கடவுள் யார்?


கடவுள் யார் எனும் கேள்விக்கு பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து (பிரார்த்தனை) ஒரு விளக்கம்

பிரபுவே, எனதாண்டவரே, நீர், போற்றி மகிமைப் படுத்தப்படுவீராக! எந்த ஒரு நாவுமே, அதன் விவேகம் எத்துணை ஆழமானதாயினும், உம்மைப் பொருத்தமுற புகழ்ந்திட இயலாதென எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் எவ்வாறு யான் உம்மைக் குறித்துரைக்க இயலும்; அல்லது, மனித மனம் என்னும் பறவையின் பேராவல், எவ்வளவு மிகுதியாயிருப்பினும், எங்ஙனம் அது உமது மாட்சிமை, அறிவு என்னும் விண்ணுலகத்திற்கு உயர்ந்திடுவோம் என நம்பிக்கைக் கொண்டிட இயலும்.

என் இறைவா, சகலத்தையும் உணரக் கூடியவர் என உம்மை நான் வருணிப்பேனாயின், உணரும் சக்தியின் அதிசிறந்த உருவங்களானவர்களே உமது கட்டளையின் மூலமாகப் படைக்கப்பட்டோர் என ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் நிலையில் நான் என்னைக் காண்கின்றேன். நான் உம்மைச், சர்வ விவேகி எனப் புகழ்வேனாயின், விவேகத்தின் ஊற்றுகள் எனப்படுபவர்களே உமது விருப்பத்தின் இயக்கத்தினால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என உணர்கின்றேன். உம்மை நிகரற்ற ஒருவரென நான் பிரகடனஞ்செய்வேனாயின், விரைவில், ஒருமைத் தன்மையின் உள்ளார்ந்த சாராம்சங்களாகிய அவர்களே, உம்மால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனவும், உமது கைவேலையின் அடையாளங்களே எனவும் கண்டு கொள்கின்றேன். உம்மை, சகலமும் அறிந்தவரென நான் ஆர்ப்பரிப்பேனாயின், அறிவின் சாரம் எனப்படுபவர்களே உமது படைப்பெனவும், உமது நோக்கத்தின் சாதனங்களெனவும், நான் ஒப்புக்கொள்ள வேண்டியவனாகின்றேன்.

மரணத்துக்குரிய மனிதன், உமது மர்மத்தினை வெளிப்படுத்தவோ, உமது மகிமையை வருணிக்கவோ, மேலும் கூறினால், உமது சாரத்தின் இயற் தன்மையினை அவன் மறைமுகமாகக்கூட குறிப்பிடவோ செய்திடும் முயற்சிகள் அனைத்திற்கும் அப்பால், அளவிடற்கரிய, அதி உயரிய நிலையில் நீர் இருந்து வருகின்றீர். எதனையெல்லாம் அத்தகைய முயற்சிகள் சாதிக்க இயன்றிடினும், அவை, உமது படைப்பினங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள வரம்புகளைக் கடந்திடுவோம் என்ற நம்பிக்கைக் கொண்டிடவே இயலாது; ஏனெனில் அம்முயற்சிகளே உமது கட்டளையினால் இயக்கப்பட்டும், உமது புதியது புனைதலெனும் ஆற்றலினாலுமே தோற்றுவிக்கப்படுகின்றன.

அதிபுனித மகான்கள், உம்மைப் புகழ்வதற்காக வெளிப்படுத்திடும் அதி உயரிய உணர்ச்சிகள், மனிதரிலேயே அதி புலமைவாய்ந்தோர் உமது இயல்பினைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யும் முயற்சியில் வெளிப்படுத்த முடிந்த அறிவுக் கூர்மை, ஆகியவை அனைத்துமே, உமது ஆட்சியுரிமைக்கே முழுமையாக உட்பட்டு, அம் மையத்தையே சுற்றிச் சுழல்கின்றவையாகும்; அவை உமது திருவழகினையே வழிபடுகின்றன. அவை உமது எழுதுகோலின் அசைவினாலேயே இயக்கப்படுகின்றன.

இல்லை, என் இறைவா, உமது வெளிப்பாட்டின் எழுதுகோலானவருக்கும் படைப்புப் பொருள் அனைத்தின் சாராம்சத்திற்கும் இடையே, தேவையின் காரணமாக, எந்த நேரடித் தொடர்பும் இருக்கின்றதென எனது சொற்கள் பொருள்கொள்ளச் செய்திடுமாயின் அவற்றைத் தடைச் செய்திடுவீராக.

உம்முடன் தொடர்புடையோர் அத்தகையத் தொடர்புக் குறித்த புரியுந்திறனுக்கப்பால் கண்ணுக்கெட்டாத தொலைவில் உள்ளனர்! எல்லா ஒப்புவமைகளும் ஒத்தத் தோற்றங்களும் உமது வெளிப்பாடெனும் விருட்சத்தினைத் தகுதியுற வருணிக்கத் தவறிவிடுகின்றன; உமது மெய்ம்மையின் வெளிப்படுத்துதலையும், உமது பேரழகு என்னும் பகலூற்றினையும் புரிந்துகொள்வதற்கான ஒவ்வொரு வழியும் தடுக்கப்பட்டுள்ளது.

உமது பேரொளியானது, மரணத்துக்குரிய மனிதனானவன் உம்மைக் குறித்து ஒப்புதலளிப்பதற்கும் உம்மைச் சார்ந்துரைப்பதற்கும் உம்மை மகிமைப்படுத்துவதற்குமான அவனது புகழுரைக்கும் அப்பால் வெகு தொலைவில் உள்ளது! உமது மாட்சிமையையும், மகிமையையும் மேன்மைப்படுத்திட நீர் உமது ஊழியர்களுக்கு விதித்துள்ள கடமை எதுவாயினும், அது, அவர்கள்பால் உமது கருணையின் ஓர் அடையாளமேயாகும்; அதனால் அவர்கள் தங்களின் சொந்த, உள்ளார்ந்த மெய்ம்மைக்கு அளிக்கப்பட்ட ஸ்தானத்தின்பால் – தங்களின் சொந்த அகநிலையைக் குறித்த அறிவு என்னும் ஸ்தானத்தின்பால் – உயர்ந்தெழுந்திட உதவப்படக் கூடும்.

உமது மர்மங்களை ஆழங்காண்பதோ, உமது மேன்மையைப் பொருத்தமுற பாராட்டுவதோ, அது, உம் ஒருவரைத் தவிர வேறெவராலும் என்றுமே இயலாது. தேடவியலாத நிலையிலும், மனிதர்களின் புகழ்ச்சிக்கு மேலான உயரிய நிலையிலும், நீர், என்றென்றும் இருந்து வருவீர். அணுகவியலாத, சர்வ வல்லவரான, சகலமும் அறிந்தவரான, புனிதருக்கெல்லாம் புனிதராகிய, உம்மைத் தவிர இறைவன் வேறெவருமிலர்.

(Gleanings from the Writings of Baha’u’llah)

114 இளைஞர் மாநாடுகள்


கடந்த வருடம் (2013ல்) உலகம் முழுவதும் 114 இளைஞர் மாநாடுகள் உலகம் முழுவதும் நடைபெற்றன.

“இளம் நம்பிக்கையாளர் தலைமுறை ஒவ்வொன்றிற்கும், மனிதகுலத்தின் செழுமைக்குப் பங்களிப்பதற்கு, தங்களின் வாழ்நாள் காலத்திற்கே உரிய தனித்தன்மை வாய்ந்த ஒரு வாய்ப்பு ஏற்படும். நிகழ்கால தலைமுறையினர்க்கு, ஆழச்சிந்திக்கவும், ஈடுபாடுகொள்ளவும், பேரளவிலான ஆசிகள் வழிந்தோடவல்ல அர்ப்பணிப்புத் தன்மை மிக்க வாழ்விற்காகத் தங்களைத் தாங்களே வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய காலம் கனிந்துவிட்டது.”

“மனிதகுலத்திற்குச் சேவை செய்வது” எனும் தலைப்பில் அம்மாநாடுகளின் காணொலிகள் இங்கு வழங்கப்படுகின்றன. வசனங்கள் தமிழில் துணைத்தலைப்புகளாக வழங்கப்பட்டுள்ளன.

துணைத்தலைப்புகள் காணப்படவில்லையெனில், தயவு செய்து காணொலியின் கீழ்க்காணப்படும் பட்டியலிலிருந்து துணைத்தலைப்புகளைச் செயல்படுத்திக்கொள்ளவும்.

(துணைத்தலைப்புகளைச் செயல்படுத்தும் விதம்:)

subtitles-1 subtitles-2

வெட்கக்கேடன்றி வேறில்லை!


முகம்மத் நூரிஸாட், டாக். முகம்மத் மாலெக்கி இருவரும் உயர்கல்வி மறுக்கப்பட்ட சில பஹாய்களைச் சென்று சந்தித்தனர்.

கல்வியில் பாகுபாட்டை எதிர்க்கும் இயக்கம் – இரானிய இயக்குனர், திரைக்கதை மற்றும் பத்திரிக்கையாளரான திரு முகம்மத் நூரிஸாட், தெஹ்ரான் பல்கலைகழகப் பிரதான முகவராக புரட்சிக்குப் பின் நியமிக்கப்பட்ட டாக். முகம்மத் மாலெக்கியுடன், உயர்கல்வி மறுக்கப்பட்ட பஹாய்கள் சிலரைச் சென்று சந்தித்தார். திரு முகம்மத் நூரிஸாட் தமது ஃபேஸ்புக் (facebook) பக்கத்தில், இச்சந்திப்பை “வெட்கக்கேடன்றி வேறில்லை” எனும் தலைப்பில் வர்ணித்துள்ளார்.

வெட்கக்கேடன்றி வேறில்லை!
இஸ்லாமிய புரட்சியை நனவாக்கிய எங்களைப் பற்றியும் நாங்கள் யார், ஆற்றப்பட்ட கொடுங்கோன்மைகள், அடிதடி, மரணம் சிறைவாசம் ஆகியவற்றுக்கு ஆளானோர், குடும்பங்கள் நாசமானோர், திருடப்பட்ட சொத்துகள், நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தலுக்கு ஆளான மக்கள், அதை பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை. ஓர் உதாரணத்தை மட்டும், அது தங்கள் நாட்டிலேயே அறிவெனும் விருட்சத்திலிருந்து பயனடைவதிலிருந்து எங்களால் தடுக்கப்பட்ட இருபதாயிரம் இளம் பஹாய்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

கீழ்காணும் நிழல்படத்தில், தெஹரான் பல்கலைகழகப் பிரதான முகவராகப் புரட்சிக்குப் பின் நியமிக்கப்பட்ட டாக். முகம்மத் மாலெக்கியும் நானும் கீழே தரையில் அமர்ந்திருக்கின்றோம்; அனைத்து மனித நேய, பொதுநலத் தன்மை, சுதந்திரம் விரும்பிகள், நலன்விரும்பிகள், கடவுள் நம்பிக்கையாளர் மற்றும் நல்ல பழக்கமுள்ள ஈரானியர்கள் சார்பில் உயர் கல்வியைஇழந்துள்ள மூன்று தலைமுறையினாரான பஹாய்கள் அடங்கிய இச் சிறிய குழுவினரிடம் மன்னிப்பை வேண்டுகின்றோம்.

shame
உயர்கல்வி பறிக்கப்பட்ட பஹாய் இளைஞர்களுடன்

இக்குழுவினரில் சில வருடங்களுக்கு முன் தேசிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் தரத்தில் தேர்வுற்ற ஓர் ஆன்மா உள்ளது. இருந்தும் என்ன பயன், எந்த அதிகாரியோ ஆயத்துல்லாவோ அவர் கல்வியில் அடைந்த சிறப்பைப் பற்றி அக்கறை கொள்ளவோ அவரிடம் அது பற்றி வினவவோ அவருக்காக வாய்ப்பேற்படுத்தவோ முயலவில்லை. திரு ஷாடான் ஷிராஸி இவ்வருட நுழைவுத் தேர்வில் 113ம் இடத்தைப் பெற்றும் தமது சமய நம்பிக்கை காரணமாக கல்வி வாய்ப்புகளை இழந்துள்ள ஒரு சிறு பெண் அடங்கிய நிழல்படத்தில் தாமும் இருக்கின்றார். நான் கூற விரும்புவது: அன்புடையீரே, நாம் நமது தலைப்பாகைகளைச் சற்று உயரமாக அனிந்தால் நன்றாக இருக்கும்! ஏனெனில் சிறிது தூய்மையான காற்று நமது மூளைகளுக்கு புத்துணர்ச்சியளித்து அது புதிய விஷயங்களைக் கற்க உதவிடும்!

முகம்மத் நூரிஸாட்
செப்டம்பர் 14, 2014
தெஹரான்