டைட்டானிக் கப்பலில் பிரயாணி ஆனால்…


100 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 10ம் தேதி டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் கண்டது. ஆனால், ஏப்ரல் 14ம் தேதி விதிவசத்தால் அது கடலில் மூழ்கி சுமார் 1500 பயணிகளை தன்னோடு கடளுக்குள் கொண்டு சென்றது. கப்பல் ஏன் மூழ்கியது எப்படி மூழ்கியது என்பதற்கான பதில்கள் இன்றளவும் காணப்பட்டு வருகின்றன. பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் கப்பலின் வெளிக்கூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இரும்புத் தகடுகளில் அவற்றின் வளைந்துகொடுக்கும் தன்மை குறைவாக இருந்தது ஒரு காரணம் எனவும், எதிரே பனிக்கட்டிகளின் அபாயம் இருப்பது தெரிந்தும் கப்பலை வேகமாக ஓட்டி அவ்வேகத்தில் ஒதுங்க முடியாமல் பனிக்கட்டியை உரசிச் சென்றது மற்றொரு காரணம் என பல காரணங்கள் கூறப்படுகின்றன. எத்தனையோ கப்பல்கள் கடலில் மூழ்கியுள்ளன, ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்துள்ளனர் ஆனால் இன்றளவும் டைட்டானிக் கப்பல் மூழ்கியது பெரும் காவியங்களுக்கு வித்தாக அமைந்துள்ளது, பல திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.

அப்துல் பஹா

டைட்டானிக் கப்பலின் வெள்ளோட்டப் பயணத்தின் பயணிகள் பட்டியலில் முக்கியமான ஒருவரின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், அவர் கப்பல் புறப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு வேறொரு கப்பலுக்கு தமது பயணத்தை மாற்றினார். ஏன் அவ்வாறு செய்தார் என்பதற்கு அவர் அளித்த பதில்: “டைட்டானிக் கப்பலில் பிரயாணம் செய்திடும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன், ஆனால் என் மனம் அதற்கு இடம் கொடு்க்கவில்லை,” என கூறினார். அவருடைய அமெரிக்க நண்பர்கள் அவருக்கு 1000 டாலரை அனுப்பி டைட்டானி கப்பலில் வசதியோடு பிரயாணம் செய்யும்படி கேட்டுக்கொண்டனர் ஆனால் அவர் அதை மறுத்து அப்பணத்தை ஏழைகளுக்குத் தானமாக வழங்கிவிட்டார்.

டைட்டானிக் மூழ்கியது பற்றிய 1911 செய்தி

அப்துல் பஹா அல்லது “கடவுளின் சேவகர்” எனப்படும் அப்பாஸ் எஃபெண்டியை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தினசரிகள் தத்துவ ஞானி, அமைதியின் தூதுவர், இயேசு கிருஸ்துவின் மறுவருகை எனக்கூட அழைத்து சிறப்பித்தன.

வாலிபராக அப்துல் பஹா

அப்துல் பஹா டைட்டானிக் கப்பலில் பிரயாணம் செய்யாமல் அதைவிட சற்று வசதிக்குறைவான SSசெட்ரிக் கப்பலில் பிரயாணம் செய்தார். நியூ யார்க்கில் உள்ள முக்கிய நாளிதழ்கள் அனைத்தும் ஏப்ரல் 11ல் அவருடைய வருகையையும் அவருடைய எட்டு மாத கால பிராயணம் குறித்தும் அறிவித்தன. தலைப்பாகையனிந்து கிழக்கத்திய பாணியில் உடை அனிந்திருந்த அந்த வெளிநாட்டவர் முதல் பக்க செய்தியாகியிருந்தார்.

டைட்டானிக் கப்பல்

“தேசிய, இன மற்றும் சமயம் குறித்த தப்பெண்ணங்களை… அகற்றுவதே அவருடைய அருள்பணியின் நோக்கம் என நியூ யார்க் டைம்ஸ் கூறியது. “பிடிவாத முறைகளும், மூடநம்பிக்கைகளும் ஒரு முடிவுக்கு வந்திடுமாறு, மனிதகுலத்தின் ஒருமைத்தன்மை எனும் விருதுகொடியை உயர்த்த வேண்டிய நேரம் மானிடத்திற்கு வந்துவிட்டது,” என அவர் கூறியதை அக்கட்டுரையில் அப்படியே வெளிடப்பட்டிருந்தது.

SS செட்ரிக் கப்பல்

தினசரிகள் அவரை “பாரசீக தீர்க்கதரிசி” என பெயரிட்டன. ஒரு தினசரி, “தீர்க்கதரிசி தாம் தீர்க்கதரிசியல்லவென கூறுகிறார்,” என செய்தி வெளியிட்டிருந்தது. உண்மையில், தாம் ஒரு தீர்க்கதரிசியென அப்துல் பஹா மறுத்தபோதிலும் துளிர்விட ஆரம்பித்திருந்த பஹாய் சமூகத்தின் தலைமைத்துவ பொருப்பை அவரே அப்போது ஏற்றிருந்தார்.

அமெரிக்காவில் அப்துல் பஹா சொற்பொழிவாற்றுகிறார்

அவர் 1800களின் மத்தியில் தமது தந்தையாரால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த, சமயங்களின் ஒற்றுமையை மையமாகக் கொண்ட பஹாய் சமயத்தைப் பிரகடணப்படுத்தி வந்தார். இன்று உலகம் முழுவதும் சுமார் 6 மில்லியன் பஹாய்கள் இரு்ககின்றனர். அமெரிக்கா முழுவதும் அவர் சொற்பொழிவைச் செவிமடுத்திட கூட்டங் கூட்டமாக, சில நேரங்களில் ஆயிரக்கணக்கிலுங்கூட, மக்கள் அன்று கூடினர். யூதகோவில்களில் அவர் இயேசுநாதரைப் புகழ்ந்தார், மாதாக்கோவில்களில் அவர் முகம்மதுவின் போதனைகளைப் புகழ்ந்து பேசினார். அவருடைய பயணத்தின் போது அண்ட்ரூ கார்னகி, அலெக்ஸாண்டர் கிரகாம் பெல், காலில் ஜிப்ரான் போன்றோர் அவரின் தோழமையை நாடினர்.

அதிவேகமே டைட்டானிக் மூழ்குவதற்கு காரணம்

அவர் 14 ஏப்ரல், 1912ல் சொற்பொழிவாற்றினார், அதன் பிறகு அன்றுதான் டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியது. டைட்டானிக் கப்பலில் பிராயாணம் செய்திட மறுத்த அப்துல் பஹா அதைவிட சற்று வசதி குறைவானதும் பிரயாணத்திற்கு டைட்டானிக்கைவிட அதிக காலம் கொண்டதுமான செட்ரிக் கப்பலில் பிரயாணம் செய்து 11 ஏப்ரல் 1912ல் நியூ யார்க் வந்தடைந்தார். டைட்டானிக் கப்பலில் பிரயாணம் செய்து அப்பேரிடரிலிருந்து தப்பித்தவர்களை அப்துல் பஹா தனிப்பட்ட முறையில் சந்தித்தார். அவர்கள், டைட்டானிக் கவிழப்போவது அவருக்குத் தெரியுமாவென வினவியபோது, “கடவுள் மனிதனுக்கு உள்ளுணர்வுகள் வழங்கியுள்ளார்”, என பதிலளித்தார். மேலும் மனிதன் கடவுளை மறக்காமல் இருப்பதற்கும், அகங்காரம் ஒழிவதற்கும் இத்தகைய பேரிடர்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன என அவர் மேலும் கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: