நாடுகடத்தலுக்கு அப்பால் – புனித நிலத்திற்கு பஹாவுல்லா வருகையின் 150’வது நினைவாண்டு.


bnsheader

27 ஆகஸ்ட் 2018

This drawing from a book published in the 1880s depicts Akka from a beach to the city’s west. The sea gate is near the left edge of the sea wall. (Source: W.M. Thompson, The Land and the Book)
1880’இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் படம், அந்த நகரத்திற்கு மேற்கே உள்ள கடற்கரையிலிருந்து அக்காநகரைச் சித்தரிக்கின்றது.(மூலாதாரம்: W.M. தோம்ஸன், நிலமும் நூலும்)

பஹாய் உலக செய்தி சேவை புனிதநிலத்திற்கு பஹாவுல்லாவின் வருகை குறித்த 150’வது நினைவாண்டைப் பற்றிய ஒரு வலையொளி (பொட்காஸ்ட்) வரிசையைப் பிரசுரிக்கவிருக்கின்றது. இந்த சுருக்கமான கட்டுரை, அந்த வரிசையில் வரும் முதல் வலையொளிக்கான அறிமுகமாகும்.

புனிதநிலத்திற்கான பஹாவுல்லாவின் வருகை: பாகம் 1

பஹாய் உலக செய்தி சேவையின் இந்த முதல் கதை, அக்காநகருக்கு பஹாவுல்லா நாடுகடத்தப்பட்டதன் சூழல், எடிர்னே நகரிலிருந்து அவரது புறப்பாடு, அக்காநகர் மற்றும் ஹைஃபா’வின் ஆர்வமூட்டும் வரலாறு ஆகியவற்றை ஆராய்கின்றது.

பஹாய் உலக மையம் – இந்த வாரம் இரண்டு ஆட்சியாளர்களினால் ஆணையிடப்பட்ட நாடுகடத்தல் வரிசையில் இறுதியான, புனித நிலத்திற்கான பஹாவுல்லா வருகையில் 150’வது நினைவாண்டைக் குறிக்கின்றது. இப்பொழுது, பஹாய் சமூகத்தின் அதிப்புனிதத்தளங்களின் இருப்பிடமாக விளங்கும் அக்கா/ஹைஃபா வட்டாரம் பஹாய் உலகின் ஆன்மீக மற்றும் நிர்வாக மையமாகியுள்ளது

“இந்த நாடுகடத்தல் அடக்குமுறை, அநீதி, துன்புறுத்தல் ஆகியவை குறித்த ஒரு செயலாகும்; ஆனால், அடக்குமுறை குறித்த இச்செயலை ஆன்மீக மற்றும் சுதந்திரத்திற்கான மானிடத்தின் ஒரு பயணமாக பஹாவுல்லா மாற்றினார்,” என லோஸ் ஏஞ்சல்ஸ், கலிப்போர்னியா பல்கலைக்கழகத்தின் இரானிய ஆய்வுகள் பேராசிரியரான நாடெர் சையீடி விளக்கினார். பஹாவுல்லா 1853’இல் தமது தாய்நாடான பாரசீகத்திலிருந்து நாடுகடத்தப்பட்டார்; அது நாடுகடத்தல்கள் வரிசை ஒன்றின் ஆரம்பமாகியது. பஹாவுல்லாவை வெகுதூரத்திலிருந்த சிறைச்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அவர் சமயத்தின் ஒளியை அணைத்தட முடியுமென பாரசீக மற்றும் ஒட்டமான் அரசாங்கங்கள் நினைத்தன.

12 ஆகஸ்ட் 1868’இல், அக்காலத்தில் ஏட்ரியாநோப்பள் என அறியப்பட்ட எடிர்னே’யில் உள்ள பஹாவுல்லாவின் இல்லத்தை ஒட்டமான் படைவீரர்கள் சூழ்ந்தனர், அதிகாரிகள் அவர் மீண்டும் நாடுகடத்தப்படுகின்றார் என அறிவித்தனர். எங்கு செல்கிறார் என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை. பஹாவுல்லவும் அவருடன் இருந்தவர்களும் அவர்களின் பயணத்தை ஆரம்பித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகே, அவர்கள் செல்லுமிடத்தை அறிந்தனர்: ஒட்டமான் பாலஸ்தீனத்தின் பழங்கால சிறைநகரான ஆக்கோ எனவும் அழைக்கப்படும் அக்கா நகர்.

This recent photo shows the House of Rida Big, one of the homes Baha’u’llah lived in during his time in Edirne, Turkey. The Ottoman Empire banished Baha’u’llah from Edirne on 12 August 1868, eventually sending him to Akka. The edifice in Edirne is now a holy place, which Baha’is can visit.
ரைடா பிக்’கின் இல்லத்தை இந்த சமீபத்திய படம் காண்பிக்கின்றது; அது பஹாவுல்லா துருக்கி, எடிர்னே நகரில் வாழ்ந்த இல்லங்களில் ஒன்றாகும். ஒட்டமான அரசு 12 ஆகஸ்ட் 1868’இல் எடிர்னே’யிலிருந்து நாடுகடத்தி, இறுதியில் அவரை அக்காநகருக்கு அனுப்பியது. எடிர்னே’யில் உள்ள இக்கட்டிடம் பஹாய்கள் விஜயம் செய்யக்கூடிய ஒரு புனிதஸ்தலமாகும்.

பிரதானமாக, ஒட்டமானியர்களுக்கு, ஆக்கோ நகர் குற்றவாளிகளுக்கான ஒரு சிறைச்சாலையாகவும், பிறகு கண்காணிக்கப்பட வேண்டியோர் என அவர்கள் எண்ணிய பலவிதமான மக்கள் நாடுகடத்தப்படுவதற்கான ஓரிடமாகவும் ஆகியது. பஹாய்களும் அந்த வகையான மக்களாக இருந்தனர்,” என ஒட்டமான் சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று ஆசிரியரான டேவிட் குஷ்னர் விளக்கனார். பல நாகரிகங்களைக் கடந்து வந்துள்ள அக்காநகர் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரும், ஒருகாலத்தில் ஒட்டமான் பாலஸ்தீனத்தில் ஒரு முக்கிய மையமாகவும் இருந்துள்ளது. இருப்பினும் 1868’ற்குள், மறக்கப்படுவதற்கு ஏதுவான இடமாக பாழடைந்த நகராக ஒட்டமானியர்கள் அதை ஒரு சிறைநகராகப் பயன்படுத்தினர்.

இப்பொழுது, பஹாவுல்லாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளின்பால் பக்கிசார்ந்த ஒரு செயலாக, புனிதப்பயணத்திற்காக அக்கா/ஹைஃபா வட்டாரத்திற்கு ஆயிரக்கணக்கான பஹாய்கள் வருகையளிக்கின்றனர்.

புனிதநிலத்திற்கு பஹாவுல்லாவின் வருகை: பாகம் 2

பஹாய் உலக நிலையம் – கோடை வெய்யிலில் விரிகுடா வழியே அப் பாய்மரக் கப்பல் மெதுவாக நகர்ந்து வந்து, பஹவுல்லாவையும் அவருடன் இருந்த சக கைதிகளையும் அக்கா’விற்கு கொண்டுவந்து சேர்த்தது. அது வெள்ளிக்கிழமை 150 ஆண்டுகளுக்கு முன் 31 ஆகஸ்ட் 1868 ஆகும்.

அக்காநகர் துறைமுகம் பயணிகள் இறங்குவதற்கு முறையான வசதிகளைக் கொண்டிருக்கவில்லை, ஆதலால் கப்பல் நகருக்கு வெளியே நீரில் ஆழமில்லா ஓரிடத்தில் நின்றது. கைதிகள் கடல்வாயிலை நோக்கி நீரில் நடந்து சென்றபோது, அங்கு எதிர்ப்புணர்வோடு கேலிக்கூச்சலிட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தை எதிர்நோக்கினர்.

நகரின் குறுகிய மற்றும் வளைந்து செல்லும் சந்துகளின் வழி, கடல்வாயிலிலிருந்து அப்பொழுது ஒரு சிறையாகப் பயன்படுத்தப்பட்ட பாசறையை நோக்கி பஹாவுல்லா கொண்டுசெல்லப்பட்டார்.

பஹாய் சமயத்தின் முதல் நூற்றாண்டின் வரலாறாகிய, ஷோகி எஃபெண்டி எழுதிய கடவுள் கடந்து செல்கின்றார் எனும் நூலில்: “அக்காநகரில் பஹாவுல்லாவின் வருகையானது, இறுதிக் கட்டமாகிய, உண்மையில் அவரது சமய ஆட்சிக்காலம் முழுவதும் அவர் அனுபவித்த நாடுகடத்தலின் உச்சகட்டமாகிய அவரது நாற்பது வருட சமய ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தின் ஆரம்பத்தை, குறிக்கின்றது. அக்காநகரில் அவரது சிறைவாச காலம், மெதுவாக முதிர்ச்சியுறும் ஒரு செயல்முறையின் கனிவுறுதலை அதனுடன் கொண்டுவந்ததோடு, அந்த சமயப்பணியின் சிறந்த கனிகள் இறுதியில் சேகரிக்கப்பட்ட ஒரு காலகட்டமாகவும் விளங்கியது.”

Baha’u’llah entered Akka on 31 August 1868 through the sea gate, which can be seen left of center along the sea wall. This photo, from 1920, shows what the sea gate would have looked like at the time of Baha’u’llah’s arrival, with water running directly to the wall. Today, this area along the old sea wall is a paved promenade.
கடல் சுவர் வழியே அதன் மையத்தின் இடதுபுறத்தில் காணப்படும், கடல்வாயிலின் வழியே 31 ஆகஸ்ட் 1868’இல் பஹாவுல்லா அக்காநகர் பிரவேசித்தார். 1920’இல் எடுக்கப்பட்ட இந்தப் படம், பஹாவுல்லாவின் வருகையின் போது, கடல்சுவரில் கடல்நீர் மோதும் நிலையில் பார்ப்பதற்கு அந்த கடல்சுவர் எப்படி இருந்திருக்கும் என்பதைக் காட்டுகின்றது. இன்று, பழைய கடல்சுவரின் அருகே இந்தப் பகுதி ஓர் உலாமேடையாக இருக்கின்றது.

நகரின் மோசமான நிலைமையும், அவர்கள் வருகையின் போது பஹாவுல்லாவுக்கும் அவரது சகாக்களும் அச்சமூட்டும் வகையில் நடத்தப்பட்டதும் அவர்களின் உடனடி அழிவு, பஹாவுல்லாவின் சமயத்தின் முடிவு ஆகியவற்றைக் சமிக்ஞையிடும் நோக்கங் கொண்டவையாகும். இருப்பினும், அந்த காட்சி குறித்த பஹாவுல்லாவின் வர்ணனை முற்றிலும் வேறு விதமாக இருந்தது: “எமது வருகையைப் பொறுத்தவரை, ஒளியின் பதாகைகளுடன் நாங்கள் வரவேற்கப் பட்டோம்; அப்பொழுது ஆவியின் குரல்,” ‘விரைவில் பூமியில் வாழ்கிற அனைவருமே இந்த பதாகையின் கீழ் பட்டியலிடப்படுவார்கள்’”என்று கூக்குரலிட்டது.” பஹாய் வரலாற்றில் சில அசாதாரன மேம்பாடுகளுக்கான தளமாக அக்காநகர் விளங்கவிருந்தது.

அக்காநகரிலிருந்த தமது சிறையிலிருந்தவாறே பஹாவுல்லா தமது மிகவும் உறுதியான சில படைப்புகளை வெளிப்படுத்தினார். அவற்றுள் தமது காலத்தில் வாழ்ந்த பல அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு தனித்தனியே எழுதப்பட்ட கடிதங்கள் அடங்கும்: போப்பாண்டவர் 9’வது பியுஸ், 3’வது நெப்போலியன், ஸ்சார் 2’வது அலெக்ஸான்டர், விக்டோரியா மகாராணி, மற்றும் நாசிரிட்டீன் ஷா. இதே அக்காநகரில்தான் அவர் தமது அதிப்புனித நூலாகிய கித்தாப்-இ-அக்டாஸ் திருநூலையும் வெளிப்படுத்தினார்.

பஹாவுல்லா, தமது வாழ்நாளில் எஞ்சியிருந்த வாழ்நாள்களை அந்த சிறை நகரிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் கழித்தார். பழைய அக்காநகருக்கு அருகில் வெளியே உள்ள அவரது இறுதி நல்லடக்கத்தலம், இன்று உலக பஹாய்களுக்கு அதிப்புனிதத்தளமாக இருக்கின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: