லக்ஸம்பர்க் சிறுவர்கள் சுகாதார வல்லுனர்களுக்குத் தங்களின் அன்பையும் ஊக்குவிப்பையும் தெரிவிக்கின்றனர்


BNS-headMarch 30, 2020

லக்ஸம்பர்க் நாட்டு பஹாய்கள் வழங்கிய தார்மீக கல்வியில் பங்கேற்கும் சிறுவர்கள், தற்போதைய சுகாதார நெருக்கடியின் போது இன்றியமையா பணிகளின் ஈடுபட்டுள்ள சுகாதார மற்றும் பிற ஊழியர்களுக்கு உற்சாகமளிப்பதற்காக அட்டைகள், சித்திரங்கள் ஆகியவற்றைச் செய்தனர்.

எஸ்க்-ஸூர்-அல்ஸெட், லக்ஸம்பர்க் — லக்ஸம்பர்க் நாட்டு பஹாய்கள் வழங்கிய தார்மீக கல்வியில் பங்கேற்கும் சிறுவர்கள், ஒருவரின் சமுதாயத்திற்கு சேவையாற்றுவது பற்றி கற்றுவருகின்றனர். இக்கருப்பொருள் குறித்த ஒரு வெளிப்பாடாக, தற்போதையை சுகாதார நெருக்கடியின் போது தியாகச் செயல்கள் புரிந்து வருவோருக்கு தங்களால் இயன்றதைச் செய்திட அவர்கள் உந்தப்பட்டுள்ளனர். இன்றியமையா பணிகளின் ஈடுபட்டுள்ள சுகாதார மற்றும் பிற ஊழியர்களுக்கு தங்களின் அன்பையும் பாராட்டையும் தெரிவிக்கும் செய்திகளைப் பலர் அனுப்பியுள்ளனர்.

எஸ்க்-ஸூர்-அல்ஸெட்’டில் நடைபெறும் “இளம் இரத்தினங்கள்” எனும் சிறுவர் வகுப்பு ஆசிரியர், “இணையம் வழி சந்தித்து வரும் எங்களின் வகுப்பு, இந்த நெருக்கடியின் போது இன்றியமையா சேவைகளில் ஈடுபட்டு வருவோருக்கு—மருத்துவர்கள், மருத்துவமனை மற்றும் ஆய்வுக்கூடங்களில் பணிபுரிவோர், மருந்தகங்கள் மற்றும் மளிகைக் கடை ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் போன்றோர்– தங்களின் நன்றியைத் தெரிவிக்கும் அட்டைகளையும் சித்திரங்களையும் செய்யும் யோசனையைக் கொண்டிருந்தனர்,” என்றார்

அந்த ஆசிரியர், அந்த சித்திரங்கள் மற்றும் அட்டைகளின் மின்நகல்களை அண்டையிலுள்ள டூடலாங்கெ’வில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும் தேசிய சுகாதார ஆய்வுக்கூடத்திற்கும், ஓர் ஊக்குவிப்பு செய்தியோடு அனுப்பிவைத்தார். அந்த ஆய்வுக்கூடம் அதை மிகவும் உற்சாகத்துடன் முதாய ஊடகத்தில் பகிர்ந்துகொண்டது. “இவ்வார இறுதியில், நமது இளம் ஓவியர்களின் கரங்களிலிருந்து, எஸ்க்-ஸூர்-அல்ஸெட்’லிருந்து எங்களுக்கு வந்த ஓர் ஊக்குவிக்கும் செய்தியை தேசிய சுகாதார ஆய்வுக்கூடம் பெற்றது.

வில்லைக்காட்சி
3 படங்கள்
ஒரு பஹாய் தார்மீகக் கல்வி வகுப்பில் பங்கேற்கும் சிறுவர்களால் அனுப்பப்பட்ட அட்டைகள் மற்றும் சித்திரங்களுக்கான அதன் பாராட்டைத் தெரிவிக்கும், டூடலாங்கெ, லக்ஸம்பர்க்’கில் உள்ள தேசிய சுகாதார ஆய்வுக்கூடத்தினால் டுவிட்டருக்கு அனுப்பப்பட்ட செய்தி.

அதே போன்று, முக்கிய சேவைகளில் ஈடுபடுவோரின் தன்னலமற்ற செயல்களுக்கான நன்றி மற்றும் மதிப்புணர்வைத் தெரிவிக்கும் அட்டைகளை மற்றொரு சிறுவர்கள் குழுமமும் தயாரித்தது. உள்ளூர் மருத்துவர்களும் மருந்தக ஊழியர்களும், மளிகைக் கடைகள் அச்செய்திகளைக் கனிவோடு பெற்றுக்கொண்டனர், அச்செய்திகளைப் பெற்ற பலரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

https://news.bahai.org/story/1406/

 

இளைஞர் குழு உணவு விநியோகம் செய்து, அதற்கு நகராண்மை, தேசிய பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றது


BNS-head

இளைஞர் குழு உணவு விநியோகம் செய்கிறது, நகரம், தேசிய பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் ஆதரவைப் பெறுகிறது

27 மார்ச் 2020

நீயூ ரோஷெல், நியூ யார்க் – தங்களின் அண்டைப்புறத்தில் கொரோனா வைரஸ் மாமூலான வாழ்க்கையில் இடையூறு விளைவித்த போது, பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக விளைந்த அவசிய தேவைகளின்பால் தங்களின் கவனத்தை ஓர் இளைஞர் குழுமம் திருப்பியது. நியூ யார்க்கின் இந்த புறநகர்ப் பகுதியில், சமுதாயத்திற்கான சேவைக்கு திறனாற்றல்களை உருவாக்குகின்ற பஹாய் நடவடிக்கைகளில் இந்த இளைஞர்கள் ஒன்றாகப் பயின்றும் பணிபுரிந்தும் வந்துள்ளனர்.

1405-1
நியூயார்க்கில் உள்ள நியூ ரோஷெல்லில், இப்பகுதியில் பள்ளிகள் மூடப்பட்ட பின்னர் இளைஞர்கள் செய்த உணவு விநியோக ஏற்பாடுகள், மாநிலத்தின் தேசிய காவலகத்தின் ஊழியர்களைக் கொண்டு, அவ்விடம் அதிகாரப்பூர்வ உணவு விநியோக இடமாக விரைவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன் பள்ளிகள் மூடப்பட்டதால், பல பிள்ளைகள் அவர்களின் தினசரி உணவுக்கான முக்கிய மூலாதாரத்தை இழந்து நின்றனர். விரைவில் உணவு விநியோகத்திற்கான அதிகாரபூர்வ ஏற்பாடுகள் செய்யப்படும் எனினும், அந்த இளைஞர்கள் அதுவரை சமூக நிர்மாணிப்பு முன்முனைவுகளின் மூலம் கூட்டாக உருவாக்கியிருந்த உணவு விநியோகம் உட்பட நட்பு மற்றும் அனுபவம் ஆகியவை இடைக்காலத்தில் ஓர் அவசர நடவடிக்கையை ஏற்பாடு செய்திட உதவும் என உணர்ந்தனர்.“இந்த இளைஞர்கள் ஒரு சமூகத்தின் சூழலில் தங்களின் ஆன்மீக அபிவிருத்தி குறித்தும், ஒரு சிரமமான சூழ்நிலையை எதிர்கொள்வதில் உருவாகும் வலிமை குறித்தும் கற்று வந்துள்ளனர்,” என்கிறார், அந்த அண்டைப்புறத்தில் வசிப்பவரும் சமூக ஏற்பாட்டாளருமான திரு டிம்மொதி மேக்நைட்.

“இம்மாதிரியான நேரங்களில், ‘சமூகத்திற்கான எங்களின் சேவை நிற்பதில்லை, அது சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளப்படுகின்றது, என்பதற்கான ஆற்றல் அவ்விளைஞர்களுக்கு உண்டு. இப்பொழுது, நாங்கள் வியாதியின் பரவலைத் தடுப்பதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் விலிகியிருந்து, மக்களின் நலனை கருத்தில் கொண்டு எங்களால் இயன்ற அளவு உதவிட முயல்கிறோம்.

நியூ யார்க் நகரின் ரோஷெல் பகுதியிலுள்ள ஓர் இளைஞர் குழுமம், சமூக நிர்மாணிப்பு நடவடிக்கை முன்முனைவுகள் மூலம் தாங்கள் கூட்டாக மேம்படுத்திக்கொண்டிருந்த நட்பு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி, கொரோனா வைரஸ் பரவல் குறித்த தங்களின் பிரதிசெயலாக உணவு விநியோகம் மற்றும் பிற அத்தியாவசியங்களை ஏற்பாடு செய்தனர்.

பள்ளிகள் மூடப்படுகின்றன என அறிவிக்கப்பட்ட அந்த இரவன்று, அந்த இளைஞர்கள் கல்வி வாரியத்துடன் தொடர்பு கொண்டதுடன் உணவு தானம் செய்ய ஒப்புக்கொண்ட, அப்பகுதியிலுள்ள பல உணவு விற்பனையாளர்களையும் சந்தித்துப் பேசினர். தாங்கள் வாழும் அடுக்குமாடி காம்ப்லெக்ஸ்’இல் ஒரு சமூக அறையை ஒரு விநியோக தளமாக்கிட ஏற்பாடுகள் செய்து, அதில் மக்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் சற்று தள்ளியிருப்பது மற்றும் சுகாதாரத்தை உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நிலைநிறுத்தினர்.

கல்வி வாரியம் குடும்பங்களுக்கு அறிவித்தும், அடுத்த நாளே அவர்கள் சூடான உணவை பெற முடிந்தது. இது சிறுவர்கள் குறைந்த மனிதத் தொடர்புடன் வீட்டிலேயே நல்ல உணவைப் பெறுவதற்கும் முடிந்தது.

“இளைஞர்கள் செயல்திறம் உடையவர்களாக இருந்ததனாலும், தங்களின் அண்டைப்புறத்தில் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இருந்ததனாலும், ஒரு நெருக்கடி நேரத்தில் அவர்கள் ஆரம்ப செவிசாய்ப்போராக இருந்திட முடிந்து, அரசாங்க பிரதிசெயலை நிறைவு செய்திடவும் முடிந்துள்ளது,” என்றார் அந்த இளைஞர்களின் நடவடிக்கைகளில் ஒன்றாகப் பணிபுரியும் திரு நிமா யூசுஃபியான்.

இளைஞர்களின் நடவடிக்கை நகர அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. பள்ளிகள் மூடப்பட்ட இரண்டாவது நாள், அவ்விளைஞர்களின் ஏற்பாடுகள் மாநில காவல் படையின் பணியாளர்களால் உதவப்பட்ட ஓர் அதிகாரபூர்வ உணவு விநியோக மையமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“இந்த சூழ்நிலையில் நிறைய செய்ய வேண்டியுள்ளதுடன், இந்த நெருக்கடியின் போது நகரத்திற்கு எண்ணற்ற தேவைகள் ஏற்படும். ஆனால், இளைஞர்கள் தாங்கள் மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்தித்தே வருகின்றனர்,” என்றார் திரு யூசுஃபியான்.

https://news.bahai.org/story/1405/

கொரோனா-19 போன்ற கொள்ளை நோய்கள் ஏன் உண்டாகின்றன?


கடவுள் இப்பிரபஞ்சத்தையும் அதனுள் வாழ்வன ஊர்வன அனைத்தையும் படைத்து, படைப்பினம் ஒவ்வொன்றுக்கும் தமது பண்புகள் ஒன்றினை வழங்கியுள்ளார். அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வழியில் வாழவும் விதித்துள்ளார். புலியின் பண்பு அது புலால் உண்ணி, புல் தின்னாது, பசு தாவரபட்சினி அது புலால் உண்ணாது. ஒவ்வொன்றும் அதனதன் விதிக்கு ஏற்ப செயல்படுகின்றன. மனிதனைப் பொறுத்த வரை அவன் புலால் உண்ணியும் அல்ல, தாவர பட்சினியும் அல்ல. அவனுடைய ஜீரண உறுப்புகள் புலால் மற்றும் புல்பூண்டுகள் உண்பதற்கல்ல, பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள், காய்கள், எண்ணெய் வகைகள் போன்றவற்றை உண்பதற்கே படைக்கப்பட்டுள்ளன.

“உலகையும் அதனுள் வாழ்வன, ஊர்வன ஆகிய அனைத்தையும் படைத்து, அவர் தமது கட்டுப்படுத்தவியலாத மாட்சிமை பொருந்திய கட்டளையின் தெளிவான இயக்கத்தின் மூலமாக மனிதனை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவனுக்குத் தம்மை அறிந்து கொள்ளும், அன்பு கொள்ளும் தனிச்சிறப்பையும், ஆற்றலையும் வழங்கியுள்ளார். படைப்பு முழுமைக்கும் உயிரளிக்கும் தூண்டுதல் சக்தியாகவும் அடிப்படை நோக்கமாகவும் கருதப்பட வேண்டிய ஆற்றல் இதுவே. ஒவ்வொரு தனிப்படைப்பின் மெய்ம்மையின் ஆழத்தினுள் அவர் தமது திருநாமம் ஒன்றின் பிரகாசத்தினைப் பாய்ச்சி அதனைத் தமது தன்மைகளின் ஒளி ஒன்றினைப் பெறுவதாய் ஆக்கியுள்ளார், ஆனால் அவர் மனிதனின் மெய்ம்மையின் மீது மட்டும் தமது எல்லா நாமங்களின், பண்புகளின் பிரகாசத்தினை ஒரு கூறாக விழச் செய்து, அதனையே தம்மைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஆக்கியுள்ளார். படைப்புப் பொருட்கள் மத்தியில் இருந்து மனிதனை மட்டுமே தனிமைப்படுத்தி அவனை இப்பெரும் சலுகைக்கும், இவ்வழியா வல்லமைக்கும் உடையவனாக ஆக்கியுள்ளார்.”

ஆக, மனிதன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளான் என்பது தெளிவு, அதாவது அவன் தன்னைப் படைத்த கடவுளை அறிந்து வழிபடுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளான். சரி, இதை அவன் செயல்படுத்த வேண்டுமானால் அதற்கென முறைகள் இருக்க வேண்டுமல்லவா. உதாரணத்திற்கு அவன் ஐந்து நாள்களுக்கு மேல் உணவு உண்ணாமல் இருக்க முடியாது. பதினாறு நாள்களுக்கு மேல் நீரில்லாமல் வாழ முடியாது. இதை மீறினால் அவன் தன்னை படைத்தவரிடமே திரும்பிச்செல்ல நேரிடும். சுமார் நான்கு நாள்கள் தூக்கமின்றி இருந்தால் மனிதனுக்கு பிரமை பிடித்து விடும். சுருங்கக் கூறின் மனிதன் விதிமுறைகளுக்கு உட்பட்டவன், குறிப்பிட்ட அவ்விதிமுறைகளுக்கு ஏற்ப வாழவே அவன் படைக்கப்பட்டுள்ளான்.

மனிதனுக்கு என பிரத்தியேகமாக விதிக்கப்பட்ட பல விதிமுறைகள் உள்ளன. அவற்றுக்கேற்ப அவன் வாழும் போது, அவன் தெய்வீக உறுதிப்பாடுகளை ஈர்க்கின்றான். இதை பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:

உயிருருவின் புத்திரனே! என்னை நேசிப்பாயாக, அதனால் யான் உன்னை நேசிக்க இயலும். நீ என்னை நேசிக்காவிடில் எனதன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது. ஊழியனே, இதனை நீ அறிவாயாக. (பஹாவுல்லா)

இது கடவுளின் ஒரு விதி. மனிதன் இதை மீறுவானாயின் கடவுளின் அன்பு, அவரது பாதுகாப்பு அவனை வந்தடையாது. அத்தகைய சூழ்நிலையில் அவன் பலவித இன்னல்களுக்கு தன்னை ஆளாக்கிக் கொள்கின்றான். மற்றொரு விதி:

ஒற்றுமை எனும் திருகோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒருவர் மற்றவரை அந்நியராக கருதாதீர்கள். நீங்கள் ஒரு மரத்தின் கனிகள், ஒரு கிளையின் இலைகள். (பஹாவுல்லா)

இந்த விதியை மனித மீறும் போது, ஒற்றுமையின்மை, போர்கள், பேரழிவுகளே விளைவுகளாகின்றன. இரண்டாம் உலக யுத்தத்தை நினைவுகூர்ந்திடுவோமாக. அதில் கோடிக்கணக்கில் மக்கள் மடிந்தனர்.

மாமிசம் உண்பது மற்றும் அதனின்று ஒதுங்கியிருப்பது குறித்து, சிருஷ்டியின் ஆரம்பத்திலேயே ஒவ்வொரு ஜீவராசியின் உணவையும் கடவுள் தீர்மானித்துள்ளார், அத்தீர்மானத்திற்குப் புறம்பாக புசிப்பது அங்கீகரிக்கப்படவில்லை. (அப்துல்-பஹா)

மனிதனின் உடலமைப்பைப் பொறுத்த வரை அவன் புலால் உண்ண வேண்டியதில்லை. அவனுடைய குடலமைப்பு, பற்களின் வடிவம் ஆகியவை புலால் உண்பதற்கோ புல் உண்பதற்கோ படைக்கப்பட்டவை அல்ல. vege-2உதாரணத்திற்கு இந்திய நாட்டில் சைவ உணவையே உண்போர் உண்டு. அவர்கள் புலால் உண்பதில்லை, ஆனால் புலால் உண்போருடன் ஒப்பிடும் போது அவர்கள் வலிமையிலோ சக்தியிலோ துடிப்பிலோ, புலனுணர்விலோ, அறிவாற்றல் பண்புகளிலோ எவ்வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல.

…நான் காணும் எதனிலும் அது உம்மை எனக்கு அறிமுகம் செய்கின்றது என்பதையும், அது உந்தன் அடையாளங்கள், உந்தன் சின்னங்கள், உந்தன் சாட்சியங்கள் ஆகியவற்றைப் பற்றி எனக்கு நினைவூட்டுகின்றது என்பதையும், நான் நன்கறிவேன். உந்தன் பேரொளியின் பெயரால்! (பஹாவுல்லா)

இங்கு சிருஷ்டி அனைத்திலும் கடவுளையும், அவரது அடையாளங்களையும், சின்னங்களையும், சாட்சியங்களையும் தமக்கு நினைவூட்டுவதாக பஹாவுல்லா கூறுகின்றார். படைப்பினம் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் கடவுளைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் அபிவிருத்தி திட்டங்கள் எனும் பெயரில் காடுகள் அழிக்கப்படுகின்றன, விளைச்சல் நிலங்கள் கைவிடப்படுகின்றன. “இருபதாம் நூற்றாண்டின் மறுபாதியின் போது, வளமான மேல்மண்ணின் மறைவினால் பூமியின் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான விளைச்சல் நிலங்கள் கைவிடப்பட்டன என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இயற்கை, மேல்மண்ணை மிகவும் மெதுவாகவே மறுநிரப்பம் செய்கின்றது. மேல்மண்ணை மறுபடியும் 2.5 சென்டிமீட்டர் நிரப்புவதற்கு சுமார் ஐந்நூறு ஆண்டுகளாகும், மற்றும் விளைச்சலுக்கு சுமார் 15 சென்டிமீட்டர் மண் தேவைப்படுகிறது. தற்போதைய விகிதத்தில் வருடம் 2080’க்குள் நமக்கு மேல்மண் தீர்ந்துவிடும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.”

மேல்குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் கணித்துப் பார்க்கையில், இன்று பூமியில் நிலவும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மனிதனே காரணம் என்பது தெளிவுை. நாம் வாழ்க்கை முறை நோய்கள் விருத்தியடைவதற்கு வளமான இடமாக இருக்கின்றது.

மனிதன் எப்பொழுது கடவுள் தன்னை எதற்காக படைத்துள்ளார் என்பதை அறிந்து அதற்கேற்ப வாழ்கின்றானோ, அப்போதுதான் உலகில் நிலவும் பிரச்சினைகளுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்.

உலகளாவிய நெருக்கடியின் போது உதவிட முன்னெழுதல்


BNS-head

மார்ச் 25, 2020

1404-1
 கொரோனாவைரஸ் (COVID-19) வியாதியின் பரவலினால் அதிகமாக பாதிக்கப்படாத நேப்பால் நாட்டு பஹாய்கள்—ஒருவர் மற்றவரிடமிருந்து தூர தள்ளி நின்று தேவைப்படும் பாதுகாப்பு உடைகளை அணிந்து– தகவல்திறம் மிக்க பதாகைகளை தயாரித்து, சுய மற்றும் கூட்டு சுகாதார கோட்பாடுகள் பற்றிய முக்கிய தகவலை வழங்கினர். கைகழுவுவதற்காக சவர்க்காரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.. https://news.bahai.org/story/1404/slideshow/1/

சிட்னி – உலகின் எல்லா பகுதிகளிலும் உலகளாவிய சுகாதார நெருக்கடி சமுதாயத்தில் இடையூறுகள் விளைவித்து வரும் வேளை, சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான பஹாய்களின் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. பொது சுகாதார தேவைகளுக்கு ஏற்ப, இப்பொழுது வெளிப்பட்டுள்ள குறிப்பிட்ட ஆன்மீக மற்றும் லௌகீக தேவைகளில் கவனம் செலுத்தும் பரஸ்பர செயல்பாடுகளின் புதிய வழிகளை சமூகங்கள் விரைவாகவும் ஆக்ககரமாகவும் பயன்படுத்துகின்றன.

ஆஸ்திரேலிய பஹாய் சமூக வெளிவிவகார அலுவலகத்தின் துர வீனஸ் காலெஸ்ஸி, “எங்கள் அண்டைப்புறங்களுக்கு சேவை செய்வதற்கான ஓழ் ஆழ்ந்த உறுதிமனப்பான்மை உருவாகியுள்ளது. எல்லைக்குட்பட்டசமூகத் தொடர்புகளிலும் கூட, நாங்கள் சமுதாயத்தின் வாழ்வில்—குறிப்பாக வயதானோர் அல்லது பாதிப்புக்குள்ளாகக்கூடியோர் மற்றும் ஒருவர் மற்றவரின் தேவைகள் குறித்து உணர்திறத்தோடு — பங்களிப்பதற்கான எங்களின் முயற்சிகளை பலப்படுத்தி வருகின்றோம்.

அதே சமயம், தற்போதைய சூழ்நிலைகள் மக்களில் அச்சத்தையும் பதட்டத்தையும் தூண்டிவிடும் போது, உலக மக்கள் பிரார்த்தனையில் நம்பிக்கைக் காண்கின்றனர். எல்லாவிடங்களிலும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தூரமாக அல்லது குறுகிய தூரத்தில் உள்ள அல்லது கண்டங்களில் உள்ளோருடன் இணையதள தொடர்பை ஏற்படுத்தி உற்சாகப்படுத்தும் வழிபாடுகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

1404-2
ஐக்கிய அமெரிக்காவின் வில்மட் வழிபாட்டு இல்லத்தில், வாடிக்கையான வழிபாட்டு நிகழ்ச்சிகள் இணையதளத்திற்கு மாற்றப்பட்டும், கோவிலில் உட்கார்ந்திருப்பது போன்ற ஓர் உணர்வை உண்டாக்குவதற்காக ஒரு காட்சி வழங்கலையும் உள்ளடக்கியுள்ளது. https://news.bahai.org/story/1404/slideshow/2/

சாந்தியாகோ நகரில், பிரார்த்தனை மற்றும் இசையுடன் கூடிய 19 குறு காணொளிகள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் வில்மட் வழிபாட்டு இல்லத்தில், வாடிக்கையான வழிபாடுகள் இணையத்திற்கு நகர்த்தப்பட்டும், கோவிலுக்குள் அமர்ந்திருப்பது போன்றதோர் உணர்வை உண்டாக்குவதற்கு ஒரு காட்சி வழங்கலையும் உள்ளடக்கியுள்ளன.பஹாய் வழிபாட்டு இல்லங்கள் நீண்டகாலமாகவே ஆன்மாவிற்கும் கூட்டு வழிபாட்டிற்குமான மையங்களாக விளங்கி வந்துள்ளன. பிற பொதுவிடங்கள் போன்று, பாதுகாப்பிற்காக கோவிலின் கதவுகளை அவர்கள் மூடவேண்டியுள்ளது. இருப்பினும், பஹாய் கோவில்கள் உள்ள இடங்களில், இந்த கட்டிடங்கள் உள்ளடக்கியிருக்கும் உணர்வை சமுதாயத்தில் பரவலாக உட்புகுத்துவதற்கு புதிய அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1404-3
ஆஸ்திரியா நாட்டில் சிறுவர்களுக்கான ஒரு பஹாய் ஆன்மீக வகுப்பு இணையதளத்தில் நடைபெறுகின்றது. முன் எப்போதும் விட இப்போது அதிகமாக தேவைப்படும் இத்தகைய ஊடக முறைகள் சிறுவர்களுக்கான இந்த வகுப்புகளை தொடர்ந்து நடத்த எங்களுக்கு வசதியளிக்கின்றன. மீழ்ச்சித்திறன், சமூகத்தின்பால் கவனம் செலுத்துவது, ஒன்றுபட்டிருப்பது ஆகிய யோசனைகள் அவர்கள் பயணிக்கின்ற இத்தருணத்தில் அவர்களுக்கும் பொருந்துகின்றன. https://news.bahai.org/story/1404/slideshow/3/

தடங்கல் ஏற்படுத்தும் இந்த சூழ்நிலைகளிலும் பஹாய் கல்வியல் முயற்சிகள் தொடர்கின்றன. அரசாங்க வழிகாட்டிகளுக்கு மதிப்பளித்து, தேகத் தொடர்பின்றி இந்த நடவடிக்கைகளை நடத்துமாறு பஹாய் ஸ்தாபனங்கள் சமூகங்களை ஊக்குவித்துள்ளன.

ஆஸ்த்திரிய பஹாய் சமூகத்தின் வெளிவிவகார அலுவலகத்தின் லெய்லா தாவெர்நாரோ-ஹைடாரியான், “எங்கள் சமூகம் மிகவும் விரைவாகத் தழுவியுள்ளது. சில நாள்களுக்குள் சமுதாய சேவைக்கான எல்லா திறனாற்றல் உருவாக்க நடவடிக்கைகளும் இணையதளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. முன் எப்போதும் விட இப்போது அதிகமாக தேவைப்படும் இத்தகைய ஊடக முறைகள் சிறுவர்களுக்கான இந்த வகுப்புகளை தொடர்ந்து நடத்த எங்களுக்கு வசதியளிக்கின்றன. ஆஸ்திரியா நாட்டில் சிறுவர்களுக்கான ஒரு பஹாய் ஆன்மீக வகுப்பு இணையதளத்தில் நடைபெறுகின்றது. முன் எப்போதும் விட இப்போது அதிகமாக தேவைப்படும் இத்தகைய ஊடக முறைகள் சிறுவர்களுக்கான இந்த வகுப்புகளை தொடர்ந்து நடத்த எங்களுக்கு வசதியளிக்கின்றன. மீழ்ச்சித்திறன், சமூகத்தின்பால் கவனம் செலுத்துவது, ஒன்றுபட்டிருப்பது ஆகிய யோசனைகள் அவர்கள் பயணிக்கின்ற இத்தருணத்தில் அவர்களுக்கும் பொருந்துகின்றன,” என்றார்

தனது அண்டைப்புறத்தில் சிறுவர்களுக்கான ஆன்மீகக் கல்வி வகுப்புகளை நட்த்தும் இலன்டன் மாநகரைச் சேர்ந்த ஓர் இளைஞர், தற்போதைய சூழ்நிலைகளில் சேவை செய்வதற்கான அர்த்தமிகு வழிகளைக் காண்கின்றனர்: “இந்த நடவடிக்கை மாற்றம் குறித்து கலந்தாலோசித்தல் ஒரு எண்ணத்தைத் தூண்டிவிட்டது: இந்த சூழ்நிலை அதிகரிக்கும் போது ஒவ்வொரு பெற்றோரையும் சாத்தியமுள்ள ஒர் ஆசிரியராக எங்களால் நினைத்துப் பார்க்க முடிகின்றதா?” இப்பொழுது, தொலைபேசி உரையாடல்களின் மூலம் பெற்றோர்களுக்கு ஆதரவளித்து வருகின்றார்.

1404-4
இந்திய பஹாய் சமூகத்தின் சிறுவர்கள் கொரோனா வைரஸ்(COVID-19) குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் அவர்களின் இடம் பாதிக்கப்படுவதற்கு முன் சுகாதார நடைமுறைகளை ஊக்குவிக்கும் ஒரு பணித்திட்டத்தை மேற்கொண்டனர். https://news.bahai.org/story/1404/slideshow/4/

இந்த தொற்றினால் அதிகம் பாதிக்கப்படாத அப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள பஹாய்கள் வைரஸ் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர். நெப்பால் நாட்டின் மோதிபஸ்தியில் உள்ள ஒரு குழுமம் தகவல்திறம் மிக்க பதாகைகளை தயாரித்தனர். அவர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து தூர தள்ளி நின்று தேவைப்படும் பாதுகாப்பு உடைகளை அணிந்து– தகவல்திறம் மிக்க பதாகைகளை தயாரித்து, சுய மற்றும் கூட்டு சுகாதார கோட்பாடுகள் பற்றிய முக்கிய தகவலை வழங்கினர். கைகழுவுவதற்காக சவர்க்காரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

தமது சமுதாயத்தின் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து பிரதிபலிக்கின்ற டாக். தாவெர்னாரோ-ஹைடரியான், “அண்டையர்களுக்கிடையிலான பலகனி வழி உரையாடல்களாயினும், அல்லது பொது ஆளுமைகளும் பத்திரிக்கை இதழாளர்களும் உரையாடும் முறையிலானாலும், ஒரு உலகளாவிய சவாலை எதிர்கொள்வதில் ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட மற்றும் விரிவடைந்துள்ள அடையாள உணர்வில் ஒரு பெரிய மாற்றத்தை இங்கு ஆஸ்த்திரியாவில் ஒருவரால் காணமுடிகிறது. ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்த கருத்தாக்கங்களின்பால் தீவிர கவனம் செலுத்தப்படுகின்றது. பல்வேறு குழுமங்கள் இந்த பிரச்சினை குறித்து கவனம் செலுத்துவதற்காக தங்களுக்கிடையிலான வேறுபாடுகளில் அக்கறை செலுத்தவில்லை மற்றும் மக்கள் சமய வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றாக பிரார்த்திக்கின்றனர்,” என்றார்.

இந்தியா நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் நீலாக்ஷி ராஜ்கோவா, அதே போன்று ஒரு போக்கைத் தமது நாட்டில் காண்கின்றார். இந்த நேரத்தில், ஆன்மீக மற்றும் சமுதாய தன்மைமாற்றம் குறித்த ஓர் ஆழ்ந்த உரையாடலுக்காக நாம் எல்லாரையும் அணுக முடியும் என நாங்கள் உணர்கின்றோம், ஏனெனில் பஹாவுல்லாவின் செய்தியில் அடங்கியுள்ள மைய யோசனை குறித்து மக்கள் அதிகம் விழிப்படைந்து வருகின்றனர்: நாம் அனைவரும் ஒன்று, நாம் ஒருவரை ஒருவர் பரஸ்பரமாக சார்ந்துள்ளோம், மற்றும் நாம் ஒருவர் மற்றவருக்கு ஆதரவளித்திட கோரப்படுகின்றோம்.
https://news.bahai.org/story/1404/

ஹூத்தி அதிகாரிகள் ஏமன் நாட்டின் எல்லா பஹாய் கைதிகளையும் விடுவிக்க ஆனையிட்டுள்ளனர்.


bic-head
ஹூத்தி அதிகாரிகள் ஏமன் நாட்டின் எல்லா பஹாய் கைதிகளையும் விடுவிக்க ஆனையிட்டுள்ளனர்.

நியூ யார்க்—25 மார்ச் 2020—
ஏமன் நாட்டில் இன்று ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி உரையில், சனா’ஆ அரசியல் உயர் பேரவையின் அதிபரான திரு மஹ்டி அல்-மஷாட், எல்லா பஹாய் கைதிகளையும் விடுவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இது, மூன்று நாள்களுக்கு முன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் அவரின் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட திரு ஹமேட் பின் ஹைதரா’வுக்கான மன்னிப்பையும் உள்ளடக்கும்.

பஹாய் அனைத்துலக சமூகம் இந்த அறிவிப்பை வரவேற்பதோடு, அதனை உடனடியாக அமுல்படுத்தும்படியும் கோரியுள்ளது. தங்களின் சமய நம்பிக்கைக்காக பல வருடகாலமாக தப்பான மற்றும் அடிப்படையாற்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட அந்த அறுவரின் பெயர்கள் பின்வருமாறு: திரு ஹமேட் பின் ஹைதரா, திரு வலீட் அய்யாஷ், திரு அக்ரம் அய்யாஷ், திரு காய்வான் காதெரி, திரு படியுல்லா சனாய், மற்றும் திரு வயெல் அல்-அரீகீய்
yemen-map
இன்றைய ஆணை, கடந்த 2018’இல் சுமார் 20’க்கும் அதிகமான பஹாய்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்குவது, எல்லா பஹாய் சொத்துகளையும் திருப்பிக் கொடுப்பது, மற்றும் பஹாய் ஸ்பானங்கள் இயங்குவதற்கும் வழிவகுக்க வேண்டும். எல்லா எமன் நாட்டு குடிகள் போன்று பஹாய்களும், சர்வலோக சமய மற்றும் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளுக்கு இணங்க தங்கள் சமயத்தை சுதந்திரமாக பின்பற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். ஏமன் நாட்டு பஹாய்கள் தங்களின் நாட்டுக்காகவும் சக பிரஜைகளுக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்துள்ளனர், இனியும் அவ்வாறே பங்காற்றி வருவர்.

ஓர் உலகளாவிய சுகாதார நெருக்கடியின் போது நம்பிக்கையும் ஆதரவும்


bnshead

13 மார்ச் 2020

bns-1401-1
உலகம் முழுவதும் பஹாய் சமூகங்களில் உருவாக்கப்பட்ட நடவடிக்கை முறைகள், இந்த நெருக்கடியின் எதிரில் நம்பிக்கையுடனும், தங்கள் சமுதாயங்களுக்கு சேவை செய்யவும் முன்னெழ அவர்களுக்கு ஆற்றல் வழங்கியுள்ளது.

மாந்த்துவா, இட்டாலி — உலகின் பல பாகங்கள் உலகளாவிய கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு திண்டாடிக்கொண்டிருக்கும் போது, மிகவும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாழும் பஹாய்கள் தங்களின் சமுதாயங்களுக்கு சேவை செய்வதற்கான வழிமுறைகளைக் காணுகின்றனர். தற்போதைய சூழ்நிலைகளின்பால் அவர்கள் பரஸ்பரமாக செயல்படுவதற்கான படைப்பாற்றலையும் வளத்திறத்தையும் பல வருடகாலமான சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகள அவர்களுக்கு வழங்கியுள்ளது. இத்தாலி நாட்டில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களை அவர்களின் இல்லங்களில் முடக்கிவைத்துள்ள போதும், நம்பிக்கையூட்டும் நடவடிக்கைளில் சமூகங்கள் தொடர்ந்து ஈடுபட்டே வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் பல, இணையத்திற்கு புலம் பெயர்ந்துள்ளன, ஒருவர் மற்றவருக்கு ஆதரவு வழங்கிடவும், ஒன்றாகப் பிரார்த்திக்கவும், சமுதாயத்தில் நட்பின் பந்தங்களையும் சமுதாயத்திற்கு சேவை செய்யவுமான திறனாற்றலையும் உருவாக்கும் பஹாய் சமூகத்தின் கல்வியல் பெருமுயல்வுகளை தீவிரப்படுத்திட மக்கள் வீடியோ அழைப்புகளை மேற்கொள்கிறார்கள்.

சிறுவர்களின் தார்மீக கல்விக்கான ஓர் ஆசிரியர் இந்த சூழ்நிலைகளில் தான் எவ்வாறு பணிபுரிந்து வருகின்றார் என்பதை வர்ணிக்கின்றார். “நான் வகுப்பிற்கு சில ‘டிஜிட்டல்’ மற்றும் ‘ஆடியோவிஷுவல்’ உபகரணங்களைத் தயார் செய்து அதை குடும்பங்களுக்கு இணையம் மூலமாக விநியோகிக்கிறேன். சிறுவர்கள் வீட்டிலேயே தங்கள் பாடங்களைச் செய்தும், பிறகு அதை தங்கள் பெற்றோருடனும் உடனபிறந்தோருடனும் கலந்துரையாடுகின்றனர்.

பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் பிற நாடுகளில், சிறுவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களை செய்வதற்கு பஹாய்கள் தூரத்திலிருந்தே சிறுவர்களுக்கு உதவுகின்றனர். சிறுவர்கள் சிறு இணைய குழுமங்களாக ஒன்றுகூடி தங்களின் பள்ளிப்பாடங்களைச் செய்ய ஒருவர் மற்றவருக்கு உதவுகின்றனர்.

இத்தாலி நாட்டு பஹாய்கள், தங்களின் குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள், அறிமுகமானோர் அனைவருக்கும்—அவர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக–தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்கின்றனர். இவ்வழைப்புகள் பல ஆழ்ந்த உரையாடல்களுக்கும் நட்பின் பந்தங்களை பலப்படுத்துவதற்கும் உதவியுள்ளன.

“இந்த தருணமானது, நாம் யாருமே வெல்லப்பட முடியாதவர்கள் அல்லவென்பதை உணர்த்தியுள்ளது. ஒரு வேளை, நமது வாழ்க்கையின் மற்ற நேரங்களில் நாம் சிந்தித்துப்பார்க்க நேரமில்லாத கேள்விகளின் மீது பிரதிபலிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாகும்.”

கடந்த செவ்வாயன்று இத்தாலி நாட்டு பஹாய்களுக்கு அதன் தேசிய ஆன்மீக சபை அனுப்பிய கடிதத்தில் அது பின்வருமாறு கூறியுள்ளது: “சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், எல்லாவித வல்லுனர்கள், பொறுப்புமிகு குடிமக்கள் அனைவரிடமிருந்தும் ஒருமைப்பாடு மற்றும் விசுவாசத்தின் எண்ணிலடங்கா உதாரணங்களைக் கண்டோம். அவர்கள், இந்த அவசரகாலத்தின் போது உடனடியாக முன்னழுந்து, மனிதர்களுக்கு இயல்பான அவர்களின் மேன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். கொடுப்பதும், சேவையாற்றுவதும், மேம்பாட்டிற்குப் பங்களிப்பதுமே நமது உன்மையான இயல்பாகும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1401/

ஒன்றிணைக்கும் மொழி மூலம் வேறுபாடுகளைக் கலைதல்


ஒன்றிணைக்கும் மொழி மூலம் வேறுபாடுகளைக் கலைதல்


9 பிப்ரவரி 2020


பிரஸ்ஸல்ஸ் – சமீபத்திய ஐரோப்பிய நாடாளுமன்ற குழு விவாதத்தில், பஹாய் சர்வதேச சமூகத்தின் (பி.ஐ.சி) பிருஸ்ஸல்ஸ் அலுவலகம் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், பன்முகத்தன்மையை மதித்தும், பகிரப்பட்ட அடையாளத்தை வளர்க்கும் ஒரு மொழியை வளர்க்க முடியும் என்பதை ஆராய்வதற்கு வழிவகுத்தது. ஐரோப்பா முழுவதும் அடையாளம் மற்றும் உறிமை சம்மந்தபட்ட கேள்விகள் சமகால சொற்பொழிவுகளில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் நேரத்தில் இந்த விவாதம் ஏற்பட்டது.

BIC பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் தலைமையில், சுமார் 40 கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த குழுவில், ஐரோப்பிய நாடாளுமன்ற இனவெறி எதிர்ப்பு மற்றும் பன்முகத்தன்மை (ARDI) இடைக்குழுவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களான ஜூலி வார்ட் மற்றும் சமிரா ரஃபாஎலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருமதி வார்ட் இந்த உரையாடலை வரவேற்பதாகவும், இந்த சிக்கல்களை ஒரு புதிய கண்ணோட்டத்தில் வடிவமைக்க ஒரு வாய்ப்பை அளித்ததாக கூறினார். ஒறு மொழியின் ஆற்றல் ஒத்திசைவை வளர்ப்பதற்கும், பிரிவைத் தூண்டுவதற்கும் ஒரு கருவியாகக் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

திருமதி ரஃஎலா மேலும் கூறினார்: “பன்முகத்தன்மையை ஒரு ஒருங்கிணைக்கும் காரணியாக நாம் மதிக்க வேண்டும், ஆனால் இதை மொழி மூலம் எவ்வாறு எதிர்கொள்வது? மற்றவர்கள் மீது பழிபோடுவதை விட, மக்கள் மீது மரியாதைக்குரிய மொழியை நாம் உருவாக்க வேண்டும். மனிதகுலம் அனைவருக்கும் விசுவா உணர்வை வளர்க்கும் வகையில் ஒரு மொழியை எவ்வாறு உருவாக்க முடியும்? ”

சமீபத்திய ஐரோப்பிய நாடாளுமன்ற குழு விவாதத்தில், பஹாய் சர்வதேச சமூகத்தின் (பி.ஐ.சி) பிருஸ்ஸல்ஸ் அலுவலகம் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், பன்முகத்தன்மையை மதித்தும், பகிரப்பட்ட அடையாளத்தை வளர்க்கும் ஒரு மொழியை வளர்க்க முடியும் என்பதை ஆராய்வதற்கு வழிவகுத்தது.

இக்கூட்டத்தில் பங்கேற்பாளர்களுடன், கலந்துரையாடலுக்காகத் தயாரிக்கப்பட்டு பகிர்ந்து கொண்ட ஒரு ஆய்வறிக்கையில், மொழி பற்றிய சிந்தனையின் பெரும்பகுதி பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும் அமைதியான சகவாழ்வை ஊக்குவிப்பதற்கும் வழிநடத்தப்பட்டுள்ளது என்பதை BIC அலுவலகம் எடுத்துரைத்தது. மொழி ஒவ்வொரு மனிதனின் மனப்பான்மையை பிரதிபலிக்கிறது மற்றும் மக்களின் எண்ணங்களை வடிவமைக்கிறது. வேறுபாடுகளை மதிக்கும் மொழியைக் கொண்டிருப்பது இன்றியமையாதது என்றாலும், இதை மிகைப்படுத்தி “நம்மையும் அவர்களையும்” வென்று, கடக்க வேண்டிய கருத்துக்களை வலுப்படுத்த முடியும் என்று BIC அறிவுறுத்துகிறது.

எனவே, குழு மற்றும் சமூக உறுப்பினர்கள் இந்த பிரச்சினையின் மூல காரணத்தை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதில் கவனம் செலுத்தியது: பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், சகவாழ்வை ஆதரிப்பதும் ஒரு படி முன்னேறுவதைக் குறிக்கும் என்றாலும், இணக்கமான சமூக பாதையை நோக்கி நடைபோடுவதற்கு ஒரே அடையாளம் தேவை.

நிறுவன கலாச்சாரங்களை நிறுவனங்களுக்கிடையில் உருவாக்க உதவும் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியான பாஸ்கல் ஜோஸ்ஸி, மக்களிடையே உள்ள வேறுபாடுகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் மொழி எவ்வாறு பிற உணர்விற்கு வழிவகுக்கும் என்பதைப் பற்றி பேசினார். “சிறந்த வகையை கண்டுபிடித்து யாரையாவது அதில் வைப்பதைப்பற்றி அல்ல, ஆனால் எல்லோரும் வரவேற்பைப் பெறும் ஒரு புதிய யதார்த்தத்தை உருவாக்குவது” என்று அவர் கூறினார்.

திரு. ஜோஸ்ஸி பெல்ஜியத்தில் பிறந்து லக்சம்பேர்க்கில் வளர்ந்த கேமரூனிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் என்ற தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார், இந்த இடங்கள் தன்னை பெரும்பான்மையினரிடமிருந்து பிரிக்கும் வகையில் இருந்தது என அவர் குறிப்பிட்டார். “நாம் தொடர்புகளை மறுவடிவமைக்கும் வரை இந்த வகையான பதற்றம் இருக்கும். சொற்களஞ்சியத்திலிருந்து குறிப்பிட்ட சொற்களைச் சேர்ப்பதோ அல்லது நீக்குவதோ அல்ல. அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கு மொழி ஒரு ஊக்கியாக மாறும் என்று நான் நினைக்கவில்லை; நாம் ஒருவருக்கொருவர் பேசும் விதத்தில் என்ன அணுகுமுறைகள் மற்றும் அனுமானங்கள் உள்ளன என்பதை நாம் ஆராய வேண்டும், இதனால் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் வளர்க்கும் வழியில் ஈடுபட ஆரம்பிக்க முடியும்.”

“நாங்கள் ஒருவருக்கொருவர் சார்ந்த மற்றும் கூட்டுறவு உறவுகளை ஏற்படுத்த உதவும் வழிகளில் பேச கற்றுக்கொள்கிறோம்,” என்று மாத்தியூ மேரி-யூஜெனி கூறினார், பாரிஸ் பகுதியில் உள்ள இளைஞர்களுடன் பட்டறைகளை எளிதாக்கும் தனது அனுபவத்தை விவரித்தார், இது கவிதை மற்றும் கலை வெளிப்பாடு மூலம் சகவாழ்வையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கிறது. “நம்பிக்கை மற்றும் இரக்க சூழலில்,‘ நான் மனிதகுலத்தில் ஒரு நபர் ’அல்லது கவிதை மொழியில்,‘ நான் ஒரு துளி, நான் கடலின் ஒரு பகுதி ’என்று நம்மை நாமே சொல்லிக் கொள்ள முடிகிறது.”

“BIC இன் பிரதிநிதி ரேச்சல் பயானி, மன்றத்தில் தனது கருத்துக்களில்,”நம்முடைய தனிப்பட்ட அடையாளங்களுக்கு அப்பால், நாம் ஒரு மிகைப்படுத்தப்பட்ட, பகிரப்பட்ட அடையாளம், ஒற்றுமையை உருவாக்குவதற்கும், மனிதகுலம் ஒன்று என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் அமைந்துள்ளது கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் உலகின் அனைத்து மக்களும் ஒரே மனித குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். மனிதகுலத்தை எதிரெதிர் குழுக்களாகப் பிரிப்பது அதிக அளவு ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும், மேலும் பன்முகத்தன்மையின் வளமான வெளிப்பாடுகள் ஆக்கபூர்வமாக சமூக வாழ்க்கையின் துணிக்குள் அவசியமாக பிணைக்கப்பட வேண்டும். ”