கென்யா கோவிலின் அடிக்கல் நாட்டு விழா, மக்களின் ஒற்றுமை உணா்வை பிரதிபலிக்கிறது.


23 மார்ச் 2019

மத்துன்டா, கென்யா – கென்யாவின் இந்த கிராமப்புற பகுதியிலுள்ள ஒரு துடிப்பான சமூகம் சனிக்கிழமையன்று ஆப்பிரிக்காவில் முதல் உள்ளூர் வழிபாட்டு இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவைக் கண்டது.

இந்த எதிர்கால பஹாய் கோயிலின் தளம் மத்துண்டா நகரிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்திலும், சோளம் மற்றும் பிற பண்ணைகளாலும் சூழப்பட்டுள்ளது. கென்யாவின் ஆரம்பகால பஹாய் சமூக்தினரால் மத்துண்டா சோய் என்று அழைக்கப்படும் பகுதி, சமீபத்திய தசாப்தங்களில் ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீக தன்மைமாற்ற செயல்முறையைக் கண்டுள்ளது.

மமா ரூத் என அன்புடன் அழைக்கப்படும் ஓர் உள்ளூர் பஹாய் ஆன ரூத் வுவிய்யா (உட்கார்ந்திருப்பவர்) , அடித்தளத்தை ஆலயத்தின் சிவப்பு மண்ணில் பதித்தார். அவேராடு அவரது மகள், மற்றும் கென்யாவின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினர்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் கோயிலின் கட்டிடக் கலைஞர் நேதா சமிமி ஆகியோரும் இருந்தனர்.

“கென்யாவின் முதல் பஹாய் கோயிலின் வளர்ச்சி மத்துண்டா சோய் கிளஸ்டரின் நண்பர்களின் சேவை மற்றும் கடின உழைப்பாலும் தியாகங்களினாலும் எழுகிறது” என்று ஆப்பிரிக்க ஆலோசகர்களின் கான்ட வாரியத்தின் ஓர் உறுப்பினரான கிறிஸ்டோபர் சொங்கோக் கூறினார்.

சனிக்கிழமை கொண்டாட்டட்தில் பங்குபெற்றவர்கள், கோவிலின் கட்டுமானத்தின் ஒற்றுமைப்படுத்தும் விளைவை வலியுறுத்தினர்.

“எல்லா மதத்தை சார்ந்தவர்களும் பஹாய் கோவிலுக்கு வழிபட வரவேற்கப்படுகிறார்கள்” என்று அருகிலுள்ள லுவாண்டா சமூகத்தைச் சேர்ந்த ஆலிஸ் ஜுமா கூறினார்.

“இந்த விழா ஒரு உண்மையான ஆன்மீக நிகழ்வு. இங்கு பெரிய கூட்டத்தாரை நான் பார்க்கிறேன்-இளஞர்கள், முதியோர்கள், ஆண்கள், பெண்கள் எல்லோறும் சமாதானமாக சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு கீழ்ப்படிகிறாள்கள், “என்று மத்துன்டாவின் பீட்டர் வெபோனியா வெளிப்படுத்தினார்.

இந்த வரைபடம், கென்யா கோவிலின் வடிவத்தை காண்பிக்கின்றது. கோவில் அடிக்கல் நாட்டு விழா மத்துண்டா, கென்யாவில் நடைபெற்றது.

இந்த ஆன்மீக செயல், இன்று அடிக்கல்நாட்டு விழா நடந்த கென்யா கோயிலின் வடிவமைப்பை காட்டுகிறது. பஹாய் புத்தாண்டு நாளான நவ்ருஸ் முடிந்து இரண்டு நாள் கழித்து, ஓர் இளவெயில் நேரத்தில் இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது. கென்யாவைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா, டான்ஜானியா, உகாண்டா மற்றும் ஜாம்பியா ஆகிய நாட்டிலிருந்து கலந்துகொண்டார்கள். மக்கள் வெள்ளிக்கிழமை இரவே குவியத் தொடங்கினர், சிலர் நடந்து, மற்றும் சிலர் மோட்டார்சைக்கிள், கார்கள் மற்றும் பஸ்ஸில் வந்தனர். அடுத்த நாள் காலை முழுவதும் தொடர்ந்து, ஒருவரையொருவர் பார்த்து வாழ்த்தி பாடல்கள் பரிமாறிக்கொண்டு இருந்தனர்.

நன்பகலில் நடைபெற்ற விழாவில், சுமார் 1,200 பேர் அடங்கிய பொதுமக்கள், திறப்புவிழா பிரார்த்தனைகளைத் மிக்க மரியாதையாக செவிமடுத்தனர். பின்னர், ரூத் வியுயா அதாவது, ரூத் அம்மா என்று அன்போடு அழைக்கபடும் இவர், அடித்தளத்தை ஆலயத்தின் சிவப்பு மண்ணில் பதித்தார். அவேராடு தனது மகள், மற்றும் கென்யாவின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினர்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் கோயிலின் கட்டிடக் கலைஞர் நேதா சமிமி ஆகியோரும் இணைந்தனர். சடங்குபூர்வமான கல் நடுதலுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் பாடல்களையும் கானங்களையும் பாடிக் கொண்டாடினர்.

இந்த பஹாய் கோவில் சமூகத்தில் அசாதாரண முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது எல்லா உன்னத ஆத்மாக்கள் பிரார்த்தனை செய்யும் இடமாகும். இது இறைவனின் ஒரு வெளிப்படையான வெளிப்பாடாக உள்ளது, என்று “டன்ஸ்தன்ட் லிகன்டா என்ற ஆப்பிரிக்காவில் ஆலோசகர்களின் வாரிய உறுப்பினர் கூறினார்.

சனிக்கிழமை அடிக்கல் நாட்டு விழாவின் போது இந்த வானிலிருந்து எடுக்கப்பட்ட படம் மத்துண்டா சோய்’யிலுள்ள பஹாய் வழிபாட்டு இல்லம் அமையவிருக்கும் இடத்தை காண்பிக்கின்றது.

இந்த பஹாய் கோயில், பஹாய்களை மட்டுமின்றி பரந்த மத்துன்டா சோய் வட்டாரத்தையும் உள்ளடக்கிய துடிப்பான சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் பதிக்கப்படும். ஓர் உள்ளூரில் நடக்கும் பஹாய் சமூகப் நிர்மாணிப்புப் பணிகள், இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும், ஆண்களுக்கும்,பெண்களுக்கும் அவர்களின் ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்வதற்கும், அதைப் பேணுவதற்காகவும், தங்களின் தனிப்பட்ட வளர்ச்சி மட்டுமின்றி, சமூக வளர்ச்சிக்கும் உதவக்கூடிய பண்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான ஓர் அழைப்பாகும், என்று கென்யா தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான ஜபத் கோகால் விளக்கினார்.

இந்த கோவிலின் அடிக்கல் நாட்டும் சமயத்தில், லுவாண்டா சமூகத்தைச் சேர்ந்த பாடல் குழு பாடுகின்றது.

இப்பகுதியில் உள்ள பாரம்பரிய குடிசைகள் வடிவத்தை அடிப்படையாக கொண்ட கோவிலின் நேர்த்தியான ஆனால் எளிமையான உருவப்படம் திறக்கப்பட்ட அதே இடத்தில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகே அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகின்றது. இதன் வடிவமைப்பு வைரத்தின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட, ஒரு நுட்பமானதும் மனதைக் கவர்வதுமான கென்ய கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு சிக்கலான மற்றும் வெளிப்படையான முறையை பயன்படுத்தி கட்டப்படும். இக்கட்டிடத்தின் ஒன்பது வெளிப்புற கூரைக் குமிழ்கள் ஒரு கூரைதிறப்பு நுணியில் ஒன்றிணைக்கப்படும். உள்ளே, மேற்பக்கத்தில், அதி உயரிய சின்னம் பதிக்கப்படும். இதன் உள்ளே 250 பேர் அமர் முடியும். இக்கோவில் உள்ளூர் பொருட்களிலிருந்து கட்டப்படும்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் லுவாண்டா சமூகத்தின் பாடல்குழுவினர் மத்துண்டா சோய் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பாடுகின்றனர்.

2012 ஆம் ஆண்டில், உலக நீதிமன்றம், ஏழு பஹாய் கோவில்களை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை அறிவித்தது. இரண்டு ஏற்கனவே கட்டப்பட்டது, முதலாவது பாத்தாம்பங், கம்போடியாவிலும், மற்றும் இரண்டாவதாக நோர்ட்டே டெல் கௌக்கா, கொலம்பியாவிலும் கட்டப்பட்டன. கென்யாவில் உள்ள இந்த கோவிலைத் தவிர, மற்றும் இரண்டு கோவில்களும் இரண்டு தேசிய வழிபாட்டு ஸ்தளங்களும் நிறுவப்பட்டு வருகின்றன.

[மூலாதாரம்: https://news.bahai.org/story/1317/%5D