வாஷிங்டன் — இரான் நாட்டின் சிறுபான்மை சமயத்தினரான பஹாய்களின் தலைமைத்துவ எழுவர் மீது இரான் நாட்டு அதிகாரிகள் மீண்டும் விதித்துள்ள 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை குறித்து ஐக்கிய அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
‘யாரான்’ எனப்படும் இரான் நாட்டின் பஹாய் தலைமைத்துவத்தின் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை மீண்டும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது என லண்டன் நகரில் உள்ள Amnesty International எனப்படும் மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.
“பஹாய் தலைமைத்துவத்திற்கு பிராசிக்கியூட்டர் ஜெனரலின் மறுமுறையீட்டின் விளைவாக அவர்களின் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த இரான் நாட்டிலிருந்து வெளிவரும் செய்திகளால் நாங்கள் பெரிதும் கவலையடைந்துள்ளோம்,” என ஒரு State Department பேச்சாளரான மார்க் டோனர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“பொது மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்பட்டின்கீழ் இது இதுவரை நிகழ்ந்திராத இத்தகைய செயலை ஓர் அத்துமீரலென நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.”
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இரான் நாடு ஏழு பஹாய்களை தலைவர்கள் எனும் முறையில் அவர்கள் வெளிநாடுகளுக்கு வேவு பார்த்தது, உலகில் ஒழுக்கச்சீரழிவை பரப்பியது, இஸ்லாம் சமயத்தை கீழறுப்பு செய்தது மற்றும் பேரெதிரியான இஸ்ரேலுடன் உடனுழைத்தது எனும் அபத்தமான காரணங்களுக்காக அவர்களை 20 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தியது.
இந்த 20 வருட சிறைத்தண்டனையால் எழுந்த அனைத்துலக சமூகத்தின் கண்டனங்களின் விளைவாக அது 10 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது என பிரான்ஸ் நாட்டு பஹாய் சமூகம் அறிவித்தது.
அதிகபட்ச ஷீயா முஸ்லிம் மதத்தினரைக் கொண்ட இரான் நாட்டில் பஹாய்களுக்கு உயர்கல்வி அனுமதிக்கப்படவில்லை, அரசாங்க வேலைகளுக்கு வாய்ப்பில்லை, மற்றும் அவர்கள் நாஸ்திகர்கள் என கருதப்பட்டு 1979 இஸ்லாமிய புரட்சிக்கு முன்னும் சரி அதற்கு பிறகும் சரி அவர்கள் என்றுமே துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளனர்.
1817ல் பிறந்த பஹாவுல்லாவை, கடவுளால் உலகிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இக்காலத்திற்கான அவதாரம் மற்றும் ஆன்மீக ரீதியில் சமயங்கள் அனைத்தும் ஒரே கடவுளிடமிருந்தே வந்துள்ளன மற்றும், மனித இனம் முழுவதும் ஒரே குடும்பம் என்பது பஹய்களின் நம்பிக்கையாகும்.
இரான் நாட்டில் இதுவரை 47 பஹாய்கள் அவர்களுடைய நம்பிக்கைக்காக சிறைவைக்கப்பட்டுள்ளனர் என பஹாய் தலைமைத்துவம் கூறுகிறது.