கொலம்பியா நாட்டின் முதல் உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லம்


மூலாதாரம்: http://news.bahai.org/story/1273/

திறப்பு விழாவிற்கு முதல் நாள், கலாச்சாரம், சுற்றுச்சூழல், ஆன்மீக கோட்பாடு ஆகியவை குறித்து கட்டிடக் கலைஞர் பிரதிபலிக்கின்றார்.

norte-del-cauca-1273_00

கோவில் கட்டிட நிர்மாணிப்பின் மேம்பாட்டை மதிப்பிடுவதற்கு கட்டிடக் கலைஞர் ஜூலியன் குத்தியர்ரெஸ் சாக்கோன் கோவில் தலத்திற்கு வருகையளிக்கின்றார்.

அகுவா அஸுல் – கொலம்பியாவின் நோர்ட்டே டெல் கௌக்கா’வில் பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான வடிவமைப்புத் தேர்வு செயல்முறையில் பங்கு பெற ஜூலியன் குதியர்ரெஸ் சாக்கோன் அழைக்கப்பட்ட போது, அவர் பஹாய் சமயத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

இப்பொழுது, உலகிலேயே இரண்டாவது உள்ளூர் பஹாய் கோவிலுக்கான அவரது நிறுவணத்தின் வடிவமைப்பு ஒரு திட்பமான மெய்மையாகியுள்ளது. அந்த கட்டிடம் வரும் ஞாயிற்றுக் கிழமை திறப்பு விழா காணவிருக்கின்றது.

கோவிலின் வடிவமைப்புச் செயல்முறை குறித்து பிரதிபலிக்கையில், நோர்ட்டே டெல் கௌக்காவின் மக்களோடு, பஹாய் சமூகமும் அவர் மனதை எவ்வளவு ஆழமாக தொட்டனர் என்பதை திரு குத்தியேரெஸ் சாக்கோன் விவரித்தார். “சந்தேகமின்றி, பஹாய்களை அறித்துகொள்வதுடன், அவர்களுடனும், குறிப்பாக நோர்ட்டே டெல் கௌக்கா மக்களுடனும் பெரிதும் பகிர்ந்துகொள்வதானது, மக்களிலும், அவர்களின் நற்குணத்திலும் பணிவிலும் அதிகமாக நம்பிக்கை வைத்திட எங்களைத் தூண்டியுள்ளது,” என அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

இந்த அனுபவம், ஒரு சிறப்பான உலகம் குறித்த நம்பிக்கையை மீட்டுள்ளது. தொழில் ரீதியாக நாம் அதிகம் கற்றுள்ளோம், ஆனால் மிகவும் முக்கியமாக, தொழில்நுட்பத்தை விஞ்சிடும் ஒரு சமுதாய மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை நிலையை நம்முள் ஏற்படுத்தியுள்ளது. வரலாறு சார்ந்த இந்த முயற்சியின் ஒரு பங்கினராக இருப்பதில் நாங்கள் பெருமையடைகின்றோம்.

CUNA பொறியியல் மற்றும் தொடர்ந்து பராமரிக்கப்படக்கூடிய கட்டிடக்கலை நிறுவணத்தின் திரு குத்தியேரெஸ் சாக்கோன் மற்றும் அவரது குழுவும் சுற்றியுள்ள சமூகங்களின் இயற்கை மற்றும் சமுதாய சுற்றுச்சூழலுடனான நல்லிணக்கத்தை நாடும் திட்டங்களின் மீது கவனம் செலுத்துகின்றனர். இந்தத் துறைகள் சார்ந்த அவர்களின் அனுபவத்தை வழிபாட்டு இல்லம் சார்ந்த அணுகுமுறைக்குப் பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும், திரு குத்தியெரெஸ் சாக்கோன் மற்றும் அவரது சகாக்களுக்கு, இத்திட்டம் தனிச்சிறப்புடையதாகும், ஏனெனில், “ஆன்மீகக் கட்டிடக்கலை” என அவர்கள் வர்ணிக்கும் ஒரு துறையில் அத்திட்டம் அடியெடுத்து வைத்துள்ளது.

திரு குத்தியெரெஸ் சாக்கோன் தற்போதைய உலகின் நிலை குறித்து, பலர் கொண்டிருக்கும் குழப்ப மற்றும் துன்ப உணர்வுகளுக்கிடையே, “இக்கோவில் ஒரு துருவ நட்ச்த்திரம், ஒரு திசைகாட்டி போன்றாகும். அது நமது வாழ்க்கைகளுக்கு சரியான செல்லும் திசையை வழங்கிட இயலும்,” என விளக்குகின்றார்.

கடவுள், மானிடம், சமயம் ஆகியவற்றின்–ஒருமை குறித்த பஹாய் போதனைகள், எல்லா பஹாய் கோவில்களின் அடிப்படை வடிவத்தில் உள்ளடங்கியுள்ளன. “ஒருமை குறித்த கோட்பாடு சார்ந்த ஒரு வலுவான உணர்வை, ஒரு கட்டிடத்தில் வெளிப்படுத்துவது ஒரு வசீகரமானதும், சுவாரஸ்யமானதுமான சவாலாகும்,” என திரு குத்தியெரெஸ் சாக்கோன் கூறுகின்றார்.

உலக பஹாய்களுக்கான அதன் 1 ஆகஸ்ட் 2014 செய்தியில், பஹாய் வழிபாட்டு இல்லங்களுக்கான கட்டிடக் கலைஞர்கள் “உள்ளூர் கலாச்சாரத்தோடும் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்திடுவதற்காக ஒன்றுகூடவிருப்போரின் தினசரி வாழ்வோடு இயல்பாகவே இணக்கப்படுத்திடும் வகையில், படைப்புலகில் எந்த அளவிற்கு இயலுமோ அந்த அளவிற்கு முழுநிறைவான” கோவில்கள வடிவமைத்திடும் தனித்தன்மையான சவாலினை கட்டிடக்கலைஞர்கள் எதிர்நோக்கியுள்ளனர்,” என எழுதியுள்ளது. மேலும், கோவில்கள் பஹாய் வாழ்வுமுறையில் இரண்டு இன்றியமையாத, பிரிபடமுடியாத அம்சங்களான வழிபாடு மற்றும் சேவையை,” ஒன்றிணைக்கின்றன எனவும் எழுதியுள்ளது.

சமூக பந்தங்களை பலப்படுத்தவும், ஒற்றுமை மற்றும் நீதியின் அடிப்படையில் உறவுகள் குறித்த புதிய முறைகளை நிர்மாணிக்கவும் மேற்கொள்ளப்பட்ட பல தசாப்தங்களான முயற்யினூடே இவ்விரு சமூக வாழ்வு குறித்த அம்சங்களும் நோர்ட்டே டெல் கௌக்கா’வில் செழித்து வந்துள்ளன.

இதன் சூழலிலேயே கட்டிடக்கலை குழுமம் இந்த வரலாறு சார்ந்த திட்டத்தை மேற்கொண்டது. உள்ள கலாச்சாரம், நெறிகள், அழகுணர்வு ஆகியவற்றுடன் ஒத்திசைவான ஒரு கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில், சுற்றிலுமுள்ள சமூகங்களின் நடவடிக்கைகளில் பங்குபெற்று, அவற்றின் வாழ்வோடு தங்களைப் பரிச்சயப்படுத்திகொண்டனர். நோர்ட்டே டெல் கௌக்கா’வின் மக்கள் தங்கள் மண் மற்றும் சுற்றுச்சூழலின்பால் கொண்டிருந்த ஆழ்ந்த பந்தத்தை மதித்துணர ஆரம்பித்தனர்.

norte-del-cauca-1273_04
இந்த கட்டிடக்கலை வரைபடம், கோவில் தலத்தின் வடிவமைப்பை வானிலிருந்து பார்ப்பது போன்று அமைந்துள்ளது.

அம்மண்டலத்தின் வரலாற்று முக்கியத்துவமுடைய நிலவடிவத்தோடு கோவிலை இணைத்தலானது, வழிபாட்டு இல்லத்தைச் சூழ்ந்திருந்த நிலங்களில் ஒரு மறு மரம் நடும் திட்டத்தைத் தூண்டியது. போஸ்க் நேட்டிவோ என குறிப்பிடப்படும், அந்த இடத்தின் சுதேச தாவர வகைகளின் வளமான பல்வகைத்தன்மையை இடமாற்றம் செய்துள்ள அருகிலுள்ள கரும்புத் தோட்டங்களுடன் ஒப்பிடுகையில், சுற்றிலுமுள்ள நிலம் இப்பொழுது அரும்பி வரும் ஒரு சுதேச காட்டை உள்ளடக்கியுள்ளது.

சமூகம் இழந்திருந்தவற்றை “போஸ்க் நேட்டிவோ” தற்போது மீட்டுத் தருகின்றது, என திரு குத்தியெரெஸ் ஸாக்கோன் குறிப்பிடுகின்றார். உயிரியலாளர்கள் அந்த இடத்தின் பூர்வீக தாவர இனங்களைக் கண்டுபிடிக்க உதவி வருகின்றனர்.

சுதேச தாவரங்களைப் பற்றி மேலும் கற்பதற்கு நாங்கள் ஆரம்பித்த போது, கொக்கோ மரத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் கண்டுணர்ந்தோம். கரும்புத் தொழில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன், பொருளாதாரம், இல்ல விருந்தோம்பல், ஊட்டச் சத்துக்கான ஆதாரம், சக்திக்கான பானம், போன்ற பலவற்றிற்கு கொக்கோ மூலாதாரமாக இருந்தது.

பாரம்பரியமாக, நோர்ட்டே டெல் கௌக்கா’வின் கட்டிடங்கள் செம்மண் செங்கற்கள், இடிக்கப்பட்ட மண், அல்லது களிமண் செங்கற்களால் கட்டப்பட்டு வந்துள்ளன என்பதை கட்டிடக்கலை குழுமத்தினர் கண்டனர். அகன்ற மேற்கூரைகள் வழக்கமானவையும், அவை பெரும்பாலும் சுடப்பட்ட மண் ஓடுகளால் ஆனவையும் ஆகும்.

குழுமத்திற்கு உத்வேகமூட்டிய கொக்கோ மரம் மற்றும் உள்ளூர் கட்டிட வடிவங்களின் சில படங்களை அவர் காண்பித்து, “கொக்கோ மற்றும் மண்,” என்றார். இவையே நாங்கள் ஆராய்ந்த, மற்றும் ஒரு கருத்தாக்கத்தைப் பரிசீலிப்பதற்காக நாங்கள் பயன்படுத்திய ஓர் அணுகுமுறை,” என மேலும் கூறினார்.

கொக்கோ விதை பல கீற்றுத் துண்டுகளால் ஆனது, ஆனால் அந்தக் கீற்றுகள் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன. “கூறையின் மண்ணையும் கோவிலின் சுவர்களையும் கீற்றுகளால் ஆன பழக்கமான ஒன்பது பக்கங்களைக் கொண்ட வடிவத்தை உருவாக்கினோம்,” என திரு குத்தியெரெஸ் சாக்கோன் கூறுகின்றார்.

கொக்கோ செடி குறித்த உட்கருத்து பற்றி அவர் மேலும் விரிவாக உரைத்தார்: “அதிபெரும் நாமத்தைப் பொருத்துவதற்கு ஏதுவாக, கோவில் ஒரு முகட்டை பெற்றிருக்க வேண்டுமென நாங்கள் விரும்பினோம். இது, உயிரை உருவாக்கும் கொக்கோ விதையின் பூவோடு ஒத்திருக்கும் ஓர் உணர்வை உண்டாக்கும்.” இந்த முகடு, செம்மண் ஓடுகளால் ஆன கூறையின் மீது அமர்ந்திருக்கும் இந்த மஞ்சள் நிற முகடானது, பகலில் சுர்ய வெளிச்சத்தை ஈர்த்துக்கொண்டு, சூர்ய அஸ்தமனத்தில் இயற்கையாக ஒளியூட்டும் ஒரு வகை ஒளிரும் பொருளால் ஆனது.

norte-del-cauca-1273_05
சுடுமண் ஓட்டுக் கூரை உட்பட, அதன் கட்டிடக்கலை கோவிலின் வெளி அம்சங்கள், குழுமத்தின் வரைபடத்திலிருந்து காட்டப்படுகின்றn

திரு குத்தியெரெஸ் சாக்கோ’னுக்கு கோவில் திட்டத்தில் ஈடுபட்டிருந்த பல மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஒரு சிறப்புக் கூறாக இருந்தது. இதில் ஈடுபட்டிருந்த தொழிலர்கள், “இந்த அனுபவத்தை ஒரு வேலை என்பதற்கும் மேலான ஒன்றாகக் கருதினர். ஆரம்பத்திலிருந்தே எல்லாருமே பஹாய் தத்துவங்களினால் உத்வேகம் பெற்றும், இந்தத் திட்டம் மாணிடத்திற்கு என்ன நேர்மறை தாக்கத்தை உண்டாக்கும் என்பது குறித்த விழிப்புணர்வோடு இருந்தனர்,” என்றார் அவர்.

இந்த வழிபாட்டு இல்லம், “மக்கள் வாழ்வின்பால் கதிர்வீசும் விஷயங்களுக்கான ஓர் ஆரம்பப் புள்ளியாகும்,” என திரு குத்தியெரெஸ் சாக்கோன் பிரதிபலித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: