இரான் நாட்டில் பஹாய்கள் நிலை: நட்பு கொள்வது சட்டவிரோதமானது!


ஓர் அமெரிக்க நண்பர் எழுதியது.

நட்பு கொள்வது சட்டவிரோதமானது!

வேறுபட்ட சமயத்தை சார்ந்தவர்கள் என்பதனால் ஒரே நாட்டின் மக்கள் ஒருவரோடு ஒருவர் நட்பு கொள்வது சட்ட விரோதமானது எனும் கூற்றை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? அது மட்டுமா அவர்களின் மாடுகள் கூட ஒன்றாக மேய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இப்படியும் ஒரு நாடு!

இரான் நாட்டின் ரப்ஃஸஞ்சான் எனும் நகரில் முஸ்லிம்களோடு நட்பு கொண்டார்கள் எனும் காரணத்திற்காக அங்கு வாழும் பஹாய்கள் மீது தீவைப்பு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. சுமார் 12 பஹாய்களின் கடைகள் தீவைக்கப்பட்டபின், பஹாய்களின் இல்லங்களுக்கு ஒரு எச்சரிக்கை கடிதம் வந்துள்ளது. அதில் அவர்கள் முஸ்லிம்களோடு நட்போ தொடர்போ கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது இவெல் எனும் இடத்தில் பஹாய்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதின் தொடர்பில் வந்துள்ளது. இதே இவெல் கிராமத்தில்தான் பஹாய்களின் மாடுகளும் முஸ்லிம்களின் மாடுகளும் ஒன்றாக மேயக்கூடாது எனும் கிராமத்து சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இவ்வாரம், தங்களுடைய சமய நம்பிக்கைகளுக்காக மட்டுமே சிறையில் வைக்கப்பட்டுள்ள, ஒரு பாவமும் அறியாத அவர்களின் உறவினர்களின் விடுதலைக்காக ஐக்கிய அமெரிக்காவில் வதியும் இரான் பஹாய்கள் நால்வர் வாஷிங்டன் வரவிருக்கின்றனர். இக்கைதிகளில் மூவர் “யாரான் அல்லது தோழர்கள் ” எனப்படும் தேசிய அளவிலாக நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் எனும் முறையில் 10 வரடு சிறை தண்டனை அனுபவிக்கின்றனர் மற்றும் வசதியற்ற இளைஞர்களுக்கு எழுத்தறிவு கல்வி குறித்த இயக்கம் ஒன்றில் பங்காற்றியதற்காக ஒரு இளம்பெண் 4 வருட சிறை தண்டனை அனுபவிக்கின்றாள். இருள் சூழ்ந்த இவ்வருந்தத்தக்க மனித உரிமை சூழ்நிலையை விளக்கும் முயற்சியில், இவ்வுறவினர்கள் பல சந்திப்புகளை நடத்தவிருக்கின்றனர் (அவையாவன: Chair of the House Foreign Affairs Committee, Representative Ileana Ros-Lehtinen; Senator Mark Kirk; Congressman Frank Wolf; as well as officials at the State Department, the U.S. Commission on International Religious Freedom and members of the press.)

சர்வாதிகார கொடுங்கோன்மைச் சூழ்நிலை தழைக்கவேண்டுமானால் — நாட்ஸி ஜெர்மனி இங்கு உடனடியாக ஞாபகத்திற்கு வருகிறது — பொதுப் பார்வையாகப்பட்டது மத்திய அதிகாரத்தினின்று “வேறு”, சாதாரனமாக பலியாடுகளாக பயன்படும் ஒரு சிறுபான்மை சமூகத்தினர் மீது படியவேண்டும். இரான் நாட்டில், அவர்களுடைய மாடுகள் உட்பட, பஹாய்களையும் இரான் நாட்டின் பிர பிரஜைகளையும் பிரித்திட, பஹாய்களை ‘மொஹாரெப்’ அல்லது ‘கடவுளின் எதிரிகள்’ என கூறுவது உட்பட சகலவிதமான வாய்ப்புக்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பஹாய்கள் எவ்விதத்திலும் எதிரிகள் அல்ல; அவர்கள் தங்கள் சமய கோட்பாட்டிற்கு இணங்க எவ்வித முரண்பாடு மற்றும் சச்சரவுகளிலும் ஈடுபடுவதில்லை. 3,00,000 உறுப்பினர்களை கொண்ட பஹாய் சமூகம் இரான் நாட்டின் சிறுபான்மை சமூகங்களிலேயே ஆகப் பெரிய சமூகமாகும். அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுங்கோன்மைகள் இரான் நாட்டையே தற்போது சூழ்ந்துள்ள கடுங்கொடுங்கோன்மைகளையே பிரதிபலிக்கின்றன.

பல முயற்சிகள் செய்யப்பட்டும், கடந்த மூன்று பத்தாண்டுகளாக நட்பு என்பது செழிக்கும் ஒரு நாடாக இரான் நாடு விளங்கவில்லை. அமெரிக்காவிற்கும் இரானிற்கும் இடையே முறிந்துகிடக்கும் தூதரக உறவுகள், நிருபர்கள், பயணிகள், உயர்கல்வி மாணக்கர்கள், மனித உரிமை போராளிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் இதற்கு நிறையவே சாட்சியமளிக்கின்றன. ஆனால் இது நிலைக்கலாகாது மற்றும் என்றும் நிலைத்திருக்கவும் போவதில்லை. இறுதியில் வெறுப்பாற்றல்களை அவற்றைவிட மேலும் வலுவான நட்பாற்றல்களைக் கொண்டு எதிர்ப்பதே இறுதியில் உறுதியான வெற்றியளிக்கும்.

ஆகவே, நாம் நமது சுதந்திரத்தை பயன்படுத்தி இரான் நாட்டின் சுதந்திரத்திற்காக முயற்சிகள் செய்திட உறுதிகொள்வோம். மற்றும், நட்புறவுகள் தடுக்கப்பட்டுள்ள இரான் மற்றும் அது போன்ற அடக்குமுறை நாடுகளின் நிலைக்காக ஈடுசெய்திட நாம் நம் சொந்த நாட்டிலும் புதிய ஆழமான நட்புமுறைகளை உருவாக்கிட நமது சுதந்திரத்தை பயன்படுத்துவோம். நீங்கள் கிருஸ்தவ, யூத, பௌத்த, ஹிந்து, முஸ்லிம், பஹாய் அல்லது நாஸ்திகராக இருந்தபோதிலும், உங்கள் நம்பிக்கைக்கு வேறுபட்ட ஒருவரை மதிய உணவிற்கு அழைத்து செல்லுங்கள் அல்லது அவர்களுடைய வழிபாட்டு இல்லங்களுக்கு வருகைதாருங்கள். மனுக்குலத்தின் எல்லா உறுப்பினர்களிடையே நட்பு மற்றும் ஐக்கியத்தின் பிணைப்புக்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் எனும் தங்களுடைய நம்பிக்கைக்காக தற்போது பத்தாண்டுகால சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் இரான் நாட்டில் துன்புறும் ‘யாரான்’ அல்லது ‘தோழர்கள்’ எனப்படும் சிறைவாசம் அனுபவிக்கும் பஹாய்களுக்கு நீங்கள் அவர்களின் தியாகங்களின் விளைவாக மேலும் பல புதிய நட்புகளை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள் எனும் செய்தி நிச்சயமாக மன ஆறுதலை தரும்.

One thought on “இரான் நாட்டில் பஹாய்கள் நிலை: நட்பு கொள்வது சட்டவிரோதமானது!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: