இரான் நாட்டில் இதுவரை நிகழ்ந்திராத வகையில் கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்படுகின்றன


bnsheader

இரான் நாடு முழுவதிலுமுள்ள, சாரி, காயெம்ஷாஹர், பன்டார் அப்பாஸ் போன்ற நகரங்கள் உட்பட, பல நகரங்களில் பஹாய்களால் நடத்தப்பட்டு வந்த வணிகநிலையங்கள், 1 மற்றும் 2 நவம்பரில் பஹாய் புனிதநாள்களை அனுசரிப்பதற்கு தற்காலிகமாக அடைக்கப்பட்ட பிறகு, இரானிய அதிகாரிகளால் முத்திரையிடப்ப்டடு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.

சமீப காலமாக ஐநா-வின் சமயம் மற்றும் நம்பிக்கை சார்ந்த சுதந்திரத்திற்கான விசேஷ அறிக்கையாளராலும், இரான் நாட்டிற்கான விசேஷ ஐநா அறிக்கையாளர், பிரபல வழக்குறைஞர்கள் (டாக். அப்டெல்-கரீம் லாஹிட்ஜி, ஷிரின் எபாடி போன்றோர்) ஆகியோரின் அறிக்கைகள், பஹாய் அனைத்துலக சமூகத்தால் இத்தகைய பொருளாதார அடக்குமுறை நிறுத்தப்படவேண்டுமெனும் முறையீட்டிற்குப் பிறகும் இந்த வருந்தத்தக்க செயல் நடந்துள்ளது.

shopssealed1
பஹாய்கள் ஒரு பஹாய் புனித நாளை அனுரிப்பதற்காக மூடிய தங்கள் கடைகளை மீண்டும் திறப்பதை தடைசெய்வதற்கு இரானிய அதிகாரிகள் பயன்படுத்திய முத்திரையின் மாதிரி.

இரான் நாட்டின் அதிபருக்கு பஹாய் அனைத்துலக சமூகம் சமீபத்தில் எழுதிய ஒரு கடிதம், பஹாய் வணிகநிலையங்களை முத்திரையிட்டு மூடுவது பஹாய்களுக்கு எதிரான பொருளாதார இன ஒதுக்கலுக்கான பல சூழ்ச்சிமுறைகளுள் ஒன்றாகும் என்பதை விளக்குகின்றது. மூன்று பஹாய் தலைமுறையினர்க்கு அரசாங்க வேலைகளுக்கு தடைகள் விதிப்பது, வாணிபங்களில் பணிபுரிவதை பகுதி அல்லது முழுமையாக அரசாங்க வழிகாட்டலின் கீழ் தடை செய்வது, தனியார் வேலை அனுமதிப்பத்திரங்களை கிடைப்பதை தாமதப்படுத்துவது அல்லது தடை செய்வது, முறையான பல்கலைக்கழக கல்வி பெறுவதைத் தடைசெய்வது போன்றவை பிற வழிமுறைகளாகும்.

sealedshops2
முத்திரையிடப்பட்டு மூடப்பட் கடை

“பன்மடங்கான பஹாய் வணிகநிலையங்களை (மூடு)முத்திரையிடுவது பஹாய் சமூகம் எவ்வகையிலும் ஒதுக்கப்படுதலுக்கு ஆளாக்கப்படவில்லை எனும் இரான் நாட்டு அரசாங்க உத்தரவாதத்தின் வெறுமையை வெளிப்படுத்துகின்றது,” என பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதானப் பிரதிநிதியான பானி டுகால் கூறினார். “அனைத்துலக சமூகம் இந்த அநீதியான செயல்களைக் கண்டிக்குமாறு கோரிக்கை விடுத்தும், இரானிய அரசாங்கம் வெளிப்படையான, உறுதியான நடவடிக்கைளின் மூலம் இச்சூழ்நிலையை திசைதிருப்புமாறு வலியுறுத்தவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்,” என அவர் மேலும் கூறினார்.