இரவு வானில் புதிய ஒளிப் பிம்பங்களின் தோற்றம்
புதிய திருநாளைப் பிரகடனம் செய்யும் ஞானியர் கூட்டம்
சிசு ஒன்று உலகில் பிறந்தது
உற்சாகமுற்ற இதயங்களைக் கவர்ந்தது
எனும் இவ்வழகிய மற்றும் பழக்கமான உருமாதிரி கிருஸ்துவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; கடவுளின் அவதாரங்கள் என பஹாய்கள் குறிப்பிடும் உலகப்பெரும் சமயங்களின் ஸ்தாபகர்களின் பிறப்போடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள இவ்விஷயத்தின் சில அம்சங்கள் வரலாற்றில் பலமுறை மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. மேலே விவரிக்கப்பட்டுள்ள அடையாளங்கள் கடவுளுக்கும் மானிடத்திற்கும் இடையே தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் ‘காதல்’ கதையின் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகும்.
பஹாய் எழுத்துக்களின்படி, கடவுளின் ஒரு புதிய அவதாரம் தோன்றும்போது, பொருளுலகையும் ஆன்மீக உலகையும் நிலைமாற்றம் செய்யும் புத்தம்புதியதொரு ஆற்றல் உலகில் விடுவிக்கப்படுகின்றது. இது ஒரு தினசரி நிகழ்வல்ல: சுமார் 500லிருந்து 1000 வருடங்களுக்கு ஒரு முறை மானிடத்திற்கு, குறிப்பாக அந்நாளில் தேவைப்படும் தொன்மையான விவேகங்கள், புதிய போதனைகள் இரண்டையும் கொணரும் புதிய அவதாரங்கள் கடவுளால் உலகிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்பது பஹாய்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையாகும்.
கடவுள் நம் மீது கொண்டிருக்கும் அன்புக்கு முடிவில்லை என்பதாலும் நாம் நிலையாக வளர்கின்றோம் மற்றும் மாறிவருகின்றோம் என்பதாலும், காலத்திற்கு காலம் நமக்கு ஒரு புதிய தெய்வீக வெளிப்பாடு தேவைப்படுகிறது: இத்தகைய திருவெளிப்பாடு குறித்த செயல்பாட்டுக்கு முடிவே கிடையாது என்பது பஹாய் சமூகத்தினரின் நம்பிக்கையாகும்.
பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, இத்தகைய கடவுள் அவதாரங்களுள் ஒருவராவார். அவர் 12 நவம்பர் 1817ல் தெஹரான் நகரில் பிறந்தார். உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பஹாய்கள் வருடந்தோரும் அவருடைய பிறப்பை கொண்டாடுகின்றனர்.
ஒரு புதிய அவதாரத்தின் தோற்றத்தை ஓர் அழகிய காதல் கதையின் ஓர் அத்தியாயமாக நாம் கருதக்கூடும், மற்றும் பார்க்கப்போனால், கடவுளுக்கும் மானிட இனத்திற்குமிடையிலான இத்தகைய அன்பான உறவு குறித்து பஹாய் போதனைகளில் பல தருணங்களும் உருவகங்களும் நிறையவே உள்ளன. கடவுள் நம்மீதான அன்பை உணர்ந்திருந்தார் எனவும் ஆகவே நம்மைப் படைத்தார் எனவும் அவை குறிப்பிடுகின்றன: அதனால், நாம் அவருடைய அன்பிற்கு மறுமொழியாக அவர் மீது பிரதி அன்பு செலுத்தும்போது, நமது ஆன்மாக்கள் “உயிர் ஆவியினால்” நிறப்பப்படுகின்றன. அவர் நம்மீது வைத்துள்ள அன்பினால், அவர் நாம் இவ்வுலகில் செழிப்புடன் வாழ தேவைப்படும் அனைத்தும் இருப்பதை உறுதிசெய்துள்ளார்.
சிருஷ்டிகர்த்தாவின் குரலில் பேசும் பஹாவுல்லா, பின்வருமாறு கூறுகிறார்:
“வள்ளன்மையின் மைந்தனே! வெறுமை என்னும் கழிவுப் பொருள்களினின்று, எனது கட்டளை என்னும் களிமண்ணைக் கொண்டு, உன்னைத் தோற்றுவித்தேன்; உனது பயிற்சிக்காக, உளதாம்பொருளின் ஒவ்வோர் அணுவையும், அனைத்துப் படைப்புப் பொருள்களின் சாரத்தையும் நியமித்துள்ளேன். அவ்வண்ணமே, நீ உனது தாயின் கருப்பையிலிருந்து வெளிவருவதற்கு முன்பே, உனக்காக அன்னையின் இரண்டு மார்புகளில் பாலையும், உன்னைக் கண்காணிக்கக் கண்களையும், உன்னிடம் அன்பு காட்ட உள்ளத்தினையும் நியமித்தேன்.”
நாம் நமது ஆன்மீக அடையாளத்தை தன்வசமாக வைத்துள்ள அதே வேளை பொருள் உலக்கின் பலன்களை முழுமையாக அனுபவித்திட நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்: “மனிதர்களே, இறைவன் உங்களுக்கு அனுமதித்துள்ள நற்பொருள்களை உட்கொள்ளுங்கள்; அவரது அரிய வள்ளன்மைகளை இழக்கச் செய்துகொள்ளாதீர்.” இவை கடவுள் தமது அன்பினால் நமக்காக தேர்ந்தெடுத்துள்ள விஷயங்களுள் சிலவாகும்.
இக்கதையில் நமது பங்கானது கடவுள் மீது பரஸ்பரம் அன்பு செலுத்துவதாகும். பஹாவுல்லா, மறுபடியும் தெய்வீகச்சித்தத்தை வெளிப்படுத்தி, இப்பரிமாற்றத்தில் நமது மறுமொழியின் முக்கியத்துவத்தை அடிக்கோலிடுகிறார்: “உயிருருவின் புத்திரனே! என்னை நேசிப்பாயாக, அதனால் யான் உன்னை நேசிக்க இயலும். நீ என்னை நேசிக்காவிடில் எனதன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது. ஊழியனே, இதனை நீ அறிவாயாக.”
தெய்வீக போதனைகளின்பாலான நமது கீழ்ப்படிதலுக்கு அன்பே தூண்டுகோலாக இருக்கவேண்டும்: “எமது அழகின் மீதுள்ள அன்பின் பொருட்டு எமது கட்டளைகளைக் கடைப்பிடிப்பாயாக.” நாம் கடவுள் மீது பிரதி அன்பு செலுத்தும் போது, அப் பரஸ்பர செயலானது, ஒரு ஊசலியைப் போல் அது முன்பிருந்த இடத்திற்கே மீளவும் திரும்பி, நமது வாழ்வில் தன்மைமாற்றத்தை உந்தக்கூடிய வற்றாத ஊக்கசக்தியை உற்பத்தி செய்கிறது.
நமது மனம், இதயம் ஆகியவற்றின் ஈடுபாடு மட்டுமல்ல, ஆனால் நமது செயல்களையும் நடவடிக்கைகளையும் ஈடுபடுத்தும் செயல்பாடு மிக்க ஒரு வகையான அன்பின்பால் நாம் அழைக்கப்படுகிறோம். பஹாவுல்லாவின் திருமகனாராகிய அப்துல் பஹா, அன்பானது தனது மெய்ம்மையை வெறும் வார்த்தைகளால் அல்லாமல் செயல்களாலேயே வெளிப்படுத்துகிறது – வார்த்தைகளுக்கு தனியே ஆற்றல் கிடையாது,” என நமக்கு நினைவூட்டுகிறார். பஹாவுல்லா, “சொற்கள் அன்றி செயல்களே உங்கள் அனிகலனாக இருக்கட்டும். இத்தகைய செயல்கள் அன்போடு நெருக்கமாக தொடர்புகொண்ட, நியாத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும். நியாயம் என்பது ஒரு வலிமைமிகு ஆற்றலாகும்…. அன்பு மற்றும் கொடைகளின் பதாகை ஏந்தி,” என பஹாவுல்லா கூறுகிறார்.
“அன்பின் ஆற்றலின் வழியிலேயே உலக விவகாரங்கள் நிர்வகிக்கப்படக்கூடும்,” என்பதே தமது வெளிப்பாட்டின் குறிக்கோளாகும் என அவர் குறிப்பிடுகின்றார். கடவுளின்பால் நமது அன்பை நமது தூய்மைமிகு வாழ்க்கை, மனிதநலனிற்காக தியாகங்கள் புரிந்திடுவது, உலகெங்கும் நீதியை பரப்பிட முயலுவது, ஆழ்மெய்நிலையின்பால் ஈடுபாடு ஆகியவற்றின் வாயிலாக வெளிப்படுத்துகின்றோம்.
கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பிற்கான இப்படிப்பட்ட ஒரு மகத்தான சூழ்நிலையில், இத்தகைய உறவில் நாம் ஈடுபடலாமா வேண்டாமா, அவர்மீது அன்புகொள்ளலாமா வேண்டாமா, மறுமொழியளிக்கலாமா வேண்டாமா என்பவற்றை நமது விருப்பத்திற்கே விட்டுவிட்டார். நாம் அவரை புறக்கனிக்கலாம், திட்டலாம் அல்லது ஆராதிக்கலாம். இத்தகைய விருப்ப சுதந்திரம் நமது செயல்களின் விருவிருப்பு மற்றும் ஆற்றலை அதிகரிக்கின்றது.
பஹாவுல்லா சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, வெறுங்கால்களில், தலைப்பாகையில்லாமல், நியாவரானிலிருந்து தெஹரான் நகர் வரை வலுக்கட்டாயமாக நடத்திச் செல்லப்பட்ட போது வழியில் அவர் சந்தித்த கலகக்கும்பல்கள், இயேசு நாதர் சிலுவையை சுமந்து தன்னந்தினியே நடந்து சென்றபோது கும்பல் எவ்வாறு ஏளனக்கூச்சிலிட்டதோ அதே போன்று பஹாவுல்லாவைப் பார்த்தும் ஏளனக்கூச்சலிட்டது. ஆனால், கலகக்கும்பலின் செயல்களெனும் பேரிருள் – இத்தெய்வீக ‘காதல்’ கதையில் நமது பங்கை நாம் நல்லமுறையில் ஆற்றிடும்போது –நம்முடையதையும் சேர்த்து பிறரின் நம்பிக்கை எனும் பிறங்கொளியை மேலும் அதிகமாகவே பிரகாசிக்க செய்கின்றது.
http://www.huffingtonpost.com/laura-weinberg/bahai-revelation-divine-love-story_b_1086896.html