உடல்நலம்
தேவைப்படும்போது மருத்துவ உதவியை நாடாது இருந்திடாதீர்கள், ஆனால், உடல்நலம் தேறியவுடன் அதைத் தவிர்க்கவேண்டும்… முடிந்தவரை, மருந்துவகைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து நோயை உணவின் மூலமாக தீர்த்திட முயலுங்கள்; உங்களுக்குத் தேவைப்படுவது ஒரே ஒரு மூலிகையில் இருந்திடக் கண்டால், பல்கூறான மருந்துவகைகளை நாடாதீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்போது மருந்துவகைளை நாடாதீர்கள், ஆனால் தேவைப்படும் போது மட்டுமே அவற்றைப் பயன்படு்த்துங்கள்.
-பஹாவுல்லா-
மேற்கண்ட குறிப்பின் வாயிலாக உடல்நலக் குறைவை உணவுவகைகளின் வாயிலாகவே தீர்த்திட முயலவேண்டும் என்பது பஹாவுல்லாவின் அறிவுரையாகும். இவ்வகையில் இன்றைய நவீன உலகில் இயற்கை மருத்துவமுறை பல காலமாக குறைந்துவந்தும் இன்று மீள்ச்சி கண்டும் உள்ளது. இவ்வகையில் நமது தினசரி உணவுவகைகள் பலவற்றின் உள்ளார்ந்த நன்மைகளை அவ்வப்போது காண்போம்.
தேங்காயின் நன்மைகள்
முதலாவதாக, தேங்காய் எண்ணெய் சமையலுக்குப் பல காலமாக பயன்படு்த்தப்பட்டு வந்திருந்தாலும் கடந்த பல பத்தாண்டுகளாக தேங்காய் எண்ணெயில் கொலெஸ்ட்ரோல் (cholesterol) அதிகம் ஆகவே அதனை பயன்படுத்துவது, முக்கியமாக, இருதய நோய்க்கு வழிவகுக்கும் எனும் தவறான கருத்து பரப்பப்பட்டு வந்துள்ளது. இத்தவறான கருத்தின் பரப்பலில் மார்ஜரின் தாயாரிப்பாளர்களின் பங்கை குறைத்து மதிப்பிடமுடியாது. ஆனால், தேய்காய் எண்ணெய்க்கு சாற்றப்பட்ட அபாயங்கள் உண்மையில் மார்ஜரின் வகைகளுக்கே பொருந்தும் என்பது விரைவில் அம்பலமானது. அதுமட்டுமல்ல, நல்ல உடல்நலத்திற்கான தேங்காய் எண்ணெயின் நன்மைகள் குறித்த விவரங்கள் பிரமிக்க வைப்பதாகவே இருக்கின்றது.
தேன்னைமரம் “கோக்கோஸ் நூசிஃபெரா (Cocos Nucifera)” எனும் அறிவியல் பெயர் கொண்டதாகும். அது ஆரம்ப காலங்களில் கோக்கோ என அழைக்கப்பட்டது. ஸ்பேய்ன் மொழியில் கோக்கோ என்றால் குரங்கு முகம் என்பதாகும். அதாவது தென்னைக்கு இயல்பாகவே கண்களும் வாயும் இருப்பதே இதற்கு காரணமாகும். பல பசிஃபிக் தீவுகளில் வாழும் மக்களுக்கு தேங்காய் இன்றியமையாத உணவாக இருக்கின்றது. ‘உயிர்மரம்’ என அழைக்கப்பட்டும் அளவிற்கு தேங்காய் இவர்களுக்கு உணவாகவும் மருந்தாகவும் இருக்கின்றது.
தேங்காயின் நன்மைகள் குறித்த பின்வரும் தகவல்களைப் பார்ப்போம்:
இயற்கை மருத்துவ ரீதியில் தேங்காய் பல நோய்களுக்கு நிவாரணமாக பயன்படுகின்றது. அவற்றுள் வாய்ப்புண், ஆஸ்த்துமா, வழுக்கைத்தலை, இருமல், வெட்டுப்புண், சூட்டுப்புண், சலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, காதுவலி, காய்ச்சல், மாதவிடாய் பிரச்சனை, மூத்திரக்கல், தோல்வியாதி, தொண்டைப்புண், வீக்கம், பல்வலி, காசநோய், டைஃபாய்ட், வாயிற்றுவலி என கணக்கிலடங்கா பல நோய்களுக்கு தேங்காய் நிவாரணமாக இருக்கின்றது. அவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடுவதற்கு இடம் போதாது.
அடுத்து தேங்காய் எண்ணெயின் பயனைப் பார்ப்போம். தேங்காய்க்குப் பல வியப்பளிக்கும் பயன்பாடுகள் இருந்தபோதும் அதன் உண்மையானப் பயன் தேங்காய் எண்ணெயிலேயே உள்ளது. ஒருகாலத்தில் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புச்சத்து உடலுக்கு நல்லதல்ல என தவறாக எண்ணப்பட்டு வந்தது. ஆனால், தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புச்சத்துவகை தனிச்சிறப்புவாய்ந்ததும் பிற கொழுப்புவகைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டதும் ஆகும் மற்றும் அதற்கு உடல்நலத்தை வழங்கக்கூடிய பல தனித்தன்மைகளும் உள்ளன. இன்று சிறிது சிறிதாக தேங்காய் எண்ணெயின் இன்றியமையா நன்மைகள் வெளிப்பட்டு வருகின்றன.
முதலாவதாக, அல்ஸைமர்ஸ் (alzheimers) எனப்படும் வியாதி. இது பெரும்பாலும் வயதானவர்களை தாக்கும். இந்த நோய்கண்டவர்கள் தினமும் நான்கு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் இந்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து, தேங்காய் எண்ணெயின் பயன்பாடு இருதய நோயைக் குறைக்கும் ஒரு வழியாகவும் இருக்கின்றது. அதை உட்கொள்வது உடலின் (metabolism)த்தை அதிகரித்து உடல் பருமன் குறைந்திட உதவுகிறது.
தேங்காய் எண்ணெயின் பிற பயன்களில் சில:
உடலின் நோய்த்தடுப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.
தேங்காய் எண்ணெயை தலையில் நன்கு தேய்த்துவிட்டால் தலைவலி குறையும்.
தேமலை அகற்ற உதவுகிறது.
கிருமிநாசினியாக செயல்படுகிறது.
தேங்காயின் நன்மைகளை மேலும் நன்கு அறிந்து அதைப் பயமில்லாமல் பயன்படுத்துவோமாக.