உடல்நலம் – நீர் மருத்துவம்


பூமியின் ஆரம்பத் தோற்றத்தின்போது அது சூரியனைப் போன்றே ஒரு தீக்குழம்பாகத்தான் தோன்றியது. பிறகு அதன் உஷ்ணம் தணியத் தணிய அது குளிர்ந்த நிலப் பரப்பாகியது. அப்போது நீர் என்பது கிடையாது ஆதலால் கடலும் கிடையாது உயிரினங்களும் கிடையாது. இ்ப்பூமியில் நீர் தோன்றியது இவ்வுலகிலிருந்தல்ல, மாறாக அது விண்கற்கள் மூலமாக பூமிக்குக் கொண்டுவரப்பட்டது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறாக பூமியில் நீர் சிறுகச் சிறுகத் தோன்றி இன்று பூமியின் மேல்பரப்பு கிட்டத்தட்ட முக்கால்வாசி நீர் நிறைந்ததாக இருக்கின்றது. அதிலும் அதில் 3 விழுக்காடு மட்டுமே தூய நீராகும். கடல்கள் தோன்றியபின் அதில் உயிரினங்கள், சிறிய அனுக்களாக தோன்றின. மனிதனும் இவ்விதமாகவே ஓர் அனுவாக முதலில் தோற்றம் கண்டிருக்கக்கூடும் மற்றும் கடலில் தோற்றம் கண்டதனால் மனிதனின் இரத்தத்தில் உப்புச் சத்தும் உள்ளது. இவ்விதமாக நீரில் தோற்றம் கண்ட மனிதனின் உடலும் ஏறக்குறைய முக்கால் வாசி நீராகும்.

நீரில் தோற்றம் கண்ட மனிதனுக்கு அந்த நீர் இன்று அத்தியாவசியமானதாக விளங்குகிறது. ஒரு மனிதன் உணவும் நீரும் இன்றி சுமார் ஐந்து நாள்கள் வரை வாழலாம், நீர் மட்டும் பருகி வந்தால் அவன் சுமார் 16 நாள்களுக்கு மேல் வாழமுடியும். நாம் உண்ணும் உணவு மெட்டாபோலிசம் ஆவதற்கு தக்க அளவு நீர் உடலில் இருக்க வேண்டும். அதனால்தான் உணவு உண்டபின் நமக்கு நீர் அருந்தவேண்டும்போல் இருக்கும். நீர் நமக்கு உணவாக மட்டும் பயன்படவில்லை. நெடுங்காலமாகவே நீர் உடல்நல மருத்துவத்திற்கும் பயன்பட்டு வந்துள்ளது. உதாரணமாக ஜலதோஷம் கண்டபோது நீர் நிறைய குடிப்பது ஜலதோஷத்திற்குக் காரணமான வைரஸ் கிருமிகளின் குவிப்பைக் கரைத்து அவற்றின் வேகத்தைக் குறைத்து விரைவில் அவை அழிந்து போக உதவுகின்றது. அது போக ஒரு மனிதன் சாதாரணமாக நாளுக்கு சுமார் இரண்டு லிட்டர் நீர் அருந்த வேண்டும் என மருத்துவம் அறிவுறுத்துகின்றது. இது உடலில் உள்ள கழிவுப்பொருள்களை அகற்றுவதற்கு மட்டுமல்லாமல் உடலுக்குத் தேவையான ஊட்டம் நமது இரத்தத்தின் மூலமாக உடலின் எல்லா பாகங்களுக்கும் சென்றிட உதவுகிறது.

இவ்விதமாக நீர் நமக்கு இன்றியமையாததாகவும் உடல்நலத்தைப் பேணக்கூடியதாகவும் இருக்கின்றது. இன்று நீர்மருத்துவம் எனும் ஒரு வகை மருத்துவம் பிரபலமாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கும் முன்பாக 1.5 லிட்டர் நீரைக் குடிக்க வேண்டும். அப்படி முடியாதவர்கள் விட்டு விட்டு குடிக்கலாம். குடித்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் சில முறை சிறுநீர் கழிப்பு ஏற்படும். இது காலப்போக்கில் பழக்கமாகிவிடும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நீர் குடிக்கப்பட வேண்டும். அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு எதையும் குடிக்கவோ உட்கொள்ளவோ கூடாது. மதுவருந்தும் பழக்கம் உள்ளவர்கள் முன்தினம் மதுவருந்தியிருந்தால் நீர்மருத்துவம் செய்யக்கூடாது. குடிக்கப்படும் நீர் சுத்தமானதாக இருக்கவேண்டும். குறைந்தபட்சம் குழாய் நீரை நன்கு கொதிக்கவைத்துப் பருகலாம்.

ஒரு நாளுக்கு நாம் சுமார் 2 லிட்டர் நீராவது பருக வேண்டும். இது மருத்துவர்கள் கூறும் ஆலோசனை. ஆனால், காலையில் எழுந்தவுடன் 1.5லிட்டர் நீர் குடிப்பது நாம் தினசரி குடிக்கும் நீருக்குச் சமமானதல்ல. அதன் பயன் முற்றிலும் வேறானதாகும். பொதுவாக நீரின் பயன்கள் பின்வருமாறு:

 • நீர் உடல் வெப்பத்ததை தனக்குள் ஈர்த்து அதை வெளியேற்ற உதவுகின்றது.
 • நீர் ஓர் சர்வரீதியான கரைப்பான் (solvent) ஆகும். பெரும்பாலான வஸ்துக்கள் நீரில் கரையும் தன்மை கொண்டவையாகும். உடலுக்குத் தேவையற்ற வஸ்துக்கள் கரைந்து வெளியேற்றப்படுகின்றன.
 • நீர் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. நீர் உடல் அமைதிக்கு ஏதுவானதாகும் (உதாரணமாக குளிப்பது)
 • நீர் உடலில் உள்ள விஷப்பொருள்களை சிறுநீர், வியர்வை, மூச்சு ஆகியவற்றின் மூலம் அகற்றுகின்றது.
 • நீர்மருத்துவம் பல நோய்களைக் குணப்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது. உதாரணமாக, முகப்பருக்கள், ஜலதோஷம், மனச்சோர்வு, தலைவலி, வயிறு சார்ந்த சில பிரச்சனைகள், மூட்டுவலி, தசைவலி, மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகள்.
 • உடலை அழுத்தங்களிலிருந்து தளர்வுறச் செய்யவும் பொதுவான உடல்நலத்தைப் பேணவும் நீர் உதவுகிறது.
 • சிலவிதமான வலிகளிலிருந்து நிவாரணம் பெறவும் நீர்மருத்துவம் உதவுகிறது.

நீர்மருத்துவத்தின் மூலம் தீர்க்கப்படும் வாய்ப்புள்ள சில நோய்கள் பின்வருமாறு:

 • மலச்சிக்கள்: 1 நாள்
 • உடல் அமிலம்: 2 நாள்கள்
 • நீரிழிவு: 7 நாள்களுக்குள் சர்க்கரைச் சத்து குறையும்
 • இரத்த அலுத்தம்: சுமார் 4 வாரங்களில் அலுத்தம் தனியும்
 • புற்றுநோய்: நோயின் தீவிரம் 4 வாரங்களில் சற்று தனியும் வாய்ப்புள்ளது.
 • Constipation: 1 day
 • Acidity: 2 days
 • Diabetes: 7 days
 • BP & Hypertension: 4 weeks
 • Cancer: 4 weeks
 • Pulmonary TB: 3 months

நீர்மருத்துவம் (hydrotherapy) என்பது ஒரு மாற்று மருத்துவமுறையாகும். இதை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம். நீரை முறையாக தினசரி அருந்துவது மனித வாழ்நாள்களை அதிகரிக்கின்றது. இந்த எளிய முறையை அவரவர்க்கு ஏற்ற வகையில் பின்பற்றலாம். இருந்தபோதும் நோய் ஏதாவது கண்டவர்கள் இதை ஆரம்பிப்பதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நலமாகும்.

நீர் மருத்துவம் குறித்து மேலும் விவரம் பெற விரும்புபவர்கள் “hydrotherapy” என தேடல் செய்து வேண்டிய விவரங்களை வலைத்தலங்களிலிருந்து பெறலாம்.