சில்லி நாட்டின் “ஒளிக்கோவில்”


சில்லி நாட்டு “ஒளிக் கோவிலுக்கான” மண் தோண்டும் பணி ஆரம்பமாகிவிட்டது.

28 நவம்பர் 2010

சான்தியாகோ, சில்லி — சில்லி நாட்டின் தலைநகரான சான்தியாகோவில் அமையவிருக்கும் தென் அமெரிக்க கண்டத்திற்கான புதிய பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான மண் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

சில்லி வழிபாட்டு இல்லத்தின் தோற்றம்

கட்டிட மனைக்கான நீண்டகால தேடுதல் முயற்சிக்குப் பிறகும், கட்டிடத்தின் வெளிப்புறத்தில் வேய்வதற்குறிய முற்றிலும் புதிய வகை பொருளை கண்டுபிடிப்பது உட்பட எதிர்பாராத பல தொழில்நுட்ப சவால்களுக்குப் பிறகும், பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆண்டிஸ் மலை அடிவாரத்தில் உள்ள சான்த்தியாகோ நகருக்கு உட்பட்ட சிறுநகராட்சிப் பிரிவான பெஞ்ஞாலோலன் மலைப் பகுதிகளின் ஓரிடத்தில் கோவில் அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

26 நவம்பர் என திகதியிடப்பட்ட உலக நீதி மன்றம் தனது கடிதத்தில், “கண்ட ரீதியான வழிபாட்டு இல்லங்களுள் இறுதியானது நிறுவப்படவிருக்கும் சில்லி நாட்டில் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்வுகொள்கிறோம்,” என உலக நீதி மன்றம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பஹாய்கள், “அடையப்பட்டுள்ள திருப்புமுனை குறித்து மனமகிழ்வடைவார்கள் …” என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

“இக்கட்டத்தை ‘அடைவதற்கு பல தடங்கல்கள் கடந்துவரப்பட்டுள்ளன,” என உலக நீதி மன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வழிபாட்டு இல்லத்தை வடிவமைத்த ஹரிரி பொன்ட்டாரினி கட்டடக்கலைஞர்கள் எனும் பெயர் கொண்ட கனடா நாட்டு கட்டடக்கலை நிறுவனத்தின் — சியாமாக் ஹரிரி — பெரிதும் களிப்படைந்துள்ளார். “இது பெரிதும் உவப்பளிக்கும் நேரமாகும்,” என அவர் கூறினார். சான்த்தியாகோ நகர் முழுவதும் காட்சியளிக்கக்கூடிய, ஒரு தனிச்சிறப்புமிக்க இடத்தை நாங்கள் அடையாளங்கண்டுள்ளோம். வெளிநாட்டில் இருந்து வருவோர்கூட விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பாக தூரத்தில் இருந்தே அதை காணமுடியும்.

இவ்வட்டாரத்திற்கே பிரத்தியேகமான தாவர வகைகளைக் கொண்ட நீர்த்தோட்டம் சூழ்ந்த இவ் வழிபாட்டு இல்லம், 50 ஹெக்டர் நிலப்பகுதியில் 10 ஹெக்டர் நிலத்தை உள்ளடக்கியதாகும். கட்டடத்தின் அஸ்திவாரத்திற்கான, 30 மீட்டர்கள் அகலம் கொண்டதும் அடிநில பயன்பாட்டு வசதிகளை உள்ளடக்கிய தோண்டும் வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.

ஆங்கிலத்தில் மேற்கொண்டு விவரங்களுக்கு: http://news.bahai.org/story/800