட்டளையிட்ட, அப்துல் பஹா அனுப்பி வைத்த இரண்டாவது தந்தியைக் கண்டேன். இருண்டு மாதங்கள் சென்று மிர்சா அவர்கள் அங்கு என்னுடன் வந்து சேர்ந்துகொண்டார்.

சிக்காகோவில் நடந்தது இதுதான்: அந்த சிரியா நாட்டவரான, இபுராஹிம் கைருல்லா, புனர்ஜன்மம், கனவு விளக்கம், மாயவித்தைகள் போன்ற தமது சொந்து கற்பனைகள் பலவற்றை சமய போதனைகளுடன் சேர்த்து போதித்து வந்தார். அவர் இவற்றையெல்லாம் ஒரு புத்தகமாக எழுதி அதை அச்சிடுவதற்கு அனுமதி கேட்க ஆக்கா நகருக்கும் சென்றார். மாஸ்டர் அவர்கள் அவரை இத்தகைய மூட நம்பிக்கைகளை விட்டுவிடுமாறு கூறினார். அவர் அவ்வாறு செய்து சமயத்தை மட்டும் ஒழுங்காக போதிப்பாரேயானால் அவர் ஒரு முன்னனி போதகராக திகழ்வதற்கு வாய்ப்புள்ளது எனவும் கூறினார். ஆனால் அவர் அமெரிக்கா திரும்பி அப்புத்தகத்தை வெளிட்டார். நம்பிக்கையாளர்கள் இடையே ஒரு பிளவு ஏற்பட்டது; அப்பிளவை சரிசெய்ய மிர்சா அவர்களும் நானும் அனுப்பிவைக்கப்பட்டோம்.

சிக்காகோவில் நாங்கள் அசாடுல்லாவைச் சந்தித்தோம். அவர் அமெரிக்கவுக்கு எகிப்து நாட்டைச் சார்ந்த மிகவும் பற்று நிறைந்த இரு நம்பிக்கையாளர்களான ஹாஜி அப்துல்-காரிம் மற்றும் ஹாஜி மிர்சா ஹசான்-இ-குராசானி எனப்படுவோருடன் வந்திருந்தார். அவர் நன்கு அறிமுகமான ஒரு பொதகராக இருந்த போதிலும், கனவு விளக்கங்களும் மூட நம்பிக்கைகளையும் அவர் நம்பிக்கையாளர்களிடையே பரப்பிக் கொண்டிருந்தார். நம்பிக்கையாளர்கள், மிர்சா அபுல்-பஃடல் அவர்களோடு சிறிது பேசிய பிறகு அவர் ‘கடின சித்தமும் பகுத்தறிவு வாதமும்’ மிக்கவரென கூறினர். அசாடுல்லா ஆன்மீகமானவர், அவர் தங்கள் கனவுகளையெல்லாம் விளக்குகிறார் எனக் கூறினர். அவர்கள் மிர்சா அவர்களின் அரைக் கதவைக் கடந்து அசாடுல்லாவின் அரைக்கே செல்வர். அவர்கள் ஆவியினால் வழிகாட்டப்பட்டதாகவும், அல்லது அசரீரி ஒன்று அவர்களை தங்கள் சக நம்பிக்கையாளர் ஒருவர்பால் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்ததாகவும் சொல்வர். (மிர்சா அவர்கள் இவர்களை பேயோட்டிகள் என அழைத்தார்)

இந்த மாயஜாலங்கள் யாவும் அன்பரிடையே ஒரு பிளவையே உண்டாக்கும் என நாங்கள் நினைத்தோம். அவர்களில் பலர் சமய நம்பிக்கையில் இன்னும் உறுபடுத்தப்படாமல் இருந்தனர். நாங்கள் அவ்விஷயத்தைக் கலந்தாலோசித்து பின்வரும் வழியை பின்பற்ற முடிவு செய்தோம்: யாராவது எங்களிடம் வந்து, ஆவியினால் ஒரு காரியத்தை புரிய வழிகாட்டப்பட்டதாகக் கூறினால், சர்வலோக ஆவியே இன்று பஹாவுல்லாவிடம் வெளிப்பட்டுள்ளது, என நாங்கள் கூறினோம். உங்களுக்கு அசரீரியான காட்சிகள், அல்லது அனுபவங்கள் ஏதேனும் ஒரு காரியத்தை செய்யச் சொல்வது போல் தோன்றினால், அதை பஹாவுல்லாவின் வெளிப்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி கூறினோம். அச்செயல் சமய போதனைகளுக்கு ஒப்ப இருந்தால் அது உண்மையான வழிகாட்டுதலாகும், இல்லையேல் அது வெறும் கனவே.’

சிக்காகோவில், மிர்சா அவர்கள் வாரம் மூன்று வகுப்புகள் நடத்தினார். அதோடு நாங்கள் இருவரும் மேசனிக் மண்டபத்தில் வாரம் ஒரு முறையும் போதித்தோம். கிழக்கத்திய பஹாய் போதகர்களுக்கான மையமாக விளங்கிய எங்களது இல்லம், மேற்கு மொன்ரோ வீதியில் இருந்தது. அங்கு நாங்கள் சந்தித்த உறுதியான பக்திமிகுந்த நம்பிக்கையாளர்கள், தோர்ன்டன் சேஸ், அவரது செயலாளர், ஜெர்ட்ருட் புய்கெமா, குமாரி நாஷ், டாக்டர் பார்ட்லட், டாக்டர் தாட்சர், ஆர்த்தர் அக்னியு, திரு லேய்ஷ், அல்பர்ட் வின்டஸ்ட், திருமதி பிரிட்டிங்காம், திரு திருமதி சார்ல்ஸ் ஐயோவாஸ், கிரீன்லீஃப் எனப்படும் சிறந்த வழக்குறைஞரும் அவரது மனைவியும் ஆவர். அப்துல் பஹாவின் கடித வழி கட்டளையின் பேரில் திரு பீட்டர் டீலி அலபாமாவின் பேஃர்ஹோப்பில் இருந்து மிர்சாவுடன் சமய தீர்க்கதரிசனங்கள் மற்றும் அதன் பிற அம்சங்களை கற்க வந்து சேர்ந்தார்.

அமெரிக்காவின் முதல் பஹாயான திரு தோர்ன்டன் சேஸ் அவர்களைப் பற்றிய எனது முதல் ஞாபகம், எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்து ஒரு மூலை மருந்துக் கடைக்கு என்னை அழைத்துச் சென்று நான் மிகவும் வெறுத்த கொக்கக்கோலா பானத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதுதான். இது மருந்து, என நான் அவரிடம் கூறுவேன். ‘இல்லை,’ ‘இது நல்லதொரு பானம்; நீர் கண்டிப்பாக இதை விரும்பி அருந்தப் போகிறீர்,’ என அவர் கூறுவார். அவரது கூற்று தற்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

என் தந்தையாகிய, ஆரம்ப கால நம்பிக்கையாளர், ‘அப்துர்-ரஹீம் காஃன், தெஹரானின் நகர முதல்வராகவும், காவல் துறை தலைவராகவும் இருந்தபோது மிர்சா அவரை நன்கு தெரிந்து வைத்திருந்தார். ஒரு நாள் அவர் பின்வரும் கதையைக் எனக்குக் கூறினார்: அவர், மிர்சா அபுல்-பஃடல், சமயத்தை ஏற்றக்கொண்ட போது, உற்சாகத் தீயில் மிதந்து கொண்டிருந்தார். சாயங்காலங்களில் அவர் அருகிலிருந்த ஒரு காப்பிக் கடைக்குச் சென்று அங்கு மாடத்தைப் போன்றிருந்த ஓரிடத்தில் அமர்ந்து, பகிரங்கமாக சமயத்தைப் போதித்தார். ஒரு நாள் கிருஸ்துவ புரடஸ்ட்டன் பிரிவைச் சேர்ந்தவரும் தெஹரான் புரட்டஸ்டன் மிஷனோடு தொடர்புகொண்டவருமான ஓர் ஆர்மீனியர், அக்காப்பிக் கடைக்குள் நுழைந்து பஹாவுல்லாவைக் குறித்து மிகவும் தரக் குறைவாக ஏதோ கூறிவிட்டார். அதைக் கேட்டுத் தன் வசமிழந்த மிர்சா அவர்கள் கீழே குதித்து அந்த ஆர்மீனியரைத் தாக்கிவிட்டார். வெளிநாட்டுத் தூதரக வாரியத்திடம் அந்த மனிதர் பிராது ஒன்றை சமர்ப்பித்தார். அவர்கள் அதை காவல் துறையினரிடம் அனுப்பி மிர்சா அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வற்புறுத்தினர். என் தந்தையாகிய கலாந்தர், ‘இவ்வித பிரச்சினைகளை நானே தீர்ப்பதுதான் நலம்,’ எனக் கூறினார். அவர் மிர்சாவை தமது பாதுகாப்பில் வைத்தார்; அவர் புரிந்தது மிகப் பெரிய குற்றம் எனக் கூறினார்; மிர்சாவின் சமயநம்பிக்கையை மிகவும் பாராட்டுவதாகக் கூறினார், ஆனால் காலம் மிகவும் ஆபத்தானதாக இருப்பதால் எல்லோரும் மிகவும் ஜாக்கிரதையாக காட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார். அவர் மிர்சாவை தமது காரியாலயத்திலேயே விட்டுவிட்டு அந்த ஆர்மீனியரை அழைத்து வர ஆளனுப்பினார். அவர் வந்தவுடன், “சிறிது நாட்களுக்கு முன் நமது மன்னர் கத்தோலிக்க சமயப்பணி மன்றத்தை எவ்வாறு மூடினார் என்பது உமக்கு ஞாபகத்தில் இருக்கின்றதா?” என வினவினார். மிர்சா அவர்கள் இந்த நாட்டு மதகுருமார்கள் மத்தியில் எவ்வளவு உயர்ந்த ஸ்தானம் வகிக்கிறார் என்பதை உமக்குத் தெரியும். மிர்சா அவர்கள் மேல் சாற்றப்படும் எந்த குற்றச்சாட்டும் மன்னரை கோபம் கொள்ளச் செய்வதோடு, அவர் உமது புரடெஸ்டன்ட் சமயப் பணி மன்றத்தையும் இழுத்து மூடிவிடுவார், நீர் உமது வேலையையும் இழக்கப் போகின்றீர். நீர் இப்போது எதை விரும்புகிறீர்? நான் மிர்சா அவர்களை தண்டிப்பதா அல்லது நீர் உமது வேலையை தக்க வைத்துக் கொள்வதா?” குற்றச்சாட்டுகள் அவசரத்துடன் வாபஸ் பெறப்பட்டன.

ஒரு நாள் மிர்சா அவர்கள் என்னை கூப்பிட்டு அனுப்பி என்னுடன் மிகவும் பனிவுடன் பேசினார். என் பின்னனியையும் குடும்பத்தையும் நன்குணர்ந்துள்ள அவர் மிகுந்த தயக்கத்துடனேயே ஒரு வாக்குறுதியை என்னிடமிருந்து பெற விரும்புவதாகக் கூறினார்: அதாவது சமயம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் நான் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கலாம், ஆனால் அவரது தனிப்பட்ட விவகாரங்களில் நான் தலையிடக் கூடாது. அதற்கு நான், ‘மிர்சா அவர்களே, என் குடும்பத்தை உமக்கு நன்கு தெரியும், அதன் அங்கத்தினர்கள் எவருமே மகிமை மிகுந்த ஒருவரான உமது தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடப்போவதில்லை. ‘எப்படியாயினும் நீர் வாக்குறுதி தாரும்,’ என அவர் வற்புறுத்தினார். நானும் வரப்போவது தெரியாமல் வாக்குறுதி அளித்தேன்.
1901 டிசம்பர் மாதம், நாங்கள் இருவரும் வாஷிங்டன் சென்றோம். அங்கு லோரா பார்னி அவர்கள் எங்களுக்கு தங்குமிடம் ஏப்பாடு செய்திருந்தார். எங்கள் அறைகள் நான்கு மாடி கட்டிடம் ஒன்றின் நான்காவது மாடியில் இருந்தன. மிர்சாவுக்கு இரைச்சல்கள் தாங்க முடியவில்லை; இதனாலேயே நாங்கள் வாஷிங்டனில் தங்கியிருந்த நான்கு வருட காலங்களில், இரைச்சல்களில் இருந்து தப்பிக்க அவர் பல முறை அவர் தமது தங்குமிடங்களை மாற்ற வேண்டியிருந்தது. அவர் தாம் எழுதிக்கொண்டிருந்த நூலில் கவனம் செலுத்த வேண்டியிருந்தபடியால், நாய்களோ அல்லது பிற குழப்பங்களோ (ஆனாலும் அவர் பூனைகளை விரும்புவார்) நிறைந்த மாடியின் கீழ்த்தளம் அவருக்கு பெரும் திகிலளித்தது.

அவரது உணவு கட்டிட உரிமையாளரினால் வழங்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மிகக் குறைந்த அளவே உணவு உட்கொண்டார் என்பது எனக்கு தெரிய வந்தது. நாள் முழுவதும் கிழக்கத்திய தேநீர் வகை ஒன்றை தயாரித்து, அதுவும் நீரைப்போல, குடித்துக் கொண்டிருப்பார்; அவர் எகிப்திய சுருட்டு வகை ஒன்றை புகை பிடித்து வந்தார் (ஆனால் நண்பர்கள் அதை கண்டித்ததால் அவர்களுக்குச் சோதனையாக இருக்கக் கூடாத என விட்டுவிட்டார்); எப்போதாவது மெல்லிய பிஸ்கட் ஒன்றை உண்பார். அதனால் தாங்க முடியாத அந்த குளிரிலும் அன்னியமான சூழ்நிலையிலும் அவர் மிகவும் இளைத்துப்போக ஆரம்பித்தார். மாஸ்டர் அவர்களின் வேண்டுகோளின்படி அவர் எழுதிக்கொண்டிருந்த நூலை தொடர்ந்து எழுதும்படி நான் வற்புறுத்தி வந்தேன்; ஆனால் அவர் அதை செய்யக்கூடிய உடல் நிலையில் இல்லை என்பது தெரிந்த போதும், நான் அவருக்கு அளித்த வாக்குறுதியின்படி நான் எதிலும் தலையிட முடியவில்லை.

மிர்சா அவர்கள் சதா பிரார்த்தனையிலேயே லயித்திருப்பார். அவரது காலை, நண்பகல் மற்றும் மாலை வேளைகள் பிரார்த்தனையிலேயே கடந்துவிடும். ஒரு முறை நான் அவரது அறைக்குச் சென்ற போது கதவு தாழிடப்பட்டிருந்தது. தட்டினேன் பதில் இல்லை. பிறகு கதவை உடைத்து உட்சென்ற போது, மிர்சா அவர்கள் தமது பிரார்த்தனையின் போது பிரக்ஞை இழந்துவிட்டதும், அவரது வாய் கிட்டித்துப்போயிருந்ததும் தெரிந்தது. அவர் அவ்விதம் மிகவும் கடுமையாகவும் உளம்இளகியும் வேண்டியதன் காரணம், அவர் இறைவனைப்பற்றி கொண்டிருந்த ஓர் அதி உயர்ந்த எண்ணமும் தம்மைத் தாழ்மையின் சாரமாக நினைத்ததுமே ஆகும். தெய்வீகக் கருனையினால் அருளப்பட்ட மிர்சாவின் ஜனனம், “உனது தேவரின் முகத்திலிருந்து பிரகாசிக்கும் கதிர்களின் ஒளியைத் தவிர வேறெதுவுமே காணக்கூடாத,” இந்நாளில் ஒரு பெரும் பாவம் என்பதே அவருடைய நம்பிக்கையாக இருந்தது.  ஒரு புனித ஆன்மாவாகிய நீர் இவ்விதம் அழுவதா? என நான் அவரிடம் கூறுவேன். நீரே ஒரு பாவி என்றால் நாங்கள் எல்லோரும் என்ன கதிக்கு ஆளாவது எனக் கூறினேன். அவர்: “நாம் பஹாவுல்லாவை வாழ்த்துவதற்கு தேவைப்படும் ஒரு மொழியாக பக்தியின் அளவை நீரும் அறிந்து கொள்ளும் நாள் வரும்”, என அவர் கூறினார்.

இறுதியில், மிர்சா மரணத்தோடு போராடிய காலம் வந்தது. மிர்சா அவர்கள் பெரும் மதிப்பு வைத்திருந்த லோராவின் தாயாரான பார்னி அவர்களிடம் நான் சென்றேன். நான் மிர்சாவிடம் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிக் கூறி, அதை அவர் ஏன் அப்போது வாங்கிக்கொண்டார் என எனக்குத் தெரியாது எனவும் கூறினேன்; அவர் அப்போதே ஒரு கோழியை சமைத்து, டெ சால்ஸ் வீதியில் இருந்த அந்த வீட்டிற்கும் கொண்டு வரப்படச் செய்தார். வந்தவுடன், விடுதித் தலைவியிடம் மிர்சா அனுப்பப்படும் உணவை ஏற்கிறாரா இல்லையா என வினவினார். ‘இல்லை, உணவுக்கு பணம் கொடுக்கிறார் ஆனால் அதைச் சாப்பிடுவதில்லை,” என பதில் வந்தது. அவர் பிறகு மேலே மிர்சாவிடம் சென்றார். நீங்கள் உணவு ஏதும் உண்பதில்லை என கீழே என்னிடம் கூறுகிறார்கள். ஒழுங்காக சாப்பிடாமல் நீர் உமது புத்தகத்தை எவ்வாறு எழுதப் போகிறீர்? எனக் கேட்டார். கண் புறுவத்திற்கு கீழே இருந்து அவரது சிறிய கூரிய கரு விழிகள் என்பால் பார்த்தன.

திருமதி பார்னி சென்றவுடன் அவர், ‘நீர் வாக்குறுதி அளித்தீர்,’ எனக் கூறினார்.

விடுதித் தலைவி அவரிடம் கூறினார் என நான் பதிலளித்தேன்.

உமக்கும் அதில் பங்கிருந்தது, என மிர்சா கூறினார்.

நீர் மரணத்தோடு போராடுவதை என்னால் காண முடியவில்லை என நான் கூறினேன்.

நான் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் என மிர்சா கூறினார்: ஒரு வீட்டைப் பற்றி அதில் 60 வருடம் குடியிருப்பவருக்கு நன்கு தெரியுமா அல்லது அதை அப்போதுதான் அறிந்தவருக்கு நன்கு தெரியுமா? அந்த இருவரில் அந்த வீட்டை யார் நன்கு அறிந்து வைத்திருப்பார்? ‘உண்மைதான், அந்த மனிதர் அதில் 60 வருட காலம் குடியிருந்திருக்கலாம், ஆனால் அவர் அவ்வீட்டை ஒழுங்காக வைத்திருக்காமல் அது இப்போது ஒழுக ஆரம்பித்தும் சுவர்கள் இடிந்தும் குடியிருக்கத் தகுதியில்லாமலும் அல்லவோ போய்விட்டது,’ என நான் கூறினேன்.

மிர்சா சாப்பிடாமல் உடல் நலிவுற்றும், அமெரிக்க உணவையும் வாழ்க்கைைையயும் ஏற்க முடியாமல் இருந்தார்.  நான் அவருக்கு சேவை செய்வதையும் அவர் தடுத்து வந்தார். கடைகளுக்கு சாமான் வாங்க சென்றால் அவர் வாங்கும் பொருட்களைக் கூட தூக்கி வர விடமாட்டார். இறுதியில் பொறுக்க மாட்டாமல் நான் மாஸ்டர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். மிர்சாவின் வாழ்க்கைக்கும் வேலைக்கும் ஆன பொறுப்பு என்னால் பொறுக்க முடியாத ஒன்றாக இருந்தது. நிலைமையை உள்ளது உள்ளவாறு விளக்கி புத்தகம் எழுதும் வேலை சுனங்கிவிட்டிருப்பதையும் அப்துல் பஹாவிடம் எழுதினேன். பிரச்சினைக்குத் தீர்வாக மிர்சாவுக்கு உணவு தயாரிக்கவும் அவரது தேவைகளை கவனிக்கவும் ஒரு பார்சி உதவியாளன் இருந்தால் நல்லது எனக் கூறினேன். நான் போர்ட் சைட் வழியாக அமெரிக்கா வந்த போது, அங்கு பதினைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அஹ்மத் யஸ்டியின் கடையில் வேலை பார்ப்பதைக் கண்டேன். அவன் பெயர் அஹ்மத்-இ-இஸ்பஃஹானி (பின்னாளில் அவன் தனது பெயரை அஹ்மத் சொஹ்ராப் என மாற்றிக்கொண்டான்) அப்பையன் தன்னை அமெரிக்கா அனுப்பி வைக்கும்படி மாஸ்டர் அவர்களை நான் வேண்டிக் கொள்ள வேண்டும் என விண்ணப்பித்தான். இப்போது அவன் இங்கு வந்து மிர்சா கவனித்துக் கொள்ளலாம் என நான் மாஸ்டரிடம் கூறினேன். மாஸ்டர் அவர்களும் அவன் அமெரிக்கா வந்து மிர்சாவுக்கு சேவை செய்தும் பிறகு அவரோடு வீடு திரும்பலாம் எனவும் கூறினார். ஆனால் 1904-இல் மேக்நட் தம்பதியர், திருமதி ஜூலியா கிரன்டி, மற்றும் ஊட்கொக்களுடனும் அவர்களின் மகளுடனும் – மிர்சா நாடு திரும்பிய போது அஹ்மத்-இ-இஸ்பஃஹானி நாடு திரும்பவில்லை. அவன் மாஸ்டர் அவர்கள் 1912-இல் அமெரிக்கா வரும் வரையிலும் வந்து அவரோடு அவனை கிழக்கிற்கு அழைத்துச் செல்லும் வரையிலும் அவன் அமெரிக்காவிலேயே இருந்தான். அப்போதும் அவனுக்கு நாடு திரும்ப விருப்பமே இல்லை.

எப்படியோ எங்கள் வேலை நடந்தது. எங்கள் வகுப்புகள் தவிர்த்து பொருளகத்திற்கு எதிரே இருந்த பழைய கோர்க்கோரன் கட்டிடத்தில் பஹாய் கூட்டங்களில் சொற்பொழிவாற்றுவோம். மிர்சா பேசும் போது நான் அருகே நிற்க, எழுந்து நின்றே சொற்பொழிவாற்றுவார். அவர் இயல்பாகவே சிறந்த சொற்பொழிவாளர்; மிகுந்த ஆர்வத்துடன் அவர் பேசுவார், அவரு பேசும் விஷயத்திற்குத் தகுந்தவாறு அவரது குரலும் மாறும், சில வேளைகளில் உரக்கவும் இருக்கும். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் என் மொழிபெயர்ப்பு அவர் நினைத்தவாறு சரியாக இருக்கின்றதா, தெளிவாக இருக்கின்றதா; என என் உடல் அசைவுகளிலிருந்தும் அது செவிமடுப்போர்களில் என்ன விளைவினை ஏற்படுத்துகிறது என்பதிலிருந்தும் தெரிந்து கொள்வார். சுமார் ஐந்து நிமிடங்கள் பேசிய பின் நான் அதை மொழி பெயர்த்திட தமது பேச்சை நிறுத்திக் கொள்வார்.

ஒரு சிறமான விஷயத்தை விளக்கிடும் போது, அது மனதில் நன்கு பதிந்திட மீண்டும் மீண்டும் அதே விஷயத்தையே பேசுவார். ஒரு நாள் ஒரு இளம் நம்பிக்கையாளர் மிர்சாவிடம் வந்து, ‘மிர்சா அவர்களே, நாங்கள் திறமைசாலிகள்தாம். நீங்கள ஒரு முறை ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறினால் நாங்கள் அதை கிரகித்துக்கொள்ள முடியும். ஆனால் நேற்று இரவு நீங்கள் பேசியதைப் போன்று அதே விஷயத்தை மீண்டும் மீண்டும் நீங்கள் கூறினால் மக்கள் உங்களையும் எங்களையும் குறை கூறக்கூடும்,’ என்றார். மிர்சா அந்த இளம் பெண்ணுக்கு பனிவுடன் நன்றி கூறினார். ‘இது பேசப்படும் விஷயத்தை மேலும் தெளிவாக்கவே நான் அவ்வாறு செய்தேன்,’ எனக் கூறினார். சரி, இப்போது ஒரு சந்தேகம். நான் நேற்றிரவு எதைப்பற்றி மீண்டும் மீண்டும் கூறினேன்?’ என வினவினார். அந்தப் பெண் சிறிது நேரம் சிந்தித்து விட்டு, ‘எனக்கு ஞாபகமில்லை,’ எனக் கூறினார். ‘அதனால்தான் நான் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கூற வேண்டியுள்ளது,’ என மிர்சாவும் பதிலளித்தார்.

மிர்சா அவர்கள் ஒரு விஷயத்தை ஆழமாக ஆராய்வதில் நிபுணர் — வாதிடுவோரைச் சுற்றி ஒரு சுவற்றை எழுப்பி அவர்களை அதில் சிக்கிக் கொள்ளச் செய்து, ஒன்று தாம் கூறியவற்றை அவர்கள் ஏற்கவோ அல்லது அவர்கள் அறிவிலிகள் என்பதை ஒப்புக் கொள்ளவோ செய்திடுவார். சகல விதமான பண்டிதர்களும் அவருடன் வாதிடுவதை நான் கண்டேன். ஆனால் ஒரு முறை கூட அவர் தோற்றது கிடையாது. கிருஸ்தவ சரித்திரம், ஐரோப்பிய இறையியல் மற்றும் நுன்பொருள் கோட்பாட்டியல், அல்-அஸ்ஹாரில் அவர் பாண்டித்தியம் பெற்ற விஷயங்கள், ஆகியவற்றை அவர் ஆழக் கற்றிருந்தார். ஒரு முறை ஒரு கிருஸ்தவர் அவரிடம் வந்து நபி அவர்களை கடுமையாகச் சாடினார். அதற்கு மிர்சா: ‘முதலாம் நூற்றாண்டின் யூத மற்றும் ரோமானிய சரித்திர ஆசிரியர்கள் ஒருவர் கூட யேசு பிரானைப் பற்றி குறிப்பிடவில்லை எனவும், பலர் யேசு நாதரின் சரித்திரவாய்மைப் பற்றி சந்தேகப்படுவதாகவும் உங்கள் தலைமைத்துவம் கூறுகின்றது. ஜோசப்ஃபஸின் எழுத்துக்களில் ஏசு நாதர் குறித்து சில கிருஸ்தவர்களால் ஏதோ செருகப்பட்டதாகவும், ஆனால் அந்த ஏமாற்று வேலை பின்னாட்களில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் தெரியும். வேறு பலர் முதலாம் நூற்றாண்டிலேயே கிருஸ்தவ சமயம் சீனாவுக்கு பரவியதாகக் கூறும் ஒரு கல்வெட்டை அங்கு புதைத்தனர். ஆனால் அதுவும் ஏமாற்று வேலை என கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இறைத் தூதர் நபியவர்களைப் பொறுத்த மட்டில், அவர் சரித்திரவாய்மை பெற்ற ஏசுவை மட்டும் பிரகடணம செய்யவில்லை, அவரை 30 கோடி மக்கள் ஏற்கவும் செய்தார்; அவர்கள் அவரை ஒரு சரித்திர புருஷராக மட்டும் ஏற்காமல் அவரை இறைவனின் ஆவியாக  (ரூஹுல்லா) ஏற்கவும் செய்தார். இதையெல்லாம் பார்க்கும் போது, நீர் இப்போது சாடிக் கொண்டிருக்கின்றீரே, அந்த முகம்மது அவர்கள் உங்கள் சமயத்திற்கு கிருஸ்தவ சமயப் பிரச்சாரிகளை விட அதிக வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார் என்பது தெளிவாகின்றதல்லவா?
பிரிவினையை ஏற்படுத்தும் எந்த ஒரு உரையாடலையும் மிர்சா ஊக்குவிக்க மாட்டார். ஒரு முறை ஒரு அன்பர் அவரிடம் வந்து வேறொரு அன்பர் சமயத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறினார். மிர்சா அதை கவனத்துடன் கேட்டார். பிறகு தமது பதிலை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்குமாறு என்னிடம் கூறினார். ‘பஹாவுல்லாவே வாக்களிக்கப்பட்ட தெய்வீகப் படையினரின் நாயகர் என்பதை நீர் நம்புகிறீரா?’

‘ஆமாம்’.

‘நல்லது, அவர்தான் நாயகர் என்றார், இவர்கள் அவரது படையினர். அவரது படையினரைப் பற்றி குற்றம் பேசுவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கின்றது?’

மிர்சா அவர்கள் பஹாய் நிரூபணங்கள் எனும் அந்த நூலை எழுதச் செய்வதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒவ்வொரு வரியையும் வாக்கியத்தையும் பக்கத்தையும் அவரிடமிருந்து பறிக்க வேண்டியிருந்ததாகவே எனக்குத் தோன்றியது. அமெரிக்க நண்பர்கள், அது ஏன் நிறைய அறிமுகங்களையே கொண்டுள்ளது என கேட்கின்றனர். கிழக்கத்திய பண்டிதர்களின் மரபு முறை மட்டும் அல்ல இது, மிர்சா அதோடு சேர்த்து மேலும் ஒரு பெரிய நூலை எழுதத் திட்டமிட்டிருந்தார். பொங்கும் அவரது அறிவுடன் ஒப்பிடுகையில், இங்கு நாம் பெற்றிருப்பது சொற்பமே. மாஸ்டர் அவர்கள் மிர்சா அவர்களை நூலை எழுதச் சொல்லியும் என்னை அதை மொழி மாற்றம் செய்யும்படியும் கூறியிருந்தார். மிர்சா அவர்களும், மோசமடைந்து கொண்டே போன அவரது உடல் நலத்தையும் பாராமல், நூலை முடிக்காமல் அமெரிக்காவை விட்டு அகலவே இல்லை. அவர் மிகவும் கவனம் நிறைந்த, நுட்பத் திறமை வாய்ந்தவர். இருந்தும் எழுத்துப் பிழைகள் இல்லாமலும் எந்த எழுத்தையும் அடிக்கமாலும் விரைவாகவே எழுதுவார். அவர் தமது தொடையின் மேல், பாரசீக முறையிலேயே, காகிதத்தை வைத்து நாணல் எழுத்தானி கொண்டு எழுதுவார்.

மிர்சா உண்மயிலேயே ஒரு தெய்வீகப் புலவர். தாம் இகான் நூலை பகுத்தறிவுக் கண்களுடன் 17 முறை படித்ததாகவும், ஆனால் அதன் வார்த்தைகள் அர்த்தமில்லாத வார்த்தைக் கோர்வைகளாகவே அவருக்குத் தென்பட்டதாக என்னிடம் கூறினார். ஆனால் பிறகு அவற்றை ‘பற்றுறுதியுடன்’ படித்த போது கடந்த கால சமய நூல்கள் அனைத்தின்  பூட்டுகளையும் திறக்கக்கூடிய சாவியை அதில் கண்டதாகக் கூறினார். இவ்வித விஷயங்களைப் பற்றி அவர் எழுதியிருந்த ‘பஃராய்ட்’ எனும் நூல் இன்னும் மொழி மாற்றம் செய்யப்பட வில்லை. 1914-இல் மிர்சாவின் மறைவுக்குப் பிறகு வாஷிங்கடன் நம்பிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘அவரது ஆசீர்வதிக்கப்பட்ட இதயம், தகித்திருக்கும் ஒவ்வொருவரின் தாகத்தையும் தீர்க்கவல்ல,
மெய்மையும் குறிப்பிடத்தக்கவையும் நிறைந்த ஊற்றாகும்.’1 நூல் எழுதும் காரியம் மெதுவாகவே நகர்ந்தது எப்போதுமே அவருடையத் தவறாக இருந்ததில்லை. வகுப்புகள்–கூட்டங்கள்–அளவுக்கதிகமான விருந்தினர்கள் சந்திப்பு என நிறைய காரியங்ளை நாங்கள் கவனிக்க வேண்டியிருந்தது. அவரைச் சந்திக்க வருபவர்கள் அவருக்கு பூக்களும் பழங்களும் கொண்டு வந்தால் நிறையவே கோபப்படுவார். ‘இவற்றை இவர்கள் ஏன் எனக்காக கொண்டு வருகின்றனர்?’ எனக் கேட்பார். ‘நான் பஹாவுல்லாவின் அடியார்க்கு அடியான்தானே! எனக் கூறுவார். அவரது இத்தகைய பனிவின் அடிப்படையில் எழும் வார்த்தைகளை நான் மொழி பெயர்க்க மாட்டேன், ஏனெனில் அவற்றை கர்வத்தின் வெளிப்பாடுகள் என விஷயம் அறியாதவர்கள் நினைக்கக்கூடும். நானும் பழம் மற்றும் பூ கொண்டுவந்தவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, மிர்சா கூறியதை ஏன் மொழிபெயர்க்கவில்லை என்பதையும் அவரிடம் விளக்கிவிடுவேன்.

இரயில்களிலும் பொதுவிடங்களிலும் மக்கள் மிர்சாவை கவனிப்பார்கள். அவரும் அவர்களைத் தமது கூர்மையான, ஆழப் பதிந்த, கருமையான கண்களைக் கொண்டு பார்த்து புன்னகைப் புரிவார். எல்லா விஷயங்களையும் மிர்சா நுட்பமாக கவனித்தைப் போன்று கவனித்தவர் எவரையும் நான் கண்டதில்லை. அவர் எப்போது தவறமாட்டார். ஒரு முறை நான் சாமுத்திரிகா லக்ஷனங்கள் மூலம் ஒருவரது இயல்பைக் கண்டறியும் முறையைப் பற்றி லவாட்டர் எனும் ஜெர்மானியர் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். கீய்த் கூட அது ஒரு விஞ்ஞான முறைப்படியான விஷயம் அல்லவென கைவிட்டிருந்தார். அந்த வருடம் எமர்சனைப் போல் தோற்றமளித்த ஒரு முதியவரை கிரீன் ஏக்கரில் கண்டேன்; அவரது கடைவாய் சிறிது உறுதியற்று இருந்தாலும் அவருக்கும் எமர்சனைப் போலவே உயர்ந்த நெற்றியும் நீண்ட நாசியும் இருந்தன. லவாட்டரின் கூற்றுப்படி இவர் ஒரு பெரும் அறிவாளியாகவே இருக்க வேண்டும் என நான் மிர்சாவிடம் கூறினேன். மிர்சா என்னைப் பார்த்து புன்னகைத்து, ‘ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கக்கூடிய ஞானம் கூட இவருக்கு இல்லையே,’ என்றார். ‘உங்களுக்கு எப்படித் தெரியும்?’ ‘நானும் சாமுத்திரிகா லக்ஷனம் படித்துள்ளேன்,’ என்றார். ‘இருந்தாலும் என் சாமுத்திரிகா லக்ஷனம் பற்றிய எனது அறிவுக்கு இவர் கூர்மையான அறிவும் ஞானமும் பெற்றவராகவே இருக்கவேண்டும்,’ என நான் கூறினேன். அடுத்த நாள் காலை, எங்கள் வகுப்பிற்கு பிறகு அந்த மனிதர் ஒரு கேள்வி கேட்டார். அக்கேள்வியிலிருந்தே அவரது ஞானம் துல்லியமாக வெளிப்படையாகி, அவர் குறைந்த அறிவு படைத்தவரே என்பதும் தெரிந்தது.

அமெரிக்காவில் நமது சமயத்திற்கு மிர்சா என்ன செய்துள்ளார் என்பதை எதிர்காலம் தீர்மாணிக்கவேண்டும். எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியையே நான் இங்கு வெளிப்படுத்தியுள்ளேன்; எவருமே அறியாத அவரது பயணங்களின் ஒரு சில பகுதிகளையே நான் எழுத்தில் வடித்துள்ளேன். மிர்சா அவர்கள் நாடு திரும்பியதும், அவர் விட்டுச் சென்ற காரியங்களை நான் தொடர வேண்டும் என மாஸ்டர் அவர்களின் கட்டளையினால் நான் எப்படி கதிகலங்கிப் போனேன் என்பதை எதிர்காலத்திலேயே மக்கள் உணர முடியும்.

அவர் மறைந்து பல காலங்கள் ஆகிவிட்டன. அப்துல் பஹாவும் நம்பிக்கையாளர்களும் அவரது மறைவினால் துக்கித்தனர். ஆனால் நான் அவரைக் காண்கின்றேன், அவர் இங்கு என் முன் இருப்பது போலவே தோன்றுகிறது. நல்ல உயரம், மெலிந்த தேகம், வெள்ளைத் தலைப்பாகை, இளம் பழுப்பு வண்ணத்தில் உடை. கலைத்திறன் மிகுந்த உணர்வுமிக்க ஆனால் அதே வேளை அறிவுத் திறனும்  ஆக்கமும் மிகுந்த அழகிய கரங்கள். உயர்ந்த நெற்றி, அசாதாரணமாக உயர்ந்திருந்த கண்ண எலும்பு, துறவியின் பார்வை, ரோஜா வாசனை.  மற்றும் அந்த சிறிய மிகக் கருமையான, கூர்ந்த கண்கள்.

ஆமாம், ஆனால் அவரது உண்மையான உயர்வைக் காண வேண்டுமென்றால் அவரை அப்துல் பஹாவின் முன்னிலையில்தான் பார்க்க வேண்டும். அந்த முன்னிலையில், அங்கு மிர்சாவின் அறிவு அவரை ஒன்றுமில்லா நிலைக்கு கொண்டு சென்றுவிடும். பரந்த சமுத்திரத்தின் கரைகளிலே அங்கு அவரை ஒரு சிறு கூழாங்கல்லாகவே காண்போம்.