பாத்திரங்களை கழுவுவது எப்படி


குடும்பப்பெண்களின் ஒரு முக்கிய பணி சமையல் செய்வது மற்றும் திரண்டுவிட்ட பாத்திரங்களை சுத்தமாக கழுவுவது. பின்வரும் குறும்படம் பாத்திரங்களை எப்படி நன்கு கழுவுவது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இதில் கற்றுக்கொள்வதற்கு நிறையவே உள்ளது.

பாத்திரங்களை இப்படித்தான் கழுவவேண்டும்

நீங்கள் எந்த விதம்?


உலகில் பலவிதமான மனிதர்கள் இருக்கின்றனர். செயல்பாட்டை பொருத்தவரை இவர்களை 6 விதமாக பிரிக்கலாம்.

நீங்கள் இதில் எந்த விதம்?

 

பலூன் – இவர் வெறும் காற்று நிரைந்தும் கோபம் கொண்டால் அல்லது ஏதாவது புரியாவிட்டால் உடனே வெடிப்பவர்

 

பூனைக்குட்டி – இவரை சதா வாஞ்சையுடன் பாராட்டிக்கொண்டிருந்தால் செயல்படுவார்

 

தள்ளுவண்டி – இவரை யாராவது தள்ளிக்கொண்டிருந்தால் செயல்படுவார்

 

கனோ (சிறுதோணி) – இவரை யாரவது இயக்கிக்கொண்டிருக்கவேண்டும் இல்லாவிட்டால் செயல்படமாட்டார்.

 

மின்விளக்கு – இவர் திடீரென செயல்படுவார் பிறகு திடீரென காணாமல் போய்விடுவார்

 

விண்மீன் – இவர் யார் பார்க்கின்றார்களோ இல்லையோ தன்பாட்டுக்கு செயல்பட்டுக்கொண்டிருப்பார்.