14 ஜூன் 2018
பஹாய் உலக மையம் — ஐக்கிய அமெரிக்காவின் தென் ஃபுலோரிடா மாநிலத்திலுள்ள டஜன் கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களின் கோடைக்கால விடுமுறையின் முதல் இரண்டு வாரங்களை, ஓர் அசாதாரன முறையில், கழித்தனர். அவர்கள் சமுதாய தன்மைமாற்றம் குறித்த தீவிர கவனத்துடன் ஆய்வு செய்தும் கலந்துரையாடியும் வந்துள்ளனர். அவர்கள், ஓர் அமைதியும் நீதியும் மிக்க உலகளாவிய நாகரிகத்தின் வெளிப்பாடு குறித்து, தனிநபர்களாகவும் கூட்டாகவும் தங்கள் பங்கு பற்றி சிந்தித்து வந்துள்ளனர்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு, உலகின் பல மண்டலங்களில், இது போன்ற பல குழுமங்கள், ஒன்றுகூடுவர். வட, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள், இது போன்ற தீவிர கற்றல் சூழல்களில் ஆழ்ந்திருப்பர். இதை, கிரேட்கள், சான்றுகள் அல்லது டிப்லோமாக்கள், அல்லது ஒரு தொழிலுக்கான வழி போன்ற ஊக்குவிப்புகள் இல்லாமல் செய்வர்.

இவ்வருடம் 40’க்கும் மேற்பட்ட நாடுகளில் ISGP கருத்தரங்கு நடைபெறும். இந்த பங்கேற்பாளர்கள் பிரேசில் நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒன்றுகூடினர்
“இளைஞர்களுக்கு நிறையவே திறனாற்றல் உள்ளது, அவர்கள் மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகின்றனர் என நாம் நிறையவே பேசுகின்றோம். ஆனால், அவர்களுக்கு இருக்கும் திறமைகள் குறித்தும் சமுதாயத்தைத் தன்மைமாற்றுவதற்கான அவர்களின் இலட்சியங்கள் குறித்தும் இந்தத் தளத்தில் ஒரு நுண்காட்சியை நாம் உண்மையிலேயே பெறுகின்றோம், என நான் நினைக்கின்றேன். அவர்களின் அறிவாற்றல் மற்றும் ஆன்மீக வளர்ச்சியைப் பின்தொடரவும் சமுதாயத்தின் தன்மைமாற்றத்திற்குப் பங்களிப்பதற்கான அவர்களின் திறனாற்றலை அபிவிருத்தி செய்யவும் உதவக்கூடிய ஒரு கல்வியல் திட்டத்தில் பங்கெடுக்க அவர்களுக்கு ஒரு வாய்பேற்படுமானால், மாற்றத்திற்கான ஓர் ஆழ்ந்த மூலாதாரங்களாக அவர்கள் ஆகிடக்கூடும்,” என ஆசியாவில் இந்த திட்டத்தில் பல வருடங்களாக பணியாற்றி வந்துள்ள திரு அராஷ் ஃபஸ்லி விளங்குகின்றனார்.
“தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்த வரையில், இந்தப் பங்கேற்பாளர்களுள் சிலரின் தூய நோக்கத்தையும், உபகரணங்களில் உள்ள கருத்தாக்கங்களுக்கு அவர்கள் செவிசாய்க்கும் விதம், இந்த எண்ணங்களுக்கு, உபகரணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள மேன்மைக்கான தொலைக்கிற்கான அவர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பு ஆகியவற்றைப் பார்க்கும் போது, இன்று துரதிர்ஷ்டவசமாக சமுதாயத்திலிருந்து இளைஞர்கள் ஈர்த்துக்கொள்ளும் ஏளிதவாதங்கள் பலவற்றை (இந்தப் பயிற்சி) அகற்றிவிடும். இந்த திட்டமுறை உலகளாவிய செழுமைக்கான ஆய்வகத்தினால் (ISGP) வழங்கப்படுகின்றது. இந்த (ISGP) பஹாய் போதனைகளின் அகத்தூண்டல் பெற்ற இலாப நோக்கற்ற ஆராய்ச்சி மற்றும் கல்வியல் நிறுவணமாகும். அறிவு மற்றும் நடைமுறை குறித்த பரிணமித்து வரும் முறைமைகளான அறிவியல், சமயம் ஆகியவற்றின் நிரப்பியல் பங்குகள் நாகரிகத்தின் மேம்பாட்டில் என்ன பங்காற்ற முடியுமென்பதை ஆராய்வதே ISGP’யின் நோக்கங்களில் ஒன்றாகும். தனிநபர்களுள் திறனாற்றலையும் சமுதாய சீர்திருத்தத்திற்கான தளங்களையும் உருவாக்குவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ISGP ஆய்வகம் நான்கு வருடாந்திர கருத்தரங்குகள் வரிசை ஒன்றை வழங்குகின்றது.

கசாக்ஸ்தான் நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கு. இங்கு 2010 முதல் ISGP கருத்தரங்குகள் நடைபெறுகின்றன
சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன், கோலாலம்பூர் மலேசியாவில் இளங்கலை மாணவர்களுக்கு நடைபெற்ற முதல் ISGP கருத்தரங்கில் சுமார் 30 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். அதிலிருந்து, அத்திட்டம் 103 நாடுகளிலிருந்து சமார் 5,000’க்கும் மேற்பட்ட மாணவர்களை சென்றடைந்துள்ளது.
இக்கருத்தரங்குகளின் குறி்ககோள்களில், அவர்களின் பல்கலைக்கழக கல்வி சமுதாயத்தின் தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு இணைவான ஒன்றென்பதை அவர்கள் காண்பதற்கு உதவுவதே ஆகும். ஆழ்ந்த மாற்றத்தின்– அதற்கு என்ன தேவை மற்றும் அது எவ்வாறு நிகழும் –இயல்பின் மீது பிரதிபலிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதன் மூலம் அதிக நீதியும் ஒற்றுமையும் நிறைந்த ஓர் உலகிற்கான அவர்களின் இலட்சியங்களை பலப்படுத்துவதைக் கருந்தரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமுதாயத் தன்மையாற்ற செயல்முறைகளில் இளைஞர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்குள்ளது எனும் புரிதலோடு பல மாணவர்கள் கருத்தரங்கிற்கு வருகின்றனர்,” என பிரான்ஸ் நாட்டின் ISGP ஒருங்கிணைப்பு குழுமத்தில் ஒருவரான தாலியா மெலிக் விளக்கினார். “அவர்கள் சேவை சார்ந்த வாழ்க்கைகளை வாழவும், மானிட வாழ்வின் எல்லா அம்சங்களிலும் மானிடத்திற்குப் பங்களிக்கவும் அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள், மேலும் அதிகமாகக் கற்பதற்கான ஊக்குவிப்பிற்கு மூலாதாரமாக இருக்கும் சில நடைமுறையான சில கேள்விகளுடன் வருகின்றனர்; உதாரணத்திற்கு, “மானிடத்தின் நலனுக்காக என்னுடைய கல்வியையும் வருங்காலத் தொழிலையும் நான் எவ்வாறு பயன்படுத்த முடியும்?”
“தங்களின் வருங்காலம், இத்தகைய தீர்மானங்களை ஓர் ஒத்திசைவான வழியில் எவ்வாறு எடுப்பது என்பவை குறித்து மாணவர்கள் மிகவும் தீவிர மற்றும் நேர்மையான கேள்விகளை மாணவர்கள் கேட்கின்றனர்; மாணவர்களுடன் மிகவும் ஒத்திசைவாக இருக்கும் ஒன்றாக பல்கலைக்கழக சூழலுக்கு ஓர் உள்ளார்ந்த மதிப்புள்ளது என்பது அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த ஒன்றாகும்: அது அவர்கள் சேவையாற்றுவதற்கும் சேவையாற்றவதற்கான திறனாற்றலை உருவாக்கிக்கொள்வதற்குமான ஒரு தளமாகும்,” என குமாரி மெலிக் கூறுகின்றார். இது அவர்கள் அடைந்துவரும் அறிவின் மூலமாக அல்லது அவர்களின் சகாக்கள் அல்லது பேராசிரியர்களிடம் உரையாடுவதற்கு அவர்களுக்குள்ள வாய்ப்புகளின் மூலமாக அல்லது அவர்களின் துறைகளுக்கு பஹாய் கோட்பாடுகள் எவ்வாறு பொருத்தமுறுகின்றன என்பதை ஆராய்வதன் மூலமா நடைபெறுகின்றது.

பிரிட்டிஷ் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கு.
சமயத்தை அவர்களின் சொந்த வாழ்க்கையின் அடிப்படையில் மட்டுமின்றி அது நாகரிக நிர்மாணத்திற்கு எவ்வாறு உதவுகின்றது என்பதை ஆராய்ந்திட கருத்தரங்குகள் அவர்களுக்கு உதவுகின்றன.
பருவநிலை மாற்றம், இனவாதம், பொருளாதார சமத்துவமின்மை போன்ற, மானிடம் இன்று போராடி வரும் பிரச்சினைகளுடன் தொடர்பு கொண்ட ஆன்மீக கோட்பாடுகளை அவர்கள் ஆராய்கின்றனர்.

கென்யா நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கு.
மாற்றம் குறித்த மேலோட்டமான அல்லது எளிமையான கருக்கோள்களுக்கு அப்பால் சிந்தித்திட மாணவர்களுக்கு உதவியளிக்கப் படுகின்றது. அதே நேரம், இளைஞர்கள் மூன்றாம் நிலை கல்வியை முடித்து பணிகளை மேற்கொள்ளும் போது அவர்களுள் ஏற்படும் ஓர் நம்பிக்கையின்மையிலிருந்து ஆவர்களைத் தடுப்பதற்கும் கருத்தரங்குகள் நோக்கங்கொண்டுள்ளன. –தங்களின் பங்களிப்புகள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா மற்றும் பொதுவாக இந்த உலகம் உண்மையிலேயே சீர்திருத்தம் பெறுமா என்பது குறித்த ஒரு ஏமாற்ற நிலையிலிருந்து பிறக்கும் ஒரு நம்பிக்கையின்மை.
கருத்தரங்கின் நான்கு வருட காலத்திற்குப் பயிலப்படும் பாடங்கள், அவர்களின் கல்வி என்பது ஒரு வேலை கிடைப்பதற்கான வழியோ, ஒருவரின் தனிப்பட்ட தொழில் முன்னேற்றத்திற்கான வாகனமோ அல்ல என்பதை உணர்வதற்கு உதவுகின்றது; அவர்களின் ஆய்வுத் துறைகள், சமுதாயத்திற்குப் பங்களிப்பதற்கான அவர்களின் திறனை சரியான திசையில், ஒற்றுமை, நீதி, மனிதகுல ஒருமை குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை நோக்கி வழிநடத்துவதில் மிகவும் மதிப்புடையதாக இருப்பதைக் காண்பதற்கு அவர்களுக்கு உதவுகின்றது.
“மானிடம் இன்று போராடி வரும், பருவநிலை மாற்றம், இனவாதம், மற்றும் பொளாதார சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளுடன் ஆன்மீகக் கோட்பாடுகள் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பதை அவர்கள் ஆராய்கின்றனர்.”
– தாலியா மெலிக்
நான்காண்டுகால பயிற்சியினூடே, அறிவியலுக்கும், சமயத்திற்கும் இடையிலான தொடர்பு போன்ற, பல விஷயங்களின் ஒரு நெடுக்கத்தை மாணவர்கள் ஆராய்கின்றனர்; அதில் அறிவியல் சார்ந்த செயல்திறன்களை உருவாக்கிக்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்கின்றனர். அவர்கள் சமுதாய ஆற்றல்களை பகுப்பாய்வு செய்ய கற்றுக்கொள்கின்றனர்; சமுதாயத்தின் நன்மைக்காக தங்களின் சக்திகளை எவ்வாறு விளைவுத்திறத்தோடு பயன்படுத்துவது என்பதைப் பற்றி சிந்திக்கின்றனர். கூடுதலாக, குறிப்பாக அவர்கள் தங்களின் தொழில்களைத் தேர்ந்தெடுத்து, வருங்காலத்திற்கான ஒரு பாதையை வகுத்து வரும் ஒரு முக்கிய காலகட்டத்தில் வாழ்வின் ஆன்மீக மற்றும் லௌகீக பரிமாணங்கள் எவ்வாறு ஒன்று மற்றொன்றை பலப்படுத்துகின்றன என்பதை ஆராய்வதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.

இந்தியாவில் நடைபெற்ற கருத்தரங்கு.
“பல்கலைக்கழக மாணவர்கள் இளங்கலை வருடங்களில் மிகவும் கடினமான சவால்களை எதிர்நோக்குகின்றனர். வாழ்க்கையின் நோக்கம் என்ன, வெற்றி என்பது என்ன, மகிழ்ச்சி என்றால் என்ன, ஒரு நல்ல வாழ்க்கை என்பது என்ன, அவ்வித ஒரு வாழ்வை அடைவதற்காகப் போராடுவது எவ்வளவு முக்கியம் என்பன போன்ற பல தகவல்களால் அவர்கள் தாக்கப்படுகின்றனர்,” என வட அமெரிக்க மாநாடுகளின் ஒருங்கிணைப்பு குழுமத்தில் ஒருவரான எரன் யேட்ஸ் பிரதிபிலிக்கின்றார்.
எவ்வாறு சமகால கல்வியானது, சமுதாயத்தின் பலக்கிய தன்மையைப் பற்றிய ஒரு புரிதலை மாணவர்களுக்குப் பெரும்பாலும் வழங்குவதில்லை என்பதை திரு யேட்ஸ் விவாதித்தார். “பல கல்வியல் திட்டங்கள், சமுதாயம் என்பது ஒரு தனிநபர்களின் தொகுப்பு என்பதற்கும் மேற்பட்டு மாணவர்களுக்கு எவ்வித புரிதலையும் வழங்குவதில்லை. ஸ்தாபனம் எனும் எண்ணம் கூட ஆழமாக ஆராயப்படும் ஒரு விஷயமாக இருக்கவில்லை. ஒரு ஸ்தாபனம் என்றால் என்ன மற்றும் அவை எவ்வழிகளில் நமது சமுதாயத்திற்கு கட்டமைப்பை உண்மையில் வழங்குகின்றன என்பதற்கு கவனம் செலுத்தப்படுவதில்லை. ஆதலால், தனிநபர் மட்டத்திற்கும் அப்பால், உலக சீர்த்திறுத்தத்திற்கு பங்களிப்பது என்றால் என்ன என்பது பற்றி சிந்திப்பதற்கான நமது திறனை அது கட்டுப்படுத்துகின்றது.
“பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டில் ஒரு சிறந்த உலகிற்கான தொலைநோக்கை காண்பதே மாநாடுகளில் கலந்துகொள்ளும் பல பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதாகத் தோன்றுகின்றது, மற்றும் சவால்களை எதிர்நோக்கும்–தங்களுடையதைப் போன்ற ஒரு காலகட்டத்தில் வாழும்– பிறருடன் ஒன்றுகூடுவதற்கான ஒரு வாய்ப்பை கருத்தரங்குகள் பிரதிநிதிக்கின்றன. “தங்களின் வருங்காலம் குறித்து முடிவெடுக்கவும், எத்திசையில் அவர்கள் செல்லவிருக்கின்றனர் என்பது குறித்தும் முடிவெடுக்கவும் செய்யும் இந்த காலகட்டம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாகும்; நாம் அனைவரும் வாழவேண்டிய இந்த உலகின் சீர்திருத்தத்திற்கு பங்களிப்பதற்கு ஏதுவாக பஹாவுல்லாவின் திருவாக்குகளில் பதிக்கப்பட்டுள்ள தொலைநோக்கை எவ்வாறு நடைமுறையாக்குவது என்பது குறித்து கவனமாக சிந்திப்பதற்கும் கருத்தரங்குகள் ஒரு வாய்ப்பாக அமைகின்றன.”
“இவ்விதமான கேள்விகளைப் பற்றி ஆராய்வதற்கு கருத்தரங்குகள் வழங்கும் இத்தகைய தளத்தை வேறெங்கும் காண்பது சுலபமல்ல,” என்கிறார் அவர.

கசாக்ஸ்தான் நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கு. இங்கு 2010 முதல் ISGP கருத்தரங்குகள் நடைபெறுகின்றன
கென்யா நாட்டில் கருத்தரங்குகளை ஒருங்கிணைக்கும், லின்னட் சிஃபூனா, கடந்த பல வருடங்களாக அங்கு கருத்தரங்கின் வளர்ச்சி குறித்து பிரதிபலிக்கின்றார். “கருத்தரங்குகளின் ஆரம்ப வருடங்களில், வெளிநீட்டிப்பு முயற்சிகளின் மூலமாக ஒன்றுதிரட்டிய ஒரு சிறிய குழுமத்தை நாங்கள் பெற்றிருந்தோம். ஆனால், அந்த முதல் வருடத்திற்குப் பிறகு, பங்குபெற்றிருந்த இளைஞர்கள் தங்களின் இல்லங்கள் திரும்பி பிறருடன் பகிர்ந்துகொண்டனர்; அதனால் அதற்கடுத்த வருடம் நாங்கள் அடைந்த எண்ணிக்கைகள் மிகவும் அதிகமாக, முதல் வருடத்தை விட மிகவும் அதிகமாக இருந்தன.”
“முதலில், இளைஞர்கள் ஒன்றுகூடுவதற்கான உற்சாகமே இது என நாங்கள் நினைத்தோம், ஆனால் அவர்கள் கருத்தரங்குகளின் மூலமாக நிறையவே பலன் பெறுகிறார்கள் என்பதை அறிந்தோம். அவர்களின் பல்கலைக்கழக கல்வியைப் பற்றி அவர்கள் புதிய வழிகளில் சிந்திப்பதற்கு அது உதவுவதோடு, அவர்களின் சமூகங்களுக்கு சேவை செய்திடவும் அது அவர்களுக்கு உத்வேகமூட்டுகின்றது,” என சிஃபூனா தொடர்ந்து கூறினார். கடந்த தசாப்தமான கருத்தரங்குகளின் மடிப்பவிழ்வு ஒரு உற்சாகமூட்டும் கதையாகும். சமுதாயத்தின் தன்மைமாற்றத்திலும் தொடர்ந்து மேம்பாடு காணுகின்ற ஓர் உலகளாவிய நாகரிகத்தின் அபிவிருத்தியிலும் இளைஞர்கள் ஓர் அடிப்படையான பங்காற்ற வேண்டும் என்பதே அதன் மையமான நம்பிக்கையாகும்.