ஓர் உலகளாவிய சுகாதார நெருக்கடியின் போது நம்பிக்கையும் ஆதரவும்


bnshead

13 மார்ச் 2020

bns-1401-1
உலகம் முழுவதும் பஹாய் சமூகங்களில் உருவாக்கப்பட்ட நடவடிக்கை முறைகள், இந்த நெருக்கடியின் எதிரில் நம்பிக்கையுடனும், தங்கள் சமுதாயங்களுக்கு சேவை செய்யவும் முன்னெழ அவர்களுக்கு ஆற்றல் வழங்கியுள்ளது.

மாந்த்துவா, இட்டாலி — உலகின் பல பாகங்கள் உலகளாவிய கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு திண்டாடிக்கொண்டிருக்கும் போது, மிகவும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாழும் பஹாய்கள் தங்களின் சமுதாயங்களுக்கு சேவை செய்வதற்கான வழிமுறைகளைக் காணுகின்றனர். தற்போதைய சூழ்நிலைகளின்பால் அவர்கள் பரஸ்பரமாக செயல்படுவதற்கான படைப்பாற்றலையும் வளத்திறத்தையும் பல வருடகாலமான சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகள அவர்களுக்கு வழங்கியுள்ளது. இத்தாலி நாட்டில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களை அவர்களின் இல்லங்களில் முடக்கிவைத்துள்ள போதும், நம்பிக்கையூட்டும் நடவடிக்கைளில் சமூகங்கள் தொடர்ந்து ஈடுபட்டே வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் பல, இணையத்திற்கு புலம் பெயர்ந்துள்ளன, ஒருவர் மற்றவருக்கு ஆதரவு வழங்கிடவும், ஒன்றாகப் பிரார்த்திக்கவும், சமுதாயத்தில் நட்பின் பந்தங்களையும் சமுதாயத்திற்கு சேவை செய்யவுமான திறனாற்றலையும் உருவாக்கும் பஹாய் சமூகத்தின் கல்வியல் பெருமுயல்வுகளை தீவிரப்படுத்திட மக்கள் வீடியோ அழைப்புகளை மேற்கொள்கிறார்கள்.

சிறுவர்களின் தார்மீக கல்விக்கான ஓர் ஆசிரியர் இந்த சூழ்நிலைகளில் தான் எவ்வாறு பணிபுரிந்து வருகின்றார் என்பதை வர்ணிக்கின்றார். “நான் வகுப்பிற்கு சில ‘டிஜிட்டல்’ மற்றும் ‘ஆடியோவிஷுவல்’ உபகரணங்களைத் தயார் செய்து அதை குடும்பங்களுக்கு இணையம் மூலமாக விநியோகிக்கிறேன். சிறுவர்கள் வீட்டிலேயே தங்கள் பாடங்களைச் செய்தும், பிறகு அதை தங்கள் பெற்றோருடனும் உடனபிறந்தோருடனும் கலந்துரையாடுகின்றனர்.

பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் பிற நாடுகளில், சிறுவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களை செய்வதற்கு பஹாய்கள் தூரத்திலிருந்தே சிறுவர்களுக்கு உதவுகின்றனர். சிறுவர்கள் சிறு இணைய குழுமங்களாக ஒன்றுகூடி தங்களின் பள்ளிப்பாடங்களைச் செய்ய ஒருவர் மற்றவருக்கு உதவுகின்றனர்.

இத்தாலி நாட்டு பஹாய்கள், தங்களின் குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள், அறிமுகமானோர் அனைவருக்கும்—அவர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக–தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்கின்றனர். இவ்வழைப்புகள் பல ஆழ்ந்த உரையாடல்களுக்கும் நட்பின் பந்தங்களை பலப்படுத்துவதற்கும் உதவியுள்ளன.

“இந்த தருணமானது, நாம் யாருமே வெல்லப்பட முடியாதவர்கள் அல்லவென்பதை உணர்த்தியுள்ளது. ஒரு வேளை, நமது வாழ்க்கையின் மற்ற நேரங்களில் நாம் சிந்தித்துப்பார்க்க நேரமில்லாத கேள்விகளின் மீது பிரதிபலிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாகும்.”

கடந்த செவ்வாயன்று இத்தாலி நாட்டு பஹாய்களுக்கு அதன் தேசிய ஆன்மீக சபை அனுப்பிய கடிதத்தில் அது பின்வருமாறு கூறியுள்ளது: “சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், எல்லாவித வல்லுனர்கள், பொறுப்புமிகு குடிமக்கள் அனைவரிடமிருந்தும் ஒருமைப்பாடு மற்றும் விசுவாசத்தின் எண்ணிலடங்கா உதாரணங்களைக் கண்டோம். அவர்கள், இந்த அவசரகாலத்தின் போது உடனடியாக முன்னழுந்து, மனிதர்களுக்கு இயல்பான அவர்களின் மேன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். கொடுப்பதும், சேவையாற்றுவதும், மேம்பாட்டிற்குப் பங்களிப்பதுமே நமது உன்மையான இயல்பாகும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1401/