
ஹாமில்டன், நியூ ஸீலாந்து – தமது உள்நாட்டு மொழியான மவோரி மொழியில் பஹாய் திருவாக்குகளை மொழிபெயர்க்கும் போது, டாம் ரோவா ஒரு கடினமான பிரச்சினையை எதிர்நோக்கினார். மிகவும் ஆழ்ந்த ஆன்மீகத்துவமான அம்மொழி ‘ஆவி’, spirit) என்பதற்கு ஒரு வார்த்தையைக் கொண்டிருப்பினும் ஆன்மா எனும் சொல்லுக்கு அம்மொழியில் வார்த்தைகள் இல்லை.
“விவிலிய நூலில், வாய்ருவா எனும் அச்சொல்லுக்கு ஆன்மாக மற்றும் ஆவி எனும் அர்த்தமுள்ளது. ஆனால், மறைமொழிகள் நூலில் அதற்கு இரு வெவ்வேறு கருத்துகள் உள்ளன,” என பஹாவுல்லாவின் பிரபலமான படைப்புகளுள் ஒன்றை மொழிபெயர்க்கும் முயற்சியைப் பற்றி குறிப்பிட்டு, “ஆதலால், அவ்விரண்டிற்கும் இடையில் ஒரு வேறுபாட்டை நாங்கள் புகுத்த வேண்டியிருந்தது,” என, வாய்காட்டோ பல்கலைக்கழகத்தின் மாவோரி மொழி மற்றும் உள்நாட்டு படிப்பாய்வுகள் பேராசிரியரான டாக்டர் ரோவா விளக்கினார்.
ஆதலால், ஆன்மா எனும் சொல்லுக்கான, வாய்ரூவா-ஓரா – உயிர் ஆவி – எனும் சொல் “ஆவி” மற்றும் “உயிர்” எனும் இரண்டு சொற்களின் இணைப்பாகும்.
நியூ ஸீலாந்து நாட்டின் உள்நாட்டு மக்களின் மொழிக்கு பஹாய் திருவாக்குகளை மொழிபெயர்ப்பதில் உள்ளடங்கியுள்ள பலக்கியங்களுள் இது ஒன்றாகும். வேறு இரண்டு முக்கிய பஹாய் எழுத்தோவியங்களின் மொழிபெயர்ப்புகள் மவோரி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பதினான்கு வருடகால முயற்சி, இம்மாதம் ஒரு குறிப்பிடத்தக்க முதல் பஹாய் பிரார்த்தனை நூல் இம்மாதம் அம்மொழியில் வெளிப்பாடு கண்டது
அந்த செயல்முறையை 2004’இல் ஆரம்பித்தபோது, மவோரி மொழியில் பிரார்த்தனைகள் கிடைப்பதை வகை செய்வதே தேசிய ஆன்மீக சபைக்கு முக்கிய ஊக்கசக்தியாக இருந்தது. விவிலியம் மற்றும் திருக்குரான் உட்பட பிற படைப்புகளை மவோரி மொழியில் மொழிமாற்றம் செய்திருந்த டாக். ரோவா’வுடன் ஒரு சிறு குழுமத்தினர் பணிபுரிந்தனர்.

மொழிபெயர்ப்புப் பணிகள், பஹாவுல்லாவின் ஒப்புயர்வற்ற நன்னெறி சார்ந்த படைப்பான மறைமொழிகள் மற்றும் J.E. எஸ்சல்மன்ட எழுதிய பஹாவுல்லாவும் நவயுகமும் எனும் சமய அறிமுக நூலுடன் முதலில் ஆரம்பித்தன.
மொழிபெயர்ப்புக் குழுமத்தின் ஓர் உறுப்பினரான திரு ஜேம்ஸ் லாவ், “பிரார்த்தனை நூலே மணிக்கல் ஆகும்,” என்றார். “எங்களின் முயற்சிகள் எனும் மகுடத்தை இந்த மணிக்கல்லே அலங்கரிக்கின்றது. மொழிபெயர்ப்புப் செயல்முறை வெறும் ஒரு தொழில்நுட்ப பணி மட்டுமல்ல என திரு லாவ் விளக்கினார். வருடங்களினூடே மவோரி மொழியில் ஆன்மீக கருத்தாக்கங்களை புரிந்துகொள்ளவும் மொழிபெயர்க்கவுமான முயற்சிகளின் போது, குழுமம் மிகவும் ஒற்றுமையடைந்து, மிகவும் ஆழமான ஆன்மீக கருப்பொருள்களை ஆராய்ந்தனர்.
“ஒரு மவோரி பிரார்த்தனை நூல் வேண்டுமெனும் கருத்தில் பஹாய்கள் ஈடுபாட்டுடன் இருந்தனர, மற்றும் அதில் எனக்கும் ஒரு பங்கிருந்ததில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்,” என டாக். ரோவா கூறுகின்றார். “மாவோரி மொழி பேசும் மக்கள் தங்கள் சொந்த மொழியிலேயே கடவுளுடன் தொடர்புகொள்ள முடிந்ததில் மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கின்றனர்.
உலகில் பல உள்நாட்டு கலாச்சாரங்களைப் போன்று, மாவோரி கலாச்சாரமும் பல ஆழ்ந்த ஆன்மீக கருத்தாக்கங்களையும் தனிச்சிறப்புகளையும் கொண்டுள்ளது.
“மாவோரி மக்களின் தொன்மையான பிரார்த்தனைகளில், மாத்தாங்கி இ ஒயிய்யா எனும் சொற்றொடர் உள்ளது,” என தாமே ஒரு மாவோரியும் நியூ ஸீலாந்து தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினருமான ஹூத்தி வாட்சன் கூறுகின்றார். அது ‘நறுமணம் ஊட்டப்பட்ட பூங்காக்கள்’ என சுவர்க்கத்தில் உள்ள ஓரிடத்தை வர்ணிக்கின்றது. பஹாவுல்லாவும் இதே கருத்தாக்கத்தைப் பற்றி உரைக்கின்றார். மாவோரி மொழியிலேயே பிரார்த்தனைகளைக் கொண்டிருப்பது இந்த சொற்களின் மெய்நிலையோடு நம்மைத் தொடர்புபடுத்துகின்றது.”
சமீபத்தில் மொழிபெயர்க்கப்பட்டு முகநூலில் பகிர்ந்துகொள்ளப்பட்டு வரும் ஒரு பஹாய் பிரார்த்தனையை தாம் கண்ணுற்றதாக திருமதி வாட்சன் கூறினார். குழந்தைகளைப் பற்றி அப்துல்-பஹா எழுதிய இப்பிரார்த்தனை. தாய்மார்களை அங்கு இப்பிரார்த்தனையை இடுகை செய்துள்ளனர்.
‘ஆஹா, இது மிகவும் அழகானது,’ என மக்கள் கூறுவர். இதுதான் நான் வேண்டுவது,'” என திருமதி வாட்சன் குறிப்பிடுகின்றார்.
மாவோரி மொழியை மறுவுயிர்ப்பிக்கும் விரிவான முயற்சிகளுக்கிடையே இந்த முனைவு வருகின்றது. இந்த முயற்சிகளின் முன்னணியில் இருக்கும் டாக். ரோவா, நியூ ஸீலாந்து மக்களிடையே மாவோரி மொழி பேசுவோர் நலிந்து வரும் ஒரு விகிதத்தினர் என கூறுகின்றார். நியூ ஸீலாந்து நாட்டின் ஜனத்தொகையில் மவோரி மக்கள் 15 விழுக்காட்டினரே ஆவர் மற்றும் அவர்களுள் ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே மாவோரி மொழியில் பேசக்கூடியவர் என டாக். ரோவா குறிப்பிடுகின்றார்.
இருப்பினும், அம்மொழியைக் கற்பதற்கு இப்பொழுது அதிகரித்து வரும் ஆர்வம் காணப்படுகின்றது: “இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், பள்ளியில் மாவோரி மொழி பேசியதால் தாங்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதாக நமது முதியோர் பலர் கூறினர். ஆனால் இப்பொழுதோ பள்ளிகளில் மாவோரி மொழி ஆசிரியர்களுக்கான கூக்குரல்கள் எழுந்து வருகின்றன.”