ஹைஃபா போர்: பஹாய் சமயத்தை உலகிற்காக பாதுகாப்பது


ஆக்கம் – கார்மெல் M திருப்பதி

பிரசுரம்: ஜலை 8, 2017, காலை 9:12

ஆக்கம் – கார்மெல் M திருப்பதி

 

பிரசுரம்: ஜலை 8, 2017, காலை 9:12

ஹைஃபா நகரின் பாதுகாப்பிற்காக அங்கு பணிபுரிந்த இந்திய வீரர்களுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தும் படம் தோன்றியபோது, முதலாம் உலக யுத்தத்தின் போது இந்தியப் படையினரின் பல சந்திப்புகளின் போது, உலகளாவிய பஹாய் சமூகத்திற்கு மகத்தான தாக்கமும் அர்த்தமும் கொண்டிருந்த, அவற்றுள் ஒன்றைப் பற்றி சற்று தாமதித்து ஆழச்சிந்திப்பதற்கு அது தருணமாக இருந்தது.

Wreathe-Modi

1852-இல் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவின் மறைவிற்குப் பிறகு, அவரது மகனாகிய அப்துல்- பஹா மீது ஒரு மாபெரும் பொறுப்பு சுமத்தப்பட்டது. பெரும் சவால்கள் மிக்க ஒரு நேரத்தில் ஆரம்பநிலையிலிருந்த பஹாய் சமூகத்தை அவர் வழிநடத்த வேண்டியிருந்தது.

பஹாய் சமயம் தனது ஆரம்பத்தை இரான் நாட்டில் கண்டிருந்த போதும், இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகரின் கார்மல் மலையின் சரிவிலேயே அதன் நிர்வாக மற்றும் ஆன்மீக மையம் அமைந்துள்ளது.

அப்துல்-பஹா இரானிலிருந்து தமது தந்தையின் நாடகடத்தலில் தாமும் அவரைப் பின்பற்றி, ஹாஃபாவிற்கு 1868-இல் வந்து சேர்ந்து, பெரும்பான்மையான தமது வாழ்க்கையை ஒரு மனசாட்சி கைதி, என இன்று அறியப்படும் கைதியாக தமது வாழ்நாளைக் கழித்தார்.

முதலாவது உலகப் போர் ஆரம்பிப்பதற்கு முன், அப்துல்-பஹாவுக்கு எழுபது வயதாகியிருந்தும், இளந்துருக்கியர் புரட்சிக்குப் பின் அவருடைய சூழ்நிலை மாற்றத்தினால், அவரால் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, கெனடா ஆகிய நாடுகளுக்க விஜயம் செய்திட முடிந்தது. ஆனால், அவர் தமது விஜயங்களுக்குப் பிறகு ஒட்டமான் அதிகாரத்தின் கீழிருந்த ஹைஃபாவுக்கே திரும்பி வந்தார்.

துருக்கிக்கும் ஆங்கில படைக்கும் இடையில் நடந்த சன்டையின் போது அப்துல்-பஹா ஹைஃபா ஒட்டமான் ஆளுனரிடமிருந்து மிரட்டல்களை எதிர்நோக்கியும், நிலைமை மேலும் மோசமடைந்த போது, அதிகாரிகள் அவரை சிலுவையில் அரைந்து கொல்வதற்கும், கார்மல் மலை மீதிருந்த, பஹாய் சமயத்தின் அதிப்புனிதஸ்தலங்களான  பஹாய் புனிதஸ்தலங்களை அழித்திடவும் திட்டமிட்டனர்.

துருக்கிய மற்றும் ஜெர்மானிய படைகளை தோற்கடிக்கும் பணி ஜெனரல் எல்லன்பி-யின் கீழிருந்த பிரிட்டிஷ் படையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அப்படை இரன்டு இந்திய குதிரைப்படை பிரிகேட்டுகளை உள்ளடக்கியிருந்தது.  எல்லன்பியிடம் பணிபுரிந்த அதிகாரிகளுள் மேஜர் வெல்லஸ்லி டியூடோர்-போல் என்பாரும் இருந்தார். அவர் சன்டையின் போது இராணுவ  புலனாய்வு இயக்குனரகத்தில் பணிபுரிந்தார், ஆனால் அவருக்கு மத்திய கிழக்கோடு ஒரு நீண்டகால அக்கறை இருந்துவந்தது. துருக்கி நாட்டிற்கு அவர் 1908-இல் சென்றபோது அவர் பஹாய் சமயத்தைப் பற்றி கேள்வியுற்று, அப்துல்-பஹாவை சந்திப்பதற்காக கைரோவிற்கும் அலெக்ஸான்டிரியாவிற்கும் 1910-இல் சென்றார்.

Master

இங்கிலாந்து நாட்டு பஹாய் சமூகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவரான டியூடோர்-போல், அப்துல்-பஹாவின் மீது தொடுக்கப்பட்ட கடுமையான மிரட்டல்கள் குறித்த அறிக்கைகளினால் மிகவும் கவலையுற்றார். பல இங்கிலாந்து பஹாய்கள் போர் அலுவலகத்திற்கு வழங்கிய பல கடிதங்களுடன், பாலஸ்தீன போர் அரங்கத்தின் விரிவான அமலாக்கத்திற்கான திட்டத்தை ஜெனரல் எல்லன்பியிடம் ஒரு மணு செய்யப்பட்டது. இவ்வாறாக, செப்டம்பர் 1918-ல் ஷெர்வூட் போரெஸ்டர் குதிரைப்படையின் ஆதரவுடன் ஜோத்பூர் மற்றும் மைசூர் லான்சர் படையினர், ஹாஃபாவின் விடுதலைக்காகவும் “திருவொப்பந்தத்தின் மையம்,” என பஹாய்களால் அறியப்பட்ட ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டும் சென்றனர்.

சில வருடங்களுக்கு முன் இந்த விஷயம் குறித்து டில்லியிலுள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் ஆற்றப்பட்ட உரையில், இந்திய போர் முதுவீரர் சங்கத்தின் பொதுச் செயலாளரான மேஜர் சந்திரகாந்த் சிங், அந்த நடவடிக்கை குறித்த விவரங்களை வழங்குகிறார். 23 செப்டம்பர் 1918-இல் ஜோத்பூர் லான்சர்களின் படை துருக்கிய படைகளை திடீரென தாக்கி, கார்மல் மலை சரிவில் ஒரு துணிகர தாக்குதலை மேற்கொண்டனர். அதே நேரம் ஓர் இடுக்கி நடவடிக்கையாக, மைசூர் லான்சர்களின் படை ஒன்று தெற்கிலிருந்து தாக்கியது.

Indian-cavalry

சன்டையின் ஆரம்பத்தில், ஒரு பேரிடியாக ஆணைய அதிகாரிகளுள் ஒருவரான, கர்னல் தாக்கூர் தல்பத் சிங் கொல்லப்பட்டார்.  இருப்பினும், அவரது துணை ஆணையர் பஹதூர் அமான் சிங் பொறுபேற்றுக்கொண்ட போது லான்சர்கள் ஒன்றுதிரண்டனர். பீரங்கி மற்றும் இயந்திர-துப்பாக்கிகளுக்கிடையே இந்தியப் படையினர் தாக்குதல் மேற்கொண்டு, இரண்டு இயந்திர துப்பாக்கி நிலைகளையும், 1350 கைதிகளையும் கைப்பற்றி ஹைஃபா நகருக்கான வழியைத் திறந்துவிட்டனர். மைசூர் லான்சர்களின் பிரிவு ஒன்று உடனடியாக அப்துல்-பஹாவின் வீட்டிற்குப் பாதுகாப்பு வழங்கி, பஹாய் நினைவாலயங்களும் அழிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டன, மற்றும் இன்று அவை உலகம் முழுவதுமுள்ள பஹாய் சமூகத்தினரின் புனித பயனத்திற்கான பிரதான தலங்களாக இருக்கின்றன. ஜெனரல் எல்லன்பி லன்டனுக்கு ஒரு தந்தி அனுப்பினார்: “பாலஸ்தீன் இன்று கைப்பற்றப்பட்டது. அப்துல்-பஹா பாதுகாப்பாக இருக்கின்றார் என உலகிற்கு அறிவிக்கவும்.”

Lotus-temple

இந்த மதிப்பிற்குறிய, வீரமிக்க இந்திய வீரர்களுக்கு மானிடம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. ஒரு மலர்ச்சியடைந்து வரும், இந்தியாவின் சுமார் 2 மில்லியன் பஹாய்கள் உட்பட, உலகளாவிய பஹாய் சமூகமே அவர்கள் விட்டுச் சென்ற துணிவு மற்றும் தியாகத்திற்கான மரபுச்செல்வமாகும்.”

(எழுத்தாளர் பொது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலகத்தோடு தொடர்புகொண்டவர்.0