கடவுள் யாவற்றையும் படைத்து அவை ஒவ்வொன்றிலும் தமது பன்பு ஒன்றை உட்பதித்துள்ளார் என பஹாய் திருவாக்குகள் கூறுகின்றன. ஆனால், மனிதனில் மட்டும் அவர் தமது அனைத்து பன்புகளையும் பிரதிபலிக்கும் ஆற்றலை வழங்கியுள்ளார். மனிதப் பிறவியின் நோக்கமே கடவுள் மனிதனுக்கு வழங்கியுள்ள இந்த ஆற்றலை மேம்படுத்திக்கொள்வது ஆகும். இதன் காரணமாகவே “மனிதனென்பவன் தெய்வமாகலாம்” என கூறுகின்றோம்.
இவ்வகையில், பல திரைப்படங்களில் ஆன்மீக மனப்பாங்குகள் குறித்த கருத்து பாடல்கள் பல வெளிவந்துள்ளன. பெரும்பாலும் இவை பழைய படங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றன. எனக்குப் பிடித்த பழைய பாடல்களுள் பின்வரும் பாடலும் ஒன்று. இப்பாடலின் மையக்கருத்து கற்பு, சேவை போன்ற ஆன்மீக மனப்பாங்குகள் குறித்ததாகும். கேட்பதற்கு இனிமை மிகுந்து மனதை நெகிழச் செய்யும் ஒரு பாடல். சிறு வயதில் அதிகாலை 5.30மணிக்கு பள்ளிசெல்லும் வேளை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல். மனதில் அன்று பதிந்தது இன்றும் மனதைவிட்டு அகலவில்லை.
இப்பாடல் ஜிக்கி அவர்களால் கண்கள் எனும் படத்திற்காக படாப்பட்டது.
பாடலை கேட்க அல்லது பதிவிரக்கம் செய்ய:
பாடிப்பாடி தினம்…
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியே
கற்பூரம் மென்மலர் தன்னையும் சாற்றியே
பாடிப் பாடி தினம் தேடினாலும்
அவன் பாதம் காண முடியாது
ஈசன் பாதம் காண முடியாது
அற்புதங்கள் பல செய்திடும் சித்தர்கள்
அகத்திலும் ஆண்டவன் இல்லை
நற்பயன் இல்லாத நாசவேலை செய்ய
கற்றதிலும் ஞானத்திலும்
இல்லையென்றறியாமல்
பாடிப் பாடி தினம் தேடினாலும்
அவன் பாதம் காண முடியாது
ஈசன் பாதம் காண முடியாது
விற்பனர் போல் பல வேஷமிடும் கலைஞர்
என்பவர் நெஞ்சிலும் இல்லை
கற்புள்ள மாதர்கள் காக்கும் உழவர்கள்
கற்புள்ள மாதர்கள் காக்கும் உழவர்கள்
கருத்தினில் வாழ்கிறார் கடவுள் ..ஆஆ
கற்புள்ள மாதர்கள் காக்கும் உழவர்கள்
கருத்தினில் வாழ்கிறார் கடவுள் என்றறியாமல்
பாடிப் பாடி தினம் தேடினாலும்
அவன் பாதம் காண முடியாது
ஈசன் பாதம் காண முடியாது!
பாடல் வரிகள் தெளிவாக இல்லை. பின்வருமாறும் இருக்கலாம்.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி…
கற்பூரம் மென்மலர் சந்தணம் சாற்றியே
ஆடிப்பாடி தினம் தேடினாலும் அவன்
பாதம் காண முடியாது.. ஈசன்
பாதம் காண முடியாது.
அற்புதங்கள் பல செய்திடும் சித்தர்கள்
அகத்திலும் ஆண்டவன் இல்லை.
நற்பயன் இல்லாத நாசவேலை செய்ய
கற்றதிலும் ஞானத்திலும் இல்லை
என்றறியாதர் [அறியாதர் = அறியாதார் / அறியாதவர்]
ஆடிப்பாடி தினம் தேடினாலும் அவன்
பாதம் காண முடியாது.. ஈசன்
பாதம் காண முடியாது.
விற்பன்னர் போல் பல வேஷம் இடும் கலைஞர்
வெம்பகை நெஞ்சிலும் இல்லை.
கற்புள்ள மாதர்கள் காக்கும் உழவர்கள்
கருத்தினில் வாழ்கிறான் கடவுள்
என்றறியாதர்… (ஆடிப்பாடி)
I am delighted you included this old song. It is my favourite.
Jikki’s best, I think.
நன்றி. பாட்டின் கருத்தோடு சேர்ந்த இசை ஆன்மாவையே தொடுவதாக இருக்கின்றது. இது போன்ற வேறு பாடல்கள் இருந்தால் தெரிவிக்கவும்
மிக சிறந்த ஆய்வு. பாட்டின் கருத்தோடு சேர்ந்த இசை மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் பல பாடல்களை சேர்ந்து கொண்டால் நலம்.