இரான் நாட்டில் பஹாய் சமயத்தினர்க்குக் குடியுரிமை தகுதி கிடையாது


Baha’is Have No Citizenship Rights, Says Grand Ayatollah

கோமேனியின் காலத்தில் செயல்பட்டு வந்து உச்ச நீதித்துறை மன்றத்தின் உறுப்பினரும் ஓர் உயர்நிலை மதத்தலைவருமான ஒருவர் பஹாய்கள் (இரான் நாட்டின்) குடியுரிமை தகுதியைப் பெற்றிருக்கவில்லை என ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இவ்வறிக்கை இரான் நாட்டு நீதித்துறையின் தலைவரான முகம்மது ஜவாட் லாரிஜானி, பஹாய்களுக்கு திட்டமிட்ட வகையில் 13930923000763_PhotoL-300x209உயர்கல்வி மறுக்கப்படுகிறது என்பதை சில வாரங்களுக்கு முன்புதான் மறுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. “பஹாய்களுக்கு கல்விக்கான உரிமையுள்ளது என நாங்கள் கூறவில்லை; பஹாய்களுக்கு குடியுரிமை தகுதிகூட கிடையாது,” என ஆயாத்துல்லா புஜ்னோர்டி ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். “கிருஸ்துவ, யூத மற்றும் ஸோராஸ்த்திரியர்க்குக் குடியுரிமை தகுதியுள்ளது. அவர்களுக்குப் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் உள்ளனர், ஏனெனில், அவை ஆபிரஹாமிய சமயங்களாகும். நாமும் அவர்களுடன் தொடர்புகொண்டுள்ளோம் அவர்களின் பிரதிநிதிகள் நமக்கு நண்பர்களும் ஆவர்,” என அவர் மேலும் கூறினார்.

இத்தகைய அறிக்கைகள் இரான் நாட்டு பஹாய்களின் உரிமைகள் பரவலாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும் அத்துமீறப்படுவதைப் பிரதிபலிக்கின்றன. அதிகரித்துவரும் அனைத்துலக கண்டனங்களை எதிர்நோக்கும் இரான் நாட்டு நீதித்துறை அதிகாரிகளின் மறுப்புரைகள் இதற்கு எதிர்மாறாக இருக்கின்றது. ஒரு செல்வாக்கு மிக்க மதகுருவான ஆயாத்துல்லா முகம்மது மூசாவி போஜ்னோர்டி விடுத்துள்ள அறிக்கைகள், பஹாய்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பஹாய் குடிகளின் அடிப்படை மனிதவுரிமைகள், அடிப்படை மனிதவுரிமைகள் ஆகியவை அத்துமீறப்படுவதற்கான அடித்தலத்தையும் மத ரீதியான நியாயப்படுத்தலுக்கும் வழிவகுக்கின்றன; பல்வேறு அரசாங்க அமைப்புகள், குறிப்பாகப் தேசப்பாதுகாப்பு அமைப்புகள் பஹாய்கள் மீது தாக்குதல்கள் தொடுப்பதற்கான வழிகாட்டிகளாக இவை தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

பஹாய்கள் உட்பட, பிரஜைகள் அனைவரின் கல்வி குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக போஜனோர்டி பின்வருமாறு கூறினார்: “நிச்சயமாக இல்லை! சில விவகாரங்களுக்கு வல்லுனர்கள் கருத்துகள் தெரிவிக்க வேண்டியதில்லை—இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் இக்கலந்துரையாடலில் ஈடுபட அருகதையற்றவர்கள். பஹாய்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் ஆகவே அவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ள முடியாது.”

அக்டோபர் 2014ல், முகம்மது ஜவாட் லாரிஜானி இரான் நாட்டு பஹாய் பிரஜைகள் மீது எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை எனவும் அவர்கள் “குடியுரிமை உடன்பாட்டிற்கு” இணங்கவே நடத்தப்படுகின்றனர் என மறுப்புத் தெரிவித்தார். இரான் நாட்டின் குடியுரிமைச் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் தனிநபர்களுக்கு இரான் நாடு பாதுகாப்பளிக்கும் எனவும் “ஒரு தனிநபர் சட்டத்தை மீறும்போது, அது ஷீயா, சுன்ன அல்லது இரான் சமுதாயத்தின் பிற சமூகங்களைக் குறிப்பிடவில்லை,” எனக் கூறினார். இவ்வறிக்கைகளுக்குச் சில மாதங்களுக்கு முன், ஏப்ரல் 2014ல் இரான் தொழிலாளர் செய்தி நிறுவனத்திற்கு (ILNA) வழங்கிய ஒரு பேட்டியில் லாரிஜானி பின்வருமாறு கூறினார்: “அவர்கள் பஹாய்கள் என்பதற்காக அதிகாரிகள் பஹாய்களை குறிவைப்பதில்லை, ஏனெனில் அரசியலமைப்பின்படி, எல்லா இரான் நாட்டுக் குடிகளும் சில உரிமைகளைப் பெற்றும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படவும் முடியாது.”

பஹாய் சமூகத்தின் ஐக்கிய நாடுகள் பிரதிநிதியான டியான் அலாயி மார்ச் 2014ல் ஜவாட் லாரிஜானியால் விடுக்கப்பட்ட அறிக்கைகளுக்குப் பின்வருமாறு மறுமொழியளித்தார்: “திரு லாரிஜானி இரான் நாட்டில் பஹாய் சமூகம் தற்போது எதிர்நோக்கும் சூழ்நிலை குறித்து ஏதும் அறிந்திருக்கவில்லை போலும். இல்லையெனில் பஹாய் இளைஞர்கள் பல்கலைக்கழகம் புகமுடியாது, பஹாய் இடுகாடுகள் புல்டோஸர்களைக் கொண்டு அழிக்கப்படுகின்றன, கடைகளுக்குச் சொந்தக்காரர்கள் பஹாய் புனித நாள்களின்போது கடைகளை அடைக்கும் போது அக்கடைகள் (அதிகாரிகளால் நிரந்தரமாகப்) பூட்டப்படுகின்றன. இவை யாவும் எல்லாரும் அறிந்துள்ள ஒன்றாகும்.”

இரான் நாட்டில் பஹாய்கள் மீது தொடுக்கப்படும் பரவலான மனித உரிமை அத்துமீறல்கள் ஐ.நா-வின் மனித உரிமை வாரியத்தினாலும் ஐ.நா பொதுச் சபையினாலும் என்றுமே கண்டனம் செய்யப்பட்டு வந்துள்ளன. ஐ.நா.-வின் இரான் நாட்டு மனித உரிமைக்கான விசேஷ அறிக்கையாளராக அஹ்மெட் ஷாஹீட் 2011ல் நியமிக்கப்பட்டதிலிருந்து, இரான் நாடு குறித்த அவரது வருடாந்திர அறிக்கைகள் பஹாய்களின் கல்வி சார்ந்த உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் உட்பட மனித உரிமைகள் சார்ந்த மோசமான அத்துமீறல்களைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வந்துள்ளன.

இரான் நாட்டிற்கு விஜயம் செய்வதற்கான ஷாஹீடின் வேண்டுகோள்கள் அனைத்துமே இரான் நாட்டு அதிகாரிகளால் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்துள்ளன. இருந்தபோதும், ஆயாத்துல்லா போஜ்னோர்டி விசேஷ அறிக்கையாளரைச் சந்திப்பதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளார். “இரான் நாட்டின் ஐ.நா.விற்கான விசேஷ அறிக்கையாளரான இந்த அஹ்மட் ஷாஹீடுடன் நெருக்கமாகச் சந்தித்துப் பேசிட நான் பெரிதும் விரும்புகிறேன். ஏனெனில், அவர் மிகவும் அதிகமான புரட்சி-எதிர்ப்புச் சொற்களை அள்ளி வீசியுள்ளார். அது குறித்து அவரிடம் எவருமே உட்கார்ந்து பேசியதில்லை. அவரிடம் இஸ்லாமிய உரிமைகள் குறித்துப் பேசிட நான் பெரிதும் விரும்புகிறேன். மீறுபவர் ஒருவரை கைது செய்து சிறைப்படுத்துவது மனித உரிமை குறித்த அத்துமீறலாவென கேட்க விரும்புகிறேன்?…”

எழுபத்தொரு வயதாகிய ஆயாத்துல்லா முஹம்மது மூசாவி போஜ்னோர்டி, நாஜாஃப் நகரில் பல வருடங்களாக ஆயாத்துல்லா கோமேனியின் மாணவராக இருந்துவந்தும் கலைக்கப்படும் வரை அந்த உச்ச நீதித்துறை மன்றத்தின் உறுப்பினராக இரண்டு முறை இருந்துமுள்ளார்.