நன்றி: http://banoosh.com/blog/2014/04/14/over-the-last-3-days-the-world-has-experienced-something-we-havent-seen-in-800000-years/
கடந்த 3 தினங்களாக, 800,000 ஆண்டுகளாக உலகம் இதுவரை காணாத ஒன்றைக் கண்டுவருகிறது
செய்தி: தட்ப வெட்பநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான ஐ.நாவின் குழு கடந்த மாதம் மிகவும் திடுக்கிடும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை உலகம் வெப்பமயமாவது குறித்த அதிகரித்து வரும் அபாயங்களை எடுத்துரைக்கின்றது. இக்குழு கரியமிலவாயுவின் வெளிப்பாட்டின் மீது கவனம் செலுத்தி, அது குறித்து செயல்படாமல் இருப்பதன் அபாயங்கள் பற்றி எச்சரிக்கின்தறு. ஆனால், ஏற்கனவே சூழ்நிலை தலைக்கு மேல் வெள்ளம் போனது போன்றே இருக்கின்றது.
தேசிய சமுத்திர மற்றும் காற்றுமண்டல நிர்வாகம் (NOAA) இவ்வாரம் வழங்கியுள்ள ஒரு அறிக்கை, காற்றுமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு 10,00,000 பாகத்தில் 402 பாகமாக, கடந்த 8,00,000 வருடங்களில் வெகு அதிகமான அளவாக, அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கின்றது. இத்தகவலே கவலைக்குறிய விஷயமாக இருந்தபோதும், இந்த அளவு மே மாதத்தில் தனது வருடாந்திர அளவை எட்டவிருக்கின்றது, அதாவது கரிமில வாயுவின் அளவு மேலும் அதிகரிக்கவிருக்கின்றது.
மார்ச் 30, 2014லிருந்து முதல் வாரத்தில்: 400.55 ppm
கடந்த ஒருவருடமான வாராந்திர அளவு: 398.17 ppm
கடந்த பத்து ஆண்டுகளாக வாராந்திர அளவு: 379.67ppm
இந்த NOAA வழங்கியுள்ள இவ்வறிக்கை தொழில்மயத்தின் (industrialisation) பிறப்பிலிருந்து கரியமில வாயுவின் அளவு சீராக ஏற்றம் கண்டுவருகிறது என்பதோடு ஒத்திருக்கின்றது.
தொழிமய காலத்திற்கு முனிபிருந்து கரிமில வாயுவின் அதிகரிப்பைக் காட்டும் கிராஃப் படம்
இதன் அர்த்தம் என்ன? ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு முறை கரியமிலவாயு காற்றுமண்டலத்தில் கலந்துவிட்டால் அது நூற்றுக்காணக்கான அல்லது ஏன் ஆயிரக்கணக்கான வருடங்கள் கூட காற்றுமண்டலத்திலேயே நிலைத்திருக்கும். பிற கிரீன்ஹௌஸ் (கண்ணாடுக்கூடு) வாயுக்களோடு, அது வெளியாகும் சூரியக் கதிர்வீச்சுகளை தன்னுள் ஈர்த்தும் பிறகு அதை மீண்டும் பூமிக்கே திரும்பவும் அனுப்பி, காலப்போக்கில் வெப்பத்தை அதிகரிக்கின்றது. அதாவது, நாம் தற்போது வெளிப்படுத்தும் வாயுக்கள் வருங்காலத் தலைமுறையினரை பாதிக்கக்கூடியவையாகும்.
சில வகையான உலக வெப்ப அதிகரிப்பு சில இயற்கை காரணங்களால் விளைந்திட்டாலும், தொழில்மையத்தின் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்டுள்ள கரியமிலவாயுவின் தீவிர அதிகரிப்பானது பெரும்பாலும் மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதையே அது குறிக்கின்றது. ஐ.நாவின் அறிக்கை இருபதாம் நூற்றாண்டு மத்தியிலிருந்து காணப்படும் வெம்மை அதிகரிப்பு மனிதர்களாலேயே பெரும்பாலும் உருவாக்கப்பட்டது என்பதை 95% உறுதியுடன் கூறுகிறது.
காலப்போக்கில், கரியமிலவாயுவின் அதிகரிப்பானது, கடல்நீர் அளவின் அதிகரிப்பு, வெப்ப அலைகள், வரட்சி, வெள்ளம் ஆகியவற்றிற்கு வழிகோலி, கரையோர சமூகங்ககளுக்கும் மக்களின் உணவு உற்பத்திக்கும் அபாயம் விளைவிக்கின்றது. இம்மோசமடைந்துவரும் சூழல்கள் நிலம், உணவு, நீர் ஆகியவை குறித்து தற்போது நிகழும் உள்நாட்டுப் பூசல்களை மேலும் மோசமாக்கும் என வல்லுனர்கள் நம்புகின்றனர்.
“நாம் உடனடியாகவும் தீவிரமாகவும் செயல்பட்டாலின்றி, நமது தட்ப வெட்ப நிலையும் நமது வாழ்க்கை முறையும் வெளிப்படையாகவே ஆபத்தான சூழலில் உள்ளன. அறிவியலை மறுப்பது ஒழுங்கீனமாகும்,” என ஐக்கிய அமெரிக்க மாநில செயலாளர் ஜான் கெர்ரி சென்ற மாதம் கூறினார்.