1. அவர்கள் தங்கள் நிலையை நினைத்து எப்போதுமே வருத்தப்படுவதில்லை.
தங்களின் சூழ்நிலை குறித்தோ தாங்கள் நடத்தப்படும் விதம் குறித்தோ புண்படுத்தப்படும் விதம் குறித்தோ என்றுமே வருந்துவதில்லை. அவர்கள் தங்களின் செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் பொறுப்பேற்கக் கற்றுக்கொண்டுள்ளனர். தங்கள் செயல்களுக்கான காரணத்தை அவர்கள் பிறர் மீது சாற்றுவதில்லை வாழ்க்கையில் நடப்பவை அடிக்கடி நியாயமற்றவையாக இருக்கும் என்பதை அவர்கள் இயல்பாகவே உணர்ந்துள்ளனர். மிகவும் சோதனைமிகு காலங்களிலிருந்து தாங்கள் அடைந்த கற்றல் குறித்து சுய விழிப்புணர்டனும் நன்றியுடனும் வெளிப்படுகின்றனர். ஒரு சூழ்நிலை மிகவும் மோசமாகும் போது அவர்கள் “பரவாயில்லை” அல்லது “அடுத்து என்ன” என்பன போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவர்.
2. தங்களின் சக்தி பறி்க்கப்பட அவர்கள் அனுமதிப்பதில்லை
மனோபலம் உடையவர்கள் பிறர் தங்களைச் சிறுமைப்படுத்தவோ புண்படுத்தவோ அனுமதிப்பதில்லை. அவர்கள் தங்களின் செயல்கள், உணர்ச்சிகள் ஆகியவை தங்களின் கட்டுப்பாட்டிற்குட்டவை என்பதைப் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் புறவிஷயங்களுக்குத் தாங்கள் எவ்வாறு பதில்செயல்படுகின்றனர் என்பதிலேயே தங்களின் வலு அடங்கியுள்ளது என்பதை உணர்ந்துள்ளனர்.
3. சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பயப்படுவதில்லை.
மனோபலம் உடையவர்கள் மாற்றங்களை ஏற்றுக்கொண்டும் சவல்களை வரவேற்கவும் செய்கின்றனர். பயம் என அவர்களுக்கு ஒன்றிருப்பின் அது தாங்கள் அறியாதனவற்றைக் கண்டல்ல மாறாக, தாங்கள் தேக்க நிலை, நிலவும் சூழலில் மனநிறைவு ஆகியவற்றை அடைந்திடுவோமா என்பதிலேயே பெரிதும் பயப்படுகின்றனர். மாற்றம், நிலையில்லாமை ஆகியவற்றை உடைய ஒரு சூழல் மனோபலம் மிக்க ஒருவருக்கு ஆற்றலளிக்கவே செய்து அவர்களைச் சிறப்பாகச் செயல்படச் செய்கின்றன.
4. தங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் தங்களின் சக்தியை அவர்கள் விரயம் செய்வதில்லை
காலையில் வேலைக்குச் செல்லும்போது வாகன நெரிசல், தொலைந்துபோன பயணப்பெட்டி அல்லது பிறர் குறித்து அவர்கள் குறை கூறிக்கொண்டிருப்பதில்லை. ஏனெனில், இவை யாவுமே தங்களின் சக்திக்கு அப்பாற்பட்டவை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். தங்களின் மறுமொழி, பதில்செயல்கள், மனப்பாங்கு ஆகியவையே ஒரு மோசமான சூழலில், தாங்களால் கட்டுப்படுத்தக்கூடியவை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
5. பிறரை எவ்வாறு தாங்கள் திருப்திபடுத்தக்கூடும் என்பது பற்றி கவலைப்படுவதில்லை.
பிறரைச் சதா திருப்திபடுத்துவதிலேயே தங்களின் வாழ்நாளை வீணாக்குவோரைச் சந்தித்துள்ளீர்களா? அல்லது, அதற்கு எதிர்மாறாக, தாங்கள் ஆற்றல்மிக்கவர்கள் எனும் இமேஜை வலுப்படுத்துவதற்காகப் பிறரை புண்படுத்துவோரைச் சந்தித்துள்ளீர்களா? இவ்விரண்டுமே நல்லதல்ல. மனோபலம் மிகுந்தவர்கள் பிறர்பால் அன்புடனும் நியாயத்துடனும் நடந்துகொள்வர், மற்றும் தேவைப்படும்போது மட்டுமே பிறரைத் திருப்திபடுத்துவர், ஆனால் நியாயத்தை எடுத்துரைப்பதற்கு அவர்கள் பயப்படமாட்டார்கள். அதே வேளை, சிலர் மன அதிருப்தி அடையக்கூடிய சூழலை ஏற்றுக்கொண்டும் தேவைப்படும்போது அச்சூழலை வெகு நயத்துடன் சமாளிக்கவும் முற்படுவர்.
6. நன்கு ஆலோசிக்கப்பட்ட ஆனால் அபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது
இடர்பாடான சூழ்நிலைகளில் நன்கு ஆலோசிக்கப்பட்ட ஆனால் அபாயமான நடவடிக்கைகளில் ஈடுபட தயங்கமாட்டார்கள். முட்டாள்தனமான முயற்சிகளில் கண்மூடித்தனமாக ஈடுபடுவதிலிருந்து இது பெரிதும் வேறுபட்டதாகும். மனவலிமையுடைய ஒரு தனிநபர், தான் எதிர்நோக்கக்கூடிய அபாயச் சூழ்நிலை மற்றும் அதனால் விளையக்கூடிய நற்பயன்களை வெகு விரிவாக கணக்கிட்டும் அச்சூழலில் உள்படையாகவுள்ள எதிர்மறையான விளைவுகளையும், ஏன், அதன் வெகு மோசமான விளைவுகளையும் விரிவாகக் கணக்கிட்ட பிறகே நடவடிக்கையில் ஈடுபடுவர்.
7. கடந்தகால நினைவுகளிலேயே வாழ்வது
கடந்தகால அனுபவங்களுக்கும் அவற்றிலிருந்து கற்றுக்கொண்டவற்றிற்கு ஒப்புமையளித்து அல்லது அவற்றை மனதார ஏற்றுக்கொள்வதில் ஓர் ஆற்றல் உள்ளடங்கியுள்ளது. ஆனால், கடந்தகால ஏமாற்றங்களில் அல்லது கடந்துசென்ற மகிழ்ச்சிகரமான நாள்களிலேயே தங்களின் மனோசக்தியை இலயித்திலிருக்கச் செய்வதை மனோபலம் மிக்கவர்களால் தவிர்த்திட முடியும். அவர்கள் தங்களின் பெரும்பாலான சக்தியை உகந்த நிகழ்கால மற்றும் எதிர்காலத்தை உருவாக்குவதில் செலவளிக்கின்றனர்.
8. செய்த தவற்றையே அவர்கள் மீண்டும் மீண்டும் செய்வதில்லை
பைத்தியம் எனும் வார்த்தையின் விளக்கம் நமக்கெல்லாம் தெரியும், அல்லவா? அதாவது, ஏற்கனவே அடையப்பட்டதைக் காட்டிலும் மேலும் மேலும் நல்ல விளைவை எதிர்பார்த்து ஒரே விதமான நடவடிக்கைகளில் மேற்கொள்வதாகும். மனோபலம் மிக்க ஒருவர் தனது கடந்தகால நடத்தைக்காக முழு பொறுப்பேற்றும் செய்யப்பட்ட தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் முயலுவார். சரியான, பலன்மிக்க வழியில் சுய-பிரதிபலிப்பு செய்திடும் ஆற்றலானது, வியத்தகு வெற்றியாளர் மற்றும் தொழில் முனைவர்களின் ஒரு வெகு வலுவான ஆற்றலாகும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
9. பிறர் வெற்றியைக் கண்டு வெறுப்படைவது
பிறர் வெற்றியைக் கண்டும் அதனால் உண்மையான மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைவதற்கு மனவலிமை வேண்டும். மனோபலம் உடையோர் இந்த ஆற்றலைப் பெற்றுள்ளனர். பிறரின் வெற்றியைக் கண்டு அவர்கள் அவர்கள் பொறாமை கொள்வதில்லை (இருந்தபோதும் வெற்றியடைவதற்கு அந்த தனிநபர் என்ன செய்தார் என்பதற்கான அணுக்கக் குறிப்புகள் எடுத்திட அவர் தயங்கமாட்டார்.) குறுக்கு வழிகளைத் தேடாமல், வெற்றிகளுக்கான தங்களின் சொந்த வாய்ப்புகளுக்காக அவர்கள் கடுமையாக உழைத்திடவும் தயங்கமாட்டார்கள்.
10. தோல்வியினால் மனமுடைவது
ஒவ்வொரு தோல்வியும் மேம்பாடு அடைவதற்கான ஒரு வாய்ப்பாகும். பெரும் தொழில் முனைவர்கள் கூட தங்களின் ஆரம்ப முயற்சிகள் தோல்விகள் பலவற்றில் முடிந்தன என்பதை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்குவதில்லை. மனோபலம் மிக்கவர்கள், ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் கிடைக்கப்பட்ட கற்றல் தங்களின் இறுதி இலக்கை மேலும் அணுக்கமாக அடைவதற்கு உதவும் வரை அவர்கள் மீண்டும் மீண்டும் தோல்வியைத் தழுவிட தயங்குவதில்லை.
11. தனிமையைக் கண்டு பயப்படுவதில்லை
மனோபலம் உடையோர் தாங்கள் தனிமையில் இருக்கும் நேரங்களை அனுபவிக்கவும் அவற்றைப் போற்றிப் பாதுகாக்கவும் செய்கின்றனர். மனம் சரியில்லாத நேரங்களை, பிரதிபலிக்கவும், திட்டமிடவும், உற்பத்தித்திறனை வளர்க்கவும் பயன்படுத்துகின்றனர். மேலும் முக்கியமாக, தங்களின் மகிழ்ச்சி, மனநிலை ஆகியவற்றை உயர்த்திட பிறரை நம்பியிருப்பதில்லை. பிறருடன் இருக்கும் வேளைகளில் மகிழ்ச்சியாக இருப்பது போன்றே அவர்கள் தனிமையில் இருக்கும் போதும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்.
12. உலகம் தங்களுக்குக் கடமைப்பட்டுள்ளது என எதிர்பார்ப்பதில்லை
தற்போது நிலவிவரும் பொருளாதாரநிலையில், எல்லா மட்டங்களிலும் உள்ள நிர்வாகிகளும் ஊழியர்களும், தங்களின் தயார்நிலை, கல்வி ஆகியவற்றிற்கும் அப்பால், உலகம் தங்களுக்கு எவ்வகையிலும், ஊதியம், பலன்கள், சுகமான வாழ்க்கை ஆகியவை குறித்து கடமைப்படவில்லை எனும் விழிப்புணர்வை மேலும் மேலும் அதிகமாகப் பெற்றுவருகின்றனர். மனோபலம் மிக்கவர்கள் முயற்சி எனும் அரங்கின் ஒவ்வொரு கட்டத்திலும், உழைத்திடவும், தங்களின் சொந்த முயற்சியிலேயே வெற்றிபெறவும் தயார் நிலையில் இருப்பார்கள்.
13. உடனடியான விளைவுகளை எதிர்பார்ப்பதில்லை
எத்தகைய நடவடிக்கை அல்லது முயற்சியாக இருந்தபோதும், மனோபலம் மிக்க மக்கள் அவை நீண்டகாலத்திற்கு நீடிக்கக்கூடும் எனும் எண்ணத்திலேயே அதில் ஈடுபடுகின்றனர். உடனடி விளைவுகளுக்கான எதிர்பார்ப்பைத் தவிர்த்திட அவர்கள் தெரிந்துவைத்திருக்கின்றனர். அவர்கள் தங்களின் சக்தியையும் நேரத்தையும் கணக்காகச் செலவளித்தும் செல்லும் வழியில் கடக்கும் ஒவ்வொரு மைல்கல், ஏற்படும் சிறு சிறு வெற்றி ஆகியவற்றில் மகிழ்வுறுகின்றனர். அவர்களுக்கு “நிலைத்திருக்கும் ஆற்றல்” உள்ளது. உண்மையான மாற்றத்திற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதை அவர்கள் புரிந்துவைத்திருக்கின்றனர். உங்களுக்கு மனவலிமை உள்ளதா? உங்கள் திறன்களை மறுவலுப்படுத்திட நீங்கள் ஏன் இன்றே முயலக்கூடாது?