1 டிசம்பர் 2011
http://news.bahai.org/story/870
ஹைஃபா, இஸ்ரேல் — பலாவ் குடியரசின் அதிபர் பஹாய் உலக நிலையத்திற்கு அதிகாரபூர்வ வருகையளித்துள்ளார்.

அதிபர் ஜான்ஸன் தோரிபியோங், அவரின் மனைவி திருமதி வலேரியா தோரிபியோங் இருவரும் பஹாய் உலக நீதி மன்றத்தின் உறுப்பினருள் ஒருவராகிய திரு ஸ்டீஃபன் ஹால், மற்றும் அவருடைய மனைவி திருமதி டைஸி ஹால் அவர்களால், 25 நவம்பர் நாளன்று வரவேற்கப்பட்டனர். வரவேற்பு குழுவில் உடன் இருந்தவர்களுள் அனைத்துலக போதனை மையத்தின் திருமதி ஸெனைடா ராமிரேஸும் அடங்குவார்.
பிலிபீன்ஸ் நாட்டிற்கு சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில், பசிஃபிக் சமுத்திரத்தில் உள்ள பலாவ் தீவு உலகின் மிகப் புதிய சுதந்திர நாடுகளுள் ஒன்றாகும். பஹாய் உலக நிலையத்திற்கான இந்த வருகைக்கு அதிபர் தோரிபியோங் அவர்கள் இஸ்ரேலுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருந்தபோது தாமே விரும்பி கோரிக்கை விடுத்திருந்தார்.
உலக நீதி மன்ற கட்டிடத்தில் அளிக்கப்பட்டிருந்த ஒரு வரவேற்பு நிகழ்வின் போது, திரு ஹால் அதிபருக்கு, ‘ஹைஃபா மற்றும் ஆக்கோவில் உள்ள பஹாய் திருமாடம் மற்றும் பூங்காக்கள்’ எனும் நூலை வழங்கினார். படிகக்கல்லில் லேஸர் கதிர்களால் வரையப்பட்ட பாப் அவர்களின் திருமாடத்தை திருமதி தோரிபியோங்கிற்கு நினைவுச்சின்னமாக வழங்கப்பட்டது.
“சட்ட நிபுனரான அதிபர், நீதி குறித்த பஹாய் போதனைகள்பால் மதிப்புரைத்தார்,” என வரவேற்பு குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதியான கேர்ன் விஸ்மன் கூறினார்.
சொற்பொழிவுகளுக்குப் பிறகு, பலாவ் தீவின் நீதி மந்திரியான, திரு ஜான் கிப்பன்சையும் ஹாஃபா நகராட்சியின் உறுப்பினர்களையும் உள்ளடக்கியிருந்த குழுவினர் பாப் அவர்களின் திருமாடத்திற்கும் அதனைச் சுற்றியிருந்த படித்தள பூங்காக்களுக்கும் வருகையளித்தனர். பூங்காக்கள் குறித்து திருமதி தோரிபியோங் பெரிதும் கவரப்பட்டார். அவர் நாட்டின் முதல் பெண்மனி எனும் முறையில், தமது நாட்டை அழுகுபடுத்திட நிறைய முயற்சிகள் எடு்த்துள்ளார்.
“பஹாய் சமயத்தின் சாரம், பண்பியல்பு, வரையெல்லை மற்றும் பரிமானத்தை ஒரு நாட்டின் தலைவர் நேரில் கண்டு இப்புனிதஸ்தலத்தின் அழகு மற்றும் பெருமை பற்றி பெரும் மரியாதையுடன் தாமே உரைப்பது வெகுவாக மனதிற் பதியும் ஓர் அனுபவமாகும்,” என்றார் திரு விஸ்மன்.