மோனாவின் கனவு – திரைப்படம்


மோனா

ஆயாத்துல்லா கோமேனி இரான் நாட்டை அது வரை ஆண்டுவந்த ஷாவிடமிருந்து கைப்பற்றிய பிறகு நூற்றுக் கணக்கில் பஹாய்கள் கொலை செய்யப்பட்டனர் அல்லது சிறையிலிடப்பட்டனர். குழந்தைகளுக்காக நடத்தி வந்த தனது குழந்தைகள் வகுப்பின் காரணமாக, மோனாவும் மற்றும் பஹாய்கள் எனும் காரணத்தினால் பல பெண்களும் கைது செய்யப்பட்டனர். தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்த அந்த பத்து பேரும் இறுதில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுள் மோனாவே வயதில் மிகவும் சிறியவள். கைது செய்யப்பட்டபோது அவளுக்கு பதினாறே வயது. இன்று உலகம் முழுவதும் பஹாய் சமூகங்களில் மோனா எனும் பெயரை தெரியாதோர் இருக்கமுடியாது. மோனா தனக்கு ஒத்த வயதுடையோர்களுக்கு மட்டுமல்லாது தன்னைவிட வயதில் மூத்தவர்களுக்கும் ஓர் உதாரணமாக திகழ்கிறாள்.

பஹாய் சமயம் அல்லது சமூகங்கள் குறித்த செய்திப்படங்கள் ஏராளமானவை இதுவரை வெளிவந்துள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இத்தகைய படங்கள் நிறையவே ஒளியேறியுள்ளன. பல பஹாய் தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ள திரைப்படங்களும் வெளிவந்துள்ளன மற்றும் பஹாய் நடிகர்கள் இசையமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்களும் உள்ளன. ஆனால் பஹாய் வரலாற்றை மையமாக வைத்து இதுவரை முழுநீழ திரைப்படங்கள் தயாரிக்கப்படவில்லை. முதன் முறையாக இத்தகைய முயற்சி ஒன்று நடைபெற்றுவருகிறது.

மோனாவின் வரலாற்றை திரைப்படமாக்கும் திட்டம் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன் முன்மொழியப்பட்டது. அது குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும் அவை இது வரை தீவிரமாக்கப்படவில்லை. ஆனால், இப்போது கிடைத்துள்ள செய்தியின்படி “மோனாவின் கனவு” திரைப்படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. திரைப்படம் அடுத்த வருடம் (2011) ஜூன் மாதத்திற்குள் வெளிவரும் என ஆரூடம் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்திற்கான பட்ஜட் சுமார் 15 மில்லியன் டாலர்களாகும். இதுவரை அதில் பாதி தொகை கைவசம் உள்ளது.

இதுவரை உறுதிபடுத்தப்பட்டு இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகையர் பெயர்கள் பின்வருமாறு:


கீஷா காசல்-ஹியூஸ் (Keisha Castle-Hughes)

இவர்தான் மோனா மாஹ்முட்நிஸாட்டின் பாத்திரமேற்று நடிக்கவிருக்கின்றார்

கீஷா “வேல் ரைடர்” (2002) எனும் திரைப்படத்தின் வாயிலாக பிரபலமடைந்தார். இவர் இப்படத்தின் வாயிலாக அகாடமி அவார்ட் நோமினேஷன் செய்யப்பட்டார். வயது குறைந்தவராக இருந்த போதும் இவர் ஒரு சிறந்த நடிகை என்பதில் சந்தேகமே இல்லை.

ஷோஹ்ரே அக்டஷ்லூ (Shohreh Aghdashloo)

இவர் மோனாவின் தாயாராக நடிக்கவிருக்கின்றார் . மோனாவின் கனவில் நடிப்பதற்காக அனுகப்பட்ட முதல் முன்னனி நடிகை இவராவார்.

காஸ் அன்வர் (Cas Anvar)

இவர் தலைமை விசாரனையாளராக நடிக்கவிருக்கின்றார் . கனடா நாட்டு நடிகரான இவர் பல மேடை நாடகங்களிலும் சினிமா மற்றும் தொலைக்காட்சி திரைப்படங்களிலும் நிறைய நடித்துள்ளவர்.


நாஸானின் அஃப்ஷின்-ஜாம் (Nazanin Afshin-Jam)

இவர் தாஹிரி-யின் பாகத்தில் நடிக்கவிருக்கும் புதுமுகம் . இவர் கனடா நாட்டின் 2003ன் உலக அழகிகளுக்கான போட்டியில் வென்றவர் மற்றும் உலக அழகிகள் போட்டியில் ரன்னர்-அப் ஆகவும் தேர்வு பெற்றவர் மற்றும் இவர் பல சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்.

இத்திரைப்படம் குறித்த அகப்பக்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: