http://www.huffingtonpost.com/shastri-purushotma/bahais-celebrate-twin-holy-days_b_8282546.html

வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (13 மற்றும் 14 நவம்பர்) முதன் முறையாக, உலகளாவிய நிலையில், பஹாய் சமூகம் அதன் சமயத்தின் இரண்டு ஸ்தாபகர்களின் பிறந்தநாள்கள் குறித்த இரட்டைப் பிறந்தநாள்களைக் கொண்டாடவிருக்கின்றது.
இதற்கு முன் மேலைநாடுகளில் இப்பிறந்தநாள்கள் கிரேகோரிய நாள்காட்டியின்படி கொண்டாடப்பட்டு வந்தன; இந்த நாள்காட்டி, சௌர நாள்காட்டி (solar calendar) எனும் முறையில் அவர்களின் பிறந்தநாள்களை பல வாரங்கள் இடைவெளியில் உள்ளடக்கியிருந்தது. இவ்வருடம், பஹாய் சமூகத்திற்கான மேலும் ஒரு புதிய நாள்காட்டிமுறையின் அமலாக்கத்தோடு, இப்புனித நாள்கள் அந்த நாள்காட்டியின் அடங்கியுள்ள ஓர் சந்திர அம்சத்தின் அடிப்படையில் அனுசரிக்கப்படும், ஆகவே அவை ஒன்றன்பின் ஒன்றான இரண்டு தொடர்ந்துவரும் நாள்களில் அமைந்திருக்கும். கொண்டாட்டங்கள் இரண்டு அடுத்தடுத்த நாள்களில் வருவதானது ஒரு தனிச்சிறப்பை குறிக்கினறது, ஏனெனில் பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லாவின் சமயப்பணிகள், பல வழிகள் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டுள்ளன.

பாப் பெருமானார், பஹாவுல்லா இருவரும் முறையே 196 மற்றும் 198 வருடங்களுக்கு முன் பிறந்தனர்; சமய வரலாற்றுத் துறையில் அவர்களின் வாழ்க்கை தனிச்சிறப்புடையதாக விளங்குகிறது. பஹாவுல்லாவின் வாழ்க்கை குறித்து பிரேசில் நாட்டுப் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட புகழுரையில், பிரேசில் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான லூயி குஷிகென், பஹாவுல்லாவின் எழுத்துகளை “ஒரு தனிமனிதரின் எழுத்தாணியினால் எழுதப்பட்ட அதி மகத்தான சமயப் படைப்பு,” என வர்ணித்துள்ளார். தமது சமயப்பணியின் பிரகடனத்திலிருந்து 1850-இல் பாரசீக அரசாங்கத்தினால் அவர் மரண தன்டனைக்கு உட்படுத்தப்படும் வரையிலான ஆறு வருட காலத்தில், பாப் பெருமானார் சுமார் ஐந்து லட்சம் வாக்கியங்களை எழுதினார் என அனுமானிக்கப்பட்டுள்ளது; அதே வேளை, தமது சமயப்பணிக் காலத்தில் பஹாவுல்லாவின் எழுத்துகள் சுமார் 100 தொகுப்களாகும். அரபு மற்றும் பாரசீக மொழிகளிலான இவ்வுரைப்பகுதிகளின் ஒரு சிறு பகுதியே இதுவரை பிரசுரிக்கப்பட்டும், அதனினும் சிறிய அளவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுமுள்ளது.
இ்வவார இறுதியின் கொண்டாட்டங்களுக்கு உதவியாக, இந்த இரட்டைப் பிறந்த நாள்களின் தனிச்சிறப்பு குறித்த, இதுவரை பிரசுரிக்கப்படாத பல உரைப்பகுதிகள், ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பஹாய் சமூகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள.
உலகம் முழுவதுமுள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் பல மில்லியன் பஹாய்கள் இத்திருநாள்களைக் கொண்டாடும் அதே வேளை, தங்கள் நம்பிக்கைகளுக்காக சிறையில் வாடும் சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட பஹாய்கள் இக்கொண்டாடங்களைத் தங்களின் சிறையிலேயே அமைதியாகக் கொண்டாட வேண்டிவரும். இரான் நாட்டு பஹாய் சமூகத்தின் தலைமைத்துவக் குழுவின் ஏழு உறுப்பினர்களை இது உள்ளடக்கும். நீண்ட காலமாக இரான் நாட்டின் ‘மனச்சாட்சிக் கைதிகளான’ இவர்கள், தங்களின் இருபது ஆண்டுச் சிறைவாசத்தின் எட்டாவது ஆண்டை கடந்த மே மாதம் ஆரம்பித்தனர். 1979-இல் இரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சியிலிருந்து பஹாய்கள் துன்புறுத்தப்படுவது தீவிரமடைந்துள்ளது, ஆனால் கண்மூடித்தனமான விடாப்பிடியான வெறித்தனத்தின் முன்னால், ஆக்கபூர்வமான மீள்திறன், இப்பொழுது இரான் நாட்டின் ஜனத்தொகையினரின் மனப்பான்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் இரானிய ஆய்வுத் துறையின் நிர்வாகி பேராசிரியர் அப்பாஸ் மிலானி பின்வருமாறு விவரிக்கின்றார்:
பஹாய் சமயத்தைப் பற்றி இரானிய மக்களின் மனதில் விஷத்தைக் கலக்கும் ஆட்சியாளர்களின் தீவிர முயற்சிகளைப் பார்க்கிலும், அவர்கள் ஊடகங்களை முழுமையாகக் கட்டுப்படுத்திவந்த போதிலும், மில்லியன் கணக்கிலான இரானியர்கள், பன்மடங்கான அறிஞர்கள் ஆகியோரிடையிலும், சில ஷீயா மதத்தலைவர்களிடையிலும்கூட, பஹாய்கள் இவ்விதமாக நடத்தப்படுவது நமது கடந்தகாலத்தின் வெட்கக்கேடான ஒரு பகுதி எனும் ஒரு புதிய விழிப்புணர்வு அலைமோதிவருகின்றது. பிற இரானியக் குடிகள் போன்று பஹாய்களும் தங்களின் சமயத்தைக் கடைப்பிடிக்கும் மறுக்கமுடியாத உரிமையைப் பெற்றுள்ளனர் மற்றும் இரான் நாட்டின் குடிகள் எனும் முறையில், எந்த சமயத்தைச் சார்ந்தவராயினும், எல்லா பிரஜைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என மேலும் மேலும் பல (இரானியர்கள்) நம்புகின்றனர்.
இவ்வார இறுதியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட பல நாடுகளிலும், பிராந்தியங்களிலும் வாழும் பஹாய்கள் இரட்டைப் பிறந்த நாள்களை கொண்டாடுகையில், இயல்பாகவே அவர்கள் பஹாவுல்லாவும், பாப் பெருமானாரும் பிறந்த நகரங்கள் குறித்துத் தங்கள் உள்ளங்களில் நினைத்துப் பார்ப்பர். குறிப்பாக, தெஹரான் மற்றும் ஷிராஸ் நகரங்கள். இரானிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்காக இன்றி, உலகத்தின் எல்லா பகுதிகளிலுமிருந்து பல நூராயிரம் பஹாய்கள் பஹாய்கள் இந்நகரங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு, தங்கள் மரியாதையைச் செலுத்தி, இப்புனித நாள்களைக் கொண்டாடுவர் என்பதில் சிறிந்தும் சந்தேகமில்லை. பாப் பெருமானார் வாழ்ந்திருந்த புனித இல்லம், 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு உடனடியாக அழிக்கப்பட்டது; இரானிய அதிகாரிகள் வட இரானில் பஹாவுல்லாவின் குழந்தைப் பருவத்துடன் சம்பந்தப்பட்ட வீடுகளை வேண்டுமென்றே அழித்துவிட்டிருந்தனர். பல பிரச்சினைகளில் அனைத்துலக ரீதியில் ஏற்புடைய தரமுறைகளுக்கு இணங்க செயல்படுவதில் இரான் அரசாங்கத்தின் இயலாமை குறித்து உலகம் அதிகமான கவனம் செலுத்தி வரும் ஒரு நேரத்தில், அரசாங்கங்கள், பத்திரிக்கையாளர்கள், உயர்கல்வியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகியோரின் குரல்களும், சில வேளைகளில் உலகம் முழுவதும் கட்டிடங்களின் செங்கற்கள் கூட, நடப்பிலிருக்கும் துன்புறுத்தல்களுக்கு எதிராக தங்களின் குரல்களை உயர்த்தி வருகின்றனர் என்பது பஹாய் சமூகத்தினர்க்கு ஆறுதலளிக்கும் ஒன்றாக இருக்கின்றது.

மேலும், பஹாவுல்லா மற்றும் பாப் பெருமானாரின் பிறப்பு குறித்த இருநூறாவது நினைவாண்டுகள் நெருங்கிவரும் அதே வேளை, ஓவ்வொரு கண்டத்திலும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு இல்லங்கள் உட்பட, சில்லி, கம்போடியா, கொலம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, இந்தியா (புது டில்லியில் ஏற்கனவே உள்ள வழிபாட்டு இல்லம் உட்பட, பீஹார் ஷாரிஃப்), பாப்புவா நியூ கினி, வானுவாத்து ஆகிய நாடுகளிலும் இடங்களிலும் மனதைக் கவரும் புதிய வழிபாட்டு இல்லங்களை உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இரான் நாட்டின் ஆயத்துல்லாக்கள், தாங்கள் அழித்திட முயன்று வரும் ‘இத்தவறான மார்க்கம்’ எவ்வாறு உலகம் முழுவதும் சீராக வளர்ந்து வருகின்றது என்பது குறித்த குழப்பமடையவே செய்வர்.