கடவுள் சமயத் திருக்கரம் டாக். ரஹ்மத்துல்லா முஹாஜிர் (சமயத்தைப்) போதிப்பது பற்றியே, குறிப்பாக புதிய இடங்களிலுள்ள மக்களுக்கு செய்தியை அல்லது பஹாவுல்லாவை எவ்வாறு கொண்டு செல்வது, என எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டிருப்பார். “வெகுஜன போதனையின் தந்தை” என பல பஹாய்களால் குறிப்பிடப்பட்ட டாக். முஹாஜிர், உலகின் தொலைதூர மூலைகளில் அணி அணியான பிரவேசத்தின் செயல்முறையைத் தூண்டிவிடுவதற்கான தீவிர போதனை பரப்பியக்கங்களை அபிவிருத்தி செய்திடுமாறு நண்பர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் சற்றும் அயராது ஈடுபட்டு வந்தார். ஒரு முறை ரூஹிய்யா ஃகானும் அவர்கள், டாக். முஹாஜிருடன் மேலும் நன்கு அறிமுகமாகிடும் விருப்பத்தினால், “தயவு செய்து என் அருகில் வந்து அமரவும். ….பற்றி எனக்கு ஏதாவது கூறவும்”, எனக் கூறினார்.
அவர் தாம் சந்தித்து வந்த மக்களைப் பற்றி கூறினார். அவர் அங்கு அரசாங்க மருத்துவராகப் பணிபுரிந்தும், நடுக்காட்டிற்குள் நீண்ட தூரம் நடந்து, அந்தப் பாறைகள் நிறைந்த தீவு முழுவதுமிருந்த தமது நோயாளிகளைச் சென்று கண்டுவந்தார். அங்குள்ள மக்கள் நிர்வாணமாகவும், உடல் நிறைய பச்சைக் குத்திக்கொண்டும் இருந்தனர் எனக் கூறினார். அது அப்பகுதிவாழ் மக்களின் ஒரு கலையாக இருந்தது. “நல்லது, நீர் என்ன செய்தீர்”, என நான் கேட்டேன். “அவர்களை ஆடைகள் அனியுமாறு கூறினீரா?”. அதற்கு அவர், “இல்லை. நான் ஏன் அவ்விதம் கூறவேண்டும்? நான் அங்கு சென்றது, அவர்களுக்கு பஹாவுல்லாவைப் பற்றி கூறுவதற்காக அன்றி, அவர்களை ஆடைகள் அனியுமாறு கூறுவதற்கல்ல,” என்றார். அவர் அவ்விதம் கூறியது என் உள்ளத்தை முற்றாகக் கவர்ந்துவிட்டது. அந்நாள் முதற்கொண்டு முஹாஜிருக்கான என் அன்பு சற்றும் மாறாத அன்பாகியது.
…முஹாஜிர், தொடர்ந்தாற் போன்று, சற்றும் அயராது, …உயிர் பிரிந்து உடல் கீழே சாயும் வரை …சேவையாற்றினார்
பின்வரும் உரைப்பகுதிகள், முன்னோடியாக சேவையாற்றுவது, பெற்றோர் தங்களின் பிள்ளைகள் முன்னோடிகளாகச் சேவையாற்றுவதை ஊக்குவிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி டாக். முஹாஜிர் ஆற்றிய ஓர் உரையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.
…மனிதர்களின் ஆன்மாக்களை அறுவடை செய்ய வேண்டிய நேரம் இதுவே ஆகும். ஏனெனில், எடுக்கப்பட்ட முயற்சிகள்—அதை ஒரு நூறு வருட முயற்சியெனக் கூறலாம்; விடியலை வென்றோரிலிருந்து, உயிர்த்தியாகிகள் மூலம், முன்னோடிகள் மற்றும் நிர்வாகஸ்தர்கள் மூலம்—உலகம் இப்பொழுது சமயத்தை ஏற்பதற்குத் தயாராக இருக்கின்றது. மக்கள் தயாராகவும், ஏற்புத்திறத்துடனும் இருக்கின்றனர்; அறுவடைக்கான அனைத்துமே இப்பொழுது, பஹாய்களையும், முன்னோடிகளையுமே சார்ந்துள்ளது.
நாம் இன்றியமையா ஒரு விஷயத்தைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்; முன்னோடியாகச் செயல்படுவதற்கெனத் தனது சமூகத்தை விடுத்துச் செல்லும் ஒவ்வொரு முன்னோடியும், அவர் அவ்வாறு செயல்படப்போகும் இடத்திற்கு மட்டுமே உத்தேகமளிப்பவராகவும், பயன்மிக்கவராகவும் மட்டும் இருப்பதில்லை, மாறாக அவர் தனது சொந்த சமூகத்திற்கும் நம்பிக்கை, உத்வேகம் ஆகியவற்றிற்கான மூலாதாரமாக இருக்கின்றார். ஒரு முன்னோடியை அனுப்பும் ஒவ்வொரு சமூகத்திற்கும் கடவுளின் அருட்கொடை வந்துசேரும்.
இளைஞர்கள் வேற்று இடங்களுக்குச் சென்று கல்வி கற்க வேண்டும் …இம்மாணவர்கள் நூல்களைக் கற்க வேண்டும்—மற்ற நாடுகளின் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் என்ன? இந்த மாணவர்களின் நகர்ச்சி ஊக்குவிக்கப்பட வேண்டும்… மாணவர்கள் முன்னெழுந்து செல்ல வேண்டுமென நாம் விரும்புகின்றோம். முன்னெழுந்து தைரியமாகச் செல்லுங்கள். பல்கலைக்கழகங்களுக்கு, கிராமங்களுக்குச் செல்லுங்கள், மாபெரும் போதனை ஸ்தலங்களுக்குச செல்லுங்கள், அங்கு மகத்தாக, அதைவிட மகத்தாக ஏதாவது செய்யுங்கள். ஒவ்வொரு தனி மற்றும் இளம் முன்னோடியின் நகர்ச்சிக்கும், சமுத்திரங்கள் அளவு நிகழ்வுகள் உண்டாகும்.
நீங்கள் உங்கள் வாழ்வில் அனைத்தையும் திட்டமிடும் போது, ஒரு முன்னோடியாவதற்கும் ஏன் திட்டமிடக்கூடாது?…நாம் திட்டமிட வேண்டும், உடனடியாகத் திட்டமிட வேண்டும், எல்லாருமே, முடிந்த விரைவில் திட்டமிட வேண்டும். குழந்தைகளையும் நாம் தயார்படுத்திட வேண்டும்… பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்காக ஒரு முன்னோடி வங்கிக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் முன்னோடிகளாகச் செல்வதை உறுதிசெய்யுங்கள், அவர்கள் வேறு எங்காவது சென்று கல்வி கற்க வேண்டும். ஒருவர் தாம் பிறந்த இடத்திலேயே மரணமுறுவது கூடாது. அது அவ்வளவுதான்! அந்த எண்ணம் அதோடு தொலைந்துவிடும். நீங்கள் நகர வேண்டும், ஆனால் நேர்மறையான திசையை நோக்கி, இறைவன் விரும்பும் வகையில் நகரவேண்டும். சரியான திசையில்… முன்னோட்டத்திற்கான ஸ்தலங்கள் எல்லாருக்குமே பொருந்தும், அது நிச்சயமாக முடியும். பணி மகத்தானது, தேவையும் அதிகமானது; எந்த நிலையிலும் உள்ள ஒவ்வொரு தனிநபரும் முன்னோடியாகச் செல்லலாம்; மற்றும் கண்டிபாகச் செல்லவும் வேண்டும்…
…நீங்கள் போக வேண்டும், போக வேண்டும், போக வேண்டும்… பஹாவுல்லா உங்களுடன் இருப்பார் என்பதில் நம்பிக்கைக்கொள்ளுங்கள், உங்கள் கரங்களைப் பற்றிக்கொள்வார், நீங்கள் உங்கள் இலக்கை அடைவீர்கள், நீங்கள் சமயத்திற்காக ஒரு மாபெரும் சேவையைச் செய்வீர்கள். இப்பொழுது உலகம் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றது…