நம்பிக்கையின் ஒளி, கதைகள்
பஹாவுல்லாவின் சக்தியால் பல ஆன்மாக்கள் தங்களின் உயிரையே தியாகம் செய்திடும் அளவிற்கு பெரும் மாற்றத்திற்குள்ளாகினர். அத்தகையோரில் பதினாறு வயதினராக இருந்த படீ’யும் ஒருவராவார். படீ` நாஸிருத்தீன் ஷாவிற்கான பஹாவுல்லாவின் நிருபத்தை வழங்குவதற்காக பஹாவுல்லாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அக்கா நகர் சென்று பஹாவுல்லாவை சந்தித்த பிறகு, அவர் தம்மிடம் பாதுகாப்பாக கொடுத்திருந்த நாஸிருத்தீன் ஷாவிற்கான நிருபத்தை எடுத்துக்கொண்டு இரான் நாட்டிற்கு திரும்பி சென்று, மன்னர் வேட்டைக்காக சென்றிருந்த இடத்திற்கே சென்று பல நாள்கள் காத்திருந்து நிருபத்தை வழங்கிட முயன்றார். அவரைக் கைது செய்த காவலர்கள் அவரிடமிருந்து நிருபத்தைக் கைப்பற்றி அவருடன் வேறு யாரும் இருக்கின்றனார என்பதை அறிய அவரை சித்திரவதை செய்தனர். சித்திரவதை செய்தோரில் ஒருவர் பின்வருவனவற்றை விவரித்தார்:
- பஹாவுல்லாவை அறிவதற்கு முன், 16 வயது இளைஞராக படீ`
ஒரு கைப்பிடி மண்ணாக இருந்த படி, பஹாவுல்லாவினால் வலிமை, ‘சக்தி ஆகியவற்றின் ஆவி’ அதனுள் ஊதியருளப்பட்ட ஓர் ஆன்மாகவாகத் தன்மைமாற்றம் அடைந்தார். அவரின் கொலையாளி ஒருவர், முதிர்ந்த வயதில், தெஹரானில் இருந்த ஒரு பஹாய் குடும்பத்திற்கு விஜயம் செய்தார். அவர் கூறியது பின்வருமாறு:
ஒரு நாள், தெஹரான் நகரின் பஹாய் நண்பர் ஒருவர் தமது பக்கத்து வீட்டிற்கு ஒரு புதிய அண்டையர் வந்திருப்பதாகவும், அண்டையர் எனும் முறையில் அவரைத் தங்கள் இல்லத்திற்கு வர அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். புதிய பக்கத்துவீட்டுக்காரார் ஒரு முதியவர். பற்கள் பலவற்றை இழந்திருந்த போதும், நிறைவான தாடியும், அச்சமூட்டும் இரண்டு கண்கள் கொண்டவராகவும் அவர் இருந்தார். அவர் தம்மோடு ஒரு மதுபான புட்டியும் கொண்டு வந்திருந்தார். வரவேற்பறையில் உட்கார்ந்த அவர், சுற்றிலும் பார்த்தார். அப்போது சுவற்றில் அப்துல்-பஹாவின் படம் அவர் கண்களுக்கு தென்பட்டது. உடனே அவர் தமது கையிலிருந்த மதுப்புட்டியை தமது அங்கியில் மறைத்துக்கொண்டு, வெட்கத்தால் தலை குனிந்தார். மாலை வேளை கடந்த போது அவர் தமது வாழ்க்கையைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். அவர் நாஸிரித்தீன் ஷா’வின் கொலைஞர்களுள் ஒருவராக இருந்தார். அவர் மன்னரின் ஆணைப்படி பலரைக் கொன்றிருக்கின்றார் ஆனால் அவர்களுள் ஒருவர் மட்டும் வேறுபட்டவராக இருந்தார். படீ’யைக் குறிப்பிட்டு, ஷா’விற்கு ஒரு கடிதத்தை கொண்டு வந்திருந்த ஒருவரை, தம்மால் மறக்க இயலவில்லை என்றார். படீ’யை சித்திரவதை செய்து கொலை செய்தோருள் அவரும் ஒரவராக இருந்தார்.
- சித்திரவதை செய்யப்படும்போது எடுக்கப்பட்ட படம். அவருக்கு முன் கீழே சூட்டுகோல்களும், அடுப்பும் உள்ளன.
அந்த இளைஞர் என்ன வஸ்துவினால் உருவாக்கப்பட்டிருந்தார் என தமக்குப் புரியவில்லை என நினனவுகூர்ந்தார். “அது என்ன இரும்பா, எஃகு`வினால் ஆனதா, எதனைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தார் என எனக்குத் தெரியவில்லை. நாங்கள் இரும்புக் கம்பிகளை அவை செந்நிறமாகும் வரை நெருப்பில் இட்டோம். குறைந்தது ஒரு பாப்`யின் பெயரையாவது குறிப்பிடுவதற்காக, இரும்புக் கம்பிகளை ஒவ்வொன்றாக அவரது உடலில் இட்டோம். ஆனால் பயனில்லை. அவர் மௌனமாகவே இருந்தார். அவரை சித்திரவதை செய்தோரில் நாங்களும் சிலர்.

அவர் ஒன்றுமே கூறவில்லை. இறுதியில் நாங்கள் அதுவரை செய்யாத ஒன்றை செய்திட தீர்மானித்தோம். நாங்கள் ஒரு செங்கல்லை எடுத்து அது சிவப்பாக மாறும் வரை நெருப்பிலிட்டோம். பிறகு அதை அவரது நெஞ்சில் வைத்தோம். அவர் அப்போதும் ஒரு சப்தமிடவில்லை. அந்த இளைஞர், தமது உடலை விடுத்து வேறு எங்கோ இருந்ததைப் போன்று அவர் பார்வை வேறு எங்கோ பதிந்திருந்தது. அவர் ஏதாவது கூறுவார் என நாங்கள் வீண் நம்பிக்கை கொண்டிருந்தோம். இறுதியில் எங்கள் நடவடிக்கைகளைக் கைவிட்டு, ஒரு கொட்டாப்புளியைக் கொண்டு அவர் தலையை சிதைத்து விட்டு கலான்டுவில் கற்களுக்குக் கீழே அவரது உடலலை வீசியெறிந்தோம்”. (பைஃஸி, தஸ்தான் தொஸ்தான் பக். 52-53)
“மரியாதைக்குறிய படீ`யை நினைவு நினைவுகூர்வீராக, …அவர் எவ்வாறு தமது உயிரைத் தியாகம் செய்தார் என்பதைச் ஆழச்திந்தியுங்கள்… இவ்விதமான விஷயங்கள் மறுக்கப்படுமேயானால், வேறு எதுதான் நம்பிக்கை வைக்கப்படுவதற்கான மதிப்புடையதாக இருந்திடும்? (பஹாவுல்லா, ஓநாயின் மைந்தனுக்கான நிருபம், பக் 72)