முகம்மத் நூரிஸாட், டாக். முகம்மத் மாலெக்கி இருவரும் உயர்கல்வி மறுக்கப்பட்ட சில பஹாய்களைச் சென்று சந்தித்தனர்.
கல்வியில் பாகுபாட்டை எதிர்க்கும் இயக்கம் – இரானிய இயக்குனர், திரைக்கதை மற்றும் பத்திரிக்கையாளரான திரு முகம்மத் நூரிஸாட், தெஹ்ரான் பல்கலைகழகப் பிரதான முகவராக புரட்சிக்குப் பின் நியமிக்கப்பட்ட டாக். முகம்மத் மாலெக்கியுடன், உயர்கல்வி மறுக்கப்பட்ட பஹாய்கள் சிலரைச் சென்று சந்தித்தார். திரு முகம்மத் நூரிஸாட் தமது ஃபேஸ்புக் (facebook) பக்கத்தில், இச்சந்திப்பை “வெட்கக்கேடன்றி வேறில்லை” எனும் தலைப்பில் வர்ணித்துள்ளார்.
வெட்கக்கேடன்றி வேறில்லை!
இஸ்லாமிய புரட்சியை நனவாக்கிய எங்களைப் பற்றியும் நாங்கள் யார், ஆற்றப்பட்ட கொடுங்கோன்மைகள், அடிதடி, மரணம் சிறைவாசம் ஆகியவற்றுக்கு ஆளானோர், குடும்பங்கள் நாசமானோர், திருடப்பட்ட சொத்துகள், நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தலுக்கு ஆளான மக்கள், அதை பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை. ஓர் உதாரணத்தை மட்டும், அது தங்கள் நாட்டிலேயே அறிவெனும் விருட்சத்திலிருந்து பயனடைவதிலிருந்து எங்களால் தடுக்கப்பட்ட இருபதாயிரம் இளம் பஹாய்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.
கீழ்காணும் நிழல்படத்தில், தெஹரான் பல்கலைகழகப் பிரதான முகவராகப் புரட்சிக்குப் பின் நியமிக்கப்பட்ட டாக். முகம்மத் மாலெக்கியும் நானும் கீழே தரையில் அமர்ந்திருக்கின்றோம்; அனைத்து மனித நேய, பொதுநலத் தன்மை, சுதந்திரம் விரும்பிகள், நலன்விரும்பிகள், கடவுள் நம்பிக்கையாளர் மற்றும் நல்ல பழக்கமுள்ள ஈரானியர்கள் சார்பில் உயர் கல்வியைஇழந்துள்ள மூன்று தலைமுறையினாரான பஹாய்கள் அடங்கிய இச் சிறிய குழுவினரிடம் மன்னிப்பை வேண்டுகின்றோம்.

இக்குழுவினரில் சில வருடங்களுக்கு முன் தேசிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் தரத்தில் தேர்வுற்ற ஓர் ஆன்மா உள்ளது. இருந்தும் என்ன பயன், எந்த அதிகாரியோ ஆயத்துல்லாவோ அவர் கல்வியில் அடைந்த சிறப்பைப் பற்றி அக்கறை கொள்ளவோ அவரிடம் அது பற்றி வினவவோ அவருக்காக வாய்ப்பேற்படுத்தவோ முயலவில்லை. திரு ஷாடான் ஷிராஸி இவ்வருட நுழைவுத் தேர்வில் 113ம் இடத்தைப் பெற்றும் தமது சமய நம்பிக்கை காரணமாக கல்வி வாய்ப்புகளை இழந்துள்ள ஒரு சிறு பெண் அடங்கிய நிழல்படத்தில் தாமும் இருக்கின்றார். நான் கூற விரும்புவது: அன்புடையீரே, நாம் நமது தலைப்பாகைகளைச் சற்று உயரமாக அனிந்தால் நன்றாக இருக்கும்! ஏனெனில் சிறிது தூய்மையான காற்று நமது மூளைகளுக்கு புத்துணர்ச்சியளித்து அது புதிய விஷயங்களைக் கற்க உதவிடும்!
முகம்மத் நூரிஸாட்
செப்டம்பர் 14, 2014
தெஹரான்