முதல் மின்விளக்கை கண்டுபிடித்தவர்


யார் யாரோ எதை எதையோ கண்டுபிடித்தார்கள் என நாம் பள்ளிப்பாடத்தில் கற்கின்றோம். ஆனால், அந்த கண்டுபிடிப்புகள் உண்மையில் அவர்களுடையதுதானா?

எலியட், மேய்ன் – அதன் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இருநூறாவது ஆண்டு கொண்டாத்திற்கு ஒரு வாரமே இருக்கும் வேளையில், அந்த ஊரின் சரித்திரத்தையும் அதன் வரலாற்றில் முக்கியமானவர்களையும் தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகமாக இருக்கின்றது.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தோரில் மோசஸ் ஜி. பாஃர்மர் அவர்களைவிட பிரபலமானவர் யாரும் இல்லை. இவருடைய பெயர் அந்த வட்டாரத்தில் வசிப்போர் அனைவராலும் அறியப்பட்டு, அவர் விட்டுச் சென்றுள்ள நற்செயல்கள் அந்த நகரத்தின் பல மக்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கின்றது.

மோசஸ் G. ஃபார்மர்

“அவர் எலியட்டின் மக்கள் பெருமையாக பேச விரும்பும் உருச்சின்னம் ஆவார்,” என தமது வீட்டின் முன் நின்று முன்னாள் பெண்கள் கூடைப்பந்து பயிற்சியாளர் பாப் பெர்ஹாம் கூறினார். தாம் தற்போது வசிக்கும் வீடு முன்பு பாஃர்மர் அவர்களால் பயன்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.

“அவ்வீடு பாஃர்மர் அவர்களின் குதிரைவண்டி கொட்டகை மற்றும் பணிமனையும் ஆகும் மற்றும் அவர் இங்குதான் தமது முதல் மின்விளக்கையும் கண்டுபிடித்தார்,” என பெர்ஹாம் கூறினார்.

பாஃர்மர் அவர்கள் பாஸ்டன் தீ அலாரத்தையும் கண்டுபிடித்தவர் ஆவார். இக்கருவியில் இருக்கும் கண்ணாடியை உடைத்தால் எச்சரிக்கை சப்தம் எழும் மற்றும் வேறு பல கருவிகளையும் அவர் கண்டுபிடித்தார்.

1858-இல், தமது 39-வது வயதில், சேலம், மாசாசுசட்டில், பாஃர்மர் தமது வீட்டின் வரவேற்பரையை மின் விளக்குகள் கொண்டு ஒளியேற்றினார். உலகில் அந்த வீடே முதன் முதலாக மின்விளக்குகள் கொண்டு ஒளியேற்றப்பட்டதாகும். எடிசன் அந்த கண்டுபிடிப்பை ஒரு சிறு விலை கொடுத்து வாங்கி அக்கண்டுபிடிப்பை தம்முடையது என உரிமைப்பதிப்பு செய்தார்.

19-ஆம் நூற்றாண்டின் பல கண்டுபிடிப்புகளுக்கு பாஃர்மர் காரணமாக இருந்தபோதும், அவரும் அவருடைய மனைவியைும், ஆன்மீகவாதிகள் என்னும் முறையில் தங்கள் கண்டுபிடிப்புகள் யாவும் கடவுளிடமிருந்தே தோன்றுகின்றன எனவும் அவற்றுக்கு தாங்கள் பெயர்வாங்கிக்கொள்வது முறையல்ல என அவர்கள் கருதியதாக பெர்ஹாம் வீட்டிற்கு அருகே திடீருணவு கடை வைத்திருக்கும் எலியட் மீட் மார்க்கெட் சக உரிமையாளரான ஸ்காட் ஜான்சன் கூறுகிறார்.

“அவர் மின்சாரத்திற்கான உரிமைப்பதிப்பை எடிசனின் ஆட்களுக்கே விட்டுக்கொடுத்தார். தமது கண்டுபிடிப்புகளுக்காக சிக்காகோ உலக சந்தையில் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பாராட்டு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் அவர் மரணமுற்றார்.”

மோசஸ் பாஃர்மர் தமது மனைவியான ஹான்னா ஷாப்லே அவர்களை எலியட்டிலேயே சந்தித்தார். அம் மாது ஒரு பிரபல வள்ளலாகவும், பெண்ணியம் சார்ந்தவர் ஆகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். அவர் அக்காலத்து பிரபலமான சீர்திருத்தவாதிகளான கிளாரா பார்ட்டன், ஹேரியட் பீச்சர் ஸ்டோவ், ஹேரியட் டப்மேன் போன்றோருடன் நன்கு பழக்கப்பட்டிருந்தார்.

ஸாரா ஃபார்மர்

வடக்கிலும் கெனடாவிலிருந்தும் சுதந்திர மாநிலங்களுக்கு தப்பிச் செல்லும் (கருப்பின) அடிமைகளுக்கு பாஃர்மர்களின் வீடு இரகசிய தொடர்வண்டி வழியில் பாதுகாப்பான பிராயணத்திற்கு ஒரு முக்கிய கூடுமிடமாக விளங்கியது.

மோசஸ் பாஃர்மரின் மறைவிற்குப் பிறகு, அவரது மகளான சாரா, பிஸ்காட்டாக்குவா ஆற்றின் கரைகளில் கிரீன் ஏக்கர் என பெயரிடப்பட்ட ஓர் உல்லாச தங்கும் விடுதியை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொண்டார்.

அந்த உல்லாச விடுதி முயற்சி தோல்வி கண்ட பிறகு உலகைச் சுற்றியுள்ள பகுத்தறிவாளர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் மேம்பாட்டு சிந்தனையாளர்களுக்கு ஒன்றுகூடுமிடமாக பயன்படக்கூடிய ஒரு மாநாட்டு மையத்தை உருவாக்கினார்.

1894-இல் அவர் கிரீன் ஏக்கர்ஸ் மாநாட்டு மையத்தை திறந்தார், மற்றும் அவருடைய ஆன்மீக விழித்தெழுதலை குறிக்கும் பிரமாண்டமான அமைதிக் கொடி ஒன்றை அங்கு ஏற்றினார்.

அப்துல் பஹாவுடன் சாரா பாஃர்மர்

பின்னாட்களில், ஐரோப்பாவில் பிரயாணம் செய்த போது, அவருடைய பிற்கால தீர்மானங்கள் மீது தாக்கம் செலுத்திய உற்சாக தூரநோக்கை வழங்கிய பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவின் திருமகனார் அப்துல் பஹாவைச் சந்தித்தார்.

கிரின் ஏக்கருக்கு மீண்டும் திரும்பிய பிறகு, அவர் கிரீன் ஏக்கர் பஹாய் பள்ளியை நிறுவினார்.

அவர் எலியட் நகரில் பிட்டர்ஸ்வீட் என்னும் பாஃர்மர் இல்லத்தில் 1916-இல் காலமானார்.

பின்னூட்டமொன்றை இடுக