அக்காநகர மேயரும் மதத்தலைவர்களும் சமயநிகழ்ச்சியில் அப்துல்-பஹாவுக்கு மரியாதை செலுத்துகின்றனர்
19 ஜனவரி 2020
பஹாய் உலக மையம் — கடந்த திங்களன்று, அக்கநகர மேயர், ஷிமோன் லங்க்ரி, மற்றும் நகரத்தின் மத சமூகங்கள் மற்றும் பிற உள்ளூர் அமைப்புகளைப் பிரதிநிதிக்கும் பிரமுகர்கள், அப்துல் பஹாவின் நினைவாலய க்ட்டுமானத்தின் ஆரம்பத்துடன் இணைவாக நடந்த ஒரு மரம் நடும் விழாவில் அப்துல்-பஹாவுக்கு மரியாதை செலுத்த ஒன்றுகூடினர்.
அப்துல் பஹாவின் நினைவாலயம் கட்டப்படவிருக்கும் இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி கட்டுமானத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது
“பஹாய்களுக்கு, பன்முகத்தன்மை அழகாகும்” என்று திரு லங்க்ரி தமது உரையில் கூறினார். “ஒரு தோட்டத்தின் மலர்கள் மற்றும் தாவரங்கள் போல, பன்முகத்தன்மை அழகை உருவாக்குகிறது என்பது அவர்களின் உலகக் கண்ணோட்டம். இந்த உலகக் கண்ணோட்டம் உண்மையானது என்று நான் கருதுகிறேன், அதை இங்கே அரவணைத்திடவோம்” என்றார்.
புனித சன்னிதி நிர்மானிக்கப்படவிருக்கும் இடத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் யூத, முஸ்லிம், கிறிஸ்தவர், மற்றும் ட்ரூஸ் சமூகத்தினரின் தலைவர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள், மற்றும் அப்பகுதியில் கல்வி நிறுவனங்களின் கல்வியாளர்கள் உட்பட சுமார் 50 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பஹாய் அனைத்துலக சமூகத்தின் செயலாளரான டேவிட் ரட்ஸ்டீன், மற்றும் புனித சன்னிதியின் கட்டிடக்கலைஞர் ஹொசைன் அமானட் ஆகியோர் பஹாய் சமூகத்தைச் சேர்ந்த பல பிரதிநிதிகளுள் அடங்குவர்.
புனித அடக்கத்தலம் பற்றிய கருத்தாக்க வடிவமைப்பைப் பார்த்த பின்னர், அப்துல்-பஹா, திரு லங்க்ரி மற்றும் டாக்டர் ரட்ஸ்டீன் ணலும் முன் சில கருத்துக்களை சுருக்கமாக்க வழங்கினர். அந்த ஒலிவமரம் பல ஆண்டுகள் வளரக்கூடிய தோட்டத்தின் ஒரிடத்தில் மரத்தை விருந்தினர்கள் நடவு செய்ய உதவினர்.

ஒலிவமரம் நடப்பட மேயர் அவர்களாலும் (வலம்) டாக்டர் ரட்ஸ்டீன் அவர்களாலும் எடுத்துச்செல்லப்படுகின்றது.
“ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல்-பாஹாவின் ஆவி பிரகாசிக்கிறது. அப்துல் பஹா தங்களின் நகரத்திற்கு மீண்டும் வருகிறார் எனும் மகிழ்ச்சியில் ஒன்றுகூடிய அக்கநகர மக்களின் பல பிரிவினரைப் பார்த்து—இது அவர் இங்கு ஒற்றுமையை உருவாக்கிட எவ்வாறு பணிபுரிந்தார் என்பதை நினைவுகூர்ந்திட வைக்கின்றது”, என்றார் டாக்டர் ரட்ஸ்டீன்.