சமய நம்பிக்கையைக் காரணமாகக் கொண்டு பல்கலைக்கழகம் செல்ல அனுமதி மறுக்கப்படுவதுண்டா?
கிட்டத்தட்ட இருநூறு நாடுகளில் ஏறத்தாழ என்பது இலட்சம் நம்பிக்கையாளர்களைக் கொண்ட பஹாய் சமயம் உலகப் பெரும் சமயங்களின் வரிசையில் அதுவும் ஒன்றாக இருக்கின்றது.
ஆனால், ஈரான் நாட்டிலோ, மனிதகுலம் முழுவதன் ஆன்மீக ஒற்றுமையை வலியுறுத்தும் பஹாய் சமயத்தின் விசுவாசிகள் பல நூற்றாண்டுகளாகவே கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். இக்கொடுமைகள் சமயம் மற்றும் சமூக ரீதியானவையாகும்; குறிப்பாக ஆண் பெண் சமத்துவம் பற்றிய கோட்பாடு தீவிர பழமைவாத மத ஆட்சியாளர்களுக்குப் பெரும் மிரட்டலாக விளங்குகிறது.
சாம்ரா அக்தர்கவாரி மேற்கொண்டு கூறுகிறார்.
ஒருவரின் சமய நம்பிக்கைக்காக பல்கலைக்கழகம் நுழைய தடைவிதிக்கப்படுவதை கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா?
ஆனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி பெற தடைவிதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டிலோ இது சாதாரணமாக நடக்கும் ஒரு செயலாகும். இவ்வாறாகவே BIHE எனப்படும் பஹாய் உயர்கல்வி நிலையம் உருவானது. இளங்கலை முதல் முதுகலை வரை இப் பஹாய் கல்வி நிலையம் பட்டப்படிப்பு வழங்கிவருகிறது. இப்பட்டங்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களில் பெரிதும் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.
இந்தக் கல்விநிலையம் பல வருடங்களாகவே தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்துள்ளபோதும் ஈரான் நாட்டின் பஹாய் சமூகம் அத்தாக்குதல்களின் பாதிப்பிற்கு ஆளாகமல் தன்னைப் பாதுகாத்தே வந்துள்ளது.
“ஓர் எளிய முறை காணப்படவேண்டும்,” என BIHE-ல் பயின்று பட்டம் பெற்று அதே கல்விநிலையத்தில் ஒரு போதகராக பணியாற்றும் ஸீனூஸ் அக்தர்கவாரி கூறுகிறார்.
பல முறை தாக்குதல்களுக்கு உட்பட்ட பிறகு, மேற்கொண்டு தாக்குதல்களிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அக்கல்விநிலையம் இணையத்திற்கு நிலைமாறியது, இருந்தும் இணைய வசதியின்மை மற்றும் அகப்பக்கங்கள் மூடப்படுவது போன்ற பிரச்சனைகள் தொடரவே செய்கின்றன.
எது எவ்வாறு இருந்தபோதும், பஹாய்கள் எல்லா வேளைகளிலும் தங்கள் பாதையில் தடங்கல்கள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொள்வதற்கான வழிவகைகளைக் கண்டே வந்துள்ளனர், மற்றும் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்வதற்குப் புதிய அகப்பக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன.
பேசாமல் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவதுதானே?
சிறுவயது முதற்கொண்டே சேவை மற்றும் அர்ப்பன உணர்வுகள் பஹாய்களுக்கு ஊட்டப்படுவதே அவர்கள் இத்தகைய தொல்லைகளைத் தாங்கிக்கொண்டு தங்கள் தாய்நாட்டிலேயே இருப்பதற்கான காரணமாகும்.
கல்வி குறித்த பஹாய்களின் கருத்தை ஸீனுஸ் கூறுகிறார்: “மக்கள் தங்கள் சிந்தனையாற்றலை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் வாழ்வுமுறையை மேம்படுத்திக்கொள்ளவும், உலக சீர்திருத்தத்திற்கு உதவுவதுமே கல்வியின் குறிக்கோளாகும். அதோடு தங்கள் நாடான ஈரானின் சீர்திருத்தத்திற்கு உதவுவதும் குறிக்கோளாகும்.”
தங்கள் தாய்நாட்டில் எத்தகைய வேலை வாய்ப்புக்கும் வழியே இல்லையென அறிந்துள்ளபோதும் அவர்கள் தங்கள் கல்வியை மேம்படுத்திக்கொள்வதற்கான முக்கிய காரணம் இதுவே ஆகும். வருங்காலச் சந்ததியினருக்கு உதவ வேண்டும் எனும் கருத்து மிகவும் வலுவாக இரு்ககின்றது மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான ஒரே வழி கல்வியே ஆகும்.
அநீதிகள் நிறைந்திருந்த போதும் பஹாய் சமூகம் ஏன் இன்னமும் நாட்டைவிட்டு வெளியேறாமல் இருக்கின்றனர் என கேட்கப்பட்ட போது:
“மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுவதற்கு யாராவது இருக்கவேண்டும், எல்லாரும் வெளியேறிவிட்டால் வருங்கால சந்ததியினருக்காகப் பாடுபடுவதற்கு யாருமே இருக்கமாட்டார்கள். நாம் அனைவரும் ஈரானியர்கள், நாட்டைவிட்டு நாங்கள் ஏன் வெளியேறவேண்டும்?” என பதிலளிக்கப்பட்டது.
நீங்கள் உங்கள் பங்கிற்கு ஈரான் நாட்டின் பஹாய்களுக்கு உதவ விரும்பினீர்களானால் கீழே வழங்கப்பட்டிருக்கும் அகப்பக்க இணைப்பிற்கு செல்லவும்: