அப்துல் பஹாவைப் பற்றி – 1911ல் எகிப்து நாட்டு பத்திரிக்கையில் வந்த செய்தி


பஹாய் செய்திகள் திரட்டு 1, எண். 19, 2 மார்ச் 1911 – பக். 4 – 5ல் வெளிவந்த கட்டுரை

எகிப்து நாட்டில் அப்துல்-பஹா

21 பிப்ரவரி என திகதியிடப்பட்ட செய்தியில் அப்துல்-பஹா இவ்வருடம் அமெரிக்கா செல்லமாட்டார் என்னும் தகவல் கிடைத்துள்ளது.

கைரோ நகரில் பிசுரிக்கப்பட்ட எல் அஹ்ரமா (பிரமிட்டுகள்) எனும் பத்திரிக்கையின் 19 ஜனவரி பிரதியில் பின்வரும் கட்டுரை வெளிவந்தது.

பஹாய்களின் தலைவர் அப்பாஸ் எபெஃண்டி

அவருடைய நெறிமுறைகள் மற்றும் சமயத்தைப் பற்றிய குறிப்புகள்

காரியவாதிகள் மற்றும் தேசத்தலைவர்களிடையே பஹாய்களின் தலைவராகிய அப்பாஸ்-எபெஃண்டி அவர்களின் மேன்மையே தொடர்ந்தாற்போல் உரையாடல்களுக்கான கருப்பொருளாக இருக்கின்றது. அலெக்ஸாண்டிரியா நகரின் நுண்ணறிவாளர்கள் மற்றும் மேன்மக்கள் அவருக்கு பெரும் மரியாதையையும் பணிவிணக்கத்தையும் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக அவரை நேரில் காணும் நோக்கத்தில் தங்கள் நாட்டுக்கு வருகைதரும்படி அமெரிக்காவில் உள்ள அவருடைய பெரும் எண்ணிக்கையிலான நம்பிக்கையாளர்கள் நிறைய கடிதங்கள் அனுப்பிவருகின்றனர். அவருடைய ஸ்தானம் மற்றும் நிலையை கருத்தில் கொண்டு அவருக்காக நியூ யார்க் நகரில் ஒரு பெரும் இல்லத்தை தயார் செய்துள்ளனர். இருந்தபோதும் அந்த நாட்டின் தூரம் மற்றும் நீண்ட பயன காலத்தை கருத்தில் கொண்டு அவர் தமது அமெரிக்க நம்பிக்கையாளர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள இயலாமல் போகலாம்.

சிரியா நாட்டிலிருந்து இப்போதுதான் வந்திருக்கும் பெரும் பண்டிதராகிய சோக்ரி எபெஃண்டியிடமிருந்து (பாதுகாவலர் ஷோகி எஃபெண்டியல்ல) பெறப்பட்ட கடிதத்தில் அவர் அப்பாஸ் எபெஃண்டியை பெரிதும் வாழ்த்தி, அவருடைய சமயத்தைப் பற்றி விளக்கமளித்து அவர் சார்பாக சில பரிந்துரைகளையும் அளித்துள்ளார்.

“நமது மரியாதைக்குறிய விருந்தினரான அப்பாஸ் எபெஃண்டியின் விவேகம், பாரசீக இராஜ்யத்தில் உயர்வான பரம்பரை மற்றும் வழித்தோன்றலாக வந்த அவரது குடும்பத்திலிருந்து உதித்ததாகும். அவர் பஹாய் இயக்கத்தின் ஸ்தாபகரான சுவர்க்கவாசியான பஹாவுல்லாவின் மகனும் அவருடைய வாரிசும் ஆவார். அவருடைய ஒழுக்கநெறி மற்றும் நடத்தையைப் பொருத்தவரையில், அவர் மேன்மை மற்றும் பூரணத்துவத்தின் வடிவமைப்பாவார். அவர் அருள், பரோபகாரம், உயர்ந்த சிந்தனை, தாராளம், கொடை, மற்றும் ஈகை நிறைந்தவர். ஏழைகளிடம் மிகுந்த அன்பும் வறியவர்களிடம் பொறுமையும் மிக்கவர். கிருஸ்தவர்களோ, யூதர்களோ, முகம்மதியர்களோ, பிராம்மனர்களே ஆனாலும் அவர்களிடையே அவர் எவ்வித பாரபட்சமும் வெளிப்படுத்துவதில்லை. அவரைப் பொருத்தமட்டில் அவர்கள் யாவரும் சமமானவர்களே, அவர்கள் அனைவரையும் வெவ்வேறு சமயத்தவர்கள் என காணாமல் ஒரே மானிடத்தின் கூறுகளெனவே பார்க்கின்றார். அவருடைய சமய இயக்கத்தின் நோக்கம் உலகத்தில் சமயங்களின் ஒற்றுமை மற்றும் மனிதர்களிடையே அவற்றின் சமத்துவம். உலகத்தின் முன்னேற்றத்திற்குச் சமயங்களுக்கிடையிலான வேறுபாடுகள் தடங்கல்களாக இருக்கின்றன என்பது அவரது எண்ணம் மற்றும் அவ்வித வேறுபாடுகளை களைதல் மக்களுக்கு நன்மையளிக்கும்.”

இந்த சமயம் பெரிதும் பரவி ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கண்டங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளதனால் அதன் விசுவாசிகளின் எண்ணிக்கை சுமார் 15 மில்லியன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியுள்ளது. இப்பஹாய்களில் பலர் நியூ யார்க், சிக்காகோ, இந்தியா, பாரசீகம், எகிப்து, சிரியா நாடுகளில் உள்ளனர், மற்றும் அச்சமயம் தொடர்ச்சியாக வளர்ந்தும் பரவியும் வருகிறது.

பஹாவுல்லாவின் புனித கல்லறை ஆக்கோ நகரில் பாஹ்ஜி எனப்படும் இடத்தில் உள்ளது மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பஹாய்கள் வருடந்தோரும் அங்கு வருகை தருகின்றனர்.

ராம்லே நகரில் நான் இருமுறை அப்பாஸ் எபெஃண்டி அவர்களைச் சென்று கண்டுள்ளேன். அப்போதெல்லாம் ஏழைகளும் வறியோரும் அவர் எப்போது வீட்டிலிருந்து வெளியே வருவார் என எதிர்ப்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள். அவர் வெளியே வந்ததும், அவரிடம் வேண்டி பொருளும் பெற்று செல்கின்றனர். இது அவருடைய பரோபகாரத்தில் ஒரு சிறிய அளவே. அவருடைய பரோபகாரத்தை என்னால் முழுதாக வருணிக்க முடியாது. அவர் மிதமான உயரம் கொண்டவர், வெள்ளை தலைமுடி, கூர்மையான கண்கள், புன்சிரிப்பு தவழும் அற்புதமான முகம், பனிவன்பு, மிகவும் எளிமையான போக்கும் கொண்டு பகட்டையும் படாடோபத்தையும் விரும்பாதவராக இருக்கின்றார். அவர் மிகவும் விவேகம் மிக்கவர், தத்துவ ஞானி மற்றும் துருக்கி, பாரசீக மற்றும் அரபு மொழி ஞானத்தில் யாரும் அவரை வெல்ல முடியாது.

“அவர் தேசங்களின் சரித்திரங்களை அறிந்துள்ளார் மற்றும் அவற்றின் ஏற்றம் மற்றும் தாழ்வு குறித்து புரிந்துவைத்துள்ளார்.

அவருக்கு அறுபது வயதாகிறது மற்றும் உடல் நரம்புகளின் நோய் காரணமாக அவர் ஒரு மாற்றத்திற்காக எகிப்து வந்துள்ளார். உலகின் எல்லா பகுதிகளிலிருந்து வரும் கடிதங்களையும் கட்டுரைகளையும் அவர் தாமே படித்தும், அவற்றில் முக்கியமானவற்றை பிரசித்தி பெற்ற அழகுடைய தமது கையெழுத்தில் பாரசீக மொழியில் தமது கைகளாலேயே பதில் எழுதுகிறார். இந்த நாட்டின் பல உயர்ந்த மனிதர்களும் மற்ற நாடுகளின் பிரதிநிதிகளும் அவரை சந்தித்துள்ளனர் மற்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் தனித்தனியே நேர்முக பேட்டியளிக்கின்றார். அவரை சந்தித்த எவருமே அவருடயை தன்மையால் கவரப்பட்டும் அவருடைய பன்புகள் குறித்து போற்றாமலும் இருந்ததில்லை, அவருடைய பரந்தமனப்பான்மை குறித்தும் அவரது அற்புதமான சிந்தனைகள் குறித்தும் வியக்காமல் இருந்ததில்லை, ஆனால் அவர் எகிப்து நாட்டிற்கு வந்ததின் உண்மையான குறிக்கோள் ஒரு சீதோஷ்ன நிலை மாற்றத்திற்காகவும் அவருடைய உடல்நிலையின் காரணமாகவுமே. இந்த உண்மையையே நாங்கள் உச்சக் குரலில் பரைசாற்றுகின்றோம் மற்றும் அதற்கு வாழ்த்தோ குறைகூறலோ தேவையில்லை.”

எங்கள் நிருபர் எழுதியனுப்பியுள்ளது இதுவே மற்றும் அதை அனுப்பப்பட்டுள்ளவாறே வெளியிடுவதே சிறந்தது என்பது எங்கள் கருத்து.

“அப்துல் பஹாவைப் பற்றி – 1911ல் எகிப்து நாட்டு பத்திரிக்கையில் வந்த செய்தி” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. உங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி அங்கள். மொழிப்பெயர்பு நன்று. இந்த அரிய முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள் அங்கள்.

  2. நம் குருதேவர் அப்துல் பஹாவை நமக்கு முன்மாதிரியான சிறந்த வழிகாட்டியாக கிடைத்தது அரும்பெரும் பாக்கியமே! 1912ல் சிகாகோவில், ‘The Tribunal’ என்ற செய்தித்தாளில்,அப்துல் பஹா,இயேசுநாதரின்மறுவருகைஎனும்பொருளில் வெளிவந்த செய்திக்கு உடனே மறுப்பு தெரிவிக்கும் படி அறிவுறுத்தினார். உலக சமாதானத்திற்கான வழிமுறையைப்பற்றிய விளக்கங்களுடனான அவர் அங்குள்ள தேவாலயத்தில் ஆற்றிய பிரசித்தி பெற்ற சொற்பொழிவைத் தாங்கிய அந்தப் பத்திரிகையின் நகல்கள் வருங்கால சந்ததிகளுக்காக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன!

  3. பரிணாம வளர்ச்சியானது உயிருடன் சம்பந்தமுள்ளதைப் போன்றே,சமயத்திற்கும் (Living Religion)அது பொருந்தும். பஹாய் போதனையை சாதனையாக படைக்கும் தங்களுக்கு இதய பூர்வமான பாராட்டுதலும்,அன்பு வாழ்த்துக்களும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: