பஹாய்களும் அரசியலும்


மூலம்: http://www.bahai.org/misc/politics

பஹாவுல்லாவின் திருவெளிப்பாடு ஒற்றுமையை மையமாகக் கொண்டது. கடவுள் ஒருவரே, சமயங்கள் யாவும் இறைவனிடமிருந்தே தோன்றியுள்ளன மற்றும் மனிதர்கள் யாவரும் ஒரே குடும்பத்தினர் எனும் முப்பெரும் நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த ஒற்றுமை பேணப்படும்.

பஹாவுல்லா தமது நம்பிக்கையாளர்கள் சச்சரவு மற்றும் சண்டைகளில் ஈடுபடக்கூடாது என கூறியுள்ளார், ஏனெனில், அவை இன்று வழக்கிலுள்ள கட்சிசார்ந்த அரசியலின் கூறுகளாகும். எந்த நாட்டில் வாழ்ந்த போதும் பஹாய்கள் அரசியல் கட்சிகள் எதிலும் உறுப்பினர்களாக இருப்பதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளனர்.

மேலோட்டமாகப் பார்க்கையில், பஹாய்கள் தங்களின் சர்வலோக கோட்பாடுகளின் மேம்பாட்டிற்காக பலதரப்பட்ட அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டிருப்பார்கள் என சிந்திக்க தோன்றும். ஆனால், அது முற்றிலும் தவறாகவே இருக்கும். பஹாய்கள் சமுதாயத்தின் நலனுக்காக தங்கள் பங்கை ஆற்றிட ஊக்குவிக்கப்படுகின்றனர். அவற்றுள் ஒன்று தங்களின் குடிமைக் கடமைகளை நிறைவேற்றுவதாகும்.

ஆகவே, சமுதாயத்திற்குச் சிறந்த முறையில் தொண்டாற்றிட முடியும் என தாங்கள் கருதுவோருக்கு அவர்கள் போதுத் தேர்தல்களில் இரகசிய முறையில் வாக்களித்திடும் சுதந்திரம் உண்டு.

பஹாய்கள் அரசியல் சார்பற்ற அரசாங்க நியமனங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனா்ல, அவர்கள் எந்த அரசியல் கட்சியோடும் தங்களை அடையாளப்படு்த்திக்கொள்ளக்கூடாது அல்லது எந்த அரசியல் கட்சிக்காகவும் பிரச்சாரங்கள் செய்யக்கூடாது.

மனிதகுலத்தின் ஒற்றுமையைப் பேணுவதே மக்களும் தேசங்களும் எதிர்நோக்கும் ஒரு மாபெரும் சவால் எனும் ஓர் அடிப்படை பஹாய் நம்பிக்கையே இதற்குக் காரணமாகும். உண்மையான சமூக அபிவிருத்தி என்பது மனித நாகரிகத்தின் இப்புதிய கட்டத்தின் (மனிதகுலத்தின் ஒற்றுமையின்) மேம்பாட்டையே சார்ந்திருக்கின்றதென பஹாவுல்லா போதிக்கின்றார். “மனிதகுலத்தின் பொதுநலம், அதன் அமைதி, பாதுகாப்பு ஆகியவை அதன் ஒற்றுமை உறுதியாக ஸ்தாபிக்கப்படும்வரை அடையப்படவே முடியாது.”

அவற்றின் சாரத்தின் சர்வலோகத்தன்மை வாய்ந்த பிரச்சனைகளுக்குக் கட்சி சார்ந்த மற்றும் பிரிவிணையை இயல்பாகக் கொண்ட அரசியல் நடவடிக்கைகள் தீர்வுகளை வழங்கிட முடியாதென்பது பஹாய் போதனையாகும். தேசிய, இன, கலாச்சார அல்லது சித்தாந்த ரீதியான இ்ப்போதைய அரசியல் சாதனங்கள் எதுவுமே எல்லைக்குட்பட்டவை மற்றும் தனிப்பட்டவையாகும்.

அரசியல்சார்பின்மை எனும் பஹாய் கோட்பாடு பஹாய்கள் முற்றிலும் சமூக மற்றும் நெறிமுறைகள் சார்ந்த பொதுப் பிரச்சனைகளில் ஈடுபடுவதிலிருந்து அவர்களைத் தடுத்திடவில்லை. பார்க்கப்போனால், இனசமத்துவம் மற்றும் பாரபட்சமின்மை போன்ற பல சமூக பிரச்சனைகளில் பஹாய்கள் முன்னணியிலிருந்த சேவையாற்றி வந்துள்ளனர்.

அரசியலில் ஈடுபடக்கூடாது எனும் கோட்பாடு ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் எனும் பஹாய் போதனையோடு நம்பிக்கை செயற்பாடு ஆகிய இரு ரீதியிலும் வெகு நெருக்கமான ஒன்றாகும்.

ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு என்னேரத்திலும் விசுவாசமாக இருக்கவேண்டும், மற்றும் கீழறுப்பு போன்ற செயல்களில் முற்றாக ஈடுபடக்கூடாது என பஹாவுல்லா தமது நம்பிக்கையாளர்களுக்குப் போதிக்கின்றார். ஆட்சி மாறும்போது, வரக்கூடிய புதிய அரசாங்கத்திற்கு பஹாய்கள் அதே விதமான கடமை உணர்வோடு, தங்களின் விசுவாசத்தை, அரசியலில் ஈடுபடாமை எனும் கோட்பாட்டிற்கிணங்க வழங்கிடவேண்டும்.

பஹாய் தேர்தல் முறை

(இருபத்தொரு வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பஹாய் சமூகத்தின் தேர்தல் முறைகளில் பங்கேற்கலாம். பஹாய் தேர்தல்களில் வேட்பாளர் நியமணம் கிடையாது மற்றும் பிரச்சாரங்கள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன. சமூகத்திற்குச் சிறந்த முறையில் சேவையாற்றிட முடியும் என தாங்கள் நினைக்கும் ஒருவருக்கு அல்லது பலருக்கு பஹாய்கள் பன்மைமுறையில் பிரார்த்தனையோடு வாக்களிப்பார்கள். இவ்விதத்தில் அதிகமான வாக்குகளைப் பெறும் ஒருவர் அல்லது பலர் தாங்கள் தேர்வுசெய்யப்பட்ட பதவிகளில் கடவுள் விசுவாசத்துடன் சேவையாற்றுவார்கள்.)

“பஹாய்களும் அரசியலும்” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. இனிய தமிழில் பஹாய் கருத்துக்களை சிறப்பான முறையில் உற்சாகம் ஊட்டும் வகையில் வழங்கியுள்ளீர்கள்!

    மிக்க நன்றியுடனும் அன்புகலந்த பஹாய் வாழ்த்துக்களுடனும்,

  2. பஹாவல்லாவின் ஆன்மீக லௌகீக தன்மை மாற்றத்தை திரள் திரளான மக்கள் ஏற்று சேவைப் பாதையில் தங்களை மென்மேலும் அற்பணிக்கும் திரனாற்றலை வளர்க்க பெரிதும் ஊக்கம் தந்துள்ளீரகள்!
    பஹாவுல்லாவின் அன்பும் நல்லாசிகளும் என்றென்றும் தங்கள் மீது பொழிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: