மூலம்: http://www.huffingtonpost.co.uk/genevieve-seri/200-years-since-his-birth_b_18094870.html
பஹாய் சமயத்தின் ஸ்தாபகராகிய பஹாவுல்லா பிறந்த 200-ஆம் நினைவாண்டு குறித்த கொண்டாட்டங்கள் உலகத்தின் எல்லா பாகங்களிலும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. எண்ணிலடங்கா உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான, சமுதாயத்தின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் பகுதியையும் உள்ளடக்கிய கொண்டாட்டங்கள் உலகின் சீர்திருத்தத்திற்காக ஒன்றுபடவும் பங்களிப்பதற்காகவும் உதவேகமுற்றுள்ளன. பஹாவுல்லாவின் செய்தி இதுதான், “இதுவே, இறைவனின் மிகச் சிறந்த சலுகைகள் மனிதர்மீது பொழியப்பட்டுள்ள நாள்; அவரது வலுமிக்கக் கிருபை எல்லாப் பொருட்களினுள்ளும் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ள நாள். தங்களிடையே உள்ள வேற்றுமைகளை அகற்றி மீண்டும் ஒன்றிணைந்து, பூரண ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் அவரது பாதுகாப்பு, அன்புப்பரிவு என்னும் விருட்சத்தின் நிழலின் கீழ் வாழ வேண்டியது உலக மக்கள் அனைவருக்கும் கடமையாக்கப் பட்டுள்ளது ” என பஹாவுல்லா பிரகடனப்படுத்தியுள்ளார்.

பஹாவுல்லாவின் 200-ஆம் பிறந்த தினத்தை கொண்டாடுதல்
இருநூறாம் நினைவாண்டு விழா கொண்டாட்டங்கள் பஹாய் சமயத்தின் ஒரு மைய கருத்தாக்கத்தைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன – மானிடத்திற்கான சேவை. சேவை என்பது தனிநபர்கள் தன்னிச்சையாக எந்நேரத்திலும் ஆரம்பிக்கக்கூடிய ‘தற்செயல் நடவடிக்கைகள்’ மட்டுமல்ல, மாறாக அவை அண்டைப்புற மட்டத்தில் வளர்ச்சியுறும் மற்றும் அம்மக்களின் தேவைகளின்பால் கவனம் செலுத்தக்கூடிய நடவடிக்கைகளை அது குறிக்கின்றது. அவை, குழந்தைகளின் ஆன்மீக மற்றும் தார்மீக கல்வியை, இளைஞர்களுக்கான சக்தியளிப்பு, பிரார்த்தனைகளின் மூலம் மக்களை ஒன்றுசேர்க்கும் கூட்டங்கள், சேவைக்கான திறன்கள் மற்றும் திறமைகளை உருவாக்கிடும் படிப்பு வட்டங்கள் ஆகியவற்றை அவை உள்ளடக்குகின்றன. இந்த நடவடிக்கைகள் அனைவருக்காகவும் திறந்துவிடப்பட்டுள்ளதே அவற்றின் சிறப்பாகும் – எந்த சமயத்தை சேர்ந்தவரோ சேராதவரோ அவர்கள் அனைவருக்காகவும்.
இந்த வேகமாக வளரும் சமூகத்தின் பெரும்பாலான நடவடிக்கைகள் உள்ளூர் அளவில், அண்டைப்புற அளவிலும் கூட நடைபெறுகவதே இதில் மனதை மிகவும் கவர்வதாக இருக்கின்றது. ‘என்றென்றும் தொடர்ந்து முன்னேறிடும் நாகரிகத்தினை மேலும் முன்னேற்றமடையச் செய்யவே மனிதரெல்லாம் படைக்கப்பட்டுள்ளனர்’ என பஹாவுல்லா கூறியுள்ளார். தங்களின் சொந்த சமூகத்தில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை உண்டுபன்னும் தனிநபர்களின் முயற்சிகளில் இந்த உண்மை பிரதிபலிக்கப்படுகின்றது. விழாக்களுக்காகவும் இன்பத்திற்காகவும் மட்டுமின்றி — ஒரு குறிக்கோள்மிகு வழியில் மக்களை ஒன்றுதிரட்டுவது –சக்திமிக்கதாகி ஒரு சிறிய சூழலில் வெளிப்படையாக தென்படவும் செய்கின்றது.
ஆனால் பஹாவுல்லா என்பார் யார்? இரான் நாட்டின் தலைநகரில், 12 நவம்பர் 1817-இல் பிறந்த பஹாவுல்லா ஷா மன்னரின் சபையில் ஒரு பிரபலமான அமைச்சரின் மகன் என்பதோடு, சிறுவயது முதல் அசாதாரன பண்புகளையும் விவேகத்தையும் வெளிப்படுத்தினார். அரசசபையில் தமது தந்தை வகித்த அதே பதவியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ஒடுக்கப்பட்டோருக்கு, நோயுற்றோர் மற்றும் ஏழைகளுக்கு உதவுவது ஆகியவற்றில் தமது நேரத்தை செலவழித்து, விரைவில் நீதியின் வாகையராகினார். அவர் மக்களின் மேம்பாட்டிற்கும் கல்விக்கும் தொடர்ந்து தம்மை அர்ப்பணித்து வந்தார்.
இக்காலத்திற்கான கடவுளின் தூதர் எனவும், கடந்தகால சமயங்களின் தீர்க்கதரிசனங்கள் அனைத்தின் நிறைவேற்றுனர் எனவும் பஹாய்களால் கருதப்படும் பஹாவுல்லா, மானிடத்தின் ஒருமையைப் பிரகடனப்படுத்தியதோடு, எல்லாருமே ஒரே கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் மற்றும் பேணப்படுகின்றனர் என போதித்தார். ஆண் பெண் சமத்துவம், தப்பெண்ணங்களை நீக்குவது, அறிவியல், சமயம் இரண்டிற்கிடையில் இணக்கம், சர்வலோக கல்விக்கான அவசியம் ஆகிய கோட்பாடுகளை அவர் ஊக்குவித்தார். சமயங்கள் அனைத்தும் ஒரே மூலாதாரத்திலிருந்து உதித்தும், இயல்பில் அவை படிப்படியான முன்னேற்றம் காண்பவை எனவும் அவர் விளக்கினார்; இக்காலத்திற்கான கடவுளின் போதனைகள், தற்போது முதிர்ச்சியை நோக்கி அணுகிவரும் ஒரு மானிடத்தின் சூழலுக்கும் தேவைகளுக்கும் பொருத்தமானவையாக இருக்கின்றன. கிழக்கு தேசங்களின் அரச்ர்களும், இரான் நாட்டின் மதகுருக்களும் பஹாவுல்லாவுக்கு எதிராக முன்னெழுந்தனர்; அவர் சித்திரவதை செய்யப்பட்டார், ஏளனம் செய்யப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டார். அதன் பிறகு இரான் நாட்டிலிருந்து பாக்தாத்திற்கும், பிறகு துருக்கி நாட்டிற்கும், இறுதியாக இஸ்ரேல் நாட்டின் சிறை நகரான அக்காநகரில் சிறை வைக்கப்பட்டும், அங்கேயே 1892-இல் விண்ணேற்றமும் அடைந்தார்.
பஹாவுல்லாவின் மேன்மையை குறைப்பதற்கு அவரின் எதிரிகள் முயன்று வந்த அதே வேளை, அவரது புகழும் செல்வாக்கும் நாளுக்கு நாள் அதிகரிந்து வந்தன. அவர் இழப்பீடு ஏதுமின்றி இன்னல்கள் அனுபவித்தார்; அன்பு, அமைதி, தன்மைமாற்றம் ஆகியவை குறித்த அவரது போதனைகள் மில்லியன் கணக்கான உலகவாசிகளைச் சென்றடைந்தன. பஹாய்களும், அவர்களின் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளும் இன்று உலகின் எல்லா நாடுகளிலும் காணப்படலாம்.
இப்போதனைகள் சிலருக்காக மட்டும் வந்த போதனைகள் அல்ல, அல்லது இருநூறாம் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் அதன் சொந்த நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் உரியவையுமல்ல. அது உரையாடல்கள், உடனுழைப்பு, எல்லாரின் வலிமைகளிலிருந்தும் பயன் பெற கற்றுக்கொள்வதற்குமான வாய்ப்பாகும்எல்லாவிடங்களிலும், ஒவ்வொரு மட்டத்திலும், வாழ்க்கையின் செயல்முறைகள் நாம் ஒன்றுபடுவதைச் சார்ந்துள்ளன, பிரித்திடுவதிலல்ல. “மனித இனத்தின் ஒற்றுமை வலுவாக நிலைநாட்டப் படாதவரையில் அதன் நலமும், அமைதியும், பாதுகாப்பும் அடையவே முடியாதவையாகும்,” என பஹாவுல்லா குறிப்பிடுகின்றார். ஒற்றுமைக்கான இச்செய்தியும் அதனை அடைவதற்கான செயல்திட்டமும் போர்களைத் தவிர்ப்பது, அல்லது ஒருவருக்கு ஒருவர் நயத்துடன் நடந்துகொள்வதற்கும் மேற்பட்ட ஒன்றாகும். அது மிகவும் உயர்ந்த நிலையிலான செயல்பாட்டிற்கான ஓர் அழைப்பாகும். பஹாய் சமூகத்தைப் பொறுத்தவரை, நமது குடும்பங்களில், அண்டையர்கள், சக ஊழியர்கள், நண்பர்கள் ஆகியோரிடமே இவை அனைத்தும் ஆரம்பிக்கின்றன.
மேலும் தகவலுக்கு: bahai.org