சமையல்


நன்றி: கோபால் K.

சமையல்

தக்காளி ரசம்

தேவையான பொருட்கள்

தக்காளி – 3
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
பூண்டு – 10 பல்
கடுகு – 1/4 தேக்கரண்டி
வரமிளகாய் – 2
கடலைப் பருப்பு – 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

ரசப் பொடி செய்ய

துவரம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
மல்லி – 1/4 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயத் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை

1. துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, மிளகு, சீரகம், வெந்தயத்தூள் ஆகியவற்றை தனியே நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

2. சிறிது தண்ணீரில் தக்காளியை உப்பு சேர்த்து கையால் கரைத்து தோலினை எடுத்து விடவும்.

3. புளியை ஒரு கோப்பைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

4. இதனுடன் கரைத்த தக்காளியை சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

5. பூண்டை தோல் உரிக்காமல் ஒன்று இரண்டாக தட்டிக் கொள்ளவும்.

6. தனியே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, கிள்ளிய வரமிளகாய், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.

7. இதனுடன் நசுக்கிய பூண்டை போட்டு லேசாக ஒரு பிரட்டு பிரட்டி, தனி பாத்திரத்தில் வைத்துள்ள புளி, தக்காளி கரைசலில் சேர்க்கவும். பின்னர் இந்த கரைசல் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.

8. பிறகு இதனுடன் ரசப்பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்து வேக விடவும். ரசம் நுரைத்து ஒரு கொதி வந்த உடனே மூடி வைத்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

கொள்ளு ரசம்

தேவையான பொருட்கள்

கொள்ளு – 50 கிராம்
தக்காளி – 1
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
பூண்டு – 10 பல்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
வரமிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு

ரசப் பொடி செய்ய

துவரம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
மல்லி – 1/4 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயத் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை

1. கொள்ளை நன்றாக ஊறவைத்து களைந்து, வேகவைத்துக் கொள்ளவும்.

2. வேக வைத்த தண்ணீரை வடித்து, அதில் சிறிதளவு மசித்த கொள்ளையும் கலந்து எடுத்துக் கொள்ளவும். (ஒரு கோப்பை அளவு)

3. புளியை 2 மேஜைக்கரண்டி அளவு தண்ணிரில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

4. புளிக்கரைசலில் தக்காளி, உப்பு போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

5. பூண்டை ஒன்று இரண்டாக தட்டிக் கொள்ளவும்.

6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்து, நசுக்கிய பூண்டையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து வதக்கவும்.

7. அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி-தக்காளி கரைசலையும், கொள்ளுத் தண்ணீரையும் சேர்க்கவும்.

8. அதில் சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்று இரண்டாக பொடித்து சேர்க்கவும். அல்லது ரசப்பொடி 2 தேக்கரண்டி சேர்க்கவும்.

9. பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

10. ரசம் நுரைத்து பொங்கி வரும் போது மூடி வைத்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. கொள்ளு ரசம் உடல் வலிமைக்கு நல்லது. சளி தொல்லையிலிருந்து நிவாரணம் கிடடக்கும்.

2. கொள்ளு பெண்கள் கருப்பைப்பையில் இருக்கும் அழுக்கை அகற்றும் சக்தி கொண்டது.

3. கொள்ளு சூடான உணவுப்பொருள் என்பதால் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தவும்.

அரிசி மாவு முறுக்கு

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1 கிலோ
பொட்டுக்கடலை – 300 கிராம்
எள் – 25 கிராம்
வர மிளகாய் – 4
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 லிட்டர்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. இட்லி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

2. பொட்டுக்கடலையை மிக்ஸியில் இட்டு (தண்ணீர் சேர்க்காமல்) நன்கு பொடி செய்து கொள்ளவும்.

3. வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடானதும் எள் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

4. ஊறவைத்த இட்லி அரிசி, வர மிளகாய் ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு, அதிகம் தண்ணீர் சேர்க்காமல், முடிந்தவரை கெட்டியாக, மைய அரைத்துக் கொள்ளவும்.

5. அதனுடன் பொட்டுக்கடலை மாவு, வறுத்த எள், உப்பு, பெருங்காயம் ஆகிவற்றை சேர்க்கவும்.

6. 100 மில்லி எண்ணெயை ஒரு பாத்திரத்தில் தனியே கொதிக்க வைத்து இந்த மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

8. முறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.

9. பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.

10. இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.

11. முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்.

12. முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.

தேங்காய்ப்பால் முறுக்கு

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 4 கோப்பை
வறுத்த உளுத்தம் பருப்பு மாவு – 1 கோப்பை
வெண்ணெய் – 1 மேஜைக் கரண்டி
தேங்காய் – 1
சீரகம் – சிறிதளவு
மிளகு – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. மிளகு சீரகம் ஆகியவற்றை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

2. இதனுடன் சலித்த அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

3. பின்னர் வெண்ணெயைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும்.

4. தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டியான தேங்காய்பால் எடுக்கவும்.

5. பிசைந்து வைத்த மாவை 4 அல்லது 5 பகுதியாக பிரித்துக் கொள்ளவும்.

6. ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து சிறிது தேங்காய்ப் பால் சேர்த்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.

7. முறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.

8. பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.

9. இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.

10. முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்.

11. முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.

ஜவ்வரிசி முறுக்கு

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 1 கோப்பை
அரிசி மாவு – 6 கோப்பை
கடுகு – சிறிதளவு
எலுமிச்சைம்பழம் – 1
புளித்த தயிர் – 1 கோப்பை
பச்சைமிளகாய் – 3
பெருங்காயம் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. முதல் நாள் இரவே ஜவ்வரிசியை நன்கு கழுவி புளித்த தயிரில் ஊற வைக்கவும்.

2. ஊறிய ஜவ்வரிசியுடன் உப்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

3. சிறிது எண்ணெயைச் சூடாக்கி கடுகு போட்டு தாளித்து விழுதில் சேர்க்கவும்.

4. பின்னர் எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து இந்த விழுதுடன் சேர்க்கவும்.

5. அதனுடன் அரிசி மாவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாவை 3 அல்லது 4 பாகமாக பிரித்துக் கொள்ளவும்.

6. பின்னர் ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து தண்ணீர் தெளித்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.

7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

8. முறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.

9. பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.

10. இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.

11. முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்.

12. முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.

இட்லி

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1 கிலோ
உளுந்து – 200 கிராம்
அவல் – 1 கைப்பிடி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி

செய்முறை

1. அரிசியை, வெந்தயத்துடன் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

2. அரிசியை அரைப்பதற்கு 10 நிமிடம் முன் அவலை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.

3. அரிசி, வெந்தயத்துடன், அவலைச் சேர்த்து, நைசாக இல்லாமல் கொஞ்சம் மரமரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

4. உளுந்தை 1 மணி நேரம் (அறைப்பதற்கு முன்) ஊற வைத்து மெத்மெத்தென வரும் வரை அரைக்கவும்.

5. இரண்டு மாவையும் உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கி (கையினால்) வைக்கவும்.

6. அரைத்த மாவினை 8 மணி நேரம் வைத்து புளிக்க வைக்கவும்.

7. மாவு புளித்து மேலே வரும். அப்போது கரண்டியை விட்டு நன்றாக கலக்கி, இட்டிலி தட்டில் எண்ணெய் தடவு மாவை ஊற்றி ஆவியில் வேக வைத்து இட்லியாக வார்த்து எடுக்கவும்.

குறிப்பு

1. இட்லிக்கு தொட்டுக் கொள்ள தக்காளி, தேங்காய், கொத்தமல்லி சட்னிகளும், நல்லெண்ணெய் கலந்த இட்லிபொடியும் சுவையாக இருக்கும்.

2. அவலை 10 நிமிடம் மட்டும் ஊறவைக்கவும். அதிக நேரம் ஊறவைத்தால் கூழ் போலாகிவிடும்.

ரவா தோசை

தேவையான பொருட்கள்

ரவை – 400 கிராம் (2 கோப்பை)
அரிசி மாவு – 1 மேஜைக் கரண்டி
மைதா மாவு – 1 மேஜைக் கரண்டி
கொத்துமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – சிறிதளவு
இஞ்சி – சிறிதளவு
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. புளித்த மோரில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மோரில் சேர்க்கவும்.

3. பின்னர் அதனுடன் வறுத்த ரவை, மைதா மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

4. பிறகு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயைக் காயவைத்து அதில் மிளகு, சீரகம், கடுகு ஆகியவை சேர்த்து தாளித்து, கலந்து வைத்த மாவில் கொட்டவும்.

5. பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

6. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

குறிப்பு

1. மாவை அதிக நேரம் ஊறவைக்கக் கூடாது. ஊறினால் தோசை மொறுமொறுப்பாக வராது.

2. வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து தோசை சுட்டால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

வெங்காய சட்னி

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 2
பூண்டு – 3 பல்லு
இஞ்சி – 1 துண்டு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

1. வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, இவை அனைத்தையும் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

2. பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை அதில் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.

குறிப்பு

1. இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.

கறிவேப்பிலை சட்னி

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – 1 கட்டு
சின்ன வெங்காயம் – 1 கோப்பை
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து – 1/2 தேக்கரண்டி
புளி – 1 கொட்டை அளவு
தேங்காய் துருவல் – 1 மேஜைக்கரண்டி
பூண்டு – 4 பல்லு
இஞ்சி – 1 துண்டு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/4தேக்கரண்டி
உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

1. சிறிது எண்ணெயை விட்டு கருவேப்பிலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

2. வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும் உளுந்தையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

3. பிறகு அதில் வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும்.

4. அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. பிறகு அதில் புளியைச் சேர்க்கவும்.

6. பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆறவைக்கவும்.

7. பிறகு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

8. அடுத்து தாளிக்கும் பொருள்களைக் கொண்டு தாளிக்கவும்.

குறிப்பு:

1. இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.

தீபாவளி லேகியம்

தீபாவளியன்று ஏகப்பட்ட பட்சனங்களை செய்து, வயிறு புடைக்க சாப்பிட்டு முடித்த பின்னர் பட்டாசையம் கொளுத்தி கொண்டாடியாயிற்று. அடுத்து முக்கியமான ஒரு மேட்டர் உள்ளது. அதுதான் தீபாவளி லேகியம்.

சாப்பிட்ட இனிப்புகள் ஜீரணமாகி வயிறு பத்திரமாக இருக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான் இந்த தீபாவளி லேகியம்.

தீபாவளி லேகியம் என்றதும் பயந்து போய் விட வேண்டாம். சாதாரண இஞ்சி கஷாயம்தான் இது.

தீபாவளி லேகியம் தயாரிக்க தேவையான பொருட்கள்..

இளம் இஞ்சி – ஒரு பெரிய துண்டு.
மல்லி விதைகள் – 1 கப்.
ஜீரகம் – அரை கப்.
நெய் – 3 தேக்கரண்டி
வெல்லம் – 1 கப்.

செய்முறை:

கொத்தமல்லி விதைகளையும், ஜீராவையும், அரை குவளை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில், இந்த பேஸ்ட்டை கலந்து நன்கு நைசாக வருமாறு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் வெல்லத்தை சேர்க்க வேண்டும். சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு மெதுவாக நெய்யை கலந்து அப்படியே கலக்கி வரவும். இந்தக் கலவையில் உள்ள நீர் அனைத்தும் ஆவியாகி, அப்படியே இறுக்கமான பேஸ்ட் ஆக மாறி விடும். இதுதான் தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து.

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு முடித்ததும் இந்த தீபாவளி மருந்தை உட்கொண்டால் வயிறு கெடாது, ஜீரணப் பிரச்சினை வராது.

தித்திப்பான தீபாவளிக்கு இந்த கஷாயம் அவசியம் தேவை. மறந்துடாம தயாரிச்சுடுங்க.

அச்சு முறுக்கு (தீபாவளி ஸ்பெஷல்)

தேவையான பொருட்கள்:-

மைதா மாவு – 2 கப்

சர்க்கரை – 1 கப்

முட்டை – 1

எள் – 2 தேக்கரண்டி

ஏலக்காய் (பொடித்தது)-2

உப்பு – ஒரு சிட்டிகை

சோடா உப்பு – ஒரு சிட்டிகை

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை :-

மைதாமாவில், எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ( முட்டையைத் தனியாக நன்றாக அடித்துவிட்டு கலக்கணும்)தோசை மாவுப்பதத்தில் கலந்துகொள்ளவும்.

தட்டையான,அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, அச்சு முறுக்குக் கரண்டி முக்கால் பாகம் எண்ணெயில் மூழ்குமாறு சூடாக்கவும்.

கரண்டி நன்கு சூடானதும் அதனை முக்கால் பாகம் மாவில் முக்கியெடுத்து எண்ணையில் அமிழ்த்தவும்.

கரண்டியில் ஒட்டிய மாவு வெந்து தானாகக் கழன்றுவிடும். அதனைத் திருப்பிப்போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான, இனிப்பு அச்சுமுறுக்கு தயார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: