இது ஸ்ரீ கிருஷ்னரின் குழல் பற்றிய ஓர் அழகான கதை…
அனுதினமும் கிருஷ்னர் தோட்டத்திற்குள் சென்று “நான் உங்களை நேசிக்கின்றேன்” என எல்லா செடிகளிடமும் கூறுவார்.
செடிகள் அனைத்தும் “கிருஷ்னரே, நாங்களும் உம்மை நேசிக்கின்றோம்” என மகிழ்ச்சியோடு கூறின.
ஒரு நாள் கிருஷ்னர் அவசரமாக தோட்டத்திற்குள் சற்று பதட்டத்துடன் சென்றார்
அங்கு மூங்கில் செடியிடம் சென்றார். மூங்கில் செடி அவரைப் பார்த்து, “கிருஷ்னா, என்ன நேர்ந்தது” என வினவியது.
“நான் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும், ஆனால் அது மிகவும் சிரமமானது” என்றார் கிருஷ்னர்.
“என்னிடம் சொல்லுங்கள்: என்னால் முடிந்தால் நான் அதை உங்களுக்குக் கொடுக்கின்றேன்” என மூங்கில் கூறியது.
“எனக்கு உன் உயிர் வேண்டும். உன்னை நான் வெட்ட வேண்டும்” என கிருஷ்னர் கூறினார்.
மூங்கில் சற்று நேரம் யோசித்து விட்டு, “நீங்கள் வேறொன்றும் செய்ய முடியாதா. உங்களுக்கு வேறு வழி இல்லையா?” என கூறியது.
“இல்லை, வேறு வழியே இல்லை” என கிருஷ்னர் கூறினார்.
அதற்கு மூங்கில் “சரி” என கூறிவிட்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்டது.
பிறகு கிருஷ்னர் மூங்கிலை வெட்டி அதில் துவாரங்கள் இட்டார். துவாரம் இடும் ஒவ்வொரு முறையும், மூங்கில் வலி தாங்க முடியாமல் கதறியது.
கிருஷ்னர் அம்மூங்கிலிலிருந்து ஓர் அழகிய குழலைச் செய்தார்; அக்குழலும் எல்லா நேரங்களிலும் அவருடனேயே இருந்தது.
இருபத்து நான்கு மணி நேரமும் அக்குழல் கிருஷ்னருடனேயே இருந்தது. அக்குழலைக் கண்டு கோபியர்கள் கூட பொறாமை கொண்டனர்.
“பாருங்கள், கிருஷ்னர் நமது தேவராவார், இருந்தும் நாம் குறைந்த நேரமே அவருடன் இருக்கின்றோம்” என கூறினர்.
“அவர் உன்னுடனேயே கண் விழிக்கின்றார், உன்னுடனேயே தூங்குகின்றார், எல்லா நேரங்களிலும் நீயே அவருடன் இருக்கின்றாய்,” என மூங்கிலிடம் கூறினர்.
“உன் இரகசியம் என்னவென எங்களுக்கு கூறு. என்ன மர்மம் வைத்திருக்கின்றாய். பிரபு ஏன் உன்னை ஒரு பொக்கிஷமாகக் கருதுகின்றார்?” என கோபியர்கள் மூங்கிலைக் கேட்டனர்.
அதற்கு அந்த மூங்கில், “நான் என்னை அர்ப்பணித்துவிட்டேன் என்பதே இரகசியம், அவரும் எனக்கு பொருத்தமான நன்மையை செய்தும், அதன் பயனாக நான் அதிக வேதனையை தாங்கிக்கொள்ளவும் வேண்டியிருந்தது. நான் அவருடைய கருவியாகிவிட்டேன்.”
இதுவே முழுமையான சரனடைதலாகும்: கடவுள் தாம் விரும்பியதையும், விரும்பிய நேரத்திலும் நமக்கு செய்கின்றார்.
அவரை முழுமையாக நம்புங்கள்; அவரில் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள்; எப்பொழுதும் அவரது கரங்களிலேயே நீங்கள் இருக்கின்றீர்கள் என நினையுங்கள்… என்ன தவறு நடந்துவிடும்?
இதுவே முற்றாக சரனடைந்துவிடுவது என கூறப்படுகின்றது.