அன்பின் தலைகீழ்திருப்பம் (inversion)
குழந்தைகள் கல்வி மற்றும் பயிற்சி குறித்து பஹாய் திருவாசகங்களில் நிறையவே கூறப்பட்டுள்ளது. முக்கியமாக குழந்தைகளுக்குத் தகுந்த பயிற்சி வழங்கப்படுவதற்குப் பெரும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பின்வருவது அதைப் பற்றிய ஒரு கதையாகும்:
தந்தைகளும், குறிப்பாக தாய்மார்களும், தங்களின் பிள்ளைகளைத் தொட்டுத் தூக்கி அரவணைத்து, அவர்களை (செல்லம் கொடுத்து) கெடுப்பதற்கு மாறாக, தங்களின் பிள்ளைகளுக்கு எவ்வாறு மிகச் சிறப்பாக கல்வியூட்ட முடியும் என்பது பற்றி என்றுமே நிலையாக சிந்திக்க வேண்டும்; அவர்கள் கைவசமுள்ள எல்லா வழிகளிலும், வளர்ச்சியடையும் அவர்களின் உடல்கள், ஆன்மாக்கள், மனங்கள் மற்றும் ஆவிகளுள் நேர்மை, அன்பு, நம்பகத்தன்மையுடனான கீழ்ப்படிதல், உண்மையான ஜனநாயகம், மற்றும் எல்லா இனங்களின்பாலும் கருணையை உட்புகட்ட வேண்டும்; அதன் மூலம் உலக நாகரீகம் ஒரே திசையில், ஒரே வலிமையான வெள்ளோட்டமாக வழிந்தோடியும், அடுத்த தலைமுறையின் பிள்ளைகள் மானிட ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அடித்தலத்தை உறுதிப்படுத்திட இயலும்.
அவர்களின் பச்சிளம் பருவத்திலிருந்தே கடவுளின் அன்பு மற்றும் மானிடத்தின் மீதான அன்பை அவர்களின் தாயார்கள் அவர்களுக்குப் புகட்ட வேண்டும்; ஆசிய(கண்ட) வாசிகள் மீதான அன்பையல்ல, அல்லது ஐரோப்பிய (கண்ட) வாசிகள் மீதான அன்பையல்ல, அல்லது, அமெரிக்க (கண்ட) வாசிகள் மீதான் அன்பையல்ல, யாவற்றுக்கும் மாறாக மனிதகுலத்தின் மீதான அன்பையே அவர்களுக்குப் புகட்ட வேண்டும். தங்கள் குழந்தைகள் மீது விளக்கமுடியாத அன்புடைய சில தாய்மார்கள் இருக்கின்றனர். அதை அன்பின் தலைகீழ்திருப்பம் எனக் கூறலாம், அல்லது “முரட்டுத்தனமான அன்பென” பாரசீக நாட்டில் கூறப்படுவது போன்று கூறலாம். இத்தகைய அன்பு அக்குழந்தைகளுக்கு நன்மையை விட அதிக தீங்கையே விளைவிக்கும்.
பஹாவுல்லா வாழ்ந்திருந்த காலத்தில், அக்காநகரில் நான் இருந்த போது, நம்பிக்கையாளர் ஒருவரின் மகனை, பயிற்சிக்காக ஒரு ஜெர்மானிய தச்சரிடம் ஒப்படைத்தேன். அதற்கு ஒரு மாதம் கழித்து, அச்சிறுவனின் தாயார் பஹாவுல்லாவிடம் சென்று புலம்பியழுது, “எனக்கு என் மகன் திரும்பவும் வேண்டும், அவனுடைய சமயத்தைப் பழிக்கும் (அந்தத் தச்சர் ஒரு பஹாய் அல்ல) அந்தத் தச்சரோடு அவன் மகிழ்ச்சியாக இல்லை.” அதற்கு பஹாவுல்லா, “அபா’விடம் (அப்துல்-பஹாவிடம்) செல்லுமாறும், அவர் கூறுவதைக் கேட்டு அதன்படி நடக்கும்படியும் கூறினார்.” அப்பெண்மணி என்னிடம் வந்து, அவர் பக்க கதையைக் கூறினார். அதை கேட்ட பிறகு நான் இவ்வாறு கூறினேன்: “ஜெர்மானியர்கள் எவரையுமே பழிப்பதில்லை. அவர்களுக்கு அது பழக்கமுமில்லை.” அதன் பிறகு அப்பெண்மணி திரும்பிச் சென்றுவிட்டார். பிறகு ஒரு மாதம் கழித்து பஹாவுல்லாவிடம் மீண்டும் வந்து, அந்த தச்சர் ஒரு கோதுமை மூட்டையைத் தன் மகனின் முதுகில் சுமக்க வைத்தார் எனப் புகார் செய்தார். அந்த ஜெர்மானியர் அவ்வாறு செய்தாரென்றால் அது அச்சிறுவனின் ஒழுக்கத்திற்காகவே இருக்க வேண்டும் என நான் மீண்டும் கூறினேன். நான் அப்பெண்மணியை அமைதிப் படுத்தினேன், ஆனால் அவர் உள்ளூர முனுமனுத்துக் கொண்டுதான் இருந்தார். சில மாதங்கள் சென்றன; அப்பெண்மணி மேலும் சில புகார்களுடன் வந்து, தன் மகன் தம்மிடமிருந்து பிரிந்திருப்பதைத் தான் விரும்பவில்லை எனவும் தன் கண்ணின் மணியே அவன்தான் என இம்முறை வெளிப்படையாகக் கூறினார். தன் மகன்பாலான அவரது அன்பு எத்தகைய தன்னலமானது என்பதை உணர்ந்த நான், அச்சிறுவனை அவரிடமிருந்து முற்றாகப் பிரிக்கவில்லை எனவும், அச்சிறுவனின் தொழிற்பயிற்சி முடிவுறும் வரை அவன் அந்தத் தச்சருடன் எட்டு வருடங்கள் இருக்க வேண்டுமெனவும் கூறினேன். பிறகு, வேறு வழியின்றி மீறவியலாத அச்சூழலுக்கு அப்பெண்மணி கட்டுப்பட்டார். எட்டு வருடங்களுக்குப் பிறகு, அச்சிறுவன் தன் பயிற்சியாளரிடமிருந்து விடைபெற்றான்; அவனுடைய தாயார் அவன்மீது பெருமைகொண்டார், எங்குமே தேவைப்பட்ட அவனது கடும் உழைப்பை அவர் எல்லா இடங்களிலும் பாராட்டினார்.
சுருங்கக் கூறின், தாய்மார்கள் தங்களைப் பற்றி மட்டுமே நினைக்கக்கூடாது, மாறாக, அவர்கள் தங்களின் பிள்ளைகளின் மேம்பாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஏனெனில், ஆண்களானாலும் பெண்களானாலும் இன்றைய குழந்தைகளின் மீதே நாளைய நாகரிகத்தை வார்த்தல் சார்ந்துள்ளது.
(Star of the West, தொகுப்பு. VII, எண். 15, பக். 143)
அருமையான கதை அங்கள். நிச்சயம் அனைவருக்கும் இது உதவும். நன்றி அங்கள்.