மாஸ்டர் அப்துல் பஹாவின் மீது நோன்பானது எவ்வாறு களைபூட்டியது என்பதைப் பின்வரும் அற்புதமான கதை பறைசாற்றுகின்றது.
அக்காநகரத்தில் தன்னுடைய வாழ்க்கையுடன் தொடர்புடைய கொடுமைகள் மற்றும் துன்பங்களை குறிப்பதற்காக “சிறைச்சாலையின் சுடரொளிகள்” என்ற சொற்றொடர் பேரொளியின் நா(பஹாவுல்லா) அவர்களால் வெளிப்படுத்தப்பட்டு அந்த நகரத்தில் வசிக்கும் நம்பிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது; இது நண்பர்களுக்கிடையே வாய் வார்த்தையின் மூலம் பரவி இருந்தது.
ஆரம்பத்தில் இந்தத் துன்பங்கள் நிறையவே இருந்தன, ஆனால் காலப்போக்கிலும், சீதோஷ்ணநிலை மாற்றத்தினாலும் அவை கொஞ்சம் கொஞ்சமாக அவற்றில் பல மறைந்து வந்தன, முக்கியமாக அந்த சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களால் அவை மறைந்தன. மற்ற துன்பங்கள் தொடரவே செய்தன. பஹாவுல்லா சிறைப்பட்டிருந்த காலத்தில் அந்தக் குடியிருப்பில், அங்கு வசிப்பவர்களில் பெரும் எண்ணிக்கையானோரைத் தாக்கியிருந்த, பல கொடிய நோய்கள், தடயமில்லாமல் மறைந்தன; அதே போல அந்த விஷ நோய்களுக்குக் காரணமாயிருந்த அதைப் பரப்பிய துர்நாற்றமுடைய வாயுக்களும் மறைந்துவிட்டிருந்தன.
இருப்பினும், “சிறைச்சாலையின் சுடரொளிகளில்” ஒன்றைக் காலமும் சூழலின் மாற்றமும் ஒன்றுமே செய்ய முடியவில்லை, அது அங்கிருந்த தெள்ளுப்பூச்சிகள், ஈக்கள், கொசுக்கள், எறும்புகள் ஆகியவற்றின் தாக்குதல் ஆகும், ‘அக்காநகரின் பூச்சிகளால் கடிபட்ட ஒருவர் ஆசிபெற்றவர்’, என்ற சொற்றொடர் இதனை உறுதி செய்வதாக இருக்கிறது மற்றொன்று பஹாவுல்லாவின் ஆணைக்கேற்ப சிறைவாசம் முடியும் வரை இஸ்லாமிய புனித மாதத்தைக் கொண்டாடுவதற்காக அனுசரிக்கப்பட்ட முப்பது நாள் நோன்பாகும்.
இந்த முப்பது நாள் விரதம், இஸ்லாமிய காலண்டரின்படி ரமலான் மாதத்தில் அனுசரிக்கப்பட்டது, இது சிறைவாசம் முடிவிற்கு வந்த 1909 வரை அனுசரிக்கப்பட்டது. சற்று சவுகரியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்த புனித யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர் நம்பிக்கையாளர்களுக்கு இந்த முப்பது நாள் விரதம் கடினமான ஒன்றாக இருந்ததில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் மையமான அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நபருக்கு, பல பணிகள் மற்றும் கடினங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்த அவருக்கு, இத்தகைய ஒரு நோன்பு எவ்வளவு கடினமானதாகும் களைப்பூட்டக்கூடியதாக இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். குறிப்பாக அக்கா நகர இஸ்லாமியர்கள், அரசாங்க அதிகாரிகள் உட்பட அனைவரும், தங்களின் இரவு மற்றும் பகலை தங்களது வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டு, பகல் நேரத்தில் தூங்கி, இரவில், நோன்பையும் கட்டாய பிரார்த்தனைகளையும் முடித்த பிறகு, அப்துல் பஹாவின் அறைக்கு வந்த தங்களின் இரவுகளைக் கழித்து மாஸ்டரை விடியும் வரை தொந்தரவு செய்வார்கள்.
ஆனால் அந்த ஆன்மீக மற்றும் சொர்கத்தை சேர்ந்தவர் கதிரவன் உதிப்பதற்கு முன் எழுந்து தனது பல பணிகளை செய்வார். அதனால் ரமலான் மாதங்களில் அப்துல் பஹாவிற்கு சவுகரியம் என்பதே சாத்தியமில்லாமல் இருந்தது; சில நேரங்களில் சாப்பிடுவதற்கான வாய்ப்பும் இல்லாமலேயே இருந்தது, அதனால் காலை உணவு சாப்பிடாமல் நோன்பை ஆரம்பித்து இரவு உணவு இல்லாமல் அந்த நாள் முடிந்து விடும். அதனால் “மிகப் பெரும் சிறையின் சுடரொளி” அவரது பலத்தை உறிஞ்சி அவரது உடலைப் பலவீனமாக்கியது. பல நேரங்களில் அந்த நாட்களில் நான் ஆடிப்போகும் வகையில் மாஸ்டர் சோர்வடைந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு நாள் தனது அறைக்கு அவர் முன்னிலைக்கு அவர் என்னை அழைத்தார். அவர் பேசிய போது, அவரது குரலில் களைப்பையும் சோகத்தின் சாயலும் தென்பட்டது. அவர் மெதுவாகத் தரையில் நடந்து மிகக் கடினத்துடன் படிகளை ஏற ஆரம்பித்தார். சோர்வின் அடையாளம் களைப்பு மற்றும் மகிழ்ச்சியின்மைக்கு வழிவகுத்தது: “ நான் நன்றாக இல்லை. நேற்று நான் காலை உணவை உண்ணவில்லை மற்றும் நோன்பு முடிக்கும் நேரத்திலும் நான் எதையும் உண்ணவில்லை. எனக்குச் சற்று ஓய்வு தேவை.” அவர் பேசும் போது, அவரது முடம் மிகவும் வெளிறி இருந்ததைப் பார்த்து அவரது உடல் நலம் குறித்து நான் கவலை அடைந்தேன். அதனால் நான் தைரியமாக இதைக் கூறினேன்,” மாஸ்டர் இப்போது நோன்பை முடித்துக் கொள்வது நல்லது.”
“இல்லை, அது சரியாக இருக்காது,” என்பது அப்துல் பஹாவின் பதிலாக இருந்தது.
நான் விடவில்லை. “ மாஸ்டர் இப்போது இருக்கும் நிலையில், நோன்பு இருப்பதும் சரியாக இருக்காது.”
“அது முக்கியமில்லை, நான் சற்று நேரம் ஓய்வெடுக்கிறேன்,” என்று பதில் அளித்தார் அப்துல் பஹா.
நான் விடாப்பிடியாக,”மாஸ்டர் இத்தகைய உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பதை நம்பிக்கையாளர்களால் தாங்கி கொள்ள முடியாது,” என்றேன்.
எண்ணைச் சமாதான படுத்தும் வகையில் அவர் ஆக்கப்பூர்வமான மற்றும் நெகிழவைக்கும் ஒரு விளக்கத்தை அப்துல் பஹா எனக்குக் கொடுத்தார். ஆனால் அது வேலை செய்யவில்லை. இன்னும் சொல்ல போனால், அது என்னை இன்னும் விடாப்பிடியாக்கியது, நான் தொடர்ந்து அவரை நோன்பைக் கைவிடுவதற்காக அவரைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்தேன். அவர் செவி சாய்க்காததால், என்னுடைய வார்த்தைகளில் கண்ணீரும் புலம்பலும் கலந்து கொண்டது. ஆனாலும் அவர் விடவில்லை.
அப்துல் பஹா எனக்கு அளித்த அணைத்து காரணங்களையும் தாண்டி, எனக்குள் விடாமுயற்சி எண்ணும் புதிய பண்பு இருப்பதை நான் திடீரென்று கண்டுபிடித்தேன். அதனால் பிடிவாதமாக எனக்கு நானே,” என்ன வந்தாலும் சரி, நான் என்னுடைய நோக்கத்தை அடையும் வரை தொடர்ந்து கெஞ்சி, இறைஞ்சி, மன்றாடுவேன், ஏனெனில் இந்த உலகத்தின் அன்பிற்குரியவர் இந்த நிலையில் இருப்பதை எண்ணால் பார்க்க முடியாது,” என்று கூறிக் கொண்டேன்.
கெஞ்சி மன்றாடிக் கொண்டிருக்கும் போது என் மனதில் பல வினோதமான எண்ணங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. இறைவனின் பார்வையில் என்னுடைய சேவையும் அர்ப்பணிப்பும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்டறிய முயற்சித்தது போல அது இருந்தது. இந்தக் காரியத்தில் வெற்றி காண்பது தான் ஒரு நல்ல அறிகுறியாக எனக்குத் தென்பட்டது. அதனால் எனது மனதில் ஆழத்திலிருந்து நாம் மிகப் புனித கல்லறையை உதவிக்கு அழைத்தேன்.
திடீரென்று இந்த வார்த்தைகள் என்னுடைய உதட்டில் வெளிப்பட்டது,” அப்படியென்றால் நான் ஒரு ஆலோசனையை வழங்கட்டுமா?” என்றேன்.
“என்னை என்ன செய்ய சொல்கிறாய்?” என்றார் அப்துல் பஹா.
என்னுடைய கண்களில் நீர் வழிந்தோட, நான் அவரைக் கெஞ்சினேன்,” பஹாவுல்லாவின் இந்த பாவப்பட்ட சேவகனின் இதயத்திற்கு மகிழ்ச்சியளிப்பதற்காக, இந்த ஒரு முறை உங்கள் நோன்பை முடித்துக் கொள்ளுங்கள்” என்றேன்.
இறைவன் போற்றப்படுவாராக, இந்த வார்த்தைகள் எங்கிருந்த வந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அன்பு மற்றும் பரிவின் சாரமாக விளங்குபவர் இதயத்திற்கு அது மகிழ்ச்சியைக் கொண்டு வந்து,” நிச்சயமாக, நிச்சயமாக, நிச்சயமாக” என்று அவர் கூறினார்.
உடனடியாக அவர் நாசிரை அழைத்து,” கொஞ்சம் நீரைக் கொதிக்கவிட்டு எனக்காக ஒரு கோப்பை தேநீர் செய்யுங்கள்,” என்றார். மேலும் அவரது ஆசீர்வதிக்கப்பட்ட கையை எனது தோலின் மீது வைத்து,” இப்போது நீங்கள் களைப்படைந்து விட்டீர்களா? நீங்கள் விரும்பினால், இப்போது சென்று உங்களுடைய பணிகளை நீங்கள் செய்யலாம், நான் தேநீர் அருந்தி விட்டு உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
என்னுடைய உடலில் அந்தத் தருணத்தில் மகிழ்ச்சி மற்றும் பரவசம் வழிந்தோடியது, அதனால் எண்ணால் ஒரு சரியான பதில் கூட அவருக்குச் சொல்ல முடியவில்லை. என்னைப் பார்த்து, அப்துல் பஹா,” என்னுடைய நோன்பை முடிக்கும் போது உனது சொந்த கண்களால் அதனைப் பார்க்க இங்கு இருக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் வாருங்கள், எண்ணுடன் அமருங்கள்” என்றார். பிறகு அவர் தனது சிறிய அலுவலகத்திற்குள் சென்று, பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார், நான் அதனை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆகா ரைடா மாஸ்டரின் முன்னிலைக்கு எதோ ஒரு காரணத்திற்காக வந்திருந்தார். அப்துல் பஹா அவரிடம் கூறினார்,”இன்று நான் உடல் நலமில்லாமல் இருக்கிறேன் மற்றும் இறைவனின் அன்பிருகுரிய ஒருவரின் வேண்டுகோளிற்கு இணங்க நான் என்னுடைய நோன்பை முடிக்க விரும்புகிறேன்,” என்றார்.
ஆகா ரைடா அரையை விட்டு வெளியேறிய போது, ஒரு கோப்பை தேநீரும் ஒரு கிண்ணம் சக்கரையும் அவருக்கு முன் கொண்டு வரப்பட்டது. பிறகு என்னைப் பார்த்து, அப்துல் பஹா இவ்வாறு கூறினார், “ஜினாப்-ஈ-ஃகான், நீங்கள் ஒரு போற்றுதற்குரிய சேவையைச் செய்துள்ளீர்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். நான் என்னுடைய நோன்பை முடிக்கவில்லை என்றால், நிச்சியமாக நான் நோய்வாய்ப்பட்டு நோன்பை வலுக்கட்டாயமாக முடித்திருக்க வேண்டியிருக்கும்.” என்றார். ஒவ்வொரு முறை தேநீர் பருகும் போது அவர் என்னிடம் இது போன்ற அன்பான கனிவான வார்த்தைகளைப் பொழிந்தார். அதன் பிறகு அவர் எழுந்து, “இப்போது நான் சற்று நன்றாக உணர்கிறேன், நான் என்னுடைய வேலையை முடித்த பிறகு தொடர்ந்து உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்,” என்றார்.
பிறகு அவர் படிகளில் இறங்கிச் சென்றார். வரவேற்பறையில் இப்போது மறைந்து விட்ட ஆகா சையிட் அஹ்மத்-இ-அஃப்னான்( இறந்த பிறகு உயிர் தியாகியாக அறிவிக்கப்பட்ட அதே அஃப்னான்) மட்டும் இருந்தார். அவரை நோக்கி, அப்துல் பஹா இவ்வாறு கூறினார்,” ஜினாப்-இ-அஃப்னான், இன்று நான் உடல் நலமில்லாமல் இருந்தேன், ஓய்வெடுக்க நினைத்திருந்தேன், ஆனால் ஒரு அன்பிற்குரிய நண்பரின் வேண்டுகோளிற்கு இணங்க என்னுடைய நோன்பை முடித்துக் கொண்டேன். அவ்வாறு செய்ததால் இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன், இல்லையென்றால் நான் நோய்வாய்ப்பட்டிருப்பேன். ஆனால் இப்போது நன்றாக உணர்கிறேன் அதனைச் சமயத்தின் பணிகளை நான் இப்போது தொடரலாம்.” என்றார். இதனைக் கூறிய பிறகு, அவர் அந்த அறையை விட்டு வெளியேறினார்.
சினாப்-இ-அப்னான் அவர்களின் கண்கள் தூய்மையான மகிழ்ச்சி மற்றும் களிப்புடன் பிரகாசித்தது, “இறைவா யாரந்த ‘அன்பிற்குரிய நண்பர்’, என்னுடைய வாழ்க்கையை அவருக்காக நான் தியாகம் செய்ய விரும்புகிறேன்?” என்றார். வெற்றியைப் பருகிய நான், “நான் தான் அது, நான் தான் அது” என்று கூறினேன்.
சுருக்கமாக, வாழ்க்கையைத் தியாகம் செய்ய முயற்சிக்காமல், தேவலோக மகிழ்ச்சியினால் நிரம்பி, ஒருவரை ஒருவர் அரவணைத்து எங்களுடைய ஆவிகள் உயரப் பறந்தன. இதனைச் செய்த போது, என்னுடைய நினைவகம் என்ற பெட்டியில் இந்த முப்பத்தைந்து நான் நோன்பை உண்மையில் “மிகப் பெரிய சிறையின் சுடரொளி” என்று பொறித்துக் கொண்டேன்.
(Dr. யூனுஸ் அஃப்ருக்தே, அக்காவில் ஒன்பது வருடங்களின் நினைவுகள்)