உடல்நலம் – இலவங்கப் பட்டை


பொதுவாக இலவகங்கத்தின் (cinnamon) பயன் அதை உணவு வகைகளில் சேர்த்து உணவின் சுவையை அதிகரிப்பதற்கே என பலர் நினைக்கலாம். ஆனால், இலவங்கத்திற்கு இதைவிட முக்கியமான மருத்துவப் பயன்கள் உள்ளன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

இலவங்கத்தில் பலவிதங்கள் உண்டு. குறிப்பாக ஸ்ரீ லங்காவில் பயரிடப்படும் லவங்க மரத்திலிருந்து எடுக்கப்படும் உள்பட்டை வெகு மணமானதாகும் மற்றும் இலவங்கம் சீனா,வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. வாங்கும் போது எந்த வகை இலவங்கம் உங்களுக்கு நல்லது என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

மருத்துவப் பயன்கள்:

அஜீரனம், வாயு, வயிறு உப்பிசம், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு லவங்கப்பட்டை பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சமீப காலமாக நவீன மருத்துவ ஆய்வுகள் அவற்றின் பார்வையை லவங்கத்தின் மீது செலுத்தியுள்ளன. இந்த ஆய்வுகளிலிருந்து ஆர்வத்தைத் தூண்டும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லவங்கப்பட்டைக்கு ஒரளவிற்கு (anti-inflammatory) இயல்பு உள்ளது. வேறோர் ஆய்வில் லவங்கப்பட்டையின் வாசத்தை நுகர்வது ஞாபகச்சக்தியை அதிகரிக்கின்றது என்பதை சில மாணவர்களிடம் செய்யப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், இத்தகைய ஆய்வுகளுக்கும் அப்பால் இலவங்கத்துக்கு வேறு முக்கியமான தன்மைகள், அதாவது குழுக்கோஸ் மற்றும் கொழுப்புச் சத்தைக் குறைக்கும் தன்மைகள் உள்ளது தெரியவந்துள்ளது.

சர்க்கரை வியாதி

உலக மக்களுள் பலர் இன்று சர்க்கரை வியாதியினால் அவதிப்படுகின்றனர், அதாவது இதை இன்சுலின் மறுப்பு நிலை எனக் கூறுவர். ஆனால், இலவங்கப்பட்டைத் தூளை ஓர் அரைக் தேக்கரண்டியளவு உட்கொண்டாலும் இன்சுலின் உணர்வுத்திறன் அதிகரிப்பு மற்றும் இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு உருவாவது தெரியவந்துள்ளது. மேலும், இலவங்கப்பட்டையை உட்கொள்வது ஜீரணத்தையும் மெட்டாபோலிசத்தையும் அதிகரிக்கின்றது மற்றும் இருதய நோயை ஒரளவுக்கு கட்டுப்பாட்டிற்கும் கொண்டுவரக்கூடியது. ஆராய்ச்சிகள் முழுமைபெறாவிட்டாலும், இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வுகள் இலவங்கத்தின் நற்பயன்களை ஓரளவிற்கு வெளிப்படுத்தியுள்ளன. முக்கியமாக இரத்த குளுக்கோஸை கட்டுப்படுத்தும் அதே வேளை இரத்த அலுத்தம், மற்றும் LDL கொளுப்பு வகைகளையும் இலவங்கம் கட்டுப்படுத்துகிறது என்பதை ஆய்வுக்குறிப்புகள் காட்டுகின்றன.

மேற்கொண்டு இலவங்கத்தின் நன்மைகளுள் சில:

  • ஒரு தேக்கரண்டி அளவே லகவங்கப்பட்டைத் தூளில் 28மி.கி. கால்சியம், 1மி.கி. இரும்புச் சத்து, விட்டமின் C, விட்டமின் K, மங்கனம் ஆகியவை உள்ளன.
  • இரத்த குளுக்கோஸை முறைப்படுத்தி டைப் 2 சர்கரை வியாதியை கட்டுப்படுத்துகிறது.
  • யீஸ்ட் (yeast) தொற்றைத் தடுக்கும் ஆற்றல் பெற்றது.
  • லூக்கேமியா மற்றும் லிம்ஃபோமா (leukemia & lymphoma) புற்றணுக்களின் பரவலை குறைக்கும் ஆற்றல் பெற்றது.
  • இரத்த உரைவை தடுக்கும் சக்தி பெற்றது
  • தினசரி காலையில் அரைத் தேக்கரண்டி லவங்கப்பட்டைத் தூளை ஒரு மேஜைக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டுவாத நோய் ஒரே வாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறைத்து ஒரு மாதத்தில் நோய் கண்டவர்கள் வலியின்றி நடக்கவும் முடிந்துள்ளது.
  • உணவில் சேர்க்கப்படும்போது அது கிருமிநாசினியாக செயல்பட்டு உணவு கெட்டுப்போகாமல் தடுக்கின்றது.
  • சில பழச்சாறு வகைகளில் கலக்கப்படும்போது அது E.coli கிருமிகளை உருவாக்கத்தைத் தடுக்கின்றது.
  • உணவில் பூஞ்சனம் (பூசனம்) ஏற்படாமல் தடுக்கின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: