நெறிமுறைகளை வளர்த்துக்கொள்வது


நெறிமுறைகள் என்றால் என்ன?

நெறிமுறைகள் என்பன ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது பின்பற்றப்படும் நன்நடத்தை முறைகளாகும். உதாரணமாக நீதி, நியாயம், நேர்மை ஆகியனவற்றை கூறலாம். நெறிமுறைகள் பொதுவாகவே வாழ்வில் ஒருவருடைய நன்நடத்தைக்குத் தோற்றுவாய்களாக விளங்கக்கூடியவைதான். ஆனாலும் ஒருவர் நல்ல நடத்தையுள்ளவர் என்பதால் அவர் நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்கிறார் என்று கூறிட முடியாது. காரணம், அவர் பழக்க தோஷத்தினால் அவ்வாறு வாழ்ந்துவரலாம். உதாரணமாக, சிறு வயதிலிருந்தே பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் பழக்கத்தை ஒரு குழந்தைக்குக் கற்றுக்கொடுத்தும் அக்குழந்தை அதைக் கடைப்பிடித்தும் வருகிறது என வைத்துக்கொள்வோம். அக்குழந்தை அதை தான் செய்யக்கூடிய சில செயல்களின் மூலம் வெளிப்படுத்தும். ஆனால் தான் புரியும் அச்செயலின் மதிப்பு அக்குழந்தைக்குத் தெரியுமா? தாயின் கட்டுப்பாடே இங்கு அக்குழந்தையின் நடத்தையை வரையறுக்கின்றது. இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம் யாதெனில் நல்ல நடத்தையாகப்பட்டது கருவி அளவில் மட்டுமே செயல்படுகிறது. எக்கருவியாயினும் அதைத் தூய்மையான குறிக்கோளுடனோ தூய்மையற்ற குறிக்கோளுடனோ பயன்படுத்தலாம். உதாரணமாக, ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதர் பெரிதும் உதவி அவரிடம் அன்பு காட்டுகிறார் என வைத்துக்கொள்வோம். இது பார்ப்பதற்கு மனதுக்கு இதமாக இருக்கின்றது. ஆனால் அந்த முன்சொன்ன மனிதர் பெரும் பணக்காரர் என்றும் அவரால் அந்த மற்ற மனிதருக்கு நிறைய காரியங்கள் ஆக வேண்டியுள்ளது என்பதும் புரிய வந்தால் அது மனதுக்கு சந்தோஷம் அளிப்பதாக இருக்காது.

அதாவது நல்ல நடத்தையென்பது நடத்தையை மட்டும் சார்ந்த ஒன்றல்ல ஆனால்  அது நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும் அல்லது அமைக்கப்பட வேண்டும். தொடர்ந்து மற்றொரு பிரச்சினை யாதெனில், நெறிமுறைகளைப் பற்றி அறிந்திருந்தால் மட்டும் போதாது, மனித வாழ்வில் அவற்றின் பங்கு என்ன என்பதையும் நாம் புரிந்து வைத்திருப்பது நலம். நாம் எந்தக் குறிக்கோளை அடைவதற்காக நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

வெற்வேறு சமூகங்கள் வெவ்வேறுவிதமான நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்கின்றன. ஒரு சமூகத்திற்குச் சரியெனப்பட்டது மற்றொரு சமூகத்திற்கு ஏற்புடையதாகாது. கடந்த காலங்களில் சந்திக்காத ஒரு புதிய சவாலாக ஓரின சமூகத்தில் வாழ்ந்திருந்த மனிதர்கள் அனைவரும் இன்று பன்முகமான சமூகங்களில் வசிக்கின்றோம். ஒரே இனமாக ஒரேவிதமான நெறிமுறைகளுக்கிணங்க வாழ்ந்த சமூகங்கள் ஒன்றுகலந்து இன்று ஒருமுகப்படுத்தப்படவேண்டிய நெறிமுறைகளுக்கிணங்க வாழ வேண்டியுள்ளது. இதற்கு உதாரணமாக, அக்கம்பக்கத்து நாடுகளென சில நாடுகளை எடுத்துக்கொள்வோம். இந்த நாடுகளுக்கெல்லாம் இடையில் உள்ள ஏதோ ஓர் ஊருக்கு இந்த எல்லா நாடுகளையும் சார்ந்தவர்கள் போகவேண்டும். அவரவர் நாடுகளின் வரைபடங்களை வைத்துக்கொண்டு அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊருக்குச் செல்லலாம். ஆனால் சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிலிருந்து அவரவர் பூர்வீக நாட்டு வரைபடங்களை வைத்துக்கொண்டு தாங்கள் எல்லாரும் பொதுவாக போக வேண்டிய ஊருக்குச் செல்ல முடியாது. இது போன்றுதான் இன்று உலகமும் இருக்கின்றது. எல்லாம் கலந்து ஒரே நாடாக கட்சியளிக்கும் இவ்வுலகில் எனது உனதென்று நாம் நெறிமுறைகளை வைத்துக்கொண்டிருக்க முடியாது. எல்லா மக்களையும் இனங்களையும் உள்ளடக்கக்கூடிய நெறிகளை நாம் கடைபிடித்தாக வேண்டும். எல்லோரையும் சமமாக மதிப்பதும் ஒரு நன்னடத்தையே. அப்படி சமமாக மதிக்கவேண்டுமானால் சமமான நடத்தை முறைகள் வேண்டும்.

இன்றைய உலகில் நல்ல மனிதர்கள் பலர் இருக்கின்றனர்தாம். ஆனால், அவர்கள் ஊர் போய்ச் சேர்வார்கள் என நாம் உறுதியாக கூறமுடியாது. எவ்வளவுதான் நல்ல மனிதராயினும் தவறான ஒரு வரைபடத்தை வைத்துக்கொண்டு தான் செல்லவேண்டிய இடத்திற்கு அவர் செல்ல முடியாது. வாழ்க்கைக்கு நோக்கமும் வேண்டும் அதைச் செயல்படுத்தக்கூடியவையான நன்நெறிமுறைகளும் வேண்டும்.

நெறிமுறைகளுக்கான ஆதாரம் யாது

நன்கு ஆய்வு செய்தோமானால் நெறிமுறைகள் என்பவற்றுக்குப் பொதுவாக சமயங்களே தோற்றுவாய்களாக இருந்துவந்துள்ளன இருந்து கொண்டும் இருக்கின்றன என்பது புரியவரும். சுறுக்கமாக சொல்லப்போனால் சமயபோதனைகளுக்கிணங்க வாழ்வின் மெய்ப்பயனை அடைவதற்கான கருவிகளே நெறிமுறைகளாகும். இது சர்ச்சைக்குரிய விஷயமாக எடுத்துக்கொள்ளப்படாமல் ஆய்வுக்குரிய விஷயமாகக்கொள்ளப்படவேண்டும்.

தனிநபர் வாழ்க்கையில் நெறிமுறைகளின் மதிப்பென்ன?

நாம் ஏற்கணவே கூறியது போல் நெறிமுறைகளின் மதிப்பு பிறவிப் பயனை அடைவதிலேயே இருக்கின்றது. நெறிமுறைகள் இல்லாமல் வாழ்வின் உண்மையான நோக்கம் நிறைவேறாது. அப்படியானால் வாழ்வின் நோக்கம் என்ன? பஹாய் சமய ஸ்தாபகரான பஹாவுல்லா ஒரு பிரார்த்தனையில் பின்வருமாறு கூறுகின்றார்:

“உம்மை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி…”

அதாவது, இறைவனை அறிந்து அவரை வழிபடுவதே வாழ்வின் பிரதான நோக்கம். இந்த நோக்கத்துக்கு உகந்த கருவிகளாக நெறிமுறைகள் விளங்குகின்றன. இங்கு இறைவனை அறிந்துகொள்வதென்பது மனிதகுலத்திற்கான இறைவனின் நோக்கத்தை அறிந்துகொள்வதும், இறைவனை வழிபடுவதென்பது இறைவன் மனிதனுக்காக கொண்டுள்ள நோக்கத்தை அறிந்து அதற்கிணங்க வாழ்வதுமேயாகும்.

அதே வேளை சமூக வாழ்வும் ஒழுங்கில்லாத நிலையில் இருக்கும் போது அது நல்லவர்களோடு சேர்த்து ஒழுக்கக்கேடானவர்களையும் காலப்போக்கில் பாதிக்கின்றது. இதற்கு உதாரணமான சாலைப்போக்குவரத்தை குறிப்பிடலாம். இப்படித்தான் வாகனமோட்டுவேன் என ஒருவர் எப்படி வேண்டுமானால் தன் வாகனத்தை ஓட்டலாம். ஆனால் அதனால் அவர் மட்டும் பாதிக்கப்படப்போவதில்லை என்பது நிச்சயம்.

நெறிமுறைகளுக்கிணங்க வாழ்வதற்கான ஊக்கம் யாது?

மனித வாழ்க்கையென்பது இவ்வுலக வாய்ப்புக்களும் மாற்றங்களும் மட்டும் இல்லையென்றும் இவ்வுலகம் தவிர்த்து இறைவனின் வேறு உலகங்களும் உண்டெனவும் அங்கு மனிதன் தொடர்ந்து வாழப்போகிறான் என்பதையும் உணர்வது மிகவும் முக்கியம். அத்தகைய வாழ்வு இவ்வுலக வாழ்வில் நாம் கடைபிடிக்கப்போகும் நெறிமுறைகளின் நல்விளைவுகளுக்கு உட்பட்டதாகும். அதாவது இவ்வுலகில் வாழ்வதற்கு நமக்கு உடலும் அதைச் சேர்ந்த அவயங்களும் மிகவும் அவசியம். கைகால்கள் இல்லையெனில் வாழ்க்கை பெரிதும் துன்பமாகிவிடும். நிறைய காரியங்களை நம்மால் செய்ய இயலாது போகும். அதே போல் அடுத்த உலகங்களில் நாம் வாழப்போகும் வாழ்க்கைக்கு இவ்வுலகிற்குத் தேவைப்படும் கைகால்கள் போன்றுள்ள வேறு பல ஆற்றல்கள் அவசியமாகின்றன. அச்சக்திகள் இல்லாமல் அவ்வுல வாழ்க்கை  நரகமாகிவிடும். நித்தியமான அவ்வுலக வாழ்வு அநித்தியமான இவ்வுலகில் நாம் கடைபிடிக்கப்போகும் நெறிமுறைகளையே பெரிதும் நம்பியுள்ளது. ஆக இவ்விஷயமே நம்மை ஓர் ஒழுங்குடனான வாழ்க்கை வாழ்வதற்குத் தூண்டுகோளாக இருக்கவேண்டும்.

நெறிமுறைகளுக்கிணங்க வாழ்வதின் சவால்கள்

நெறிமுறைகளின் முக்கியத்துவம் நமக்கு இப்போது தெரிந்துள்ளது. அவற்றை வாழ்க்கையில் கடைபிடிப்பதன் அவசியமும் தெரிந்துள்ளது. ஆக, நாம் அதற்கிணங்க வாழ வேண்டும். அப்படி வாயால் கூறுவது மிகவும் சுலபம். ஆனால், அதைக் கடைப்பிடிப்பதினும் சிரமமான காரியம் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை. இதை நாம் எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடக்கூடாது. இங்கு மற்றொரு சிந்தனைக்குகந்த விஷயமென்னவெனில், நெறிமுறைகளுக்குட்பட்ட வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய சவால்கள் மனித உறவு சம்பந்தமான சவால்களே. அதாவது மனிதர்களுக்கிடையிலான தொடர்பின் வசமாக ஏற்படும் சவால்கள். இது குடும்பம், சமூகம், தொழில்,  இளைஞர் சம்பந்தமான விஷயங்கள் போன்ற ரீதியில் ஏற்படக்கூடும்.

குடும்பம்

குடும்ப ரீதியில் நெறிமுறை சம்பந்தமான சவால்கள்  யாவை? இது கனவன் மனைவிக்கிடையில் உருவாகலாம், அல்லது பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமிடையில் ஏற்படலாம், அல்லது சகோதர சகோதரிகளுக்கிடையிலும் ஏற்படலாம். இங்கு உருவாகும் சவால்களே சமூகத்தையும் தாக்குகின்றன, ஏனெனில் சமூகமென்பது குடும்பங்களின் சேர்க்கையினால் உருவாவதுதானே.

கனவன் – தான் மனைவியை விட ஒருபடி உயர்ந்தவன் எனும் பண்டைய போக்கைக் கைவிடமுடியாமல் இருப்பது. ஆணும் பெண்ணும் சமம் எனும் கோட்பாட்டை கடைப்பிடிக்க முடியாமல் பெண்னை அடக்கியாண்டே பழக்கப்பட்டுப்போன ஆண்களுக்கு ஏற்படும் சவால்.

குழந்தைகள் தங்களுடைய பிரத்தியேக சொத்துக்கள் எனும் எண்ணம் கொண்ட பெற்றோர்கள் எதிர்நோக்கும சவால். குழந்தைகள் இறைவன் தங்களுக்குக் கொடுத்த வரம் மட்டுமல்லாமல் அவர்களுக்கு தாங்கள் காப்பாளர்கள் மட்டுமே எனும் எண்ணமின்றி அவர்களை தங்கள் இஷ்டத்திற்கு வளர்த்து ஆளாக்குவது. அவர்கள் வயது வந்த பிறகும் அவர்களுக்கென தனி வாழ்க்கை ஒன்று உள்ளதெனும் எண்ணம் இல்லாமலிருப்பது.

பெற்றோர் குழுந்தைகளுக்கு உதாரணமாக நடக்காமல் இருத்தல். குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்படு ஒன்று ஆனால் தாங்கள் கடைபிடிப்பது வேறொன்று. “அதாவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை” எனும் பழமொழிக்கிணங்க வாழ்வது.
ஆக, சொந்தக் குடும்பமாக இருந்தபோதிலும் அதுவும் சவால்கள் நிறைந்ததே. கனவன் அல்லது தகப்பன் மட்டுமே அக்குடும்பத்துக்காக பாடுபடும் போது தான் சம்பாதிக்கும் பணம் அக்குடும்பத்தின் பொது உரிமை எனும் எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்வதும் ஒரு சவாலே.

சமூகம்

சமூக ரீதியிலான சவால்கள் மனித உறவுக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே ஏற்படுகின்றன. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் மொழிக்கிணங்க எல்லாரையும் சகோதரர்களாக பாவிக்கின்றோமா? சமூகம் நமது தன்னலங்களை பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய ஓர் அரங்கமாக காணப்படுகிறதா? அதிலிருந்து நாம் என்ன ஆதாயத்தைப் பெறப்போகிறோம் எனும் எண்ணம் நம்மில் இருக்கின்றதா? இவற்றையெல்லாம் ஆழச் சிந்திக்க வேண்டும்.

தொழில்

வியாபார ரீதியில் நிறைய பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் நெறிமுறையா பணமா எனும் சவாலைச் சந்திப்பது. தொழில் ரீதியில் தான் மற்றவர்களைவிட எப்போது உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும் எனும் அவா. உத்தியோக ரீதியில் வேலை உயர்வு அல்லது உழைக்காமலேயே சம்பளம் வாங்குவது போன்ற சவால்கள்.

இளைஞர்

இளைஞர் பிரச்சினைகள் எனப் பார்க்கும் போது இது பெரும்பாலும் சினேகித தாக்கத்தினால் வரும். உதாரணமாக மற்றவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக சில கெட்ட பழக்கங்களை பின்பற்றுவது போன்றவை இதில் அடங்கும். இளமை பருவம் மிகவும் ஆபத்தான பருவமாகும். நல்லது கெட்டது என எதையும் சீர்தூக்கிப் பார்க்குமளவிற்கு நிதானம் இல்லாத மிகவும் விருவிருப்பான பருவம். உடலில் ஏற்படும் பௌதீக மாற்றங்கள் இங்கு மனதையும் பாதிக்கின்றது. அதைப் புரிந்து நெறிமுறைகளுக்கிணங்க வாழ்வது ஒரு சவால்.

இச்சவால்களை எப்படி வெற்றிகொள்வது

பொதுவாக எல்லாருமே நெறிமுறைகள் குறித்து ஓரளவிற்கு அறிந்து வைத்திருப்பார்கள். தெரியாது என யாருமே கூற முடியாது. அப்படி தெரியாவிட்டாலும் பாதகமில்லை, வாழ்க்கையின் நோக்கம் அறிந்து அதற்குகந்த நன்னடத்தையுடன் வாழ வேண்டும் எனும் ஆழமான அவா மனதில் பதிந்திருக்கவேண்டும். இது முதல் படியாகும். அதாவது மனத் தூய்மையோடு ஒரு காரியத்தில் இறங்குவது.

அடுத்து, அரைக்க அரைக்க அம்மியும் நகரும் என்பார்கள். அதே போல் நமது பழக்க வழக்கங்களையும் சிறுகச் சிறுகவே மாற்றிக்கொள்ள முடியும். ஒரேயடியாக மாற்ற முடியாது. பழக்கங்கள் தாமாக மாறாது. அதற்கு முயற்சியும் தியாகம் செய்யும் குணமும் தேவை. இதில் விடாப்பிடியாக இருந்தோமானால் காலப்போக்கில் நிச்சயமாக வெற்றி காணலாம். ஆர்த்தர் பேரரசன் 16 முறை போர் தொடுத்து போரில் வென்றானாம். அதுவும் ஓர் எட்டுக்கால் பூச்சியின் முயற்சியைக் கண்டு. எதிலுமே நாம் கற்கும் மனப்பான்மையை பின்பற்ற வேண்டும்.

ரித்வான் 2009 செய்தி மீதிலான சிந்தனைகள்


ரித்வான் 2009 செய்தி மீதிலான சிந்தனைகள்
டாக்டர் பீட்டர் கான் வழங்கிய உரை
3 ஜூலை 2009

ரித்வான் செய்தி

முக்கியமானதும், நீண்டகாலத்திற்கு அவசியமானதுமான ரித்வான் 2009 செய்தி எனும் செய்தி பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மகிழ்ச்சியடைகின்றேன். உங்களுக்குத் தெரிந்திருப்பதைப் போல, அச்செய்தியானது உலக நீதிமன்றத்தின் பல்வேறு செய்திகளிடையே தனது சுருக்கத்திலும், தனது உள்ளீட்டிலும் தனித்தன்மை வாய்ந்ததொரு செய்தியாகும். முன்பு எப்போதுமில்லாத அளவுக்கு ஒரு சிறப்பான நிகழ்வு பற்றி, மேலும் சொல்லப் போனால், உண்மையில் மானிட உலகம் முழுவதிலும் சமய வரலாறு பற்றி அச்செய்தி மிகக் கடுமையாக எடுத்துரைக்கின்றது; அது யாதெனில், உலக நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்பவும், அனைத்துலக போதனை நிலையத்தின் உறுப்பினர்களுடைய விலைமதிப்பில்லா துணையுடனும் உலகம் முழுவதிலும் நடைபெற்று முடிந்த, சுமார் எண்பதாயிரம் மக்கள் பங்கேற்ற 41 வட்டார மாநாடுகள்தான் அது.

உங்களுக்குத் தெரிந்திருப்பதைப் போல, அத்தொடர்ச்சியான மாநாடுகளை உலக முழுவதிலுமுள்ள பஹாய் சமூகத்தின் மீதும், இறுதியாக பொது சமுதாயத்தின் மீதும் ஓர் ஒன்றிணைக்கவல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நமது சமயம் உலகம் முழுவதும் படர்ந்திருக்கின்றது என்பதற்கு அது வெளிப்படையான ஒரு சித்தரிப்பாகும். அத்துடன், அவ்வட்டார மாநாடுகள், தற்போதைய திட்டத்தின் இறுதிக்குள் உலகம் முழுவதிலும் 1,500 தீவிர வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிட வேண்டும் எனும் குறிக்கோளுக்கு ஒரு சாதகமான எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வருடத்திய ரித்வான் பண்டிகை கொண்டாட்ட உணர்வு கொண்டது என கருதப்படலாம்: அதாவது, ரித்வான் 2009க்குள் உலகம் முழுவதிலும் 1,000 தீவிர வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தியிருப்பதற்கான கொண்டாட்டம் என்பதுடன், அதன் அடிப்படையில் பார்த்தால், ஐந்து வருடத் திட்டத்தின் இலட்சியம் நிச்சயம் நிறைவேற்றம் காணும் எனும் உலக நீதிமன்றத்தின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு தெரிகின்றது.

இன்றிரவு நான் பேசப்போவது அத்தகைய விவரங்கள் அல்ல. ஆனால், நான் பேசப்போவது, அந்த செய்தியினுள் புதைந்திருக்கும் இரண்டு முக்கியமான பிரச்சனைகள் பற்றிதான். அந்த இரண்டு அம்சங்களை ஆய்வு செய்வதானது, இந்த ரித்வான் செய்தியை ஆழமாகக் கற்பதற்கும், சமயம் போய்க் கொண்டிருக்கும் போக்கை நன்கு புரிந்து கொள்வதற்கும் அவசியமானதாக இருக்கும்.

நான் பேசப்போகும் அந்த இரண்டு அம்சங்கள், முதலாவதாக, உலகின் சரித்திரத்தில் தற்போதைய பஹாய் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை முதலில் ஆய்வு செய்திடும். இரண்டாவதாக, சமயத்தில் மாற்றம் குறித்த ஒரு மனப்பாங்கினையும் ஆய்வு செய்திடும்.

பஹாய் நடவடிக்கையின் முக்கியத்துவம்

வீழ்ச்சி எனும் செயல்பாடு

இன்றைய உலகில் இரண்டு செயல்பாடுகள் இயங்கிக் கொண்டு வருகின்றன என்பது மக்களால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றுதான் நான் நினைக்கின்றேன். அவற்றில் ஒன்று, வாழ்க்கையின் தரத்தில் வீழ்ச்சி எனும் செயல்பாடு. மற்றது, உரிமைகளை இழந்துள்ள சிறுபான்மை மக்களின் விடுதலை, அனைத்துலகத் தன்மை வாயிலாக ஓர் உலகளாவிய இயல்புநிலை, பயனளிக்கும் காரியங்களில் தொழில்நுட்ப பயனீடு ஆகியவை உட்பட சாதகப்பூர்வமான அம்சங்களில் வளர்ச்சி. இந்த இரண்டு செயல்பாடுகள் இருந்து வருகின்றன என்பதை அங்கீகரிப்பதானது, பல வருடங்களாக மானிடத்தின் குணவியல்பாக இருந்து வந்துள்ளது என்று பொருள்படாது. 20ம் நூற்றாண்டின் சரித்திரத்தை நாம் ஆய்வு செய்வோமாகில், அந்நூற்றாண்டில் அளவுக்கதிகமான மகிழ்ச்சி நிரம்பிய காலங்களும் இருந்துள்ளன என்பது தெரிய வரும். அந்த மகிழ்ச்சி நிரம்பிய காலங்கள் பிரபல அரசியல் தலைவரைத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டதைப் போன்றதாகவும் இருக்கலாம் அல்லது 1989ம் ஆண்டு பெர்லின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டதைப் போன்று எல்லையற்ற வாக்குறுதியைக் கொண்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைந்திருக்கலாம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நெருக்கடிமிக்க கடும் பிரச்சனைகள் வந்திருப்பதன் காரணமாக நடப்புக்கள் அவ்வளவு சுமூகமாக இல்லை என பொதுப்படையாக மனிதர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர் என்றுதான் எனக்குத் தோன்றுகின்றனர்.

உலக நடப்பு குறித்து சாதாரண பார்வையாளர் ஒருவரிடம் நீங்கள் கேட்பீர்களாயின், அவர், “வீழ்ச்சி, உயர்ச்சி என இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன,” என பதிலளிப்பார்.

இந்தத் தலைப்புப் பற்றி நமது பஹாய் போதனைகளில் நிச்சயமாக நிறையவே எழுதப்பட்டுள்ளது. ஆனால், இப்போது நமது கருத்து அதுவல்ல. இந்த வீழ்ச்சி எனும் செயல்பாடு குறித்து மக்களிடையே எழுந்த உணர்வலைகள் பல வடிவங்களில் வெளிப்பட்டு வருகின்றன. இப்பிரச்சனை தற்காலிகமானது என்றும், விரைவில் அது சீர்பட்டு விடும் என்றும் பெரும்பான்மையான மக்கள் எண்ணுகின்றனர். “இந்த நெருக்கடி வந்த பிறகு பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் அல்லது மற்ற நாடுகளிலும் விவகாரங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. ஆனால், சில அதிர்ஷ்ட நிலையுடன் நிலைமை வழக்க நிலைக்குத் திரும்பும், அமைதிமிக்க சமுதாயமாக நாம் திரும்பவும் மாறுவோம்,” என்றுதான் பலர் நினைக்கின்றனர்.

ஆகவே, இந்த வீழ்ச்சி தற்காலிகமானதே எனும் ஒரு பொதுவான எதிர்பார்ப்பு நிலவுகின்றது. உலகளாவிய நிலையில் அவ்வீழ்சியின் அகலம் எடைபோட்டுப் பார்க்கப்படவில்லை. அதன் இறுதியான கடுமை ஏற்கப்படவுமில்லலை. அந்த வீழ்ச்சியிக்கான அடிப்படை காரணங்களைப் பற்றி உலகளாவிய நிலையில் ஓர் அறியாமை நிலவி வருகின்றது. அதற்கு மாறாக, அவ்வீழ்சிக்குக் காரணம் சில மாற்றங்களின் அறிகுறிகளே என கருதப்பட்டு வருகின்றது: அதவாது, அரசியல் மாற்றங்கள், கல்வியின் மேம்பாடு, சில சிறுபான்மை மக்களின் சுய கட்டுப்பாடின்மை, பெண்களின் சுதந்திரம் ஆகியவை அந்த மாற்றங்களாகக் கருதப்படுகின்றன. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக ஒரு திடீர் நிவாரணம் ஏற்பட்டு அப்பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து, கவலையெனும் மேகங்களைக் கலைத்து விட்டு, அதனால் மானிடமானது தனது வருங்காலத்தை நோக்கி அமைதியுடனும், இணக்கமாகவும் பணம் செய்திடும் என பெரும்பான்மையாக மக்கள் நம்பிக்கையுடன் கருதுகின்றனர்.

இவ்வாறான மனபோக்குகளை நாம் பஹாய் திருவாசகங்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது என நினைக்கின்றேன். ஏனெனில், பஹாய்கள் எனும் முறையில் நாம் சந்திக்கும் சவால் யாதெனில், அறியாத நிலையில் பொது சமுதாயத்தின் இத்தகைய மனப்போக்குகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர்க்கும் சவாலாகும். அதற்கு மாறாக, நாம் அதிகாரப்பூர்வமான பஹாய் வாசகங்களின் அடிப்படையில் இப்பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்த நமது மனக்கருத்துகளை உருவாக்கிக் கெள்ள வேண்டும். இந்த அதிகாரப்பூர்வமான பஹாய் வாசகங்கள் பொது சமுதாயத்தில் தற்போது பரவியுள்ள கருத்திலிருந்து முற்றாக மாறுபட்டவையாகும். இத்தலைப்பு மீது பாதுகாவலர் எழுதியுள்ள சில பகுதிகளை நான் உங்களுடைன் பகிர்ந்து கொள்கின்றேன். பஹாவுல்லாவினுடைய சமயத்தின் பரந்தளவிலான பரப்பெல்லையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது பாதுகாவலர் பின் வருமாறு கூறுகின்றார்:

“அத்தகைதோர் அதி உன்னத உதவி வெளிப்படுவதற்கு, தீவிர குழப்பநிலை கொண்ட காலமும், பரந்தளவிலான துயரமும் தவிர்க்கவியலாததாக இருந்திடும்..1”

இன்னோரிடத்தில் அவர் சொல்வதாவது:

“ஏற்கனவே உலகினைச் சூழ்ந்துள்ள இருளைப் போலவே, உலகம் அனுபவிக்க வேண்டிய வேதனைமிக்க துயரங்கள் இன்னும் தயாரிப்பு நிலையிலேயே இருக்கின்றன.அதன் கருமைத்தன்மை இன்னமும் கற்பனை செய்து பார்க்கப்படாமலேயே இருக்கின்றது..”

சமயத்தினுடைய அதிகாரப்பூர்வமான வாசசகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இன்னுமொரு வாசகப் பகுதி மிக விவரமான வாசகப் பகுதியாகும். அது இக்கூட்டத்தினரை கவலையுறச் செய்யக்கூடும். வருங்ாகலத்தைப் பற்றி ஷோகி எஃபெண்டி விவரமாகக் குறிப்பிட்டு பகுதி இது:

“திவ்விய உண்மைகளையும், கோட்பாடுகளையும் ஏற்கவும், கடைப்பிடிக்கவும் மறுத்தொதுக்கி மாசுபடுத்திய கவனக்குறைவான மானிடத்தின் ஆன்மாவின் மீது, கற்பனை செய்து பார்க்க முடியாத பேரச்சத்தைக் கொடுத்திடும் இன்னல்களும், நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடிகளும், புரட்சிகளும், போர்களும், பஞ்சமும், கொடிய நோய்களும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து தாக்கி வரும். மானிடம் இது வரை அனுபவித்திடாத முடக்க நிலை அதனைப் பீடித்து, ஏற்கனவே சீர்குலைந்து போன சமுதாயத்தை, அச்சமுதாயம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு, மறுமலர்ச்சியடையச் செய்யப்படுவதற்கு முன்னதாக மேலும் துன்புறுத்திடும் .”

இவ்வாசகத்தில் காணப்படும் “சீர்குலைந்து போன சமுதாயம்” எனும் சொற்றொடர் இவ்வருடத்திய ரித்வான் செய்தியில் “சீர்குலைந்து போன உலகம்” என எதிரொலிக்கின்றது. நமது வாசகப் பகுதிகள் எதிர்பார்ப்பது போலவே, உலகின் வீழ்ச்சி எனும் செயல்பாடு நெடு நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து நடைபெற்று வரும். காலவரை எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அது பல ஆண்டுகாளக இருக்கக்கூடும் அல்லது பல நூற்றுணாடுகளாகவும் இருக்கக்கூடும். அத்துயர்மிகுந்த காலத்தில், சமுதாயத்தின் சீர்குலைவும், மனிதகுலத்தைத் தாக்கிடும் இன்னல்களும் தற்போது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு நெடு நீண்டகாலம் நீடிக்கவல்லதாகவும், மாபெரும் பரப்பெல்லையைக் கொண்டதாகவும் இருக்கும். அத்தொல்லைகள் தொடர்ந்திடும்போது, நம்மைச் சுற்றியுள்ள மக்களிடமிருந்து பல்வேறான உணர்வகளை நாம் எதிர்பார்க்கலாம்.

அவர்களுடைய முதல் வேலை மறுப்பு தெரிவிப்பதாகும்: “நீங்கள் கூறுவது போல நிலைமை அப்படியொன்றும் மோசமாக இல்லை. ஜெரெமியா போன்று நீங்கள் நடந்து கொள்கின்றீர்கள். நிலைமை மேம்பட்டு வருகின்றது.”

அம்மாதிரி மறுப்பு தெரிவிக்கும்போது, அப்பிரச்சனைக்கு எவரையாவது பலி கடாவாக இரையாக்க ஆள் தேடப்படும். குறிப்பாக அந்த பலி கடா, ஒரு சிறுபான்மை சமூகத்தவராக இருக்கலாம், அல்லது வட அயர்லாந்தைப் பாதித்துக் கொண்டிருக்கும் அங்குள்ள குறவர்களாக இருக்கலாம், மத்திய கிழக்கிலுள்ள யூத மக்களாக இருக்கலாம் அல்லது உலகின் வேறெங்கிலுமுள்ள மற்ற மக்களாகவும் இருக்கலாம். கல்வியின் படர்க்கை ஒரு கவர்ச்சிகரமான வில்லனாக சித்தரிக்கப்படும். “மக்கள் பள்ளிக்குச் சென்று சில பைத்தியக்காரத்தனமான கருத்துகளைக் கற்றுக் கொண்டு வந்து சமுதாயத்திற்குத் தொல்லை கொடுக்கின்றனர்.”

பெண் விடுதலைப் பற்றிய பேச்சு இன்னொரு கவர்ச்சிகரமான பலிகடாவாக இருக்கின்றது. “பெண்களை வீட்டில் தங்கி பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டால், ஆண்களுக்கு நிறைய வேலைகள் காலியாக இருக்கும். சட்டர்டே ஈவினிங் போஸட் எனும் பத்திரிகையில் 1940ம், 50ம் ஆண்டுகளில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இருந்த அமைதியான நிலைமை மீண்டும் திரும்பும்.” இப்பிரச்சனைக்கு ஒரு தீர்க்கமான தீர்வை தேடும்பொழுது இவ்வாறான மனநிலை நிச்சயமற்ற ஒரு நிலைமையை ஏற்படுத்தி விடும் என்று நான் நினைக்கின்றேன்:”ஏதோ ஒன்று மிக மோசமான நிலையில் தவறாக இருக்கின்றது. அதற்கான பதில் என்ன என்பதை நாம் கண்டாக வேண்டும். அது இதுவா? அதுவா?” அதற்காக ஒரு தீவிர நிவாரணம் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிறகு கைவிடப்படும். அதன் சில அறிகுறிகளை பல நாடுகளின் அரசியல் அரங்குகளில் நாம் இன்று காண்கின்றோம். அதவாது, தீவிர இடதுசாரி நிலையிலிருந்து வலதுசாரி நிலைக்கு தேர்தல் முடிவுகள் திரும்புகின்றன. ஒவ்வொரு நபரும் தேர்ந்தெடுக்கப்படும்போது, மக்கள் குழப்பமடைகின்றனர். சில வேளைகளில், நேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நபரின் பதவிகாலம் முடியும் முன்னரே அவர் வெளியேற்றப்படுகின்றார். மற்ற வேளைகளில், அவ்வாறான நபருக்குப் பதிலாக, அவருக்கு முற்றிலும் நேரெதிரான இன்னொரு நபரை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இது, மேலும் ஒரு தலைவரைத் தேட வைத்து இறுதியில் ஏமாற்றத்திற்கும், நம்பிக்கையின்மைக்கும் இட்டுச் சென்று விடுகின்றது: “இது வரை என்ன பயன் அடைநதோம்? ஏன் மீண்டும் முயற்சிக்க வேண்டும்?” என்ற எண்ணம் வந்து விடுகின்றது.

ஷோகி எஃபெண்டி ஓரிடத்தில் வீழ்ச்சி நிலையைக் குறிப்பிட்டு, அது இறுதியில், “காட்டுமிராண்டித்தனம், குழப்பங்கள், அழிவு ஆகியவற்றுடன்4.,” முடிவுறும் என்று கூறுகின்றார். இக்கசப்பானதும், இறுதியானதுமான இந்த முடிவின்போது மானிடத்தின் கொஞ்சங் கொஞ்சமான பகுதிகள் மட்டுமே அதனுடன் இணைந்திருக்கும் என்பதுதான் உண்மை.

சமயத்தின் பங்கு

அதன் அடிப்படை காரணம் என்ன? இவை யாவும் ஏன் ஏற்பட்டது? இவை யாவும் எங்கிருந்து வந்தது? இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. உலகின் அக்கொந்தளிப்புக்கள் மற்றும் பதற்றத்தினுடைய மூலம் என்ன என்பதைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் சில ஒளிமயமான பகுப்பாய்வுகள் இன்றைய சமுதாய இலக்கியங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன: அவை உட்பார்வைமிக்கவை, ஆழ்ந்த கண்ணோட்டமிக்கவை. ஆனால், ஒருகேள்விக்கு மட்டும் அந்தப் பகுப்பாய்வுகள் பதிலளிக்கவில்லை: இவை யாவும் எங்கிருந்து வந்தது? எனும் கேள்விதான அது. குழந்தைகளின் கேள்வி மாதிரி: “என்னைப் படைத்தது யார்?” – “கடவுள்”- “கடவுள் எங்கிருந்து வந்தார்?” -“இங்கிருந்து சென்று விடு”

மானிடச் சமுதாயத்தின் இந்த அடிப்படையான இறுதிக் கேள்வி பற்றி பஹாவுல்லா பேசியுள்ளார். மெய்யான சமயத்தை மனிதன் கடைப்பிடிக்கத் தவறியதே அந்த வீழ்ச்சிக்குக் காரணம் என பஹாவுல்லா கூறுகின்றார். அவர் கூறுவதாவது:

“உலக மக்களின் பாதுகாப்புக்கும், பொதுநலனுக்கும் சமயம் என்பது ஒரு பிரகாசமான ஒளியும், வெல்லப்படவியலா ஒரு வலிமையான அரணுமாகும்……….சமயமெனும் ஒளிவிளக்கு மூடி மறைக்கப்படுமானால், ஒழுங்கற்ற நிலையும், குழப்பங்களுமே விளையும். நேர்மை, நீதி, சாந்தி, அமைதி ஆகிய தீபங்கள் ஒளிரத் தவறி விடும்.” .”5

இந்த அடிப்படையில்தான் ஒருவர் ரித்வான் 2009 செய்தியை வாசிப்பார். உலகம் முழுவதிலும் நிலவி வரும் கொடுமைக்குள்ளாதல் என்பது குறித்தும், மானிடத்தை அக்கொடுையிலிருந்து மீட்க வேண்டியது நமது பொறுப்பும், பஹாவுல்லாவினுடைய பொறுப்புமாகும் எனும் அடிப்படையில் ரித்வான் 2009 செய்தியைக் காண முடியும். சமயம் என்ற ஒன்று இல்லாமல் போனதற்கும், கொடுமைக்குள்ளாதலுக்கும் என்ன தொடர்பு என நாம் கேட்கக் கூடும் அதற்கான பதில் கித்தாப்-இ-இகான் எனும் திருநூலில் காணப்படுகின்றது. அத்திருநூலில் பஹாவுல்லா பின்

வருமாறு கூறுகின்றார்: “ உண்மையைத் தேடிடும் ஓர் ஆன்மா இறைவனுடைய அறிவைப் பெற முயன்றிடும் வேளைதனில் எங்குச் செல்வது,எவரிடமிருந்து அதனைப் பெறுவது என்று எதுவும் அதற்கு தெரிந்திராவிடில் அதனை விடவும் கொடுரமானதொரு “கொடுமைக்குள்ளாதல்” இருந்திடவும் கூடுமா?”

மக்களை சிறையில் தள்ளி விடாமல் அல்லது வேறொரு நாட்டிற்கு அவர்கள் அகதிகளாக விரட்டி விடாமல் அல்லது அவர்களுடைய மனித உரிமைகளை இழக்கச் செய்து விடாமல் வாட விடப்படும் இந்நிலையே இறுதியான கொடுமைக்குள்ளாதல் நிலையாகும். ஒரு மானிட ஆன்மா உண்மைக்காக அலைந்து, இறைவனுடைய அறிவுக்காக அலைந்து, அதனைப் பெற எங்கே செல்வது என்றும், அதனை யாரிடமிருந்து பெறுவது என்றும் அவ்வான்மாவுக்குத் தெரியாவிடில், அதுவே ஆக உச்ச கட்ட அதி கொடுமைக்குள்ளாதல் நிலையாகும். மனிதகுலத்திடமிருந்து பஹாவுல்லா அகற்ற வந்துள்ள மெய்யான கொடுமைக்குள்ளாதல் இதுவேயாகும். அவ்விஷயத்தைப் பற்றியதுதான் ரித்வான் 2009 செய்தி.

உண்மைக்கு தேடியலைந்து திரிதலை நாம் இன்று காண்கின்றோம். மெய்யான சமயத்திற்குப் பதில் அதற்கான மாற்று ஏற்பாடுகளின் பல வடிவங்களின்பால் அத்தேடுதல் ஈர்க்கப்படுகின்றது. உதாரணமாக, சமய தீவிரவாதம், மதத்தலைவர்களின் சர்வதிகாரம் ஆகியவை மெய்யான சமயத்தின் வீழ்ச்சியினுடைய ஆதாரங்களாக நான் காண்கின்றேன்.

“வாக்களிப்பட்ட நாள் வந்து விட்டது” எனும் நூலில் ஷோகி எஃபெண்டி அவர்கள் இஸ்லாத்தின் வீழ்ச்சியையும், அதன் அதிகாரம் மற்றும் செல்வாக்கினுடைய தோல்யையும் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதற்கு நேர்மாறான சம்பவங்களாக இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் தற்போதைய நடப்புக்களின் அடிப்படையில் அந்த வீழ்ச்சியை நாம் எவ்வாறு மதிப்பீடு செய்வது? அதாவது, உலகின் பல நாடுகளில் (ஷியா அல்லது சன்னி பிரிவினரின்) இஸ்லாத்தின் எழுச்சி நிலவி வரும் இவ்வேளையில் அந்த வீழ்ச்சியை எப்படி மதிப்பீடு செய்வது? இஸ்லாத்தின் எழுச்சி என்பதை விட அதனை வீழ்ச்சியின் ஆதாரமாகத்தான் நான் பார்க்கின்றேன். அதிகாரத்தின் அப்பட்டமான சக்தியை அடைந்து தங்களுடைய பதவிகளையும், அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக மதத்தலைவர்கள் ஆன்மீகச் செல்வாக்கை கைக்கழுவி விடுகின்றனர்.

சமயத் தீவிரவாதம்- அது கிறிஸ்துவம் சார்ந்ததாக இருந்தாலும் சரி, முஸ்லீம்களைச் சார்ந்ததாக் இருந்தாலும் சரி, யூதர்களைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, இந்து அல்லது புத்த சமயத்தினரைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, அது மெய்யான சமயத்தின் வீழ்ச்சியைப் பிரதிநிதித்து, கொடுமைக்குள்ளாதலைத் தொடக்கி வைக்கின்றது.

உலகில் நடைபெற்று வரும் பகைமைகளும், பிளவுகளும் இக்கொடுமைக்குள்ளாதலின் ஒரு வெளிப்பாடாகவே நான் காண்கின்றேன்: ஓர் உள்ளார்ந்த அமைதியையயும், மன நிறைவையும் பெறும்பொருட்டு ஒருவர் தனது எல்லா ஏமாற்றங்களையும், ஆத்திரங்களையும், கோபதாபங்களையும், சினத்தையும் ஒரு வெளிச்சக்தியின்பால் திருப்பிடுவதற்காக அச்சக்தியை அடையாங்காணும் முயற்சி நடைபெறுகின்றது.

கொடுமைக்குள்ளாதலின் இன்னொரு வடிவம் யாதெனில், அர்த்தமுள்ள திடீர் தீர்வுகளை: தாக உணர்வு, வாழ்வில் பறிகொடுத்து விட்ட ஒன்றுக்கான பரிதவிப்பு-காலப்போக்கில் அது மணவாழ்க்கை மற்றும் சமுதாயத்தின் சீர்குலைவுக்கு இட்டுச் செல்கின்றது.

ஆன்மீக வெற்றிடத்தை நிரப்புவதற்காக அதீத சாகசச் செயலில் ஈடுபடுதல், மதுவருந்தலில் ஈடுபாடு அல்லது போதை பழக்கத்தில் ஈடுபடுதல் அல்லது அபாயகரமான விளையாட்டுக்களில் வேண்டுமென்றே ஈடுபடுதல் போன்ற செயல்களின் அடியில், பஹாவுல்லா தமது கித்தாப்-இ-இகான் திருநூலில் கூறுவதுபோல் ஓர் ஆன்மாக அர்த்தத்திற்காகத் தேடியலைந்து, உண்மையைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு, அத்தேடுதலின் மன உளைச்சலினால் சுய தீங்கு விளைவிக்கவல்லதும், மனநிறைவளிக்கவியலாததுமான காரியங்களில் ஈடுபடுகின்றது.

கொடுமைக்குள்ளாதலின் இன்னொரு வடிவம் யாதெனில், பிரபல ஹீரோவின்பால் பக்தி விசுவாசம் காண்பித்தல். அது கற்சிலையோ அல்லது வெண்கலச் சிலையோ அல்ல. ஆனால், அரசியல் பிரமுகர்கள், மனமகிழ்சசியூட்டுவதில் பிரபலமானவர்கள், விளையாட்டுத்துறையில் பிரபலமானவர்கள் முதியவர்கள். உதாரணமாக, அண்மையில் அகால மரணமடைந்த மைக்கல் ஜேக்ஸசனின் மறைவுக்காக உலகம் முழுவதிலும் காண்பிக்கப்பட்ட உணர்ச்சியலைகளைப் பாருங்கள். பிரபல சமயத் தலைவர் ஒருவருக்குக் கிடைக்கும் வீரவணக்கம் போன்று அப்பாடகருக்கு பக்தி விசுவாசம் காட்டப்பட்டுள்ளது: “மைக்கல் இறக்கவில்லை, மைக்கல் இன்னமும் உயிரோடுதான் இருக்கின்றார். மைக்கல் தனது இசையில் தொடர்ந்து வாழ்ந்து வருவார்.” நெவர்லாந்து மாளிகையின் முன் இரசிகர்கள் ஒன்று திரண்டு அங்கு மலர்கள் வைக்கப்படுகின்றன, அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெறப்போகும் நிகழ்வரங்கிற்கு பதினேழாயிரம் பேர் வரும் செவ்வாய்க்கிழமையன்று நேரிடையாகக் கலந்து கொள்ளப் போகின்றார்கள். எல்விஸ் பிரஸ்லே போன்று அவர் ஒரு ஹீரோவாகி, டென்னனெஸ்ஸி எனுமிடத்திற்கு ஆண்டுதோறும் ரசிகர்கள் யாத்திரைக்குப் போவதுபோல் இவரது இடத்திற்கும் யாத்திரைக்குப் போவார்கள்.

பிரபலமானவர்களுக்குச் செலுத்தப்படும் வழிபாடு பலவாறாகக் வெளிப்படுவதை நாம் காணலாம். ஆனால், அவற்றில் தேடுதலின் வேட்கையையும் நாம் காண முடியும், நானும் நீங்களும் போன்று தங்களுடைய ஆழ்ந்த உணர்வுகளை அர்ப்பணம் செய்வதற்கான ஒரு தேடியலைதலை அதில் நாம் காண முடியும், மெய்யான சமயயத்தினால் மட்டுமே மனநிறைவளிக்கப்படவல்ல ஒன்றை நாடிடும் தேடியலைதலை நாம் அதில் கண்டு கொள்ள முடியும். இத் தேடுதல் தற்போது பிரபல அரசியல் ஹீரோக்களின்பால் காண்பிக்கப்படுகின்றது. முதன் முதலாக அந்த அரசியல் தவைவர் பதவிக்கு வரும்போது சமயத்தலைவருக்குரிய பக்தி விசுவாசம் காண்பிக்கப்படுகின்றது. அதன் பிறகு நிலைமை வேறு விதமாக சென்று விடுகின்றது. சமய வழிபாட்டுச் சடங்கின்பால் காட்டப்படும் விசுவாசம்போல் விளையாட்டு ஹீரோக்களுக்கும் பக்தி காண்பிக்கப்படுகின்றது. நியாயமற்ற நம்பிக்கைகளும் விதிமுறைகளும் இக்கொடுமைக்குள்ளாதலின் இன்னொரு அம்சமாகும்.

நான் ஏன் இதையெல்லாம் சொல்கின்றேன்?

நான் இதைச் ஏன் சொல்கின்றேன் என்றால், ரித்வான் செய்தியின் அறிவுரைகளுக்கேற்ப வீழ்ச்சியெனும் செயல்பாட்டிற்கு அடிப்படையான நிவாரணம், பஹாய் சமயத்தைப் பறைசாற்றுதலேயாகும் என்பதை நாம் நம்புவதால்தான். ஷோகி எஃபெண்டியினால் தெளிவாக வருணிக்கப்பட்டிருக்கும் வீழ்ச்சி செயல்பாட்டின் இயல்பு மீது நாம் கவனம் செலுத்துகின்றோம். வருத்தப்படுவதற்கோ, ஊக்கமிழப்பதற்கோ நாம் அவ்வாறு செய்வதில்லை. மாறாக, நம்மைச் சுற்றி நடைபெற்று வரும் மானிடத் துன்பங்களை கண்டு, சமயத்தின் தேவைகளுக்கு சேவையாற்றுவதற்கும், தற்போதைய ஐந்தாண்டு திட்டத்தின் நிறைவேற்றத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கும், அணி அணியாக பிவேசித்தல் எனும் செயல்பாட்டில் இனி வரவிருக்கும் எல்லா அம்சங்களையும் நிறைவு செய்வதற்காகவும் அந்தத் தன்முனைப்பைப் பெறுகின்றோம். பிரார்த்தனைகள், திருவாசகங்கள், மற்றவர்களின் முன்னுதாரணம் ஆகியவற்றிலிருந்து மட்டுமே நாம் தன்முனைப்பைப் பெறுவதில்லை. ஆனால், அவற்றுடன் சேர்த்து தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் துயரமான செய்திக் காட்சிகள், உதாரணமாக டர்ஃபாரில் அல்லது சோமாலியாவில் அல்லது மேற்கு ஆப்ரிக்காவில் அல்லது கம்போடியாவில் மக்கள் அனுபவிக்கும் அவதிகள் பற்றிய செய்திப் படங்களிலிருந்தும் சமயத்தைப் போதிக்க வேண்டியதற்கான முனைப்பு நமக்குக் கிடைக்கின்றது.

அவ்வாறான செய்திக் காட்சிகளில் சமயத்தினுடைய தேவைகளுக்குச் சேவையாற்றுவதற்கான ஒரு புதிய சக்தியை நாம் காண்கின்றோம்: அச்செய்திப்படம் சமயப் போதனையுடன் மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ளது. அதாவது, வீழ்ச்சியிலிருந்து மானிடத்தை மீட்டெடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சமயப் போதனை நேரடியாகவே இணைந்துள்ளது.

சமயத்திற்குச் சேவையாற்றுதல் என்பது பல வேளைகளில் உற்சாகமளிப்பதாகவும், சக்தியளிப்பதாகவும், விடுதலையளிப்பதாகவும் இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், சில வேளைகளில் அச்சேவை அசதிமிக்கதாகவும், மன உச்ைசல்மிக்கதாகவும், ஏமாற்றமிக்கதாகவும் இருக்கின்றதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அது மனித சூழ்நிலையின் ஒரு பகுதி. அவ்வாறான நேரங்களில், மானிடத்தை

கொடுமைக்குள்ளாக்கப்படுதலிலிருந்து மீட்டெடுப்பதில் பஹாவுல்லாவுக்கு உதவிடும் நமது இலட்சியப் பணியிலிருந்து நாம் நமது உற்சாகத்தைப் பெறுகின்றோம். இதைத்தான் ரித்வான் 2009 செய்தி கூறுகின்றது.

நாகரிகத்தின் இயல்தன்மை

“சீர்குலைந்து விட்ட ஒரு சமுதாயத்தின்” மறுசீரமைப்பதில் சமயம் ஆற்றிடும் பங்கு பற்றி ரித்வான் 2009 செய்தி குறிப்பிடுகின்றது. தற்போதைய சமுதாயத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், பண்படுத்தப்பட்டுள்ள வாழ்வினுடைய கட்டுமானத்திற்குப் பயமுறுத்தல் என ஷோகி எஃபெண்டி குறிப்பிடுகின்றார். அவர் சொல்வதாவது:

நாகரிகங்கள், மிதவாதத்தின் எல்லைகளை மீற அனுமதிக்கப்படுமாயின், அது, தீமையின் தோற்றுவாயாக ஆகிவிடும். மிதவாதத்துடன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் நாகரிகம் இருந்து வந்தபோது அது நன்மையே அளித்து வந்துள்ளது.

“(நாகரிகத்தின்) தீச் சுவாலை மாநகரங்களை அழித்திடும் நாளை நெருங்கிக் கொண்டிருக்கின்றது….”

மனிதகுலத்தினுடைய பிரகாசமான வருங்காலத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் பின் வரும் கேள்வியைக் கேட்கின்றார்:

“பரந்தளவினாதும், தனித்தன்மை வாய்ந்ததும், ஒளிமயமானதுமான ஒரு காலம் மானிட வரலாற்றில் பிரவேசிப்பதற்கு கிறிஸ்த சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் சம்பவித்த ரோமாபுரியின் நாகரிக வீழ்ச்சியையே மிஞ்சிடும் ஒரு வீழ்ச்சி வரத்தான் வேண்டுமா?”

உங்களுக்குத் தெரிந்துள்ளதைப் போலவே, ரோமாபுரியின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைய சுமார் 400 ஆண்டுகள் பிடித்தது. அவ்வீழ்ச்சி திடீரென நடைபெறவில்லை. முதலில் வீழ்ச்சி நடைபெறத் தொடங்கி அங்குமிங்குமாக குளறுபடிகள் ஏற்பட்ட பிறகு கட்டுமானம் முழுவதுமே சரிந்தது. தற்போதைய காலத்தின் வீழ்ச்சிச் செயல்பாட்டை ஷோகி எஃபெண்டி நாகரிக வீழ்ச்சியாகக் குறிப்பிட்டு, அது மத்தியத்தரைக் கடல் பகுதியிலுள்ள ரோமாபுரி உலகில் மட்டுமே அல்லாமல் உலகம் முழுவதுமே நடந்தேறவிருக்கின்றது எனக் கூறுகின்றார். ரோமாபுரி இராஜ்யத்தின் வீழ்ச்சி குறித்து சிறிது பேசுவது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும். கிப்பன் முதல் ஸ்பெங்லர் வரை பலரும் அது குறித்து பல நூல்கள் எழுதி விட்டனர். ஆனால், நமது தற்காலத்திய எழுத்தாளர்கள் சிலர் அது குறித்து எழுதியவற்றின் மீது நான் அக்கறை கொண்டுள்ளேன். “நாகரிகம்” எனும் தலைப்பில் கென்னத் கிளார்க் என்பவர் ஒரு நூலை எழுதி, நாகரிகம் என்பது வரலாற்றின் பல்வேறு நேரங்களில் சம்பவிக்கும் அம்சம் என அதில் குறிப்பிட்டு, எந்தளவுக்கு நாகரிகம் வலுவான கட்டுமானத்தின் மீது எழுப்ப்பட்டிருப்பினும் அது உண்மையில், நொருங்கிபோகவல்ல அளவுக்கு மென்மையானதுதான் என அவர் விவரித்துள்ளார்.

நியூ ஆர்லின்ஸ் எனும் பகுதியை காட்ரினா எனும் கடும்புயல் தாக்கிய கொடூரக் காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டவர்களை, நாகரிகத்தின் மென்மைத் தன்மையையும் பார்த்திருப்பார்கள் (அது ஒரு தற்காலிக அம்சமாக இருப்பினும் கூட). ரோமாபுரி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான பல காரணங்களை கிளார்க் முன் வைக்கின்றார்: அச்சத்தின் அதிகரிப்பு, விளங்கிக் கொள்ள முடியாதவற்றின் மீதுள்ள அச்சம், சமுதாயம், தத்துவம், சட்டங்கள், மனோபாவ செயல்பாடுகள் ஆகியவற்றின் மீது தன்னம்பிக்கையின்மை, (நன்னெறியில் அல்லாது சக்தியின்மை தொடர்பான) நடத்தையில் வீழ்ச்சி. நாகரிகத்தைப் பற்றி இன்னொருவரும் எழுதியிருக்கின்றார். அவர்தான் இந்திய தத்துவவாதியும், இந்தியாவின் மந்தைய துணை அதிபருமான டாக்டர் ராதாகிருஷ்ணன். “கிழக்கத்திய சமயமும், மேற்கத்திய சிந்தனையும்” எனும் தலைப்பு கொண்ட நூல் அது. ரோமாபுரியின் வீழ்ச்சியையும், கிறிஸ்துவத்தின் எழுச்சியையும் பற்றிய கிறிஸ்துவரல்லாத ஒருவரின் கண்ணோட்டம் அது. ரோமாபுரியின் சாம்ராஜ்ய வீழ்ச்சிக்கு அவரும் பல்வேறு காரணங்களை முன் வைக்கின்றார்: பேராசை, ஊழல். பரந்தளவிலான செழிப்புவளங்களின் வளர்ச்சியையும், பரந்தளவிலான வறுமையையும் சமுதாயத்தின் சமநிலையின் தடுமாற்றத்திற்கு இட்டுச் சென்றதை அவர் குறிப்பிடுகின்றார். என்ன நடைபெற்றது என்பதை அவர் முடிவாகக் கூறி, அது அமைதியின்மையின் ஒரு காலம் என்றும், உயர்ந்த அறிவார்ந்த வாழ்வின் வீழ்ச்சி என்றும், நேர்மைத்தன்மையின் வீழ்ச்சி என்றும், தத்துவம் தோல்வியடைந்து, இலக்கியம் மங்கி, சமயம் என்பது கண்டிப்பானதும், மூடநம்பிக்கைமிக்க ஒன்றாகவும் ஆகி விட்டது எனக் குறிப்பிடுகின்றார் அவர்.

அத்தகைய நாகரிக வீழ்ச்சி கொண்ட அபாயத்தை நமது உலகில் நாம் எதிர்நோக்கியிருக்கின்றோம். நமது சமயமானது, ஓர் உலக நாகரிகம் உருவாகுவதை இலட்சியமாகக் கொண்டிருக்கின்றது என்பது நமக்குத் தெரியும். பஹாவுல்லாவினுடைய மாற்றப்படவியலா வாக்குறுதியான அது நிறைவேற்றம் காணும் என்றும் நமக்குத் தெரியும். ஆனால், அந்த மாற்ற காலத்திற்குள் மிகப் பெருமளவிலும், நெடு நீண்ட காலத்திற்கு நீடிக்கவல்லதுமான பழைய நாகரிகத்தின் வீழ்ச்சி ஏற்பட்டு அதற்குப் பதிலாக புதியதொரு நாகரிகம் மலரும்.

ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்குவதில் தனது நோக்கத்தை உணர்வுப்பூர்வமாக காணும் முதல் சமயம் பஹாய் சமயமே என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது. வரலாறு பற்றிய எனது அறிவு ஓர் எல்லைக்குட்பட்டதுதான். நான் ஒரு பொறியியலாளர். நாங்கள் பல நூல்கள் வாசிப்பதில்லை. ஆனால், உதாரணமாக நான் கிறிஸ்துவத்தை பார்க்கும்போது, ஆரம்பகால கிறிஸ்துவர்களின் வாழ்வு சிரமிக்கதாயிருந்தது, இஸ்ரேயர்களல்லாதோரிடத்திலும் யூதர்களிடத்திலும் அவர்கள் கிறிஸ்துவின் வருகை பற்றிய நற்செய்திகளை மத்திய தரைப் பகுதியில் எடுத்துச் சொல்வதில் ஈடுபட்டு அதில் அவர்கள் வெற்றியடைந்தனர். கிறிஸ்துவ சமயம் விஸ்தரிப்பு அடைந்தபோது, பைசெண்டீன் நாகரிகமும் உயர்ச்சியடைந்து வந்தது. முஹம்மதுவின் ஆரம்பகால நம்பிக்கையாளர்கள் வருங்கால பாக்தாத், கொர்டோவா, டமாஸ்கஸ் ஆகிய ஆட்சி பீடங்களின் புகழொளிகளை தாங்கள் கண்ணுற்றதாக எடுத்துரைக்கவில்லை. ஆரம்ப கலாத்தில் அவர்களுடைய பணி பேகன் சிலைவழிபாட்டை துடைத்தொழிப்பதாகத்தானிருந்தது.

நமது சமயமோ, தனது ஆரம்ப நாட்களிலிருந்தே தனது இலட்சியம் ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்குவதுதான் என்றும், அது தொடர்பான வழிமுறையை அது தயாரித்துள்ளது என்றும் தொடர்ச்சியாக சொல்லி வந்துள்ளது.

நமக்கு ஒரு வினோத சக்தி இருக்கின்றது என்றும், “ஒரு புதிய நாகரிகத்திற்கான தேவைகளை இங்கு நீங்கள் எழுத வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டு ஒரு வெற்றுத் தாளை நமக்குக் கொடுக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். நாம் அது குறித்து சிந்திக்கின்றோம். கையடக்கக் கணினிகளை விட அது மிகப் பெரிதான ஒன்று என நாம் கருதுகின்றோம்.

ஒரு நாகரிகத்தை எப்படி உருவாக்குவது?

ஆன்மீக தன்மை மாற்றம் வாயிலாக அடிப்படை நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஈடுபடுவதுதான் நாகரிகச் செயல்பாடு. நாம் அதனை ஒப்புக் கொள்ளக் கூடும். ஒரு நாகரிகம் என்பது சில தார்மீக, நன்னெறி மற்றும் ஆன்மீகப் பண்புநலன்களைப் பொருத்துள்ளது. (சற்று முன் நான் சொன்னது போல) நமக்குக் கொடுக்கப்பட்ட வெற்றுத்தாளில் நாம் விவரிக்கப்போகும் புதிய நாகரிகத்தின் புதிய நாகரிகத்தின் கட்டுமானம் என்ன?

அதில் சிலவற்றை நாம் சேர்க்கக் கூடும்:

-பல்வேறு காரணங்களுக்காக தனி நபர்களின் நடைமுறை வாழ்க்கை, சமூக வழிபாடு ஆகியவற்றை நாம் சேர்க்க விரும்புவோம்.

-அன்றாட வாழ்வின் தெய்வீக போதனைகளை பற்றிய ஆய்வு மற்றும் அவற்றின் அமலாக்கம் ஆகியவற்றில் ஈடுபடும் ஒரு நாகரிகத்தைக் கொண்ட தனிநபர்களை நாம் அதில் சேர்க்க விரும்புவோம். அதனால், நாம் நியாயமான வழியிலும், ஆக்கப்பூர்வமான வழியிலும் நாம் ஒரு நாகரிகத்தை உருவாக்க இயலும்.

-மானிடத்திற்கு சுயநலமற்ற உணர்வுடன் சேவையை வழங்கவல்ல ஒரு சமுதாயத்தை நாம் விரும்பக்கூடும். பேராசையும், சுயநலமுமிக்க மக்கள் நமக்குத் தேவைப்படாது. ஆனால், மக்களுக்கு பரந்தளவில் நன்மை செய்யக் கூடிய மக்களே நமக்குத் தேவை.

-பண்படுத்தப்பட்ட பண்புநலன்களை புதிய தலைமுறையின் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் அவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என நாம் விரும்புவோம்.

ஒரு நாகரிகத்தின் கட்டுமானத்தினுடைய அடிப்படை அம்சங்கள் அவைதான் என நீங்கள் ஒப்புக் கொண்டால், அவை சரியானவை அல்ல என்பதை நான் சொல்லியாக வேண்டும். ஏனெனில், அவை ஐந்து வருடத் திட்டத்தின் மைய நடவடிக்கைகள். வழிபாட்டுக் கூட்டங்கள், பயிற்சியக செயல்பாடு, ரூஹி பாட நூல்களைக் கற்றல், மானிடத்திற்குச் சேவையாற்றுதல் பாலர் வகுப்புகள், இளைஞர் வகுப்புகள், பால்ய இளைஞர் பயிற்சிகள் ஆகியவற்றைத்தான் நான் குறிப்பிட்டேன்.

நான் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், சமயத்தைப் பறைசாற்றும் நடவடிக்கையிலும், ஐந்து வருடத்தின் இலட்சியங்களை நிறைவேற்றுவதிலும், அதற்கும் அப்பாற்பட்டு வரவிருக்கும் காரியங்களிலும் நாம் ஈடுபட்டுள்ளோம் என்பதுதான். ஆனால், இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவெனில், தற்போதைய திட்டத்தின் நமது அன்றாட நடவடிக்கைகளின் வாயிலாக நாம் ஒரு புதிய நாகரிகத்தின் வேர்கள் ஸ்தாபிப்பதில் ஈடுபட்டு வருகின்றோம் என்பதுதான். அதீனா தெய்வம் போன்று நாகரிகம் ஒரு மாயஜாலமாக திடீரென வெளிப்பட்டு விடும் என்பது இதன் அர்த்தமல்ல. மாறாக, பொற்காலத்தின் இலட்சியமான அந்த நாகரிகம் படிப்படியாகவும், மெதுவாகவும், தலைமுறைக்கு தலைமுறை, ஆண்டுக்கு ஆண்டு, நூற்றாண்டுக்கு நூற்றாண்டு மலர்ந்து வரும். ஆனால், அந்த நாகரிகத்தின் வேர்கள் வரலாற்றின் இந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இருக்கின்றன. அதுதான் முக்கியம்.

சமயத்தில் மாற்றத்தைக் கையாளுதல்

தீர்க்கதரிசன வட்டத்தின் சமயங்கள்

இப்பொழுது நான், ஐந்து வருடத் திட்டத்தின் அம்சங்கள் அடிப்படையில் எனது இரண்டாவது கருப்பொருளை பற்றி பேசவிருக்கின்றேன். சமயத்தினுள் மாற்றம் எனும் கருப்பொருளின்பால் உங்களுடைய கவனத்தை நான் ஈர்க்க விரும்புகின்றேன்.

தீர்க்கதரிசன வட்டத்திலுள்ள எல்லா சமயங்களும் தங்களுக்குள் ஒரு முரண்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதை நான் கூற விரம்புகின்றேன்: அவற்றின் ஸ்தாபகர்களிடத்தில் பழுது இருந்தது என்பது இதன் பொருளல்ல. மாறாக, மானிட வரலாற்றில் அது ஒரு பரிணாம வளர்ச்சிக் கட்டம். இச்சமயங்கள் ஒவ்வொன்றும் மானிட ஆவிக்கு விடுதலை வழங்கி, அதன் வாயிலாக படைப்புத்தன்மையும், புதிய கண்டுபிடிப்புகளும், இறுதியில் சமூக பரிணாம வளர்ச்சியும் ஏற்பட்டது. அவற்றில் நான் முரண்பாட்டைக் காண்கின்றேன். இவையெல்லாம் நடைபெறுகையில், ஒரு சமயம் தோன்றும்போது, அதன் தொடக்கத்தில் எழுத்துப்பூர்வமான வரையறுக்கப்பட்டிந்த நடத்தையமைப்பு காலப்போக்கில் காலாவதியாகி விடுகின்றது. அது நடைபெறுவதற்குக் காரணம், சமயம் வெற்றிகரமாக அமைந்து விடுவதால்தான்: அது நாகரிகத்தை உருவாக்குகின்றது, அது கண்டுபிடிப்பை ஏற்படுத்துகின்றது, அது நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது. ஆகவே, ஆரம்பத்தில் அதன் அவதாரப்புருஷராலோ, மற்ற தரப்பினராலோ கொடுக்கப்பட்டநடத்தைக் கோட்பாடுகள் காலாவதியாகி விடுகின்றன.

இந்த முரண்பாடு சமயம் சார்ந்த சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு தரப்பினர், சமயத்தினுடைய அதிகார மையத்தின்பால் விடாப்பிடியான விசுவாசம் கட்டிய நிலையில், மாற்றத்தை எதிர்க்கின்றனர். “பரவாயில்லை, அது நமக்கு தேவாலயத்தின் பாதிரியாரால், சமயத்தில் ஸ்தாபகரால் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாம் கடைப்பிடித்து வருவோம்” என்ற நிலை வருகின்றது. எனவே, மாற்றத்தின்பால் விடாப்பிடியான எதிர்ப்பு ஏற்பட்டு

இறுதியில், தொடக்கநிலை வடிவத்தை தற்காத்திடும்பொருட்டு அது தீவிரவாதமாக உருவெடுத்து விடுகின்றது. இதில் இன்னோர் அதீத நிலை என்னவென்றால், மாற்றத்தை விரும்பும் தரப்பினர் அதிகாரத் தரப்பினருடன் முரண்படுகின்றனர். ஆகவே, பிரிவுகள் ஏற்படுகின்றன, எதிரணிகள் உருவாகின்றன. அங்கு அந்த மாற்றத்திற்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு சமயத்திலும் நாம் இதனைக் காண்கின்றோம்.

உதாரணமாக இஸ்லாத்தை எடுத்துக் கொள்வோம். இஸ்லாத்தின் புகழை நிலைநாட்ட மீண்டும் ஷரியா சட்டத்திற்கு திரும்பிட தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுவதை நாம் இன்று காண்கின்றோம். (அதனுடன் சேர்த்து அது தொடர்பான எல்லா பிரச்சனைகளும் உட்பட.). இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் நிலவிய நிலைபோன்று, தனித்து வாழும் ஒரு கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிலைக்கு பெண்கள் உட்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவதையும் நாம் காண்கின்றோம். அது முஹம்மதுவினால் கட்டளையிடப்பட்டதா, இல்லையா என்பது வேறு விஷயம். இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் நிலவிய உணவுக் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவதையும் நாம் காண்கின்றோம். இவை அனைத்திலும் ஒரு மன உளைச்சலை நாம் காண்கின்றோம்.

அதே மன உளைச்சல் கிறிஸ்துவத்திலும் எழுகின்றது: கிறிஸ்துவத்தின் ஆரம்ப காலத்தில் மணவிலக்குத் தடை இப்பொழுது மன உளைச்சலுக்குக் காரணமாகி வருகின்றது; மக்களின் படிப்பறிவற்ற நிலை அதிகமாக நிலவிய ஆரம்ப காலத்தில் பொருத்தமாக இருந்த தேவாலாயத்தின் பாதிரிமார் அதிகாரம் இப்பொழுது இன்னொரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. (படிப்பறிவற்ற நிலையின்போது ஏதாவது ஒரு தலைவரின்பால் வழிகாட்டலுக்காககத் திரும்ப வேண்டிய அவசியம் இருந்தது). உணவுக் கட்டுப்பாடு தொடர்பான சட்டங்கள். இந்த மன உளைச்சல் குறித்து ஷோகி எஃபெண்டி குறிப்பிட்டிருப்பது சுவாரசியமானது. அவர் கூறுவதாவது:

தீவிரவாதிகளுக்கும், சுதந்திர விரும்பிகளுக்குமிடையே உள்ள இடைவெளி தொடர்ந்து அகலமாகிக் கொண்டே வருகின்றது.

அதன் பிறகு அவர், வீழ்ச்சியின் ஒர் பகுதியைக் குறிப்பிடுகின்றார். வீழ்ச்சியின் ஒரு பகுதியாக தீர்க்கதரிசன வட்டத்தின் மதம் சார்ந்த சமூகங்களின் இரு வேறு அதீத நிலைகளுக்கிடையிலான உளைச்சல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது

பஹாய் சமயத்தில் மாற்றம்

இப்பொழுது நாம் பஹாய் சமயத்திற்கு வருகின்றோம். நிச்சயமாக பஹாய் சமயம் மாற்றம் என்ற ஒன்றைக் கையாள வேண்டும். தோற்றத்தில் இரு வேறு நிலைகளாகவும், அதே நேரத்தில் ஒன்று மன்றொன்றுடன் தொடர்பு கொண்டதாகவுமுள்ள இரு வேறு நிலைகளை அது கையாள வேண்டும்: ஒன்று, சட்டப்பூர்வமானது, மற்றது, மனோத்துவ ரீதியதிலானது.

பஹாய் சட்டத்தின் கட்டமைப்பினுள் பிரச்சனை மிகவும் நேரடியானது: பஹாவுல்லாவினுடைய அதிகாரம், அவருக்குப் பிறகு, அப்துல் பஹாவிடம் வழங்கப்பட்டு, பின்னர், அவருக்கும் பிறகு பாதுகாவலரிடம் வழங்கப்பட்டு, பின்னர் உலக நீதிமன்றத்திடம் வழங்கப்பட்டு, இப்பொழுது, மாற்றம் எதையும் மேற்கொள்வதற்கு அசைக்க முடியாத சட்ட அதிகார மையாக அந்த உலக நீதிமன்றம் விளங்கி வருகின்றது. உலக நீதிமன்றத்தின் நிலையைப் பொருத்த வரை, மாற்றத்தை அமல்படுத்த அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மிக சுவாரசியமானது. அதற்கு பல பரிமாணங்கள் உண்டு. அவை:

-பஹாய் சட்டம் குறித்து படிப்படியாக தெளிவு அளிப்பதிலும், அதனை அமலாக்கம் செய்வதிலும் அந்த அமைப்புக்கு வழங்கப்பட்ட அதிகாரம், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் அதிகாரம் வழங்குகின்றது. உதாரணமாக, ஹூக்குக்குல்லா: அச்சட்டம் திருநூலில் பல காலமாக இருந்து வந்தது. ஆனால், 1992ம் ஆண்டுதான் அது உலகளாவிய நிலையில் அமல்படுத்தப்பட்டது. இன்னமும் உலகளாவிய நிலையில் அமல்படுத்தப்படாத பல சட்டங்கள் கித்தாப்-இ-அக்டாஸில் இருக்கின்றன. அவற்றை உலக நீதிமன்றம் அமலாக்கம் செய்வதற்கு மாற்றம் வரும்.

-துணை விதிகள் ஏற்படுத்தி அதனை அமலாக்கம் செய்வதும், அதன் சட்ட எல்லைகளின் வரம்புகளுக்குள் உலக நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சட்ட உரிமையாகும். வருங்காலத்தில் சமயம் அபிவிருத்தியடையவிருப்பதை ஷோகி எஃபெண்டி குறிப்பிட்டு பின் வருமாறு கூறுகின்றார்:

“புதியதும், மிகச்சிறந்தவையாகவுமுள்ள வழிமுறைகளைத் தேர்வு செய்வதில் பஹாய்கள் எப்பொழுதுமே கடைசி ஆளாக இருக்கக் கூடாது. ஆனால், அவ்வாறான வழிகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் முதல் ஆளாக இருக்க வேண்டும். ஏனெனில், அது சமயத்தினுடைய வலிமைமிக்க தன்னியல்புடன் ஒன்றிணைந்திருக்கின்றது. அது படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவது மட்டுமன்றி, முழுதும் புதிய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை தன்னுள் கொண்டுள்ளது.”

துணை விதிகள் மீது மாற்றத்தைக் கொண்டு வரும் உலக நீதிமன்றத்தின் சட்டப்பூர்வமான இந்த உரிமை, சமயம் வளர்ச்சிக்குரியதாகவும், கலாச்சாரப்பூர்வமான பண்படுத்தப்பட்ட மாற்த்தின் முன்னணியில் இருந்து வருவதற்கும் வழியமைத்துக் கொடுக்கும் கருவிகளில் அது ஒரு பகுதியாகும்.

-உலக நீதிமன்றத்தில் சட்ட அமைப்பில் எடுத்துரைக்கப்பட்டிருப்பதைப் போன்று, அதற்கு பரந்தளவிலான அதிகாரம் உள்ளது; பஹாவுல்லாவினுடைய உலக அமைப்புமையைக் கொண்டு வருவதற்காக ஸ்தாபனங்களை நிறுவிக் கொள்ளும் மாபெரும் அதிகாரம் அதற்கு உண்டு: இச்சமயத்தில் அந்த அமைப்புக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஒரு மாபெரும் அதிகாரம். அவ்வாறிருந்தபோதிலும், மாற்றம் தொடர்பான மனோத்துவ அங்கத்தை சமாளிப்பது பஹாய் சமூகத்தின் சவாலாக இருந்து வருகின்றது. நான் இதனைச் சொல்வதற்குக் காரணம், மாற்றம் இல்லையென்றால், ஒருவர் பாதுகாப்பு உணர்வுடனே சதா இருந்து வருவார்: அதாவது, ஒவ்வொரு நாளும் ஒருவர் பழையதையே திரும்ப திரும்ப செய்து வருவார், அதனைச் செய்வதற்கு சிந்தனை தேவையில்லை. ஒவ்வொன்றும் அந்தந்த இடத்தில் நிதானமுடன் செயல்பட்டு வரும். மாற்றம் வந்தவுடன் அவையெல்லாவற்றையும் அம்மாற்றம் தடம் மாற்றி விடுகின்றது. அது குறித்து ஒருவர் எதிர்ப்பு காட்டுவார்:” எப்போதும் இருந்து வந்துள்ளதைப் போன்று அது இல்லை. சிறு குழந்தையாய் நான் இருந்தபோது, அது குறித்தும், அப்போதைய நடத்தை குறித்தும் எனக்கு பல ஞாபகங்கள் உண்டு.” அதீத நிலைகளைத் தவிர்த்திடுமாறு ஷோகி எஃபெண்டி நமக்குப் பல இடங்களில் எச்சரித்துள்ளார். உதாரணத்திற்கு:

சமயத்தினுடைய வளர்ச்சியினுடைய குணவியல்பின் தன்மை மற்றும் அதன் வழிமுறை குறித்து அதிகவனத்துடன் கண்காணித்து வருவது நமது பிரதான பணியாகும்……. வெற்றியை நோக்கி எது மட்டுமே சமயத்தை வழிநடத்திச் செல்லவியலுமோ, அந்த நேரான பாதையிலிருந்து அதீத பழமைவாதம் ஒரு புறத்திலும், பொறுப்பற்ற சுதந்திரம் மறுபுறத்திலும் சமயத்தினுடைய வளர்ச்சியை தவற வைத்திடாத வகையில் அந்த அக்கண்காணிப்பு நடைபெற்று வரவேண்டும்..

அதே கருப்பொருளை கொண்ட மற்ற பல வாசகப்பகுதிகளும் உண்டு. உலக நீதிமன்றமும் அது குறித்து இவ்வாறு ஓரிடத்தில் கூறுகின்றது:

“கடந்த அருளாட்சிக் காலங்களில் நம்பிக்கையாளர்கள் பரஸ்பர பகைமைக் கொண்ட இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தனர்: திருவெளிப்பாடு எடுத்துரைத்த அனைத்தின் மீதும் கண்மூடித்தனமான விசுவாசம் கொண்ட அணியினர் ஒரு தரப்பாகவும், எல்லாவற்றையுமே சந்தேகித்து கேள்வியெழுப்பிய இன்னொரு தரப்புமாக அவர்கள் பிரிந்திருந்தார்கள். எல்லா அதீத நிலைகளைப் போலவே, இந்த இரண்டு அணிகளும் தவறுக்கு வழிகாட்டப்பட முடியும்.

நான் இதை ஏன் சொல்கின்றேன் என்றால், கண்மூடித்தனமாக சட்டத்தை அப்படியே கடைப்பிடிக்கும் ஒருவருக்கு அந்நிலை பழைய நிலை மிக வசதியாக இருக்கும்:

-“நீ ஏன் இதை செய்கின்றாய்?”

-“இங்கே பாருங்கள், எழுத்துப்பூர்வமாகவே இங்கு தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றது. நீங்களே படித்துப் பாருங்கள்!”

அதீத பழைமைவாதத்திற்கு எதிராக ஷோகி எஃபெண்டி நம்மை எச்சரித்துள்ளதைப் போன்று, கண்மூடித்தனமாக சட்டத்தை அப்படியே கடைப்பிடிக்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பதைத் தவிர்த்திட நாம் எச்சரிக்கப்படுகின்றோம். இது குறித்து அப்துல் பஹாவும் நம்மை எச்சரித்துள்ளார். மேற்கின் நட்சத்திரம் எனும் சஞ்சிகையில் அவர் இப்படிக் கூறியுள்ளார்:

“கண்மூடித்தனமாக சட்டத்தை அப்படியே கடைப்பிடிக்கும் பழக்கம், தலைமைத்துவ ஆசையைத்தான் சுட்டிக் காட்டுகின்றது. அச்சட்டத்தை அமல்படுத்துவபர் சமயத்தினுடைய அறிவுப்பூர்வமான புரிந்துகொள்ளலைக் காண்பிக்கின்றார். ஆனால், அதிலுள்ள ஆன்மீக வழிகாட்டல் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை.”

அப்துல் பஹாவிடமிருந்து வந்துள்ள கவலையளிக்கும் ஒரு வாசகப் பகுதியாகும் இது.

சமயம் வெளிப்பட்டு வரும் ஒவ்வொரு கட்டத்திலும், அங்கு மாற்றம் நிகழ்ந்தபோதெல்லாம், அது நம்பிக்கையாளர்களுக்கு ஒரு சோதனையாகவே இருந்து வந்துள்ளது: பஹாய் சரித்திரத்தை நான் வாசிக்கும்பொழுது, அப்துல் பஹாவினுடைய நிர்வாகக் காலத்தில் நடைபெற்ற பல செயல்கள் பல நம்பிக்கையாளர்களுக்குச் சோதனையாக அமைந்துள்ளன என்பது எனக்குத் தெரிய வந்தது. அவர் மேற்கத்திய நாட்டின் மீது காண்பித்த கவனம் அவற்றில் ஒன்று: “சமய போதனைகளைப் பெறுவதற்கு இங்கு இன்னமும் பல மக்கள் இருக்கின்றபோது, ஏன் கனடா அல்லது ஐக்கிய அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியா அல்லது மற்ற தொலை தூரத்துப் பகுதிகள் பற்றி கவலைப்பட வேண்டும்?

“அவர்களை நாம் இறுதியில் சென்றடைவோம்”-; தெய்வீகத் திட்டத்தின் நிருபங்கள், நண்பர்கள் உலகம் முழுவதும் அனுப்பி அவரது உயில் மற்றும் சாசனத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளைத் தொடக்கி வைத்தன.

சமயத்தின்பால் விசுவாசமாக இருந்த பல நண்பர்களுக்கு அந்த நேரத்தில் ஒரு சோதனை இருந்தது. ஷோகி எஃபெண்டி காலத்திலும் அம்மாதிரியான சோதனை இருந்தது. அவரது நடத்தை அப்போது சிலருக்கு சோதனையாக இருந்தது. அச்சோதனை இப்போது சரித்திரத்தில் மறைந்து விட்டது. ஷோகி எஃபெண்டி செய்த ஒரு காரியம் விசுவாசமான பல நம்பிக்கையாளர்களுக்கு சோதனையாக அமைந்தது. அந்த நம்பிக்கையாளர்கள் ஒப்பந்தமீறிகள் அல்லர். அவர்கள் ஒப்பந்தத்தில் சந்தேகம் கொண்டவர்களும் அல்லர். ஆனால், குழப்பத்திற்கு இலக்கானார்கள்: “ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஏன் அவர் மசூதிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். அவரது பாட்டனார், உதராணப்புருஷர் அவ்வாறு சென்று வந்தாரே? தனது மூதாதையர்களைக் போலன்றி ஏன் அவர் மேற்கத்திய உடைகள் அணிகின்றார்?” “ஏன் அவர் 1921 முதல் 1937ம் ஆண்டு வரை நிர்வாக அமைப்புமுறையை எழுப்புவதில் மிகக் கவனமாக இருந்தார்? கட்டுப்பாடு மிக்க சமயம் எனும் நிலையிலிருந்து சுதந்திரமான ஆன்மீக சமயம் என்பதற்குப் பதிலாக அவர் சமயத்தை ஓர் அமைப்பாக மாற்றியமைப்பதில் ஈடுபடுகின்றாரே?” “பஹாய் சட்டத்தை மிகக் கடுமையாக மீறியவர்களை ஏன் சமயத்தை விட்டே அவர் வெளியேற்றினார்? அன்பு எங்கே? மன்னிப்பு எங்கே? பாவத்தை மறைக்கும் கண்கள்தாம் எங்கே?” “உயிரோடிருக்கும்போதே சிலரை ஏன் இறைசமயத்தின் திருக்கரங்கள் எனும் அமைப்புக்கு உறுப்பினர்களாக்கி இறுதியில் துணைவாரிய உறுப்பினர்களைக் கொண்டு வந்தார்?” சில விசுவாசமான நம்பிக்கையாளர்கள் அவர்களது இறப்புக்குப் பிறகு இறைசமயத்தின் திருக்கரங்கள் என அழைத்து, பின்னர், சில காலம் கழித்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்த சில நம்பிக்கையாளர்களை அதே அமைப்பின் உறுப்பினர்களாக்கினார்.

உலக நீதிமன்றம் தனது பொறுப்புக்களை ஆற்றிக் கொண்டிருந்த காலத்தில் அந்த உயரிய ஸ்தாபனம் மாற்றத்தை ஏற்படுத்தி அதே மாதிரியான சோதனையைக் கொண்டு வந்தது. நேர்மையான, அர்ப்பணமிக்க, விசுவாசமிக்க நம்பிக்கையாளர்கள் அச்சோதனைக்கு இலக்கானார்கள். உலக நீதிமன்றம் தனது முதற் காரியமாக, கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய யாத்திரிகர்கள் ஒன்றிணைத்தபோது, அக்காரியத்தினால் ஆழமான சோதனைக்குள்ளான சிலருடன் நான் பேசினேன். அவர்கள் சமத்தின்பால் விசுவாசமிக்கவர்கள், அவர்கள் சமயத்தின்பால் அர்ப்பண உணவுமிக்கவர்கள். ஆனால், அக்காரியத்தினால் அவர்கள் ஆட்டங் கண்டனர். அதே போன்று, பாதுகாவலர் இல்லாத நிலையில், ஹூக்குக்குல்லா பணம் உலக நீதிமன்றத்தின்பால் வழங்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டபோது, அது பலருக்கு சோதனையாக அமைந்தது. கண்ட ஆலோசகர்கள் வாரியங்களின் ஸ்தாபிதம், நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குறித்து சந்தேகம் கொண்ட பலருக்கு சோதனையாக அமைந்தது. அதுபோல, அனைத்துலக போதனை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டபோதும் அதே சோதனை காத்திருந்தது. உலக நீதிமன்றம் புதிய ஸ்தாபனங்கள் அமைத்துக் கொள்ளலாம் என்று உலக நீதிமன்றத்தின் விதிமறைகள் இருந்தும்கூட, வட்டார பஹாய் பேரவைகள் அமைக்கப்பட்டபோது, அதுவும் பலருக்கு சோதனையைக் கொண்டு வந்தது: “ தேசிய ஆன்மீகச் சபைகள் என்ன ஆகும்? ஏன் அவற்றின் அதிகாரம் அகற்றப்பட்டு விட்டது?” பல ஆண்டுகளாக நாம் வட்டார பஹாய் பேரவைகள் இல்லாமல் செயல்பட்டு வரவில்லையா, ஏன் இப்போது மட்டும் அதற்கு தேவை ஏற்பட்டது?”

நாம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக வாழ்வோமாகில், வருங்காலத்தில் பல விதமான மாற்றங்களை நாம் சந்திக்க நேரிடும்.

நான் எனது உரையில் இறுதியாக ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப்போகின்றேன். ஏனென்றால், 1996ம் ஆண்டு உலக நீதிமன்றம் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. அந்த மாற்றம் நேர்மையான பல நம்பிக்கையாளர்ரகளுக்குச் சோதனையாக அமைந்து விட்டது. கிளஸ்டர்கள் என்ற ஒன்றை அனைவருக்கும் அல்லாமல் சிலருக்கு மட்டும் உலக நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது. அது சோதனையாக அமைந்தது: “உள்ளூர் ஆன்மீகச் சபைகள் என்ன ஆகும்? அவற்றை நாம் மறந்துவிடப் போகின்றோமா? ஷோகி எஃபெண்டிதானே நமக்கு உள்ளூர் ஆன்மீகச் சபைகளைக் கொடுத்தார்? ஏன் நமக்கு கிளஸ்டர் தேவை?”

மைய நடவடிக்கைகளுக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமையும், ரூஹி பாட நூல்களை நெடு நீண்டகாலமாகக் கற்க வேண்டும் எனும் தேவையும் சிலருக்கு சோதனையாக அமைந்து விட்டது: “நாம் இனிமேல் சமய சிறுவிளக்கக் கூட்டம் நடத்த முடியாது என்று இதன் அர்த்தமா? ஆழ்நிலை வகுப்புகளை நாம் இனிமேல் நடத்த முடியாதா? திருவாசகங்களில் பல விஷயங்கள் உள்ளனவே, அவை என்ன ஆவது? ரூஹி பாடநூல்களை மட்டுமே நாம் கற்க வேண்டுமா?”

தீவிர வளர்ச்சித் திட்டத்தின் மீது செலுத்தப்பட்ட கவனம் ஒரு சோதனையாக ஆகி விட்டது. அனைத்துலக போதனை நிலையம், ஆலோசகர்கள், துணைவாரிய உறுப்பினர்கள் ஆகியோர் சமூகத்தினுடைய வாழ்வில் நேரடியாக ஈடுபட்டது ஒரு சோதனையாக ஆகி விட்டது. முந்தைய காலத்தில் சமூக வாழ்க்கை மிக எளிமையாக இருந்தது: அப்போதிருந்த நம்பிக்கையாளர்கள் பண்டிகைக்குச் சென்றனர், ஆழ்நிலை வகுப்புக்குச் சென்றனர். அவ்வப்போது வேறு ஏதாவதொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். வாழ்க்கை அப்போது எளிமையாக இருந்தது. வாழ்க்கை நேரடியான வாழ்க்கையாக இருந்தது. அதன் பிறகு, நெடு நீண்டகாலத்திற்குப் பிறகு இந்த மாற்றங்களெல்லாம் வந்து விட்டன. அவை திருவாசகங்களில் எழுதப்பட்டிருக்கவில்லை: கிளஸ்டர், தீவிர வளர்ச்சித் திட்டம், மைய நடவடிக்கை ஆகியவை சமய நூல்களில் இல்லை..

இது மாற்றத்தின் சவாலாகும். சமயம் வளர்ச்சியடையாமல் இருந்து விட்டு மங்கிப் போக அனுமதிப்பதின் வாயிலாக இந்த சவாலை நாம் தவிர்த்து விடலாம். அது மாதிரி நாம் செய்ய முடியாது. நமக்கு வேறு வழியில்லை. பஹாவுல்லாவினுடைய உலக அமைப்புமுறையை நாம் எழுப்பியாக வேண்டும். நம்மால் புரிந்து கொள்ளவியலாத வழிகளில் சமயம் விரிவடைந்து வளர்ச்சியடைய வேண்டும். சமயம் தனக்கு கட்டளையிடப்பட்டுள்ள இலட்சியத்தை நிறைவேற்றி தனது வருங்காலத்தில் பிரவேசிக்க வேண்டுமானால், மாற்றம் நகிழ்ந்தாக வேண்டும் என்பது ஒரு கட்டாயம்.

மாற்றத்திற்குத் தடையாயுள்ள எந்தவொரு மனோபாவ தடையையும், தவறான தகவல்களையும், தொல்லைகளையும் நாம் வென்றிட வேண்டும். மாற்றம் வரும்போது, தீவிரவாதம் தலைதூக்கும் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். 1996ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றம் தொடர்பாக, சிலர் தீவிரவாதத்திற்குத் தள்ளப்பட்டனர்: அதவாது, ரூஹி பாடநூல்கள் மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமே பொருத்தமான பாடநூல்கள். ஏன்? நீங்கள் அப்பாடநூல்களைத் திறந்தவுடன் அங்கே காணப்படுவது திருவாசகங்ள்! அதிகாரப்பூர்வமான வாசகப்பகுதிகள்.

நீங்கள் முதலாவது பாடநூலைப் பார்த்தால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஆழமாகச் சிந்திக்கக் கூடிய வாசகப் பகுதிகள் அங்கு காணப்படும். பக்திமிக்க கிறிஸ்தவர்கள் ஆண்டவருடைய பிரார்த்தனையின் சொற்றொடர்களை வாழ்நாள் முழுவதிலும் கற்றதைப் போன்ற செயல் அது. இன்னுமொரு குற்றச்சாட்டு என்னவெனில், நாம் சபைகளையும், பண்டிகைகளையும், சமய சிறுவிளக்கக் கூட்டங்களையும் ஆழ்நிலை வகுப்புகளையும் அலட்சியப்படுத்துகின்றோம் என்பதுதான். ரூஹி பாடநூலில் விவரிக்கப்பட்டிருக்கும், குமாரி அனாவின் சமய போதனை முறை, கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்வது போன்ற ஒரு செயல் எனும் பொய்யான குற்றச்சாட்டு அது. உலக நீதிமன்றத்தினால் மாற்றம் கொண்டுவரப்படுகையில், அது குறித்து ஒருவரது அதிருப்தியை வெளிக்காட்டி எழுகின்ற தீவிரவாதத்தின் பன்முகங்கள் இவை.

உலகின் சூழுநிலைகள் அடிப்படையிலும், மனிதகுலத்தின் ஆன்மீகத் தாகத்தை அடிப்படையாகக் கொண்டும் சமயத்தை நேரடியாக போதிக்க வேண்டும் என்றும், பஹாவுல்லாவினுடைய வருகையை மேலும் நேரடியாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் உலக நீதிமன்றம் விடுத்த வேண்டுகோளை சிலர் திரித்து விட்டனர். மாற்றம் வந்தபோது அதைக் கண்டு தடுமாற்றமடைவோரின் போக்குகளின் வெளிப்பாடே இவை என நான் கருதுகின்றேன். ஒரு தீவிரவாத நிலைக்கு செல்லும்போது, மறு முனையின் தீவிரவாதத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பத்தான் செய்யும். பயிற்சியக செயல்பாட்டில் ஈடுபட்டிராதவர்களிடமிருந்து விமர்சனங்கள் வரும். உள்ளூர் ஆன்மீகச் சபையை அல்லது சமய சிறுவிளக்கக் கூட்டத்துடன் அதனைத் தொடர்புபடுத்தி தொந்தரவு அளிக்க வேண்டாம், முன்னுரிக்கும் ஏகபோக உரிமைக்கும் உள்ள குழப்பம் என பல விமர்சனணங்கள் வரும்.

இதுவே நாம் சந்திக்கும் சவாலாகும். இச்சவால் ரித்வான் 2009 செய்தியில் உள்ளார்ந்த நிலையில் காணப்படுகின்றது. அதற்கான தீர்வு மிக மிக எளிமையானது. அது என்னவெனில், சமயத்தினுடைய மையமாக விளங்கும் உலக நீதிமன்றம் எடுத்துரைக்கும் எதனையும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்வதாகும்.

அதனை நாம் செயல்படுத்துவோமாகில், அது குறித்து நாம் ஆழமாகச் சிந்திப்போமாகில், சமயத்தினுடைய அதிகார மையமாக விளங்கிடும் உலக நீதிமன்றம் விடுக்கும் எதனையும் நாம் ஏற்றுக் கொண்டு பாதுகாப்பாக இருப்போம். எதுவும் நமக்குத் தொல்லைக் கொடுக்காது. தகர்க்கவியலா கோட்டையினுள் பாதுகாப்பாக நாம் இருப்போம். அத்துடன், பேராபத்துமிக்க ஒழுங்கின்மையிலிருந்தும், வீழ்ச்சியிலிருந்தும் மானிடத்தை மீட்டு, பொற்காலத்தில் அதற்குக் கட்டளையிடப்பட்டிருக்கும் புதியதோர் நாகரிகத்திற்கு உலகினை வழிநடத்திச் செல்லும் இச்சமயத்தின் ஒரு பகுதியாக நாம் ஆகிவிடுவோம்

பெண்கள்: சமத்துவமும் அமைதியும்


பெண்களும் அமைதியும்
டாக். பீட்டர் காஃன்

இங்கு, பெண்களும் அமைதியும் எனும் தலைப்பில் இன்றிரவு நான் நிகழ்த்தவிருக்கும் சொற்பொழிவு குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். முதலில் இத்தலைப்பிலான ஒரு விஷயம் ஏன் இங்கு விவாதிக்கப்படுகிறது என்பது குறித்தும், பெண்களுக்கும் அமைதிக்கும் இடையில் என்ன தொடர்புள்ளது என்ப குறித்தும் நாம் ஆலோசிக்கவிருக்கின்றோம். இந்த இரண்டு விஷயங்களுக்கிடையிலான உறவவை, சமயத்தின் உலக மையத்தில் இருந்து கிடைத்துள்ள அசாதாரணமான மற்றும் குறிப்பிடத்தக்க எழுத்துக்களின் வாயிலாக காணலாம். உதாரணமாக, அப்துல் பஹா பின்வருமாறு எழுதி யுள்ளார்:

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம் உணரப்படும்போது, யுத்தங்களுக்கான அஸ்திவாரம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். சமத்துவமின்றி இது சாத்தியப்படாது.” மற்றும் சமீபத்தில், “உலக அமைதிக்கான வாக்குறுதி,” எனும் தங்களின் சாசனத்தில் உலக நீதி மன்றம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: பெண்களின் விடுதலை, அதாவது, இருபாலர்களுக்குமிடையிலான முழு சமத்துவம், அடையப்படுவதானது, மிக முக்கியமான, ஆனால் அவ்வளவாக அங்கீகரிக்கப்படாத முன் தேவைகளில் ஒன்றாகும். இதிலிருந்து நான் புரிந்கொள்வது என்னவென்றால், உலகத்தில் இரு அடிப்படையான கேள்விகள் உள்ளன என்பதாகும். ஒன்று ஆண் பெண் சமத்துவம் அடையப்படுவது குறித்தது மற்றது, உலக அமைதி அடையப்படுவது குறித்தது.

அப்துல் பஹாவிடமிருந்தும், உலக நீதி மன்றத்திடமிருந்தும் கிடைத்துள்ள இவ்விரு வாக்குமூலங்களும், இவ்விரு விஷயங்களையும் இணைக்கின்றன. மற்றும், ஒரு விஷயம் மற்றதற்கான முன்தேவையும் ஆகும் என குறிப்பிடுகின்றன. ஆகையால், உலக அமைதி அடையப்படுவது குறித்து நாம் கொண்டுள்ள அக்கறை, முதலில் ஆண் பெண் சமத்துவத்தின்பால் கண்டிப்பாக செலுத்தப்பட வேண்டும் எனவே பொருள்படுகின்றது. இந்த விஷயம் பஹாய் போதனைகளின் சக்தி, செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் எவ்வாறு அடையப்படப்போகின்றது என்பது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும்.

ஆக, இன்றிரவு நான் மூன்று தலையாய விஷயங்களைக் கருத்தில் கொள்ள விரும்புகிறேன்: முதலாவதாக ஆண் பெண் சமத்துவம் குறித்த கேள்வி, இரண்டாவதாக, அமைதி அடையப்படுவதற்கும் அதில் பெண்கள் ஆற்றக்கூடிய பங்கு குறித்தும் எழக்கூடிய கேள்வி, மூன்றாவதாகவும் சுறுக்கமாகவும், இந்த சமத்துவம் அமுல் செய்யப்படுவதை பராமரிப்பதற்கு பஹாய் சமூகத்திற்கு கைவசம் உள்ள வாய்ப்புக்கள் குறித்த கேள்வி. இதை நாம் நிகழ் காலத்தில் அமைந்துள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கப்போகின்றோம். இன்றைய உலகம், பல விதமான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. ஒரு புறம், பழமை விரும்பிகள் சமயத்தின்பாலும், தத்துவங்களின்பாலும் கொண்டுள்ள வெறியின் வளர்ச்சியும் அதிகரிக்கும் ஆதிக்கமும் உள்ளது. இது பெரும்பாலும் பெண்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது. மறுபுறம் பார்க்கையில், விரிவான ஆண்கள் எதிர்ப்பு வெறியை வெளிப்படுத்தும் பெண்கள் இயக்கங்கள் உள்ளன. இக்கேள்வியை, அமைதிக்கான சாசனத்தில் ஐக்கியம் அடையப்படுவதற்கான முயற்சியில் நமது பஹாய் சமூகத்தையே ஒரு முன்மாதிரியாக உலக நீதி மன்றம வழங்கியிருப்பதன் கண்ணோட்டத்தில் காண வேண்டும். உலக நீதி மன்றம், புலப்படாத நிலையிலிருந்து நாம் வெளிப்பட்டிருப்பதானது, மேலும் மேலும் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான கூரிய பார்வையும், நம்பிக்கையின்மையும், சந்தேகப்போக்கும் உடைய மக்கள் பஹாய் சமூகத்தை கூராய்வு செய்யப்போகின்றனர் எனக் கூறியுள்ளது. அவர்கள், நமது சமயத்தில் விவரிக்கப்பட்டுள்ளதற்கும், இன்னாளில் நமது நடத்தைக்கும் இடையில் வேறுபாடுகளைக் கண்டுபிடிக்கும் வகையில் நமது வெற்றிகளையும் நடந்துகொள்ளும் முறைகளையும் கூராய்வு செய்வர். இவை யாவற்றையும் வைத்தே நாம் “ஆண் பெண் சமத்துவம்” குறித்த கேள்வி பற்றியும், அதைச் செயல்படுத்துவதற்காக உலக பஹாய் சமூகம் எடுக்கும் முயற்சிகள் குறித்தும் ஆய்வு செய்யவேண்டும். காலங்காலகமாக பெண்களுக்கு அளிக்கப்பட்ட ஸ்தானம் மற்றும் அவர்கள் நடத்தப்பட்டு வந்துள்ள முறை குறித்தும் ஒரு சுருக்கமான வரலாறு ரீதியிலான ஆய்வு செய்வதன் மூலம் நான் எனது உரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன். நாம் ஏன் இதைச் செய்ய வேண்டும், ஏன் பஹாய் போதனைகளை மட்டும் ஆய்வு செய்து அவற்றில் பெண்கள் சமத்துவம் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என மட்டும் பார்த்தால் போதாதா?, என ஒரு சிலர் வினவலாம். இதற்கு எனது மறுமொழி என்னவெனில், காலங்காலமாக பெண்கள் நடத்தப்பட்டு வந்துள்ள விதத்தை நாம் ஆராய்வது பயனுள்ள ஒன்றே என்பதாகும். ஏனெனில், பஹாய் போதனைகளை நன்கு கண்ணோட்டமிட்டும் அவற்றை மெச்சுவதற்கும் உரிய ஓர் ஒப்பீட்டை இது வழங்குகிறது. பஹாய் போதனைகளின் சிறப்புத்தன்மைகள் குறித்தும், அவற்றின் குறிப்பிடத்தக்கமை குறித்தம், மற்றும் அவற்றின் நீண்ட கால விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்திட இது உதவுகின்றது. பெரும்பாலும் மாற்று வகைகளில் இயங்கும் பஹாய் அல்லாத ஒரு சூழ்நிலையில் நமது கோட்பாடுகளை அமுல் செய்திட முனைவது குறித்த சவால்களை பஹாய்கள் எனும் முறையில் நாம் மேலும் நன்கு அறிந்துகொள்ள இது அதிகம் உதவுகின்றது.

ஆரம்பமாக, வரலாறு சார்ந்த ரீதியில் பெண்கள் எவ்வாறு அனுகப்பட்டுள்ளனர் என்பதை சரித்திர உணர்வோடு நான் கண்ணோட்டமிட விரும்புகின்றேன். இது, நிச்சயமாகவே வாதத்துக்கிடமான ஒரு விஷயமாகும். ஒரு சிலர் வரலாற்று காலம் முழுவதும பெண்கள் அநீதியாகவே நடத்தப்பட்டுள்ளனர் என வாதிடுவர். பிறர், இது பெரிதுபடுத்தப்பட்ட ஒரு விஷயம் எனவும், உண்மையில் பெண்கள் அவ்வாறு நடத்தப்படவில்லை எனவும் கூறுவர். ஆகவே, இது பல வேளைகளில் இணக்கம் காணப்பட முடியாத ஒரு விஷயமாகும். பல வேளைகளில், சமுதாய நிலையிலும், அல்லது பஹாய் சமூகத்திலும் கூட சரித்திரம் முழுவதும் பெண்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து வாதங்கள் எழுவதைப் பார்க்கலாம். ஆனால், இக்கேள்வி மிக எளிதில் தீர்க்கப்படக் கூடிய ஒன்றாகும். அதற்காக நாம் அப்துல் பஹாவின் அதிகாரபூர்வ எழுத்துக்கள்பால் திரும்பவேண்டும். அவ்வாறு திரும்பி, வரலாறு முழுவதும் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து அவர் என்ன கூறுகிறார் என்பதைக் காண்பதன் மூலம் இப்பிரச்சனைக்கு நாம் தீர்வு காணலாம். இவ்விஷயம் குறித்து அப்துல் பஹா எழுதியுள்ளவற்றிலிருந்து இரு பத்திகளை நான் உங்களுக்காக படித்துக் காட்ட விரும்புகிறேன்.

அவர் முதலாவதாக கூறுவது: கடந்த காலங்களில் பெண்களும ஆண்களும் சமமானவர்கள் எனக் கருதப்படவில்லை. அதாவது, ஆணுக்குப் பெண் தாழ்ந்தவளே என்பதும், இது பெண்களின் உடல்கூறு மற்றும் படைப்பு ரீதியாகவும் கருதப்பட்டு வந்தது. பெண்கள் நுண்ணறிவில் மிகவும் தாழ்ந்தவர்கள் எனக்கருதப்பட்டது. இந்த எண்ணம் அனைத்துலக ரீதியானதாகவும், பெண்கள் மிகவும் முக்கியமான விஷயங்களில் பங்கெடுப்பதிலிருந்து தடுக்கவும் பட்டனர். ஒரு சில நாடுகளில், மனிதனுக்குத் தாழ்வான ஒரு படைப்பாக பெண்கள் கருதப்பட்டும் அவ்வாறு போதிக்கப்படும் அளவிற்கும் மனிதன் சென்றான். இவ்விஷயம் குறித்த அப்துல் பஹாவின் பல்வேறு எழுத்துக்களிலிருந்து மேலும் ஒன்று. அவர் கூறுவது: முற்காலத்தில், இந்தியா, பாரசீகம் மற்றும் கிழக்கு நாடுகள் முழுவதும், அவள், அதாவது பெண், ஒரு மனிதஜென்மமாகவே கருதப்படவில்லை. ஓரு சில அரபு இனங்கள், தங்கள் பெண்டிர்களை தாங்கள் வளர்க்கும் கால்நடைகளோடு சேர்த்தே கணக்கிட்டனர். அவர்களுடைய மொழியில் பெண்களுக்கான பெயர்ச்சொல் ‘கழுதை’ எனும் சொல்லின் அர்த்தத்தையும் கொண்டிருந்தது. அதாவது அச்சொல் கழுதை மற்றும் பெண் என இரு பொருள்பட இருந்தது. ஒரு மனிதனின் செல்வம் அவன் பெற்றிருந்த கால்நடைகளைக் கொண்டே கணக்கிடப்பட்டது. ஒரு மனிதனைப் பார்த்து ஒருவர் இகழ்ச்சியாக கூறக்கூடியவற்றில் “பெண்” எனும் வார்த்தையே அதி தாழ்வானதாகும். பண்டைய காலங்களில் பெண்கள் எழுதவோ படிக்கவோ தெரியாமல் இருப்பதே விவேகமாகும் எனக் கருதப்பட்டது. அவள் அடிமை வேலை புரிவதிலேயே தனது காலத்தை தள்ளவேண்டும்.

ஆகவே, தெளிவாகவும் ஒரு சில வார்த்தைகளிலும் காலங்காலமாக பெண்கள் பொதுவாகவே நடத்தப்பட்ட விதம் குறித்து அப்துல் பஹா கூறியுள்ளதை நாம் காண்கின்றோம். அப்துல் பஹா இதை ஏன் எழுத வேண்டும்? நான் படித்த இந்த கடுமையான வார்த்தைகளின் வாயிலாக அவர் என்ன கூற விழைகிறார்? சரித்திரக் குறிப்புகளைக் காண்கையில் பெண்கள் குறித்த பாகுபாடுகள் பல சரித்திர ரீதியான எண்ணங்களாக அல்லது உருவகங்களாக வெளியிடப்பட்டிருப்பதைக் காணலாம். உதாரனமாக, பெண் என்பவள் தான் ஒரு தாழ்வான பிறவி என்பதால் இயற்கை அன்னையோடு கூட்டுச் சேர்ந்து கொண்டவள், கருவளத்தின் மூலாதாரம் எனும் வகையில் மர்மமான, கட்டுப்படுத்த முடியாத சக்திகளைக் கொண்டவள், பெண் என்பவள் இயற்கை சக்திகளை பலியிடுபவள் என்பதெல்லாம் சரித்திரக் கருத்துக்கள். இக்கருத்துக்களை பண்டைய கால மேல்நிலை பெண் தெய்வங்களின் வாயிலாகவும், பழைய ஏற்பாட்டில் சாலமனின் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட உவமைகளின் வாயிலாகவும் நாம் காணலாம். பெண் என்பவள், மர்மான ஒரு சக்தி படைத்தவள் எனவும். அவள் கட்டுப்பாடுகள் மூலமாகவும், புனிதப்படுத்தும் சடங்குகள் வாயிலாகவும் அடக்கப்பட வேண்டியவள் எனவும் கருதப்பட்டு வந்தது.

பெண் என்பவள் தாழ்வானவளாகவும், மாறுபட்ட ஒரு பிறவியாகவும், மாறும் குணம் கொண்டவளாகவும், உணர்ச்சிவசப்படுபவளாகவும், கல்வி பெறுவதற்கு ஆற்றலற்றவள் என்பதும் மற்றொரு கருத்தாககும்.

பெரும்பாலும் மரபுச்சமயங்களில் காணப்படும், பெண்கள் சமத்துவமற்ற வகையில் நடத்தப்படும் மற்றொரு முறையாக, அவள் கற்புநெறியின் முன்மாதிரியெனவும், பக்தை எனவும், கன்னித் தன்மையுடையவள் எனவும், கீழ்ப்படிபவள் எனவும், சாது எனவும், ஆணுக்கு அடிபனிபவள் எனவும், வீட்டுப் பணிகளுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவள் எனவும், சட்டரீதியிலோ அரசியல் ரீதியிலோ அதிகாரம் இல்லாதவள் எனவும், பகுத்தறிவு சார்ந்த எந்த விஷயமாயினும், அதை தனது கணவனிடமோ, தந்தையிடமோ, சகோதரனிடமோ, சுருக்கமாக ஓர் ஆணிடமே கொண்டுசெல்ல வேண்டியவள் எனக் கருதப்படுவதே உள்ளது. இந்தக் கருத்து, அதிகமான வரலாற்றுக் குறிப்புகளில் அடங்கியும், ஒரு சில சட்டமுறைகளிலும் இணைக்கப்பட்டிருந்தது. 1804ல் பிரான்ஸ் நாட்டில் நெப்போலியனின் சமூக சட்டமுறை, உரிமைகள் இல்லாதவர்களென, சிறார்களையும், திருமணமான பெண்களையும், குற்றவாளிகளையும், மற்றும் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களையும் குறிப்பிடுகின்றது. நெப்போலியனின் 904 சட்டக் குறிப்பின்படி பெண்களுக்கு உரிமைகள் ஏதும் கிடையாது. ஷொப்பன்ஹோவர் என்பவர், பெண்கள் தங்கள் இயல்பினால் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட வேண்டியவர்கள் எனவும், அவர்களுக்கு பாதுகாப்பவர் ஒருவர் அவசியமெனவும், அவர்கள் கீழ்படிதலுக்கென படைக்கப்பட்டவர்கள் எனவும் கூறியுள்ளார். ஆகவே, இந்தப் பல்வேறு மற்றும் மாறுபட்ட கண்ணோட்டங்களின் வாயிலாக பெண்கள்பாலான சமத்துவமற்ற போக்கு வெளிப்படுத்தப்பட்டது.

இந்த நிலை குறித்து சமயம் என்ன செய்துள்ளது? மீண்டும், இவ்விஷயம் வாதத்திற்குட்படுவதையே காண்கின்றோம். பெண்களை நடத்தும் விதம் குறித்து சமயங்களின் பங்கைக் கண்ணுறுகையில், பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் இருக்கின்றன. மீண்டும் நாம் நமது சமயத்தின் புனிதமும் அதிகாரமும் நிறைந்த எழுத்துக்களின் பக்கமே வழிகாட்டலுக்காக திரும்பவேண்டியுள்ளது. இந்தப் பஹாய் எழுத்துக்களை நாம் ஆராய்கையில், சமயங்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை புரிந்துகொள்ள எனக்கு உதவும் வகையில் மூன்று கோட்பாடுகள் இருப்பதைக் காண்கின்றேன்.

முதல் கோட்பாடு பஹாவுல்லாவின் ஒரு கூற்றில் காணப்படுகின்றது. அவர்: “கடவுளின் பார்வையில் பெண்களும் ஆண்களும் என்றும், இனி என்றென்றும், சமமானவர்களே. ஆகவே, இது முதல் கோட்பாடு, அதாவது – கடவுளின் பார்வையில் சமத்துவம்.

இரண்டாவது கோட்பாடு, பெண்கள் பெரும் நெறிமுறை சார்ந்த மன உறுதியுடையவர்கள் என்பது குறித்தது. அப்துல் பஹா கூறுவது: “ஓர் ஆணைவிட ஒரு பெண்ணுக்கு அதிகமான நெறிமுறை சார்ந்த மன உறுதி உள்ளது. அபாயங்கள் மற்றும் நெருக்கடி மிக்க நேரங்களில் காரியநிர்வாகம் செய்திட ஆற்றலளிக்கும் விசேஷ கொடைகளும் அவள் பெற்றுள்ளாள்.

மூன்றாவது கோட்பாடு, வரலாற்று ரீதியில், சமயங்கள் ஆண்களை பெண்களுக்கும் மேம்பட்டவராகவே சித்தரித்துள்ளன. அப்துல் பஹா கூறுவது: அவர், அதாவது பஹாவுல்லா, ஆண் பெண் சமத்துவத்தை ஸ்தாபித்துள்ளார். பஹாவுல்லாவின் போதனைகளுக்கு இது விசேஷமாகும். ஏனெனில் மற்ற எல்லா சமயங்களும் பெண்களை ஆண்களுக்கு கீழ்ப்பட்டவர்களாகவே சித்தரித்துள்ளன.

இறைவனின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம், பெண்களுக்கு அதிகமான நெறிமுறை சார்ந்த மன உறுதியுண்டு, மற்றும் எல்லா சமயங்களும் பெண்களை ஆண்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாகவே சித்திரித்துள்ளன, எனும் மூன்று கோட்பாடுகள்.

இம்மூன்று கோட்பாடுகளும், சமயங்கள் பெண்களை இதுகாறும் பாவித்துள்ள விதம் குறித்த ஆய்வை ஒளிபெறச் செய்யும் அஸ்திவாரங்கள் என்பது என் கருத்தாகும். உதாரனமாக, கடவுளின் பார்வையில் சமத்துவம் எனும் கேள்வி தொட்டு, திருக்குரானிலும், புதிய ஏற்பாட்டு நூலின் காலேஷியன்ஸ் அத்தியாயத்திலும், மற்ற புனித நூல்களிலும் அற்புதமான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இக்குறிப்புகள், இறைவனின் அவதாரங்களின் வார்த்தைகளின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வார்த்தைகள் தற்போதும் அவற்றின் அதிகாரபூர்வ நிலையில் வழக்கில் உள்ளன.

இவ்விரண்டாவது கோட்பாடு நெறிமுறை குறித்த மனோ தைரியமாகும். ஆணைவிட பெண்ணுக்கே அதிக நெறிமுறை சார்ந்த மன உறுதி உள்ளதென அப்துல் பஹா கூறுகின்றார். சமய சரித்திரத்தை நாம் பார்க்கையில், ஒவ்வொரு சமயத்தின் ஆரம்ப காலங்களிலும் பெண்கள் தங்கள் பங்கிற்கும் அதிகமான நிலையிலேயே செயல்பட்டிருப்பதைக் காணலாம். அவர்கள் அச்சமயங்களுக்கு உறுதியையும், நம்பிக்கையையும் நிர்வாகத் திறனையும் அளித்துள்ளனர். உதாரனமாக, கிருஸ்தவ சமயத்திற்கு மகதல மேரி ஆற்றிய சேவையை, முகம்மதுவின் சமயப்பணிக்காலத்தின் ஆரம்பத்தில் அவருக்கு உருதுணையாக காத்திஜா அவர்கள் ஆற்றிய பங்கை, முகம்மது அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டபோது பாத்திமா அவர்கள் காட்டிய மன உறுதியையும், அவர் முகம்மது அவர்களுக்கு காட்டிய ஆதரவையும் பாருங்கள். அப்துல் பஹா மற்றும் பாதுகாவலரின் காலங்களில் பாஹிய்யா காஃனும், தாஹிரி, நவ்வாப், ஆகயோரைப் பாருங்கள். அப்துல் பஹாவின் காலத்திலும், பாதுகாவலரின் காலத்திலும், அவர்களுக்கு பாஹிய்யா காஃனும் அளித்த உறுதியான ஆதரவையும், பாதுகாப்பகத்தின்(Guardianship) ஆரம்பகாலங்களில் அவர் அளித்த நிர்வாகத் திறனையும் பாருங்கள். இவற்றிலும் மற்றும் சமய வரலாற்றின் பிற உதாரனங்களின் வாயிலாகவும், அப்துல் பஹா குறிப்பிடும் நெறிமுறை சார்ந்த மன உறுதியைக் காணலாம்.

இப்போது சமயங்கள் பெண்களைவிட ஆண்களே மேம்பட்டவர்கள் எனச் சித்தரிப்பதாகத் தோன்றும் மூன்றாவது கோட்பாட்டைக் காண்போம். இங்கு, சமூக கோட்பாடுகளுக்கும் ஆன்மீக நெறிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நாம் உணர வேண்டும். எல்லா மதங்களையும் காண்கையில், ஆன்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எப்போதுமே சமூக ரீதியில் ஒரு வேறுபாடு என்றென்றும் இருந்து வந்துள்ளது. இந்த வேறுபாடு அந்தந்த காலங்களின் சமூக சூழ்நிலைகள் அல்லது சுற்றுச்சூழலை பொறுத்தும் இருந்துள்ளது. ஆண்கள் பெண்களுக்கும் அவர்களைப் போன்றோர்களுக்கும் பாதுகாப்பளிப்பவர்களாக இருந்துள்ளனர். இருந்தபோதிலும், இங்கு முக்கிய பிரச்சினையானது பல்வேறு மதங்களின் போதனைகளில் உள்ள சமூக கோட்பாடுகள் அல்ல; ஆனால், பெண்களுடனான ஆண்களின் உறவில் உள்ள ஆன்மீக மதிப்புணர்வே பிரச்சனையாக உள்ளது. இங்கும் வரலாற்றைக் காண்போமானால் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். ஆன்களின் வசப்பட்ட சமயங்களில் ஆண் சமயகுருக்கள் மற்றும் இறைமையியலின் எழுச்சியின் போதெல்லாம் இத்தகைய சூழ்நிலைகள் உருவாகின்றதை வரலாற்றில் காணமுடிகிறது. என்னைப் பொறுத்த வரையில் சமயங்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்திற்கு இந்த சூழ்நிலையே முக்கிய நிலையில் உள்ளது.

காலப்போக்கினாலும், சமயகுருக்களின் எழுச்சியினாலும், இறைமையியலின் மேம்பாட்டினாலும், சமயங்கள் பெண்களை விட ஆண்களுக்கே அதிக மதிப்பளிக்க முற்பட்டன. உதாரனமாக, தால்முட்டில்(யூத மதம்) பின்வரும் வாக்கியத்தைக் காணலாம்: என்னை ஒரு புறவினத்தவனாக, முட்டாளாக, அல்லது ஒரு பெண்ணாக படைக்காத இறைவா, நீர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

தால்முட்டிலும்.. புதிய ஏற்பாட்டின் கோரிந்தியனிலும், மாதாகோவில்களில் பெண்கள் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவர்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இது முக்கியமல்ல, ஏனெனில் சட்டமே பின்வருமாறு கூறுகின்றது: அவர்கள்(பெண்கள்) ஏதேனும் தெரிந்துகொள்ள விரும்பினால் அவர்கள் இல்லத்தில் தங்கள் கணவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும். ஒரு பெண் மாதா கோவிலில் வாய்திறந்து பேசுவது வெட்கக்கேடானது. கிருஸ்தவ இறைமையியல்வாதிகள் பெண்களை மட்டப்படுத்தினர். கி.பி. 2வது நூற்றாண்டில், டிட்டிலியன், இயேசு சிலுவையில் அரையப்பட்டதற்கு பெண்களையே குறை சொன்னான். ஏனெனில் பெண்கள் தங்கள் பூர்வீகத்தை ஏவாளிடமிருந்தே பெற்றுள்ளனர்; ஏவால் வாழ்வின் மிக உயர்ந்த குறிக்கோள்களுக்கு அப்பால் ஆதாமை ஈர்த்தாள்; இது பூர்வபாவத்தை உருவாக்கியது, பூர்வபாவத்தின் பயனாக இயேசு சிலுவையில் அரையப்பட்டும் மூன்று நாட்கள் கீழே நரகத்திற்குச் செல்லவும் வேண்டியதாயிற்று. ஆக, அவன் இயேசு சிலுவையில் அரையப்பட்டதற்கு பெண்குலத்தையே குற்றம் சாற்றினான். டிட்டிலியனின் எழுத்துக்களில் ஒரு பகுதி பெண்களுக்குக் கூறுவது யாதெனில்: இறைவன் உங்கள் இனத்திற்கு அளித்த தண்டனை இக்காலத்திலும் செயல்படுகின்றது, அதன் பயனாக விளையும் குற்றவுணர்வும் செயல்படவே செய்யும். நீங்கள் சாத்தானுக்கான வாயில்கள். சாத்தானே எதிர்ப்பதற்குத் துணியாத அவனை நீங்கள்தாம் வற்புறுத்தினீர்கள் என மேலும் மேலும் கூறிக்கொண்டே போகலாம். கி.மு. 585ல் கிருஸ்தவக்கோவில் ஒன்றின் வழிகாட்டி கூறுவது: பெண்களுக்கு ஆன்மாவென ஒன்று இருந்தால், அது ஆண்களின் ஆன்மாவுக்கும் கீழான நிலையில் உள்ள ஒன்றாகவே இருக்கவேண்டும், அதாவது மிருகங்களுக்கு உள்ளதுபோல.

தனது பூர்வபோதனைகளிலிருந்து வேறுபட்டும், மதகுருக்களின் அமைப்புமுறையும், இறைமையியலும் எழுச்சிகண்டுள்ள இஸ்லாத்தின் வரலாறு, கிருஸ்தவ வரலாற்றுக்கும் மேம்பட்டதல்ல. பொதுவாக, தற்கால இஸ்லாமிய இறைமையியல்வாதிகள், பெண்கள் குறித்த தங்களது பிரத்தியேக கண்ணோட்டம் ஒன்றை எழுதிவைத்துள்ளனர். இக்காண்ணோட்டம், மூன்று கோட்பாடுகளின் அடிப்படையில் வரையப்பட்டுள்ளது. ஒன்று, ஆண்களோடு ஒப்பிடுகையில், உயிரியல் ரீதியில், உதாரனமாக பெண்களின் மாதவிடாய், ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே சமத்துவமற்ற நிலைய உருவாக்கியுள்ளது. இரண்டாவதாக, ஆண்களின் பாலுணர்வு கட்டுப்படுத்தப்பட முடியாததால், தினசரி வாழ்க்கையில் பெண்கள் கண்காணாமலேயே வாழவேண்டும். மூன்றாவதாக, இல்லங்களில் ஆண்களுக்கே அதிகாரம் உள்ளது.

இஸ்லாமிய பழமைவிரும்பிகளின் எழுச்சியின் பயனாக, இக்காலத்து இஸ்லாமிய சட்டங்கள் பெண்கள்பால் மேலும் மேலும் அதிகமான ஒரவஞ்சனையுனர்வை வெளிப்படுத்தி வருகின்றன. அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுவது, முகத்திரை அனிவது, கல்வி பெறுவதில் கட்டுப்படுத்தப்படுவது ஆகியவை மட்டுமின்றி, சட்ட அமைப்புமுறை ரீதியிலும் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர். உதாரனமாக, இன்றைய இஸ்லாமிய நாடு ஒன்றில், பெண் ஒருத்தி ஓர் ஆணின் மீது கற்பழிப்பு புகார் ஒன்றை செய்தும், அவளால் அதை நிரூபிக்க முடியாமலும் போனால், சோரம் போன குற்றத்திற்காக அவளே பிறகு குற்றஞ்சாற்றப்படுகின்றாள். வேறொரு இஸ்லாமிய நாட்டில் குருடியான பதின்மவயது கற்பினி பெண் ஒருத்திக்கு 15 பிரம்படியும், மூன்று வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. ஏனெனில் தன்னைக் கற்பழித்தவர்களை அவளால் அடையாளம் காட்ட முடியவில்லை; காரணம், அவள் குருடி! பெண்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனும் இந்தப் பாரம்பரிய கருத்து, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது போன்றவை, குறிப்பிட்ட அளவிற்கு இன்று எழுச்சி கண்டுள்ளன. இது கிருஸ்தவ சமயம், இஸ்லாம், இந்து, மற்றும் பிற சமயங்களில் பழமைவிரும்பகளின் எழுச்சியின் பயனாக தோன்றியுள்ளது.

இக்காலத்தில் நடப்பவற்றை இப்போது காண்போம். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இருவிதமான கண்ணோட்டம் ஒன்றைக் காணலாம். ஒரு புறம், சமத்துவத்தை நோக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மறுபுறமோ, இன்னமும் குறைபாடுகள் இருக்கின்றன. அவை, பஹாய் சமூகமும் அதன் போதனைகளும் இதில் ஒரு முக்கிய பங்காற்றுவதற்கு வாய்ப்பளிக்கின்றன. கல்வி, பெண்கள் கல்லூரிகள், 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் பல்கலைகழகங்களில் இருபாலர்கல்வி, ஆகியவை சமத்துவத்தை நோக்கி ஒரு பெரும் உந்துசக்தியளித்துள்ளன.

1892ல் பஹாவுல்லா இயற்கை எய்திய காலகட்டத்தில், ஆண்களுக்குச் சமமான வாக்குரிமையை பெண்களுக்கு எந்த நாடுமே வழங்கிடவில்லை. அவர் இயற்கை எய்தியபோது எந்த நாடுமே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை. அதன் பிறகு, 1893ல் நியூ சீலாந்தும், 1902ல் ஆஸ்திரேலியாவும், பிறகு வாக்களிப்பதை அனுமதிக்கும் மற்ற எல்லா நாடுகளும் சிறுக சிறுக பெண்களுக்கு குறிப்பிட்ட அளவு வாக்குரிமை அளித்துள்ளன.

1848ல், ஐக்கிய அமெரிக்காவில், வாக்களிக்கும் புனித உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனும் பிரகடனத்தை பெண்கள் உரிமைப் பேராளர் மாநாடு ஒன்று வெளிப்படுத்தியது. ஆனால், இப்பிரகடனம் நடப்பிற்கு வருவதற்கு 80 ஆன்டுகளுக்கும் மேல் ஆகியது.

தொழில்துறையைப் பொறுத்த வரையில் பெண்களுக்கான வாய்ப்புக்களில் பெரும் அடிகள் எடுத்துவைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகவே உள்ளது. இது பெண்களுக்காக திறந்துவிடப்பட்ட வேளை வாய்ப்புக்களை மட்டுமே சார்ந்துள்ளது. இருந்தபோதும், மருத்துவம், சட்டத்துறை மற்றும் பௌதீக விஞ்ஞானத்துறை ஆகிய பாரம்பரிய துறைகளில் பெண்களுக்கு வாய்ப்புக்கள் கிடைப்பது கடினமாகவே உள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களின் விடுதலையில் நாம் பெற்றுள்ள வெற்றிகளைக் கண்டு நாம் திருப்தி அடைந்துவிடலாகாது. மாறாக, இப்போதும் நடப்பில் உள்ள ஒரு சில குறைபாடுகள் யாவை என நாம் சிந்திக்கவேண்டும். உதாரனமாக, 1980ல் ஐக்கிய நாட்டின் கணிப்பு ஒன்றில், உலக ஜனத்தொகையில் சரிபாதியான பெண்கள், அதில் மூன்றில் இரண்டு பங்கு வேளைகளை தாங்களே செய்கின்றனர், அதன் வருமானத்தில் பத்தில் ஒரு பங்குதான் பெருகின்றனர், அதன் செல்வங்களில் நூற்றில் ஒரு பங்கே அவர்களுக்குச் சொந்தம், மற்றும் உலகில் வாழும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களில் பெண்கள் மூன்றில் இரண்டு பங்கினர் ஆவர். ஆகவே, வெளிப்படையாகவே பெரும் குறைபாடுகள் உள்ளன. இந்தியாவிலும் சீனாவிலும் பெண் சிசுஹத்தி இன்றும் நடைபெறுகின்றது. உலகின் பல பாகங்களில் பெண்களின் பாலியல் உருப்புக்களை உருக்குலைக்கும் பழக்கம் இன்னமும் தொடருகிறது. சீதனம் குறைவாகக் கொண்டு வரும் பெண்களை எரிக்கும் செயல் இந்தியாவில் காணக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. சமய பழமைவிரும்பிகளின் ஏற்றம் ஆகியன என மேலும் பலவற்றைக் கூறலாம்.

1984ல் நியு யார்க்கில் உள்ள பஹாய் அனைத்துலக சமூகம் எழுபது தேசிய ஆன்மீக சபைகளைக் கொண்டு ஒரு புள்ளிவிவர கணிப்பு செய்தது. அதில், அவற்றின் நாடுகளில் வாழும் பெண்களின் நிலைமை குறித்து விவரங்கள் கேட்கப்பட்டன. இதன் தொடர்பில் அந்த சபைகளிடமிருந்து கிடைக்கப்பட்ட விவரத்தின்படி இவ்வித பாரம்பரிய சமத்துவமில்லாமை ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் இருந்தது. அவையாவன, தீர்மானங்கள் செய்வதில் ஆண்களின் ஆக்கிரமிப்பு, பிரயாணம் செய்வதில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லாமை, பெண்ணைவிட மேலானவன் எனும் எண்ணம், கலந்துரையாடல்களில் பெண்களின் கருத்துக்களுக்கு மதிப்பில்லாமை ஆகியவை. வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு வேளை உயர்வு பெறுவதில் இன்னமும் பெரும்படியான முட்டுக்கட்டைகள் உண்டு. பெரும்பாலான நிறுவனங்களில் பெண்கள் ஊதியம் குறைவாகவும், செல்வாக்கு இல்லாத பதவிகளிலுமே அமர்ந்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள நிலைக்குலைந்து வரும் சமூகங்களில் உயர்ந்து வரும் சீர்கேடுகளினால் பென்களின் நிலை மேலும் அபாயத்திற்குள்ளாகியுள்ளது. ஆபாசப்படங்களின் அதிகரிப்பு, கிரிமினல்களாலும், மனங்கெட்டவர்களாலும் பெண்கள் கொடுமைகளுக்குள்ளாக்கப்படுவது, கற்பழிப்பு சம்பங்களின் அதிகரிப்பு, வேலை வாய்ப்புக்கள் குறைவாக இருக்கும் காரணத்தினால் பெண்கள் விபச்சாரங்களில் ஈடுபடுவது, வேலை பற்றாக்குறைக்கு பெண்களைக் காரணமாக்குவது, திருமணங்கள் சீர்குலைவதற்கு பெண்களே காரணமென்பது, குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெண்களே காரணமென்பது ஆகியவற்றைக் கூறலாம். இக்காலத்திலும் பெண்களை நடத்தும் முறையில் நடப்பில் உள்ள பெரும் குறைபாடுகளின் உதாரனங்களே இவை யாவும்.

பஹாய் போதனைகளின்பால் திரும்பும் முன், சரித்திர ரீதியில் குடும்பத்தில் பெண்களின் பங்கு குறித்து மேலோட்டமாகப் பார்ப்போம். குடும்பத்தில் ஆணே தலைவன் என பெரும்பாலான சமூகங்களால் உருவரையப்பட்டுள்ளது. இந்த உருவரை பின்வருமாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது: மனைவி கணவனுக்கு கீழ்படிபவள், ஆணே தீர்மானங்கள் செய்வதில் ஆதிக்கம் செலுத்துபவன், பெண் பெரும்பாலும் வீட்டிலேயே அடைந்துகிடப்பவள். உதாரனமாக, விவிலிய நூலின் எபீஃசியன்ஸ் பகுதியில் பின்வருவதைப் போன்று காணலாம்: இயேசு, புனிதசபைக்குத் தலைவராக விளங்குவது போன்று கணவன் மனைவிக்குத் தலைவனாக இருப்பதால் மனைவிகள் இறைவனைப்போன்று கணவனுக்கும் கீழ்படிந்து நடக்க வேண்டும். சபை இயேசுவுக்குக் கீழ்பட்டிருப்பது போல், யாவற்றிலும் மனைவிகள் தங்கள் கணவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்.

உலகிலுள்ள மற்ற சமூகங்களிலும் இது போன்ற பழக்க வழக்கங்களைக் காணலாம். இல்லங்களில் காணப்படும் ஆண் ஆதிக்கத்திற்கெதிரான பெண்களின் மறுமொழி இரு வகையாக உள்ளது: ஒன்று, கீழ்படிந்து போதல், பார்க்கப்போனால் அதற்கு ஒத்துப்போவது போலும் இருக்கும். அதாவது, தான் ஒரு பேதையைப் போன்ற நிலையை உருவாக்குவது. இதை நாம் அடிக்கடி ஆங்காங்கு படித்துத் தெரிந்துகொள்ளவும் கூடும். மற்ற வகையானது, கடும் எதிர்ப்பினால் அடக்கப்பட்ட கொந்தளிப்பை உட்படுத்தியதாகும். இது, தன் குழந்தைகளிடமே தன் கணவனைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது, புறம்பேசுவது மற்றும் அதைப்போன்ற செயல்களில் ஈடுபடுவது – இவை யாவுமே ஆண் ஆதிக்கத்திற்கு எதிரான பின்விளைவான மறுமொழிகளே.

மனித சமுதாயத்தின் ஒரு சோகமான அம்சம் என்னவெனில், இல்லங்களில் ஆண் ஆதிக்கத்தை பலாத்காரமான முறையில் சுமத்தியதே ஆகும். மனவிகளை உடல்வதை செய்ததே இதன் உச்சகட்டமாக விளங்கியது. பண்டைய காலங்களிலும் சரி, இப்போதும் சரி, இச்செயலினால் பெரும்பாலான சமுதாயங்கள் இழிவடைந்துள்ளதாகவே காணப்படுகின்றது.19ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் பொதுச் சட்டமாகப்பட்டது கணவன்மார்களுக்குப் பின்வரும் சலுகையை வழங்கியது, “தன் மனைவியை இணக்கமான எந்த தடி கொண்டும் கண்டிக்கலாம்,” என அதிகாரம் வழங்கியது. பிறகு, வழக்கு மன்றங்கள் இணக்கமான தடி என்பது என்ன என்பது குறித்து விளக்கமளிக்க கோரப்பட்டன. அவை, இணக்கமான தடி என்பது ஒரு மனிதனின் கட்டை விரலின் அளவுக்கு மிஞ்சாத கோல்கள் என விளக்கமளித்தன. அதாவது, ஒரு மனிதனின் கட்டை விரலுக்கு மேற்போகாத அளவு கொண்ட ஒரு கோலோ, தடியோ, கட்டையோ கொண்டு ஒரு மனிதன் தன் மனைவியைக் கண்டிக்கலாம்.

1871ல், ஐக்கிய அமெரிக்காவில் உள்ள வழக்கு மன்றங்கள், ஒரு பழமையான அதிகாரம் மீட்டுக்கொள்ளப்படுவதற்கு காலம் கனிந்துவிட்டதென முடிவெடுத்தன. அது, ஒரு மனிதன் தன் மனைவியை தடி கொண்டு அடிப்பதற்கும், அவளுடைய முடியைப் பிடித்து இழுப்பதற்கும், அவள் குரல்வளையை நெறிப்பதற்கும், அவள் முகத்தில் உமிழ்வதற்கும், அல்லது அவளைத் தரையில் தள்ளி காலால் எட்டி உதைப்பதற்கும் அல்லது அது போன்ற வேறு அவமானங்களைப் புரிவதற்குமான கணவனுடைய அதிகாரமாகும். இவை 1871ல் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வழக்கு மன்றத்தின் தீர்ப்புகளிலிருந்து மேற்கோளிடப்பட்டவையாகும். அவை, “இவ்விதமான பழக்கங்களை மீட்டுக்கொள்வதற்கான காலம் கனிந்துவிட்டது,” என குறிப்பிட்டன.

இக்காலத்திலும் கூட மனைவியைத் துன்புறுத்துவது நடக்காத ஒன்றல்ல, என்பதை உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். நியு யார்கில் நடை பெற்ற ஒரு வழக்கு குறித்து நான் படித்தேன். அதில், மனைவி ஒருத்தி தன் கணவனைக் கொலை செய்ததாக கொலைக் குற்றம் சாற்றப்பட்டிருந்தாள். வழக்கின் போது, கணவன் அவளை படிகளிலிருந்து உதைத்துக் கீழே தள்ளியதாகவும், காரின் பின்புறத்தில் வைத்து அவளைப் பூட்டியதாகவும், கொதிக்கும் ஷவரின் கீழ் அவளை பிடித்துகொண்டிருந்ததாகவும், மற்றும் அவளை சிகரெட்டினால் சுட்டதாகவும் தெரியவந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அந்த கொடுமைகளின் முடிவில் அந்தப் பெண் தன் கணவனைக் கொலை செய்தாள். இப்போது அவள் 15 வருட ஆயுள் சிறை அனுபவித்து வருகின்றாள். ஆகவே, மனைவியைக் கொடுமைப் படுத்துவதென்பது, பண்டைய காலத்திலும் சரி, இப்போதும் சரி, நடைமுறையில் இருக்கும் ஒன்றாகும். மனைவிமார்கள் வதை குறித்த ஒரு சமூக ரீதியான கருத்துக்கணிப்பு பின்வரும் முடிவிற்கு வந்தது. அதாவது, “மனைவிகள் வதைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு முழுமையான இருபாலர் சமத்துவம் அவசியம்,” என்பது.

சரி, இப்போது இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுற்றதால், இந்த மிக முக்கியமானதும் சிக்கலானதுமான விஷயம் குறித்து பஹாய் போதனைகள் என்ன கூறுகின்றனவென பார்ப்போம். பஹாய் போதனைகளில் பெண்களின் நிலை, சட்டரீதியானது மட்டுமல்ல, ஆனால், ஆன்மீகமானதும் கல்விரீதியானதும் கூட, என பாதுகாப்பாளர் ஷோகி எபெஃன்டி கூறுகின்றார். இப்போதனைககளை பல வகைகளாக ஆராயலாம். முதலாவதாக, சமத்துவமெனும் மிக அடிப்படையான கோட்பாட்டைப் பார்க்கலாம். நான் அது குறித்து பல புனிதவாசகப் பத்திகளில் இருந்து எடுத்துக்காட்டுகள் காட்ட விரும்புகிறேன். அவற்றில் பெரும்பான்மையானவற்றை சமீபத்தில், பஹாய் உலக மையத்தில் ஆராய்ச்சிப் பிரிவினால் தயாரிக்கப்பட்டும், உலக நீதி மன்றத்தால் வெளியிடப்பட்டதுமான, பெண்கள் குறித்த வாசகத் திரட்டில் காணலாம்.

முதலாவதாக சமத்துவம் குறித்த கோட்பாட்டைப் பார்ப்போம். இது குறித்து பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள பல குறிப்புகள் உள்ளன: “இந்த நாளில் தெய்வீக அருளெனும் கரம் எல்லாவிதமான வேறுபாடுகளையும் அகற்றியுள்ளது. கடவுளின் சேவகர்களும், அவரது பணிப்பெண்களும், ஒரே நிலையிலானவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.” ஆண்களையும் பெண்களையும் குறித்து அப்துல் பஹா கூறுவது: “ஓர் ஆன்மீக ரீதியான கண்ணோட்டத்திலிருந்து அவர்களுக்கிடையில் எந்த வேறுபாடும் கிடையாது.” ஆகவே, நமது சமயத்தின் எழுத்துக்கள் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ளன – ஓர் ஆன்மீக ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வேறுபாடுகள் கிடையாது. வேறொரு இடத்தில், மனுக்குலத்தைப் பற்றி குறிப்பிடுகையில், அதற்கு இரு பாகங்கள் உண்டென கூறுகின்றார். அவை இரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்பவையெனவும் கூறுகின்றார். ஆன்மீக ரீதியில் இரண்டிற்கும் வேறுபாடுகள் கிடையாது, நடைமுறை ரீதியில் இரண்டும் ஒன்றையொன்று நிறைவு செய்பவையாகும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கு மேல் ஒருவரை உயர்த்திக் கூறுவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தும் வாசகங்கள் உண்டு. அவை, சட்டங்கள் ஆணையும் பெண்ணையும் சமமாகவே உட்படுத்த வேண்டும் எனவும் கூறுகின்றன.

இரண்டாவதாக, திருமணம் மற்றும் குடும்பங்கள் குறித்த பஹாய் போதனைகள். இங்கு, காலங்கள் தோறும், பார்க்கப்போனால் ஆயிரமாயிரம் வருடங்களாக, உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயங்களினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளவற்றுக்கும் பஹாய் போதனைகளுக்கும் இடையிலான முக்கியமானதும், குறிப்பிடத்தக்கதுமான வேறுபாட்டை நாம் காணுகின்றோம். அது, நமது சமயத்தில் தம்பதிகளுக்கிடையிலும் குடும்ப அங்கத்தினர்களுக்கும் இடையிலான உறவாகப்பட்டது, சமத்துவம், கலந்தாலோசனை, ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தாமலும் இருப்பது ஆகியவற்றின் அஸ்திவாரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில வாசகங்களைப் படிப்பதற்கு என்னை அனுமதிக்குமாறு வேண்டுகின்றேன். ஒரு பஹாய் குடும்பத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை, ஒரு முழு சமூகத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையைப் போன்று சமயத்தின் முக்கிய எண்ணத்தையே பிரதிபலிக்க வேண்டும். இந்த எண்ணம், ஆதிக்க அதிகாரம் அல்ல, ஆனால், பனிவான தோழமை; தன்னிச்சையான அதிகாரமல்ல, ஆனால், வெளிப்படையானதும் அன்பு சூழ்ந்ததுமான ஒரு கலந்துரையாடலாகும், என பாதுகாவலர் குறிப்பிடுகின்றார். வேறொரு இடத்தில், கணவன் மனைவிக்கிடையே நிகழக்கூடிய முடிவெடுக்கும் செயல் பற்றி குறிப்பிடுகின்றது. அது கூறுவது: சமநிலை மற்றும் மிதப்போக்கு குறித்த விழிப்புணர்வால் ஊக்கமளிக்கப்பட்ட, முழுமையானதும் வெளிப்படையானதுமான குடும்பக் கலந்துரையாடல் குடும்ப தகறாறுகளுக்கு பூரனநிவாரனமாக இருக்கக்கூடும். கணவர்கள் மனைவிகளையோ அல்லது மனைவிகள் கணவர்களையோ ஆதிக்கம் செலுத்த நினைக்கக்கூடாது. இதற்கும், காலங்காலமாக, திருமனங்களின் ஓர் அம்சமாக, ஆண்களே எல்லா தீர்மானங்களையும் எடுப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் கவனிக்கவும்.கலந்தாலோசனையின் இந்த அம்சம் குறித்து, பஹாய்களாகிய நாம், பெரிய அளவில் பெரும்பான்மையான கருத்தே தீர்மானமாகக் கொள்ளப்படும் பஹாய் கலந்துரையாடலோடு, நாம் பழக்கப்பட்டிருக்கின்றோம். கணவனும் மனைவியும் கொண்ட குடும்பமும், அங்கு கலந்துரையாடலும் நிகழும் ஒரு சூழ்நிலையில் என்ன நடக்கின்றது, தீர்மானங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன? உலக நீதி மன்றம் கூறியது: சில நேரங்களில் கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் விட்டுக்கொடுத்துப்போவது அவசியம். ஆனால், இதில் ஒருவர் மற்றவரை நியாயமற்ற முறையில் ஆதிக்கம் செய்ய நினைக்கக்கூடாது. வேறொரு இடத்தில் உலக நீதி மன்றம் இதே விஷயம் குறித்து விளக்கம் அளிக்கின்றது: இவ்வித விட்டுக்கொடுத்தல் எவ்வாறான சூழ்நிலையில் நடைபெறவேண்டும் என்பது அந்தந்த தம்பதியினரின் முடிவைப் பொறுத்துள்ளது.

குறைந்தது ஒரு முறையாவது, குடும்பத்தில் நிகழும் தகறாறுகள் மற்றும் மனைவியை அடிப்பது பற்றி உலக நீதி மன்றம் எழுதவேண்டியது அவசியமெனக் கண்டுள்ளது. இந்த விஷயம் குறித்து உலக நீதி மன்றம் வெளியிட்ட சாசனத்தை நான் படித்துக்காட்ட விரும்புகின்றேன்: குடும்பத்தில் அடிதடிசெயல்கள் சமயத்தின் உணர்விற்கு எதிர்மாறானதாகும். அது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயலாகும். சமுதாயத்தின் பரந்த கட்டமைப்புமுறை முழுமைகெடாமல் இருக்க வேண்டுமானால், குடும்பங்களில் காராசாரமான தகறாறுகளை ஒடுக்குவதற்கு மருத்துவ முறை உட்பட உறுதியான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இது குறிப்பாக, மிகவும் மட்டுமீறிய மனைவியை அடிப்பது மற்றும் சிறார்வதை போன்ற பிரச்சினைகளை உட்படுத்தியதாகும்.

பஹாவுல்லா அவர்களே, ஒரு வாசகப்பகுதியில், ஆண்களால் பெண்கள் வதைபடுவதை தவிர்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார். அவர் கூறுவது: நீதி, நியாயம், அன்பு மற்றும் கருனை ஆகியவற்றால் இறைவனின் நண்பர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் தாங்கள் எவ்வாறு சித்திரவதைக்கும் அத்துமீரல்களுக்கும் தங்களை உட்படுத்திக்கொள்ள அனுமதிப்பதில்லையோ, அவர்கள் அவ்வாறே, கொடுமைகள் பணிப்பெண்களை அனுகுவதையும் அனுமதிக்கக்கூடாது.

எவ்வாறு ஆண் குடும்பத்திற்கான வருவாயை ஈட்டும் அடிப்படையான பொறுப்பைக் கொண்டுள்ளானோ, அதே போன்று பெண்ணும் தான் குழந்தையின் முதல் ஆசிரியை எனும் முக்கியப் பொறுப்பினைக் கொண்டுள்ளாள். இருந்தபோதிலும், பஹாய் போதனைகள் இவ்வளவுதாம் என்றிருந்தால், நமது நிலையும் பாரம்பரியமாக வந்துள்ள நிலையைப் போன்றே இருந்திருக்கும். அதாவது, பெண் வீட்டுப்பொறுப்பை கவனிப்பவளாகவும், ஆண் வெளியே வருவாய் ஈட்டுபவனாகவும் இருப்பது. ஆனால் இது மட்டும் அல்ல. பொறுப்புமாற்றம் குறித்து பஹாய் எழுத்துக்களில் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது, பெண்ணின் இடம் வீட்டுப்பொறுப்பை மட்டும் உட்படுத்தியது அல்ல. உலக நீதி மன்றத்திலிருந்து வந்துள்ளதில் ஒரு பகுதியைப் படிக்க விரும்புகிறேன். உலக நீதி மன்றம் கூறுவது: பஹாய் குடும்பம் குறித்த உட்கருத்து, ஆன் குடும்பத்திற்கான வருவாயை ஈட்டிடும் அடிப்படைப் பொறுப்பை வகிப்பவனாகவும், பெண் என்பவள் குழந்தைகளுக்கான முக்கிய மற்றும் அஸ்திவாரமான ஆசிரியை எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதற்காக இக்கடமைகள் மாற்ற முடியாத வகையில் நிலைப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட சில குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளா என பொருள்படாது. அல்லது, பெண்களின் இடம் வீடுதான் எனவும் பொருள்படாது. மாறாக, அடிப்படைக் கடமைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், தந்தைகள் சிறார்களின் கல்வியில் முக்கியப் பங்காற்றுவார்கள் எனவும், தாய்மார்கள் குடும்பத்திற்கான வருவாய் ஈட்டுபவர்களாகவும்கூட இருப்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக, நமது போதனைகள் கடமைகள் பரிமாற்றம் செய்யப்படுவதற்கு குறிப்பிட்ட அளவுக்கு அனுமதிக்கின்றது. இது சம்பிரதாயமான குடும்பங்களில் உள்ளதைவிட அதிகமே ஆகும்.

நமது சமயம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான பாடமுறைகளையே வலியுறுத்துகின்றது. சமுதாயத்தில் பெண்களுக்கான பொறுப்புக்கள் இதிலிருந்தே அறியப்படுகின்றன. சம்பிரதாயமாகவே, பெரும்பாலான மேற்கத்திய சமூகங்களில், ஆண்கள் பௌதீக அறிவியலையும், பெண்கள் குடும்பநூல் அல்லது குடும்பஅறிவியலைக் கற்கின்றனர். ஒரு பொதுவான பாடமுறையினால், பெண்களும் பௌதீக அறிவியல்களைக் கற்பார்கள் என்றும் ஆண்கள் குடும்பக்கலைகளையும் கற்பார்கள் எனவும், அதனால் வருங்கால உலகம் ஒன்றிற்கு பெரிய அளவில் தயார் நிலையும் இருக்கும் என்பது பொருள்.

புனித வாசகங்கள், பெண்கள் ஆற்றக்கூடிய குறிப்பிடத்தக்க சில விசேஷ கடமைகளை அடையாளம் காட்டுகின்றன. உதாரனமாக, அப்துல் பஹா, சட்டத்துறை மற்றும் அரசியல்களில் பெண்கள் மன உறுதியுடனும் ஆற்றலோடும் நுழைவர் எனவும், போர்கள் ஓயவேண்டியது முக்கியம் எனவும் கூறுகின்றார். வேறொரு இடத்தில், பெண்கள், தொழில்துறை மற்றும் விவசாய அறிவியல்கள் குறித்து தங்கள் சக்திகளையும் திறன்களையும் செலுத்தவேண்டும், அவ்வாறு செய்து, மிகவும் இன்றியமையாதவைகளுக்காக மனுக்குலத்திற்கு உதவிடவும் வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார். ஆக, இவ்வாசகப்பகுதிகளும் மற்றவைகளும், குடும்பத்திற்கு வெளியே பெண்கள் ஆற்றக்கூடிய பங்கு குறித்த நமது பரந்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது, விவசாயம், சட்டத்துறை, அரசியல், மற்றும் பிற விஷயங்கள். உலக நிருபத்தில் பஹாவுல்லா பெண்களும் அதே சமயம் ஆண்களும் வருவாய் ஈட்டுவர் என தாமே அறிவித்துள்ளார் என உலக நீதி மன்றம் அறிவிக்கின்றது.

வருவாய் ஈட்டுபவர்கள் எனும் தங்கள் பங்கு குறித்த ஏற்புடைமை குறித்த பஹாய் போதனைகளை அடையாளம் காணும் வேறு பல வாசகப்பகுதிகளும் உள்ளன. அவை, தாய்மை குறித்த கடமைகளோடு சேர்த்து இதையும் எப்படி சிறப்பாக நிறைவேற்றப்போகிறார்கள் என தீர்மானிக்கும்படி கேட்டுக்கொள்கின்றன.

ஒரு பெண் தாய்மைப் பேற்றை அடையும்போது, ஒருபுறம் தாய் எனும் முறையில் தனது தலையாய கடமைகளை எவ்வாறு சிறப்பாக நிறைவேற்றப்போகிறாள் எனவும், மறுபுறம், தான் அங்கம் வகித்துள்ள சமூகத்தின் நடவடிக்கைளின் பிற அம்சங்களில் முடிந்த அளவு எவ்வாறு பங்கேற்கப் போகிறாள் எனவும் அவள் தீர்மானிக்க வேண்டும். ஆண் பெண் சமத்துவம் குறித்த பஹாய் போதனைகள் சிலவற்றை இதுவரை கண்டோம்.

வேறு இரண்டு போதனைகளைப் பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சமூகத்தின் தினசரி நடவடிக்கைளில் பிரச்சனைகள் இல்லாமல் ஒரு கலவையை பாலுறவு நெறிமுறை குறித்த நமது போதனைகள் வழங்குகின்றன. இது, வீட்டில், சமூக கலந்துறவாடல்களில், வானிபங்களில், தொழில்களில், பள்ளிகளில், மற்றும் அவை போன்றவைகளில் வழங்குகின்றன. உதாரணமாக, சமுதாயத்தோடு தொடர்புகொண்டுள்ள பல பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் பெரும் பிரச்சினைகளாகியுள்ளன. ஆக, பாலியல் சம்பந்தமான நமது போதனைகள் பரவலான சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் செயல்பட ஆண் பெண் இருபாலரையும் இவற்றிலிருந்து விடுவிக்கின்றது. நாம் இங்கு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஏனெனில், ஒப்பந்தம் பெண்களுக்கு பலவழிகளில் பாதுகாப்பு அளிக்கின்றது. உலக நீதி மன்றத்தின் ‘தவறிழைக்காமையின்’ வழி, சமயம் கெடுக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது. உலக நீதி மன்றத்தின் சட்டமியற்றும் செயல்பாடு நமது போதனைகளில் உள்ள சமத்துவ உணர்வை அதிகாரபூர்வத்துடன் வெளிப்படுத்தும். ஒப்பந்தத்தின் மற்றுமொரு பரிமாணம், சமயகுருமார்கள் உருவாக்கப்படுவதை தவிர்க்கின்றது. சமயகுருக்களின் ஸ்தாபனம் பெண்கள் உரிமைக்கு எந்த அளவுக்கு பாதகமாக இருந்துள்ளது என்பதை வரலாற்று பூர்வமாக நாம் கண்டுள்ளோம். அதற்கும் மேலாக, சமயகுருக்கள் போல் நடந்துகொள்வதிலிருந்து நமது நிர்வாக ஸ்தாபனங்களை ஒப்பந்தம் தடுக்கின்றது. அதாவது, அவர்கள் சமயகுருக்கள் போல் நடந்து, சமயகோட்பாட்டு ரீதியான சொந்த அறிக்கைகளை வெளியிடுவது தவிர்க்கப்படுகின்றது. இத்தகைய அறிக்கைகள் தவறிழைக்காமையின் பாதுகாப்பின்றி, பெண்களுக்கு எதிரான அபிப்ராயங்களை வெளியிடவும் கூடும். ஆக, ஒப்பந்தம் பலவழிகளில் பெண்களுக்கு இன்றியமையாத பாதுகாப்பளிக்கின்றது. இப்போது, பெண்களும் அமைதியும் குறித்த நேரடியான கேள்விக்கு வருவோம். பெண்கள் விடுதலை பெறுவது, வாக்குறிமை பெறுவது, மற்றும் சமுதாயத்தில் தங்கள் பங்கை ஆற்றுவது, ஆகியற்றுக்கும் அமைதி குறித்த அவர்களின் அக்கறை ஆகியவற்றுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளதென்பதை 19 மற்றும் 20ம் நூற்றாண்டின் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் காண்போம்: அதாவது, 1873ல் ஜூன் மாதம் 2ம் தேதி நடந்த பெண்களுக்கான அமைதி விழா. இது நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும் நகரிங்களில் இது நடத்தப்பட்டது. பிஃரான்கோ-பிரஸ்ஷியன் போரினால் விளைந்த மாபெரும் துன்பங்ளைக் கண்டு மனம் திகைப்படைந்த ஒரு பெண்கள் குழுவின் வழி இது நடைபெற்றது. அந்தப் பெண்கள் குழு, அமைதியை தோற்றுவிக்கும் நோக்கம் கொண்ட பெண்களின் அமைதி விழாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கிய அமைப்பு இது. 1873ல் நடைபெற்ற இந்த விழா, பின்வருவனவற்றைக் கோரியது:

– பொது ஆயுதக்களைவின் வாயிலாக போர்களை ஒழிப்பது,

– உலக நாடுகளின் மீது கண்டிப்பான அதிகாரம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை தோற்றுவிப்பது,

– அமைதிக்கு கேடு விளைவிப்பதால் மது விற்பனைக்குத் தடை விதிப்பது,

– பயங்கரமான ஆயுதங்களுக்கான விற்பனை மற்றும் அவற்றை கைவசம் வைத்திருப்பதற்குத் தடை விதிப்பது,

– பாலியல், நிறம் மற்றும் இனம் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்படும் சமத்துவமின்மையை போக்குவது, மற்றும்

– போர்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவும், தகறாருகளைத் தீர்த்து வைப்பதற்காக நடுநிலையாளர்களாக செயல்படுவதற்காகவும், பெண்களின் பங்கை அடையாளம் காண்பது.

நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட காலத்திற்கு முன், அனைத்துலக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, நாடுகளின் பொது ஆயுதக்களைவும், அனைத்துலக பிரச்சினைகளைக் களைவதற்காக கட்டாயமான விசாரனைக்கூட்டங்களும் ஏற்படுத்தப்படவேண்டுமென வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சார்ந்த பெண்கள் அமைப்புக்கள் ஓர் உலக அரசாங்கம் வேண்டுமென கோரிக்கைகள் விடுத்தன. இந்த அமைதிக்கான பெண்களின் விழா, இறுதியில் பிரிவுகளுக்கு உட்பட்டுப் போயிற்று. காரணம், 19ம் நூற்றாண்டில் அமெரிக்க பூர்வகுடியினர் பற்றிய அமெரிக்க இராணுவக் கொள்கை சம்பந்தமாக இந்தப் பிரிவினை உண்டாயின்று. ஆனாலும், இந்தப் பிரிவினை, இன்றுவரை நிலைத்திருக்கும் வேறு பல அமைப்புக்களுக்கு இட்டுச் சென்றது. உதாரனமாக, அமைதிக்கான பெண்களின் கட்சி, அமைதிக்கும் சுதந்திரத்துக்குமான பெண்கள் அனைத்துலக சங்கம், மற்றும் 1921ன் பெண்களின் அமைதிக் கூட்டம், ஆகியவை. அமைக்கும் சுதந்திரத்துக்குமான பெண்கள் சங்கம் பாரீசில் 1919ல் நடைபெற்ற அமைதி மாநாட்டிற்கு சில கருத்துரைகளை வழங்கியது. இது முதலாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நடந்தது. நிறந்தர அமைதி நிலவுவதற்காக அச்சங்கம் பல பரிந்துரைகளை வழங்கியது. ஆனால், இந்தப் பரிந்துரைகள் அந்த 1919ம் ஆண்டின் அமைதி மாநாட்டினால் நிராகரிக்கப்பட்டன.

அந்த மாநாட்டில் கூடியிருந்தோரில் …………………. எனும் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். 1946ல், 26 வருடங்களுக்குப் பிறகு, ஸ்கேண்டினேவியாவில் உள்ள நோபல் நிறுவனத்தின் ஓர் ஆங்கத்தினராகவும் அவர் இருந்தார். இந்த நிறுவனம், அமைதிக்கும் சுதந்திரத்துக்குமான அனைதுதுலக பெண்களின் சங்கத்திற்கு எமிலி பல்க் ஆற்றிய சேவைக்காக நோபல் அமைதித் பரிசை அவருக்கு அளித்த நிறுவனமாகும். அந்த வேளையில் அவர் பின்வரும் வார்த்தைகளை உரைத்தார். அவர்: “நான் நிறைய கூற விரும்புகிறேன். 1919ல் அமைதிக்கும் சுதந்திரத்துக்குமான அனைதுதுலக பெண்களின் சங்கம் மாநாட்டுக்கு அளித்த பரிந்துரைகளை மாநாடு ஏற்றுக்கொண்டிருந்தால் அது மிகவும் விவேகமாக இருந்திருக்கும். ஆனால், வெகு சில ஆண்களே பெண்கள் அளித்த அந்த பரிந்துரைகளைச் செவிமடுத்தனர். அங்கு நிலவிய சூழ்நிலை மிகவும் கசப்பு நிறைந்தும் பழியுணர்ச்சி மிகுந்தும் இருந்தது. அதற்கும் மேலாக, பரிந்துரைகள் பெண்களால் செய்யப்பட்டிருந்தன. நாம் வாழும் ஆண்தலைமைத்துவ உலகில், பெண்களிடமிருந்து வரும் கருத்துக்கள் பெரிதாகக் கருதப்படுவதே இல்லை. அவர் பின்வரும் வார்த்தைகளோடு உரையை முடித்தார்: “தங்களுடைய செறுக்கு மிகுந்த புன்சிரிப்பை விட்டுவிடுதல் ஆண்களுககு விவேகமாகும்,” ஆகவே, கூற விரும்புவது என்னவென்றால், 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளிலில் குறிப்பிடத்தக்க அளவில் அமைதி அடையப்படுவதில் பெண்கள் அனுக்கமான சம்பந்தம் கொண்டுள்ளனர் என்பதே ஆகும்.

அமைதி குறித்த பஹாய் அனுகுமுறை குறித்தும், ஆண் பெண் சமத்துவம் மற்றும் அமைதி அடையப்படுதலுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்தும் நாம் என்ன கூறக்கூடும். அது மூன்று பெரும்படி கோட்பாடுகளை அஸ்திவாரமாகக் கொண்டுள்ளது என்பது என் எண்ணம்.

முதலாவது கோட்பாடாக இருப்பது பூரணவளர்ச்சி குறித்த கோட்பாடாகும். பெரும்பாலான பஹாய்கள் தங்களை இந்தக் கோட்பாட்டோடு பழக்கப்படுத்திக் கொள்டுள்ளனர். பஹாய் நிர்வாக முறையின் வழி நாம் அமைக்க விரும்பும் சமுதாயமானது, பூரனவளர்ச்சியோடு கூடிய சமுதாயமாகும். அது ஜீவனுள்ள ஒன்று. எல்லா பகுதிகளுடனும் அது தொடர்புடையது. ஒரு பகுதியின் நல்வாழ்வு மற்ற எல்லா பகுதிகளையும் பாதிக்கக்கூடியது. இதுவே ஆண் பெண் சமத்துவம் குறித்த கேள்வியோடு மிகவும் அனுக்கமாக தொடர்புகொண்டுள்ளது. ஏனெனில், அமைதி ஐக்கியத்தைக் கோருகிறது என நமது புனித வாசகங்கள் கூறுகின்றன. அமைதி வேண்டுமென்றால் நமக்குள் ஐக்கியம் வேண்டும். இந்த ஐக்கியம் மனுக்குல ஒற்றுமையை அடிக்கோளிடுகிறது. மனுக்குல ஒற்றுமை இல்லையெனில் நமக்குள் அடிப்படை ஒற்றுமை கிடையாது. அமைதியும் கிடையாது. மனுக்குல ஒற்றுமைக்கு ஆண் பெண் சமத்துவம் அடிப்படையாகும். அமைதி, இனங்களுக்கிடையில் உள்ள உறவு குறித்ததோ, சமுதாயப்பகுதிகள் சிலவற்றுக்கிடையில் உள்ள உறவு குறித்ததோ மட்டும் அல்ல. அது ஆண் பெண் சமத்துவம் குறித்த விஷயமும் கூட. ஆக அந்த எண்ணத்தில், ஆண் பெண் சமத்துவம் மனித சமுதாயத்தின் பூரணவளர்ச்சியின் ஓர் அடிப்படை அம்சமே ஆகும். இந்தப் பூரணவளர்ச்சி கொண்ட பகுதியோடு நமது சமயம் அடையாளப்படுத்தும் ஆன்மீக ஆற்றல்களை அது பெற்றிருக்கும்.

அமைதி குறித்த தனது அறிக்கையில், சமத்துவமில்லாமை சமுதாயத்தையே பாதிக்கக்கூடிய அபாயகரமான மனப்பாங்குகளை ஆண்களுள் உருவாக்குகிறது என உலக நீதி மன்றம் கூறியுள்ளது. இதே கோட்பாட்டை அப்துல் பஹா பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். உதாரனமாக, தாங்கள் சாதிக்கக்கூடிய உச்சங்களை பெண்கள் அடைவது தடுக்கப்படும் வரை, ஆண்களும் தங்களுக்கெ ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பை அடையத் தவறுவர், என அப்துல் பஹா கூறுகின்றார். ஆண் பெண் இருபாலரையும் நோக்கி அவர் கூறுவது என்னவென்றால்: ஒன்று பழுதுபட்டு இருக்குமானால், மற்றதும் நிச்சயமாக குறையோடு இருந்து, பூரணத்துவம் அடையப்படாமலேயே போகும். ஒன்று குறையோடு இருக்குமானால் அது மற்றதையும் பாதிக்கம். இவற்றிலிருந்து நான் அறிவது யாதெனில், பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படவில்லையெனில், ஆண்களும் தங்களது முழு மேம்பாட்டை அடைவதிலிருந்த தடுக்கப்படுகின்றனர். அல்லது, அப்துல் பஹா கூறுவது போல, ஆண்கள் தங்களுக்கென விதிக்கப்பட்டிருக்கும் சிறப்பை அடைவதிலிருந்து தடுக்கப்படுவார்கள். ஆகவே, உண்மையான ஒரு விதத்தில் ஆண்கள் பெண்களிடம் பிணைப்பட்டவர்களே. நமது சமுதாயத்தின் ஆண்கள் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்க தவறினால், அதே ஆண்கள் தங்கள் முழுமையான சிறப்பை நிறைவு செய்வதிலிருந்து தடுக்கப்படுகின்றனர். அல்லது, அப்துல் பஹா கூறுவது போல தங்களுக்கென விதிக்கப்பட்டிருக்கும் சிறப்பை அவர்கள் அடையாமற் போகக்கூடும்.

அப்துல் பஹா பல இடங்களில், அமைதி அடையப்படுவதில் தாய்மார்கள் ஆற்றக்கூடிய முக்கியப் பங்கினைப் பற்றி குறிப்பிடுகின்றார். தாய்மார்கள் தன்னிச்சையாக தங்கள் பிள்ளைகளை போருக்கு அனுப்பப்போவதில்லை, என கூறுகிறார். 20 வருடங்கள் போல் தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, போருக்கு அனுப்பி, நிலத் தகறாறோ அல்லது அது போன்ற வேறு ஏதாவது தகறாற்றினாலோ தயவு தாட்சன்யமின்றி அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை தாய்மார்கள் அனுமதிக்கப்போவதில்லை. பிள்ளைகளை சன்டைக்கு அனுப்பமாட்டார்கள் எனும் வார்த்தைகளுக்கும் அப்பால் இங்கு வேறு ஏதோ ஆழமான அர்த்தங்கள் இருப்பதாக நான் எண்ணுகிறேன். அதாவது, தாய்மை என்பது பிறரை பராமரிப்பதிலும் கவனித்துக்கொள்வதிலும் தன்னலமற்ற செயல்களை உள்ளடக்கியுள்ளது எனவும், தனக்குள் வளரும் அந்த கருவுக்காக தன்னையே அழித்துக்கொள்வதை அது உள்ளடக்கியுள்ளது எனவும், இந்த புதிய படைப்பிற்கு தனது உடலில் இருந்து ஊரும் பாலை, தனது உடலிலிருந்தே உருவாக்கப்படும் பாலை ஊட்டுவதை உள்ளடக்கியுள்ளது எனவும், நான கருதுகிறேன். ஏனெனில், தாய்மை எனும் வளர்செயற்பாடு, தன்னலமின்மை உணர்வை வெளிப்படுத்துகிறது, ஆதிக்கம் மற்றும் கட்டுப்படுத்துதல் எனும் உணர்வின்றி பராமரிப்பு மற்றும் பிறருக்கு உதவும் உணர்வை வெளிப்படுத்துகின்றது. அமைதியை அடைந்திட இந்த உலகிற்குத் தேவைப்படுவது பராமரிப்பு குறித்த இந்த உணர்வு அதிகமாகவும், ஆதிக்கம் குறித்த உணர்வு குறைவாகவுமே ஆகும். அமைதி அடையப்படுவதற்கும் அது பராமரிக்கப்படுவதற்கும் பெண்கள் ஆற்றங்கூடிய முக்கிய பங்கிற்கு இதுவும் ஓர் அம்சமாக இருக்கும்.

என் உரையை நான் இப்போது ஒரு முடிவிற்குக் கொண்டுவரவிருக்கின்றேன். அதற்கு முன்பாக, ஆண் பென் சமத்துவம் குறித்த பஹாய் கோட்பாடுகளை அமுல் செய்வதில் நமக்கு வழிகாட்டுவதற்கு பஹாய் எழுத்துக்களில் நான் கண்ட ஒரு சில அம்சங்களை நான் இங்கு சுருக்கமாக குறிப்பிடவிரும்புகிறேன். நாம் என்ன வழிகாட்டிகளைப் பின்பற்ற வேண்டும், நாம் எதில் கவனமாக இருக்கவேண்டும், நாம் எதைத் தவிர்க்கவேண்டும், ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும். இது குறித்து ஐந்து கோட்பாடுகள் உள்ளதாக நான் எண்ணுகிறேன்.

முதலாவதாக, நமது புனித வாசகங்கள் பலத்தை பிரயோகிப்பதையோ கண்டன ஊர்வலங்கள் நடத்துவதையோ அனுமதிக்கவில்லை. அப்துல் பஹா கூறுவது: இப்போது இங்கிலாந்தில் பலத்தை வெளிப்படுத்தும் கண்டனக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. அவை, பெண்மை மற்றும் சமத்துவத்தின் ரீதியில் உகந்தவையுமல்ல, நல்விளைவுகளை உருவாக்கக்கூடியவையுமல்ல. நமது அனுகுமுறை பலத்தை பிரயோகிப்பதை உட்படுத்தியதல்ல.

என் எண்ணத்தில், மாற்றங்கள் என்பவை பரிணாம ரீதியானவை என்பது இரண்டாவது கோட்பாடாகும். எதையும் உடனடியாக செய்யவேண்டும், ஒரே நாளில் முடிக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம். ஆனால் மனிதம் அவ்வாறு செயற்படக்கூடியதல்ல. அது படிமுறை வளர்ச்சியை உட்படுத்தியது. தங்களின் சார்பாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் உலக நீதி மன்றம்: சமயத்தில் உள்ள மற்ற போதனைகளைப் போல், ஆண் பெண் சமத்துவம் குறித்த கோட்பாடு, பஹாய் வாழ்க்கையின் மற்ற அம்சங்களோடு சேர்த்து பின்தொடரப்படுமாயின், அது நண்பர்களின் மத்தியில் செயல்விளைவுடனும், அனைத்துலக ரீதியிலும் ஸ்தாபிக்கப்படும். மாற்றம் என்பது படிமுறை வளர்செயற்பாடாகும். அது ஒருவர் தன்னோடும் பிறரோடும் பொறுமையும், அன்பான வழியில் கல்விபுகட்டுவதும் மற்றும் நம்பிக்கையாளர்கள் தங்கள் சமய அறிவை பெறுக்கிக்கொள்ளும் காலத்தின் ஓட்டமும், காலம் காலமாக கடைபிடித்து வரும் பாரம்பரிய மனப்பாங்குகளைக் கலைந்தும், சமயத்தின் ஒன்றுபடுத்தும் போதனைகளோடு படிப்படியாக தங்கள் வாழ்க்கைகளை இணக்கமாக்கியும் கொள்வதை கோருகின்றது. பொறுமை, படிமுறைவளர்ச்சி, படிபடிப்படியான மேம்பாடு, அன்போடு கல்விபுகட்டல், காலப்போக்கு, தன்னோடும் பிறரோடும் பொறுமையை கடைப்பிடித்தல் மற்றும் பிற.

மூன்றாவது கோட்பாடு, ஆண்களுக்கும் பெண்களுக்கு இடையே சச்சரவுகளைத் தவிர்ப்பது. ஈரானில், பஹாய் பெண்களால் உருவாக்கப்பட்ட ஒரு பெண்கள் இயக்கத்தைப் பற்றி அப்துல் பஹா குறிப்பிடுகிறார். அந்த இயக்கம், அறிவு வளர்ச்சி குறித்து உருவாக்கப்பட்டதாகும். அதற்கு அறிவுரைகள் எழுதும் போது, வித்தியாசங்கள் நாட்பட நாட்பட, முற்றிலும் துடைத்தொழிக்கப்படுமாறு செய்யப்படவேண்டும் என எழுதினார். மாறாக, ஆன்களுக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதங்களை, இறைவன் பெயரால் , உருவாக்காமல் இருக்குமாக. சுறுக்கமாகச் சொல்லப்போனால், அவர் முற்றிலும் ஆன்மீகமான விஷயங்களிலேயே தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மாறாக, ஆண்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. இந்த விஷயம் குறித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமுதாய ரீதியில் ஏற்படும், வீனான மற்றும் பலனற்ற பகைமையை நாம் கண்டுள்ளோம். நாம் இவற்றை தவிர்க்க வேண்டும் என நமது போதனைகள் வலியுறுத்துகின்றன. பெண்களை ஊக்குவிக்கும் ஒரு மாபெரும் கடமை ஆண்களுக்கு இருப்பதாக நமது புனித வாசகங்கள் தெரிவிக்கின்றன. அதோடு ஆண்கள் கொண்டுள்ள ஆதிக்க உணர்வையும் அவர்கள் போக்கிக்கொள்ள வேண்டும். அப்துல் பஹா கூறுவது: பெண்கள் சமத்துவத்தை அடைதலானது படைப்பு ரீதியில் அறவே இயலாததெனும் வகையில் ஆண்களின் ஆதிக்கம் செலுத்தும் போக்கானது அவர்களுக்குத் தொடர்ந்து வாட்டம் அளிக்கக்கூடிய ஒன்றாகவே இருந்துவரும். மேம்பாட்டை நோக்கிய பெண்ணின் இலட்சியம் இதனால் தடைபட்டு, அவள் சிறுக சிறுக நம்பிக்கை இழந்துவிடுவாள். இதற்கு மாறாக, நாம் அவளுடைய ஆற்றல் சமமானதே என அறிவிக்க வேண்டும். பார்க்கப்போனால் ஆண்களுடையதை விட பெண்களின் ஆற்றல் அதிகமானதே. இச்செய்கை பெண்களின் மனதில் நம்பிக்கையையும் இலட்சியமனப்பான்மையையும் தோற்றுவிக்கும். ஆக, ஆண்களுக்குப் பெரும் கடமை உள்ளது. பெண்களுக்கு அவர்கள், மேம்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்த எல்லா விஷயங்களிலும் நேர்மையானதும், மாசற்றதும், நல்விளைவுகள் மிக்கதுமான உற்சாகத்தை அளிக்கும் கடமையைக் கொண்டுள்ளனர். ஆண்கள், அப்துல் பஹா கூறும், தாங்கள் (பெண்களைவிட)உயர்ந்தவர்களெனும் அந்த மனப்பாங்கை அழித்துவிட வேண்டும். கடைசிக் கோட்பாடு, பெண்கள் சுயமேம்பாடு மற்றும் சாதனைகள் குறித்த சொந்த முயற்சிகளில் கடும் ஈடுபாடு காட்டுவதன் முக்கியத்துவம். அப்துல் பஹா கூறுகிறார்: எல்லா வழிகளிலும், ஆணுக்குச் சமமாக பெண் அதிக பூரணத்துவம் எய்திட முயலவேண்டும். அவள், தான் பின்தங்கியுள்ளவற்றில் எல்லாம் மேம்பாடு அடையவேண்டும். இதன்வழி, ஆண்கள், ஆற்றல் மற்றும் சாதனைகளில் பெண்கள் தங்களுக்கு ஈடானவர்களே என்பதை ஆமோதித்திட வலியுறுத்தப்படுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவம் குறித்த கோட்பாட்டை அமுல்படுத்துவதற்கான செயல்விளைவுகள் மிக்க பஹாய் அனுகுமுறையை இந்த ஐந்து கோட்பாடுகளும் அடிக்கோளிடுகின்றன என்பது என் எண்ணம்.

சேவை செய்வது


சேவை (Service)
(திரு அலி நாக்ஜவானி)

“சேவை”- பஹாய் புனிதத் திருவாசகங்களில் நாம் அடிக்கடிக் காணக்கூடிய ஒரு சொல் இந்த ‘சேவை’ அல்லது ‘தொண்டு’ எனப்படுவது. இறைவனுடனான உறவை, எல்லா தெய்வ அவதாரங்ளும் சேவகத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொண்டுள்ளனர் என பஹாவுல்லா, கித்தாப்-இ-இகான் நூலில் குறிப்பிட்டுள்ளார். சேவைக்குப் பல வழிகள் உண்டு. அதற்குப் பல அம்சங்களும் உண்டு. சேவைக்கு ‘(உற்சாக)ஆவியும்’ உண்டு. உணர்வாக இருந்து, பின் செயல் பெறும் போது, சேவை, உருவம் அடைகின்றது. தொடரும் நமது உரையாடலினூடே (உற்சாக)ஆவி செயலைவிட முக்கியமா அல்லது (உற்சாக)ஆவியைவிட செயல் முக்கியமா என்பது பற்றி நாம் ஒரு முடிவிற்கு வரலாம்.

சேவை பல ரீதிகளில் வெளிப்படுத்தப்படலாம்: இறை சேவை, இறைச்சமய சேவை, இறையன்பர்களுக்குச் சேவை, பெற்றோர்களுக்குச் சேவை, சொந்தக் குடும்பத்திற்குச் சேவை, தன்னைச் சுற்றியுள்ளவருக்குச் சேவை, தேசத்திற்குச் சேவை, சமூகத்திற்குச் சேவை, நற்பணிகள் அல்லது சொந்த உத்தியோகம் மற்றும் தொழில் மூலம் சேவை செய்தல் எனக் கூறிக்கொண்டே போகலாம்.

இந்த சொற்பொழிவு ஐந்து தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில், அப்துல் பஹா அவர்கள், அதாவது ‘பஹாவின் சேவகர்’. அவரைப் பற்றி சுறுக்கமாக உரையாடுவோம். அதன் பின் எல்லோருமாக அப்துல் பஹா அவர்களின் உதாரணத்தை உண்மையில் பின்பற்ற வேண்டுகின்றோமா அல்லவா என பரிசீலனை செய்யலாம். அதன் பின் நம் உள் வீற்றிருக்கும் இயல் திறன்களைப் பற்றி ஆலோசிக்கலாம். இது பஹாய் சேவையின் பிற அங்கங்களுக்கு இட்டுச் செல்லும். அதன் பிறகு நாம் அப்துல் பஹா அவர்களின் நேர்வு நிருபங்களின் பல பகுதிகளைப் படித்து, அவற்றைப் பற்றி கலந்துரையாடலாம்.

“அப்துல் பஹா” இப்பெயரை தமக்குத் தாமே சூட்டிக் கொண்டார். பஹாவுல்லா இப்பெயரை அவருக்கு வழங்கவில்லை. இதன் காரணம், அப்துல் பஹாவின் சேவை அடிப்படையிலான, உன்னத ஸ்தானத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இருந்திருக்கலாம். அப்துல் பஹா தமது சேவகத்தைப் பற்றி கூறுகையில், அது ‘முழுமைபெற்றது, ‘பவித்திரமானது’, ‘மெய்யானது’, ‘உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது’, ‘என்றும் நிலைத்திருக்கக்கூடியது’ மற்றும் ‘வெளிப்படையானது’ என்று அவரே தமது திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார். ‘மெய்யானது’ மற்றும் ‘வெளிப்படையானது’ எனும் வார்த்தைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கவும். அதாவது, இச்சேவகம் அகமும் புறமும் கொண்டது என பொருள்படக் காணலாம். அதாவது அப்துல் பஹா அவர்களின் அக மற்றும் புற மெய்நிலைகள், சேவகத்தையே வெளிப்படுத்தின. ஆனால், பஹாவுல்லா, அப்துல் பஹாவைப் பற்றி குறிப்பிடுகையில், அவரை, “இறைவனின் திருமர்மம்”, “மனிதகுல முழுமைக்குமான அடைக்கலம்…” “மனிதர்கள் யாவருக்கும் அருள் வழங்கும் சமுத்திரம்”, “மானிடர்களுக்கு தயை சுரக்கும் ஒளி ஊற்று”, “இறைவனை நம்பியோர் பற்றிக் கொள்ள ஒரு கொம்பு……” என்றும், “அவர் குரலுக்கு (அப்துல் பஹாவின்) செவிசாய்க்கும் பாக்கியம் பெற்ற காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஒரு மடங்கு அல்ல இரு மடங்கு ஆசீர்வதிக்கப் பெற்றவை,” என்றும் பஹாவுல்லா கூறுகின்றார். பாதுகாவலர் ஷோகி எ•பெண்டி தமது நூல்களில், “…பஹாவுல்லாவின் ஒளியைப் பிரதிபலிக்கும் கறைகளற்ற கண்ணாடி” எனவும், அவர் போதனைகளை பிரதிபலிக்கும் குறைகளற்ற உதாரண புருஷர் எனவும் குறிப்பிடுகின்றார். பயங்கர மிரட்டல்கள், ஓழிவில்லா கொடுமைப் புயல்கள் மற்றும் அவமானத்தின் கொடூரங்களினூடே, ஒரு நூழிழை அளவு கூட பஹாவுல்லா திருவெளிப்படுத்திய கோட்பாடுகளில் இருந்து பிரழாமல் இருந்த நமது நேசத்திற்குறிய அப்துல் பஹா அவர்களின் உதாரணத்தை, நமது தனிப்பட்ட நடத்தை மற்றும் பொது வாழ்க்கையில், விடாமுயற்சியுடன் பிரதிபலித்தால் மட்டுமே, நாம் நமது திருச்சமயத்திற்கு உகந்தவர்கள் என்பதை நிரூபிக்க முடியும். இங்கு ‘மட்டுமே’ எனும் வார்த்தையை கவனிக்கவும். அவர் தமது வாழ்க்கையின் இறுதி வரை கடைபிடிக்கவெனத் தேர்ந்தெடுத்த சேவை மற்றும் பவித்திரத்தின் பாதை இவ்வாறே அமைந்திருந்தது. விண்ணிலிருந்து, அவர் நம்மை எப்பொழுதும் பார்த்த வண்ணம், “என்னைப் பார், என்னைப் பின்தொடர், என்னைப் போலவே இரு” எனும் ஐக்கிய அமரிக்காவில் முன்பு உச்சரித்த, அதே வார்த்தைகளை மறுபடியும் மறுபடியும் கூறுவது போன்று உணரமுடிகிறதல்லவா?

இவ்விதப் பிண்ணனியில், இந்த வார்த்தைகளை சிரமேற்கொள்ளும் பொருட்டு நாம் சிந்திக்காமல் இருக்கமுடியுமா? நிச்சயமாக நாம் சிந்திக்கவேண்டும். அப்துல் பஹா அவர்களைப் பின்பற்றி நடக்க நாம் பெரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்பதே எதிர்பார்ப்பு. இது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த இலக்கை ஒரு வேலை நாம் அடைய முடியாது போகலாம், ஏனெனில் அவர், குறைகளற்ற உதாரண புருஷர், நாம் அவ்விதமில்லை. உங்களைப்போலும் என்னைப்போலும் அவர் குறைகள் அற்றவர், எனக் கூற இடமில்லை. இது இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயம். அப்துல் பஹா அவர்களிடம் மட்டுமே ‘குறைகளற்ற’ நிலை இருந்தது. நாம் என்றுமே அந்த நிலையை அடையமுடியாது. இருந்தபோதும் அந்நிலையை அடைய, அந்த உதாரணத்துவத்தின் அருகாமையை நாள்தோரும் நெருங்கியவாறு இருக்க, முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். இக்கடமையை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இது, ஒரு அவா அல்ல. இதை ஒரு சிறந்த கோட்பாடாகவோ, ஒரு தத்துவமாகவோ மட்டும் கொள்ளக்கூடாது. நம்மை நாமே வளைத்துக் கேட்க வேண்டிய கேள்வி, “தினமும் அப்துல் பஹா அவர்களின் உதாரணத்தை பின்பற்ற நான் முயற்சிகள் மேற்கொள்கின்றேனா?” என்பதே.

இவ்வுலகில் இரு விதமான பஹாய்கள் உள்ளனர் என பாதுகாவலர் அவர்கள் கூறுகின்றார். ஒரு சாரார், தங்கள் மதம் பஹாய் மதம் எனக் கூறிக்கொள்வோரும், மறு சாரார் தங்கள் வாழ்வு பஹாய் மதத்திற்கே அர்ப்பணம் என்போரும் ஆவர். தம்முடைய ஒரு கடிதத்தில், “சில பஹாய்கள், இச்சமயத்தின் சம்பந்தப்படாத ரசிகர்கள்” எனவும், “வேறு சிலர் இச்சமயத்தின் மும்முறமான ஊழியர்கள்” எனவும், அவர் குறிப்பிடுகின்றார். ஒரு பஹாய் எனும் முறையில், பஹாவுல்லா அறிவுறுத்துவது போல், நான் தனிமையில் இது பற்றி கண்டிப்பாக சிந்தனை செய்தும் தியானம் செய்யவும் வேண்டும். “நான் எப்படி இருக்க விரும்புகிறேன், என் வாழ்க்கையை எப்படி செலவிட விரும்புகின்றேன்”, என்று என்னையே நான் கேட்டுக் கொள்ளவேண்டும். கித்தாப்-இ-இகான் நூலில், பஹாவுல்லா, “ஒரு மணி நேர சிந்தனைப் பிரதிபலிப்புகள், எழுபது வருட பக்திமயமான வழிபாட்டிற்குச் சமம்,” எனக் கூறுகின்றார். ஒரு மணி நேரம்தான், ஆனால் தனிமையில் இருக்கவேண்டும். சிந்தனை செய்து மேற்குறிப்பிட்டுள்ளவை பற்றிய கேள்விகளை, அடிப்படைக் கேள்விகளை நான் என்னையே கேட்டுக் கொள்ளவேண்டும். “இவ்வுலகம் ஒரு நாடக அரங்கம்; அல்பமானதும் சூன்யமானதும், இல்லாத மெய்மையை பரைசாற்றும் எதுவும் அற்ற ஒன்றாகவும் உள்ளது.” “அதனில் பிரியம் வைக்காதீர்கள்.” மறைமொழிகளில், பஹாவுல்லா, இறைவன் இந்த விரைந்தோடும், கண்ணைப் பறிக்கும், பளபளப்பு மிகுந்ததும் கவர்ச்சி நிறைந்ததுமான உலகைப் படைத்து, மெய்யுலகான உண்மை உலகினை, ஆத்யாத்மீகத்தின் இருப்பிடத்தினை ஏன் மறைத்தான் என்பதை சிந்திக்கச் சொல்கிறார். முன்னதை (இவ்வுலகை) தினமும் கண்முன் வைத்து, பின்னதை (அவ்வுலகை) கண்களுக்கு அப்பால் வைத்தும் ஏன் விளையாடுகிறார்? இதைப்பற்றி நம்மைச் சிந்திக்கச் சொல்கின்றார். இறைவன் ஏன் இவ்விதம் செய்துள்ளார் என்று?
மறுபடியும், மறைமொழிகளை படிக்குங்கால், இறைவனிடமிருந்தோ அல்லது நம் சக மனிதப்பிரவிகளிடமிருந்தோ நாம் மறைப்பனவற்றை, உண்மையில் இறைவன் காண்கின்றாரா இல்லையா என்பதுபற்றி தம்முடைய நம்பிக்கையாளர்களை சிந்திக்கச் சொல்கின்றார். இறைவன் கவணிக்கின்றாரா? பதில் மிகவும் தெளிவானது. நிச்சயமாக கவனிக்கின்றார். அவர் கவனமிக்க, சதா பார்த்துக்கொண்டிருக்கும் இறைவன். அவர் பார்ப்பது மட்டும் அல்ல, யாவற்றையும் அவர் பதிவு செய்கின்றார் என பஹாவுல்லா கூறுகின்றார். மறைமொழிகளில், நம் செய்கைகள் யாவும் பதிவு செய்யப்படுகின்றன என குறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமா, இறைவன் சந்நிதியில், அவர் திருமுன் நிற்கும் போது, நம் மொத்தச் செய்கைகளுக்கும் காரணம் தெரிவிக்க வேண்டும். இதுவும் மறைமொழிகளில் காணக் கிடைக்கிறது. “தினசரி உன் செய்கைகளை கணக்கிட்டுக் கொள்க”வென, அவர் பகர்கின்றார்.

பஹாய் உலகத்தின் அங்கத்தினர்களாகிய நம் ஒவ்வொருவருக்குள்ளும், மறைமுகமான இயற் திறன்கள் மற்றும் சக்திகள் உள்ளன என்பதை நிச்சயித்துக் கொள்ளவேண்டும். நம் வாழ்வின் நோக்கமே, நன்பர்களே, இவ்வியற் திறன்கள் வெளிப்படுத்தப்பட்டு, அபிவிருத்தியாக வேண்டும் என்பதே. அதுவே நம் வாழ்வின் நோக்கம். மனிதர்களாகிய நமக்கு, நம் உள் உறையும் இவ்வியற் திறன்கள் வெளிப்படுத்தப்பட்டு, அபிவிருத்தியாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, உதவ, இறைத் தூதர்கள், வந்துள்ளனர். நம் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கும் இயற் திறன்கள் ஒறே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொன்றும், வேறுபட்டது. ஆனால், நோக்கம் எல்லாம் ஒன்றே. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட வலிமைகளின் அடிப்படையிலேயே, நம் உள் வீற்றிருக்கும் திறமைகளை, ஒரு விதை எப்படி சிரமப்பட்டு, தன்னுள் இருக்கும் மரத்தை வெளிக்கொணருகிறதோ, அதேபோல் நாமும் வெளிக்கொணர வேண்டும்.

“ஒவ்வொரு மனிதனும், இயல்திற முறையில் தன்னுடை உள்மெய்நிலைக்கு அளிக்கப்பட்டுள்ள சக்திகள் எல்லாவற்றையும் அவன் வெளிப்படுத்தக்கூடிய அந்த நிலையை அடையும்வரை, தொடர்ந்து முன்னேறியும், வளர்ந்தும் வருவான்” என பஹாவுல்லா கூறுகிறார். (இதில் ‘யாவற்றையும்’ எனும் வார்த்தையை கவனியுங்கள், ஒன்றோ இரண்டோ அல்ல.) இது பஹாவுல்லாவின் திருவாசகத் தொகுப்பான “சில பொறுக்குமணிகள்” எனும் நூலில் காணப்படுவது. அப்துல் பஹா அவர்களும், “…நம்மைப் படைத்த தயை மிகுந்த ஆண்டவர், எப்படி ஒரு முளையும் விதையில் இருந்து மரம் வெளிப்படுகின்றதோ, அதேபோல்… மனித மெய்நிலையினுள் சில உள்ளுரைந்த, வெளிப்பட உள்ளவையான இயல்திறமுறையிலான பன்புகளை வைத்துள்ளார்.” மறுபடியும் ‘முளையும் விதை’ உவமானத்தை நாம் காண்கின்றோம்.” கடவுள் தமது அன்பை மனிதன் பால் வெளிக்காட்டவே அவனை படைத்துள்ளார்” என நாம் புனித வாசகங்களின் மூலம் அறிகின்றோம். “உன் படைப்பினை யாம் விரும்பினோம், ஆகவே உன்னைப் படைத்தோம்”. மனிதனைத் தாம் படைத்ததன் காரணம், அவன் மேல் தாம் கொண்ட அன்பே என பஹாவுல்லா கூறுகின்றார். சரி, அவர் நம்மைப் படைத்தார், நம்மிடம் என்ன எதிர்ப்பார்கின்றார்? ஆம், அவர் எதிர்பார்ப்பதும் அன்பைத்தான். இதுவே எழுத்தால் வடிக்கப்பட்டுள்ள திருவொப்பந்தம். “எம்மிடம் அன்பு கொள்வாயாக அதனால் யாம் உன்னிடத்தில் அன்பு காட்ட இயலும்.” இது ஒரு ஒப்பந்தம். இது இரு சாரருக்கும் பொருந்தும். “நீ எம்மிடம் அன்பு காட்டாவிடில் எமது அன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது.” “உன் படைப்பினை விரும்பினோம், உன்னைப் படைத்தோம், நீ எம்மை நேசிப்பாயாக, அதனால் யாம் உன் நாமத்தை உணக்குச் சூட்டி உனது ஆன்மாவையும் எமது உயிர் ஆவியினால் நிரப்பக்கூடும்.” ஏன்? “அதனால் யாம் உன் நாமத்தை உனக்குச் சூட்டி, உன் ஆன்மாவை எமது உயிர் ஆவியினால் நிரப்பக்கூடும்” இதனால்தான்! நான் இறைவனை விரும்பாவிட்டால், அவர் அன்பு என்னை வந்தடைவது மட்டும் இல்லாமல், நான் என்னுடைய பிறவி நோக்கத்தையே நிறைவேற்றியவன் ஆகமாட்டேன். மேலும் நான் பிறவி எடுத்ததன் நோக்கம், வளர்வதற்கே! நான் ஒரு விதையைப்போன்றவன். நான் வளரவேண்டும். நான் வளர்வதற்கென்றே பிறந்தவன். விதை உண்டானதின் நோக்கமே, வளர்வதற்குத்தானே! ஒரு விதை படைக்கப்பட்டது, என்றென்றும் ஒரு தானியக் கிடங்கில் கிடப்பதற்கோ அல்லது ஏதோ ஒரு பழம் பொருள் நிறைந்த புதையலில் கிடப்பதற்கோ அல்லவே! அது படைக்கப்பட்டது, ஒரு பெரிய மரமாக வளர்ந்து, நிறைய பழங்களைத் தரவேண்டும் என்பதற்காகவே. அதனால் தான் அந்த விதை இறைவனால் படைக்கப்பட்டது.

நாம் செய்வதனைத்தும் அன்புடனேயே செய்யப்படல் வேண்டும்; அதாவது, இறைவன் மேலுள்ள அன்பினாலும், அவர்தம் வெளிப்பாட்டாளர் மீதுள்ள அன்பினாலும். பின் வரும் பிரார்த்தனை நமக்குப் பரீட்சயமானதுதான், இருந்தாலும், மேலே நாம் புறிந்துகொண்டவற்றை வைத்து, இப்பிரார்த்தைனையில் அடங்கிக் கிடக்கும் வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்ப்போம். பஹாவுல்லாவின் பிரார்த்தனைகளிலிருந்து:
“என் இறைவா, நான் உங்கள் அன்பெனும் நிலத்தில், உங்களால் ஊன்றப்பெற்றும், உங்கள் தயை எனும் கரங்களால் வெளி வரச் செய்யப்பட்டதுமான ஒரு சிறு விதை. ஆகவே, இந்த விதை “(அதாவது நாம் ஒவ்வொருவரும்) தன்னுள் ஏங்குவது, தங்கள் தயை எனும் நீர் மற்றும் தங்களது திருவருள் எனும் மெய் ஊற்றுக்கே. உங்கள் நிழலிலும், உங்கள் சபையின் எல்லைக்குள்ளும், அதை மலரச் செய்விக்கக்கூடியவற்றை, உங்கள் அன்பு-நேசமெனும் சுவர்க்கத்தில் இருந்து அனுப்பிவைப்பீராக.”

ஆகவே நாம் எல்லோரும் விதைகள், நாம் எல்லோரும் வளரவேண்டும். இந்த வளர்ச்சி சுயவிருப்பத்தால் வரவேண்டும். தானியக் கிடங்கில் கிடக்கும் ஒரு விதைக்கு தன்னிச்சை கிடையாது. ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நம்மை நாம் இடம் பெயரச் செய்வித்துக்கொள்ள முடியும். நம் வேர்களை, நமது திருச்சமயம் எனும் நிலத்தில் பதியவைக்கின்றோம். நமது சிறு கிளைகளை வெளிக்கொணர்கின்றோம். ஒரு சிறு கன்றாகின்றோம். பிறகு மரமாகின்றோம். பழம் கொடுக்கின்றோம். நிழல் தருகின்றோம். இதுவே பிறவியின் நோக்கம். இது நம் கைகளில் இருக்கின்றது. நாம் பிறவிப் பயன் அடைவது, நம் கைகளிலேயே உண்டு, பிறர் கைகளில் இல்லை. “ உங்கள் முழு இதய ஆர்வத்துடனும், உங்கள் ஆன்மாக்களின் முழு ஆவலுடனும், உங்கள் சுயவிருப்பத்தால் ஆன முழு வேட்கையுடனும் மற்றும் உங்கள் சக்தி முழுமையையும் செலுத்தி, எழுங்கள்.” (இந்த ஆவலை, இந்த வேட்கையை, இந்த சுயஇச்சையை நடப்பில் காட்டவென, பஹாவுல்லா தேர்ந்தெடுத்துள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள்.) இவ்விதத்திலேயே இறைவனின் அருளுடனும், தயையுடனும், நாம் வளருவோம்.

அடுத்து நாம் மேலோட்டமாகத் தெரிந்துகொள்ளப்போவது, நம்பிக்கை மற்றும் அடிபனிதல் ஆகியவற்றின் பிரிக்கமுடியாமை. ‘பொறுக்குமணிகள்’ நூலிலிருந்து இரண்டு பத்திகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். உங்கள் எல்லாருக்கும் அவை பரீட்சயமானவையாக இருக்கலாம், ஆனால் மேலும் அழுத்தம் கொடுக்கவென அவற்றை உபயோகப்படுத்துகிறேன். நமது முதல் பாரா, பாதுகவலர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, ‘பொறுக்குமணிகள்’ நூலில் சேர்க்கப்பட்டதுமான, ‘கித்தாப்-இ-அக்தாஸ்’ நூலின் முதல் பாராவே. ‘கித்தாப்-இ-அக்தாஸ்’ நூலின் ஆரம்ப உரையும் இதுவே.

“இறைவனால் தமது ஊழியர்களுக்கு அறிவுருத்தப்பட்டிருக்கும் முதல் கடமை, தமது திருவெளிப்பாட்டின் திவ்விய ஊற்றையும், தமது ஆனைகளின் தோற்றுவாயையும் கண்டுகொள்வதேயாகும்…. இக்கடமையை நிறைவேற்றிய எவரும், எல்லா நன்மைகளையும் பெற்றரவராவார்…. இந்த மிக உன்னத நிலையை, மகிமையின் உயர்வான சிகரத்தை அடைந்திட்ட எவரும், இவ்வுலகின் ஆவலாகியவரின் ஒவ்வொரு விதியையும் அநுஷ்டிக்கக் கடமைப்பட்டவராவார்.”

இதற்கு பிறகு பஹாவுல்லா அவர்களிடமிருந்து இந்த சாஸ்வதமான திருக்குறிப்பு, “ இவ்விரட்டைக் கடமைகள் ஒன்றுக்கொண்று பிரிக்க இயலாதவை.” அதாவது, இறைத் தூதரை அடையாளம் கண்டுகொள்ளலும், அவரது திருவடி பணிதலும், இனைபிரிக்க முடியாதவை. “ஒன்றில்லாமல் மற்றது ஏற்புடையதாகாது.” ‘பொறுக்குமணிகள்’ லின் மற்றொரு பகுதியிலிருந்து, “இறை ஐக்கியத்தின் திவ்விய ஊற்றினைக் கண்டுகொண்டவர்க்கு, இனைகடமைகள் இரண்டு உள்ளன…. முதலாவதாக, அவர் அன்பில் தவறா உறுதி… அடுத்தது, மெய்யானவற்றிலிருந்து பொய்யானவைகளை பேதம் கண்டும் பிரிவுபடுத்திக்கொள்ளவுமென, அவர் நிர்ணயித்திருக்கும் சட்டவிதிகளைக் கண்டிப்புடன் கடைபிடித்தல்…. ‘என பஹாவுல்லா ‘பொறுக்குமணிகள்’ இல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.” ‘பொய்யானவைகள்’ எனும் கடிய வார்த்தையை, பஹாவுல்லா, வேண்டுமென்றே இங்கு பயன்படுத்தியுள்ளார். இப்பகுதிகளை மேலும் ஆழமாக பரிசீலனை செய்வதற்கு மிகுந்த நேரம் தேவையாகையால், கிடைக்கும் நேரத்தில், நீங்களாகவே அதை செய்துகொள்ளவும்.

இப்பொழுது நான், பாதுகாவலர் அவர்களின் வாசகங்களிலிருந்து சில பகுதிகளைப் படிக்கப்போகின்றேன். அப்பொழுது நீங்கள், பஹாய் சேவைக்குத் தேவையான, இன்றியமையாத அங்கங்களை அதிலிருந்து கண்டுகொண்டு, மனதிலேயே அவற்றை நீங்கள் குறிப்பும் செய்துகொண்டு, பின் நீங்களாகவே ஒரு அபிப்ராயத்திற்கு வருவீர்கள். பெரும்பாலான பகுதிகள் மேலோட்டமானவையே. நான், ஐந்து அங்கங்களை இனம் கண்டுகொண்டுள்ளேன், ஆகவே, முடிவில் நாம் எல்லோரும், குறிப்பெடுத்துக்கொண்டவைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

நமது சமயம் உட்பட, சகல மதங்களின் அடிப்படை நோக்கமும், மனிதனை இறைவனின் அருகாமைக்கு இட்டுச்செல்லவும், அதிமுக்கியமானதாக விளங்கும் அவன் நடத்தைமாற்றத்தைக் கொண்டுவருதற்கும் ஆகும். நமது சமயபோதனைகளில், சமூகப் பொருளாதார அம்சங்களுக்கு பெரும்பாலும் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகின்றது, ஆனால், அதன் ஒழுக்க சம்பந்தப்பட்ட அம்சங்களை இவற்றிலிருந்து குறைத்து மதிப்பிடமுடியாது.

மற்றுமொரு பகுதி :

இறைவனின் சமயத்தில் சேவையைப்போல் வெற்றிகள் அளிக்கக்கூடிய ஒன்று வேறில்லை. சேவையே தெய்வீகத் திருவுறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தக்கல் ஆகும். ஆகவே, ஓர் அன்பர் செயல்பட்டுக்கொண்டிருந்தால், பவித்திராத்மாவின் ஆசீர்வாதம் அவருக்கு உண்டு. செயலாற்றாமல் இருக்கின்ற போது, பவித்திராத்மாவின் நோய்தீர்க்கும் மற்றும் வேகப்படுத்தும் ஒளிக்கதிர்கள், அந்த மனிதனுள் வைப்பிடம் இல்லாமற் போய், அவனுக்குக் கிடைக்காமற் போகும்.

மற்றுமொரு பகுதி :

ஒவ்வொரு நம்பிக்கையாளரும், புதியவரோ பழையவரோ, அறியவேண்டியது என்னவெனில், திருச்சமயத்திற்கு, நம்மை புணர் உருவாக்கம் செய்யக்கூடிய அத்யான்மீக சக்தி உண்டு…

இதையே மறுபடியும் பார்ப்போம் :

ஒவ்வொரு நம்பிக்கையாளரும், புதியவரோ பழையவரோ, அறியவேண்டியது என்னவெனில், திருச்சமயத்திற்கு, நம்மை புணர் உருவாக்கம் செய்யக்கூடிய அத்யான்மீக சக்தி உண்டு…, அதாவது, நாம், அந்த சக்தி தனது செல்வாக்கை நம் மீது செலுத்த அனுமதிக்கவேண்டும். மற்றும், இந்த ரீதியில், மிகவும் உதவுவது, பிரார்த்தனை. நாம் நம் சுவபாவங்களின் பிழைகளிலிருந்து மீழவும், நம் சுயத்தேர்வுச் சக்தியை, நம்மை நாமே அடக்கியாள, நம்மீதே செலுத்திக்கொள்ளும்படி பஹாவுல்லா நமக்கு உதவ, அவரை இறைஞ்ச வேண்டும்.

மற்றுமொரு பகுதி :

நம் பழைய தன்மைகளோடு ஒப்பிடும்போது, முன்காணா ஜீவன்களாக, நம் சுவபாவங்களை முற்றாக நிலைமாற்றம் செய்யக்கூடியது, இறைவனின் திருச்சக்தி.

பின்வரும் வார்த்தைகள் பொண்ணால் பொறிக்கப்பட வேண்டும் :

பிரார்த்தனகைள் மற்றும் மண்றாடல்கள் மூலமாகவும், பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள தெய்வீக விதிகளுக்கு அடிபனிந்தும், அதிகரித்துக்கொண்டே போகும் (பஹாவுல்லா) அவர்களுடைய சமய சேவை மூலமாகவும், நம்மை நாம் மாற்றிக்கொள்ள முடியும்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, “அதிகரித்துக்கொண்டே போகும் சமயசேவை”, ஒரே சீராகப் போய்க்கொண்டிருக்கும் சமய சேவை அல்ல, அதிகரித்துக்கொண்டே போவது.

மற்றுமொரு பகுதி :

ஒரு “உதாரணமாக விளங்கும் நம்பிக்கையாளர்” இறுதியில், சமயச்சேவையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டும், அதன் போதனைகளில் தன்னை ஆழப்படுத்திக்கொண்டும் புறிந்துணர்வை வளர்த்தும், தனது நம்பிக்கையை பஹாவுல்லாவின்பால் வைத்தும், தன் சிறப்பான சேவையை அவருக்கு வழங்கவென எழுந்தும் உள்ள ஒரு சாதாரண நம்பிக்கையாளரைவிட வேறுபட்டவர் அல்லர். தீர்மானமும், ஆவலும், தகுந்த அளவுடன் இருந்தால், வழிகள் நிச்சயமாகப் பிறக்கும்.

மற்றுமொரு பகுதி :

இறைத்தூதர் மேல் ஆத்யான்மீக பிரக்ஞையை மையப்படுத்தினால், மன அமைதி பெறலாம். ஆகவே நீங்கள் புனிதத் திருவாசகங்களைப் படித்து அப்புனித வாக்குகளிலிருந்து ஜீவநீரைப் பெறுங்கள். பிறகு இவ்வுயர்ந்த சித்தாந்தங்களை நீங்கள் செயல் வடிவெடுக்கச் செய்வதனால், உங்கள் போக்கு முழுவதும் மாறி உங்கள் மனது அமைதி பெறுவது மட்டும் அல்லாது, உங்கள் ஜீவிதமே களிப்பும் ஆர்வ உணர்வும் அடையப் பெறும்.

மற்றுமொரு பகுதி :

பாதுகாவலர் ஷோகி எ•பெண்டி அவர்கள், சமயத்தை நீங்கள் முடிந்த அளவு தீவிரமாகக் கற்றும் போதிக்கவும் வேண்டும் என பெறிதும் உணர்த்த விரும்புகிறார். திருபோதனைகள் பற்றிய உங்களுடைய கல்வி, பஹாய் இலக்கியங்களை படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், உங்கள் உள்ளூர் பஹாய் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்பதன் மூலம் அக்கல்வியை பரந்ததும் நடைமுறைக்கு உகந்ததுமாகச் செய்யவேண்டும். உங்கள் சமய உற்சாகத்தை பரிபாலிக்க, உங்கள் பஹாய்ச் சகோதரர்களுடன் ஒன்றுகூடி வேலை செய்வது அத்யாவசியமானது.
மற்றுமொரு பகுதியில் கூறப்படுவது :

சமயப் போதனைகளில் நாம் கிரகித்துக் கொண்டவைகளை வாழ்ந்துப் பார்க்கவும் மற்றும் உபயோகமான செயல்களாக்கிப் பார்க்கவும், இன்றியமையாத ஒரு ஆய்வு மனையை, பஹாய் சமூக வாழ்வு நமக்கு வழங்குகிறது. அந்த உயிரோட்டமுள்ள ஜீவனின்(பஹாய் சமூகம்) ஒரு அங்கமாக ஆவதன் மூலம், நாம் போதனைகளின் ஊடே ஓடும் மெய் ஆவியை அடையலாம்.

இன்னும் ஒரு பகுதியில் :

நிர்வாகத்தின் தரமும் மற்றும் ஓழுங்கு முறைகளும், சம அளவிலான நேசம், விசுவாசம் மற்றும் அத்யான்மீக வளர்ச்சியோடு இனைந்திருக்க வேண்டும்.
அடுத்தது இங்கு சம்பந்தப்படாவிட்டலும், அதனைப் பார்ப்போம் :

நிச்சயமாக, போதனையே சகல பஹாய் சேவைகளுக்கும் அடிக்கல் ஆகும். …தேடுவோர்களுக்கு புது வாழ்வு தரும்பொருட்டு, புனிதத் திருஆவி பாயக்கூடிய ஒரு நானற் குழலைப் போல் தனிமனிதர் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும்.
இறுதியாக :

தோல்விகள், சோதனைகள், மற்றும் இடுக்கண்கள் ஆகியவற்றை முறையோடு பயன்படுத்திக்கொண்டால், நமது அத்யான்மீக நிலையை தூய்மைப்படுத்திக்கொள்ளவும், சுவபாவங்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும், மற்றும் சேவையில் உயர்ந்த நிலையை அடையவுமான வழிகளாக அவை விளங்கும்.

ஆகவே, எனதருமை நன்பர்களே, நீங்கள் ஒப்புக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். நான் அடையாளம் கண்ட அந்த ஐந்து அங்கங்களாவன : பிரார்த்தனை, போதனைகளை கற்றல், போதனை செய்தல், பஹாய் ஸ்தாபனங்களின் காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளல், சோதனைகள் மற்றும் இடுக்கண்களின் போது இறைவன் மேல் உறுதியும் நம்பிக்கையும் கொள்ளல். இந்த ஐந்து அங்கங்களுக்கிடையில் ஒரு பொது அம்சம் உள்ளது. அதாவது; பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டின்ஆதிக்கத்தின்பால் மனித ஆன்மாவை உட்படுத்துவது. இந்த ஐந்து கட்டங்களிலும் கண்டிப்பாக இந்த அம்சம் இருக்கும். அடையாளம் கண்டுகொள்வது : நீங்கள் பஹாவுல்லாவை கண்டுகொண்டும் அவர்பால் நெருங்கியும் வருகின்றீர்கள். அடிபனிதல் : அவர்தம் விதிமுறைகளுக்கும் ஆனைகளுக்கும் அடிபனிந்து, ‘(பஹாய்)வாழ்வை’ வாழ்கின்றீர்கள். பிரார்த்தனை : நீங்கள் அவரோடு நெருக்கம் வைத்துள்ளீர்கள்; இது பஹாவுல்லா அவர்களுடன் தொடர்புகொள்வது. இது உங்கள் ஆன்மாவை பாதிக்காமல் எப்படி இருக்கும்? போதனைகளைக் கற்றல் : நீங்கள் (புனித)வார்த்தைகளை உங்கள் ஆன்மாவில் புகச் செய்து, உங்கள் ஆன்மாவுக்கு புத்துயிர் அளிக்கின்றீர்கள்; இந்த ஜீவ உணவை உண்கின்றீர்கள். பஹாய் ஸ்தாபனங்களின் காரியங்களில் ஈடுபாடு: பாதுகாவலர் ஷோகி எ•பெண்டி அவர்கள், பஹாய் நிர்வாக முறை, நமது சமயத்தின் ஆன்மாவின் மறுபிறவியாகும் என்று கூறுகிறார். ஆம் ‘மறுபிறவி’ எனும் வார்த்தையைத்தான் அவர் உபயோகப்படுத்துகின்றார். அவர் கூறுவது, நமது சமயத்தின் ஆவி , அந்த இறவா ஆவி, பஹாய் ஸ்தாபனங்களின், இந்த தெய்வீக ஸ்தாபனங்களின் மறுபிறவியாகும். இங்கு உலக மையத்தில், நாங்கள் எல்லா ஸ்தாபனங்களுக்குமான மையமெனும் ‘இதயத்தில்’ இருக்கின்றோம். இறுதியாக, நான் சோதனைகளை சந்திப்பேன், என்பதை உணருவது. நான் இச்சோதனைகளில் தோல்வியுற்றால் பரவாயில்லை, ஏனெனில் நான் மீண்டும் முயற்சி செய்வேன். என்னுடைய நம்பிக்கையையும் உறுதியையும் அவர்மேல் வைப்பேன். அவர் எனக்கு உதவுவார். என் கையை அவர் பிடித்துக்கொள்வார். என்னை வழிநடத்திச் செல்வார். இந்த நம்பிக்கை நிச்சயமாகத் தேவைப்படுகிறது.

பாதுகாவலர் ஷோகி எ•பெண்டி அவர்கள், நிர்வாக அமைப்பின் உலக மையத்தைப் பற்றிக் கூறியதை நினைவுகூர்வோம். அவர் அதை “…தன் இருதயம் துடித்துக்கொண்டிருக்கும், இந்த (நிர்வாக)முறையின் உலக இருக்கை…” நீங்கள் நம்பவேண்டும் அன்பர்களே, சில நேரங்களில் நாங்கள் உலக மையத்தின் இந்த துடிப்பை உணரமுடிகின்றது. நாம் எல்லோருமே இதை நிச்சயமாக உணருகின்றோம். “…அதன் இதயம் துடித்துக் கொண்டிருக்கும், அதன் திருஸ்தாபகர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டும், அதன் நோக்கங்களை வெளிப்படுத்தியும், அதன் ஜீவனுக்கு புத்துயிர் அளித்தும், அதன் இலக்கை உருவகப்படுத்துவதுமான யாவற்றுக்கும் தோற்றுவாயாகவும்…” இந்த புனிதத் தலத்தில் உரையும் அனைவரும் பாக்கியம் செய்தவர்கள். இங்கு சேவை செய்யும் அனைவரையும் இறைவனின் அருள் இங்கு கொண்டு சேர்த்திருக்கின்றது. அது எப்படி என்று நமக்குத் தெரியாது, ஆனால் நாம் எல்லோரும் இங்கு இருக்கின்றோம். நமக்குக் கிட்டிய இந்த ஆசீர்வாதத்தை உணர்ந்து நன்றி செலுத்த வேண்டும். நாம் எங்கிருக்கின்றோம் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாதுகாவலர் அவர்கள், ஏசு நாதர் அவர்களின் வார்த்தைகள் சிலவற்றை விவிலியத்தின் புதிய ஏற்பாடு ‘செய்ன்ட் லியூக்கி’ல் அடங்கியவாறு, குறிப்பிடுகின்றார்: எவருக்கு அதிகமாக அளிக்கப்பட்டுள்ளதோ, (அவரிடமிருந்த) அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.” இங்கு நமது ஆசீர்வாதங்கள் அதிகமாக இருக்குமானால், இறைவனின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும்.

இப்பொழுது, அப்துல் பஹா அவர்களின் நேர்வு நிருபத்தைக் காண்போம். இந்நிருபம், பாதுகாவலர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இது நமக்கெல்லாம் தெரியும். இதன் மூல ஏட்டில், பாராக்களாக இந்த நிருபம் பிரிக்கப்படவில்லை. பாதுகாவலர் அவர்கள், ஆங்கில மூலத்தை ஆறு பாராக்களாகப் பிரித்துள்ளார். முதல் இரண்டு பாராக்களும் முகவுரைகள் போல் விளங்குகின்றன. அடுத்த இரண்டும், உங்கள் அனுமதியோடு, இந்நிருபத்தின் இதயமெனக் கூறுவேன். இறுதி இரண்டு பாராக்களும், இந்த அரங்கேற்றத்தின் முடிவுறைகள் ஆவன.

முதல் இரண்டு பாராக்களும், வழிபடுவோர்கள், இறைவனின் திருவருளின் வாசலில் நின்றுகொண்டு, பனிவுடனும், தாழ்மையுடனும், அவரை இறைஞ்சியும், அவர் கைகளில் கைதி போன்றும், அவர் மீது நம்பிக்கை வைத்தும், அவர் முன் நீர் மழ்கிய கண்களுடனும் இருப்பதாக விவரிக்கின்றன. இந்த விவரிப்பைத்தைதான் அவர்(அப்துல் பஹா அவர்கள்) தருகின்றார். தழுதழுத்த நெஞ்சோடு அடுத்த இரு பாராக்களைக் கூறுவதற்கு, வழிபடுவோர்களை தயாராக்கும் பொருட்டு, அப்துல் பஹா அவர்கள், இந்த விவரிப்பைத் தருகின்றார் என நான் நினைக்கின்றேன். இந்த இரண்டு பாராக்களும் பின்வருமாறு:

தேவரே, எனதாண்டவரே! தங்களின் அன்பர்களுக்குச் ஊழியம் செய்ய எனக்கருள்புரிவீராக, தங்களது சேவையில் என்னைப் பலப்படுத்துவீராக, தங்களது திருச்சபையை போற்றிப் புகழும், தங்களின் திவ்விய இராச்சியத்தின்பால் பிரார்த்தனை செய்யும் எனது புருவங்களை ஒளிவிட்டுப் பிரகாசிக்கச் செய்வீராக.

இங்கு ‘ஊழியம்’ எனும் வார்த்தையில் அழுத்தம் கொடுத்திருப்பதைக் காணுங்கள். குறைந்த பட்சத்திற்கும், அதிகபட்சத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு. குறைந்த பட்சமாக ஒரு பஹாய், அனிதினமும், கட்டாயப் பிரார்த்தனைகளில் ஒன்றைக் கூறி, பத்தொன்பது நாட்களுக்கு விரதம் இருந்தும், அரசியலில் பங்கெடுக்காமலும், அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், முடிந்தால் பத்தொன்பதாம் நாள் பண்டிகைக்குச் சென்றும், நேரிட்டபோது பஹாய் நிதிக்கு வழங்கியும், தன் கைகளை பஹாவுல்லா அவர்களைப் புகழ உயர்த்தி, “இறைவா நான் ஒரு நம்பிக்கையாளனாக இருப்பதற்கு நன்றி” எனக் கூறியும் வாழலாம். இதுவே அடிமட்டம். இதுபோல் வாழ்ந்தால் போதும் என்றும் இருக்கலாம், நல்லது. இது ஒவ்வொருவருடைய வாழ்க்கை, எல்லோருடைய வாழ்க்கையும்தான். தேர்வு செய்வது நம் கையில். ஆனால் அவர் நமக்காக விரும்புவது இந்த மிதமான, மறையப் போகும் குறைந்த பட்ச வாழ்க்கை அல்ல. நாம் ஒரு உயரிய நிலையை குறி வைக்கவேண்டுமென அவர் விரும்புகிறார். நம் செல்வங்கள் யாவற்றையும் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டுமாய் விரும்புகிறார். சமயத்திற்கு, மனிதகுலத்திற்கு, மற்றும் நம்பிக்கையாளர்களுக்கும் சேவை செய்து, தாம் பஹாவின் சேவகராக இருந்ததைப் போன்று நாமும் இருப்பதை அவர் விரும்புகிறார். இதுவே நம் ஒவ்வொருவருக்காகவும் அவர் வேண்டுவது.

“எனது புருவங்களை ஒளிவிட்டுப் பிரகாசிக்கச் செய்வீராக…” என் புருவத்தைக் காணமுடியும், அதாவது புருவம் வெளிப்படையாகக் காணக்கூடிய ஒன்று. மேலும் ஒரு “ஒளிவிட்டுப் பிரகாசிக்கச் செய்வீராக,” எனும் வசனம் பிறகு வருகின்றது, இங்கு அவர் “என் உள்ளத்தை ஒளிபெறச் செய்வீராக” எனக் கூறுகின்றார். உள்ளம் உள்ளே இருக்கின்றது, புருவம் வெளியிற் தெரிவது. இந்த சேவாமார்க்கத்தில், அவர் நம்மைப் படிப்படியாக வெளியில் இருந்து உள்ளே உள்ளவற்றுக்கு வழிநடத்திச் செல்கின்றார். “…திவ்விய இராச்சியத்தின்பால் பிரார்த்தனை செய்யும்.” “ யான் தங்களின் தெய்வீக நுழைவாயிலில் தன்னநலமற்றவனாய்த் திகழ்வதற்கு உதவி புரிந்து,” நாம் இப்போதும் அந்த வாசலில் காத்துக்கொண்டும், தாழ்மையுடனும், பனிவுடனும் நின்றுகொண்டிருக்கின்றோம். ஆனால் அவர் வழிபடுவோர் அனைவரையும் தன்னலமற்று இருக்குமாறு கூறுகிறார். இந்த ‘தன்னலமின்மை’ எனும் வார்த்தைக்கு ஆழமான பிற சம்பந்தங்கள் உண்டு. அப்துல் பஹா அவர்கள், பின்னால், இதே வார்த்தையை அழுத்தத்திற்காக மேலும் உபயோகிப்பதால், அதை நான் பிறகு தொட்டுப் பேசுவேன். “யான் தங்களின் தெய்வீக நுழைவாயிலில் தன்னநலமற்றவனாய்த் திகழ்வதற்கு உதவி புரிந்து, தங்களது தெய்வீக அருகாமையில் எனது பற்றுகள் யாவற்றையும் துறக்கத் துணை புரிவீராக.” ஒரு பஹாய்க்கு லௌகீகப் பொருட்களில் பற்றற்று இருப்பது சுலபம். லௌகீகப் பொருட்கள், தெய்வீக அருகாமைக்கு வெளியே இருப்பன: பணம், கேளிக்கைகள், சுகந் தருபவை, பதவி, புகழ் என்று கூறிக் கொண்டே போகலாம். ஒருவர் இவற்றின் பற்றிலிருந்து விடுபட முடிவெடுப்பது ஏறக்குறைய சுலபம். இப்பொழுது நாம் சமயத்துக்குள் வந்துவிட்டோம். ஆனால், அவர் என்ன சொல்கின்றார்? “தங்களது தெய்வீக அருகாமையில் எனது பற்றுகள் யாவற்றையும் துறக்கத் துணை புரிவீராக” எனக் கூறுகின்றார், ‘அருகாமை’ என்பது அவரைச் சுற்றியுள்ள இடம். நாம் அதற்குள்தான் இருக்கின்றோம். இந்த இடத்தில் நாம் எல்லா பற்றுக்களையும் துறக்க வேண்டும். வெளியே உள்ள இடங்களுடையதை அல்ல! அவர் கூறுவது, அவரது அருகாமை சோதனைகள் நிறைந்தது. அதாவது பாதுகாவலர் அவர்கள் கூறுவது போல், நமது சமயத்துள் நாம் நிறைய சோதனைகளையும் சோதிப்புகளையும் சந்திக்கவேண்டியிருக்கும். ஆகவே, சமயத்திற்குள் நாம் யாவற்றிலிருந்தும் பற்றற்று இருக்கவேண்டும். (திரு. அலி அவர்கள் தம்மைப்பற்றி குறிப்பிடுவது) மையக் கட்டிடத்தில் எனக்கு பிரத்தியேக அறை, அதில் என் பெயர் அட்டை, ஒரு தனி மேஜை மற்றும் ஆலோசனை மன்ற அறைக்கும் நான் செல்கின்றேன், இத்யாதி இத்யாதி. இவை யாவும் என் தலைக்கேறிவிட்டால் நான் எனதாண்டவருடன் பிரச்னை கொண்டுவிடுவேன் என நிச்சயமாக நம்புங்கள். இது சமயத்திற்கு உட்பட்டது. வெளிப்படையாகத் தெரியும் எனது புறச் சேவையே எனக்கு புதைகுழியாகிவிடும். எனக்கு வாழ்வளிப்பதற்கு பதிலாக, இது என் ஆத்யாத்மீக உயிரைப் பறித்து, நான் மறைந்துபோகும்படி செய்துவிடும். இதுதான் நடக்கும். பற்றற்று இருப்பதென்பது, உள்ளிருக்கும், வெளியிருக்கும், யாவற்றிலிருந்தும் உண்மையாகவே பற்றில்லா நிலையை கடைபிடிப்பதாகும். இது தன்னைத் தானே அழித்துக்கொள்வது அல்ல. இது அகங்கார நிலையை அடக்கிவைப்பது, அகங்கார நிலையை கட்டுப்பாட்டில் வைப்பது. இதுதான் அதன் அர்த்தம். அகங்கார நிலையிலிருந்து முழுமையாக விடுபட்டிருப்பதானது, அவதாரங்களுக்கும் அப்துல் பஹா அவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்ற ஒன்று என நமது திருவாசகங்கள் கூறுகின்றன. நீங்களும் நானும் ஆகக்கூடி அகங்காரத்தினை கட்டுப்பாட்டில் வைத்து, அதன் தாக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கலாம்.

அடுத்த வாக்கியம்:

தேவரே! தன்னலமின்மையெனும் கிண்ணத்திலிருந்து என்னை பருகச்செய்வீராக; அம்மேலாடையைக் கொண்டு எது உடலைப் போர்த்துவீராக, அதன் கடலில் என்னை மூழ்க்கச் செய்வீராக.

அன்பர்களே, இதில் எங்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனித்தீர்களா? அப்துல் பஹா அவர்கள், தன்னலமின்மையைப் பருகவும், போர்த்திக்கொள்ளவும், நமது அகம் முழுவதும் அதனால் சூழப்பட்டும் அதில் மூழ்கிப் போகவும், வேண்டும் என விரும்புகிறார் —

இதுவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழுத்தம். பாதுகாவலரின் சார்பில் எழுதப்பட்ட பின்வரும் வார்த்தைகளை பரிசீலிக்கவும்: “…தெளிவடைந்த மனித ஆன்மாவிற்கு, நாளுக்கு நாள் அதிகரித்த அளவில், அகம்பாவம் அடங்கியதாகவே இருக்கவேண்டும், அப்படி இருக்கவும் முடியும்… . இங்கு: “நாளுக்கு நாள் அதிகரித்த அளவில்” எனும் வார்த்தையை கவனிக்கவும். உணர்ச்சிவசப்படாமலும், ஆழமாகவும் இதை ஆராய்வோமானால், இந்த துன்பங்களுக்கும், கருத்துவேறுபாடுகளுக்கும், மூல காரணமாக அகம்பாவ உணர்ச்சிகளும், சுயநல உணர்ச்சிகளுமே இருக்கக் காணலாம்…. ஒவ்வொரு மெய்நம்பிக்கையாளருக்கும், தூயபற்றின்மையும், தன்னலமற்ற சேவையுமே ஒரே குறிக்கோளாக இருக்கவேண்டும்.”
பாப் பெருமானார் அவர்கள் கூறுவதையும் பார்ப்போம்:

அப்பழுக்கில்லா தூய்மையின் துனையுடனான, பவித்திரமான உத்தேசத்தைத் தவிர, வேறு எதுவுமே அதிஉயர்ந்தவரின் சிம்மாசனத்தின்பால் ஏற்றம் அடையவோ, அவருக்கு ஏற்புடையதாகவோ, இருப்பதற்கு தகுதி இல்லை என்பதற்கு காலம் வந்துவிட்டது.

ஆக இந்த அளவு பற்றின்மையை நாம் அடையவேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
அப்துல் பஹா அவர்கள் மேற்கொண்டு கூறுகிறார்:

“தங்களது அன்பர்களின் பாதையில் என்னை தூசாக்கி….”நம்மில் எத்தனை பேர் புழுதியைப் போலாக விரும்புகிறோம்? நன்பர்களே, அப்துல் பஹா அவர்களின் உத்தேசம், நம்மை நாமே கீழ்த்தரப்படுத்திக்கொள்வது அல்ல. இது, ஒருவர் தன்னைத்தானே மட்டப்படுத்திகொள்ளும் ஒரு அப்பியாசமும் அல்ல. இல்லை, நமது கௌரவத்தை (உயர் பிறவிகள் எனும் நிலையை செயல்களால் கடைபிடிப்பது) நாம் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றுதான் அவர் வேண்டுகிறார். ஆண்டவனால் நாம் உயர்பிறவிகளாக படைக்கப்பட்டுள்ளோம் என்றே பஹாவுல்லா கூறுகின்றார். நாம் கௌரவத்துடனும், உயர்பிறவிகளாகவும் இருக்கவேண்டும். ஆனால் பிற அன்பர்களின் பாதையில் பாறையைப் போல் நாம் இருந்தால் அவர்கள் தடுமாறி கீழே விழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்திலேயே இருந்தால் பிற மனிதர்கள் நம்மேல் கால்தடுமாறி விழும் நிலையே ஏற்படும். யாரோ ஒருவர் உங்கள் மேல் இடரி விழுவாரேயானால், நீங்கள் “என் உடல் அடிபட்டுவிட்டது” எனக் கூறலாம். ஆனால் அப்துல் பஹா நம்மை தாழ்மையோடு இருக்கச் சொல்கிறார். அடிபட்டுவிட்டால் பரவாயில்லை. அன்பர்கள் உங்கள் மேல் ஏறி நடந்து செல்லட்டும், நம் சமயம் முன்னேறட்டும். “என்னைப்போல் இரு, என்னைப் பின்பற்று.”

“உயர்வுமிக்க ஒளியின் அதிபரே, தங்களது அன்பர்களின் பாதையில் என்னை ஒரு தூசாக்கி, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தங்களது வழியில் நடப்போர்களின் பாதங்கள் பட்டு அதனால் உயர்வடைந்துள்ள நிலத்திற்கு, எனதான்மாவை அர்ப்பணிக்க அருள்புரிவீராக.”

அவர் நமக்கென சித்தரிக்கும் காட்சியை பார்க்கின்றோம். அவர் கூறுவது: “இதோ மண். இந்த மண்ணின் மேல் கடவுள் தேர்வுபெற்றோர் காலடி பட்டுள்ளதால் இந்த மண் மேன்மையடைந்துள்ளது. இறைபக்கதர்களுக்கு அவர் கூறுவது, “ நான் இருந்ததைப்போல் நீங்களும் கடவுள் சம்பந்தம் பெற்ற இந்த மண்ணுக்காக, இறைவனுடனான அதன் உறவுக்காக, உயிரைவிடவும் சித்தமாக இருக்கவேண்டும்.” பஹாவுல்லாவின் ‘பிரார்த்தனைகளும் தியானங்களும்’ நூலில் அவர் இதே தொனியில் கூறுவது: “என் இறைவா, ஒரு கைப்பிடி மண் உங்களுடன் தொடர்புற்றிருந்தால், உங்கள் உறவு பெற்ற அதை ஆராதிக்க நான் எதைச் செய்தாலும் போதாது. இந்த பிணைப்பால், இந்த உறவால், அந்த மண்ணுக்காக நான் எது செய்தாலும் போதுமானதாகாது.” இந்த பிரார்த்தனையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சிந்தனை, அப்துல் பஹா அவர்களின் நேர்வு நிருபத்திலும் அடங்கியுள்ளது. அவர் அடியார்கள் காலடி பட்ட மண்ணுக்காக நாம் உயிரைவிடவும் சித்தமாக இருக்கவேண்டும் என்றிருக்கும் போது, அவர் சமயத்திற்காக நாம் இன்னும் என்ன என்ன செய்ய வேண்டும்? அந்த மண்ணைவிட இறைவனின் சமயம் நிச்சயமாக விலைமதிப்பற்ற ஒன்று அல்லவா? நாம் இங்கே விவரிப்பது நமது சமயத்தின் நன்மையை. அந்த மண் அவ்வளவு சிறப்பானதென்றால், புனிதத் தலத்தில் வீற்றிருக்கும் நினைவாலயங்கள், அந்த இரு கட்டிடங்கள், பா‹ஜி நகர், எவ்வளவு சிறப்பானவைகளாக இருக்கவேண்டும். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது இந்த அளவிலான சுயநலமின்மையையே. அவர் அந்தவிதமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார்.

கடைசி இரு பத்திகளும் முடிவுறையாகும். இருந்தபோதிலும் அவற்றிலிருந்து இரு விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “ தேவரே! அவனது ஆவலைப் பூர்த்தி செய்வீராக; அவனது உள்ளத்தை ஒளிபெறச் செய்வீராக; அவனது மனதுக்கு மகிழ்ச்சியூட்டுவீராக; அவனது ஒளியைப் பிரகாசிக்கச் செய்வீராக… இந்த வரியே இந்த பிரார்த்தனையின் முடிவு. “அவனது உள்ளத்தை ஒளி பெறச் செய்வீராக…” ஒளி பெறுவதற்கும் பிரகாசிப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு. அவை இரு வெவ்வேறு விஷயங்கள். பாப் பெருமானார் அவர்களின் நினைவாலயத்துக்குப் போகும்போது, அதன் உள்ளிருந்து பாதுகாவலரால் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளின் ஒளி, அதன் சன்னல்கள் வழியாக வீசக் காணலாம். அங்கு ஒளியைக் காண்கின்றோம். ஒளிவெள்ள விளக்குகளின் பிரகாசத்தையும் காணலாம். வெளியே தெரிவது ஓளிவீச்சு, உள்ளே தெரிவது ஒளித்தூண்டல். ஆக அப்துல் பஹா அவர்கள், நாம் இரு விதத்தில் ஒளி பெற வேண்டும் எனக் கூறுகிறார். சமய ஒளியில் நாம் எப்போதும் காய்ந்துகொண்டு இருக்க வேண்டும். திருச்சமயத்தின் ஒளி நம்மீது வீச அனுமதிக்கப்படல் வேண்டும். அதிலிருந்து உங்களைத் தடுத்துக்கொள்ளாதீர்கள். சதா அதன் ஒளியை நாடுங்கள். ஆனால் இது மட்டும் போதாது. அதே சமயம் உங்கள் ஆன்மாவும் தீப்பற்றி, எரிய வேண்டும். வெளியிலிருந்து கிடைக்கும் சமய ஒளி ஒருவேலை இல்லாது போகும்போது, உங்கள் உள்ளிருந்து பிறக்கும் ஒளியானது, நீங்கள் பிற அன்பர்கள் மற்றும் சமய நடவடிக்கைகளிலிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுத் தனிமையில் இருக்கும் அந்த நேரத்தில், உங்கள் உள்ளிருந்து பிறக்கும் பிறகாசம் உங்களுக்கு ஒளி தரும். தங்கள் உயிர் பறிக்கப்படப்போகும் நாளை எதிர்பார்த்து, தனிமையில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நமது பாரசீக உயிர்த்தியாகிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று நினைக்கின்றீர்கள்? வெளிப்படையாக என்ன வைத்திருந்தார்கள்? தங்களைத் தவிர, வேறு ஒன்றுமே இல்லை. மற்றும் அவர்கள் மனனம் செய்துவைத்திருந்த பிரார்த்தனைகளும் திருவாசகப் பகுதிகளும், மற்றும் தங்கள் ஆண்டவரைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால் அவர்கள் ஒளி பெற்றிருந்தனர், உள்ளொளி தூண்டப்பெற்றிருந்தது. இதைத்தான் அப்துல் பஹா எடுத்தியம்புகின்றார். புற ஒளி அடையப் பெற்றால் மட்டும் போதாது, நமது அக நிலையில், நமது ஆன்மா இறை அன்பு எனும் தீ பற்றி எரிய வேண்டும்.

இப்போது, முடிக்குமுன் நான் மிகவும் விரும்பும், அன்புப் பாதுகாவலர் எழுதிய சில வரிகைள இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

காண்பது எவ்வளவு காரிருளாயிருப்பினும், காரியம் எவ்வளவுதான் சிறமமாக இருப்பினும், சுற்றுச் சூழ்நிலை என்னதான் அன்னியமானதாகவும் வசதியற்று இருப்பினும்… இடைஞ்சல்களும் கட்டுப்பாடுகளும் எவ்வளவுதான் நிறைந்திருப்பினும்… அனுபவித்தாக வேண்டியத் தற்காலிகத் தோல்விகள் எவ்வளவுதான் சோதிப்பனவாயிருப்பினும், எந்தச் சூழ்நிலையிலும், நாம் கண்டிப்பாக, தடுமாறாதும் பின்வாங்காமலும் இருக்கவேண்டும். சர்வ-நேசரும், சர்வ-போஷகரும், சதா-ரட்சிப்பவரும், சதா-பாதுகாப்பவருமாகிய, ஆண்டவரின் குறைவுபடாத அருளின் மேல் நாம் வைத்துள்ள நம்பிக்கை, எவ்வளவுதான் சூழ்நிலையால் இடிபட்டாலும், இறுதி வரை உறுதியாக இருக்கவேண்டும்….. உடலின் கடைசிச் சொட்டு பலமும் போன நிலையில், கலைத்து ஆனால் புலகாங்கிதம் நிறைந்து, நம்மால் வாக்களிக்கப்பட்ட அறுவடை கொண்டுவரப்படும் வரையில், நமது அன்பருக்கு நாம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரையில், ஒருவர் தவறாமல், எல்லோரும், எல்லா ரீதியிலான நடவடிக்கைகளிலும்… சிரத்தையுடனும், தொடர்ந்தாற்போலும், பங்கேற்று உழைக்கவேண்டும்.

பிரார்த்தனை


(திரு அடிப் தாஹெர்ஸாடே அவர்கள் ஆற்றிய உரை)

என் உரையை ஆரம்பிக்கு முன் மறைமொழிகளிலிருந்து ஒரு சில வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
மனிதனின் புத்திரனே! உன் படைப்பினை விரும்பினோம் ஆகவே உன்னைப் படைத்தோம்.
உன்னைச் செல்வந்தனாகப் படைத்திருந்தும் நீ ஏன் உன்னை ஏழ்மை நிலைக்குத் தாழ்த்திக் கொள்கிறாய்.2
எம்மைத் தவிர மற்றெல்லாவற்றையும் மறந்து எமது ஆவியுடன் தொடர்பு கொள்வாயாக. இதுவே எமது கட்டளையின் சாரம், ஆகவே அதன்பால் திரும்புவாயாக.3

அடுத்து உங்களுடன் ஒரு கதையை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

1970-களின் முதல் சில வருடங்களில், ரூஹிய்யா காஃனும் அவர்கள் 4 வருட காலத்தில் ஆப்பிரிக்க கண்டத்தையே சுற்றி வந்தார். அப்போது, மாலி நாட்டில், தம்பதிகளான இருவரைச் சந்தித்தார். அதாவது மாலியைச் சார்ந்த ஆப்பிரிக்கர் ஒருவரையும் அவரது மனைவியையும். அந்த மனிதர் ரஷ்யாவில் மேற்கல்வி பயின்று, அங்கேயே திருமணமும் செய்துகொண்டு, தமது ரஷ்ய மனைவியோடு மாலி திரும்பியிருந்தார். ருஹிய்யா காஃனும் அவர்கள் சந்தித்த முதல் ரஷ்ய பெண்மணி இவரே. அந்த காலத்தில் ரஷ்யர்கள் சுதந்திரமாக வெளிநாடுகளுக்குப் பிரயாணம் செய்யமுடியாது. அதே போல் வெளிநாட்டவரும் ரஷ்ய நாட்டிற்கு செல்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆகவே ரூஹிய்யா காஃனும் அவர்கள் தாம் சந்திக்க நேர்ந்த முதல் ரஷ்ய பெண்ணான அவரை கட்டியனைத்து தமது அன்பை வெளிப்படுத்தினார். அந்தப் பெண்ணும் ரூஹிய்யா காஃனும் அவர்கள்பால் மிகவும் கவரப்பட்டு, தாம் இறைவனைப் பற்றி மேலும் அதிகமாக அறிய விரும்புவதாகவும், தமக்குப் பிரார்த்தனை செய்யத் தெரியாதெனவும், அதனால் மிகுந்த கவலைப்படுவதாகவும் கண்ணீர் மல்கக் கூறினார்.

இந்தக் கதையைப் பற்றி நான் சிந்திக்கும் போதெல்லாம், குறிப்பாக பஹாய் குடும்பங்களில், பஹாய்ச் சூழ்நிலையில் வளர்ந்த நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்றும், பிரார்த்தனை நமக்கு இயல்பாகவே அமையக்கூடிய ஒன்றல்லவா எனவும் எண்ணினேன். என் வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவத்தைப்போலவே, குழுந்தைப் பிராயத்திலேயே நாம் எல்லோரும் பிரார்த்தனைகளை கூற ஆரம்பிக்கின்றோம் அல்லது நாம் பஹாய்கள் ஆனவுடன் பிரார்த்தனைகள் கூறப்படுவதை செவிமடுத்தும் அவற்றை புறிந்து கொள்ளவும் ஆரம்பித்துவிடுகின்றோம். பஹாவுல்லாவின் பிரார்த்தனைகளும் தியானங்களும் எனும் ஒரு முழு நூலே நம் கை வசம் உள்ளது. பலவித சூழ்நிலைகளுக்கு ஏற்ற மிகவும் அழகான பிரார்த்தனைகளைக் கொண்ட பிரார்த்தனை புத்தகமும் உண்டு. என்றும் இறைவன்பால் திரும்பி அவருடன் தொடர்பு கொள்வதான இவ்வித ஒரு கலாச்சாரத்திலேயே நாம் வாழ்ந்து வந்துள்ளோம். நமது பஹாய் வாழ்க்கைக்கும், இறைவனை ஆராதனை செய்யும் வாழ்க்கைக்கும், இது ஒரு முக்கியமான அம்சம் என்பதை வாசகங்களில் நாம் காணலாம். இறைவனைத் தேடுவது, அவரை அறிந்துகொள்வது, அவரைப் பிரார்த்திப்பது, அவருடன் தொடர்பு கொள்வது, மற்றும் அவரது வெளிப்படுத்தப்பட்ட வாசகங்களைப் படிப்பது எனும் உயர்ந்த ஸ்தானத்திற்கு இறைவனின் படைப்புக்கள் அனைத்திலுமிருந்து, மனிதன் மட்டுமே தனியே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளான். மிருகங்களினால் இதைச் செய்ய முடியாது. பிரார்த்தனையுடன் பஹாவுல்லாவை நோக்கித் நமது உள்ளங்களைத் திருப்பி, அவரது உதவியையும் வழிகாட்டலையும் யாசிப்பதென்பது எவ்வளவு பெரிய பாக்கியம்.

இந்த சொற்பொழிவை பல பகுதிகளாக நான் பிரித்துள்ளேன்.

முதலாவது “பிரார்த்தனையின் முக்கியத்துவமும் இறைவனை நினைவுகூர்வதும்” ஆகும்.

இரண்டாவது, “நாம் ஏன் பிரார்த்திக்கவேண்டும்” என்பதாகும்.

மூன்றாவது “எத்திசையை நோக்கி மற்றும் யாரை நோக்கி நாம் பிரார்த்திப்பது?” என்பதாகும்.

நான்காவது “பிரார்த்தனையின் சக்திக் கூறுகள் பற்றி சில சிந்தனைகள்” (புனித வாசகங்களை அடிப்படையாகக் கொண்ட மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இப்பகுதி பெரும்பாலும் என் சொந்த கருத்துக்களையே உள்ளடக்கியிருக்கும்.).

ஐந்தாவது பகுதி, “பிரார்த்தனையின் மூலம் தன்மை மாற்றம்” என்பதாகும்.

அ. பிரார்த்தனை மற்றும் தியானத்தின் முக்கியத்துவம்

சுருக்கமான கட்டாயத் துதியில் முதலில் வருவது, “உம்மை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி” எனும் சொற்களே. இந்த “வழிபடுவது” எனும் வார்த்தைக்கு இங்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன: அதாவது வெளிப்படையான எழுத்தறிவு சார்ந்த அர்த்தம் ஒன்றும், மறைபொருளாய் உள்ள ஆன்மீக அர்த்தம் மற்றொன்றும் ஆகும். அதாவது “வழிபடுவதென்பது” இறைவனை நமது செயல்களாலும், கீழ்படிதலாலும் வழிபடுவதாகும். “சேவை பிரார்த்தனையாகும்”4 என அப்துல் பஹா கூறுகின்றார்.

மறைமொழிகளில், “உன் நோய்கள் அனைத்திற்கும் குணப்படுத்துதலாக இருப்பது எம்மை நினைவுகூர்வதே, அதை மறந்துவிடாதே.”5 இறைவனை நினைவு கூர்வதென்பது, துக்கத்தை களிப்புணர்வாக மாற்றவும், கவனமின்மை எனும் துருவை அகற்றவும் கூடியது.”6 மறுபடியும், “எம்மை நினைவு கூர்வது, ஆன்மாக்களுக்கு நோய்தீர்க்கும் மருந்தாகவும், மனிதர்களின் உள்ளங்களுக்கு ஒளியாகவும் உள்ளது,”7 எனக் கூறுகிறார். “பிரார்த்தனை நிலையே நிலைமைகள் அனைத்திலும் மேலான நிலையாகும். ஏனென்றால், மனிதன் அப்போது இறைவனோடு தொடர்பு கொள்கின்றான். தனிமையில், குறிப்பாக, தினசரி பிரச்சினைகளில் இருந்து விடுபட்டிருக்கும் வேளையான நள்ளிரவு போன்ற நேரங்களில் கூறப்படும் பிரார்த்தனையானது, மெய்யாகவே உயிரளிக்கின்றது.”8

பிரார்த்தனை நமக்கு இறக்கைகளை அளிக்கின்றது, பிரார்த்தனை ஆன்மாவுக்கு உணவு போன்று அதற்கு உயிரளிக்கின்றது; மனிதன் தனது லௌகீக வாழ்வில் சுவைக்கக் கிடைக்காத அளவிற்கு இனிமை வாய்ந்தது, போன்ற குறிப்புகளை பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் பிற வாசகப் பகுதிகளில் காணலாம். மறுபடியும், “புஷ்பங்களுக்கும் மலர்சரங்களுக்கும் புத்தம் புது வடிவத்தையும் மென்மையையும் அளித்து, அவை புதுத் தோற்றம், பரிமள மனம் மற்றும் புது வசீகரம் பெறச் செய்யக்கூடிய மழையையும் பனித்துளியையும் போன்றதே இறைவனை நினைவு கூறுவதென்பதாகும்.”9 மீண்டும்:
“வலிமையற்ற ஒருவர் வலிமை படைத்த ஒருவரை மன்றாடிக் கேட்பதே பொருத்தமாகும் என்பதையும், வெகுமதிகளைத் தேடும் ஒருவர் மகிமை பொருந்திய கொடையாளியானவரை இரைஞ்சுவதே தகுந்ததாகும் என்பதையும், மெய்யாகவே அறிவீராக. ஒருவர் தமது தேவரிடம் மன்றாடி, அவர்பால் திரும்பி, அவரது சமுத்திரத்திலிருந்து வெகுமதிகளை வேண்டும் போது, அம்மன்றாடலானது அவரது உள்ளத்திற்கு பிரகாசத்தையும், பார்வைக்கு ஒளியையும், ஆன்மாவுக்கு புத்துயிரையும், அவரது நிலையை மேன்மை பெறச் செய்வதாகவும் உள்ளது… இக்கவர்ச்சிகளின் மூலமாக ஒருவரின் ஆற்றலும் திறனும் அதிகரிக்கின்றன. கொள்கலம் பெரிதாக்கப்படும் போது (அதில்) நீரும் அதிகரிக்கின்றது. தாகம் அதிகரிக்கும் போது மேகங்களின் கொடை மனிதனின் சுவைக்கு ஏற்புடையதாகின்றது. இதுவே மன்றாடலின் மர்மமும் ஒருவரது தேவைகளை வெளியிடுவதில் அடங்கியுள்ள விவேகமும் ஆகும்.” 10

ஆ. நாம் ஏன் பிரார்த்திக்கின்றோம்?

நாம் பிரார்த்திக்கின்றோம் என்பது தெரிவதற்காகவோ, பிரார்த்திக்க வேண்டும் எனும் கடமையை நிறைவேற்ற புனித வாசகங்களை ஒப்புவித்தோ படிக்கவோ செய்தாலும், அல்லது ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றோம் எனும் திருப்திக்காக பழக்க தோஷத்தினால் பிரார்த்தித்தாலும், புனித வாசகங்களில் கண்டுள்ள அனைவற்றின்படி, பிரார்த்தனையின் நோக்கம் முழுமையாக அடையப்படவில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும். “மேன்மைபடுத்தப்பட்ட மகிமையின் சிகரத்தின்பாலும், ஐக்கியத்தின் மையத்தின்பாலும் உன் உள்ளம் ஈடுபாடற்று இருக்கும் போது உன் நா வெறும் வாய் வார்த்தையால் இறைவனை வாழ்த்தாது இருக்கட்டும்,”11 என பாப் அவர்கள் கூறுகின்றார். “இயன்ற அளவு புனிதத் தன்மையுடனும் பிரகாசத்துடனும் கூறப்படும் பிரார்த்தனையே அதி ஏற்புடையது,”12 மேலும் அப்துல் பஹா கூறுவது:
“எல்லா பொருட்களையும் விட்டு விலகியிருந்து அந்த நிலையை அடைய முயற்சி செய்யவேண்டும்… ஆன்மீக விஷயங்களைப் பற்றி அதிகமாகவும் லௌகீக விஷயங்களைப் பற்றி குறைவாக சிந்தித்தும் பொருட்படுத்தியும் அதை அடையலாம். ஒன்றைவிட்டு எவ்வளவு தூரமாக விலகிச் செல்கின்றோமோ அவ்வளவிற்கு மற்றதை நோக்கி நெருங்கி வருவோம். முடிவு நம் கைகளில்தான் உள்ளது.”13

புனித வாசகங்களில் குறித்துள்ளபடி, இறைவன் எந்த மாதிரியான பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வார்; எவ்விதமான அகத்தூண்டுதல்கள் அவரது பார்வையில் ஏற்புடையவையாகின்றன? இறைவனின் நோக்கத்துடன் எவ்வித உத்தேசங்கள் ஐக்கியப்படக் கூடியவையாகின்றன? என் கருத்து, முதலாவதாக, நமது பலவீனத்தையும் இயலாமையையும் ஒப்புக்கொள்வதாகும். சுறுக்காமான கட்டாயத் துதியில் நாம் இப்போது குறிப்பிட்ட அந்த பத்திக்குப் பின் உடனடியாக வரும் வரிகளில், “இத்தருணம் என் பலவீனத்திற்கும், உந்தன் வல்லமைக்கும்… நான் சாட்சியம் கூறுகின்றேன்” என பஹாவுல்லா நம்மை கூற வைக்கின்றார். ‘பிரார்த்தனைகளும் தியானங்களும்’ நூலில், “என் தேவரே, உமது சமயத்தின் மகிமையை, அவர்கள் முன் மூடுதுனி நீக்கிடுவீறாக… என் தேவரே, உமது சுயநிலையின் வெளிப்பாட்டாளராகிய அவர் முன்பாக அவர்களுடைய வலிமையின்மை பற்றிய ஒரு உணர்வைக் கொண்டு அவர்களுக்கு உற்சாகமூட்டுவீராக…”14 இந்த வலிமையின்மை பற்றி நிறைய வாசகப் பகுதிகள் உள்ளன. அவற்றை எல்லாம் படிப்பதற்கு நேரம் போதாது. “வலிமையின்மை” எனும் தலைப்பின் கீழ் சொற்காட்டிப் பகுதியில் தேடிப்பார்த்தால் அதன் முக்கியத்துவம் தெரிய வரும். நாம் வலிமையற்றவர்கள், அறியாதவர்கள், வறியவர்கள், ஆற்றலற்றவர்கள் என்பதை நாம் நமது தேவராகியவரிடம் கூறுவதே நாம் முதன் முதலில் செய்யக்கூடியது. இந்த வார்த்தைகளின் அர்த்தங்களை நாமே சொந்தமாக தேடி கண்டுபிடித்துக்கொள்ளலாம்.

இறைவன், நாம் நமது பலவீனத்தை ஒப்புக்கொள்வதை பார்க்க ஏன் விரும்புகிறார்? இதன் காரணம், அவர் பலவீனமானவர் அல்ல, வல்லமையில்லாமை என்பது அவருக்கு கிடையாது. அவரிடம் இல்லாத ஒன்று, இந்த ஒரு விஷயமே. ‘பிரார்த்தனைகளும் தியானங்களும்’ நூலில் இந்த பலவீனத்தை ஒப்புக்கொள்ளல், “உம்மால் விரும்பப்பட்டது”15 என அவரே கூறுகின்றார். நாம் இந்த உண்மையை ஒப்புக்கொள்வதை அவர் கேட்க விரும்புகிறார். அவரது நிருபம் ஒன்றில், (மொழிபெயர்க்கப்படாதது) மனிதன் சொல்லக்கூடியதும் செய்யக்கூடியதும் காற்றில் அலைகழிக்கப்படும் காய்ந்துதிர்ந்த ஓர் இலையின் அசைவுகளுக்கும் சலசலப்பிற்கும் சமமென பஹாவுல்லா கூறுகின்றார். தான் உதித்த, மற்றும் ஒட்டியும் கொண்டுள்ள அந்த மரத்தின் உண்மையியலை, அதன் கிளைகளை மற்றும் பழங்களை அது எவ்வாறு புறிந்துகொள்ள முடியும்? வலிமையின்மை என்பது ஆன்மாவிற்கு பறக்கக் கூடிய ஆற்றலை வழங்கும் ஓர் இறக்கை போன்றது அல்லது அந்த இலை பற்றிக்கொள்ளக்கூடிய ஒரு கயிறு போன்றதாகும்.

இந்த பலவீனம் மற்றும் வலிமையின்மை ஆகியவற்றின் மற்றொரு அம்சமான, மனித ஆன்மாவின் இன்றியமையாத ஒரு இயல்பு, பஹாவுல்லா நமக்கு போதித்துள்ளவாறு பிரார்த்தனைகளின் போது நாம் கூறக்கூடிய வார்த்தைகளில், விவரிக்கப்பட்டுள்ளது: “என் இறைவா, எனக்கு நன்மை பயப்பதையும் தீமை பயப்பதையும் நான் அறியேன். அதாவது, குறிப்பாக: “…உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும் எனக்கு நன்மையளிக்கக் கூடியதை எனக்கு வழங்குவீராக, ஏனெனில் எனக்கு உதவக்கூடியவற்றையோ தீங்கிழைக்கக்கூடியவற்றையோ நான் அறியேன். உண்மையாகவே, சர்வ-ஞானியும், சர்வ-விவேகியும் நீரே ஆவீர்.”16 வேறொரு பிரார்த்தனையில்: “இறைவா! நான் என்னை அறிந்து வைத்திருப்பதைவிட நீரே என்னை நன்கு அறிந்துவைத்திருக்கின்றீர்,”17 எனக்கூறப்பட்டுள்ளது. நாம் நம்மை நன்கு அறிந்துள்ளோம் என நினைக்கின்றோம். ஆனால் கடவுளோ, உன் உண்மையான நிலை உனக்குத் தெரியாது, அதனை நானே அறிவேன், என கூறுகின்றார்.

நமது இயலாமையை நாம் ஒப்புக்கொள்வதோடு, நமது குறைபாடுகளை மன்னித்தருளுமாறு நமது பிரார்த்தனைகளின் போது நாம் வேண்டுவது நமக்கு மதிப்புக்குறியதாகவும், ஏற்புடையதாகவும் உள்ள ஒன்று என்பது என் எண்ணம். “குறைபாடுகளா?” என நீங்கள் கேட்கக் கூடும். நண்பர்களே, நாம் எல்லோருமே பாவிகள். பிரார்த்தனைகளில் இவ்விஷயம் குறிக்கப்பட்டுள்ளதை நீங்கள் கண்டுள்ளீர்கள். அதற்காக, பிரார்த்தனைகளின் போது, அவ்வாசகங்களை வாசிக்கும்போது, அவ்வரிகளை கூறிவிட்டு, அதே வேளையில், “இவை எனக்காக கூறப்பட்டவை அல்ல, பிறருக்காகவே எழுதப்பட்டுள்ளன,” என நான் எனக்கு நானே கூறிக்கொள்ளலாமா? இல்லை! அவ்வாசகங்கள் குறிப்பிடுவது போலவே, நான் ஒரு பாவி, ஏனென்றால் நான் ஒரு மனிதப்பிறவி, ஏனென்றால் பிடிவாத குணமான அகந்தை எனக்கு இருக்கின்றது. நீண்ட கட்டாயப் பிரார்த்தனையை கூறத் தேர்ந்தெடுக்கும் போது, தினசரி இவ்வரிகளை நாம் மீண்டும் மீண்டும் கூறுகின்றோம்: “இப்பிழையோன் தங்கள் மன்னிப்பு எனும் சமுத்திரத்தையும்,… இந்த ஈன சிருஷ்டியானவன் தங்கள் கிருபையெனும் கதவினைத்தட்டுவதையும்… தாங்கள் காண்கின்றீர். கடவுளே, என் கடவுளே! என் பாபச் சுமையினால் எனதுடல் வளைமுதுகாகியது. எனது கவனமின்மை என்னை அழித்துவிட்டது, எனது தீய செயல்களையும், தங்களது தயவு தாட்சண்யங்களையும் நான் ஆழ நினைத்திடும் போதெல்லாம் என் நெஞ்சம் என்னுள் உருகுகின்றது; என் நாளங்களில் என் இரத்தம் கொதிக்கின்றது. தங்களது அழகின் சாட்சியாகக் கூறுகிறேன், உலகின் ஆவலே! தங்கள் முன் என் முகத்தை உயர்த்திட நாணுகின்றேன்; தங்கள் அருட்கொடையெனும் சுவர்க்கத்தை நோக்கி நீண்டிட என் ஏங்குறும் கரங்கள் வெட்கங்கொள்கின்றன.”

உண்மையான பிரார்த்தனையானது, கண்ணீருடனும் பெருமூச்சுடனும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய ஒன்றென, அப்துல் பஹா கூறுகின்றார். நீண்ட கட்டாயப் பிரார்த்தனையிலும் பஹாவுல்லா இதே சிந்தனையை வெளியிடுகின்றார்: “தாங்கள் என் கண்ணீரையும், நான் விடும் பெருமூச்சினையும் உணர்கின்றீர், என் வேதனைக் குரலையும், என் புலம்பலையும், என் இதயத்தின் கதறலையும் கேட்கின்றீர்;” இறைவனிடம் நாம் எப்படி உரையாட வேண்டும் என நமக்கு போதிக்கின்றார். நமது உண்மையான நிலை யாது என்பதை நமக்கு விளக்குகின்கிறார். ஆனால் நமது அகந்தையோ வேறொரு கதையை கூறுகிறது. நாமே முக்கியமானவர்கள், விசேஷமானவர்கள்; நம்மைப் போல் எவரும் இல்லை; நானே இப்பிரபஞ்சத்தின் மையமாக ஒரு வேளை இருக்கக்கூடும், என தொடர்ந்தாற் போல் கூறுகின்றது. இங்கு மறுபடியும் அப்துல் பஹா கூறுவதை கவனிப்போம்: “விடாப்பிடி கொண்ட அகந்தையின் தாக்குதல்களின் காரணத்தால் ஏற்படும் பெருமூச்சும் அழுதலும், உண்மையான நம்பிக்கை கொண்ட மக்களுக்கு, பிரார்த்தனையின் இன்றியமையா அங்கங்கள்.”18

இப்போது, சிறிது மகிழ்வைத் தரக்கூடியவையை பார்ப்போம்: அவையாவன, இறைவன்பால் நமது அன்பு, அவரை வாழ்த்த வேண்டும் எனும் நமது வேட்கை, அவரை மகிமைபடுத்துவது ஆகியவை. மீண்டும் நீண்ட கட்டாயப் பிரார்த்தனையிலிருந்து ஒரு குறிப்பு: “என் கடவுளே, தங்களை வழிபடும் தனது ஏக்கத்தில், தங்களை நினைவு கூர்ந்து உயர்த்திப் புகழும் தனது பேராவலில் எங்ஙனம் எனதான்மா எனது அங்கங்களிலும், அவயங்களிலும் கிளர்ச்சியுற்றது என்பதையும்… நீர் காண்கிறீர்.” நீண்ட கட்டாயப் பிரார்த்தனையை எப்போது ஒப்புவிக்க வேண்டும் என்பது பற்றி கருத்துரைக்கும் போது, “பனிவார்ந்த நிலை, பூஜிக்க வேண்டும் எனும் வேட்கை ஆகிய நிலைகளை ஒருவர் அடைந்திடும்போது,”19 என பஹாவுல்லா கூறுகின்றார். இந்த வேட்கை, இந்த அன்பு, அன்பரை பூஜிக்கவேண்டும் எனும் இந்த ஆவல் ஆகிவற்றைப்பற்றி அப்துல் பஹா விளக்குகிறார்:

“ஒரு நண்பர் இன்னொருவரிடம் அன்பு கொள்வாரானால் அதை அவ்வாறு கூற விரும்புவது இயற்கையல்லவா? அந்நபர் அவர் மீது தான் வைத்திருக்கும் அன்பை அறிந்துள்ளார் என்பது தெரிந்தாலும் அதனை அவரிடம் கூற விரும்புவார் அல்லவா?… இறைவன் எல்லோருடைய இதயங்களின் ஆவல்களையும் அறிந்திருக்கிறார் என்பது உண்மையே, ஆனால் பிரார்த்திப்பதற்கான தூண்டுதலானது இறைவன்பாலுள்ள மனிதனது அன்பிலிருந்து தோன்றும் இயற்கையான ஒன்றாகும்…”

“…அன்பில்லா வார்த்தைகள் அர்த்தம் இல்லாதவை. உம்மை சந்தித்த ஒருவர், அன்பில்லாமலும் களிப்பில்லாமலும், விரும்பத்தகாத ஒரு கடமையாக நினைத்து உம்முடன் பேசினால், அவருடன் நீங்கள் உரையாட விரும்புவீர்களா?”20

மறுபடியும்: “மிக உயர்ந்த பிரார்த்தனையில் மனிதர்கள் இறைவனின் அன்பிற்காக மட்டுமே பிரார்த்தனை செய்கிறார்கள். இறைவனின் மீது அல்லது நரகத்தின் மீதுள்ள அச்சத்தாலோ, அருட்கொடை அல்லது சுவர்கத்தை அடையும் நம்பிக்கையுடனோ அல்ல… ஆன்மீக மனிதன் இறைவனை நினைவுபடுத்திக்கொள்வதை தவிர வேறெதிலும் இன்பத்தை காண்பதில்லை”21 இறைவன்பால் அன்பெனும் இந்த விஷயம் மிகவும் பரந்த ஒன்று; நாமெல்லோரும் நன்கு கற்க வேண்டிய கடலளவு விஷயமாகும். நான் புறிந்து கொண்டதை சுருக்கமாக கூறுகின்றேன்: நாமெல்லோரும் இறைவனின் அவதாரத்தை அறிந்துகொள்ள வேண்டுமென இறைவன் விரும்பிய போதிலும், அதுவே போதுமென அவர் நினைக்கவில்லை. அவரது அவதாரத்தை நாம் நம்புவது மட்டுமல்லாமல், அவரை நாம் ஆழ்ந்து நேசிக்கவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். நாம் நம்பிக்கையாளர்களாக மட்டும் இல்லாமல் அவரது அன்பர்களாகவும் இருக்கவேண்டும். இங்கு “மோகம் கொண்ட அன்பர்கள்” எனும் வார்த்தைகளை கூட அவர் பயன்படுத்தியுள்ளார்.

நமது தினசரி வாழ்க்கையில், நமக்கு வழிகாட்டுதலும் சக்தியும் அவசியம் என்பதே பிரார்த்திக்க வேண்டும் எனும் உந்துதலுக்கு ஒரு காரணமாகவுள்ளது. உதாரணங்களாக, நமக்கு ஒரு பிரச்சினை உள்ளது, அதற்கு தீர்வு காண வேண்டும்: ஒருவர் நோய்பட்டிருக்கின்றார், அவர் குணமடைய வேண்டும், அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்தால் நன்மை பயக்கும் என்பது தெரியாதிருப்பது போன்றவற்றை குறிப்பிடலாம்.

புனித வாசகங்களில், பிரார்த்தனை எனும் வார்த்தை பெரும்பாலும் தியானம் எனும் வார்த்தையோடு இனைந்தே வரும். அதாவது, பிரார்த்தனையும் தியானமும் எனும் சொற்றொடரே அது. ஒரு முறை, ஷோகி எஃபெண்டி அவர்கள், கிழக்கத்திய அன்பர்கள் நிறைய பிரார்த்தனை செய்கிறார்கள் ஆனால் தேவையான அளவு தியானம் செய்வதில்லை எனவும்; மேற்கத்திய அன்பர்கள் நிறைய தியானம் செய்கிறார்கள் ஆனால் குறைவாகவே பிரார்த்தனை செய்கிறார்கள் எனவும் கூறியதாக அறிந்தேன். இவ்விரண்டும் சம அளவில் இனைந்திருக்கவேண்டும். “தியானம்” எனும் வார்த்தை, “பிரார்த்தனையில் அடங்கியுள்ள வார்த்தைகளின் அர்த்தங்களை பிரதிபலிப்பு செய்வது” அல்லது “வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் உள்நோக்கத்தையோ அர்த்தத்தையோ அறிந்துகொள்வது எனும் ரீதியிலேயே பயன்படுத்தப்படுகிறது. “தியானம்” எனும் வார்த்தை நமக்கு ஏற்பட்டுள்ள, அல்லது, வழிகாட்டல் தேவைப்படும், ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை பற்றி சிந்திக்கும் போதும் அல்லது பிரதிபலிக்கும் போதும் உபயோகப்படுத்தப்படுகிறது. அப்பிரச்சினையை பற்றி நாம் தியானம் செய்கிறோம். புனித வாசகங்களை தியானம் செய்வதும், ஒரு பிரச்சினை குறித்து தியானம் செய்வதும் வெவ்வேறான விஷயங்கள். புனித வாசகங்களின் பல பகுதிகள் இவ்விரு விஷயங்கள் குறித்து நமது கவனத்தை ஈர்க்கின்றன. உதாரணமாக: “ஆக்கசக்திமிக்க வார்த்தைகள் பற்றி சிந்தனை செய்வது22, “எமது வார்த்தைகள் எனும் சமுத்திரத்தில் உங்களை மூழ்கச் செய்வீராக”23, மற்றும் அவர் வெளிப்படுத்தியுள்ள நிருபங்களின் உள்ளடக்கங்கள் குறித்து தியானம் செய்வது”24 போன்றவை. இது இவ்வாறு இருக்க, மனிதர்களை பிரித்துக் காட்டும் ஒரு விசேஷ சக்தியாக, தனக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு விடிவு கானும் வகையில் மனிதன் அவற்றை பற்றி சிந்திக்க தேவைப்படும் சக்தியாக, தியான சக்தி விளங்குவது பற்றி அப்துல் பஹா கூறுவதில் தியானம் எனும் வார்த்தையின் மற்றொரு அர்த்தம் உள்ளடங்கியுள்ளது.

ஆகஸ்ட் 1957-இல் பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்களின் சார்பாக எழுதப்பட்ட ஒரு கடிதப் பகுதியிலிருந்து:

வழிகாட்டுதலுக்காக, பெரும் ஊக்கத்துடன் பிரார்த்தனை செய்தால் மட்டும் போதாது, ஆனால் அப்பிரார்த்தனையின் தொடர்ச்சியில் செயலாக்கத்திற்கான சிறந்த வழி வகைகள் குறித்த தியானமும், அதன் பிறகு செயல்படுத்துலும் நடைபெறவேண்டும். அச்செயலாக்கமானது உடனடியான விளைவுகளை உண்டாக்காவிட்டாலும், அல்லது அது முழுவதும் சரியான ஒரு முடிவாக இல்லாவிட்டாலுங்கூட, அது அவ்வளவு முக்கியமானதல்ல, ஏனெனில் செயல்படுத்தல் மூலமாகவே பிரார்த்தனைகளுக்கான பதில்கள் கிடைக்கும், மற்றும் ஒருவர் எடுக்கும் முடிவு தவறானதாக இருப்பினும் கூட, இறைவன் அத்தவற்றினையே பயன்படுத்தி சரியான வழியை காட்டிட முடியும்.25

இது, நாம் பிரார்த்தனை செய்தும் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் மீது தியானமும் செய்யவேண்டும் என எனக்கு பொருள்படுகிறது. இதன் வழியாக நம்மிடமிருந்தும் நம்மைச் சுற்றியுள்ளவற்றிலிருந்தும் மற்றும் தினசரித் தேவைகள் பாலும் நாம் பற்று அறுக்கின்றோம். பிறகு பிரச்சினை குறித்தே நாம் தியானம் செய்யவேண்டும். இப்படியோ அல்லது அப்படியோ செய்யவேண்டும் எனும் ஒரு எண்ணம் உதிக்கின்றது: அதாவது இன்ன நடவடிக்கை எடு எனும் எண்ணம். அந்த நடவடிக்கை இறுதியில் தவறானதாகவே இருப்பினும், கடவுள் அத்தவற்றை சரிசெய்துவிடுவார். தியானத்தின் விளைவாக உதித்த, இன்ன நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனும் எண்ணம், ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி நம்மை ஈர்த்தும், நாமும் அந்த நகர்ச்சியின் செயல்பாட்டிற்கினங்க செயல்படும் வேளையில், நாம் செல்லும் அந்த திசை தவறானதாக இருப்பின், இறைவன் நம்மை சரியான திசையை நோக்கி நிச்சயமாக திசை திருப்பிவிடுவார். இப்பகுதியிலிருந்து தனிப்பட்ட வகையில் நான் விளங்கிக் கொண்டது இதுவே.

1927-இல், தலை சிறந்த ஆரம்ப கால பஹாய் போதகர்களில் ஒருவரான ரூத் மோஃபெட், புனித யாத்திரை ஒன்று மேற்கொண்டு வந்திருந்தார். அவர் பிரார்த்தனையின்பால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அது குறித்து பாதுகாவலரிடம் சில கேள்விகளையும் கேட்டார். மேற்கண்ட படிகளை ஒட்டிய ஒரு பதிலையே பாதுகாவலர் கொடுத்தார். ரூத் அவர்களும், இறைவன் அவரது உள்ளத்தை ஆசீர்வதிப்பாராக! — அவற்றை எழுதியும் வைத்தார். ரூத் அதை நண்பர்கள் அனவைருடனும் பகிர்ந்தும், பிறகு பிரசுரித்திடவும் செய்தார். பின்னாளில் அன்பர்கள் ஷோகி எஃபெண்டி அவர்களுக்கு எழுதி, அவ்வழிகாட்டியின் நம்பத்தகுந்தமையை உறுதி செய்துகொண்டனர். ஷோகி எஃபெண்டி, அவ்வழிகாட்டி குறித்து ரூத் எழுதிவையெல்லாம் உண்மையே என உறுதிபடுத்தினார். ஆனால், அவ்வழிகாட்டி, நண்பர்களை எவ்வகையிலும் ஈடுபடுத்தவில்லையெனவும், அன்பர்கள் இவ்வித விஷயங்களில் தன்னிச்சையாக செயல்படலாமெனவும் மேற்கொண்டு கூறிவிட்டார்.

அவ்வழிகாட்டியில் குறிக்கப்பட்டுள்ள படிகளாவன யாவை? சுறுக்கமாக, முதல் படியாக, பஹாய் பிரார்த்தனைகளை உபயோகப்படுத்தி பிரார்த்தனை செய்தல், பிறகு, ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தியானம் செய்வதும் ஆகும். இரண்டாவதாக, அப்பிரச்சினையை தீர்க்கும் வழியென தோன்றும் ஒரு முடிவிற்கு வருவது. மூன்றாவது படியாக, எடுக்கப்பட்ட முடிவை, மனவுறுதியுடனும், உறுதியான தீர்மானத்துடனும், செயல்படுத்த முயற்சி செய்வது. நான்காவதாக, அதற்கு தேவையான சக்தி வந்தடையும் எனவும், தகுந்த வழி தோன்றும் எனும் நம்பிக்கையும் கொள்வது. ஐந்தாவதாக, ஓய்வில்லாமலும், வற்றாத உழைப்புடனும் பிரச்சினையை தீர்க்கும் வழியில் செயல்படும்போது தன்பால் மேற்கொண்டு ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய ஒரு காந்தக்கல் போன்று ஆவது.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே விஷயம் குறித்தும், ஐந்து படிகளையும் ஓரிரு வரிகளில் சுருக்கியும் பாதுகாவலர் எழுதினார். அதில், ஆறாவது படியென தோன்றும் ஒன்றை மேற்குறிப்பிட்டுள்ள பகுதியில் பாதுகாவலர் சேர்த்துள்ளார் என்பது என்னுடைய அனுமானம். “அச்செயல்படுத்தல் தக்க ஒரு விளைவினை உடனடியாக உண்டாக்காமலும், அல்லது அது முற்றாக ஏற்புடையதான ஒரு முடிவாக இல்லாவிட்டாலும் கூட, அது முக்கியமல்ல… ஒருவரது செயல் தவறாக இருந்திட்டாலும், அந்த வழியையே உபயோகப்படுத்தி சரியான பாதையை இறைவனால் காட்டிட முடியும்.”

பாதுகாவலரின் சார்பாக எழுதப்பட்ட மற்றுமொரு கடிதத்தில்: ஒரு காரியத்தை செய்திட வேண்டும் என மனதிற்பட்டும், பிறகு எல்லா முயற்சிகளும் செய்து வழிகள் தோன்றிடும் போதும், அதுவே வழிகாட்டுதல் எனக் கொள்ளப்பட வேண்டும். எல்லா முயற்சிகளும் மேற்கொண்ட போதும், வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தால், அது பொதுவாக, வழிகாட்டுதலாகாது.”26

இதுகாறும் மொழிமாற்றம் செய்யப்படாத பஹாவுல்லாவின் நிருபம் ஒன்றில், இறைவனின் தயாளம் முடிவற்றது எனவும், அவரது அருள் எல்லையாற்றது எனவும்; அவரது சலுகைகள் வந்தடைவதில் எந்த ஒரு இடையூறும் இருக்க முடியாது எனவும்; அவர் தேவைகளை ஈடுசெய்வார், மற்றும் அவரது ஊழியர்களின் மன்றாடல்களுக்கு தொடர்ந்து பதிலளிப்பார் எனவும்; ஒருகால் அவரது வழிகாட்டுதல் வந்தடைவதில் தாமதம் ஏற்படுமானால், மான்றாடுபவற்கு அதுவே நன்மை பயப்பது எனவும் கொள்ளவேண்டும். ஏனெனில், ஆரம்பத்தில் இறைஞ்சிக் கேட்டவையைவிட மேலும் உயர்வான தெய்வீக வெகுமதிகளை அவர் அந்த தாமதத்தின் மூலம் பெறக்கூடும்.
நான் இங்கு, ஹைஃபாவில் சிறுவனாக இருந்த போது, ஒரு பிரஞ்சுப் பள்ளியில், அதாவது, “காலேஜ் டெஸ் பிரெரெஸ்” எனும் பெயர் கொண்ட பள்ளியில் பயிலும் போது பின்வரும் கதையை செவிமடுத்தேன்.

சிறுவன் ஒருவன் கத்தோலிக்க பள்ளி ஒன்றில் பயின்று கொண்டிருந்தான். அங்கு அவன் இறைவனைப் பற்றிய அறிவு பெற்றான். ஆனால் அச்சிறுவனின் தந்தை இறைவனை நம்பாதவராகவும், அச்சிறுவனோ சதா இறைவனைப் பற்றி பேசுபவனாகவும் இருந்தனர். அச்சிறுவனுக்கு சைக்கிள் ஒன்று தேவைப்பட்டது. அவனும் ஒரு நாள் தன் தந்தையிடம் சென்று, “அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தாருங்கள்,”எனக் கேட்டான்.

தந்தை, “இறைவன் அனைத்தயும் கொடுப்பார், அவர் சர்வ-சக்தி வாய்ந்தவர் என என்னிடம் கூறுகின்றாய். நீ ஏன் அந்த இறைவனிடமே ஒரு சைக்கிள் வ்ேண்டும் என கேட்கக் கூடாது? என்னிடம் அதற்கான பணம் இல்லை.” என மேலும் கூறினார்.

அச்சிறுவனும், “சரி அவ்வாறே செய்கிறேன்” என பதிலுரைத்தான்.

சில நாட்களுக்குப் பிறகு, “இறைவன் உன் பிரார்த்தனைக்கு பதிலளித்தாரா?” என தந்தை வினவினார்.

அதற்கு சிறுவன், “ஆமாம்” என்றான்.

“இறைவன் பதில் அளித்தாரா?”

“ஆமாம்” என்றான் சிறுவன்.

“சைக்கிள் எங்கே” என்றார் தந்தை.

சிறுவன், “இந்த தடவை கிடையாதென இறைவன் கூறிவிட்டார்” என்றான்.

ஆக, இக்கதை மேலே குறிப்பிட்டுள்ள பஹாவுல்லாவின் கூற்றுடன் ஒத்திருக்கின்றதை நாம் காண்கிறோம். சில வேளைகளில் இறைவன் இல்லை எனும் பதிலையே அளிக்கின்றார். ஆனால் அவர் அதன்மூலம் நமது கோரிக்கைகளுக்கு நிச்சயமாக பதில் தருகின்றார். அல்லது, இப்போது அல்ல; பிறிதொரு முறை, எனவும் கூறலாம். அவ்வாறு, அவர் பின்னாளில் நமது பிரார்த்தனைக்கு கொடுக்கும் பதிலாகப்பட்டது, நாம் முன்பு கேட்டதை விட சிறந்ததாக இருக்கவும் நாம் காணலாம்.

பாதுகாவலரிடமிருந்து மேலும் சில விளக்கவுரைகள்:

தாங்கள் தங்களுடைய பிரார்த்தனைகளுக்கு இதுகாறும் பதில்கள் கிடைக்கவில்லை என எண்ணியும், உங்களுடையை பொருளாதார நிலைமை மேற்கொண்டு சீரடையும் எனும் நம்பிக்கையை இழந்துள்ளவராக நீங்கள் இருந்த போதிலும், பிரார்த்தனையின் ஆற்றல்களின்பால் நீங்கள் கொண்டிருக்க வேண்டிய நம்பிக்கையை இவ்வித ஏமாற்றங்கள் கீழறுப்பதை அனுமதிக்கக்கூடாது. ஆனால், தாங்கள் அனுபவிக்கும் இந்த துன்பங்களின் பின்னால் வீற்றிருக்கும் பெரும் விவேகங்களை கண்டுகொள்ள உதவிடும் பொருட்டு எல்லாம் வல்லவரை தொடர்ந்து வேண்டிக்கொள்ளவேண்டும் என்பதே பாதுகாவலரின் அவா.

…உண்மையான பக்தர், பிரார்த்திக்கும் போது, தாம் வேண்டுவனவற்றையும், இச்சிப்பனவற்றையும், நிறைவு செய்யவேண்டுமென இறைவனை கேட்பதைவிட, தமது தேவைகளையெல்லாம் சரிப்படுத்தி, தெய்வீக விருப்பத்திற்கு அவை யாவற்றையும் இணங்கிடச் செய்யவேண்டும். இவ்வித மனப்பாங்கினால் மட்டுமே, பிரார்த்தனையின் சக்தி வழங்கக்கூடிய அந்த அக அமைதியையும் திருப்தியையும் பெறலாம்.27

“நாம் ஏன் பிரார்த்திக்கின்றோம்?” என்பதின் இறுதிப் பகுதியாக, பாப் மற்றும் பஹாவுல்லா அவர்களின் நினைவாலயங்களில், நேர்வு நிருபங்களிலிருந்து வாசிக்கப்படும் வார்த்தைகளை இங்கு நினைவு கூற விரும்புகிறேன். “என் கடவுளே, என் நேசரே, தங்களது கருணைக் கரங்களிலிருந்தும், அன்புக் கடலிலிருந்தும் தெய்வீகத் தயவை என்மீது வீசச் செய்வீராக. அதனால் என்னை என்னிடமிருந்தும், இவ்வுலகிலிருந்தும் விடுவித்துத் தங்களது முன்னிலை என்னும் அரசவையை அடையச் செய்வீராக”

பிரார்த்திக்கும் போது: “உமதருகாமையே எனது நம்பிக்கை”28, “எவரது அருகாமையே எனது ஆவலாக உள்ளவரே”29; உமது அருகாமையே உமது அன்பர்களாக உள்ளவர்களின் உண்மையான வாழ்வு ஆகும்.”30 என பல தடவைகள் படிக்கின்றோம். புறமுகமாக இறைவனின் ஆணைக்குட்பட்டு செய்யும் ஒரு செயலாக இது இருந்த போதும், ஆண்டவனால் ஏற்றுக் கொள்ளப்படும் வரை, நாம் புரிவது உயிரற்ற ஒரு ஜடச் செயலையே. ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அச்செய்கை உயிரற்றதாகிவிடும். தூய்மையான நோக்கத்துடனும், பற்றின்மையுடனும், உண்மையான அன்புடனும், பனிவுடனும் செய்யப்படும் செயல்களையே இறைவன் ஏற்றுக்கொள்வார். பஹாவுல்லாவின் பின்வரும் வார்த்தைகளை கவனிக்கவும்: “ – “எல்லா செயல்களுக்கும் ஜீவனாகத் திகழ்வது எமது நல்விருப்பம்தான், அனைத்தும் எமது ஏற்பினையே சார்ந்து உள்ளது.”31 இது அதி புனித நூலில் காணக் கிடைக்கின்றது. ஒரு காரியத்தைக் கண்டு கரகோஷித்து, “சபாஷ்” என, மக்கள் கூறுவதும் அல்லது நினைப்பது அனைத்தும், அர்த்தம் அற்றவையே. இங்கு உண்மையில் கணக்கில் சேரக்கூடியது, ஆண்டவன் ஒரு செயலை ஏற்றுக் கொண்டுள்ளாரா இல்லையா என்பது மட்டுமே, மனிதர்கள் அச்செயலை கண்டும், பாராட்டவும் செய்கிறார்கள் என்பது மட்டும் அன்று.

இ. பிரார்த்தனையின் போது எங்கு, யாரை நோக்கி திரும்ப வேண்டும்?

நான் நினைத்ததை கூறுவதைவிட, பாதுகாவலரின் சார்பில் எழுதப்பட்ட கடிதங்களிலிருந்து ஒரு 6 பகுதிகளை இங்கு படிக்க விரும்புகிறேன். இவ்விஷயம் குறித்து 6 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அவர் அனைத்திற்கும் பதிலளித்தார். அவரது பதில்களிலிருந்து கேள்விகள் யாவை என்பது உங்களுக்கு புரிய வரும்:

1. ”இறைவனுடனான நமது தொடர்புக்கு, மற்ற உலகங்களில் இருந்தபடி, இறைத்தூதரே நமக்கு வாசலாக தொடர்ந்து இருக்கின்ற காரணத்தினால், பிரார்த்திக்கும் போது அவரை நோக்கித் திரும்புவதே நல்லது. இருந்தபோதும், நேரடியாக ஆண்டவனை நோக்கியும் பிரார்த்திக்கலாம்.”32

2. …செடி, தனக்குத் தேவையான உயிரூட்டத்தையும் வளர்ச்சியையும் பெறக்கூடிய சூரிய ஒளியை நோக்கி வளருவது போல் — பிரார்த்திக்கும் போது நாமும் நமது உள்ளங்களை, இறைவனின் தூதரான பஹாவுல்லாவை நோக்கி திருப்புகிறோம்…33

3. பஹாவுல்லாவிற்கும் அப்பால் நமது பிரார்த்தனைகள் போகுமா என நீங்கள் வினவியுள்ளீர்: இது அவரை நோக்கி நாம் நேரடியாக பிரார்த்திக்கின்றோமா அல்லது அவர் மூலமாக இறைவனை நோக்கி பிரார்த்திக்கின்றோமா என்பதை பொறுத்த ஒரு விஷயம். இரண்டையுமே நாம் செய்யலாம் மற்றும் இறைவனை நோக்கி நேரடியாகவும் பிரார்த்திக்கலாம். ஆனால், அவரது தூதாரான பஹாவுல்லாவின் மூலமாக நாம் நமது பிரார்த்தனைகளைசெலுத்தும்போது அவை நிச்சயமாக அதிக ஆக்கமுடையவையாகின்றன.34

4. பிரார்த்தனையின் போது நம்பிக்கையாளர்கள் தங்களது பிரக்ஞையை பஹாவுல்லாவின் நினைவாலயத்தின்பால் மையப்படுத்தலாம். அதாவது, அப்படி செய்கையில் பஹாவுல்லா இறைவனின் தூதர் எனும் நிலை குறித்த தெளிவான மற்றும் சரியான புறிந்துகொள்ளல் பெற்றிருக்க வேண்டும்.

5. பிரார்த்திக்கும் போது யாரையாவது மனக்கண்னில் நிறுத்த வேண்டும் எனும் தேவை இருப்பின், அப்துல் பஹாவை மனதில் சிந்தியுங்கள். அவர் மூலமாக பஹாவுல்லாவிடம் தொடர்பு கொள்ளலாம். பிறகு சிறிது சிறிதாக இறைத்தூதரின் இயல்புகளைப் பற்றி சிந்திக்க முயலுங்கள், அதன் மூலமாக மனக்காட்சி சிறுக சிறுக மறைந்துவிடும். ஏனெனில், உருவம் விஷயமாகாது. அங்குள்ள அவரது ஆவியே, அவசியமான, என்றும் நிலையான அம்சம்.

6. உமது கேள்வி குறித்து: பிரார்த்திக்கும் விதத்தில் நாம் பிடிவாதமாக இருக்கக்கூடாது; அதை உட்படுத்தக்கூடிய விதிமுறைகள் எதுவும் கிடையாது; இறைவன், இறைத்தூதர், அப்துல் பஹா, பாதுகாவலர் ஆகியோர் பற்றிய சரியான அகட்பார்வையுடன் துவங்குவது நமக்கு அனைத்திலும் முக்கியமானது. நாம் பிரார்த்திக்கும் போது, அவர்களில் எவரையும் நோக்கி எண்ணத்தை திருப்பலாம். உதாரணமாக, பஹாவுல்லாவிடம் ஏதேனும் கேட்கலாம், அல்லது, அது குறித்து அவரை நினைத்து இறைவனிடம் யாசிக்கலாம். அப்துல் பஹா மற்றும் பாதுகாவலர் ஆகியோருக்கும் இது பொருந்தும். அவர்களில் ஒருவரை மனதால் நினைத்து, அவரது பரிந்துரைப்பை வேண்டலாம், அல்லது இறைவனை நோக்கி நேரடியாக பிரார்த்திக்கலாம். அவர்களுடைய ஸ்தானங்கள் குறித்து குழப்பம் இல்லாதவரை, அவர்கள் அனைவரையும் சமமாக நினையாதவரை, நீங்கள் உங்கள் சிந்தனைகளை எங்கு மையப்படுத்துகிறீர்கள் என்பது அவ்வளவு முக்கியமானதல்ல.

ஈ. பிரார்த்தனையின் சக்திக்கூறுகள் பற்றி ஒரு சில சிந்தனைகள்:

இப்போது, நீங்கள் உங்களை சாசுவதப் படுத்திக்கொண்டு மற்ற விஷயங்கள் பற்றிய எண்ணங்களில் மூழ்கலாம். (எனது சொந்த கருத்துக்கள் அடங்கிய) இந்தப் பகுதியை நீங்கள் செமடுக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல.

முதலாவதாக, நமது சமயத்தில், பிரார்த்திப்பதற்கும் தியானிப்பதற்கும் உறுதியாக வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் கிடையாது. இறைவனின் வழிமுறைகளின் எண்ணிக்கை அவரது உயிரினங்கள் விடும் மூச்சின் எண்ணிக்கையளவு இருக்கும் என ஏறக்குறைய அறிவிக்கும் இஸ்லாத்திய பழமொழி ஒன்றை தமது நிருபம் ஒன்றில் அப்துல் பஹா, உறுதிபடுத்தியும் குறிப்பிட்டும் உள்ளார்.37

ஷோகி எஃபெண்டி:

போதனைகளில், தியானம் செய்யும் முறைகளென எதுவும் ஸ்தாபிக்கப் படவில்லை. ஆகையால், அக மேம்பாட்டிற்கென எந்த ஒரு முறையான திட்டமும் கிடையாது. அன்பர்கள் பிரார்த்திக்கத் தூண்டப்படுகிறார்கள் — அல்ல வற்புறுத்தவே படுகிறார்கள், மற்றும் அவர்கள் தியானிக்கவும் வேண்டும், ஆனால் அதை எவ்விதத்தில் செயல் படுத்துவதென்பது தனிநபர்களிடமே விடப்பட்டுள்ளது.38

பிறரால் உருவாக்கப்பட்டுள்ள தியான முறைகளை பயன்படுத்துவதை விட பஹாய்கள் பஹாவுல்லா அவர்களால் கொடுக்கப்பட்டுள்ள தியானவாசகங்களை பயன்படுத்துவதே மிகுந்த விவேகமுடையதாகும் என அவர் கருதுகின்றார்; ஆனால் நம்பிக்கையாளர்கள் இது குறித்த விஷயங்களில் தன்னிச்சையுடன் செயல்பட விடப்படவும், இறைவனுடனான தொடர்பை எந்த அளவில் கொள்ள விரும்புகிறார்கள் என்பதில் அவர்களுக்கு சுய சுதந்திரமும் அளிக்கப்படவும் வேண்டும்.39

பிரார்த்தனைக்கு தகுந்த ஆயத்தம் செய்வது மிகவும் முக்கியமானது. திடீரென்று ஒரு ஆன்மீக நிலையை நாம் எய்திட முடியாது. இதற்கு தயார் செய்யவேண்டும். உதாரணமாக, பிரார்த்தனைக்கு முன்பு ஏன் உடல் சுத்தி செய்கிறோம்? அது நம்மை தயார்செய்வதற்காக. கித்தாப்-இ-அக்தாசின் கேள்வியும் பதில்களும் பகுதியில், “குளித்திருந்தாலும் உடல் சுத்தி செய்ய வேண்டுமா?” என பஹாவுல்லாவிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர் அதற்கு, ஆமாம், செய்யவேண்டும், எனக் கூறியுள்ளார்.40 ஏன் அப்படி? ஏனென்றால், உடல் சுத்தி செய்வது சுத்தம் சம்பந்தமானது மட்டும் அல்ல.அது ஒரு தயார் நிலையை அடைவதையும் உள்ளடக்கியது. நாம் பிரார்த்தனைக்கான மனோநிலையை அடையவேண்டும். மற்றொரு உதாரணமாக, மாஷ்ருக்குல் அஸ்கார் எனப்படும் பஹாய் கோவிலுக்கு செல்வது குறித்து பஹாவுல்லா என்ன விதிகளை உருவாக்கியுள்ளார்? அவர் கூறுவதாவது: கோவிலை நோக்கி நாம் அடியெடுத்து வைக்கையில், நாம் நமது எண்ணங்களை இறைவன்பால் மையப்படுத்தியும், அவரது ஞாபகமாகவே இருந்தும், அவரது மன்னிப்பை வேண்டிக்கொண்டும் இருக்கவேண்டும்.41 நாம் கோவிலுக்குள் இன்னும் நுழையவில்லை, ஆனால் அதை நோக்கியபடி சென்றுகொண்டிருக்கும் போதே இந்த விதியை பின்பற்ற வேண்டும். நாம் கோவிலை நோக்கி நடந்துகொண்டிருக்கும் போதே இவ்விதமான பக்தி மயமானதும் பிரார்த்தனை மயமானதுமான ஒரு மனோ நிலையை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என பஹாவுல்லா கூறுகிறார். இது கோவிலை நாம் அடைவதற்கு முன்பாக நடை பெற வேண்டும். “அவர் நுழையும் போது, இறைவனின் திருவாசகங்களை செவிமடுத்திட அமைதியுடன் கீழே உட்காரட்டும்…”42 என பஹாவுல்லா மேலும் கூறுகிறார்.

மேலும் ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஹைஃபாவிலும் பா‹ஜியிலும் பாதுகாவலர் தோட்டங்களை உருவாக்கியுள்ள விதத்தைப் பார்ப்போம். பா‹ஜி மிகவும் விருவிருப்பான ஒரு தோற்றத்தை தருகிறது. நாம் வடக்கு வாசலில் இருந்து வருகிறோம்; வரும்போது மேலும் ஒரு வாசலை காண்கின்றோம், அதாவது கோல்லின்ஸ் வாசல். நாம் நுழைகின்றோம். நினைவாலயத்திலிருந்து சுமார் 95 மீட்டர் தூரத்தில் உள்ள இந்த இடத்தை, அதி புனித மாளிகையான, ஹராம்-இ-அக்தாசின் நுழைவாயில் என பாதுகாவலர் வருணிக்கின்றார். நாம் இந்த சபையினுள் நுழைகின்றோம்; நாம் மேலும் ஒரு நுழைவாயிலுக்கு வருகின்றோம். நமது காலனிகளை கழற்றுகின்றோம். ஒரு சில படிகளை கடந்து கீழே இறங்குகின்றோம். இப்போதும் நாம் அந்த இடத்தை அடையவில்லை. நாம் நுழைந்து வலது புறம் திரும்பியவுடன் நினைவாலயத்திற்கு ஆக உட்புறமாக உள்ள இடத்தை அடைகிறோம். சரி, ஆன்மாவுக்கு இது நல்ல ஒரு தயார் நிலையாக இருக்கின்றது அல்லவா? வாசல் வரை வாடகை வாகனத்திலோ, ஊர்தியிலோ வந்து கீழே குதித்தவுடன் நுழைந்துவிடக் கூடிய பல தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், மாதாகோவில்கள் போன்றவற்றிற்கு செல்வதை இந்த அனுகுமுறையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பா‹ஜி அவ்விதமாக இல்லவே இல்லை. பஹாய் கோவில்களைச் சுற்றிலும் நமக்கு தகுந்த மனோ நிலையை உருவாக்கக்கூடிய பூங்காக்களும் தோட்டங்களும் வடிவமைக்கப்படவுள்ளன! ஆக, தகுந்த மனோநிலையை உருவாக்கிக்கொள்வது மிகவும் முக்கியம் என நான் நினைக்கின்றேன். பிரார்த்தனை ஒரு ஏணியைப் போன்றது, அதன் மூலம் நாம் சுவர்க்கத்தை அடையலாம் என முகமது நபியவர்கள் கூறியுள்ளார்.43 அது ஒரு ஏணியாக இருக்குமேயானால், அதை நான் முதலில் கையிற் பிடித்து, நிலையில் நிறுத்தி, அதன் மேல் ஏற வேண்டும். இது சிறிது நேரம் பிடிக்கும்; இதுவே தயார் செய்வதென்பது.

பிறகு நாம் பஹாய் பிரார்த்தனைகளை உபயோகிக்க வேண்டும். பஹாவுல்லா, அப்துல் பஹா, ஷோகி எஃபெண்டி ஆகியோர் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை நாம் கண்டோம். ஒரு பிரார்த்தனை என்ன மனோநிலையில் வாசிக்கப்படுகிறது என்பது மிகவும் முக்கியமானது. “அதன்மூலம் எழுத்துக்களுக்கும் மேலான, மெல்லிய அசைவுகளையும் ஓசைகளையும் கடந்த பிரார்த்தனையானது எங்களின் ஆன்மாவைப் பேரானந்தம் அடையச் செய்து தங்கள் பேரழகின் வெளிப்பாட்டின் முன் உலகப் பொருட்கள் அனைத்தும் ஒருமுகமாய் தன்மையற்றுப் போகுமாறு செய்திடும்.”44 என அப்துல் பஹா கூறுகின்றார். வார்த்தைகளை மட்டும் உரைப்பது வெறும் முனுமுனுப்பு ஒன்றை மட்டுமே உருவாக்கும். படிக்கப்படும் வார்த்தைகளின் அர்த்தத்தின்பால் நமது கவனம் இருக்கவேண்டும். இது நாம் பற்றின்மையை அடைய உதவும்; அகங்காரத்தையும் தான் எனும் தன்மையையும், நமது தேவைகளையும் கவலைகளையும் விடுத்திட உதவும். இப்படியாக, பஹாவுல்லா கூறுவது போல், நம்மை விட்டும் இவ்வுலகினை விட்டும் நாம் தூர விலகிச் சென்றிடலாம்.45 பிரார்த்தனை செயற்பாட்டின் ஒரு பகுதி இது. இதுவே தியானம் செய்வதின் ஒரு நன்மை.

அதற்கு பிறகு, இறைவனோடு தனிப்பட்ட ஒரு உரையாடல் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, தினசரிகளில், இறைவன் இறந்துவிட்டார், என கேள்விப்படுவதும் அல்லது படிப்பதும் சாதரணமாக நடக்கக்கூடிய ஒன்று. டைம்ஸ் சஞ்சிகையிலும், தினசரிகளிலும், இத்தலைப்பில் பல கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன. தெய்வச் சமயத் திருக்கரம் திரு வில்லியம் சியர்ஸ் அவர்கள், நமது சமயத்தை பற்றி ஒரு சொற்பொழிவாற்றினார். கேள்வி நேரத்தின்போது யாரோ ஒருவர் எழுந்து, “கடவுள் இறந்து விட்டார் எனக் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” எனக் கேள்வி கேட்டார். விசேஷமான தமக்கே உரித்தான நகைச்சுவை கலந்து, “எனக்குத் தெரியாது. ஆனால் இன்று காலை நான் அவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் நன்றாகத்தான் இருந்தார்,” எனக் கூறினார்.

இந்த கதையை நான் ஞாபகத்தில் வைத்திருப்பதன் காரணம், “உரையாடல்” எனும் அந்த வார்த்தையினாலேயே. ஏனெனில், நமது அன்பருடன் நாம் உண்மையிலேயே உரையாடவே செய்கின்றோம். இறைவனோடு உரையாட ஒரே ஒரு நேரம் உள்ளது, அதாவது அவருடன் தனிப்பட்ட, சுயமான, அமைதியான முறையில் உரையாடுவது. நமது ஆற்றாமை குறித்தும் குறைபாடுகள் குறித்தும் நான் ஏற்கனவே கூறியதை நினைவு கூறுங்கள். நாம் இறைவனோடு தனிமையில் உரையாடும்போது அவற்றை அவரிடம் எடுத்துக் கூறலாம். பாப் அவர்கள் கூறியதை ஞாபகப்படுத்திக்கொள்ளவும் இதுவே தகுந்த நேரம்: “நீங்கள் பிரார்த்திக்கும் போது, உங்கள் பெற்றோர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், ஏனென்றால், உங்கள் பெற்றோர்கள் சார்பாக நீங்கள் கேட்பதின் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உரியதாகும்.”46 நமக்காக மட்டும் அல்ல, பிறருக்காக பிரார்த்திப்பதற்கும் இதுவே நேரம். நமக்கு கெட்டது செய்தவர்களை ஆண்டவன் மன்னிப்பதற்காக பிரார்த்திக்க வேண்டியதின் முக்கியத்துவம் குறித்த இயேசு நாதரின் வார்த்தைகள் பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா அவர்களின் வாசகங்களில் மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கப் பட்டுள்ள சிந்தனைகளே. பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா அவர்களின் வாசகங்களில் மறு உறுதிப்படுத்தப் பட்ட ஒரு கிருஸ்தவ போதனையே இது. உதாரணமாக, நண்பர் ஒருவர் ஒரு தப்பு செய்துவிட்டார் எனத் தெரிய வந்தால், மற்றவர்கள் அவரை மன்னித்தும் அவரது குறையை கண்டுகொள்ளாமலும் இருக்கவேண்டும். ஏனெனில், அவர்களது தவறான நடத்தையையும் அவ்வாறே தேவர் அப்போது மன்னிப்பார்.”47 இவ்விதமாக நமது மனக்குறைகளை நாம் கொட்டிவிட்ட பிறகு, மேலும் குறைகள் ஏதும் இருக்குமாயின், அதை மிகுந்த பனிவுடன் அவர் முன் பிரஸ்தாபித்து, “நான் என்ன செய்வது?” எனக் கூறலாம். இங்குதான் பாதுகாவலர் ரூத் மொஃபெட்டுக்கு விளக்கிய அந்த முறையை பயன்படுத்தவேண்டும்.

உ. பிரார்த்தனையின் மூலம் தன்மை மாற்றம் பெறுவது.

தன்மை மாற்றம் குறித்த முக்கியத்துவம், பஹாவுல்லாவின் திருவாசகங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயம். மனிதர்களின் தன்மை மாற்றமே இவ்வுலகிற்கு இறைத்தூதர்கள் வரும் காரணமாகவுள்ளது. அதாவது, தனிமனிதர்களின் மற்றும் சமூகத்தின் தன்மை மாற்றம். பாதுகாவலர், இந்த தன்மை மாற்றம் குறித்த விஷயத்தை எடுத்து பிரார்த்தனையோடும், நமது சுயமாகத் தேர்வு செய்யும் சக்தியுடனும் அதை தொடர்புபடுத்தியுள்ளார். அவரது அறிவுரையை பார்ப்போம்:

…மனிதனை இறைவனோடு இனைக்கும் அந்த தெய்வீகமான உணர்வே சமய நம்பிக்கையின் நடு மையமாகவுள்ளது. தியானத்தின் மூலமாகவும் பிரார்த்தனையின் மூலமாகவும் உருவாக்கப்படவும் காப்பாற்றப்படுவும் கூடியதாக இவ்வித ஆன்மீக தொடர்பு உள்ளது… மனிதனின் ஆன்மாவே முதலில் ஊட்டம் தரப்படவேண்டியதாக உள்ளது. பிரார்த்தனையே இந்த ஆன்மீக ஊட்டத்தை சிறப்புடன் வழங்கமுடியும்.48

உங்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்கு புனித நினைவாலயங்களில் பிரார்த்திப்பதாக அவர் மீண்டும் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகின்றார். நமது நடத்தையை இறைவனின் சக்தி முற்றாக தன்மைமாற்றம் செய்யவல்லது மற்றும் நமது முன்னைய நிலையிலிருந்து முற்றாக வேறுபட்ட படைப்புகளாக நம்மை ஆக்கவும் கூடியது.49

நாம் இதை புறிந்துகொள்வது மிகவும் முக்கியம்: “இறைவனின் சக்தி நமது நடத்தையை முற்றாக நிலை மாற்றம் செய்தும், நமது பழைய நிலையை பார்க்கிலும் முற்றிலும் வேறுபட்ட ஜீவன்களாக மாற்றவும் கூடியது.” அந்தோ! எத்துனை முறை, “என்னால் மாற முடியவில்லையே?” என நமக்கு நாமே கூறிக்கொண்டிருப்போம். நாம் ஏன் மாற முடியாது? நாம் நிச்சயமாக மாறமுடியும்! பிரார்த்தனை மற்றும் மன்றாடல்கள் மூலமாகவும், பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள தெய்வீக விதிகளுக்கு கீழ்படிதலின் மூலமாகவும், அவரது சமயத்திற்கு அதிகரித்துக் கொண்டே போகும் சேவையின் மூலமாகவும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள முடியும். மறுபடியும் ஷோகி எஃபெண்டி கூறுவதை பார்ப்போம்:

மனித நடத்தையை மறுமலர்ச்சி பெறச் செய்யக்கூடிய ஒரு சமயமான இதை மற்றவர்கள் தழுவிட உந்துதல் தரக்கூடிய அளவு தங்களது சொந்த வாழ்விலும் நடத்தையிலும் நம்பிக்கையாளர்கள் சிறந்த உதாரணங்களாக இருக்க கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும் என்பதை, நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, அகங்காரத்தின் மீதான வெற்றியை எல்லோருமே சுலபமாகவும் துரிதமாகவும் அடைவதில்லை.நாம் அனுமதித்தோமானால், நம்மை புணருவாக்கம் செய்யக்கூடிய ஆன்மீக சக்தியை சமயம், உள்ளடக்கியுள்ளது என்பதை, புதியவரோ பழையவரோ, எல்லா நம்பிக்கையாளர்களும் அறிய வேண்டும். மற்றும், இந்த முயற்சிக்கு பிரார்த்தனையே பேருதவியாக இருக்கின்றது. நம்மை நாமே வெற்றிகொள்ள நமது தன்னிச்சை சக்திகளை அடக்கிட பஹாவுல்லாவிடம் மன்றாட வேண்டும்.50

இதுகாறும் மொழிமாற்றம் செய்யப்படாத அப்துல் பஹாவின் நிருபம் ஒன்றில், பிரார்த்தனையின் சக்தியை மின்சாரத்திற்கு இனையாக அவர் உதாரணப்படுத்தியுள்ளார். நம்பிக்கையாளர் தனது இதயத்திலிருந்து வெளிப்படும் மின்கம்பிபோலுள்ள ஒன்றை விண்ணுலகத் திருக்கூட்டத்தினருடன் தொடர்புபடுத்த முயற்சி செய்திட வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதன்மூலமாக, “தெய்வீக ஆதரவினை பெறக்கூடிய நிலையில் நீ இருப்பாய்”51 என திடமாகக் கூறுகின்றார். இறைவன்பாலான பக்தர்களின் அன்பும், திருவொப்பந்தத்தின் மீது அவர்களது முழு உறுதியுமே அந்த மின்கம்பியின் வழி பாயும் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. தமது நிருபம் ஒன்றில், “இரவும் பகலும், பெரும்பாலான நேரம், பிரார்த்தனை மனப்பாங்குடனேயே நான் உள்ளேன்,”52 எனக் கூறுகின்றார். அவர் நமக்கெல்லாம் பூரண உதாரண புருஷர். நாம், நாளொரு முறை, அல்லது வாரம் ஒரு முறை, அல்லது பத்தொன்பது நாட்களுக்கு ஒரு முறை — அல்லது வருடம் ஒரு முறை, என பிரார்த்தனை செய்வதில்லை. அவர் கூறுவதாவது, “இரவும் பகலும், பெரும்பாலான நேரம், பிரார்த்தனை மனப்பாங்குடனேயே நான் உள்ளேன்,” என்பதாகும். நாமும் அதுபோலவே இருக்க முயற்சி செய்ய வேண்டும். எல்லா நேரமும் இறைவனுடன் இனைந்திருக்கவே நாம் விரும்ப வேண்டும். அவர் நம் கூடவே இருக்கின்றார் என்பதை நாம் உணர வேண்டும். எல்லா நேரங்களிலும் அவர்பாலான நமது அன்பை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும். நாம் எவ்வளவு பலவீனமானவர்களாக இருக்கின்றோம், எவ்வளவு வறிய நிலையில் இருக்கின்றோம், அவரை நம்பிய நிலையில் எந்தளவு இருக்கின்றோம் என்பதை நாம் அவருக்கு சதா தெரிவிக்க வேண்டும். யாவற்றையும்-பார்ப்பவரும் யாவற்றையும்-செவிமடுப்பவரான ஒரு இறைவனையே நாம் நம்புகின்றோம். அவரே குறிப்பிடும், “துயிலாத கண்”53 எனும் கண்ணைக் கொண்டுள்ளவர் அவர். புலப்படுவனவற்றையும் புலப்படாதவற்றையும் அக்கண்னை கொண்டே பார்க்கின்றார். மேலும், அவர் பிரார்த்தனைக்கு பதில் தரும் இறைவன். பனிவுடனும் அன்புடனும் சமர்ப்பிக்கப்படும் பிரார்த்தனைகளுக்கு அவர் பதிலளிப்பார். அவர் சர்வ-கொடையாளி, சர்வ-தயாளம் மிக்கவர், அதே சமயம் அவர் சர்வ-ஞானி, சர்வ-விவேகி. நமக்கு நல்லவற்றையும் கெட்டவற்றையும் அவர் அறிவார். நாம் நம்மைப்பற்றி அறிந்திருப்பதை விட அவர் நமது உள்நிலையை நன்கறிவார். நாம் பிறரது குறைகளையும், தவறுகளையும் மன்னிக்கவும் மறக்கவும் தயார் என்றால், நமது தோல்விகளையும் குறைபாடுகளையும் மன்னிக்க அவர் என்றும் தயாராக உள்ளார். எல்லா சக்திகளையும், மேன்மைகளையும், ஆதிபத்யங்களையும் அவர் தமது கைப்பிடியில் வைத்துள்ளார். கண் சிமிட்டும் நேரத்தில் நாம் வேண்டுவனவற்றை அவர் கொடுக்க வல்லவர். உறுதிப்பாடாக வளர்ந்துவிட்டிருக்கும் ஒரு நம்பிக்கையை, அவர் நம்மில் காண விரும்புகின்றார். நாம் நேசர்களாகவும் அதே சமயம் நம்பிக்கையாளர்களாகவும் இருப்பதை அவர் விரும்புகிறார். நமது உத்தேசங்கள் தூய்மையானவையா அல்லவா என்பதை தீர்மாணிக்க வல்லவர் அவர் ஒருவரே. நாம் நம்மை அவருக்கு அர்ப்பணித்திட வேண்டும். எவ்வளவுதான் தகுதியற்றவர்களாக இருப்பினும், நம்மை கருவிகளாக பயன்படுத்திட அவரை வேண்டிக்கொள்ளவேண்டும். நாம் விரும்பினால் அவர் நம்மை நிலைமாற்றம் செய்யக் கூடியவர்; நம்மை புனர் உருவாக்கம் செய்யக்கூடியவர்; நம்மை “புதிய படைப்புகளாக”54 செய்யக்கூடியவர் அவர். நமது சொந்த வாழ்க்கையிலும் அவரது சமயத்தின்பாலான சேவையிலும் நமது அதி உயர்ந்த வேட்கைகளின் முழுமையான மற்றும் முடிவான நிறைவேற்றங்களை கண்ணுற நமக்கு உதவிடுவார். இப்படிப்பட்டவரே நாம் கண்டுணர்ந்துள்ள இறைவன். இப்படிப்பட்டவரே நாம் நம்பிக்கை கொண்டுள்ள இறைவன். அனிதினமும் அவரை சிறிது சிறிதாக நெருங்கியும், அவரது நல்விருப்பத்தை பெற்றிடவும் முயற்சி செய்திடுவோமாக.

குறிப்புகள்:
1. மறைமொழிகள், பஹாவுல்லா, #4 அரபு
2. மறைமொழிகள், பஹாவுல்லா, #13 அரபு
3. மறைமொழிகள், பஹாவுல்லா, #16 அரபு
4. பாரீஸ் பேருரைகள், அப்துல் பஹா, 12வது பதிப்பு; ப. 189
5. மறைமொழிகள், பஹாவுல்லா, #32 பாரசீகம்
6. தற்காலிக மொழிபெயர்ப்பு, இந்த உரைக்காக
7. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1732, ப. 228
8. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1737 பக். 230;
9. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1745, பக். 232;
10. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1753, பக். 235;
11. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1734, பக். 229;
12. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1735. பக். 229
13. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1754. பக். 235
14. பிரார்த்தனைகளும் தியானங்களும், பஹாவுல்லா, பக் 47
15. பிரார்த்தனைகளும் தியானங்களும், பஹாவுல்லா, பக் 89
16. பிரார்த்தனைகளும் தியானங்களும், பஹாவுல்லா, பக் 257
17. தற்காலிக மொழிபெயர்ப்பு, இந்த உரைக்காக
18. தற்காலிக மொழிபெயர்ப்பு, இந்த உரைக்காக
19. கித்தாப்-இ-அக்தாஸ், கேள்வியும் பதிலும், பகுதி 82. பக். 142-143 (தமிழ்)
20. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1755, ப. 236
21. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1756 பக். 236
22. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1731, பக் 228
23. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1722, பக். 225
24. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1730, பக். 228
25. பாதுகாவலரின் சார்பாக எழுதப்பட்ட, பிரசுரிக்கப்படாத கடிதம், 22 ஆகஸ்ட் 1957
26. பாதுகாவலரின் சார்பாக எழுதப்பட்ட, பிரசுரிக்கப்படாத கடிதம், 9 பிப்ரவரி 1949
27. திரட்டுகளின் திரட்டு, கோப்பு, பகுதி 1768, ப. 239-240
28. பிரார்த்தனைகளும் தியானங்களும், பஹாவுல்லா, பக். 262
29. பிரார்த்தனைகளும் தியானங்களும், பஹாவுல்லா, பக். 174
30. பிரார்த்தனைகளும் தியானங்களும், பஹாவுல்லா, பக். 78
31. கித்தாப்-இ-அக்தாஸ், பகுதி 36, பக். 36 (தமிழ்)
32. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1764, ப. 239
33. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1780, ப. 243
34. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1765, ப. 239
35. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1760, ப. 237
36. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1779, ப. 242
37. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1776, ப. 242
38. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1771, ப. 240
39. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1782, ப. 243
40. கித்தாப்-இ-அக்தாஸ், பஹாவுல்லா, கேள்வியும் பதிலும், பகுதி 18, பக். 124 (தமிழ்)
41. கித்தாப்-இ-அக்தாஸ், பகுதி 115, பக் 69
42. கித்தாப்-இ-அக்தாஸ், பகுதி 115, பக் 69
43. பஹாவுல்லாவும் புதிய யுகமும், பக் 88
44. பஹாய் பிரார்த்தனைகள், தமிழ், பக். 27-28
45. பஹாய் பிரார்த்தனைகள், தமிழ், பக். 131
46. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1733, ப. 228
47. தற்காலிக மொழிபெயர்ப்பு, இந்த உரைக்காக
48. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1762, ப. 238
49. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1770, ப. 240
50. திரட்டுகளின் திரட்டு, பகுதி 1773, ப. 2241
51. தற்காலிக மொழிபெயர்ப்பு, இந்த உரைக்காக
52. தற்காலிக மொழிபெயர்ப்பு, இந்த உரைக்காக
53. பஹாய் பிரார்த்தனைகள், பக். 60. (ஆங்கிலம்)
54. பொறுக்கு மணிகள், பஹாவுல்லா, வில்மட், பக். 29.