வன்முறைமிக்க தீவிரமயமாதலை (violent radicalization) நுணுக்கமாக ஆராய்வது
8 நவம்பர் 2018

மேட்ரிட், ஸ்பேய்ன் – வன்முறைமிக்க தீவிரமயப்படுதலின் எழுச்சியானது பல சமுதாயங்களிலும் அவற்றினூடும் ஓர் அவசர உணர்வைத் தூண்டியுள்ளது. தீவிரயமயமாதல் ஓர் அதிகரித்துவரும் கவலையாக ஆகியுள்ள ஸ்பேய்ன் நாட்டில்,பஹாய் சமூகம் இந்த கடுமையான பிரச்சினையைப் பற்றிய பரவலான சிந்தனைக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களித்திட முயல்கிறது.
கோட்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் தொழில்நுட்ப தலையீடுகள் அளவில் தீவிரமயமாதலை அணுகிட முற்படும் அணுகுமுறைகளுக்கும் மேற்பட்டு, சமயம் பற்றியும் சமுதாயத்தில் அதன் ஆக்ககரமான பங்கு குறித்தும் ஓர் ஆழமான, பரிணமித்து வரும் புரிதல் தேவைப்படுகின்றது. வன்முறை மிக்க தீவிரமயமாதல் குறித்த காரணங்கள் மற்றும் அதற்கான மறுமொழி குறித்து சமீபமாக நடைபெற்ற ஓர் உயர்மட்ட ஆய்வில் ஸ்பேய்ன் நாட்டு பஹாய் சமூகத்தின் பிரதிநிதிகள் இவ்விஷயத்தை வலியுறுத்தினர். மெய்நம்பிக்கையின் மையத்தில், நமது ஆழமான ஒருமையைக் கண்டுணர்தல் இருக்கின்றது, எனும் வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.
ஸ்பேய்ன் நாட்டு பஹாய்களால் 26 அக்டோபரில் உடன்-ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாநாடு, ஸ்பேய்ன் நாட்டு இராணுவ அதிகாரிகள், புலனாய்வு முகவாண்மைகள், பிற அரசாங்க பிரதிநிதிகள், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட, இந்த விவாதப்பொருளின் ஆற்றல்மிகு ஆய்வில் சுமார் 70 பேரை ஒன்றுதிரட்டியது.
தீவிரமயமாதலின் மீது கவனம் செலுத்துவதற்குத தேவையான முக்கிய கருத்தாக்கங்கள் மீது கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின: சமுதாயத்தின் பல்வேறு பகுதியினரிடையே ஒரு பொது புரிந்துணர்வை உருவாக்கும் கலந்துரையாடல் செயல்முறைக்கான விரிவான தேவை பற்றி. அறிவியல், மானிடத்தின் பெரும் ஆன்மீக மரபுகள் இரண்டிற்கும் உகந்த மதிப்பளித்தல்; கொடுங்கோன்மைக்கு மறுமொழியாக வன்முறையை நியாயப்படுத்தல்; புதிய வருகையாளர்களை விளைவுத்திறத்துடன் ஒன்றிணைத்தல்; கல்வியின் விடுவிக்கும் சக்தி; மற்றும் சமுதாயத்தின் வாழ்வில் எல்லா மக்களும் பங்கேற்பதற்கான வாய்ப்பு.
“வன்முறை சார்ந்த தீவிரமயமாதலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளுக்கு இவை அடிப்படை அம்சங்களாகும், குறிப்பாக அது சமய ரீதியாக தூண்டப்படும் போது,” என்றார் ஸ்பேய்ன் நாட்டு பஹாய் சமூகத்தின் பொது விவகார அலுவலகத்தின் நிர்வாகியான செர்கியோ கார்ஷியா. தீவிரமயமாதலை ஒழிப்பதற்கான முயற்சிகளின் மையத்தில், சமயத்தின் ஆக்ககர சக்திகள் நனவாக்கப்படுதலை அனுமதிக்கும் சமயம் குறித்த ஒரு புரிதல் உள்ளது என அவர் வாதித்தார்.

தீவிரமயமாதல் ஒரு முக்கிய தலைப்பாக இருக்கும், சமுதாயத்தில் சமயத்தின் பங்கு குறித்த ஒரு வளர்ந்து வரும் சொல்லாடலில் ஸ்பேய்ன் நாட்டு பஹாய் சமூகம் பங்கேற்று வருகின்றது. மேட்ரிட்’டிலுள்ள அரசர் ஜுவான் கார்லோஸ் பல்கலைக்கழகத்தோடு தொடர்புகொண்டபல்கலைக்கழகப் படிப்பாய்வுகள் மையத்தில் நடைபெற்ற நாள்முழுவதுமான மாநாடு, சமய தீவிரமயமாதலின் காரணங்கள் மற்றும் மறுமொழிகள் பற்றிய ஒரு புரிதலை மேம்படுத்திக்கொள்ளும் தொடரில் முதலாவதாகும்.
மாநாட்டில், தீவிரமயமாதல் என்பது ஒரு மனிதனின் சிந்தனைகளிலும் செயல்களிலும் தன்னைப் படிப்படியாக வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு செயல்முறை என்பதையும், அழிவுகரமான முடிவுகளின்பால் உந்துகையை வழிநடத்துவதற்கான ஒரு சக்திமிகு ஆற்றலாக சமயம் துர்பிரயோகம் செய்யப்பட்டு வந்துள்ளது என்பதையும் பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.
“சமயத்திற்கும் வன்முறைமிக்க தீவிரமயமாதலுக்கும் இடையில் உள்ள தொடர்பை ஆராயுங்கால், இத்தகைய நிகழ்வுகளுக்கு உந்துகை அளித்திட சமயம் எவ்வாறு கையாளப்பட்டு வருகின்றது என்பதை உளமாறவும் வெளிப்படையாகவும் ஆராய்வது முக்கியமாகும்,” என்கிறார் ஸ்பேய்ன் நாட்டின் பஹாய் பொது விவகார அலுவலகத்தின் திருமதி லேய்லா சந்த். திருமதி சந்த், சமயம் குறித்த மிகவும் திடமான உரையாடலுக்கான அவசியத்தை வலியுறுத்தினார்.
“இன்றும், வரலாற்றினூடும் சமயம் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருந்த போதிலும், உந்துதலின் அத்தகைய ஆழத்தை அடையவும் ஓர் உயர்வான குறிக்கோளுக்கு மனிதர்கள் தங்களை அர்ப்பணிக்க தூண்டவும் கூடியது சமயத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை. “இறுதியில், பிறரின் உள்ளார்ந்த மேன்மையின்பால், கோபாவேசத்தையும் வெறுப்புணர்வையும், அன்பாகவும் மரியாதையாகவும் மாற்றக்கூடிய சக்தி சமயத்தில் மட்டுமே உள்ளார்ந்துள்ளது.’உலகையே விழுங்கிடும் தீ’ என வர்ணிக்கப்படும் சமயவெறித் தன்மையை எதிர்கொள்வதில் சமயத்திற்கு ஓர் இன்றியமையா பங்குள்ளது என பஹாய் திருவாக்குகள் போதிக்கின்றன.”
“தீவிரமயமாதலின் சமயம் சார்ந்த பரிமாணம் புரிந்துகொள்ளப் பட்டவுடன், அதைப் பிற சமுதாய, அரசியல், மற்றும் பொருளாதார கோணங்களிலிருந்து—சுய அடையாளம், உக்தி, அரசியல் நோக்கங்கள், மற்றும் தேசியம்—அதற்கு விடை காணப்படலாம்,” என்கிறார் திரு கார்ஷியா.
அந்த நிகழ்ச்சி வெற்றியடைந்ததற்கான காரணம் அங்கு வளமான கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதால் மட்டுமன்று, என்கிறார் திருமதி சந்த். “மக்கள் இங்கு வந்து, உரைகளாற்றிய பின் திரும்பிச் செல்வதற்கான ஒரு தளமல்ல இது. ஓர் உரையாடல் மடிப்பவிழ்ந்தும், எல்லாரின் புரிதலும் மேம்பாடு கண்ட ஓர் தளமாகும் இது,”