பஹாய்: 21ம் நூற்றண்டின் சமயம்


Rob Sobhani
CEO, Caspian Group Holdings
http://www.huffingtonpost.com/rob-sobhani/bahai-21st-century-faith_b_1065829.html

என் வலதுபுறம் நிற்பவர் மாஸ்கோ நகரிலிருந்து வந்திருக்கும் ஓய்வூதியர்.இவருடைய தந்தை இரண்டாம் உலக யுத்தத்தில் ஈடுபட்டவர். என இடதுபுறம் இருப்பவர் தாஸ்மேனியா நாட்டிலிருந்து தமது மனவி மற்றும் இரு மகள்களோடு வந்திருக்கும் கட்டிடக்கலைஞராவார். என் பின்புறம் இருப்பவர் ஒரு முன்னனி எனர்ஜி வணிகநிறுவனத்தின் தொழில்நுட்ப அலுவலர். என் முன்னால் நிற்பவர் உகான்டா நாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு பள்ளி ஆசிரியர். இப்பிரகாசமான அக்டோபர் மாதத்தின் ஒரு நாளின் போது இவர்களையும் உலகம் முழுவதிலிமிருந்து பலரையும் இ்ங்கு வரவழைத்திருப்பது அவர்கள் உறுதியாக நம்பிக்கைக்கொண்டிருக்கும் கோட்பாடுகளே. அவற்றில் முன்னனியாக இருப்பது மனிதனின் ஒருமைத்தன்மை குறித்த நம்பிக்கையாகும். 14ம் நூற்றாண்டின் கவிஞர் சா’ஆடியின் உணர்வில், “மனித இனம் யாவுமே ஒரே கிளையிலிருந்து உதித்ததாகும்,” இக்கூட்டம் பன்மைத்தன்மையில் ஒருமைத்தன்மையை கண்டது. ருஷ்யர்கள், மெக்சிகர்கள், ஆஃப்ரிக்கர்கள், அராபியர்கள், இஸ்ரேலியர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், மற்றும் ஆஸ்த்திரேலியர்கள் அனைவரும் தங்கள் பல்வகைத்தன்மையில் ஒரு பொதுத்தன்மையை கண்டனர்: நாம் அனைவரும் நமது ஒருமைத்தன்மையில் கட்டுண்டிருக்கின்றோம் எனும் நம்பிக்கை.தேசங்களுக்கிடையில் நிலவும் இனத்தப்பெண்ணங்களை ஒழித்திட இந்த நம்பிக்கை நல்ல வழிகளில் ஒன்றாகும் என்பது என் எண்ணம்.

‘அனைத்துலக கல்வி’யென்பது உலகம் முழுவதிலிமிருந்தும் வந்துள்ள இப் பலவண்ணமான கூட்டத்தினர் பகிர்ந்துகொள்ளும் மற்றொரு நம்பிக்கையாகும்: கல்வி என்பது ஓர் அடிப்படை மனித உரிமையும் உலகின் அதிபெரும் சமப்பியும் ஆகும் எனும் ஒரு நம்பிக்கை. கோஸ்ட்டா ரீக்கா நாடு ஐக்கிய அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேறிகளுகளுக்குப் பதிலாக கம்ப்யூட்டர் சில்லுகளை ஏற்றுமதி செய்கிறது என்றால் அதற்கு காரணம் அந்த நாடு கல்வியில் முதலீடு செய்திருப்பதாகும். நாடுகள் குறைவான மேம்பாடு குறித்த சவாலை எதிர்நோக்கும்போது கல்வியாற்றலில் மேலும் அதிக முதலீடு செய்வதே வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் திறவுகோலாக இருக்கும். தாஸ்மேனியா நாட்டின் கட்டிடக்கலைஞர் ஆன்களும் பெண்களும் சமமாக கல்வியறிவு பெறவேண்டும், குறிப்பாக, ஒரு குடும்பம் வெகு குறைந்த வருமானமே கொண்டதாக இருப்பின் அக்குடும்பத்தின் பெண் உறுப்பினரு்ககே கல்வியளிக்கப்பட வேண்டும், ஏனெனில் குழந்தைகளின் உருபெறும் காலத்தில் பெண்களே முக்கிய பங்காற்றுகின்றார்கள் என கூறியது என்னை மிகவும் கவர்ந்தது. கல்வியாற்றலுக்கான இந்த முக்கியத்துவம், மெக்சிகோ மற்றும் நைஜீரியா போன்ற நாடுகள் பில்லியன் கணக்கில் தங்கள் பணத்தை வீனடித்ததற்கு பதிலாக தங்கள் எரிபொருள் வருமானத்தை கல்வியாற்றலில் முதலீடு செய்திருக்கலாம். இந்த இரு நாடுகளும் தங்கள் குடிகளின் கல்வியில் நாட்டம் செலுத்தினால் செழிப்பு குறித்த தங்களின் இயல்திறத்தை நன்கு மலரச்செய்யலாம்.

அறிவியலும் சமயமும் ஒன்றாக மேம்பாடு பெற வேண்டும் என்பது அங்கு குழுமியிருந்தோர் பொதுவாக கொண்டிருக்கும் மிகவும் மனதைக் கவரும்  கோட்பாடாகும். சமயத்தோடு சேர்ந்து  அறிவியலின் முக்கியத்துவத்தையும் இந் நம்பிக்கையாளர்கள் ஏற்றுக்கொண்டதன் வழி அவர்கள் தங்கள் நம்பிக்கைமுறைகளிலிருந்து மூட நம்பிக்கையை அகற்றியுள்ளனர். மேலும், ஒரு நவீன உலகில் மூலவுயிரணு ஆய்வு உயிர்களை காப்பாற்றுகின்றது என்பதை பஹாய்கள் உணர்ந்துள்ளபோதிலும் சமய நம்பிக்கைகள் அறிவியல் ஆய்வுக்கு தடங்கலாக அல்லது அறிவியலும் ஆன்மீக அடித்தலத்திலிருந்து பிரிக்கப்படாமல் இருக்கவேண்டும். சுற்றுச்சூழலுக்கும் இதே கோட்பாடுதான் பொருந்துகின்றது. உகாண்டா ஆசிரியர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை கூறினார்: நாம் கடவுள் அருளியுள்ள ஒளியின் ஆற்றலை (சூர்யசக்தியை) கட்டுக்குள் கொண்டுவந்து ஆஃப்பிரிக்கா முழுமைக்கும் மின்னாற்றலை வழங்க முடியுமானால் நாம் அறிவியலையும் சமயத்தையும் மணம்புரிவித்துள்ளோம் எனப்படும்.

நுண்நிலை, அகல்நிலை ஆகிய இரண்டு நிலையிலும் மனுக்குலத்திற்கான சேவை அப்பங்கேற்பாளர்களின் தினசரி வாழ்வின் ஒரு இன்றியமையாக பகுதியாகும். ஒரு பெண்மனி ஐக்கிய அமெரிக்காவில் தமது வசிப்பிடத்திற்கருகே வாழும் லத்தீன அமெரிக்கர்களை விஜயம் செய்து வருகிறார். அங்கு அவரும் பிற இளம் தொண்டினர்களும் அவ் வண்டைச் சமூக இளைஞர்களுக்கு ஆற்றலளிப்பு மற்றும் தங்கள் சமூகத்திற்கு பொறுப்பேற்பது குறித்த பயிற்சிகளை நடத்திவருகின்றனர். பொறுப்பேற்றல் எனும் விஷயத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் என்னை மிகவும் கவர்ந்தது, ஏனெனில் தன்-ஆழ்வு கலாச்சாரத்தில் மூழ்கியும் பிரச்சனைகள் அனைத்திற்குமான பொறுப்பை பிறர்மேல் சாற்றும் இன்றைய உலகில் சுய பொறுப்பேற்பது புத்துணர்வு அளிப்பதாக உள்ளது. மற்றோர் இளம் பெண்மனி ஆஃப்பிரிக்காவில்  பெண்களே உழைத்தும் ஆண்கள் மது அருந்தி தங்கள் மனைவிமார்களை இம்சிக்கும் ஒரு கிராமத்தைப் பற்றிய ஒரு கதையை சொன்னார். இப்பிரச்சனையை தீர்க்க அவர் நுண்நிலையிலான ஒரு திட்டத்தை ஆரம்பித்தார். அதில் ஆண்கள் அனைவரையும் ஒரே ஒரு நாள் மட்டும் குடிக்காமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த முதல் நாளில் அவர்கள் தங்கள் மனைவிமார்கள் கடுமையாக உழைப்பதை உணர்ந்தார்கள். இரண்டாம் நாள் அவர்கள் அனைவரும் கிராமத்திற்கு சென்று மது வாங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டனர் மற்றும் அவர்கள் அதற்கும் கீழ்நப்படிந்தனர். மூன்றாம் நாளுக்குள் போதை சற்று தெளிந்த அந்த ஆண்கள் தங்கள் மனைவிகளுக்கு ஒத்தாசை புரிந்திட தீர்மானித்தனர். அத்திட்டத்தின் முடிவிற்குள் அந்த கிராமத்தின் ஆண்கள் அனைவரும் அங்கிருந்த நிலத்தை சாகுபடி செய்து அதில் பழ மரங்களையும் காய்கறிகளையும் பயிரிட்டு அதன் மூலம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தொடர்தாங்கலான ஒரு பிழைப்பிற்கு வழிவகுத்துக்கொண்டனர்.

ஐரோப்பாவும் ஐக்கிய அமெரிக்காவும் தற்போது எதிர்நோக்கிவரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி குறித்து நான் நினைவூட்டப்படுகிறேன். இதில் “கடுமையாக உழைத்தல் மற்றும் (சமுதாயத்திற்கு) திருப்பிக்கொடுப்பது அதைவிட கடுமையாக இருத்தல்” குறித்த பண்புநலம் பற்றி சிந்தித்தேன். உலகம் முழுவதிலிமிருந்து அங்கு கூடியிருந்தோர், கடுமையாக உழைக்கவேண்டும், சொந்தகாலில் நிற்கவேண்டும், மற்றும் அச்செயற்பாட்டில் வளம்பெறவேண்டும், அதே வேளை முதலாளித்துவத்திற்கு மனசாட்சி வேண்டும் எனும் நம்பிக்கையில் ஒற்றுமைப்பட்டிருந்தனர். உதாரனமாக, தங்களால் பிறகு திருப்பி கட்டப்பட முடியாத அடைமானத்திற்கு கையொப்பமிட ஏமாற்றப்படுவது நெறிமுறை ரீதியில் கண்டிக்கத் தக்கது மற்றும் பொருளாதார நடைமுறைகளை ஒன்றிணைக்கும் அடிப்படை வச்சிரப்பசையை அது அரித்துவிடுகிறது. “எங்கள் சமயம் மனித நற்பண்புகள் அனைத்திற்கும் நம்பகமே அஸ்திவாரம் என கூறுகின்றது,” என மாஸ்கோவிலிருந்து வந்திருந்த ஓய்வூதியர் கூறினார்.

நான் இந்த சமயத்தைச் சார்ந்தவனில்லையெனினும், இத்தகவல்களும் அனைத்துலகான இப் போதனைகளும் இந்த 21ம் நூற்றாண்டிற்கு நிச்சயமாகவே தேவைப்படுகின்றன என எனக்குத் தோன்றியது. இந்த அக்டோபர் மாதத்தில் கார்மல் மலையின்மீது கூடியிருந்தோர் பஹாய் சமயத்தைச் சார்ந்தவர்களாவர்.

http://www.huffingtonpost.com/rob-sobhani/bahai-21st-century-faith_b_1065829.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: