உடல்நலம் – வாழைப்பழம்


நன்றி: http://interesting-facts.info/2013/05/after-reading-this-youll-never-look-at-a-banana-in-the-same-way-again/

இதைப் படித்தபின் வாழைப்பழத்தை எப்போதும் போலு பார்க்கமாட்டீர்கள்

bannana

வாழைப்பழத்தில் மூன்று இயல்பான சர்க்கரை வகைகள் உள்ளன – சுக்ரோஸ், ஃபுருக்டோஸ் மற்றும் குலுக்கோஸ். இவற்றோடு நார் சத்தும் சேர்ந்துள்ளது. இப்பழம் நமது உடலுக்கு உடனடியானதும், சீரானதும், போதுமான அளவிலும் சக்தியளிக்கவல்லது.

விளையாட்டு வீரர்களிடையே இப்பழம் பிரபலமாக இருப்பதற்கு இதுவொரு காரணமாகும். ஒரு பழம் மட்டுமே சுமார் 90 நிமிடத்திற்கான ஆற்றலை வழங்குகிறது.

ஆனால், இப்பழம் சக்தி மட்டுமே வழங்கிடாமல் வேறு வகைகளிலும் நமக்கு உதவி செய்கிறது. பல நோய்களுக்கு நிவாரணியாக இது பயன்படுகிறது.

உளச்சோர்வு:

உளர்சோர்வுக்கு ஆளான பலர் ஒரு வாழைப்பழத்தை உண்டபின் சற்று சோர்வு நீங்கக் கண்டதாகக் கூறியுள்ளனர். வாழைப்பழத்தில் டிரிப்டோபேன் (tryptophan) எனும் ஒரு வகை புரதச் சத்து உள்ளது. இச்சத்தை உடல் செரோடோனின் (serotonin) ஆக மாற்றுகிறது மற்றும் இந்த செரோடொனின் நம்மை மன ஓய்வுறச் செய்தும் (relax) மனநிலையை மேம்படுத்திடவும் செய்தும் பொதுவாக மகிழ்ச்சியை உருவாக்குகின்றது.

மாதவிடாய்:

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு ஆளாகும் பெண்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அதிலுள்ள B6 வைட்டமின் உடல் குலுகோஸ் அளவைக் கட்டுப்படுத்தி மனநிலையை மேம்படுத்துகிறது.

இரத்த சோகை:

வாழையில் காணப்படும் அதிக  அளவான இரும்புச் சத்து உடலில் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகமாக்கி சோகையைக் குறைக்கின்றது.

இரத்த அழுத்தம்:

வாழைப்பழத்தில் பொட்டாசியச் சத்து அதிகமாகவும் உப்புச்சத்து குறைவாகவும் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஏதுவாகின்றது. மேலும் இதன் காரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாத நோய்களுக்கு வாழைப்பழத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மூளை ஆற்றல்:

இப்பழத்தைச் சாப்பிடுவது மாணவர்களை விழிப்புணர்வோடு இருக்கச் செய்து கற்றலை மேம்படுத்துகிறது.

மலச்சிக்கல்:

வாழைப்பழத்தில் நார் சத்து அதிகமாக இருப்பதால் இது மலச்சிக்கலைக் குறைப்பதற்கு உதவுகின்றது.

ஹேங்கோவர் (hangover):

மது அருந்துவோர், சற்று அதிகமாக அருந்திவிட்டால், காலையில் தலைவலியோடு எழுவது இயல்பாகும். வாழைப்பழ milkshake செய்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால், அது வயிற்றைச் சுத்தம் செய்து, உடல் குலுக்கோஸ் அளவை மேம்படுத்துகிறது மேலும் பால் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கின்றது.

நெஞ்சுக் கரிப்பு, நெஞ்செரிச்சல்:

வாழைப்பழத்திற்கு இயல்பான அமிலமுரிவு சக்தியுள்ளது, ஆகவே நெஞ்செரிச்சல் காணும்போது ஒரு பழத்தைச் சாப்பிடுவது நெஞ்செரிச்சலைக் குறைக்க உதவும்.

காலை வாந்தி (morning sickness):

வாழைப்பழத்தை உண்பது இரத்தத்தின் சீனிச் சத்தை அதிகரித்து புதிதாக கர்ப்பம்தரித்துள்ள பெண்கள் இந்நோயிலிருந்து நிவாரணம் காண வழிவகுக்கின்றது.

கொசுக்கடி:

வாழைபழத் தோலின் உட்புறத்தை கொசு கடித்த இடத்தில் தடவுவது எரிச்சலையும் அரிப்பையும் குறைக்க உதவுகிறது.

நரம்பு உளைச்சல்:

வாழையில் உள்ள வைட்டமின் B சத்து நரம்பு மண்டலத்தை அமைதிபடுத்த உதவுகிறது

வயிற்றுப் புண்:

அதன் மென்மைத்தன்மையின் காரணமாக வயிற்றுக் கோளாறுகளுக்கு வாழைப்பழமே உகந்ததாகும். குலைவலியுள்ளோர் பயமின்றி சாப்பிடக்கூடிய ஒரே பழம் வாழைப்பழமாகும். வயிற்றில் அமிலத்தை குறைத்து எரிச்சலைப் போக்குகின்றது.

உடல் உஷ்ணத்தை குறைக்கின்றது:

குறிப்பாக கர்ப்பவதிகள் இப்பழத்தைச் சாப்பிடுவதால் உடல் உஷ்ணமும் மன உலைச்சலும் குறைகின்றன. குழந்தைகளும் குறைந்த உஷ்ணத்தோடு பிறக்கவும் இது வழிசெய்வதாக தாய்லாந்து நாட்டினர் நம்புகி்றனர்.

வாழைப்பழத்திற்கு ஆப்பிள் பழத்தைவிட நான்கு மடங்கு புரதச் சத்தைக் கொண்டுள்ளது, இரண்டு மடங்கு மாவுச்சத்து, மூன்று மடங்கு ஃபோஸ்பரஸ் (phosphorus), ஐந்து மடங்கு வைட்டமின் A மற்றும் இரும்புச் சத்து, இரண்டு மடங்கு பிற வைட்டமின்களும் தாதுக்களும். பொட்டாஸிய சத்தும் இதில் அதிகமாக இருக்கின்றது. ஆகவே தினசரி வாழைப்பழம் சாப்பிடுவது இன்றியமையாததாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: