அகுவா அஸுல், கொலம்பியா – ஞாயிறு காலைப் பொழுது, கொலம்பியாவின் முதல் பஹாய் வழிபாட்டு இல்லம் அனைவருக்கும் அதன் கதவுளை திறந்திடும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தருணத்தின் போது, 1,000’க்கும் அதிகமான மக்கள் அதை கொண்டாட ஒன்றுகூடினர்.
கோவிலின் நிழலில் ஒன்றுகூடிய பங்கேற்பாளர்கள், களிப்புணர்வும் ஆர்வமிகு எதிர்ப்பார்ப்பும் நிறைந்த நிலையில், கோவிலின் உட்புற வருகைக்காக காத்திருந்தனர். கோவில் திறப்புவிழா, சமயம் 40 ஆண்டுகளுக்கு மேலாக வேரூன்றியிருந்த நோர்ட்டே டெல் கௌகா’வில் பஹாய் சமயத்தின் மடிப்பவிழ்வில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கின்றது.
அருகிலிருக்கும் வில்லா ரிக்கா நகரிலிருந்து வந்த காரமன் ரோட்ரிகுவெஸ், அத்தருணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய பிரதிபலிப்போடு, “இங்கு ஒரு வழிபாட்டு இல்லம் இப்பொழுது பெற்றுள்ளோம் என்பதை அறிந்து எங்களுள் எழும் பெரும் களிப்புணர்வு பொங்கி வழிகின்றது,” என்றார்.
விடியலுக்கு சிறிது நேரத்திற்குப் பிறகு பேருந்துகள் வரத் தொடங்கி விழா நடைபெறும் பெரிய கூடாரத்திற்கு மக்கள் அணிவகுத்துச் சென்றனர். திறப்பு வழங்கல்களைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் பிரார்த்தனைக்காக மைய கட்டிடத்தைத் நோக்கி நடந்தனர்.
“நோர்ட்டே டெல் கௌகா’விற்கு மட்டுமின்றி, இம்மண்டலம் முழுவதற்குமே இந்த வழிபாட்டு இல்லம் முக்கிய தலம் என நான் நம்புகின்றேன். இந்தக் கோவிலின் உள்புற சூழல் முற்றிலும் தனித்தன்மையானது,” என்றார் அண்டை நகரமான சான்டான்டர் டெ குவிலிசாவ்’விலிருந்து வந்திருந்த ஹென்டர் மார்ட்டினெஸ்.
உலக நீதிமன்றம் 2012’இல் கோவிலைப் பற்றி அறிவித்ததிலிருந்து பல பங்கேற்பாளர்கள் அதன் வடிவம் பற்றிய ஆரம்ப கலந்துரையாடல்களில் பல பங்கேற்பாளர்கள் பங்கேற்றிருந்தனர். “வழிபாட்டு இல்லத்தின் உருவாக்கம் பற்றிய ஆரம்ப சமூக கூட்டங்களில் நானும் இருந்தேன். அதன் வடிவத்திற்கு ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளையும் கருத்தாக்கங்களையும் பங்களித்திட முடிந்தது. இப்பொழுது அச்செயல்முறையின் விளைவை நாங்கள் காணமுடிகின்றது,” என அண்டை கிராமமான மிங்கோ’விலிருந்து வந்திருந்த கார்லோஸ் எவர் மெசூர் விவரித்தார்.
ஞாயிறு திறப்பு விழா, உலக நீதிமன்றத்தின் பிரதிநிதியான திருமதி கார்மன் எலிசா டெ சாடெகியான், உள்ளூர் பிரமுகர்கள், கோவிலின் கட்டிடக் கலைஞர் ஆகியோரின் கருத்துரைகளை உள்ளடக்கியிருந்தது. திருமதி டெ சாடெகியான் பங்கேற்பாளர்களுக்கான உலக நீதிமன்றத்தின் கடிதத்தை வாசித்தார். “இந்த வழிபாட்டு இல்லம் இம் மண்டலத்திலுள்ள மேன்மையான மக்களில் உள்ளார்ந்துள்ள அழகின் ஓர் அடையாளமாக வீற்றிருப்பதோடு, அதன் வடிவமைப்பு அவர்கள் மண்ணின் தாராளத்தன்மையை தூண்டுகின்றது,” என 22 ஜூலை 2018 எனத் தேதியிடப்பட்ட அக்கடிதம் குறிப்பிட்டது.
அந்த திறப்புவிழாவில் உரையாற்றிய முன்னாள் உலக நீதிமன்றத்தின் உறுப்பினரான திரு குஸ்ட்டாவோ கோரியா, “இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒரு செயல்முறையின் முடிவல்ல. அது ஒரு மண்டலம் முழுவதற்குமே லௌகீ மற்றும் ஆன்மீக செழுமையைக் கொண்டுவர நோக்கங் கொண்டிருக்கும் ஒரு பெருமுயற்சிக்கான முக்கிய முதல் படியாகும்,” என்றார்.
வில்லா ரிக்கா’வின் மேயர் குமாரி ஜென்னி நாயர் கோமெஸ், ஒரு வழிபாட்டு இல்லம் குறித்த கருத்தோடு முதன் முதலில் தமது அலுவலகத்திற்கு வந்த கோரிக்கையை நினைவுகூர்ந்து ஓர் உற்சாகமான உரையாற்றினார். ஒன்றுகூடலில் இருந்த அண்டை நகரங்களின் நான்கு மேயர்களில் ஒருவரான வில்லா ரீக்கா’வின் மேயரான ஜென்னி நாயர் கோமெஸ், பங்கேற்பாளர்களுக்கு ஆற்றிய உரையில், “நோர்ட்டே டெல் கௌக்கா’வில் இந்த வழிபாட்டு இல்லத்தைப் பெற்றிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமை தருவதாகும்.” என உணர்ச்சியுடன் கூறினார்.
அம்மண்டலத்தில் சமயத்தின் வரலாறு குறித்த தமது உரையில் முன்னாள் உலக நீதிமன்ற உறுப்பினரான மருத்துவர் ஃபர்ஸாம் அர்பாப்: சுமார் அரை நூற்றாண்டான மேம்பாட்டிற்குப் பிறகு இம்மண்டலத்தின் மக்களை, அவர்களின் இலட்சியங்கள் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் மனதில் தோன்றும் சில வார்த்தைகள் சிலவற்றைக் கூறினார்: மகத்தான ஆன்மீக ஏற்பிசைவு; கூர்மையான ஆன்மீக உள்நோக்கு; ஆறிவாற்றல் சாதனைகளின்பால் உண்மையான மரியாதை; ஒருவர் மற்றவரை அரவணைக்கும் மகத்தான மகிழ்ச்சி மற்றும் வேதனைக்கான திறனாற்றல்; உள்ளத்தின் தூய்மையான கருணை மற்றும் தாராளத்தன்மை; கட்டுப்படுத்தப்படாத மனவுறுதி; மற்றும் ஒடுக்குமுறை எனும் காற்றுகள் அணைத்திட வியலாத உத்வேகத்தின் பிரகாசம்.”
திறப்பு விழாவின் மையப் பகுதியாக இசையும், பாரம்பரிய நடனமும் சிறப்பு நிகழ்ச்சிகளாக இருந்ததோடு, அந்த நிகழ்ச்சியின் உணர்வையும் பிரதிபலித்தன.
நடன கலைஞர்கள் ஆட, “வழிபாட்டு இல்லம்: நமது வரலாற்றின் ஒரு சின்னம், மண்டலம் முழுவதற்குமான அபிவிருத்தியின் அடையாளச் சின்னம்,” என இசைக் குழு பாடியது. அம்மண்டலத்திற்கு பஹாய் சமயத்தின் வருகை, மற்றும் மக்களின் எதிர்ப்பார்ப்புகள், இலட்சியங்கள் ஆகியவை பஹாவுல்லாவின் போதனைகளுக்கு எவ்வாறு உருவம் கொடுக்கின்றது என்பது பற்றிய, நோர்ட்டெ டெல் கௌகா’வின் ஆன்மா எனும் அர்த்தத்திலான “அல்மா நோர்ட்டேகௌக்கானா” எனும் அப்பாடலை ஓர் ஆடல் குழு வழங்கியது. அவ்விசைக் குழு, “லா கும்பியா டெல் ஜார்டினெரோ” எனும் பாடலையும் வழங்கியது.
நிகழ்ச்சியைத் தொடர்நது, திருமதி டெ சாடெகியான் ஐந்து குழுக்களுள் முதல் குழுவினாரை ஒரு வழிபாட்டு நிகழ்ச்சிக்காக கோவிலுக்குள் வழிநடத்தினார். நிகழ்ச்சியில் பஹாய் திருவாக்குகளிலிருந்து பிரார்த்தனைகளும் குறிப்புகளும் அடங்கியிருந்தன. அவற்றுள் சிலவற்றை பாடல்குழு பாடியது. அதன் பிறகு ஒவ்வொரு குழுவும், அடுத்த குழுவிற்கு வழிவிடுவதற்கு முன்பாக சிறிது நேரம் அங்கு நிசப்தமான பிரார்த்தனைக்காக அமர்ந்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த அந்த நிகழ்ச்சி, திறப்புவிழா குறித்த ஒரு மாத காலத்தை குறித்துக் காட்டியது. கோவிலுக்கான வாராந்திர விஜயங்களின் போது, சுமார் 1,500 பேர் “பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான எனது முதல் வருகை,” எனும் விசேஷ நிகழச்சியில் பங்கெடுக்க எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். அந்த விசேஷ நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவில் பல அம்சங்களை உள்ளடக்கி, மேலும் பல மக்கள் அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க கோவில் திறப்பில் பங்கேற்க வழிவகுக்கும்.
கொலம்பிய வழிபாட்டு இல்லத்தின் திறப்பு விழா, கடந்த செப்டம்பர் மாதம் கம்போடியாவில் நடந்த மற்றோர் உள்ளூர் கோவில் திறப்பு விழாவைப் பின்பற்றியதோடு, எதிர்வரும் வருடங்களில் இந்தியா, கென்யா, வானுவாத்து, கொங்கோ ஜனநாயக குடியரசு, பாப்புவா நியூ கினி ஆகிய நாடுகளில் கோவில்கள் திறப்புவிழா காணவிருக்கின்றன.
[மூலாதாரம்: http://news.bahai.org/story/1275/%5D