இடைவிடாது வளரும் இளம் சமயம்: இஸ்ரேலில் பஹாய்


டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்

http://www.time.com/time/world/article/0,8599,2081789,00.html

பாப் அவர்களின் நல்லடக்க திருவிடத்தின் தோட்டங்களுக்குள் நுழைவது ஏதோ ஒரு மாய உலகில் நுழைவது போன்றிருக்கும். அத் தோட்டங்கள் ஹைஃபா நகர மையத்திற்கு உயரே மலையின் உச்சி வரை படிப்படியாக உயர்ந்து செல்கின்றன. படித்தொடரின் நடுமத்தியில், மத்தியதரைக் கடலின் பிரகாசமான ஒளி 150 தோட்டக்காரர்களின் குறிப்பான கைவண்ணத்தோடு சேர்ந்து, ‘ஜானி டெப்பின்’ ‘அலிஸ் இன் வொன்டர்லேன்டின்’ தயாரிப்பாளர்கள் உருவாக்க நினைத்த தெளிவு நிறைந்த ஆழம் மற்றும் கண்ணைப் பறிக்கும் வர்ணஜாலமாக, காட்சியளிக்கின்றது. இந்த நடுமையத்தில்தான், வானவெளியில் மிதந்துகொண்டிருக்கும் எல்லையற்ற ஒளிக்கடலோ என நினைக்கத் தூண்டும் பூரணத்துவம் நிறைந்த பூங்கா ஒன்றின் நடுவில் நல்லடக்க ஆலயத்தின் பளிச்சிடும் பொண்மாடம் வீற்றிருக்கின்றது. இது ‘எல்லாமே எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே அமைக்கப்பட்டுள்ள கருத்துநிறைந்த ஒரு பூங்கா போன்றதாகும்’ என கோப்பன்ஹேகன் நகரின் ஜோனாஸ் மேஜர் எனும் 20 வயதான மானவர் கூறுகின்றார். ‘ஆனால் இரு ஒரு புனிதத்தலமாகும். அது வேறு ஒரு கதை’.

அக்கதை பஹாய் சமயம் பற்றியது; அது 1800ம் ஆரம்ப ஆண்டுகளில் ஆரம்பித்து அதன் ஆன்மீக மையஸ்தலம், அக்கால பேரரசு சார்ந்த ஒரு சூழ்நிலையால், இங்கு இன்று இஸ்ரேல் என வழங்கப்படும் நாட்டில் அமைந்துவிட்டது. ஹைஃபா நகரில் உள்ள இந்த நல்லடக்க புனித இடம் “பாப்”, அல்லது “திருவாசல்” அவர்களின் நல்லடக்கத்தலத்தை குறிக்கின்றது. “பாப்”, அல்லது “திருவாசல்” எனப்படும் இந்த அடைமொழி ஒரு கடவுளின் அவதாரம் எனும் முறையில் சையிட் அலி முகம்மது அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயராகும். இவர் இரான் நாட்டின் தென்மேற்கில் உள்ள பூந்தோட்டங்கள் நிறைந்த ஷிராஸ் நகரில் பிறந்தவராவார். இவர் தமக்குப் பின் தோன்றவிருக்கும் ஒரு மாபெரும் அவதாரத்தை முன்னறிவித்து அதே வேளை ஆண் பெண் சமத்துவம் மற்றும் வன்முறை தவிர்த்தல் போன்ற தமது சமயத்தின் கோட்பாடுகளையும் அறிவித்தார். பாப் அவர்கள் ஒரு சமய முறன்பாட்டாளராக இரான் நாட்டின் சமயகுருக்களால் கொலைசெய்யப்பட்டார் மற்றும் அவரது நல்லுடல் அவரது விசுவாசிகளால் மீட்கப்பட்டு பல பத்தாண்டுகாலங்களாக ஒவ்வோர் இடமாக இரகசியமாக மறைத்துவக்கப்பட்டது.

பாப் ‘அவர்களின் பூதவுடலில் இறுதி நல்லடக்க ஸ்தலம் பாப் அவர்கள் தாம் எவருக்கு முன்னோடியாக தோன்றினாரோ அந்த கடவுளின் அவதாரமான ‘பஹாவுல்லா’ அல்லது ‘கடவுளின் ஓளி’ என பெயர்கொண்ட மிர்ஸா ஹுஸெய்ன் அலி அவர்களால் தீர்மானிக்கப்பட்டது. பஹாவுல்லா பிரபு வம்சத்தவர் எனும் காரணத்தினால் மரண தன்டனைக்கு ஆளாகவில்லை ஆனால் நாடுகடத்தப்பட்டார். இந்த நாடுகடத்தலின் முடிவில் அவர் ஹைஃபா நகரின் வலைகுடாவிற்கு எதிரேயுள்ள ஒட்டமான் அரசின் ஆக்கோ நகர சிறைசாலைக்கு கொண்டுவரப்பட்டார். பாப் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மலைச்சரிவை அவரே தேர்ந்தெடுத்தார். ஆனால், ஆக்கோ நகரில் உள்ள பஹாவுல்லாவின் நல்லடக்கத்தலத்தை நோக்கியே பஹாய்கள் தங்கள் பிரார்த்தனையின் போது முகம் திருப்புவர்.

பஹாய் சமயத்தை விளக்கிடும் போது, ‘நீங்கள் கூறுவதெல்லாம் பொது அறிவுதானே என மக்கள் கூறுவர்’, என பஹாய் உலக நிலையம் என வழங்கப்படும் ஹைஃபா நகரின் வளாகத்தில் தொடர்புத்துறை இயக்குனராக பணிபுரியும் திரு ரொப் வேய்ன்பர்க் கூறுகிறார். “பஹாய் சமயம் ஒரு கடவுள் கோட்பாடு அடிப்படையிலான சமயம். அது சமயங்கள் அனைத்தையும் அரவணைத்து, அவற்றின் பொதுவான மையக் கோட்பாடுகளை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் மேம்படுத்துகிறது. அதாவது, கடவுள் காலங்காலமாக உலகிற்கு தமது அவதாரங்களை அனுப்பி மனுக்குலத்திற்கு அறிவொளி வழங்கிவந்துள்ளார். ஆபிரஹாம், ஸோரோவேஸ்ட்டர், இயேசு, முகம்மது மற்றும் கிருஷ்னர், புத்தர் போன்றோர் இத்தகைய அவதாரங்கள் ஆவர். பாப் அவர்களும் பஹாவுல்லாவும் இக்காலத்திற்கு ஏற்ற ஒரு திருமுறையை கொணர்ந்துள்ளனர். மனிதர்கள் இருக்கும் வரை அவர்களிடையே அவதாரங்கள் தோன்றி அவர்களை மேம்பாட்டின் அடுத்த கட்டத்திற்கு வழிகாட்டுவர்,” என அவர் மேலும் கூறுகிறார்.

பஹாய் சமய நம்பிக்கையின் மையக்கோட்பாடுகளாக, சமத்துவம், அனைத்துலக கல்வி, சமூக நீதிமுறை மற்றும் ஏழைகளுக்கிடையிலும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பது. பஹாய்கள் ஒருதாரக் கொள்கை, திருமணம், குடும்பம், பொதுச் சேவை, அறிவியல் மற்றும் சமயம் (இவை இரண்டுமே மெய்ம்மையின் இரு விதமான வெளிப்பாடுகள்) ஆகிய கோட்பாடுகளை ஆராதிப்பவர்கள். இதில் சமயகுருமார்கள் கிடையாது, ஒவ்வொரு தனிமனிதரும் தமது ஆன்மீக மேம்பாட்டிற்கு தாமே பொறுப்பாளர் ஆவார். உலகில் உள்ள 60 இலட்சம் விசுவாசிகள் ஒன்றுகூடி தமது உள்ளூர் மற்றும் தேசிய ஸ்தாபனங்களை தேர்வு செய்யும்போது அது இரகசிய வாக்கெடுப்பு மூலம் வேட்பாளர் பட்டியலோ முன்மொழியப்பட்ட வேட்பாளர்களோ இன்றி நடைபெறும். ஒவ்வொரு வாக்காளரும் தகுதியான ஒருவரின் பெயரை எழுதுவார்கள்.

இந்த நல்லடக்கத் திருவிடத்தின் பின்புறத்தில் ஒரு வருகையாளர் மையம் உள்ளது. (குழுவாக வருவோருக்கு மட்டும்) இவ்விடத்தில், பஹாவுல்லா தமது திருவெளிப்பாடு குறித்த திருவாக்குகளை வெளியிடும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கிருக்கலாக எழுதப்பட்ட ஏடுகள் உட்பட, (பஹாய்) சமயத்தின் ஆரம்பகாலம் சம்பந்தப்பட்ட பல பழம்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மற்றும் பஹாய் சமயம் தனது பார்வையை மட்டுப்படு்த்திக்கொள்ளவில்லை. வெய்ன்பர்க்கிற்கு எதிரேயுள்ள ஒரு காரியாலயத்தில் பின்வரும் அறிக்கை ஒரு வெண்பலகையில காணப்படுகிறது: :எங்கள் கடமை: …(அ) மனிதத் தனிதன்மை (அதுவேயாம்தன்மை) …(ஆ) மனித உறவுமுறைகள் (பற்றிய கற்பது).”

இருந்தபோதும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. பெரும்பாலும் இவை இரான் நாட்டிலேயே ஏற்படுகின்றன. இரான் நாடு தான் பஹாய் சமயத்தின் பிறப்பிடம் என்பதை கொண்டாடவில்லை, அதற்கு வெகு மாறாக பஹாய்களை மதத் துரோகிகளாக கருதுகிறது. பிரச்சினை பஹாய் சமயத்தின் கோட்பாடுகள் குறித்து அல்ல, ஆனால், முகம்மது நபி அவர்களுக்கு பிறகு கடவுள் வேறொரு அவதாரத்தை பூமிக்கு அனுப்பியுள்ளார் என்பது குறித்தே பிரச்சினை எழுந்துள்ளது. இஸ்லாம் மதத்தினர் முகம்மது அவர்கள் கடவுளின் இறுதியான தூதர் . — தீர்க்கதரிசிகளின் முத்திரை– என நம்புகின்றனர். 1979 புரட்சியின் பயனாக முல்லாக்கள் ஆட்சியில் நடந்த கொலைகள் மற்றும் கும்பல் அராஜகத்திற்கு பிறகு இரான் நாட்டில் வாழும் 3 இலட்சம் பஹாய்கள் பகிஷ்கரிப்பிற்கும் கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளனர். 2008ம் ஆண்டு முதல் ஏழு பஹாய் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வேவு பார்த்தல், மற்றும் நாட்டிற்கு எதிரான பிரச்சாரம் என பல “ஜோடிக்கப்பட்ட” குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டுள்ளனர் என மனித உரிமை கண்கானிப்பு கூறுகிறது. அதிகாரபூர்வமான ஒரு திட்டமாக அவர்களின் வளர்ச்சியை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, பல்கலைக்கழகம் புக விரும்பும் பஹாய் இளைஞர்கள் தங்களின் சமய நம்பிக்கையை மறைக்கவேண்டும், அல்லது, இரகசியமாக இயங்கும் ஒரு பல்கலைகழகத்தில் தங்கள் வாய்ப்புக்களை தேடவேண்டும், ஏனெனில் இரான் நாட்டில் பஹாய்கள் உயர்கல்விக்கு செல்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.

இவற்றிற்கு அப்பால், தற்போது 11,790 தங்கத் தகடுகளால் மறுசீர் செய்யப்பட்டுள்ள “கார்மல் இராணி” எனப்படும் பாப் அவர்களின் நல்லடக்க மாடத்தின் பிரகாசம் கண்ணைப் பறிக்கின்றது. இந்த நல்லடக்க கட்டிடம் எந்த ஒரு புனிதபயண நகரும் காணாத வகையில் நகரை அலங்கரித்தும் கம்பீரமாக வீற்றும் உள்ளது. இராக் நாட்டில் உள்ள நஜாஃப் மற்றும் கர்பிலா மற்றும் பிரான்ஸ் நாட்டின் லூர்ட்ஸ் நகர்களைப் போன்று பல்லாயிரக்கணக்கில் இங்கு புனிதப்பயணிகள் வரவில்லையெனினும், சென்ற வருடம் சுமார் 760,000 வருகையாளர்கள் வந்திருந்தனர். இவர்கள் பஹாய்களைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம். இவர்கள் யார் என்பதை அவர்கள் அனிந்திருக்கும் நீல நிற அடையாள பெட்ஜுகளின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். இது இவர்கள் அனைவரும் பக்கத்தில் உள்ள, கிரேக்க நாட்டின் பார்த்தனன் (parthenon)வடிவில் அமைக்கப்பட்டுள்ள பழம்பொருள் காட்சியகத்திற்குள் செல்ல அனுமதியளிக்கின்றன.

“நாங்கள் இஸ்ரேல் நாட்டின் ஒற்றர்கள் என இரான் நாடு கூறுகிறது. ஆனால் நாங்கள் இஸ்ரேல் நாடு தோன்றுவதற்கு 80 வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு இருந்துள்ளோம். எங்கள் புனிதஸ்தலம் ஹைஃபா நகரில் இருப்பது தற்செயலானதே,” என வேய்ன்பர்க் கூறுகிறார். இருந்தும், மற்றவகையில் இது பொருத்தமானதே. சான் பிரான்சிஸ்கோ நகரை பிரதிபலிக்கும் மலைச்சரிவான கரையோரப் பகுதியுடனும், எவ்வித தடங்கலும் இல்லாமல் இந்த நகரின் பூத மற்றும் அரபு மக்கள் பழகுவதும், இஸ்ரால் நாட்டின் நகர்களிலேயே ஹைஃபா நகரே அதிக சர்வதேசமுகமாக தோற்றமளிக்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் பாப் அவர்களின் மாடத்தை மூடியிருந்து காவி நிற சாக்குத் துனி அகற்றப்பட்டு மலைச்சரிவு மீண்டும் பொண்வண்ணம் கொண்டு பிரகாசித்தவுடன், “நல்லடக்க திருவிடம் ஹைஃபா நகரின் அமைப்பின் மீது முழு தாக்கம் செலுத்துகின்றது,” என ஹைஃபா நகர மேயர் யோனா யாஹவ் கூறினார். “இது சகிப்புத்தன்மை மற்றும் பல்கலாச்சாரமான இந்த நகரத்தின் மூலமையமும் அடையாளச்சின்னமும் ஆகும்,” என அவர் மேலும் கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: