பெண்கள் விடுதலை வீராங்கனை கொண்டாடப்படுகின்றார் – 3 பிப்ரவரி 2017


bnsheader

பாக்கு, அஸர்பைஜான் — அஸெரி பூர்வீகம் சார்ந்த பஹாய் வீராங்கனையான தாஹிரிஃயின் கதை, நீண்டகாலமாகவே அஸெர்பைஜான் நாட்டில் அகத்தூண்டுதலுக்கான ஒரு சின்னமாக இருந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆண், பெண் சமத்துவத்திற்காகப் போராடிய முக்கியமானவர்களுள் அவரும் ஒருவராவார்.

கடந்த 25 ஜனவரியில், அஸெர்பைஜான் நாட்டின் வரலாறு சார்ந்த தேசிய அருங்காட்சியகம், பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பெண்கள் கல்வி குறித்த ஒரு விழாவை நடத்தியது. அதில் பெண்கள் மேம்பாட்டிற்கான தாஹிரிஃயின் அர்ப்பணமும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட்டன.

“தாஹிஃரி மிகவும் உயர்வாக மதிக்கப்படுகின்றார்; அவர் பஹாய் சமூகத்தில் மட்டும் பிரபலமானவரல்ல, ஆனால் “அவர் கிழக்கு முழுவதிலும் பிரபலமுடையவராகவும், நன்கு மதிக்கப்படுபவராகவும் இருங்கின்றார்,” என பாக்கு மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அஸெர் ஜஃபாரோவ் விளக்கினார்.

tahirih

“அவர் தற்கால இலக்கியத்தின் மீது செல்வாக்குச் செலுத்தினார், பெண்கள் விடுதலைக்கு குரலெழுப்பினார், மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வின் மீது ஓர் ஆழ்ந்த தாக்கத்தையும் கொண்டிருந்தார்.

“தாஹிஃரியின் விடுதலை குறித்த தொலைநோக்கின் நிறைவேற்றம் காலப்போக்கில் பெரும் வெளிப்பாட்டை அடைந்துள்ளது,” என டாக். ஜஃபாரொவ் தொடர்ந்து கூறினார். அது மனித உள்ளத்தில் ஒளிவீசிடும் சூரியோதயமாகும்.”

தாஹிஃரியின் வாழ்க்கை மற்றும் காரியஙகள் பற்றி சமீபமாக பிரசுரிக்கப்பட்ட ஒரு நூல், பஹாய் சமூகத்தின் ஒரு பிரதிநிதியான சலாஹுத்தீன் அய்யுப்போவ்-வினால் வழங்கல் செய்யப்பட்டது. அவ்வழங்கல் பெண்கள் மேம்பாட்டின் மீது தாஹிஃரியின் தாக்கத்தை சிறப்பித்துக் காட்டியது. அந்நிகழ்ச்சியில், தாஹிஃரி பிரபலமாக விளங்கிய, கவிதைகள் குறித்த அவரது பங்களிப்புகள் கலந்தரையாடப்பட்டன.

“கிருஸ்துவ, ஆஸ்திக மற்றும் இஸ்லாமிய எழுத்தாளர்கள் அனைவருமே ஒரு மாபெரும் ஆளுமையான தாஹிஃரிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அஸெர்பைஜானின் தேசிய வரலாறு சார்ந்த அருங்காட்சியகத்திற்கான ஓர் ஆராய்ச்சியாளராகிய அலி ஃபர்ஹாடொவ், அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் ஏங்கும் ஒவ்வொருவரின் அபிலாஷைகளின் மீதும், மெய்ம்மை குறித்த அவரது தொலை-விளைவுகளுடைய தொலைநோக்கு ஒளிவீசுகின்றது..

“இன்று, கிழக்கிலுள்ள பெண்கள் மட்டுமல்ல, ஆனால் உலகம் முழுமையும், தன்னிச்சையான சிந்தனை, பெண்கள் விடுதலை, மற்றும் உண்மையைத் தன்னிச்சையாகத் தேடும் மனப்பாங்கு ஆகியவற்றின் உருவகமான அவரது பண்புகள், வாழ்க்கை ஆகியவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்..”

மத்திய பாக்கு-விலுள்ள, தனது முகத்திரையை அகற்றுகின்ற, ஒரு பெண்ணின் சிலை, தாஹிஃரியின் கதையினால் செல்வாக்குச் செலுத்தப்பட்டதென கூறப்படுகின்றது. “விடுவிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சிலை” என அறியப்படும் அந்த நினைவுச் சின்னம், 1960-இல் ஃபுவாட் அப்டுர்ரஹ்மானோவ்-வினால் வடிக்கப்பட்டதாகும்.