த ஹேய்க், 23 அக்டோபர் 2015 (BWNS)–ஐரோப்பா தழுவிய அகதிகளின் பரவலான நகர்ச்சியானது, ‘மானிடத்தின் உயிரியலான ஒருமை’ குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கின்றது, என ‘அகதிகள் மற்றும் நாடுகடந்தோர்’ மீதான ஒரு முக்கிய மாநாட்டில் பஹாய் அனைத்துலக சமூகம் கூறியுள்ளது.
நெதர்லாந்து, ஹேய்க்-இல் கடந்த 14 முதல் 16 அக்டோபர் வரை நடந்த, ‘அகதிகள் மற்றும் நாடுகடந்தோர்’ மீதான ஐரோப்பிய வாரியத்தின் வருடாந்திர பொது மாநாடு, (ECRE) பொதுச் சமூகம் உட்பட, அகதிகள், அடைக்கலம் தேடுவோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்த அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளின் உறுப்பினர்கள் சுமார் 150 பேரை ஒன்றுகூட்டியிருந்தது.
(UNHCR) எனப்படும் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவாண்மையில் பாதுகாப்பிற்கான உதவி உயர் ஆணையரான, வோல்க்கர் துர்க், அகதிகள் மற்றும் நாடுகடப்போரின் பெருஜன நகர்ச்சிக்கிடையே, ஐரோப்பா, வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத ஒரு தருணத்தை எதிர்நோக்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் மக்களால் ஆதரவளிக்கப்படும் அகதிகளைக் கொண்ட சில மண்டலங்களில் வெளிப்படுத்தப்படும் ஐக்கியத்தின் வெளிப்பாடுகள் பற்றி பேசுகையில், மக்களின் அடிப்படை நற்குணம் வெளிப்படுவது மனதிற்கு ஊக்கமளிப்பதாக இருக்கின்றது என்றார்.
(ECRE)-இன் பொதுச் செயலாளரான, திரு மைக்கள் டீயட்ரிங், பங்கேற்பாளர்களிடம் உரையாற்றுகையில், தமது உரையில் அப்பிரச்சினையின் மனிதப் பரிமாணத்தின் மீது கவனம் செலுத்தினார்.
“எண்ணிக்கை மற்றும் புள்ளிவிவரங்களின்” மீது சமமற்ற கவனம் செலுத்துகையில், அந்த எண்கள் ஒவ்வொன்றும், ஒரு மனிதரை, இயல்பாகவே உள்ளார்ந்த மதிப்பும் மனித உரிமையும் கொண்ட ஒரு தனிநபரைப் பிரதிநிதிக்கின்றன,” என்றார்.
தனது பங்களிப்பில், பஹாய் அனைத்துலக சமூகம், மானிடத்தின் ஆழ்ந்த பரஸ்பரத் தொடர்பின் மீது குறிப்பாக கவனத்தை ஈர்த்தது:
“மக்கள்தொகையினரின் நகர்ச்சியானது, உலகின் பல்வேறு மண்டலங்களின் அமைதி, சமநிலை, செழுமை ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை, மற்றும் இவ்வுலகளாவிய மெய்ம்மை நிலைக்கும் அப்பாற்பட்டு தீர்வுகள் காணப்பட முடியாது.
“ஒரு மண்டலத்தின் தேவைகளை ஈடுசெய்திடும், ஆனால் மற்றொரு மண்டலத்தின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாத, சமூக, ஸ்தாபன மற்றும் சட்டபூர்வமான ஏற்பாடுகள் பற்றாக்குறையானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகையினரின் நகர்ச்சியானது, ஆழ்ந்ததும், தீர்க்கமுடையதுமான பிரச்சினையின் நடப்பு அறிகுறிகளாகும்.
மாலை அமர்வின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள், ரெம்ப்ரான்ட், ரூபென்ஸ், பரூகல் ஆகியோர் உட்பட, டச்சு மற்றும் ஃபிலெமிஷ் ஓவியர்களின் உலகப் பிரசித்தி பெற்ற சித்திரங்களை உள்ளடக்கிய, ‘மோரிட்ஷுயில் அருங்காட்சியகத்திற்கு” வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டனர்.
அகதிகளுக்கான டச்சு வாரியத்தின் இயக்குனரான, டோரீன் மேன்சன், டச்சு பொற்காலம் என்ப்படும் ஒன்றுடன் அந்த நிகழ்ச்சியைத் தொடர்புபடுத்தினார்:
ஐரோப்பா முழுவதுமானஅகதிகளின் வருகையே 17-ஆம் நூற்றாண்டில் அம்ஸ்டர்டாமின் செழுமைக்கு வழிவகுத்தது. அவர்களின் பல்வகைத்தன்மை, கைத்திறன்கள், தொழில்முனைவு ஆகியவையே, ஒரு சாதாரன துறைமுக நகராக இருந்த ஒன்றை 1630-க்குள் உலகின் மிக முக்கிய துறைமுகமாகவும், வணிக மையமாகவும் மேம்படுத்தியது. அச்செழுமையின் பயனாகவே, பொற்காலத்தின் ஓவியர்கள் ஐரோப்பா மற்றும் உலகின் கலாச்சார மரபுரிமைக்கு பங்களித்திடவும் முடிந்தது.
(ECRE) அமைப்பு, அகதிகள், அடைக்கலம் நாடுவோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் உரிமைகளை மேம்படுத்தும் 90 அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளின் ஆகப் பெரிய அனைத்து-ஐரோப்பா சங்கமாகும்.