டெஸ்மன்ட டுட்டு மற்றும் யோஸே ராமொஸ்-ஹோர்த்தா பஹாய் கல்வியாளர்களை விடுவிக்கவேண்டும் என தாங்களும் குரல் கொடுக்கின்றனர்


(Desmond Tutu and Jose Ramos-Horta join calls for release of Baha’i educators)

26 செப்டம்பர் 2011

நியூ யார்க் — “இரான் நாட்டில் பஹாய் கல்வியாளர்கள் பலர் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்படும் அதே வேளை, இரண்டு நோபல் பரிசாளர்கள் , அந் நாட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை “ஐரோப்பாவின் இருள்காலத்தோடு” அல்லது “ஸ்பேய்ன் நாட்டின் வன்மத விசாரனைகளோடு” ஒப்பிட்டு அதனை வன்மையாக கண்டித்து பேசியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க கேப் டவுனின் ‘ஏங்லிக்கன் ஆர்ச்பிஷப் எமரிட்டஸ்’ திரு டெஸ்மன்ட் டுட்டு, மற்றும் கிழக்கு தீமோர் நாட்டின் அதிபரான திரு யோஸே ராமோஸ்-ஹோர்த்தாவின் கருத்துக்கள், ‘ஹஃப்பிங்டன் போஸ்ட்டில்’ பிரசுரிக்கப்பட்ட கலைக்கழகத்தினருக்கான ஒரு கடிதத்தில் “அறிவுக்கெதிரான இரான் நாட்டின் யுத்தம்” எனும் தலைப்பில் வெளிவந்துள்ளன.”

அக்கடிதத்தில், தங்களின் கல்விசார்ந்த நடவடிக்கைகளுக்காக நீதிமன்ற விசாரனைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ள ஏழு பஹாய்களின் மீதான குற்றச்சாட்டுகளை இரத்து செய்து அவர்களை நிபந்தனைகளின்றி விடுதலை செய்யுமாறு அவ்விருவரும் கோரியுள்ளனர்.

“கடந்த சில நூற்றாண்டுகளில் தகவல்கள் கிடைப்பதின் அதிகரிப்பு, துரிதமான கருத்துப் பரிமாற்றம், மற்றும் உலகின் பெரும் பகுதிகளில் கிடைக்கும் அனைத்துலக கல்வி வசதிகள் போன்றவை தவிர்த்து ஆக்கக்கூறுகள் வேறு எவற்றினாலும் மனிதகுலத்தின் துரித மேம்பாடு தூண்டப்படவில்லை,” என அவர்கள் எழுதியுள்ளனர்.

“ஆகவே, இருபதாம் நூற்றாண்டின் சர்வாதிகாரிகளும் கொடுங்கோலர்களும் தங்கள் மக்களுக்கு கிடைக்கக்கூடிய கல்வி அல்லது தகவல்களை தடை செய்திடுவதன் மூலம் அவர்களை கீழ்ப்படுத்திட முயல்வது சற்று திடுக்கிட செய்வதாகவே இருக்கின்றது.”

“நீண்டகாலத்தை பொருத்த வரை இது பயனற்றது மட்டுமல்லாமல், அவர்கள் வாழும் இக்காலத்தின் நிலை அவர்களை பீதியுறவும், அவர்களிடையே உள்ள புதிய சிந்தனையாளர்களை கண்டு அச்சம் கொள்ளவும் செய்துள்ளது என்பதுபோல் தோன்றுகின்றது.”

“எவ்வித அரசியல் நோக்கங்களும் அற்ற, சமயங்கள் எல்லாவற்றின் ஒருமைத்தன்மையை உணர்ந்த, இரான் நாட்டின் பஹாய் சமயத்தின் உறுப்பினர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை தடை செய்வதே இத்தகைய பீதியுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாக இருக்கின்றது,” என அக்கடிதம் மேலும் குறிப்பிடுகின்றது.

மூல கட்டுரை